புதன், 25 நவம்பர், 2015

கருட புராணம் || தண்டனைகள்

ராதே கிருஷ்ணா 26-11-2015









மனதை திடப்படுத்திக்கொண்டு படிக்கவும்....

நாம் செய்யும் ஒவ்வொரு கர்மாக்களின் பயனையும் (நல்லதோ கேட்டதோ) நாம் தான் அனுபவித்துத் தீர்க்கவேண்டும். பாவ புண்ணியங்கள் கூட்டுத்தொகை பூஜ்யம் (0) வந்தால் தான் நாம் பிறவியின் முடிவுக்கு வருவோம். அதுவரை ஏதாவது பிறவி (கர்மாக்களுக்கு ஏற்றவாறு) வந்துகொண்டே இருக்கும். நமக்காக மற்றவர் அனுபவிக்கமுடியாது.

கருட புராணம் || தண்டனைகள்
----------------------------------------
அந்தகூபம்
----------------
உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல்.
****
கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
***************************************************************

கும்பிபாகம்
------------------
சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்துதல்
****
எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.
***************************************************************

தாமிஸிர நரகம்
---------------------------
பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரித்தல், பிறரது குழந்தையை அபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றி அபகரித்தல்.
***
நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள்.
****************************************************************

அநித்தாமிஸ்ர நரகம்
-------------------------------
கணவனும் மனைவியும் சேர்ந்து வாழாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும்.
****
உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிப்பார்கள்
****************************************************************

கிருமிபோஜனம்
------------------------
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்தல்.
****
பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள் மூலம் பாவிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தப்படுவார்கள்
***************************************************************

ரௌரவ நரகம்
----------------------
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுத்தல், பிரித்தல், அழித்தல், அவர்களின் பொருள்களைப் பறித்தல்.
***
பாவிகளை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.
****************************************************************

மகா ரௌரவ நரகம்
----------------------------
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தல், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தல்.
***
குரு என்ற கோரமான மிருகம் பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
*********************************************************

லாலா பக்ஷம்
--------------------
மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல்.
*****
பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவார்கள்.
*************************************************************************

காலகுத்திரம்
-------------------
பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தல், துன்புறுத்தியும் பட்டினி போடுதல்.
***
அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவார்கள்.
***************************************************************

பன்றி முகம்
------------------
குற்றமற்றவரைத் தண்டித்தல், நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோதல்
****
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் உள்ள ஒரு மிருகத்தின் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டிக்கப்படுவார்கள்.
***************************************************************

அக்னிகுண்டம்
----------------------
பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.
*****
பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
******************************************************************
வஜ்ரகண்டகம்
----------------------
சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடைதல்
***நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
********************************************************

**
சான்மலி
--------------
நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழுதல்.
***
பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
****************************************************************
வைதரணி
---------------
நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தல்.
***
வைதரணி என்ற ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.
***************************************************************************
பூபோதம்
--------------
சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடுதல், ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்த லட்சியம் இன்றி வாழ்தல்
***
பாவிகளை விடமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.
***************************************************************************
பிராணி ரோதம்
---------------------
பிராணிகளைக் கொடுமைப்படுத்தல்
***
கூர்மையான பாணங்களை பாவிகளின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
***************************************************************************
விசஸனம்
----------------
பசுக்களைக் கொடுமை செய்தல்.
*****
பாவிகளுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
************************************
சாரமேயாதனம்
-----------------------
வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விடத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல்
***
விசித்திரமான கொடிய மிருகங்கள் பாவிகளை வதைக்கும்.
*********************************************************************
அவீசி
----------
பொய்சாட்சி சொல்தல்
***
நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்தப்படும்
**







மகாவிஷ்ணுவுக்கு பல வாகனங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும், முதன்மையானதும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுவதும் கருடன் ஆகும். அமிர்தம் சாப்பிடாமல் என்றென்றும் இறவாத நிலையைப் பெற்றவர் கருட பகவான். ராமாயணத்தில் ராமருக்கும், ராவணனின் மகன் இந்திரஜித்துக்கும் போர் நடந்தது. அப்போது இந்திரஜித் ஏவிய நாக அஸ்திரம் பட்டு ராமரும், லட்சுமணரும் மூர்ச்சை அடைந்தனர். அந்த தருணத்தில் அனுமன் விரைந்து போய், கருட பகவானை அழைத்து வந்தார். அவரது நிழல் பட்டதும் நாக அஸ்திரம் பலம் இழந்தது. பின்னர் தன் அலகால் கொத்தி நாக அஸ்திரத்தில் இருந்து ராம, லட்சுமணர்களை அவர் காத்தார்.

மகாவிஷ்ணு, தன் வாகனமான கருடனிடம் கூறிய விவரங்களே கருடபுராணம் என்று அழைக்கப்படுகிறது. பகவானுக்கும், கருடனுக்கும் இடையே நடந்த இந்த உரையாடலில், மனிதர்களின் பிறப்பு, இறப்பு மற்றும் சொர்க்கம்– நரகம் ஆகியவை பற்றியும், இறப்புக்குப்பின் நடைபெறும் சடங்குகள், ஆன்மாவின் நிலை போன்றவை பற்றியும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பாவங்களின் தண்டனை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது, வானில் கருடன் தென்பட்டால் நல்ல சகுனமாக கருதும் வழக்கம் இன்றும் உள்ளது. கருடன் என்பதற்கு பெரிய சிறகுகளை கொண்டவன் என்பது பொருள். கருட பகவான் மிகப்பெரும் அரிய பெரிய வீரச் செயல்களைச் செய்தவர். வரிசையான நகங்களையும், கூரிய மூக்கினையும் கொண்டவர். இவருக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் இனிதான வாழ்வு கிடைக்கும்.

கருடன் காயத்திரி மந்திரம்:

‘ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸுவர்ண பக்ஷாய தீமஹி

தந்நோ கருடஹ் ப்ரசோதயாத்’

பொருள்:– பரம புருஷனை அறிவோமாக. சுவர்ணத்தைப் போல் ஓளி வீசும், அவன் மீது தியானம் செய்கிறோம். கருட பகவானான அவன் நம்மை காத்து அருள் செய்வானாக.

இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 108 தடவை சொல்லி கருட பகவானை தரிசனம் செய்து வந்தால், விஷ பூச்சிகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். நல்ல காரியங்கள் நடக்கும். ஆபத்துகள் அகலும்.



























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக