திங்கள், 7 நவம்பர், 2011

பக்தி கதைகள் - III (மூன்றாம் தொகுப்பு)


ராதே கிருஷ்ணா 07 - 11 - 2011




காளியைத் திட்டிய கவிஞன்!


 காளியைத் திட்டிய கவிஞன்! 
பக்தி கதைகள்
காளியைத் திட்டிய கவிஞன்!


காளியைத் திட்டும் தைரியம் யாருக்காவது உண்டா? சுட்டெரித்து விடமாட்டாளா என்று சந்தேகம் வரும். ஆனால், அவளையும் திட்டித் தீர்த்தார். மகாகவி காளிதாஸ். காளிதேவி, தன் அருளால் காளிதாசரை மாபெரும் கவிஞராக்கினாள். அவர் போஜராஜனின் அரசவைப் புலவராக இருந்த போது, தண்டி, பவபூதி என்ற கவிஞர்களும் இருந்தனர். மூவருமே விடாக்கண்டன், கொடாக்கண்டனாக கவித்துவம் பெற்றவர்கள். ஒருசமயம், இம்மூவரில் யாருடைய புலமை உயர்ந்தது என்ற வாதம் ஏற்பட்டது. இதுபோன்ற சமயங்களில், தெய்வசந்நிதியில் தீர்ப்பு கேட்பது ராஜாக்களின் வழக்கம். போஜராஜனும் காளி சந்நதிக்கு வந்தான். தண்டியிடம் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் காளியின் குரல் அசரிரீயாகக் கேட்டது.
காளிதாசரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே அவருக்கு கோபம் வந்து விட்டது. அப்படியானால் என் திறமை என்னடி? என்று ஒருமையில் கோபமாகத் திட்டிவிட்டார். ஆனால், காளி அவரைப் பற்றியும் சொல்ல இருந்தாள். அதற்குள் காளிதாசர் அவசரப்பட்டு விட்டார். மகனே காளிதாசா! அவசரக்குடுக்கையாக இருக்கிறாயே! நான் மற்றவர்களின் பாண்டித்யம் பற்றியே மெச்சினேன்.  த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய என்று உன்னைப் பற்றி சொல்வதற்குள் என்ன அவசரம்? என்றதும், காளிதாசர் அழுதே விட்டார். ஏன் அழுதார் தெரியுமா? அந்த ஸ்லோகத்தின் பொருள் தெரிந்தால், காளியின் கருணையைப் பார்த்து நீங்களும் ஆனந்தக்கண்ணீர் பெருக்குவீர்கள். நீதானே நான் நீதானே நான் நீதானே நான் என்பதே அதன் பொருள். நீயும், நானும் ஒன்றான பிறகு உனக்கு மிஞ்சியபுலவனேது என்றாள் காளி. அந்தக் கருணைக்கடலில் விஜயதசமியன்று உங்கள் கோரிக்கையை வையுங்கள். வெற்றி உங்களுக்கே!


பொன்மகள் வந்தாள்! 
பக்தி கதைகள்
    பொன்மகள் வந்தாள்!




    ஒரு செயலைச் செய்யும் போது நல்லதும், கெட்டதும் இணைந்தே வரும். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள். அதில் இருந்து அமுதக்குடம் வந்தது. கூடவே விஷமும் வந்தது. அதுபோல அதில் இருந்து திருமகளும் தோன்றினாள். அவளுக்கு முன்னதாக இன்னொரு பெண்ணும் வெளிப்பட்டாள். அவளது அங்க லட்சணங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. அந்த மூத்ததேவியை கண்டாலே எல்லாரும் ஓடினர். மூத்ததேவியான அவளது பெயரையும் மூதேவி என சுருக்கிவிட்டனர். ஆனாலும், அக்காவும், தங்கை திருமகளும் ஒற்றுமையாகவே இருந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள். ஒரு ஊரில் வசித்த இளைஞன், வயல் வேலைக்குச் சென்றால் ஒழுங்காகப் பார்க்க மாட்டான். வரப்பு மீது படுத்து உறங்கி விடுவான். வயல் உரிமையாளர் திட்டித் தீர்ப்பார். ஒருநாள் இரண்டு தேவிகளும் அந்த வயல் பக்கமாகச் சென்றனர்.
    அப்போது உரிமையாளர் அவனை நோக்கி, ஏண்டா! உன்னிடம் எப்போதும் மூதேவி குடியிருக்கிறாளே! உறங்கிக் கொண்டே இருக்கிறாயே! என திட்டினார். இதைக் கேட்ட மூத்ததேவி தன் தங்கையிடம், சகோதரி! பார்த்தாயா! உலகில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்ள என் பெயரை வீணாக இழுக்கிறார்கள். எனவே, நான் இவனுக்கு செல்வத்தை வழங்கப் போகிறேன், என்றாள். திருமகளும் அதற்கு சம்மதிக்க, அவனை அழைத்த மூத்ததேவி இந்த பொற்காசுகளை வைத்துக்கொள், என ஒரு மூடையைக் கொடுத்தாள். அதை அவன் தன் மனைவியிடம் ஒப்படைத்தான். அவள் அதில் உள்ளதை அளக்க பக்கத்து வீட்டில் நாழி வாங்கி வந்தாள். பக்கத்து வீட்டுக்காரிக்கு சந்தேகம். இவள் எதை அளக்கிறாள் என பார்ப்போமென சற்று புளியை நாழியின் அடியில் ஒட்டி விட்டாள். இளைஞனின் மனைவி அதை அளந்தபிறகு நாழியை ஒப்படைத்தாள். பக்கத்து வீட்டுக்காரிக்கு ஆச்சரியம். புளியில் ஒரு தங்கக்காசு ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் மீது ஆசை கொண்ட அவள், பக்கத்து வீட்டுக்காரி வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டுக்குள் புகுந்து மூடையையே திருடிவிட்டாள்.
    இளைஞன் மிகவும் வருத்தமடைந்தான். மறுநாள் வயலுக்குப் போய் கவலையுடன் இருந்தான். மூத்ததேவி அவனிடம் விபரம் கேட்டபோது, நடந்ததைச் சொன்னான். அவள் விலையுயர்ந்த நவரத்தின மோதிரம் ஒன்றைக் கொடுத்தாள். அவன் குளிக்கும் போது ஆற்றில் விழுந்து விட்டது. அடுத்து முத்துமாலை ஒன்றைக் கொடுத்தாள். ஆற்றில் விழுந்து விடுமே என பயந்து கரையில் கழற்றி வைத்து விட்டு குளித்தான். வந்து பார்த்தால் அதைக் காணவில்லை. மூத்ததேவி இதுபற்றி திருமகளிடம் சொன்னாள். திருமகள் அவனை அழைத்து ஒரே ஒரு தங்கக்காசு மட்டும் கொடுத்தாள். அவன் அதை விற்று வீட்டுக்கு தேவையான அரிசி, மளிகை, மீன் ஆகியவை வாங்கிச் சென்றான். அவன் மனைவி அவனிடம் விறகு வெட்டி வரச் சொன்னாள். அவன் தன் வீட்டின் பின்னால் இருந்த மரத்தில் விறகு வெட்ட ஏறிய போது, ஒரு புதரில் காணாமல் போன  முத்துமாலை இருந்ததைப் பார்த்தான். ஏதோ ஒரு பறவை எடுத்து வந்து அங்கே போட்டிருந்தது தெரியவந்தது. அவன் மனைவி மீனை நறுக்கியபோது,  ஆற்றுக்குள் விழுந்த நவரத்தின மோதிரம் அதன் வயிற்றில் இருந்து வந்து விழுந்தது. மரத்தின் மீதிருந்த இளைஞனும், கீழிருந்த அவன் மனைவியும் கண்டுபிடித்து விட்டேன் என ஒரே சமயத்தில் கத்தவே, இதைக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரி, தான் திருடியது தெரிந்து விட்டது போலும் என நினைத்து, அரச தண்டனைக்கு பயந்து பொற்காசுகளை அவர்கள் வீட்டு வாசலில்வைத்து விட்டு ஓடிவிட்டாள். ஆக, காணாமல் போன எல்லாம் திருமகள் அருளால் கிடைத்தது. நவராத்திரி காலத்தில் திருமகளை வணங்கி எல்லா நன்மையும் பெறுங்கள்.


    கடவுள் பக்தியும், உழைப்பும் எப்போதும் தேவை!

    கடவுள் பக்தியும், உழைப்பும் எப்போதும் தேவை! 
    பக்தி கதைகள்
      கடவுள் பக்தியும், உழைப்பும் எப்போதும் தேவை!

      ஒரு காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன். அவன் கடுமையான உழைப்பாளி. தினமும் குளித்து முடித்து, கடவுளை வணங்கிவிட்டு, நம்பிக்கையுடன் காட்டுக்கு விறகு வெட்ட வருவான். நெடு நேரம் உழைப்பான். நிறைய மரங்களைச் சேகரித்துக் கொண்டு, நகரத்துக்குக் கொண்டு போய் விற்பான். பணம் நிறைய கிடைக்கும். உணவு சமைத்து, கடவுளை வணங்கி, ஏழைகளுக்கும் கொஞ்சம் உணவை தர்மம் செய்துவிட்டு நிம்மதியாக உறங்கச் செல்வான். அவன் மிகுந்த சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டான். அவன் முகமே தெய்வீகமாக இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். ஒரு நாள், அவன் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, அந்த நாட்டின் மன்னன் அந்தப் பக்கம் வந்தான். கடமையே கண்ணாக இருந்த அவனைக் கண்டதும் மன்னன் அவன் அருகில் வந்தான். வந்த மன்னன் அரண்டு போனான். காரணம், கொடிய விஷமுள்ள ராஜநாகம் ஒன்று மரம் வெட்டிக்கு அருகில், சீற்றத்துடன் படமெடுத்து நின்றது. எந்த நேரமும் கொட்டிவிடும் நிலைமை. பதறிய மன்னன் கத்தினான். தம்பி, திரும்பாமல் சடக்கென முன்னே ஓடி வந்து விடு. கொடிய பாம்பு, கொத்தும் நிலையில் உன் பின்னால் இருக்கிறது. இளைஞன் பதறவே இல்லை. திரும்பிப் பார்த்தான். எந்த தயக்கமும் இன்றி, அந்தக் கொடிய ராஜநாகத்தைத் தன் கையால் பிடித்துத் தூக்கி, சற்றுத் தொலைவில் வீசி எறிந்தான். பின் அலட்டிக் கொள்ளாமல் மரம் வெட்டத் துவங்கினான்.
      ஆடிப் போய்விட்டான் மன்னன். அந்தப் பாம்பு உன்னைத் தீண்டியிருந்தால் நீ இந்நேரம் செத்துப் போயிருப்பாய். இளைஞன் சிரித்தான். அரசே, இது போல் தினம் பல ஆபத்துகளை நான் சந்திக்கிறேன். இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று கணீரென்று பதில் சொன்னான். ஆஹா, இவனல்லவா வீரன் என்று மகிழ்ந்த அரசன், பரிசுகளையும், பொற்குவியல்களையும் அளித்து, அவனுக்கு ஒரு பங்களாவையும் அன்பளிப்பாக அளித்தான். ஏராளமான பணியாளர்கள் வேறு. அவ்வளவுதான். இளைஞனின் நிலைமையே மாறியது. அவன் கடவுளை மறந்தான். கடுமையான உழைப்பை மறந்தான். ஏழைகளுக்கு உதவுவதையும் மறந்தான். நிறைய செல்வம் இருந்ததால் சொகுசுப் பேர் வழியாக வலம் வர ஆரம்பித்தான். சில மாதங்கள் சென்றன. மன்னன் அந்தப் பக்கம் வந்தான். அந்த இளைஞன் காலில் ஒரு கட்டுப் போட்டு உட்கார்ந்திருந்தான். என்னப்பா ஆச்சு? தோட்டத்தில் சுற்றி வந்தபோது, நெருஞ்சி முள் குத்திவிட்டது. அதுதான் மருத்துவர் சிகிச்சை தந்திருக்கிறார். என்று சொன்னான் அவன். இந்த தலைகீழ் மாற்றத்துக்கு என்ன காரணம்? கடவுள் பக்தியுடன், கடுமையாக உழைத்து, ஏழைகளுக்கு உதவிய வரை அவன் ஆரோக்கியமாக இருந்தான். பயங்கர பாம்பைக் கூடக் கையால் பிடித்துத் தூக்கியெறிந்தான். ஆனால் உழைக்காமலே காசு வந்தவுடன் அவனது பக்தி போய்விட்டது. உழைப்பு போய்விட்டது. உதவும் எண்ணமும் போய்விட்டது. நெருஞ்சி முள் கூட அவனை நோயாளியாக்கிவிட்டது. வாழ்க்கையின் தத்துவம் மன்னனுக்குப் புரிந்தது. அந்த இளைஞனின் சொத்துகளையெல்லாம் பறிமுதல் செய்தான் மன்னன்.
      பொன்னைப் போல மனம் இருந்தா செல்வம் வேறில்லை!

      பொன்னைப் போல மனம் இருந்தா செல்வம் வேறில்லை! 
      பக்தி கதைகள்
        பொன்னைப் போல மனம் இருந்தா செல்வம் வேறில்லை!

        பொன் வேண்டுமா! பொன்மனம் வேண்டுமா! என்று கேள்வி கேட்டால் பெருமைக்கு வேண்டுமானால் பொன்மனம் என்பர் சிலர். ஆனால், மனம் பொன்னின் மீது தான் அலைபாயும். ஒரு பெரியவர் தினமும் தியானம் செய்வார். அவர் மனதில் ஆசைகள் இல்லை. நாளடைவில் ஒரு தபஸ்வியாகவே மாறிவிட்டார். ஊரை விட்டு ஒதுங்கி சிவசிந்தனையிலேயே இருந்தார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம், இந்த பெரியவருக்கு நாம் ஏதாவது பரிசளிக்க வேண்டும். சமீபகாலமாக இந்திரனின் போக்கு சரியில்லை. அவனது பதவிக்கு இவரை அமர்த்தி விடலாம், என்றார். பார்வதியும் சம்மதம் சொன்னாள்.
        இந்த விஷயம் இந்திரன் காதுக்கு எட்டிவிட்டது. பயந்து போன அவன், ஒரு தங்கப்பெட்டியில் நவரத்தினங்களை நிரப்பி, அந்தணர் போல் மாறுவேடமணிந்து தபஸ்வியிடம் சென்றான். தபஸ்வியே! நான் ஒரு அந்தணன். எங்கள் ஊர் கோயில் திருப்பணிக்காக பக்கத்து நாட்டு மன்னனிடம் பொருள் பெற்று வருகிறேன். அவசரமாக நான் வெளியூர் போக வேண்டியுள்ளது. அதுவரை இந்தப் பொருளை நீங்கள் பாதுகாத்து வையுங்கள். திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன், என்றான். தபஸ்வியும் சம்மதித்தார். அதன்பிறகு அவரால் தியானத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. ஐயோ! இது அடுத்தவர் பொருளாயிற்றே! யாரும் திருடிச் சென்று விடுவார்களோ என பயந்து அதிலேயே கவனம் செலுத்தினார்.
        சிவசிந்தனை மறைந்தது. இதனால் ஆசை தலை தூக்கியது. நான்கைந்து நவரத்தினத்தை எடுத்தால் தெரியவா போகிறது என நினைத்து பெட்டியைத் திறந்து ரத்தினங்களை எடுத்தார். அதை பக்கத்து ஊருக்கு போய் விற்று கிடைத்த பணத்தில் கண்டதையும் சாப்பிட்டார். தபஸ்வி என்ற இலக்கணத்திற்கு மாறாக நடந்தார். அதனால் சிவலோக பதவியை இழந்தார். இந்த உலகில் கிடைக்கும் பொருள் தற்காலிக இன்பத்தையே தரும்.  இறைநினைவு என்ற செல்வமே, இருக்கும்போதும், இறந்தபின்னும் நிரந்தர இன்பத்தை அளிக்கும்.
        எல்லா உயிர்களையும் நேசி!

        எல்லா உயிர்களையும் நேசி! 
        பக்தி கதைகள்
          எல்லா உயிர்களையும் நேசி!

          விவசாயி ஒருவர் தன் பண்ணையில் ஆயிரம் பசுக்களை வளர்த்தார். அவை நன்றாகப் பால் கறந்தன. கிடைத்த வருமானத்தில் பெரிய வீடு கட்டினார். மகளை பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்தார். இரண்டு மகன்களை நன்றாகப் படிக்க வைத்தார். அந்தப் பிள்ளைகள் பொறுப்பானவர்கள். பசுக்களுடன் அவர்கள் அன்பாக இருந்தனர். காலம் கடந்தது. பண்ணையில் இருந்த சில பசுக்களிடம் பால் வற்றி விட்டது. அவை கிழடாகி விட்டதால் பால் குறைந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்ட விவசாயி, அடிமாட்டு வியாபாரிக்கு ஆள் அனுப்பினார். தன் மனைவியை அழைத்து, அடியே! சில மாடுகள் கிழடாகி பால் குறைந்துவிட்டது. அதை அடிமாட்டுக்கு அனுப்பி விட வேண்டியது தானே! பணமும் கிடைக்கும், என்றான். அவளும் ஆமோதித்தாள்.
          இதை பிள்ளைகள் இருவரும் கேட்டனர். தந்தையிடம் சென்றனர். அப்பா! வயதாகி விட்டால் எதற்குமே நாம் பயன்படமாட்டோமா? என்றனர். அதிலென்ன சந்தேகம்! நிற்கக் கூட முடியாது. கால்கள் தள்ளாடும், கைகள் நடுங்கும், என்றார் தந்தை. அந்த நேரத்தில் நம்மை யார் காப்பாற்றுவார்கள்? என்ற பிள்ளைகளிடம், நம் வளர்ச்சிக்கு காரணமானவர்கள் தான் காப்பாற்ற வேண்டும். உதாரணத்துக்கு பெற்றவர்களை பிள்ளைகள் காப்பாற்ற வேண்டும், என பதிலளித்தார். அப்பா! நம் மாடுகள் கிழடாகி விட்டாலும், அவை இதுவரை நம்மோடு வாழ்ந்து பால் தந்து நம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளன. அவற்றை மட்டும் கொல்ல வேண்டும் என்கிறீர்களே! இது என்ன நியாயம்! நம்மைப் போல நம் வளர்ச்சிக்கு காரணமான அந்த விலங்குகளையும் நேசிக்க வேண்டுமல்லவா! என்ற பிள்ளைகளின் பேச்சு, விவசாயியின் மனதில் சம்மட்டி அடியாய் விழுந்தது. மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு தனியிடத்தில் கட்டி வைத்து, அவை இயற்கையாக மரணமடையும் வரையில் உணவு கொடுத்தார்.


          படிச்சா போதாது ... பண்பு வேணும்!

           பக்தி கதைகள்> படிச்சா போதாது ... பண்பு வேணும்! 
          பக்தி கதைகள்
            படிச்சா போதாது ... பண்பு வேணும்!

            இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.
            தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர். பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் பிரகலாதன். குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!
            படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே! ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை!
            ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம் இல்லை. சரஸ்வதிபூஜை வேளையில், படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான்!
            திருந்தும் சந்தர்ப்பம்!

             பக்தி கதைகள்> திருந்தும் சந்தர்ப்பம்! 
            பக்தி கதைகள்
              திருந்தும் சந்தர்ப்பம்!

              போதிசத்துவர் என்பவர் ஒரு பெரும் பணக்காரருக்கு மகனாக பூமியில் பிறந்தார். அந்த பணக்காரரிடம் பல கோடி பொற்காசுகள் இருந்தது. தந்தை காலமானதும், அத்தனை சொத்தும் போதிசத்துவரைச் சேர்ந்தது. அவர் அதை தர்மத்திற்காக பயன்படுத்தினார். நல்ல வழியில் அவர் பணத்தை செலவிட்டதால், பெரும் புண்ணியத்தை ஈட்டினார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் பிறந்தான். சில காலம் கழித்து போதிசத்துவரும் காலமானார். அவர் செய்த புண்ணியத்தால், அவர் தெய்வ அந்தஸ்தை அடைந்தார். அவரது மகனோ, தந்தையின் பொருளை தீயவழியில் செலவழித்தான். மது, மாது என அலைந்தான். அவனைச் சுற்றிய நண்பர் கூட்டம், அவனது வள்ளல்தன்மையைப் புகழ்வது போல நடித்தது. இதைக்கண்டு குதூகலித்த அவன், மேலும் மேலும் பொருளைச் செலவழித்தான்.
              ஒரு கட்டத்தில் செல்வமெல்லாம் தீர்ந்து விடவே, வறுமை நிலையை அடைந்தான். அவனைச் சுற்றியிருந்த நண்பர் கூட்டம் பறந்து விட்டது. பசியால் தவித்த தன் மகனை தேவலோகத்தில் இருந்த போதிசத்துவர் கண்டார். அவன் மேல் இரக்கம் கொண்டு பூமிக்கு வந்தார். மகனிடம் ஒரு அட்சய பாத்திரத்தை கொடுத்து, மகனே! உனக்கு தேவையான பொருள் இந்த பாத்திரத்தில் நிறையும், என்றார். அவனோ, மதுவையும் உணவையும் நினைத்தான். மது நிரம்பியபடியே இருந்ததால் குடித்து மகிழ்ந்தான். உணவைச் சாப்பிட்டு மகிழ்ந்தான். ஒருநாள், குடிவெறியில் தள்ளாடியபடியே நடந்தான். ஓரிடத்தில் பாத்திரம் கீழே விழுந்து நொறுங்கி விட்டது. மீண்டும் வறுமைக்குள்ளாகி, பசி தாங்காமல் உயிரையே விட்டான். மனிதன் தவறு செய்வது இயற்கை. அவன் திருந்துவதற்கு தெய்வம் சந்தர்ப்பம் தருகிறது. அதைத் தவற விடுபவன், தன்னையே இழக்கிறான்.
              புரிந்து கொண்டவர் இவரே!

               பக்தி கதைகள்> புரிந்து கொண்டவர் இவரே! 
              பக்தி கதைகள்
                புரிந்து கொண்டவர் இவரே!

                நமக்கு மேற்பட்ட நிலையில் இருப்பவர்களின் மனதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு சேவை செய்பவர்களே உயர்ந்தவர்கள். இதை விளக்கும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று இருக்கிறது. ராமபிரான் வனவாசம் முடிந்து, அயோத்தி திரும்பி, அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ராமபிரான் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும் குறிப்பறிந்து செய்து வந்தார். ராமபிரானுடன் இருந்த சீதாதேவி, பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். ஒருநாள் ராம பிரான், அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும், அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ராமரிடமும் தெரிவித்தனர். சுவாமி! உங்களுக்குரிய சேவைகளை அனுமன் மட்டுமே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும், அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும்! என்று கேட்டனர். அதற்கு ஸ்ரீராமர் அனுமதி வழங்கினார்.
                காலையில் ராமர் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு, அவற்றை யார் யார் செய்வது என்று தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர். எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா? என்றார் ஸ்ரீராமர். அவர்கள் ஒரே குரலில், ஆம் என்றனர். ராமர் புன்னகைத்து, இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா ? என்று கேட்டார். அவர்களோ, அப்படி ஒரு நிலை வராது. நாங்கள் மிகத்துல்லியமாக தங்களுக்குரிய சேவைகளை ஒன்று விடாமல் சேர்த்துள்ளோம், என்றனர் மிகுந்த நம்பிக்கையுடன். அனுமனுக்கு ராமரின் உத்தரவு தெரியவந்தது. மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதா தேவியும், ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு பெருத்த சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது; மற்றொன்று அவருக்கு சேவை செய்வது. அன்று அனுமன், ராம...ராம... என்று ஜபித்தபடியே. ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்று கவனித்தார். பகலில் எல்லா சேவையும் குறைவின்றி நடந்தது. இரவில் ராமபிரான் உறங்கச் சென்றார். தாம்பூலத்துடன் சீதா வந்தாள். ராமபிரான் வாய் திறந்தார். அவ்வளவுதான், திறந்த வாய் மூடவே இல்லை. பேச்சும் இல்லை, அசைவும் இல்லை.
                தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதாதேவி பயந்தாள். பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் எல்லோரையும் கூப்பிட்டாள். அவர்கள் ஓடி வந்தனர். அண்ணா, அண்ணா என்று பதறினர். அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்துவிட்டு, இது நோயாகத் தெரியவில்லையே, என்று கிளம்பிவிட்டார். அனுமனை அழைக்கலாமா என்று அவர்களுக்கு தோன்றியது. ஆனாலும், குலகுரு வசிஷ்டரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர். அவர் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். காதில் சில மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரம் தியானமும் செய்தார். எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. கடைசியில் வசிஷ்டர், அனுமனால் தான் இதற்கு பதில் சொல்ல முடியும்! என்றார். உடனே அனுமன் துள்ளிக் குதித்து வந்து, கை விரலால் ராமபிரானின் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய்தானாகவே மூடிகொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது. ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் சொடக்குப் போடுவார். அதன்பிறகே என் வாய் மூடும், இது உங்களுக்கு தெரியாது அல்லவா, என்றார். இப்படி ஒன்று இருக்கிறதா? என்ற அவர்கள், இனிமேல்  அவருக்கு சேவை செய்ய உனக்கு மட்டுமே முழுத்தகுதியுண்டு. அவரை முழுமையாகப் புரிந்து கொண்டவன் நீயே, என்று அனுமனைப் பாராட்டினர்.
                மரம் நடுங்க மழை பெறுங்க!

                 பக்தி கதைகள்> மரம் நடுங்க மழை பெறுங்க! 
                பக்தி கதைகள்
                  மரம் நடுங்க மழை பெறுங்க!

                  ஒரு நாட்டிற்கு, பக்கத்து நாட்டு அரசர் ஒருவர் விஜயம் செய்வதாக அறிவித்தார். பக்கத்து நாடு நட்பு நாடு என்பதாலும், அதிகமான நிதியுதவி செய்கிறது என்பதாலும் வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. மன்னர் அரண்மனைக்குள் நுழைய தேர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தேர் உள்ளே நுழையத் தடையாக, அரண்மனை வாசலில், நூறாண்டுகளுக்கும் மேலாக ஆலமரம் ஒன்று தழைத்து நின்றது. அதன் விழுதுகள் ஆங்காங்கே ஊன்றி நின்றன. மரத்தை வெட்டினால் தான், தேர் தடையின்றி உள்ளே நுழையும் என அமைச்சர்கள் மன்னரிடம் சொன்னார்கள். மன்னர் மறுத்துவிட்டார். அமைச்சர்களே! மரத்தை வெட்ட வேண்டும் என்ற யோசனையை நிராகரிக்கிறேன். அதற்கு மாற்றாக கோட்டைச் சுவரின் ஒருபகுதியை இடியுங்கள்.
                  அங்கே வாசல் அமைக்கலாம். அதன் வழியே தேர் உள்ளே நுழையட்டும். நமது தேர்களும் கூட இனி அவ்வழியே வரட்டும், என்றான். கோட்டையை இடித்து வழி ஏற்படுத்த அதிக செலவாகும். மரத்தை நம் வேலையாட்களைக் கொண்டே வெட்டி விடலாமே! என்றனர் அமைச்சர்கள். அமைச்சர்களே! கோட்டை வாசல் கட்ட கல்லும், மணலுமே தேவை. அதை பத்தே நாளில் கட்டி விடலாம். அதற்கு செலவு அதிகமாகும் என்பது நிஜமே! அதை நாம் சம்பாதித்து விடலாம். ஆனால், ஒரு மரத்தை உருவாக்க நம்மால் முடியுமா! இயற்கையாகவே வளர்வது! அதற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் தெரியுமா? மேலும், இது பலருக்கு நிழல் தருகிறது. மழை பெய்யவும் மரங்கள் அவசியம், என்றான். அமைச்சர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கோட்டைச்சுவரை இடிக்கும் ஏற்பாட்டில் இறங்கிவிட்டனர். மரம் வளர்ப்பதின் அவசியம் புரிகிறதா!
                  
                  ஊருக்கு ஒரு நல்லவன்!

                   பக்தி கதைகள்> ஊருக்கு ஒரு நல்லவன்! 
                  பக்தி கதைகள்
                    ஊருக்கு ஒரு நல்லவன்!

                    குரு÷க்ஷத்திர யுத்தம் நடந்து கொண்டிருந்தது. துரோணர் மிக வீரமாக போரிட்டார். அவரைக் கொல்ல கிருஷ்ணர் ஒரு உபாயம் செய்தார். புத்திரபாசம் மிக்க துரோணரை நிலைகுலையச் செய்ய, அவரது மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக பொய் சொல் என தர்மரைத் தூண்டினார். தர்மர் மறுக்கவே, சரி! அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்டதாக துரோணரின் காதில் பட்டும் படாமலும் விழுவது போல் சொல், என்றார். தர்மரும் அவ்வாறே செய்ய மகன் தான் இறந்தான் என நினைத்து துரோணர் போர்க்களத்தில் சாய்ந்தார். இதனால் கொடிய பாவம் தர்மரை பிடித்துக் கொண்டது. அவர் இறந்ததும், இந்த பாவத்திற்குரிய பலனை அனுபவிக்க நரகத்திற்கு இழுத்துச் சென்றனர். தர்மர் அங்கு வந்ததும் நரகவாசிகள் ஆனந்தம் அடைந்தனர். தர்மரே! தர்மவானான உமது பாதம் பட்டதுமே, நரகத்தில் நாங்கள் அனுபவித்த கொடுமைகள் தீர்ந்தது போல் உணர்கிறோம். நீர் இங்கேயே தங்கியிருக்க வேண்டும், என்றனர்.
                    தர்மருக்குரிய தண்டனை நேரம் முடிந்ததும், அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல கிங்கரர்கள் வந்தனர். தர்மரோ அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.நான் இங்கு வந்தததால், இந்த நரகவாசிகள் நிம்மதியாக இருப்பதாக உணர்கின்றனர். அவர்களுக்கு நான் செய்த புண்ணியபலனை தானம் செய்கிறேன். அவர்களை சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்லுங்கள், என்றார். கிங்கரர்களும் அவ்வாறே புஷ்பக விமானங்களை வரவழைத்து சொர்க்கத்துக்கு அவர்களை அனுப்பினர். கடைசியாக வந்த விமானத்தில், தர்மரையும் ஏறச்சொன்னார்கள். நான் தான் புண்ணியத்தை தானம் செய்து விட்டேனே! என்னால் எப்படி வர முடியும்? என்றார். புண்ணியத்தையே நீர் தானம் செய்தீரே! அந்த தானம் தானங்களில் மிக உயர்ந்தது. அதற்குரிய பலனாக சொர்க்கம் செல்லலாம், என்றனர். ஒரு நல்லவன் இருந்தால் போதும். உலகில் மழை கொட்டும்.
                    












                    கருத்துகள் இல்லை:

                    கருத்துரையிடுக