வியாழன், 26 நவம்பர், 2015

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

ராதே கிருஷ்ணா 27-11-2015








நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

இத படிங்க....
இதை படிப்பதால் உங்கள் வாழ்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம் ஐந்த நிமிடம் செலவிட்டு இதைப் படியுங்கள்.....

🍲👕🏠உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

💵 வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)

💻 உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

📱நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

👫 நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

👥 பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.

😱 போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

😫 கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் வழிபட முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

👪 உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

🍸 தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

👳 உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

🎓 கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).

💻 இணையத்தில் இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.

📠 நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தை
யும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க,

🌟 ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?
நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் வீண் கவலைகளை விட்டு அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதைப் பொருட்கள் என்பவற்றை விட்டு நான் அதிர்ஷ்டசாலி என்ற மன தைரியத்தோடு இயன்றளவு மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மேலும் அழகானதாகவும் சிறந்ததாகவும் அமையும்.



































புதன், 25 நவம்பர், 2015

(நேற்று காலமான ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவுக்கு அஞ்சலியாக இந்த போஸ்ட்)

ராதே கிருஷ்ணா 26-11-2015








"சீதையை மீட்டாச்சு...

(நேற்று காலமான ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவுக்கு
அஞ்சலியாக இந்த போஸ்ட்)

( நீ ஒரு கார்யம் பண்ணு. சுந்தர கண்டத்லேர்ந்து ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக வைபவம் வரைக்கும் சந்திரமௌலிய கூட அழச்சிண்டு போய் 'ஸ்ரவணம்'' [கேட்டல்] பண்ணவை! -பெரியவா)

மீண்டது சிறுவன் குரல்!

கட்டுரை-எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

2012 ஏப்ரல்-இது ஒரு மறு பதிவு.

பல வருடங்களுக்கு முன்... ஒரு நாள் மாலை வேளை. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக்கூட்டம். தனது அறையை விட்டு வெளியே வந்த ஸ்வாமிகள், காத்திருக்கும் பக்தர் கூட்டத்தைச் சற்று நின்று உற்றுப் பார்த்துவிட்டுச் சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டார். ஒவ்வொருவராக வந்து நஸ்கரித்து, தங்கள் குறைகளை ஸ்வாமிகளிடம் தெரிவித்து, பரிகாரம் பெற்றுக்கொண்டு நகர்ந்தனர். பக்தர்கள் வரிசையில் சிறுவன் ஒருவனின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்தார், நடுத்தர வயது மனிதர் ஒருவர். அவர் கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்தது. சிறுவன் பேந்தப்பேந்த விழித்தபடி எந்தச் சலனமுமின்றி நின்றிருந்தான்.

பெரியவாளுக்கு முன் வந்து நின்ற அவர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சிறுவனும் நமஸ்கரித்தான். கண்களை இடுக்கிக்கொண்டு அவரைக் கூர்ந்து பார்த்த மகா ஸ்வாமிகள், "ஏண்டாப்பா, நீ மயிலாப்பூர் ஆடிட்டர் சங்கரநாராயணன் தானே? ஏன் இப்படிக் கண் கலங்கிண்டு நிக்கிறே? என்ன சிரமம் ஒனக்கு?" என்று ஆதரவுடன் விசாரித்தார்.

பெரியவா கேட்டதும் துக்கம் மேலும் அதிகரித்துவிட்டது அவருக்கு. கேவிக்கேவி அழுதுகொண்டே, "ஆமா பெரியவா, இப்ப எனக்குத் தாங்க முடியாத சிரமம் ஒண்ணு ஏற்பட்ருக்கு, என்ன பண்றதுன்னே தெரியலே. நீங்கதான் என் தெய்வம், எப்படியாவது நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும். வேற கதியில்லே!" என்று மீண்டும் பெரியவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.

நிலைமையை உணர்ந்த பெரியவா, வாத்ஸல்யத்தோடு, "சங்கரா... ஒண்ணும் தாபப்படாதே! சித்த நீ அப்டி ஒக்காந்துக்கோ.. இவாள்ளாம் பேசிட்டுப் போனப்றம் ஒன்னக் கூப்டறேன்!" என்று எதிரில் கை காண்பித்தார்.

"உத்தரவு பெரியவா.. அப்டியே பண்றேன்!" என்று கூறிவிட்டுச் சற்றுத் தள்ளி எதிரில் அமர்ந்தார் ஆடிட்டர். சுமார் அரைமணி நேரம், கழித்து பக்தர்கள் ஆச்சார்யாளை தரிசித்துவிட்டுக் கிளம்பினார்கள். ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்கிற இரு இளைஞர்கள் தவிர, அங்கு வேறு எவரும் இல்லை. ஆடிட்டர் சங்கரநாராயணனை ஜாடை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். வந்து நமஸ்கரித்தார் ஆடிட்டர். ஆச்சார்யாள் வாஞ்சையோடு ஆடிட்டரைப் பார்த்து "சங்கரா...பிராக்டீஸெல்லாம்நடந்துண்டிருக்கோல்லியோ?"

நீதான் 'லீடிங்' ஆடிட்டராச்சே... பிராக்டீஸுக்குக் கேப்பானேன்? அது சரி, ஒன் தகப்பனார் பஞ்சாபகேச ஐயர் தஞ்சாவூர்லதானே இருக்கார்? சௌக்யமா இருக்காரோல்லியோ?" என்று கேட்டார்.

உடனே ஆடிட்டர் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "பிராக்டீஸெல்லாம் ரொம்ப நன்னா நடக்கிறது பெரியவா, அப்பாவும், அம்மாவும் பம்பாய்ல இருக்கிற என் தம்பிகிட்ட போயிருக்கா. ரெண்டு மாசமாறது. எனக்குத்தான் ஒரு துக்கம் ஏற்பட்டுடுத்து பெரியவா. அதத் தாங்க முடியலே..நீங்கதான் நிவர்த்தி பண்ணிக் குடுக்கணும்" என்று கூறியபடி அருகில் இருந்த சிறுவனைக் கட்டியணைத்துக் கதறி அழ ஆரம்பித்தார்.

சிறுவன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு துக்கம் ஆடிட்டர் சங்கரநாராயணனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது என்று நொடிப் பொழுதில் புரிந்துகொண்டது அந்த நடமாடும் தெய்வம்.

"அழப்படாது சங்கரா.. எதுவா இருந்தாலும் புருஷா கண் கலங்கப்படாது! அது சரி... இந்தப் புள்ளையாண்டான் யாரு? ஒம் புத்ரனா?" எனக் கேட்டார் ஸ்வாமிகள். "ஆமாம் பெரியவா, இவன் என் பையன்தான். பேரு சந்திரமௌளி. இவனுக்குத்தான் பெரியவா திடீர்னு.." என்று மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டை அடைக்க நின்றார் சங்கரநாராயணன்.

உடனே ஆச்சார்யாள் கவலை தோய்ந்த முகத்தோடு, "சங்கரா! இவனுக்கு திடீர்னு என்னாச்சு? சந்திரமௌலி ஸ்கூல்ல படிச்சுண்ருக்கானோல்லியோ... பதட்டப்படாம விவரமா சொல்லேன்!" என ஆறுதலாகச் சொன்னார்.

சங்கர நாராயணன் கண்களைத் துடைத்தபடி, "பெரியவா..பையன் சந்திரமௌலி மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல்ல ஏழாவது படிச்சுண்டிருக்கான். பன்னண்டு வயசாறது. படிப்புல கெட்டிக்காரன்.

கிளாஸ்ல இவன்தான் ஃபர்ஸ்ட். இருவது நாளக்கி முன்னால் ஒரு நாள் கார்த்தாலேர்ந்து பேச்சு நின்னுடுத்து பெரியவா. கேட்டா, 'பேச முடியலே"னு ஜாடை காட்றான்... அன்னிலேர்ந்து ஸ்கூலுக்குப் போகலே. சாப்பாடு, டிபனெல்லாம் வழக்கம்போல சாப்டறான்...நன்னா தூங்கறான். அதெல்லாம் சரியா இருக்கு பெரியவா... ஆனா பேச்சுதான் வரல்லே... நா என்ன பண்ணுவேன்.. நீங்கதான் கிருபை பண்ணி,இவனைப் பேச வைக்கணும்!" என்று கண்ணில் நீர் வழியப் பிரார்த்தித்தார்.

ஸ்வாமிகள் சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு ஆடிட்டரிடம், "பையனை அழச்சிண்டு கோயில் குளத்துக்கு எல்லாம் போறது உண்டா? சந்திரமௌலிக்கு ஸ்வாமிகிட்டே பக்தி உண்டோல்லியோ?"

"நிறைய உண்டு பெரியவா. கந்த சஷ்டி கவசம். ஆஞ்சநேயர், ராமர் ஸ்லோகங்களை எல்லாம் நித்யம் கார்த்தால குளிச்சுப்டு, ஸ்வாமி படத்துக்கு முன்னாடி நின்னு சொல்லிட்டுத்தான் ஸ்கூலுக்குக் கெளம்புவான். ஆத்ல [வீட்டில்] பெரிய கோதண்ட ராமர் படம் ஒண்ணு உண்டு.

எங்க தாத்தா காலத்து தஞ்சாவூர் படம் அது. நித்யம் காலம்பற - சாயங்காலம் அத நமஸ்காரம் பண்ணிப்டு சீதா ராமன் திருவடிகளை நிறைய வாட்டி தொட்டுக் கண்ணுல ஒத்திணடே இருப்பான். "சீதையையும், ராமனையும் எனக்கு ரொம்பவும் புடிக்கும்னு அடிக்கடி சொல்லிண்டிருப்பான். வாரத்ல ரெண்டு மூணு நாள் அவன் அம்மாவோட கபாலீஸ்வரர், முண்டகக் கண்ணி அம்மன், லஸ் ஆஞ்சநேயர் கோயிலுக்கெல்லாம் போய் தரிசனம் பண்ணுவான். அப்படிப்பட்ட நல்ல கொழந்தைக்கு இப்டி ஆயிடுத்தே பெரியவா..." சங்கரநாராயணனால் துக்கத்தை அடக்க முடியவில்லை.

மீண்டும் கேவிக்கேவி அழ ஆரம்பித்தார்.

அவரை சமாதானப்படுத்திய ஆச்சார்யாள், சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டுக் கேட்டார். "மயிலாப்பூரில் நடக்கிற உபன்யாசத்துக்கெல்லாம் இவனை அழச்சிண்டு போற வழக்கமுண்டோ?"

"உண்டு பெரியவா! சில நேரம் நா அழச்சிண்டு போவேன். இவனுக்குப் பேச்சு நின்னு போனன்னிக்கு மொத நாள் சாயங்காலம்கூட நான்தான் இவனை ரசிகரஞ்சனி சபாவுல நடந்த ராமாயண உபன்யாசத்துக்கு அழச்சிண்டு போயிருந்தேன். சிரத்தையாகக் கேட்டான். மறுநாள் இப்டி ஆயிடுத்து!"

சிரித்துக்கொண்டே, "ராமாயணம் கேட்டதினாலேதான் இப்டி ஆயிடுத்துனு சொல்ல வர்றியா?" என்று கேட்டார் ஆச்சார்யாள்.

"ராம ராம! அப்டி இல்லே பெரியவா! அதுக்கு அடுத்த நாள்லேர்ந்துங்கிறதுக்காகச் சொல்ல வந்தேன்!" எனக் கன்னத்தில் போட்டு்க்கொண்டார் ஆடிட்டர். "அது சரி, உபன்யாசம் பண்ணினது யாரோ" என வினவினார் பெரியவா.

"ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா, பெரியவா!"

""பேஷ் பேஷ், சோமதேவ சர்மாவோட புத்ரன்.நல்ல பரம்பரை. ரொம்ப வாசிச்சவா.. அது போகட்டும் சங்கரா, பையனை யாராவது டாக்டர்கிட்ட காமிச்சியோ?"

"காமிச்சேன் பெரியவா!"

"எந்த டாக்டர்?"

"டாக்டர் சஞ்சீவி!"

"அவர் என்ன சொல்றார்?" - பெரியவா

"டெஸ்ட்டெல்லாம் பண்ணிப்டு, 'குரல்வளைல ரெண்டு நரம்பு பாதிக்கப்பட்ருக்கு. ஒரு ஆபரேஷன் பண்ணினா சரியாயிடலாம்'னு சொன்னார் பெரியவா."

"நிச்சயமா சரியாயிடும்னு சொல்லலியா?"

"அப்டி உறுதியா சொல்லலே பெரியவா.. எப்படியாவது நீங்கதான் இவனுக்குத் திருப்பியும் பேச்சு வரும்படி பண்ணணும். நீங்கதான் காப்பாத்தணும்.!"

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு பேசினார் ஆச்சார்யாள். "நீ ஒரு காரியம் பண்ணு சங்கரா. பையன் சந்திரமௌலிய அழச்சிண்டு இந்த ஊர்ல இருக்கிற கோயில்களுக்கு எல்லாம் போய் தரிசனம் பண்ணி பிரார்த்தனை பண்ணிண்டு வா, ராத்ரி மடத்திலேயே பலகாரம் பண்ணிப்டு தங்கிடு. கார்த்தால ஸ்னானம் பண்ணி, அனுஷ்டானம் இருந்தா அதயெல்லாம் முடிச்சிண்டு பத்து மணிக்கு வந்து என்னைப் பாரு!"

ஆச்சார்யாள் சொன்ன வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன சங்கரநாராயணனுக்கு! பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு இருவரும் ஆலய தரிசனத்து்க்குப் புறப்பட்டனர்.

அடுத்த நாள் காலை பத்து மணி, முன்னதாகேவே வந்து அமர்ந்திருந்தது அந்த நடமாடும் தெய்வம். அதிகக் கூட்டமில்லை. ஐந்தாறு பேர் காத்திருந்தனர். அனைவரும் தரிசித்துச் சென்றனர். ஆச்சார்யாளை நமஸ்கரித்து, கை கட்டி நின்றார் சங்கரநாராயணன்.

சந்திரமௌலியும் நமஸ்கரித்து எழுந்தான். ஸ்வாமிகள் அவனையே உற்றுப் பார்த்துவிட்டுப் பேசினார். "சங்கரா.. ஒரு கார்யம் பண்ணு, சந்திரமௌலியையும் அழச்சிண்டு போய், மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்ல ஸ்வாமி அம்பாளுக்கு ஒரு பூர்ணாபிஷேகம் பண்ணி, அத தரிசனம் பண்ணி வை. அப்புறமா நீ என்ன பண்றே.. அதே ஸ்ரீவத்ஸ ஜயராம சர்மா வேறு எங்கயாவது பூர்த்தியா ஸ்ரீமத் ராமாயணம் சொல்றாரானு பாரு.. அப்டி எங்கயாவது கோயில்லயோ,சபாவிலயோ சொல்றார்னா.. நீ ஒரு கார்யம் பண்ணு. சுந்தர கண்டத்லேர்ந்து ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக வைபவம் வரைக்கும் சந்திரமௌலிய கூட அழச்சிண்டு போய் 'ஸ்ரவணம்'' [கேட்டல்] பண்ணவை! ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக பூர்த்தி அன்னிக்கு, நீ என்ன பண்றே... நல்ல மலை வாழைப்பழமா பாத்து வாங்கிண்டு போய் 'பௌராணிகர் [உபன்யாசகர்] கைல கொடுத்து ரெண்டு பேருமா அவர சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுங்கோ. நீ மனசுக்குள்ள அந்தப் பட்டாபிஷேக ஸ்ரீ சீதாராமனையும், பௌராணிகரையும் பிரார்த்தனை பண்ணிக்கோ....

அந்தப் பட்டாபிராமன் காப்பாத்துவான். கவலையே படாதே.. போயிட்டு வா!" என்று இருவருக்கும் பிரசாதம் கொடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்தது அந்த பரப்பிரம்மம்.

'சென்னையில் எங்கேயாவது ஸ்ரீவத்ஸ ஜெயராமசர்மாவின் ஸ்ரீமத் ராமாயண பிரசவனம் நடைபெறுகிறதா' என்று தினமும் நாளிதழ்களின் "இன்றைய நிகழ்ச்சிகள்" பகுதியைப் பார்த்துவந்தார் ஆடிட்டர்.

அன்றைய பேப்பரில், "மயிலை ஸ்ரீஷீர்டி சாய்பாபா கோயிலில் ஸ்ரீஜயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் 'நவாஹ'மாக [9 நாட்கள்] நடைபெறும்' என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருந்தது.

அன்று சுந்தர காண்டம் பகுதி ஆரம்பம். சந்திரமௌலியுடன் ஸ்ரீசாய்பாபா கோயிலுக்குப் போனார் சங்கரநாராயணன். மிக உருக்கமான உபன்யாசம். மெய்ம்மறந்து கேட்டான் சந்திரமௌலி. சில நேரம் அவன் கண்ணிலிருந்து நீர் பெருகியது. அப்போதெல்லாம் அவன் முதுகில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் சங்கர நாராயணன்.

அன்று ஸ்ரீமத் ராமாயண உபன்யாச பூர்த்தி தினம். மயிலை சாய்பாபா கோயிலில் நல்ல கூட்டம். இரவு 10.30 மணிக்கு ஸ்ரீசீதாராம பட்டாபிஷேகம் பூர்த்தியாகி, ராமாயணம் கேட்டால் உண்டாகும் பலன்களைச் சொல்லி முடித்தார் ஸ்ரீவத்ஸஜெயராம சர்மா.

ஒவ்வொருவராக அவரை நமஸ்கரித்து நகர்ந்தனர். சங்கரநாராயணனும் சந்திரமௌலியும் அவரை நமஸ்கரித்தனர். தான் வாங்கிச் சென்றிருந்த ஒரு டஜன் பெரிய மலை வாழைப்பழச் சீப்பை சந்திரமௌலியிடம் கொடுத்து, ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவிடம் சமர்ப்பித்து நமஸ்கரிக்குமாறு சொன்னார். அவன் அப்படியே செய்தான். சந்தோஷத்துடன் பழச் சீப்பை வாங்கிய அவர், தனக்குப் பின்புறமிருந்த ஸ்ரீராம பட்டாபிஷேக திருவுருவப் படத்துக்கும், ஷீர்டி ஸ்ரீசாய்பாபா படத்துக்கும் அதைக் காட்டி அர்ப்பணித்தார். பிறகு அதிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்து, சந்திரமௌலியிடம் கொடுத்து, "கொழந்தே.... நீ க்ஷேமமா இருப்பே. இந்த ரெண்டு பழத்தையும் நீயே சாப்டு!" என்று கூறி ஆசிர்வதித்தார்.

கோயிலை விட்டு வெளியே வந்ததும், அந்த இரு பழங்களையும் சாப்பிட்டான் சந்திரமௌலி.

அடுத்த நாள் காலையில் ஒற் அதிசயம் நிகழ்ந்தது. குளியலறையில் பல் துலக்கிவிட்டு, ஹாலுக்கு வந்த சந்திரமௌலி, "அம்மா, காபி ரெடியா?" என்று உரக்கக் குரல் கொடுத்தான். பேப்பர் படித்துக்கொண்டிருந்த அவன் அப்பாவும் சமையலறையில் இருந்த அம்மாவும் தூக்கிவாரிப் போட்டபடி ஹாலுக்கு ஓடோடி வந்தனர்.அங்கு சிரித்தபடி நின்றிருந்தான் சந்திரமௌலி.

"காபி ரெடியானு நீயாட குரல் குடுத்தே சந்திரமௌலி!" என்று ஆனந்தம் பொங்க அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அம்மா. சங்கரநாராயணன் அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கூத்தாடினார். சந்திரமௌலி சரளமாகப் பழையபடி பேச ஆரம்பித்தான். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் வந்து பார்த்து, சந்தோஷப்பட்டனர்.

அன்று மாலை 5-30 மணி, காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் மகா ஸ்வாமிகள் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் அவ்வளவாக இல்லை. பத்து அல்லது பதினைந்து பேருடன் வேன் ஒன்றில் வந்தார் ஆடிட்டர் சங்கரநாராயணன். சந்திரமௌலியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார் ஆடிட்டர். சிரித்தபடியே ஆச்சார்யாள் கேட்ட முதல் கேள்வி; "சந்திரமௌலீ..இப்போ நன்னா பேச வந்துடுத்தோல்லியோ? பேஷ்... பேஷ்! எல்லாம் அந்த சீதாராமனோட கிருபை!"

உடனே சந்திரமௌலி, "ஹரஹர சங்கர... ஜெய ஜெய சங்கர.. காமகோடி சங்கர...." என்று உரக்க கோஷமிட்டான்.அனைவரும் மெய்ம்மறந்து நின்றிருந்தனர். சற்று நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேசியது;

"சங்கரா.. இப்போ சொல்றேன், கேளு. சந்திரமௌலிக்கு இப்டி திடீர்னு ஏற்பட்டதுக்கு வேற ஒண்ணும் காரணமில்லே. அவனுக்கு இயற்கையாகவே சீதாதேவி கிட்டேயும், ஸ்ரீராமனிடமும் அளவு கடந்த பிரியமும், பக்தியும் இருந்திருக்கு. அவாளுக்கு ஒரு சிரமம்னா அத இவனால தாங்கிக்க முடியாது! மொதல்ல உபன்யாசத்த இவன் கேக்கற அன்னிக்கு ஜயராமசர்மா, சீதாபிராட்டியை ராவணன் அபகரிச்சுண்டு போர 'கட்ட'த்த சொல்லியிருக்கணும். நா சொல்றது சர்தானா [சரிதானா] சங்கரா...?"

பிரமித்து நின்ற ஆடிட்டர் வாய் திறந்து, "அதேதான் பெரியவா... அதேதான்! அன்னிக்கு அந்த கட்டத்தைத்தான் ரொம்ப உருக்கமா சொன்னார்!" என ஆமோதித்தார். ஸ்வாமிகள் தொடர்ந்தார்; "நாம அளவு கடந்த பக்தியும், ஆசையும் வெச்சுண்டிருக்கிற மாதா சீதைய ஒரு ராட்சசன் தூக்கிண்டு போறான்கறதக் கேட்ட ஒடனே இவனுக்கு உள்ளூர பிரமை புடிச்சு ஸ்தம்பிச்ச நெலமை ஏற்பட்டுடுத்து. பேச்சும் ஸ்தம்பிச்சுடுத்து. வேற ஒண்ணுமில்லே.

இதுக்கு ஒரே நிவர்த்தி மார்க்கம் என்ன? அதே பௌராணிகர் வாக்காலயே "அம்மா சீதைக்கு ஒரு சிரமும் இல்லாம திரும்பவும் மீட்டுண்டு வந்தாச்சு"ங்கறத இவன் காதால கேட்டுட்டா மனசையும், வாக்கையும் அமுத்திண்டிருக்கிற அந்தப் பிரமை விட்டுப் போயிடும்னு தோணித்து, அதனால்தான் அப்டி பண்ணச் சொன்னேன். சீதாராமன் கிருபையால எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. சந்திரமௌலி... நீ பரம க்ஷேமமா இருப்பே!"

அந்த நடமாடும் தெய்வத்தின் பேச்சைக் கேட்ட அனைவரும் மலைத்து நின்றனர்

கருட புராணம் || தண்டனைகள்

ராதே கிருஷ்ணா 26-11-2015









மனதை திடப்படுத்திக்கொண்டு படிக்கவும்....

நாம் செய்யும் ஒவ்வொரு கர்மாக்களின் பயனையும் (நல்லதோ கேட்டதோ) நாம் தான் அனுபவித்துத் தீர்க்கவேண்டும். பாவ புண்ணியங்கள் கூட்டுத்தொகை பூஜ்யம் (0) வந்தால் தான் நாம் பிறவியின் முடிவுக்கு வருவோம். அதுவரை ஏதாவது பிறவி (கர்மாக்களுக்கு ஏற்றவாறு) வந்துகொண்டே இருக்கும். நமக்காக மற்றவர் அனுபவிக்கமுடியாது.

கருட புராணம் || தண்டனைகள்
----------------------------------------
அந்தகூபம்
----------------
உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல்.
****
கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
***************************************************************

கும்பிபாகம்
------------------
சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்துதல்
****
எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.
***************************************************************

தாமிஸிர நரகம்
---------------------------
பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரித்தல், பிறரது குழந்தையை அபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றி அபகரித்தல்.
***
நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள்.
****************************************************************

அநித்தாமிஸ்ர நரகம்
-------------------------------
கணவனும் மனைவியும் சேர்ந்து வாழாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும்.
****
உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிப்பார்கள்
****************************************************************

கிருமிபோஜனம்
------------------------
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்தல்.
****
பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள் மூலம் பாவிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தப்படுவார்கள்
***************************************************************

ரௌரவ நரகம்
----------------------
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுத்தல், பிரித்தல், அழித்தல், அவர்களின் பொருள்களைப் பறித்தல்.
***
பாவிகளை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.
****************************************************************

மகா ரௌரவ நரகம்
----------------------------
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தல், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தல்.
***
குரு என்ற கோரமான மிருகம் பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
*********************************************************

லாலா பக்ஷம்
--------------------
மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல்.
*****
பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவார்கள்.
*************************************************************************

காலகுத்திரம்
-------------------
பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தல், துன்புறுத்தியும் பட்டினி போடுதல்.
***
அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவார்கள்.
***************************************************************

பன்றி முகம்
------------------
குற்றமற்றவரைத் தண்டித்தல், நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோதல்
****
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் உள்ள ஒரு மிருகத்தின் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டிக்கப்படுவார்கள்.
***************************************************************

அக்னிகுண்டம்
----------------------
பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.
*****
பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
******************************************************************
வஜ்ரகண்டகம்
----------------------
சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடைதல்
***நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
********************************************************

**
சான்மலி
--------------
நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழுதல்.
***
பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
****************************************************************
வைதரணி
---------------
நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தல்.
***
வைதரணி என்ற ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.
***************************************************************************
பூபோதம்
--------------
சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடுதல், ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்த லட்சியம் இன்றி வாழ்தல்
***
பாவிகளை விடமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.
***************************************************************************
பிராணி ரோதம்
---------------------
பிராணிகளைக் கொடுமைப்படுத்தல்
***
கூர்மையான பாணங்களை பாவிகளின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
***************************************************************************
விசஸனம்
----------------
பசுக்களைக் கொடுமை செய்தல்.
*****
பாவிகளுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
************************************
சாரமேயாதனம்
-----------------------
வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விடத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல்
***
விசித்திரமான கொடிய மிருகங்கள் பாவிகளை வதைக்கும்.
*********************************************************************
அவீசி
----------
பொய்சாட்சி சொல்தல்
***
நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்தப்படும்
**







மகாவிஷ்ணுவுக்கு பல வாகனங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும், முதன்மையானதும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுவதும் கருடன் ஆகும். அமிர்தம் சாப்பிடாமல் என்றென்றும் இறவாத நிலையைப் பெற்றவர் கருட பகவான். ராமாயணத்தில் ராமருக்கும், ராவணனின் மகன் இந்திரஜித்துக்கும் போர் நடந்தது. அப்போது இந்திரஜித் ஏவிய நாக அஸ்திரம் பட்டு ராமரும், லட்சுமணரும் மூர்ச்சை அடைந்தனர். அந்த தருணத்தில் அனுமன் விரைந்து போய், கருட பகவானை அழைத்து வந்தார். அவரது நிழல் பட்டதும் நாக அஸ்திரம் பலம் இழந்தது. பின்னர் தன் அலகால் கொத்தி நாக அஸ்திரத்தில் இருந்து ராம, லட்சுமணர்களை அவர் காத்தார்.

மகாவிஷ்ணு, தன் வாகனமான கருடனிடம் கூறிய விவரங்களே கருடபுராணம் என்று அழைக்கப்படுகிறது. பகவானுக்கும், கருடனுக்கும் இடையே நடந்த இந்த உரையாடலில், மனிதர்களின் பிறப்பு, இறப்பு மற்றும் சொர்க்கம்– நரகம் ஆகியவை பற்றியும், இறப்புக்குப்பின் நடைபெறும் சடங்குகள், ஆன்மாவின் நிலை போன்றவை பற்றியும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பாவங்களின் தண்டனை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது, வானில் கருடன் தென்பட்டால் நல்ல சகுனமாக கருதும் வழக்கம் இன்றும் உள்ளது. கருடன் என்பதற்கு பெரிய சிறகுகளை கொண்டவன் என்பது பொருள். கருட பகவான் மிகப்பெரும் அரிய பெரிய வீரச் செயல்களைச் செய்தவர். வரிசையான நகங்களையும், கூரிய மூக்கினையும் கொண்டவர். இவருக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் இனிதான வாழ்வு கிடைக்கும்.

கருடன் காயத்திரி மந்திரம்:

‘ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸுவர்ண பக்ஷாய தீமஹி

தந்நோ கருடஹ் ப்ரசோதயாத்’

பொருள்:– பரம புருஷனை அறிவோமாக. சுவர்ணத்தைப் போல் ஓளி வீசும், அவன் மீது தியானம் செய்கிறோம். கருட பகவானான அவன் நம்மை காத்து அருள் செய்வானாக.

இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 108 தடவை சொல்லி கருட பகவானை தரிசனம் செய்து வந்தால், விஷ பூச்சிகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். நல்ல காரியங்கள் நடக்கும். ஆபத்துகள் அகலும்.



























































சனி, 21 நவம்பர், 2015

"கசாப்புக்கடை நாயகன் கமலஹாசனுக்கு"

ராதே கிருஷ்ணா 21-11-2015








Follow · Yesterday 
 

துக்ளக் இதழில் எச் ராஜா ஜி, "கசாப்புக்கடை நாயகன் கமலஹாசனுக்கு" எழுதிய சாட்டையடி கடிதம் !!

அன்புடைய சகோதரர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு...

வணக்கம்!

அண்மையில் தங்களுடைய 61–ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள். தங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

உங்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், நீங்கள் பேசிய கருத்துக்கள் இக்கடி தத்தை எழுதத் தூண்டியுள்ளது. தங்களுடைய பல கருத்துக்கள் தெய்வநம்பிக்கை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாதம் என்பவற்றைச் சுற்றியே இருந்தது.

தாங்கள் நாஸ்திகனும் அல்ல, ஆஸ்திகனுமல்ல, ஒரு பகுத்தறிவுவாதி என்றும், அதற்குக் காரணம் நாஸ்திகம், ஆஸ்திகம் ஆகிய சொற்கள் சமஸ்க்ருதச் சொற்கள் என்றும் கூறியுள்ளீர்கள். ஆமாம், கமல்ஹாசன் என்கின்ற சொல், தமிழ்ச் சொல்லா? அதுவும் சுத்த சமஸ்க்ருதச் சொல்லே! வேதங்களைக் குறிக்கும் ஸமஸ்க்ருதச் சொல்லான ‘ஸ்ருதி’ என்பதையே, தங்களுடைய அன்பு மகளுக்கும் சூட்டியுள்ளீர்கள். எனவே, ஒரு நல்ல தமிழ்ப் பெயருக்கு முதலில் நீங்கள் முயற்சி செய்யலாம்.

‘தெய்வங்கள் ஒருவரின் பாக்கெட்டில் இருக்கட்டும்; அடுத்தவர் மீது திணிக்க வேண்டாம்’ என்கின்ற உங்களது கருத்தை வரவேற்கிறேன். ஆன்மிகவாதிகள் எவரும், ஒருவர் நாஸ்திகராக இருப்பதை ஆட்சேபிப்பதில்லை. ஆனால், நாஸ்திகவாதிகள்தான் தங்களது கருத்தை ஆன்மிகவாதிகள் மீது திணிப்பதற்காக, ஆன்மிகத்தை இழிவுபடுத்துவதோடு, வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். பகுத்தறிவுவாதத்திற்கு தந்தையாகக் கருதப்படும் ஈ.வெ.ரா.வின் சிலைகளில்,
‘கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி, நம்புபவன் முட்டாள், பரப்புபவன் அயோக்கியன்’ என்பது போன்ற வாசகங்களைக் காணலாம். ஆனால், எந்தக் கோவில்களிலும் ‘கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி, நம்பாதவன் முட்டாள், தெய்வபக்தி இல்லாதவன் அயோக்கியன்’ என்று எழுதி வைக்கப்படவில்லை. எனவே, தங்களது அறிவுரை பகுத்தறிவுவாதிகளுக்கே அவசியம் தேவை.

ஆமாம், ‘தெய்வங்களுக்கு காலாவதி உண்டு’என்கிறீர்களே, யார் சொன்னது? தமிழகத்தின் பகுத்தறிவுத் தலைமை மடத்தின் மடாதிபதியின் வாரிசு, கோயில் கோயிலாகச் சென்று கொண்டிருப்பதைத் தாங்கள் கேள்விப்படவில்லையா? நாஸ்திகமும், பகுத்தறிவுவாதமும் காலாவதியாகத் துவங்கி பல காலம் ஆகி விட்டது.
தமிழ் மொழிக்கு ஆன்மிக வழிபாட்டில் இடம் இல்லை என்பது போல் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். தேவாரமும், திருவாசகமும், பிரபந்தங்களும் இல்லாத வழிபாடு எங்கேயுள்ளது? ஹிந்து மதமும், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாயணம், மஹாபாரதம் போன்ற நூல்களும்தான் தமிழ் மொழிக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ளன. இதுபோல நாஸ்திகர்கள் தமிழ்ச் சேவை செய்துள்ளதாகக் கூற முடியாது. மேலும் எந்த மொழியில் பிரார்த்தனை செய்வது என்பது இதில் நம்பிக்கை உள்ளவர்களின் விருப்பம். சிலர் ஆண்டவனை சமஸ்க்ருதத்தில் வணங்கலாம்; சிலர் அரபு மொழியில் வணங்கலாம். அது அவரவர் விருப்பம்.

மேலும் பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் வெறும் Reactionary forces. இவர்களின் நோக்கம் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமே. உதாரணமாக, விநாயகர் சிலைகளை ஈ.வெ.ரா. உடைத்தார். ஆனால், எந்த நாஸ்திகவாதியும் பிற மதத்தின் சின்னங்களை இதுபோல் அவமதிக்கத் துணிந் ததுண்டா? பகுத்தறிவு வாதம் என்பது வெறும் ஹிந்து விரோதம் மட்டுமே.

‘சுனாமி, ஏழ்மை ஆகியவை ஏன் வருகிறது? ஆண்டவன் ஏன் இவற்றை தடுக்கவில்லை’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். இதற்கு ஹிந்து மதத்தின் வினைப்பயன் சித்தாந்தம் சரியான விளக்கமளித்துள்ளது. பிற மதங்கள்தான், ‘எல்லாம் ஆண்டவனின் கொடை, ஆண்டவனின் விருப்பப்படி அனைத்தையும் படைக்கிறான்’ என்று கூறுகின்றன. ஆனால், ‘ஒருவன் ஏழையாகவும், மற்றொருவன் பணக்காரனாகவும், ஒருவன் அறிவாளியாகவும், மற்றொருவன் முட்டாளாகவும், ஒருவன் ஆரோக்கியமானவனாகவும், மற்றொருவன் நோயாளியாகவும் இருப்பதற்குக் காரணம், அவனது வினைப்பயனே ஆகும்’ என்கிறது ஹிந்து மதம்.
நல்வினை செய்தவன் நல்லது பெறுகிறான். தீவினை செய்தவன் தீயது பெறுகிறான்.

‘மாட்டுக்கறி உண்பது கெடுதி என்று விஞ்ஞானப்பூர்வமாக என்னால் கூற முடியும்; ஆனால், என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டு’மென்று கூறியுள்ளீர்கள். பசுவதை தடை பற்றியும், மாட்டுக்கறி உண்பது பற்றியும் முழு விவரங்களை அறியாமல், பலரும் 5 குருடர்கள் யானை எப்படி உள்ளது என்பது பற்றிக் கருத்துச் சொல்வதைப் போல் பேசி வருகின்றனர்

ஒரு சட்டம் தங்களுக்கு ஏற்புடையதா, இல்லையா என்பது முக்கியமல்ல. சட்டப் புத்தகத்தில் உள்ள சட்டம் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நம் அரசியல் சட்டப் பிரிவு 48–ல், மாநிலங்கள், ‘பசு மற்றும் அதன் சந்ததியைப் பாதுகாக்கச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. பசுப் பாதுகாப்பு, மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. நம் நாட்டில் கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் மற்றும் 5 சிறிய வடகிழக்கு மாநிலங்களில் (மணிப்பூர் தவிர) மட்டுமே பசுவதைத் தடைச் சட்டம் இயற்றப்படவில்லை. மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. ஜம்மு– காஷ்மீர் மாநிலத்தில் 1932–ல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் ஜம்மு– காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம், இச்சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்புக் கூறியுள்ளது. மேலும் மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தவிர, பிற மாநிலங்களில் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் அமலில் உள்ளது.
பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் அது செயல்படுத்தப்பட வேண்டுமென்றும், பிற மாநிலங்களிலும் அரசியல் சட்டப் பிரிவு 48– ன் படி பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைப்பது சட்டப்படியான உரிமையே.

கியூபாவில் சர்க்கரைத் தொழில் பின்னடைவைச்சந்தித்ததால், கரும்பு விவசாயிகள் மிகப் பெரிய நஷ்டத்தை அடைந்தனர். எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, 2003–ல் கியூபா அரசு, பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை யாரும் சகிப்புத்தன்மையற்ற ஹிந்துத்துவா செயல் என்று விமர்சிக்கவில்லை. மேலும், அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றிய விவரங்களை மறைத்து, மக்களிடம் விஷமப் பிரசாரத்தில் இன்று நாஸ்திக, கம்யூனிஸ, ஜிஹாதி சக்திகள் கூச்சல் போடுவது என்பது மோடி பிரதமரானதைச் சகித்துக் கொள்ள முடியாத செயலே ஆகும்.

ஆன்மிக பலமே ஒருவருக்கு தன்னம்பிக்கை தரும்; கஷ்டம் வரும்போது, பகுத்தறிவு வாதிகள் நிலை குலைந்து போவார்கள் என்பதற்கு தாங்களே சிறந்த உதாரணம். தங்களுடைய ‘விஸ்வரூபம்’ படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டினார்கள். சென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. தாங்களும் மிரண்டு போனீர்கள். ‘அப்படம் வெளியிடப்படா விட்டால், தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணம் நஷ்டப்படும்; இந்தியாவை விட்டே வெளியேற வேண்டி வரும்’ என்றெல்லாம் கூறினீர்கள். காரணம், பகுத்தறிவுவாதிகள் பணம், பொருள், பதவிச் சுகம் ஆகியவற்றையே பிரதானமாகக் கும்பிடுபவர்கள். இவை தங்களை விட்டுச் சென்று விட்டால் வாழ முடியாது என்று எண்ணுபவர்கள். எனவேதான், நாட்டை விட்டே வெளியேற வேண்டி வரும் என்று புலம்பினீர்கள். ஆனால், பணம் நஷ்டப்பட்டால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று எந்த ஆன்மிகவாதியும் கூற மாட்டார்.

மேலும், தங்கள் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மிரட்டிய வன்முறைவாதிகளின் கட்டளையை சிர மேற்கொண்டு, படத்தில் பல வெட்டுக்களை நீங்கள் அனுமதித்தீர்கள். ஆனால், தங்கள் உணர்வுகள் புண் படுகிறது; எனவே தங்கள் சமுதாயத்தைக் கொச்சைப் படுத்தும் ஒரு வரியை நீக்க வேண்டுமென்று வேறு ஒரு அமைதியான சமுதாயம் கேட்டதைத் தாங்கள் பொருட்படுத்தவில்லை. நீங்கள் மட்டுமல்ல, தமிழ கத்தில் உள்ள எல்லா பகுத்தறிவுவாதிகளும் வன் முறையாளர்கள் முன் மண்டியிடுகின்றனர். எளிய வரை ஏகடியம் பேசுகின்றனர். எனவே, பகுத்தறிவு வாதிகள், கோழைகள். ஹிந்து விரோதிகள் என்றஇலக்கணத்திற்கு உலக நாயகனும் விதிவிலக்கல்ல. எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.

வணக்கம்.

வியாழன், 19 நவம்பர், 2015

எம். என். நம்பியார் மறைந்த தினமின்று

ராதே கிருஷ்ணா 20-11-2015










எம். என். நம்பியார் மறைந்த தினமின்று
##################################
ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டாலே 'எங்கெங்கோ' போய் விடும் இக்காலத்து நடிகர்களுக்கு மத்தியில், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நடிப்புலகில் தனி இடத்தைப் பிடித்து, தனது இடத்திற்கு அருகில் கூட யாரையும் அண்ட முடியாத அளவுக்கு தனி முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார் எம்.என். நம்பியார்.

இந்தியில் பிரான் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தார். அவரது இடத்தை இன்னும் எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லை. அப்படி ஒரு அபாயகரமான வில்லன். அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் அவ்வளவு அபாரமாக இருக்கும்.

தமிழுக்கும் அப்படி கிடைத்த பயங்கர வில்லன்தான் நம்பியார். அவரை நிஜமாகவே வில்லனாகப் பார்த்தார்களாம் அக்காலத்துப் பெண்கள். அந்த அளவுக்கு அவரது முக பாவனையும், வசன உச்சரிப்பும் படு தத்ரூபமாக இருந்ததுதான் காரணம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டு கால நீண்ட, நெடிய பயணத்தைக் கொண்டது நம்பியாரின் திரையுலக அனுபவம். 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்ட பழுத்த அனுபவஸ்தர். வி்ல்லத்தனத்தில் மட்டுமல்லாமல், பக்தியிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

கிட்டத்தட்ட 65 ஆண்டு காலம் தொடர்ந்து சபரிமலைக்குப் போய் வந்தவர். இதனால்தான் அவரை குருசாமிகளுக்கெல்லாம் குருசாமி என்று அய்யப்ப பக்தர்கள் புகழ்கிறார்கள், மரியாதை செய்தார்கள்.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர். ஆனால் அவர்களுக்கெல்லாம் மகுடமாக, மகா வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்.

அவருடைய பெயரை உச்சரித்தாலே ஒரு திகில் ஏற்படும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்த நம்பியாரின் வாழ்க்கைத் தடத்திலிருந்து..
***********************.

மஞ்சேரியிலிருந்து ஊட்டிக்கு ..
############################
கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறன்தவர்தான் நம்பியார். இவருடைய இயற்பெயர் நாராயணன் நம்பியார். ஊர்ப் பெயரையும் சேர்த்து எம்.என். நம்பியார் ஆகி விட்டார்.8 வயதில் ஊட்டியி்ல டீ கடை நடத்தி வந்த தனது அக்காள் கணவரின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தார் நம்பியார்.

அங்கு தங்கி பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். 5ம் வகுப்பு வரை படித்தார்.சகோதரியின் குடும்பம் கஷ்டமான நிலையில் இருப்பதைப் பார்த்த அவர் அவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல், 13வது வயதில் சென்னைக்கு வந்தார்.

ஊட்டியலிருந்து நாடகத்திற்கு ..
###########################

சென்னைக்கு வந்த நம்பியாருக்கு நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் வந்தது. இதனால், நவாப் ராஜமாணிக்கம் நடத்தி வந்த நாடக கம்பெனியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடம்தான் கிடைத்தது. பின்னர் அந்த நிறுவனத்தின் பக்த ராமதாஸ் நாடகம் திரைப்படமாக உருவாகியது.

1935ம் ஆண்டு அந்த நாடகம் தமிழிலும், இந்தியிலும் திரைப்படமானது. நாடக அனுபவத்தை கருத்தில் கொண்டு நம்பியாருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு ..
############################

இப்படித்தான் சினிமாவுக்கு வந்து சேர்ந்தார் நம்பியார். அவருக்கு முதல் படத்தில் கிடைத்த சம்பளம் ரூ. 40.

சிறு சிறு வேடங்களாக நடிக்கத் தொடங்கிய நம்பியாருக்கு ஆரம்பத்தில் ஹீரோ வேடங்களும் கூட கிடைத்தன. ஆனால் வில்லன் வேடத்தில்தான் அவர் பரிமளித்தார்.இது, எம்.ஜி.ஆருடன் இணைந்த பிறகு பன்மடங்கா பிரகாசிக்கத் தொடங்கியது.

எம்.ஜி.ஆர் படத்தில் வில்லனா, கூப்பிடு நம்பியாரை என்று கூப்பிடும் அளவுக்கு இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அமர்க்களமாக அமைந்தது.

இருவரும் இணைந்து நடிக்காத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு இந்த ஹீரோவும் - வில்லனும் இணைந்தே நடித்து வந்தனர்.

சர்வாதிகாரி படத்தில் நம்பியாரின் வி்ல்லத்தனம் வெகுவாகப் பேசப்பட்டது. அவரும், எம்.ஜி.ஆரும் போட்ட கத்திச் சண்டை அப்போது வெகு பிரசித்தம்.

தொடர்ந்து தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் தங்கம் என இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.

வெறுக்க வைத்த வில்லத்தனம் ..
#############################

இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக - அதி பயங்கர வில்லனாக - தொடர்ந்து நடித்ததால் நம்பியாரை நிஜமாகவே வில்லனாக நினைத்து விட்டனர் அந்தக் காலத்துப் பெண்கள்.

படம் பார்க்கும்போது நம்பியாரை, எம்.ஜி.ஆர். அடிக்கும் காட்சிகளுக்கு அமோக வரவேற்பு இருக்குமாம். அதிலிருந்தே மக்கள் எந்த அளவுக்கு நம்பியாரை பார்த்து பயந்தார்கள், கோபமாக இருந்தார்கள் என்பதை உணரலாம்.

இதைத்தான் பின்னாளில் இயக்குநர் வி.சேகர் தயாரித்த நீங்களும் ஹீரோதான் படத்தி்ல ஒரு காட்சியாகவே வைத்தார். அதில், நம்பியாரும், பி.எஸ்.வீரப்பாவும் ஒரு படப்பிடிப்புக்காக கிராமத்திற்கு வருவார்கள்.

அவர்களுக்கு தங்க வீடு கிடைக்காது. ஒவ்வொரு வீடாக ஏறி, இறங்கி வீடு கேட்பார்கள். ஆனால் இவர்தான் எம்.ஜி.ஆருக்கு எதிராக சதி செய்தவர், எனவே வீடு கிடையாது என்று ஒவ்வொருவரும் கூறுவது போல காட்சி அமைத்திருப்பார்கள்.இப்படி தனது வில்லத்தன நடிப்பால் அந்தக் கேரக்டருக்கே ஒரு தனி முத்திரையை உருவாக்கி விட்டவர் நம்பியார்.

அவரைத் தவிர வேறு எந்த வில்லன் நடிகருக்கும் இப்படி ஒரு இமேஜ் இதுவரையிலும் அமையவில்லை, இதற்கு முன்பும் அப்படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியாக எம்.ஜி.ஆருடன், 75 படங்களில் இணைந்து நடித்துள்ளார் நம்பியார்.

சிவாஜிக்கும் வில்லன் ..
###########################
எம்.ஜி.ஆரைப் போலவே, சிவாஜி கணேசனுக்கும் வில்லனாக நடித்தவர் நம்பியார். இருவரும் இணைந்து அம்பிகாபதி, உத்தமபுத்திரன், தில்லானா மோகானாம்பாள், திரிசூலம், சிவந்த மண், லட்சுமி கல்யாணம் என ஏராளமான படங்களில் நடித்தனர். சிவாஜிக்குத் தம்பியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நம்பியார்.

அந்தக் காலத்து மும்மூர்த்திகளில் ஒருவரான ஜெமினி கணேசனுடனும் நிறையப் படங்களில் நடித்தவர் நம்பியார்.இந்த மூன்று நடிகர்களின் படங்களிலும் தவறாமல் நம்பியார் இடம் பெறுவது அப்போது வழக்கமாக இருந்தது.

7 தலைமுறையினருடன் ..
######################

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், அடுத்த தலைமுறையான ரஜினி, கமல், விஜயகாந்த், அவர்களுக்கு அடுத்த தலைமுறையான விஜய் உள்ளிட்டோருடன் நடித்த பெருமைக்குரியவர் நம்பியார்.

மொத்தம் 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து அவர் சாதனை படைத்துள்ளார். அவரது மொத்த படங்கள் ஆயிரத்தைத் தாண்டும். நடிப்பனுபவமோ 70 ஆண்டுகள்.

வில்லத்தனத்தில் கலக்கிய நம்பியார் பின்னர் குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவை வேடங்களிலும் அசத்த ஆரம்பித்தார்.தூறல் நின்னு போச்சு படம் மூலம் இப்படி டிராக் மாறிய நம்பியார் காமெடியிலும் கலக்கியவர்.நம்பியாரின் மருமகன் தான் நடிகர் சரத் பாபு ஆவார்.

சபரிமலை அய்யப்பனின் தீவிர பக்தராகவும் மிளிர்ந்தவர். தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்குப் போய் வந்த சாதனை படைத்தவர். இவரைத்தான் சபரிமலைக்குச் செல்லும் திரையுலகினர் குருசாமியாக ஏற்று செயல்பட்டு வந்தனர்.

எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, நம்பியார் இருமுடி கட்டிச் செல்லும்போது, எம்.ஜி.ஆர். அனுப்பி வைக்கும் மாலைதான், அவருக்கு முதலில் அணிவிக்கப்படுமாம்.

இப்படிப் பழுத்த அய்யப்ப பக்தராக விளங்கி வந்த நம்பியார், அய்யப்பன் கோவிலில் சீசன் தொடங்கியுள்ள இந்த மாதத்தில் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அய்யப்பனின் திருவடிகளையே அவர் சரணடைந்திருப்பதாக அய்யப்ப பக்தர்களும் சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.

நடிப்பிலும், தனிப்பட்ட நல்ல பழக்க வழக்கங்களிலும், குண நலனிலும் நம்பியாருக்கு இணை யாரும் இல்லை. அவரது இடத்தை அவர் இருந்தபோதும் யாராலும் நிரப்ப முடியவில்லை. இனியும் நிரப்புவது அவ்வளவு சாத்தியமானதாக தெரியவில்லை.



Actor M.N.Nambiar

07/03/1919
Kannur, Kerala, India
125
Bhakta Ramadoss
Biography - M.N.Nambiar
M. N. Nambiar was a film actor in Tamil cinema and had been in the film industry for more than 50 years.He moved to live with his sister in Ooty. He became interested in acting when he was 13 and he joined Nawab Rajamanikkams troupe. From then on acting became the only thing that occupied him. His first film was Bhaktha Ramadoss, shot in 1935 in Hindi and Tamil, where he played a villain.

Though he started as a hero but started donning the role of a villain - so much so that today his name is almost eponymous with the Kollywood villain. Nambiar has worked with seven generations of actors from Balaiyah to Manoj (Bharathiraajas son).His first pay was Rs.3 in the "Boys Company." He would retain Re 1 and send Rs.2 to his mother. A man of very limited needs, he has not eaten outside of his house. He is extremely health conscious.

He made quite a statement in the early 50s with his portrayal of 11 roles in ‘Digambara Samiyar.’ His arresting performance in films such as ‘Manthiri Kumari,’ ‘Velaikkari,’ ‘Ayirathil Oruvan,’ ‘Thillana Mohanambal,’ ‘Missiamma’ and ‘Nenjam Marappadillai’ paved way for a very successful career that spanned over five decades.A majority of the more than 1000 films that he has done is in Tamil, though he has acted in Telugu, Malayalam and Hindi, besides an English film `Jungle (with Rod Cameron, the films hero, directed by William Burke) in which he appears in a few brief scenes. The film was released in 1952. The Hindi film he acted in was a remake of the Tamil `Kanavane Kankanda Deivam.

After becoming popular in Tamil films he started his own drama troupe called Nambiar Nataka Mandram. They staged two plays — `Kaviyin Kanavu and a comedy play `Kalyana Supermarket.M.N. Nambiar is an ardent devotee of Sabarimala Sri Ayyappan. He has had a long association with the temple, and visited the shrine more than 65 years over the last half a century this has led to him being called Maha Guruswamy.His favourite films remain `Aayirathil Oruvan with MGR, `Ambikapathi with Sivaji Ganesan, `Missiyamma with Gemini Ganesan, `Nenjam Marappathillai directed by Sridhar and `Thooral Ninu Pochu with Bhagyaraj. This was the film that made him do character roles, something that he continues to do till now. He also acted as hero in two films `Kalyani and `Kavitha produced by Modern Theatres.

He has done stage, films and also serials such as `Velan. When it comes to acting, he supposedly likes all the actors but of special mention are M. R. Radha and Savitri. Both, in his opinion, were brilliant in their own way.He died in Chennai on 19 November 2008.


M. N. Nambiar

From Wikipedia, the free encyclopedia
M. N. Nambiar
എം.എൻ. നമ്പ്യാർ
Mn-nambiar-actor-extraordinaire.jpg
BornManjeri Narayanan Nambiar
7 March 1919
KannurMalabarBritish Raj (now inKeralaIndia)
Died19 November 2008 (aged 89)
ChennaiTamil Nadu, India
EthnicityMalayali
Spouse(s)Rukmani
Manjeri Narayanan Nambiar (Malayalamമഞ്ഞേരി നാരായണൻ നമ്പ്യാർ; 7 March 1919 – 19 November 2008), known as M. N. Nambiar, was a film actor in Tamil cinema who dominated the industry in the role of villain for around 50 years. Also known as Nambiar swami or Maha Guruswami, he was a spiritual leader who pioneered the movement of taking pilgrims to Sabarimala.

Early life

M. N. Nambiar was born on 7 March 1919. While still a child, his father died and so he moved to live and study in Ooty with his elder sister and brother-in-law.[1] He became interested in acting when he was 13 and he joined Nawab Rajamanikkam's troupe. From then on acting became the only thing that occupied him. His first film was 'Bhaktha Ramadoss', shot in 1935 in Hindi and Tamil, where he played as a comedian along with T.K.Sampangi.

Film career

Though he started as a hero, Nambiar Guruswami soon started donning the role of a villain — so much so that today his name is synonymous with villainy in Kollywood. Nambiar swami has worked with seven generations of actors from Balaiyah to Manoj (Bharathiraaja's son).
His first pay was Rs.3 in the "Boys Company." He would retain Re 1 and send Rs.2 to his mother. A man of very limited needs, he has never eaten food not cooked by his wife, Rugmini Nambiar. A doyen of kalari & sword fighting, Nambiar swami was a fitness fanatic even before it became fashionable to be so.
He made quite a statement in the early 50s with his portrayal of 11 roles in ‘Dhigambara Samiyar.’ His arresting performance in films such as Manthiri KumariVelaikaariAyirathil OruvanThillana MohanambalMissiyamma and ‘Nenjam Marappadillai’ paved way for a very successful career that spanned over five decades.[2]
A majority of the more than 1000 films that he has done is in Tamil, though he has acted in Telugu, Malayalam and Hindi, besides an English film `Jungle' (with Rod Cameron, the film's hero, directed by William Burke) in which he appears in a few brief scenes. The film was released in 1952. The Hindi film he acted in was a remake of the Tamil `Kanavane Kankanda Deivam.'
After becoming popular in Tamil films he started his own drama troupe called Nambiar Nataka Mandram. They staged two plays — `Kaviyin Kanavu' and a comedy play `Kalyana Supermarket.'
Nambiar swami was that rare contradictory personality - a cruel, charming villain on the silver screen while being a very pious man in real life. He was also a pure vegetarian and teetotaler. He was also an ardent devotee of Sabarimala Sri Ayyappan. He has had a long association with the temple, and visited the shrine more than 65 times over the last half a century; this has led to him being called Maha Guruswamy. His colleagues noted that he died during the famous Sabarimala season and it may be due to the blessing of his Lord.[3]
His favourite films remain `Aayirathil Oruvan' with MGR, `Ambikapathi' with Sivaji Ganesan, `Missiyamma' with Gemini Ganesan, `Nenjam Marappathillai' directed by Sridhar and `Thooral Ninu Pochu' with Bhagyaraj. This was the film that made him do character roles, something that he continued to do till his death. He also acted as hero in two films `Kalyani' and `Kavitha' produced by Modern Theatres.
He has done stage, films and also acted on TV dramas like 'Oviyam' and Velan. When it comes to acting, he supposedly likes all the actors; but of special mention are M. R. Radha and Savitri. Both, in his opinion, were brilliant in their own way.

Partial filmography

YearFilmLanguageNotes
1935Bhaktha RamadasTamilDebut film as a comedian
1946VidyapathiTamil
1947RajakumariTamil
1947KanjanTamil
1948AbhimanyuTamil
1949VelaikaariTamil
1950Manthiri KumariTamilRajaguru
1951MarmayogiTamil
1951SarvadhikariTamilRemake of The Gallant Blade[4]
1952JungleEnglish
1953PetrathaiTamil
1953Kanna TalliTeluguSankar
1956Amara DeepamTamil
1957RajarajanTamil
1958Uthama PuthiranTamil
1958Nadodi MannanTamil
1961PasamalarTamil
1963PanathootamTamil
1965Enga Veetu PillaiTamil
1965Aayirathil OruvanTamil
1966Thali BhagyamTamil
1966NadodiTamil
1966Naan AanaiyitalTamil
1967KaavalkkaranTamil
1968Pudhiya BhoomiTamil
1968Ragasiya Police 115Tamil
1976SatyamTamil
1978Thacoli AmbuMalayalam
1979AveshamMalayalamShekhar
1979PancharatnamMalayalam
1979MamankamMalayalam
1980Chandra BimbamMalayalam
1980Arangum AniyarayumMalayalam
1980ShakthiMalayalam
1980GuruTamil
1981GarjanaiTamil
1981KolilallamMalayalam
1981ThadavaraMalayalam
1982ChilanthivalaMalayalamShekhar
1982Thooral Ninnu PochuTamil
1983Thai VeeduTamil
1984Naan Mahaan AllaTamil
1986Mella Thirandhathu KadhavuTamil
1993GentlemanTamil
1993PaasamalargalTamil
1993YejamanTamil
1996Poove UnakkagaTamil
1997VallalTamil
1998MoovendharTamil
1999RojavanamTamil
1999Pooparika VarugiromTamil
2001Sharja To SharjaMalayalam
2001Vinnukkum MannukkumTamil
2002Varushamellam VasanthamTamil
2002BabaTamil
2003WinnerTamil
2004ArasatchiTamil
2005Anbe AaruyireTamil
2006SudesiTamil
  • Ambikapathy (1957)
  • Enga Veetu Pillai
  • Mannavan vandhanadi
  • Thooral ninnu pochu
  • Pallandu vaazhga
  • Swamy ayyappan
  • Ninaithadai mudippavan
  • Ulagam sutrum vaaliban
  • Savale samali
  • Raja Raja Cholan
  • Nenjam Marappathillai
  • En thambi
  • Anbe Vaa
  • Makkalai petra magaraasi
  • Velaikari (1949)
  • Thigambara Samiyar (1950)
  • Kalyani (1952)
  • Vidyapathi (1946)
  • Kaviyin Kanavu
  • Garjanai (1981)
  • Avasara Police 100(1991)
  • Bhaktha Ramadass (1935)
  • Arasilankumari

Television

Death

Nambiar suffered from bacterial infection and died at his residence in Chennai on 19 November 2008. As his last act on Earth, he looked at his wife (the woman he loved above all) one final time & then slowly closed his eyes. He was survived by his wife Rugmini Amma, 2 sons — one, a senior BJP leader Sukumar Nambiar, and the other, Mohan Nambiar, a prominent businessman based in Coimbatore and a daughter, Sneha Nambiar. His eldest son Sukumar Nambiar died on 8 January 2012 aged 63 and later his wife Rugmini Amma also died on 11 April 2012 aged 82.

Tributes

"If there was anyone who could act with both the top heroes (Sivaji Ganesan and M. G. R.) of Tamil cinema then, it was Nambiar. At one point, directors could not think of anyone else but him to play villain."
"This is a very big loss...you cannot find a human being like him easily."
"He was a villain only when the camera got rolling...otherwise, he’d always keep us laughing with his ready wit,"
  • K. Raman (Make-up man) :

"In ‘Nenjam Marappadillai,’ he plays a really old man...the makeup would take hours together, but he would be extremely patient. His skin was flawless and almost pink...he took great care of his health."
"Nambiar swami was responsible for taking most of us in the industry to Sabarimalai"
"I have acted with him in several films. He would be very jovial and enthusiastic on the sets. When one worked with him, one forgot the burden of work. He was very fond of me and I always had great regard and respect for him. His passing away is a great loss indeed."