வெள்ளி, 11 அக்டோபர், 2013

பெரியவா பாத்துப்பா 15

ராதே கிருஷ்ணா 12-10-2013

பெரியவா பாத்துப்பா 15


Narasimman Nagarajan shared Krishnamurthy Krishnaiyer's photo.



















பெரியவா பாத்துப்பா 15 ! 'எதுக்கு மாமி இப்படி இழுத்து விட்டுக்கறேள்?' இதுதான் எல்லாரும் எங்கிட்ட கேக்கற கேள்வி. அவாளுக்கு, நான் என்னோட வயசுக்காரா மாதிரி ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கலையேன்னு கரிசனம். அதனால கேக்கறா. ஆனா, நான் எப்பவும் சுறுசுறுப்பா இருக்கத்தான் ஆசைப்படறேன். ரொம்ப ஆனந்தமாத்தான் இருக்கேன். இந்த்ரிய இச்சைகள் இருந்தாத்தான் கஷ்டமெல்லாம். எனக்கு அப்படி ஒன்னுமே இல்லை. ஒரு பிரயோஜனமும் இல்லாத கதை புஸ்தகம் படிக்கணும், சினிமா, சீரியல் பாக்கணும், வகை வகையா சாப்படணும், விலை உசந்த புடவை கட்டிக்கணும், நகை போட்டுக்கணும் இப்படி எந்த ஆசையும் இல்லை. சிலர் அவாளோட நான் நெறைய பேசணும்னு எதிர் பாக்கறா. பகவானை பத்தி பேசினா சரி. ஒன்னுத்துக்கும்உபயோகமில்லாத பேச்சுன்னா எதுக்கு அது? நான் எல்லா நேரமும் பகவான் ஸ்மரணைல லயிச்சு இருக்கத்தான் விருப்பப் படறேன். படிச்சா ராமாயணம், அம்பாள் திரிசதி இப்படி. இப்போன்னு இல்லை, எப்பவுமே இப்படித்தான். சதிகாரி என்று தெரியாமல் உனை நான் நம்பினேனே அப்படீன்னு அம்பாளை பழிக்கற மாதிரி வர்ணிக்கற வரி கூட என்னால படிக்க முடியாது. என்னை நீ நன்னா தானே வச்சிருக்கே, நான் ஏன் உன்னை நிந்தா ஸ்துதி பண்ணனும்னு நினைப்பேன். அதை என் மாமியார் கிட்ட 'அம்மா, என்னால சொல்ல முடியலை'ன்னு சொல்லி அழுவேன். அந்த வரியை விட்டுடேன்னு மாமியார் சொல்லுவா. சிருங்கேரில கீழே விழுந்து கால்ல அடிபட்டு கட்டு போட்டு மயக்கத்துல இருந்தப்போ அந்த சர்வேஸ்வரி காட்சி கொடுத்ததை பத்தி ஏற்கனவே சொல்லி இருக்கேன். அது மாதிரி ஒரு சம்பவம் ஸ்ரீநிவாசன் ங்ரவருக்கும் நடந்தது. அதை பத்தி சொல்றதுக்கு முன்னாடி நம்மோட சனாதன தர்மத்துலையும், புராணங்களிலையும் படிச்ச வேற சில விஷயங்களை பத்தி சொல்லணும் - விதியை யாராலயும் மாத்த முடியாது. ஆனா, பகவான் கிட்ட பரிபூரணமா சரணடைஞ்சுட்டா அவன் நாம கர்ம பலனை அனுபவிக்கும் போது கூட நம்மை காத்து ரட்ஷிப்பான். திரௌபதி ரெண்டு கையையும் விரிச்சு 'ஹே, கிருஷ்ணா'ன்னு கதறினப்போ அவன் ஓடோடி வந்து அவளோட மானம் பறிபோகாம காப்பாத்தினான். அதே மாதிரி, கஜேந்திரன் 'ஹே,ஆதிமூலமே' அப்டின்னு பிளரினப்பவும் கருடன் மேல பறந்து வந்து அந்த யானைக்கும் ப்ரத்யக்ஷமாகி மோட்ஷத்தை கொடுத்தான். அதுமாதிரி தான் நாமும் நம்மளால முடியாதுன்னு வரும் போது அவன் கிட்ட போறோம். அவனும் நம்மை காத்து ரக்ஷிக்கறான். ஆனா, உடனே அவனை மறந்துட்டு கேளிக்கைகள்ல ஈடுபடறோம். சம்சார சாகரத்துல மூழ்கிடறோம். அதுலேர்ந்து வெளில வரணும்கற எண்ணமே வரது இல்லை. நமக்கு வேணும்போது மட்டும் அவனை நினைக்கிறோம். ஏதோ ஒரு அஜாமிளனுக்கு ஒரே ஒரு தடவை தன் பிள்ளையை 'நாராயணா'ன்னு கூப்டதுக்காக நற்கதி கெடச்சுது அப்டிங்கறதுனால நாமளும் வயசாகும் போது பகவானை ஸ்மரிக்கலாம், இப்போதைக்கு நம் புலன்கள் மூலமா லௌகீக சுகங்களை அனுபவிக்கலாம்னு இருந்துடக்கூடாது. உடம்பும் மனசும் தளர்ந்துபோறப்போ அவன் நம் ஞாபகத்துக்கு வருவானா அப்டிங்கறதே சந்தேகம் தான். அதனாலதான், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா எனும் நாமம்னும், இப்பவே சங்கரா, சங்கரா ன்னு சொல்லிடறேன்னும் ஆழ்வார்களும்,அடியார்களும் சொல்லி வச்சுட்டு போயிருக்கா. கிருஷ்ணனோட குழலிசை கேட்ட உடனே கோபிகாள் எல்லாரும் அவா செஞ்சுண்டு இருந்த வேலையை அப்படியே போட்டுட்டு, தன் பதி, குழந்தைகளை மறந்து ஓடினா. ஏன்னா, அவாளோட மனசுல எப்பவுமே அவன்தான் இருந்தான். அவளோட ஒவ்வொரு துடிப்பும் கிருஷ்ணா, கிருஷ்ணான்னு தான் இருந்தது. அப்படி ஒரு ப்ரேமை நமக்கும் இருக்கணும். பகவானுக்கு தொண்டு செய்யும் போது ஆயிரம் தடைகள், அபவாதங்கள் வரும். அந்த மாதிரி நேரத்துல நெறைய பேர் 'நமக்கென்ன போச்சு'ன்னு விட்டுடுவா. அப்படி விட்டுட்டா நாம செய்ய நெனச்ச ஒரு தர்ம காரியமும் நின்னு போய்டும். ஆனா, அதுக்கெல்லாம் அசராம வேங்கடாசலபதிக்கு கோவில் கட்டி அதுல விசேஷமா ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை பண்ணினவர்தான் ஸ்ரீநிவாசன். அவரோட வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு இப்போ சொல்றேன். என்னோட ப்ரெண்ட் சுகந்தா வோட அகத்துக்காரர் தான் ஸ்ரீநிவாசன். ஒரு தடவை அவா திருப்பதில நடந்த கல்யாணத்துக்கு போயிருந்தா. அப்போ அவர் யாரையோ அழைச்சுண்டு வரதுக்காக பஸ் ஸ்டான்ட்டுக்கு போயிண்டு இருக்கறச்சே பின்னாடிலேர்ந்து ஒரு பஸ் மோதி அவரோட ரெண்டு கால் மேலேயும் எறிடுத்து. உடனே அவர் போன் நம்பர் கொடுத்து தன்னோட சொந்தக்காராளுக்கு தகவல் கொடுக்க ஏற்பாடு பண்ணினார். தனியா விழுந்த ரெண்டு காலையும் எடுத்து பத்ரப்படுத்தி வைக்கச் சொன்னார். அப்புறம் மயக்கமாயிட்டார். அவா அவரை அப்பல்லோ ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணினா. சர்ஜரி நடந்தது. துண்டா போன ரெண்டு காலையும் சேர்த்து வச்சா. ஆறு மாசம் படுக்கைல இருந்தார். நாங்க அவர பாக்கப் போன சமயம் வாக்கிங் ஸ்டிக் வச்சு நடக்க ஆரம்பிச்சிருந்தார். அந்த அக்சிடென்ட் எப்படி நடந்ததுன்னு விவரிச்சுண்டு வரும்போது 'பஸ் கால் மேல ஏறப்போறதுன்னு தெரிஞ்சுது. நாராயணா ன்னு கத்தினேன். ரெண்டு பக்க சக்ரங்களுக்கு நடுல ஸ்ரீதேவி, பூதேவி சமேதரா நாராயணன் காட்சி கொடுத்தார். அதுக்கப்றம் எனக்கு நெனவு தப்பிடுத்து' அப்டின்னு சொன்னார். அவர் கட்டின கோவில பெங்களுர் ஆர்த்தி நகர்ல (ஆனந்த் நகர் அருகில்) பாக்கலாம். ஸ்ரீநிவாசனும், சுகந்தாவும் பரம க்ஷேமத்தோட இருக்கணும்னு பெரியவாட்ட ப்ரார்த்திச்சுக்கறேன். ராம், ராம். ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக