சனி, 5 அக்டோபர், 2013

நவராத்திரி

ராதே கிருஷ்ணா 06-10-2013

நவராத்திரி


Parthu Rowvey Vmp shared Chinthamani's photo.













நவராத்திரியின் ஒன்பது சக்தி எவை தெரியுமா? பொதுவாக நவராத்திரி என்றால் கொலு வைப்பது, நைவேத்யம் செய்வது, சுற்றி உள்ள சுற்றத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைப்பது (யதா சக்தி) பின் எது இயலுமோ அதைத் தாம்பூலமாக தருவது போன்றவை மட்டுமே நமக்குத் தெரியும். இவைகளால் என்ன நன்மை, எதற்குச் செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. நம் முன்னோர்கள் எல்லோரும் செய்வதால் நாமும் அதைச் செய்கிறோம். அப்படியே கடைபிடிக்கிறோம். பித்ரு பக்ஷத்தில் மனபாரத்தை (சுய மற்றும் வம்சாவழி பாபத்தை) ஆத்ம வழிபாடு மூலம் பாரத்தை இறக்கிவிட்டு உடல், மனம் சுத்தியாகி பின் அம்பிகை வழிபாட்டின் மூலம் உடலுக்குச் சக்தி சேர்க்கவே ஒன்பது நாள் வழிபாடாக அமைக்கப்பட்டது. நவராத்திரி என்ற வார்த்தையிலேயே நவ என்ற ஒன்பது இலக்கைக் கொண்டு வருகிறது. ஒன்பது நாளும் எதைக் கொண்டாடுகிறோம் - பிறப்பின் பெருமையை, படைப்பின் பெருமையை! மரம், செடி முதல் ஊர்வன, பறப்பன முதற்கொண்டு விலங்குகள், மனிதர்கள், மகான்கள், அவதாரங்கள், மும்மூர்த்தி, முத்தேவிகள் என படைப்பின் அத்தனை அம்சங்களையும் கொண்டாடுகிறோம். அத்தனையுமாய் விரிந்து அன்னையானவள் சக்தி தேவியாய் கொலுவிருக்கிறாள் என்பதை! இதை ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறார்கள் ஒன்பது சக்திகளை: 1. பர்வத ராஜ புத்ரி - அம்பிகையின் பிறப்பு (குண்டலினி செயல்பட ஆரம்பிக்கிறது) 2. பிரம்மசாரிணி - சிவனை மணக்க அம்பிகை மேற்கொண்ட தவம் (சுவாதிஷ்டானம்) (இங்கு துவைதம் அத்வைதமாக மாறும். ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர-சக்தியாக தவம் இருப்பது.) 3. சந்திரகண்டா - மணிபூரக சக்ராதான் செயல்புரியும். மனம் புனிதத்தன்மை அடையும். 4. கூஷ்மாண்டா - அனாஹத சக்கரத்தைப் பிரதிபலிக்கச் செய்யும். தைரியம் மேலிடும். நோய் நொடிகளிலிருந்து தேகம் காக்கப்படும். 5. ஸ்கந்த மாதா - விசுக்தி சக்கரத்தை தியானிக்கச் செய்யும். தெய்வத்தை, தெய்வ நிலையை அடைய மார்க்கம் கிட்டும். ஒரு வித அமைதி பிறக்கும். 6. காத்யாயணி - ஆக்ஞா சக்கிரத்தை எண்ணி தவம் செய்ய வேண்டும். இறைவனை உணர, அடைய மேற்கொள்ளும் தியான முறை. 7. காலராத்ரி - சகஸ்ரார சக்ரத்தினை மனதில் இருத்தி செய்யும் தியான நிலை. இத்தடத்திலிருந்து செய்யும் வழிபாடு, தவத்தினால் எல்லா சித்திகளையும் அடையலாம். பற்றுதல்கள் விலகும். 8. மகா கவுரி - நவராத்ரியில் அஷ்டமி அன்று மேற்கொள்ளப்படும் வழிபாட்டு தினம். காளி அவதார நாள். முன் ஜென்ம வாசனை அறுபடும் நாள். 9. சித்திராத்ரி - நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று எட்டு சித்திகளையும் பெறுவதாக சித்திராத்ரி என பெயர் பெற்ற இத்தேவியின் தினமாகக் கொண்டாடப்படுவது. இவ்வாறாக உடலிலுள்ள சக்கரங்களை சித்தி செய்து பெறுவதற்கும், இறை வழிபாட்டில் அமைதி, மேன்மை அடையவும் உலகை வெல்லவும் அன்னையின் நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது. மஹிஷ ரூபம் என்பது எருமைத் தலையுடன் ராட்சசனாக எங்கிருந்தோ வருவதல்ல. கோபம், த்வேஷம், விஷம், ஏமாற்றுதல், பொய் பேசுதல், அடுத்தவர்களை நோகடிப்பது போன்ற நம்முள் உள்ள ராட்சசர்களை வதம் செய்வதே இந்த நவராத்திரியின் அடிப்படை நோக்கம். இந்த வழிபாட்டின் மூலம் நம்முள் ஏற்படுத்திக் கொண்ட சக்தி, ஆத்ம பலத்தினைக் கொண்டு நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு நிம்மதியான முறையில் அன்புடன் கடமை உணர்வுடன் சேவை செய்வதற்கே. மேலும் நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையை சந்தோஷமாக மாற்றி நம் ஆன்மிக பலத்தை மெருகேற்றுவதற்க்காக கொண்டாடப்படுவதே நவராத்திரி வைபவம். அவரவர் இல்லத்தில் இந்த சிறப்பான தெய்வீகக் காலத்தில் என்னென்ன வழிபாடுகளை மேற்கொள்ளலாம்? இந்த நவராத்திரி புண்ய காலத்தில் தினமும் - துர்கா ஸுக்தம், ஸ்ரீ ஸுக்தம், மேதா ஸுக்தம் படியுங்கள், கேளுங்கள். துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி அஷ்டோத்ரங்கள் சொல்லி அர்சனை செய்யுங்கள். பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனையே அம்பாளாக பாவித்து அர்ச்சனை வழிபாடுகளைச் செய்யுங்கள். வழிபடுவோருக்கு (பூஜைகளை நியமத்துடன் செய்பவர்களுக்கு) குடும்ப உறுப்பினர்கள் தக்க வகையில் உதவுங்கள். வீட்டிற்கு வரும் யாரும் தண்ணீராவது அருந்தாமல் வெளியில் செல்லக் கூடாது. இல்லத்திற்கு வரும் முன்பின் அறிந்தவர், அறியாதவர் என யாரையும் விட்டுக் கொடுக்காமல் அதிதிக்கு விருந்தோம்பல் செய்யுங்கள். பெண்களுக்குத் தாம்பூலம் அளியுங்கள். தாம்பூலமாக அளிக்கும் பரிசுப் பொருட்கள் இயன்றவரை பொதுவில் எவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கட்டும். தினமும் காலை-மாலை தூப தீபம், அர்ச்சனை, நிவேதன வழிபாடுகள் செய்யுங்கள். நேரமில்லையே... என நினைக்காமல் ஒரு ஐந்து நிமிடம் வழிபாட்டிற்கு ஒதுக்குங்கள். ஏனெனில் முன்னரே சொன்னது போல், நம்மைச் சுற்றி வெளியில் தெய்வீகம் முழுமையாக நிறைந்திருக்கும் காலமிது. அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு. பெண்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அம்பாளாகவே எண்ணி வழிபடுங்கள். பாலா, கன்யா, சுமங்கலி, கணவனை இழந்தோர் என எல்லோரையும் சம பாவனையுடன் பாருங்கள். அவரவர்கள் மனம் நோகாதபடிக்கு பக்குவமாக விருந்தளியுங்கள். வீட்டில் வேலை செய்யும் பணியாட்கள் உட்பட யாரையும் விட்டுக்கொடுக்க வேண்டாம். ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம், நவரத்ன மாலா, நவாவர்ண கீர்த்தனை (முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியது) போன்றவற்றைக் கேளுங்கள். நவாவர்ண பூஜை முழுவதும் இந்த கீர்த்தனை வடிவில் உள்ளது. (இதனைக் கவனித்துக் கேட்பதும், தினமும் பாடுவதும், நவா வர்ண பூஜை செய்த பலனைத் தரும்). ஸ்ரீசக்கரத்தை தீபத்துடன் வைத்து அபிஷேகம் போன்றவற்றை சக்கரத்திற்கு செய்து அர்ச்சனையினை தீபத்துடன் சேர்த்துச் செய்யலாம். ஸ்ரீசக்ரம் வீட்டில் இருப்பதே சுபம் தான். நினைத்த நேரத்தில் கோட்டையாக வந்து காக்கும் அன்னையை முறையே வழிபட்டுப் பூரண பலன் பெறுவது மானிடர்களாகிய நம் கடமையாக எண்ணிச் செய்தல் வேண்டும். . — with Sage of Kanchi and 49 others.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக