திங்கள், 2 நவம்பர், 2015

சோளிங்கர் நரசிம்மனைப் பற்றி

RAADHE KRISHNAA 03-11-2015

ஏனோ இன்னும் சோளிங்கர் நரசிம்மனைப் பற்றி சொல்ல மனசு விழைகிறதுநரசிம்மனை
உக்ரமானவன் என்று சொல்லுவார்கள்
ஆனால் என் குருநாதர் சொல்வார்
நரசிம்மனின் கோபம் இரண்யவதத்துடன் முடிந்தது
அதோடு அவன் கோபமும் தீர்ந்தது என்பார்
வழக்கம் போல ஒரு வருடம் மலைக்கு சென்றிருந்தேன்!
அப்போது இளம் வயதானதால் பெண்களுக்கு ஏற்படும் சங்கடம் இருக்கும் அல்லவா
அதை மனதில் கொண்டு அந்த சங்கடம் இப்போது இல்லைஇன்னும் பத்துநாள் இருக்கிறது
என்ற தைரியத்தில் மலை ஏறத்தொடங்கினேன்
இதோ மலை ஏறி விட்டேன்நீண்ட நெடிய வரிசை!
நரசிம்ம நாமாவை சொல்லிக் கொண்டே வரிசையில் நின்றிருந்தேன்வரிசை நகர்கிறதா இல்லயா என்றே தெரியவில்லைமனம் முழுவதும் நரசிம்மன்
திடீர் என்று என்னுள் ஒரு மாற்றம்நரசிம்மா இது
என்ன சோதனைஎனக்கு ஏதோ சங்கடம் போல்
இருக்கிறதேபெண்களுக்கே உண்டான உள்ளுணர்வு என்னை எச்சரிக்கிறது
சிறிது பதறிப்போனேன்
உடனே ஒரு முடிவு எடுத்தேன்எனக்கு எப்போதுமே
ஒரு பழக்கம்எதுவாக இருந்தாலும் மனம்விட்டு அந்த அந்த பெருமாளிடம் பேச ஆரம்பித்து விடுவேன்
அதேபோல் இப்பொழுதும் அவனுடன் பேச ஆரம்பித்து விட்டேன் 
ஹே நரசிம்மா!!! உன்னை தரிசிக்க இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்எனக்கு என்ன ஆனாலும் சரி உன்னை தரிசிக்காமல் நான் திரும்ப
மாட்டேன்உன் தரிசனம் மட்டுமே எனக்கு முக்கியம்♦
இதை நீ தவறென்று நினைத்தால் எனக்கு என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்♦
ஆனால் உன்னை பார்காமல் மட்டும் செல்ல மாட்டேன்♦ நீ என்ன வேண்டுமனாலும் செய்து கொள்
என்று மனதில் தீவிரமாக அவனை ஜபிக்க ஆரம்பித்தேன்♦♦
மெள்ள மெள்ள வரிசை நகர்ந்தது♦♦இதோ இதோ
தாயார் வாசற்படியில் நுழைப்போகிறேன்♦
அப்போதுதான் என் நினைவு எனக்கு வந்து என்னை
உணரஆரம்பித்தேன்♦♦தாயே அமிர்தவல்லி என்று
மனமுருக ப்ராதித்தேன்♦
என்ன ஆச்சரியம் நான் மிகவும் பவித்திரமாக இருப்பதுபோல் உணர்ந்தேன்♦♦ஆம் அந்த நரசிம்மன்
என்னை தூயவளாகவே வைத்து இருந்தான்♦♦
பிறகென்ன தாயரையும் நரசிம்மனையும் சேவித்து♥
தீர்தமும் திருத்துளாய்♦ அர்சகர் முகத்தில் தெளித்த தீர்த்தம் தயார் சன்னதியில் குங்குமம் எல்லாம்
பெற்றுக் கொண்டு மலையை விட்டு இறங்கினேன்♦♦
அவன் என்னை எப்படி சோதித்து இருக்கிறான் பாருங்கள்♦♦
இதை ஒரு சமயம் என் குருநாதரிடம் தெரிவித்தபோது
அவர் என்னிடம் கூறினார்♦♦என்ன அசுரபக்தி
உனக்கு என்றார்♦மேலும் அவர் கூறியதாவது
பக்தியில் அசுரபக்திவேண்டும் ஆனால் குணத்தில்
அசுரகுணம் கூடாது♦என்றார்
என்னே நம் நரசிம்மனின் சோதனை♦
முடிவி்ல் கருணை♦♦
ஹே நரசிம்மா!! ராகவசிம்மா இந்த இரவை உன் பாதத்தில் சமர்பிக்கிறேன்♦♦
உன்னிக்குட்டா எல்லோருக்கும் சொல்லடா
இனிய இரவு வணக்கம்♦

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக