சனி, 7 நவம்பர், 2015

நான்

ராதே கிருஷ்ணா 07-11-2015




நான்


முரளி என்கிற நான் அம்பத்தூர் ஊரில் ஏகாம்பர ஐயர் தெருவில் 1950 ஜூன் மாதம் 5 ஆம் தேதியில் பிறந்தேன். LIC ரங்கா ராவ் லக்ஷ்மி  தம்பதிகளுக்கு மூத்த மகனாக (இரண்டாவதாக) மூத்த மகளுக்கு அடுத்ததாக பிறந்தேன்.

நாங்கள் மூவர் மகன்கள் , மூவர் மகள்கள் ஆக அறுவர்.  பெரியவள் பாமா, அடுத்தவன் முரளியாகிய நான், அடுத்ததாக பிருந்தா, அடுத்து சந்திரா , மற்றும்  அனந்தபத்மநாபன் , ராகவேந்திரன் ஆக அறுவர் இருந்தோம்.

என் பள்ளிக்கூடம் முதலில் சங்கஸ்  ஸ்கூலில் ஆரம்பித்தது. கோவிந்தம்ம டீச்சரிடம் கல்வி பயில ஆரம்பித்தேன். கோலாகலமாக மேலவாத்யத்துடன் தொப்பி அணிந்து ஸ்கூல் சென்றேன்.

எங்கள் தெருவில் எங்கள் வீட்டிற்க்கு எதிரில் குருவம்மா என்பவர் மூலம் எங்கள் அப்பா அரச மரம் விதை இட்டு பிறகு பெரியதாகியது. ஒரு வேப்ப மரம் வளர்த்து இரண்டிற்கும் கல்யாணம் சம்பிரதாயமாக செய்வித்து மகிழ்ந்தனர்.

எங்கள் வீட்டில் எண்ணற்ற மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. அதில் முக்கியமானது ராதா கல்யாணம் தான். மார்கழி மாதம் வீதி பஜனை செய்து அதன் முடிவாக தை மாதம் பொங்கல் தினம் உஞ்சவ்ருத்தி பஜன் நடந்து ஜனவரி மாதம் 26 ஆம் தேதிவாக்கில் வரும் சனி ஞாயிறு நாட்களில் ராதா கல்யாணம் நடைபெறும். பாகவத சிரோமணி அயனாவரம் ராமகிருஷ்ண பாகவதர் அவர்கள் தலைமையில் ராதாகல்யணம் நடந்து ஆஞ்சநேய உத்சவத்துடன் முடிவுபெறும்.

இதில் கோபால் பாகவதர், சுக்கல் மாமா, ராம ராவ், நரசிம்ஹன், ஆக பலருடன் சேர்ந்து விமர்சனையாக நடைபெறும். முதல் நாள் காலை குரு கீர்த்தனையுடன் ஆரம்பித்து 24 அஷ்டபதிகள் , தரங்கிணி, மற்றவர்கள் கீர்த்தனைகள் பாடி , இடை இடையே உணவு, காபி டி பானங்கள் அருந்தி , மாலையில் கிருஷ்ணர் ஜானவாசம் நடக்கும்.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும் ராதா கிருஷ்ணருடன் மண்டபத்தில் எழுந்தருளிச்செய்து , பிறகு சொற்ப ஆகாரம் முடித்து திவ்ய நாம சங்கீர்த்தனம் (தீபப்ரதக்ஷினம்) செய்து, அதிகாலை ராதா கிருஷ்ணருக்கு டோலோத்சவம் பாடி மறுநாள் காலை 5 மணிக்கு முடிப்போம்.

ஞாயிறு காலை உடனே ஸ்நானம் முடித்து கிருஷ்ணருக்கு சஹாஸ்ராம அர்ச்சனை தொடங்குவோம். அதற்குள் பாகவதர் தன்னை உஞ்சவ்ருத்தி பஜனைக்கு தயார் செய்து கொள்வார். இரண்டு வீதிகள் ஏகாம்பர ஐயர் தெரு மற்றும் சின்னஸ்வாமி ஐயர் தெரு சென்று வருவோம்.

அன்பர்கள் செய்துகொண்டுவந்த கல்யாண சீர் பட்சணங்கள் அனைத்தையும் மண்டபத்திற்கு பஜனையுடன் கொண்டு வந்து வைப்பார்கள்.

கல்யாண அஷ்டபதி பாடி, முத்துக்குத்தல் பாடி ஸ்வாமிக்கு சமர்பிப்பார்கள். மங்களாஷ்டகம் (பகவான் கல்யாணத்திற்கு யார் யார் வந்தார்கள் என்று விவரித்து சொல்லி மங்கள ஸ்லோகங்கள் பாடி ராதா கிருஷ்ணருக்கு மாங்கல்யதாரண விவாஹம் நடக்கும்.

கல்யாண கிருஷ்ணா கமனீய கிருஷ்ணா நாமாவளி பாடி, ஆஞ்சநேய உத்சவம் பாடல்கள் ஐந்து பாடி இனிதே ராதாகல்யணம் நிறைவுபெறும். பாகவதர்களை கௌரவித்து நமஸ்கரித்து ஆசிர்வாதங்களைப் பெற்று , மங்கள அட்சதைகளைப் பெற்று அவர்களுக்கு கல்யாண சமையல் பரிமாறி இனிதே முடிவு பெறும்.

மாலையில் உபன்யாசம், ஹரிகதா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரம்மஸ்ரீ பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகள் (அப்பாவின நண்பர்) பல வருடம் நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்திருக்கிறார்.

மாலையில் ரங்காராவின் பஜனை சகாக்களுடன் நாங்கள் (மகன்  மகள்களுடன், பிறகு பேரன் பேத்திகளுடன்) சேர்ந்து ஆரத்தி பாடி ,  கீதரத்னாகர ராஜகோபால் ராவ் அவர்கள் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ராதா கிருஷ்னர் படத்தை பஜனை செய்க்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று நன்றிகளுடன் ஆரத்தி செய்து மங்களம் பாடி விடை பெற்று வீடு திரும்புவோம். சீர் பட்சணங்களை பங்கு போட்டு உதவி புரிந்த நன்மக்களுக்கு கொடுப்போம்.

இவ்வாறாக 45 வருடங்கள் ராதா கல்யணம் செய்து வந்தோம்.

அப்பா அம்மா இந்த அரச மரத்து விநாயகர் கோயிலுக்குத் தொண்டு புரிந்தனர்.

இந்த மார்கழி மாத பஜனை, அபிஷேகம் செய்ய 30 நாட்களும் உபயதாரர்களை அணுகி, அதற்கான வரைபடம் வரைந்து செயல்பட்டதில் அப்பாவிற்கு நிகர் அவரே.

பின் வந்த காலங்களில் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என அனைவரும் செயல்பட்டோம்.


எங்கள் ஏகாம்பர ஐயர் தெருவில் உள்ள அனைவரும் பெரிதும் ஒத்துழைத்தார்கள். எங்கள் வீடு பள்ளம் என்றே அழைக்கப்பட்டது. 1950 இல் இரண்டு மனைகள் அப்பாவிற்கு, பெரியப்பாவிற்கு என்றும் , நெய்வேலி மாமாவிற்கு என்று மற்றொன்று நிலம் வாங்கப்பட்டது. சில வருடங்கள் கழிந்து பெரியாப்பாவிடமிருந்து நிலத்தை அப்பாவே வாங்கினார். பிறகு பின்பக்கம் இருந்த மாமா நிலம் அவருக்குப்பின்னால் மட்ட்ரவர்க்கு விற்கப்பட்டது. அப்பா அம்மா இருந்த வீட்டிற்கு அருகில் உள்ள நிலம் எனக்கு கொடுக்கப்பட்டது.
அது ஒரு கதை.


நான் வாழ்ந்து வளர்ந்த கதை.

1. எங்கள் தெருவில் எங்கள் வீடு, மேற்புறம் சுப்பிரமணிய ஐயர் மனைவி ஜெயலக்ஷ்மி மாமியுடன் வசித்து வந்தார். அவருக்கு ரங்கநாதன், பாபு, லீலா, அவள் தங்கை லக்ஷ்மி , சாய்ராம் என இருந்தனர். ரங்காவிற்கு குமார் மகனும், சாந்தி மகளும் பிறந்தனர்.

குமார் தன் வண்டியில் தன் அம்மாவை ஏற்றிச் சென்றபோது , வேகத்தடையில் விபத்து நடந்து மாண்டார். பலகாலம் சர்க்கரை வியாதியில் ரங்கநாதன் அவதிப்பட்டு இறந்தார்.

என் வயது நண்பன் பாபு , பானு என்பவரி மணந்து குடும்ப வாழ்க்கை தொடங்கினார்.  லீலாவதி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாரை (மனைவியைப் பிரிந்ததால்) இரண்டாம் தாரமாக மணந்தார்.

2, இரண்டாவது வீடு : அலமேலு மாமி ராமமூர்த்தி வாத்யார் அவர்கள்.

அவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கிரி, ரவி, முரளி, முத்துக்குமார் என்று நால்வர், பாலா என்ற மகள் இருந்தனர். ராமமூர்த்தி  வத்யார் ஸ்கூலில் வேலை பார்த்து வந்தார். ரவி எனது நண்பன் , பாலிடெக்னிக்கில் படித்து வேலை பார்த்து வந்தான். பாலா டீச்சராக வேலை பார்த்தாள். முரளி முத்துக்குமார் டெல்லியில் இருந்தனர்.

இராமமூர்த்தி வாத்யார் நண்பர்களுடன் சனி ஞாயிறு நாட்களில் சீட்டு விளையாடி வந்தனர்.

முதல் அடி : முரளி இறந்துவிட்டதாக ஒரு நாள் செய்தி வந்தது. இளம் வயதில் மாண்டான்.
கிரியின் திருமணம் முடிந்து மனைவி சரியில்லாமல் தனித்து விடப்பட்டான்.

பாலா திருமணம் முடிந்து ராஜேஷ், ஸ்ரீதேவி மகன் மகள்களைப் பெற்ற பிறகு , குடும்ப பிரச்சனையால் பிரிந்து விடப்பட்டாள் .
பாலா வில்லிவாக்கத்தில் ரயில் தண்டவாளம் கடக்கும்போது , ரயிலில் அடிபட்டு இறந்தாள்.

ராஜேஷ், ஸ்ரீதேவி இருவரும் தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

ரவி தன மாமன் மகள் ராஜியை (ஆத்தூர்) மணந்து மகன் மகள்களைப் பெற்று வாழ்ந்த நிலையில் மீண்டும் விதி விளையாடியது.

ரவியின் மனைவிக்கு அபூர்வ வியாதி வந்தது.. உணவில் உப்பு துளியும் சேர்க்ககூடாது. அதாவது சிறிது சேர்த்தாலும் வயிறு பெரிதாகி புடவை கூட கட்டமுடியாத அளவிற்கு வியாதி கொடுமைப்படுத்தும். சிறிது காலம் பிறகு அவர் உயிர் பிரிந்தது.

இப்போதும் அலமேலு மாமி ரவி கிரி மூவரும் கிரோம்பேட்டையில் வசித்து வருகிறார்கள்.

3. துரைசாமி குடும்பம் : ஒரு மகள் சுகன்யா, ஒரு மகன் சிவராமகிருஷ்ணன் உடன் வசித்து வந்தனர்.

4. ஆதி நாராயண சாஸ்த்ரிகள் குடும்பம்:  பெரியவர் கோபால் , அடுத்தவர் பாலசுப்ரமணியம், சிறியவர் கிருஷ்ணமுர்த்தி அவர்கள்.

மூன்று மகன்களும் தங்கள் குடும்பத்தினருடன் இனிதே வாழ்ந்து வருகிறார்கள்.

5. ராமகிருஷ்ணன் குடும்பம் : சந்ததியில்லாமலேயே வாழ்ந்து வந்தனர்.

6. கந்தசாமி தெலுங்கு குடும்பத்தினர். மகன் சேது, மகள் கனகா உடன் வாழ்ந்து வந்தனர். தினமும் அரச மரத்து விநாயகரை வணங்கி வந்தனர்.

7. ஐயங்கார் குடும்பம்

8. ஷர்மா காலனி

9. வேணுகோபால் ஐயங்கார்

10. நாராயணன் (அப்பாயி மாமா) குடும்பம்

      மகன்கள் இருவருடன் இனிது வாழ்ந்து வந்தனர். இன்றும் இருவரும் மூத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

11. ராமமூர்த்தி குடும்பத்தினர் ( வீடு கட்டும் தொழில் செய்பவர்.

12. ராம ராவ் குடும்பம் : கணேசன், கோபி, அவன் தம்பி, மகள் லலிதா ஆக வாழ்ந்து வந்தனர். கணேசன் (T.I.Diamond chain),  கோபி (Blue factory)

13. ராமநாத வாத்யார் குடும்பம்


ஜெய் கணேசர் கோயில்

இது தான் எங்கள் ஏகம்பர ஐயர்  தெரு



க்ரிஷ்ணாஜி சுக்கல் தெருவில் ரங்காச்சாரி குடும்பம் (ஆனந்த், ஹரி, ரவி), விஜயநாத், ராஜா கஸ்தூரி, மாணிக்கம் செட்டியார், ரெட்டியார் குடும்பம் (மனோகரன், பிரபாகர், மகள் ) , ஜெயராமன் குடும்பத்தினர், Dunlop சீனு , பால்கார பார்வதி அம்மா, குப்புஸ்வாமி குடும்பம் என இருந்தனர்.


B.N. சுக்கல் மாமா தாங்கல் அருகே இருந்தார்.

ராமராவ் குடும்பத்தினர் சந்ததி இல்லாமலே ராகவேந்திர மடம் நடத்தி இறந்தனர். ரங்கப்பா, நரசிம்ஹன். ராகவன் என்று மூவரும் தங்கள் அம்மாவை வைத்துக்கொண்டு வாழ்ந்து பணிவிடைகள் புரிந்து அவருக்குப்பின் அவரவர் குடும்பம் நடத்தி வந்தனர். நரசிம்ஹன் தங்கள் குடும்பத்தினருடன் திருவல்லிக்கேணியில் வசித்து வருகின்றனர்.

சுப்ரமணியன், கிச்சாமி, சபேசன் என்று மூன்று மகன்களுடன் குடும்பம் நடத்தி வந்தனர். சபேசன் குடும்பத்துடன் இப்போது ஆனந்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

அடுத்து சுவாமிநாத ஐயர் குடும்பம்




அடுத்து நம் குடும்பம் வருவோம்.


பெரியவள் பாமா ராஜகோபால் அவர்களை மணந்து இரட்டைக் குழைந்தைகளைப் பெற்று ( ஒரு மகன் , ஒரு மகள்), பிறகு இன்னொரு மகளைப் பெற்று இன்புற்று வாழ்ந்தனர்.

இரட்டையர் பிறந்தது,




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக