வியாழன், 31 அக்டோபர், 2013

ஜாதகம்

ராதே கிருஷ்ணா 31-10-2013



ஜாதகம்








Narasimman Nagarajan shared பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்'s photo.














திருமண தடை;
---------------------
எந்த ஒரு ஜாதகருக்கும் / ஜாதகிக்கும் - திருமண விஷயமாக பார்க்கும்போது - மூன்று வித தோஷங்கள் ஆராயப்படுகின்றன . சர்ப்ப தோஷம் . செவ்வாய் தோஷம் அடுத்து புனர்பூ.முதல் இரண்டு தோஷங்களும், எல்லா ஜோதிடர்களுக்கும் அத்துபடி.
அதனாலே , அந்த ரெண்டைப் பத்தி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.இப்பொழுது பார்க்கவிருப்பது புனர்பூ .

ஒரு சில ஜாதகர்களுக்கு - பொருத்தம் பார்க்கும்போது , கொஞ்சம் ஓரளவுக்கு பொருந்தி , பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே , திடீரென்று - பொருத்தம் பார்க்கப் பட்ட ஜாதகருக்கு , வேறு ஒரு இடத்தில் நல்ல வரன் வந்து , டக்குனு , முடிஞ்சு கல்யாணமே முடிந்து போகும்... கவனித்து இருக்கிறீர்களா ?

அது எல்லாமே .. இந்த புனர்பூ தோஷ வகையை சார்ந்தது... இந்த தோஷம் இருப்பவர்களுக்கு , பொருத்தம் பார்க்கும்போது - சம்பந்தப்பட்ட ஜாதகர் / ஜாதகிக்கு வேறு ஒரு நல்ல வரன் அமைந்து விடுகிறது.

சரி, இதை எப்படி ஜாதக ரீதியாக கண்டு பிடிப்பது ?

சந்திரன் , சனி - இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ? என்று பாருங்கள். இரண்டும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் , அல்லது ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை கொண்டு இருந்தால் ... ( அதாங்க - சந்திரனில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருந்தால் ) , அல்லது இரண்டும் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... அல்லது இரண்டு கிரகமும் இருக்கும் நட்சத்திரங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... ( அதாவது - பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்து , அனுஷம் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது போலே... )

இந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் புனர்பூ தோஷத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள்.

புனர்பூ தோஷம் இருப்பவர்களுக்கு திருமண விஷயத்தில் என்ன நடக்கும் ?

(1 ) திருமணம் காலதாமதமாவது
(2 ) திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தொடங்கி, நிச்சயத்திலும், திருமணத்திலுமே தடைகள் ஏற்படுவது,
(3 ) திருமண நிச்சயம் முறிந்து போவது,
(4 ) நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி தள்ளி வைக்கப்படுவது,
(5 ) மணப்பெண்ணோ மாப்பிள்ளையோ மாறிப் போவது,
(6 ) திருமணத்துக்கு போகும் வழியில் காலதாமதமாகிப் போவது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பரிகாரம் :

நல்லா ஜோதிடரிடம் ஜாதகத்தை காட்டி,அவர்களின் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல் பரிகாரம் செய்யலாம்.பொதுவான பரிகாரமாக..,

திருமணஞ்சேரி சென்று முறைப்படி பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது . வசதி இருப்பவர்கள் , யாராவது ஏழை , எளியவர்களுக்கு திருமணம் நடைபெற உதவி செய்யலாம்.

குலதெய்வத்திற்கு - முடிகாணிக்கை, படையல் செலுத்தி வழிபாடு செய்யலாம்.

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து - திருவண்ணாமலை கிரிவலம் சென்று , மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் , உடனடியாக பொருத்தமான வரன் அமையும்.

களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடும் , குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடும் பாதிக்கப் பட்டிருந்தாலும், திருமணம் தள்ளிப் போகும். அவர்களுக்கும், மேற்கூறிய பரிகார முறை பொருந்தும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.


விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?

ராஜ யோகம் என்றால் சொத்து, பதவி போன்றதா? எதிர் பார்ப்பதை விட அதிகமான நன்மை கிடைப்பதுதான் ராஜ யோகம். நாம் அந்த அளவிற்கு எதிர் பார்த்திருக்கவே மாட்டோம். அது கிட்டினால் அதை விபரீத ராஜ யோகம் என்று சொல்லலாம்.

6க்கு உரியவன் 8ல் இருந்தால், 8க்கு உரியவன் 12ல் இருந்தால் இதெல்லாம் விபரீத ராஜ யோகம். அதாவது “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்று ஒரு வாக்கு உண்டு. கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும்.

கன்னி, ரிஷபம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் குறிப்பாக ராகு, கேது பெயர்ச்சியால் விபரீத ராஜ யோகம் ஏற்படும்.

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.


நவ கிரகங்களின் காரகன்.

சூரியன் பித்ருகாரகன்

சந்திரன் மாத்ருகாரகன் 

செவ்வாய் சகோதரகாரகன்

புதன் புத்திகாரகன்

குரு புத்திரகாரகன்

சனி ஆயுள்காரகன்

சுக்கிரன் களத்திரகாரகன்

ராகு யோக போககாரகன்

கேது ஞான மோட்சகாரகன்




கேந்திரம் & திரிகோணம்

ஒருவருடைய ஜாதகதில் 1,4,7 & 10 கேந்திர ஸ்தானம் என்பது ஸ்ரீவிஷ்ணுவை குறிக்கும். 1,5 & 9 திரிகோண ஸ்தானம் என்பது ஸ்ரீலட்சுமியை குறிக்கும்.

ஒருவருடைய ஜாதகதில் கேந்திரம் & திரிகோணம் சுப கிரகங்கள் அமர்ந்தால் ராஜயோகம் ஏற்படும். 

ஸ்ரீலட்சுமி ஸ்தானம் மற்றும் ஸ்ரீவிஷ்ணு ஸ்தானம் அசுப கிரகங்கள் அமர்ந்தால் சிறப்பான பலன் தருவதில்லை.

ஒருவருடைய ஜாதகதில் கேந்திரம் & திரிகோணம் ஸ்தானங்கள் தூண்கள் என்பது ஆகும்.


Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.



குருவுக்கு பார்வை பலம்

குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது.

குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. 

அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

குருவுக்கு 2, 11 ஆகிய பார்வை இடங்கள் அற்புதமானவை.

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.



நீசபங்க ராஜயோகம் உண்டாகுமா ராஜயோகம்?.

ஒரு கிரகம் தனது பலவீன ஸ்தானமான நீச ஸ்தானத்தில் இருப்பது, அந்தக் கிரகத்தின் காரகத்துவத்தையும், அந்தக் கிரகம் எந்த வீட்டின் அதிபதியாக இருக்கிறதோ அந்த வீட்டின் பலனையும் பாதிக்கும் என்றாலும், நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் முதலில் கெடுபலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.

ஒரு கிரகம் நீசம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் அமைந்திருந்தாலும் நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இருந்தாலும், நீசம் பெற்ற கிரகம் ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை பெற்றோ, அம்ச சக்கரத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது.

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.


களத்திர ஸ்தானம் - ஏழாம் வீடு , மனைவி / கணவன்.

திருமணம் : - 7க்குரிய கிரகத்தின் திசை புக்தியில் திருமணம் நடக்கும்.

நல்ல மனைவி கிடைப்பாள் :- 7ல் குரு நல்ல மனைவி, 7ல் குருவின் பார்வை பெற்றாலும் ,7ல் சுக்கிரன் (அ) சந்திரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள்

புத்திசாலி மனைவி : 7ல் குருவும், சுக்கிரனும் கூடி நின்றால்.

மகிழ்ச்சியற்ற மனைவி:- ஜாதகத்தில் 7ஆம் அதிபதி 6,8 & 12ல் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

திருமணம் நடைபெறாது :- ஜாதகத்தில் 7ஆம் அதிபதியும் , லக்கினாதிபதியும், சேர்ந்து ஜாதகத்தில் 6,8 & 12 ல் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.

விதவை மணம் : ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் 7ஆம் வீட்டில் அமர்ந்திருந்தால் ஒரு விதவையை ஜாதகன் மணப்பான்.

தாமத திருமணம்:- 7ல் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும், 7ல் செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது.















































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக