செவ்வாய், 8 அக்டோபர், 2013

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?

ராதே கிருஷ்ணா 08-10-2013

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?


Narasimman Nagarajan shared Woraiyuril Thamarai's photo.



















இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா? தெய்வமாகவே இருந்தாலும், உக்கிர ரூபத்தில் இருக்கும் காளியை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. காளி, உக்கிர நரசிம்மர் போன்ற தெய்வங்களின் சக்தியைத் தாங்கும் மன வலிமை கொண்டவர்களே அந்த தெய்வங்களை உபாசிக்க வேண்டும். இந்த உக்கிர மூர்த்திகள் போருக்கு புறப்படும் முன்னால் வணங்க வேண்டிய தெய்வங்கள். போர் முடிந்தபின்னால் கோபம் தணிய சிவனை வணங்க வேண்டும். அதனால் தான் போர் முடிந்ததும் ராமன் ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். தைரியத்திற்காகவும், பயமின்மைக்காகவும் துர்க்கா தேவியை வணங்கும் போது கூட, அழிக்கப் பட்ட தீமையின் உருவமான எருமைத் தலை காலடியில் கிடக்க, புன்முறுவல் பூத்த முகத்துடன் அருள் வழங்கும் கரங்களுடன் கூடிய துர்க்கை திருவுருவமே எல்லா கோயில்களிலும் உள்ளது. அந்த தெய்வ வடிவத்தைத் தான் பெண்கள் ராகு கால பூஜை செய்கிறார்கள். எனவே, அமைதியான, சாந்த வாழ்க்கைக்கு கல்யாண கோலத்தில், மங்கலகரமாக உள்ள பரம்பொருளையே வணங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சர்ச்சுகளில் மூலஸ்தானத்தில் இருக்கும் உருவம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து போன இயேசுவின் உருவம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வார்கள். அது வணங்கப்படுவதில்லை. இறப்பதற்கு முன்னால் அவர் அழுவார். அது வணங்கப்படுவதில்லை. அவர் இறந்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவமே வழிபடப்படுகிறது. அதுவே பலர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையிலும் இருக்கிறது. பெந்தகொஸ்தே, பாப்டிஸ்ட் சர்ச் போன்றவைகளில் சில உருவ வழிபாடு கூடாது என்று சொன்னாலும், அவர்கள் முக்கியமாக கருதுவது இயேசு கொலை செய்யப்பட்டதே. அவர்களின் பேச்சுகளில், உபதேசங்களில் எல்லாமே ஏசு அநியாயமாக கொலை செய்யப்பட்டதே திரும்பத்திரும்ப சொல்லப்படும்.. இவை எல்லாமே மன அழுத்தத்தை உருவாக்கக்கூடியவை. அடி மனதில் பயம், அழிவு, துயரம் ஆகியவற்றை உருவாக்கி வெளியே வன்முறையாகவும் கோபமாகவும் வெளிப்படக்கூடியவை. ஒரு வருடத்துக்கு மேல் சாவுக்கு வருந்தக்கூடாது என்பது இந்து வழிமுறை. ஒரு வருடத்துக்குப் பிறகு கல்யாணம், திருவிழா, பண்டிகை போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை வீட்டில் செய்தும் துயரத்தை மாற்ற வேண்டும் என்பது இந்து வழிமுறை. ஆனால் இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்துகொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள். இது அவர்களின் குடும்பத்துக்கு மட்டும் தீமை அல்ல. அவர்கள் சார்ந்த ஊருக்கும், சமூகத்துக்குமே தீமை. இயேசு அடிவாங்கிக் கொண்டு செல்லும் ஊர்வலம், ஷியா பிரிவினர் நடத்தும் அமங்கள ஊர்வலம் ஆகியவற்றில் கலந்துகொள்வதோ அல்லது அவற்றை பார்ப்பதோ இந்துக்களுக்கும் இந்து குடும்பங்களுக்கும் அமங்களமானது. தவறானது. இவற்றைப் பார்ப்பதை தவிருங்கள்.. தாமரை மலர்களை அசிங்கம் அசிங்கம் என்று மூளைச்சலவை செய்துகொண்டும், ரத்தம் வடியும் உருவங்களை அழகு அழகு என்றும் திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தால், மனம் முழு விகாரமடைந்து சிததமே கலங்கிவிடும்தானே? முதலில், நம் வீடுகளில் இருக்கும் அவல ஓவியங்களை அகற்றுவோம். துயர சிந்தனைகளையும், மன அழுத்தத்தையும் விளைவிக்கும் படங்களை அப்புறப்படுத்தி அங்கு கல்யாணக் கோலத்தில், மங்கலகரமான உருவத்தில் இருக்கும் தெய்வ வடிவங்களை வைப்போம். நம் கிறிஸ்துவ நண்பர்களோ இஸ்லாமிய நண்பர்களோ ஏதேனும் படமோ புத்தகமோ கொடுத்தால், நாகரிகமாக மறுப்போம். @ தமிழ் ஹிந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக