வெள்ளி, 25 நவம்பர், 2011

திருப்புகழ் ( பகுதி - 2 ) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டாம் பகுதி



ராதே கிருஷ்ணா 26-11-2011

திருப்புகழ் ( பகுதி - 2 ) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டாம் பகுதி

திருப்புகழ் பகுதி-2



அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டாம் பகுதி

வள்ளிமலை
315. அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக்  கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத்  தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்லஅய லாக
வல்லெருமை மாயச்  சமனாரும
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளி
லுய்யவொரு நீபொற்  கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக்  குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற்  றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத்  தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப்  பெருமாளே.
316. ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுயில் வாழ்வைக் கருதாசைப்;
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல்படு வேனை
நல்ல இரு தாளிற் புணர்வாயே;
மெய்யபொழில் நீடு தையலைமு னாலு
செய்யபுய மீதுற் றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் பொருதோனே;
வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமூத் தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளி மணவாளப் பெருமாளே.
317. கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
பொய்யொத்த வாழ்வு கண்டு  மயலாகிக்
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல்வி ழுந்து
கள்ளப்ப யோத ரங்க  ளுடன்மேவி
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
பொய்யர்க்கு மேய யர்ந்து  ளுடைநாயேன்
உள்ளப்பெ றாகநின்று தொய்யப்ப டாம லென்று
முள்ளத்தின் மாய்வ தொன்றை  மொழியாயோ
ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
தெய்வத்தெய் வானை கொங்கை  புணர்வோனே
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
வெல்லப்ப தாகை கொண்ட  திறல்வேலா
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
மெய்யொத்த நீதி கண்ட  பெரியோனே
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட  பெருமாளே.
318. முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி யின்ப  முயலாநீள்
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில் வீழ்வ தன்றி  யொருஞான
எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
மெல்லைக்கும் வாவி நின்ற  னருள்நாமம்
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ றாரி ணங்கை  யொழிவேனோ
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள் மார்ப லங்கல்  புனைவோனே
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள்  பயில்நாதா
வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ ராறி ரண்டு  புயவீரா
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட  பெருமாளே.
319. கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
துள்ளிக்க னார்க்க  யவுகோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத்து  ராற்பை  பசுபாச
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்ட சாப்பி  சிதமீரல்
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
கொள்ளப்ப டாக்கை  தவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளத்தி மாற்கு  மருகோனே
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
புள்ளத்த மார்க்கம்  வருவோனே
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்று  மிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த  பெருமாளே.
320. வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
வில்லிக்க தாக்க  ருதும்வேளால்
வில்லற் றவாக்கொள் சொல்லற்று காப்பொய்
யில்லத் துறாக்க  வலைமேவு
பல்லத்தி வாய்க்க அல்லற் படாக்கை
நல்லிற் பொறாச்ச  மயமாறின்
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
கல்விக் கலாத்த  லையலாமோ
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
சொல்குக்கு டார்த்த  இளையோனே
அல்லைக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்
கெல்லைப்ப டாக்க  ருணைவேளே
வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
வல்லிக்கு மேற்ற  ரருள்வோனே
வள்ளிக் குழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த  பெருமாளே.
321. ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப்புலாற்கி ருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை சுமவாதே;
யுக இறுதிகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு மறிவூறி
ஒளிதிகழ ருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க அருள்வாயே;
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பிராட்டி இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற பதிவாழ்வே;
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக் குலாத்தி கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்ந்த பெருமாளே.
322. அல்லசல டைந்த வில்லடல னங்கன்
அல்லிமல ரம்பு  தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட  அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று  முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு  தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை  கண்ட  புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை  யருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த  மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த  பெருமாளே.
323. குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன  மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்ந்த தென்ன
குருவார்த்தை தன்னை  யுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல்  கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை  யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த  குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல  மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை  தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல  பெருமாளே.
324. சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந்  திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலின்கண் வெந்துசிந்  திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந்  தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந்  தருள்வாயே
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச மண்டிவந்  திடுசூரன்
அகலம் பிளந்தணைந் தகிலம் பரந்திரங்
கிடஅன் றுடன்றுகொன்  றிடும்வேலா
மரைவெங் கயம்பொருந் திடவண் டினங்குவிந்
திசையொன்ற மந்திசந்  துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும்  பெருமாளே.
325. வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
விழியையு கந்துமு கந்து கொண்டடி
வருடிநி தம்பம ளைந்து தெந்தென  அளிகாடை
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல்  மெழுகாகி
உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
யடியின கங்கள்வ ரைந்து குங்கும
உபய தனங்கள்த தும்ப அன்புட  னணையாமஞ்
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
உணர்வழி யின்பம றந்து நின்றனை  நினைவேனோ
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர்  களிகூர
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு  மருகோனே
அருகர் கணங்கள்பி ணங்கி டும்படி
மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
அரகர சங்கர வென்று வென்றருள்  புகழ்வேலா
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள் பொருந்திய சந்த வண்கரை
யரிவை விலங்கலில் வந்து கந்தருள்  பெருமாளே.
திருக்கழுக்குன்றம்
326. அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு  கணையாலே
அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ சிலநாள்போய்
இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை  முதிர்வாயே
எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு  னருள்தாராய்
புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி  யருள்பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன்  மருகோனே
திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை  யணைசீலா
செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய  பெருமாளே.
327. எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர்  முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறு  கனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு  தமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர  குருநாதா
மழுவுழைக பால டமரகத்ரி சூல
மணிகரவி நோத  ரருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய்  முருகோனே
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
கதிருலவு வாசல்  நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவு  பெருமாளே.
328. ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென  விரகலீலை
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீரென  அமுதமாரன்
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
ஆர முத்த மணிந்து அளா அளாவென  மருவுமாதர்
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென  வகைவராதோ
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
வேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
வாகை
 பெற்ற புயங்கள் கறேல் கறேலென  எதிர்கொள்சூரன்
மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென
பேய்கு திக்க நிணங்கள் குழு குழுவென
வாய்புதைத்து விழுந்து ஐயோ ஐயோவென  உதிரமாறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென  விசைகள்கூற
வேலெ டுத்து நடந்த திவா கராசல
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ  குமரவேளே.
329. வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு   மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை  முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி  புயநேய
ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி  புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க  மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி  யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த  முனிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோதுவித்த  பெருமாளே.
அச்சிறுபாக்கம் (பேறைநகர்)
330. நீலமயில் சேரு மந்தி மாலைநிக ராகி அந்த
காரமிக வேநி றைந்தே  குழலாலும்
நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
னேர்தருமு கார விந்த  மதனாலும்
ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
ஆசைவலை வீசு கெண்டை  விழியாலும்
ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாறு மந்த
னாகி மயல் நானு ழன்று  திரிவேனோ
கோல வுரு வாயெ ழுந்து பாரதனை திருமார்பன்
கூவிடுமு ராரி விண்டு  திருமார்பன்
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெழுந்த
கோபவரி நார சிங்கன்  மருகோனே
பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
பேர்பெரிய வேல்கொள் செங்கை  முருகோனே
பேடைமட வோதி மங்கள் கூடிவிளை யாடுகின்ற
பேறைநகர் வாழ வந்த  பெருமாளே.
மயிலம்
331. கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ  எனுமானார்
குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா  விதமாகி
உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னூடே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா  லழிவேவோ
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா  ளருள்வாயே
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா யிடவேதான்
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சி
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர்  வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்ட லாயவள் தாள்மீ தேவீழ்  குமரேசா
மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர்  பெருமாளே.
திருச்சி (திரிசிராப்பள்ளி)
332. அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய
கொங்கை காட்டிம றைத்துச் சீரிய
அன்பு போற்பொய்ந டித்துக் காசள  வுறவாடி
அம்பு தோற்றக ணிட்டுத் தோதக
இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம்
அன்றில் போற்குர லிட்டுக் கூரிய  நகரேகை
பங்க மாக்கிய லைத்துத் தாடனை
கொண்டு வேட்டையெ ழுப்பிக் காமுகர்
பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத  லியல்பாகப்
பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள்
தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி
பங்கர் போற்றியபத்மத் தாள்தொழ  அருள்வாயே
எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின்  முடிவேறாய்
இந்த்ர கோட்டிம  யக்கத் தான்மிக
மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல  வயலூர
செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
தின்று கூத்துந டிக்கத் தோகையில்  வரும்வீரா
செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
தென்சி ராப்பளி வெற்பிற் றேவர்கள்  பெருமாளே.
333. அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித  சூத்திர
மம்போருக னாடிய பூட்டிது  இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையை  ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய  சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புய  மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ  மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு
திண்டாடிம காமயில் மேற்கொளு  முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திர  னருள்பாலா
எண்கூடரு ளால்நௌவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய  பெருமாளே.
334. அரிவையர் நெஞ்சுரு காப்புணர்
தருவிர கங்களி னாற்பெரி
தவசம்வி ளைந்துவி டாய்த்தடர்  முலைமேல்வீழ்ந்
தகிலொடு சந்தன சேற்றினில்
முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை
யடியின கம்பிறை போற்பட  விளையாடிப்
பரிமளம் விஞ்சிய பூக்குழல்
சரியம ருங்குடை போய்ச்சில
பறவைக ளின்குர லாய்க்கயல்  விழிசோரப்
பனிமுக முங்குறு வேர்ப்பெழ
இதழமு துண்டிர வாய்ப்பகல்
பகடியி டும்படி தூர்த்தனை  விடலாமோ
சரியையு டன்க்ரியை போற்றிய
பரமப தம்பெறு வார்க்கருள்
தருகணன் ரங்கபு ரோச்சிதன்  மருகோனே
சயிலமெ றிந்தகை வேற்கொடு
மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய குருநாதா
திரிபுவ னந்தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில்வி ளங்குசி ராப்பளி  மலைமீதே
தெரியஇ ருந்தப ராக்ரம
உருவளர் குன்றுடை யார்க்கொரு
திலதமெ னும்படி தோற்றிய  பெருமாளே.
335. அழுதழு தாசார நேசமு
முடையவர் போலேபோய் சூழ்வுறும்
அசடிகள் மாலான காமுகர்  பொன்கொடாநாள்
அவருடன் வாய்பேசி  டாமையு
முனிதலு மாறாத தோஷிகள்
அறுதியில் காசாசை வேசைகள்  நஞ்சுதோயும்
விழிகளி னால்மாட வீதியில்
முலைகளை யோராம லாரொடும்
விலையிடு மாமாய ரூபிகள்  பண்பிலாத
விரகிகள் வேதாள மோவென
முறையிடு கோமாள மூளிகள்
வினைசெய  லாலேயெ னாவியு  யங்கலாமோ
வழியினில் வாழ்ஞான போதக
பரமசு வாமீவ ரோதய
வயிலியில் வேலாயு தாவரை  யெங்குமானாய்
மதுரையின் மீதால வாயினில்
எதிரம ணாரோரெ ணாயிரர்
மறிகழு மீதேற நீறுப  ரந்துலாவச்
செழியனு மாளாக வாதுசெய்
கவிமத சீகாழி மாமுனி
சிவசிவ மாதேவ காவென  வந்துபாடுந்
திருவுடை யாய்தீதி லாதவர்
உமையொரு பாலான மேனியர்
சிரகிரி வாழ்வான தேவர்கள்  தம்பிரானே.
336. இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்
றிடைகொடு வஞ்சிக்  கொடிபோல்வார்
இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்
திகழமு துந்துய்த்  தணியாரக்
களபசு கந்தப் புளகித இன்பக்
கனதன கும்பத்   திடைமூழ்குங்
கலவியை நித்தித் திலகிய நின்பொற்
கழல்தொழு மன்பைத்  தருவாயே
தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்
சதுமறை சந்தத்  தொடுபாடத்
தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
தகுர்தியெ னுங்கொட்  டுடனாடித்
தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்
சிறுவஅ லங்கல்  றிருமார்பா
செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்
திரிசிர குன்றப்  பெருமாளே.
337. பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
பவளவெண் முத்தந்  திரமாகப்
பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்
பரிவென வைக்கும்  பணவாசை
அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்
டழியும வத்தன்  குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென்  றருள்வாயே
சகலரு மெச்சும் பரிமள பத்மந்
தருணப தத்திண்  சுரலோகத்
தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்
தழுவஅ ணைக்குந்  திருமார்பா
செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்
திகுதிகெ னப்பொங்  கியவோசை
திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
சிரகிரி யிற்கும்  பெருமாளே.
338. ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
ஒருவரொடு செங்கை  யுறவாடி
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை
ஒருவரொடி ரண்டு  முரையாரை
மருவமிக அன்பு பெருகவுள தென்று
மனநினையு மிந்த  மருள்தீர
வனசமென வண்டு தனதனன வென்று
மருவுசர ணங்க  ளருளாயோ
அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க
அடலிடுப்ர சண்ட  மயில்வீரா
அமரர்முத லன்பர் முனிவர்கள்வ ணங்கி
அடிதொழவி ளங்கு  வயலூரா
திருவையொரு பங்கர் கமலமலர் வந்த
திசைமுகன்ம கிழ்ந்த  பெருமானார்
திகுதகுதி யென்று நடமிட முழங்கு
த்ரிசிரகிரி வந்த  பெருமாளே.
339. குமத வாய்க்கனி யமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
கூரா வீறா தீரா மாலா  யவரோடே
உமது தோட்களி லெமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர்  எவவேநின்
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன
மூடே வீழ்வே னீடே றாதே  யுழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதா வேமா ஞாதா வேதோ  கையிலேறீ
சயில நாட்டிறை வயலி நாட்டிறை
சாவச மூவா மேவா நீவா  இளையோனே
திமிர ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா  உமைபாலா
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே வானோர்  பெருமாளே.
340. குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்
குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை  பொருகாடை
குயில்பு றாமயில் குக்கில் சுரும்பினம்
வனப தாயுத மொக்கு மெனும்படி
குரல்வி டாஇரு பொற்குட மும்புள  கிதமாகப்
பவள ரேகைப டைத்தத ரங்குறி
யுறவி யாளப டத்தை யணைந்துகை
பரிச தாடன மெய்க்கர ணங்களின்  மதனூலின்
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ
அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி
படியு மோகச முத்ர மழுந்துத  லொழிவேனோ
தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி  புவனேசை
சகல காரணி சத்தி பரம்பரி
இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி  யெமதாயி
சிவைம னோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள்  முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்ன அலங்க்ருத
திரிசி ராமலை அப்பர் வணங்கிய  பெருமாளே.
341. சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
தத்வ வாதீ நமோநம  விந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ன தீபா நமோநம
தற்ப்ர தாபா நமோநம  என்றுபாடும்
பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
பச்சை பாடீர பூஷித  கொங்கைமேல்வீழ்
பட்டி மாடான நானுனை விட்டி ராமே யுலோகித
பத்ம சீர்பாத நீயினி  வந்துதாராய்
அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுகி
யர்க்ய சோமாசி யாகுரு  சம்ப்ரதாயா
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
அக்ஷ மாலா தராகுற  மங்கைகோவே
சித்ர கோலா கலாவீர லக்ஷ்மி சாதார தாபல
திக்கு பாலா சிவாகம  தந்த்ரபோதா
சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
தெர்ப்பை யாசார வேதியர்  தம்பிரானே
சென்னிமலை (சிரகிரி)
342. பகலிரவினிற் றடுமாறா; பதிகுருவெனத்  தெளிபோத
ரகசியமுரைத் தநுபூதி; ரதநிலைதனைத்  தருவாயே
இகரபமதற்கிறையோனே; இயலிசையின்முத்  தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே; சரவணபவப்  பெருமாளே.
343. புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித்  திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
புரள்வித் துவருத் திமணற் சொரிவித்  தனலூடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித்  திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத்  துயர்தீராய்
பவனத் தையொடுக் குமனக் கவலைப்
ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
படரிச் சையொழித் ததவச் சரியைக்   க்ரியையோகர்
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
பரவப் படுசெய்ப் பதியிற் பரமக்  குருநாதா
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற்  குணனாதி
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
புதனொப் பிலியுற் பவபத் மதடத்
த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப்  பெருமாளே.
344. பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள்  கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்
புலையர் மாட்டும றாதே கூடிகள்  நெஞ்சமாயம்
கருதொ ணாப்பல கோடா கோடிகள்
விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே யோதிகள்  தங்களாசைக்
கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
கருணை நோக்கமி லாமா பாவிக  ளின்பமாமோ
குருக டாக்ஷக லாவே தாகம
பரம வாக்கிய ஞானா சாரிய
குறைவு தீர்த்தருள் ஸ்வாமீ கார்முக  வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோ கோவென
மடிய நீட்டிய கூர்வே லாயுத
குருகு ÷க்ஷத்ரபு ரேசா வாசுகி  அஞ்சமாறும்
செரு ராக்ரம கேகே வாகன
சரவ ணோற்பவ மாலா லாளித
திரள்பு யாத்திரி யீரா றாகிய  கந்தவேளே
சிகர தீர்க்கம காசீ கோபுர
முகச டாக்கர சேணா டாக்ருத
திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள்  தம்பிரானே.
345. பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுககில் சந்து  பனிநீர்தோய்
புளகித கொங்கை யிளகவ டங்கள்
புரளம ருங்கி  லுடைசோர
இருள்வளர் கொண்ட சரியஇ சைந்து
இணைதரு பங்க  அநுராகத்
திரிதலொ ழிந்து மனதுக சிந்து
னிணையடி யென்று  புகழ்வேனோ
மருள்கொடு சென்று பரிவுட னன்று
மலையிலவி ளைந்த  தினைகாவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த  முருகோனே
தெருளுறு மன்பர் பரவ விளங்கு
திரிசிர குன்றில்  முதனாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர்  பெருமாளே.
346. வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது  நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது
நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது  விந்துநாத
ஓசைக்குத் தூர மானது
மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது  கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ்
ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும  யங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய்
வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி  கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய
லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது  ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை
ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென  நின்றநாதா
நாகத்துச் சாகை போயுமர்
மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர்  தம்பிரானே.
347. வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை
நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில்
விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய  மிலரானால்
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு
பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படுமுலையினு நிலையினு  மெவரோடும்
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினு
மவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு
மதிக்கொ ணாத்தள ரிடையினும் நடையினு  மவமேயான்
மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு
தடத்து மோக்ஷம தருளிய பலமலர்
மணத்த வார்க்கழல்கனவிலுநனவிலு  மறவேனே
இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய
சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற
இரøக்ஷ வாய்த்தருள் முருகப னிருகர  குகவீரா
இலக்ஷúமீச்சுர  பசுபதி குருபர
சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்
இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி  களிகூரத்
திருட்டுராக்ஷதர் பொடிபட வெடிபட
எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய
செருக்குவேட்டுவர் திறையிடமுறையிட  மயிலேறும்
செருப்ப ராக்ரம நிதிசர வணபவ
சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு
திரிச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு  பெருமாளே.
உய்யக்கொண்டான் மலை (திருக்கற்குடி)
348. குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
குவட்டைச் செறுத்துக்  ககசாலக்
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
குருத்தத் துவத்துத்  தவர்சோரப்
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
புறப்பட்ட கச்சுத்  தனமாதர்
புணர்ச்சிக் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
புரித்துப் பதத்தைத்  தருவாயே
கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்
கருத்திசை யுற்றுப்  பரிவாகக்
கனக்கப்ரி யப்பட் டகப்பட்டு மைக்கட்
கடைப்பட்டு நிற்கைக்  குரியோனே
தடத்துற்ப வித்துச் சுவர்க்கத்த லத்தைத்
தழைப்பித்த கொற்றத்  தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக்கற் குடிக்குப்   பெருமாளே.
349.நெறித்துப் பொருப்புக் கொத்த
முலைக்குத் தனத்தைக் கொட்டி
நிறைத்துச் சுகித்துச் சிக்கி  வெகுநாளாய்
நினைத்துக் கொடத்துக் கத்தை
யவத்தைக் கடுக்கைப் பெற்று
நிசத்திற் சுழுத்திப் பட்ட  அடியேனை
இறுக்கிப் பிடித்துக் கட்டி
யுதைத்துத் துடிக்கப் பற்றி
யிழுத்துத் துவைத்துச் சுற்றி  யமதூதர்
எனக்குக் கணக்குக் கட்டு
விரித்துத் தொகைக்குட் பட்ட
இலக்கப் படிக்குத் தக்க  படியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு
மலத்திற் புகட்டித் திட்டி
முழுக்கக் கலக்கப் பட்டு  அலையாமல்
மொழிக்குத் தரத்துக் குற்ற
தமிழக்குச் சரித்துச் சித்தி
முகத்திற் களிப்புப் பெற்று  மயிலேறி
உறுக்கிச் சினத்துச் சத்தி
யயிற்குத் தரத்தைக் கைக்கு
ளுதிக்கப் பணித்துப் பக்கல்  வருவாயே
உனைச்சொற் றுதிக்கத் தக்க
கருத்தைக் கொடுப்பைச் சித்தி
யுடைக்கற் குடிக்குட் பத்தர்  பெருமாளே.
இரத்தினகிரி (வாட்போக்கி)
350. கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்
கமலத் தியல்மைக்  கணினாலே
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட் டெழுமைக்  குழலாலே
நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்
குளநற் பெருசெப்   பிணையாலே
நலமற் றறிவற் றுணர்வற் றனனற்
கதியெப் படிபெற்  றிடுவோனோ
புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்
கறமுற் சரமுய்த்  தமிழ்வோடும்
பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்
டொழியப் புகழ்பெற்  றிடுவோனே
செயசித் திரமுத் தமிழுற் பவநற்
செபமுற் பொருளுற்  றருள்வாழ்வே
சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்
றிகழ்மெய்க் குமரப்  பெருமாளே.
351. சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி
சுற்றவிழ லானபவி ÷ஷாடுகடல் மூழ்கிவரு  துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு  பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை  விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொடுமுடி யாதபத  மருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு  எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர்  களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
மிக்கநரி யாடகழு தாட கொடி யாடசமர்
எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு  வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
ரத்னகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர்  பெருமாளே.
352. பத்தியால் யானுனைப்  பலகாலும்
பற்றியே மாதிருப்  புகழ்பாடி
முத்தனா மாறெனைப்  பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்  கருள்வாயே
உத்தமா தானசற்  குணர்நேயா
ஒப்பிலா மாமணிக்  கிரிவாசா
வித்தகா ஞானசத்  திநிபாதா
வெற்றிவே லாயுதப்  பெருமாளே.
விராலிமலை
353. சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக  மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள  இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமுத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட  முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது  பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு  ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதா  குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு  மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை  பெருமாளே.
354. பா தாள மாதி லோக நிகிலமு
மா தார மான மேரு வெனவளர்
பா டீர பார மான முலையினை  விலைகூறிப்
பா லோடு பாகுதேனெ னினியசொ
லா லேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை  கவிபாடும்
வே தாள ஞான கீனன் விதரண
நா தானி லாத பாவி யநிஜவன்
வீ ணாள்ப டாத போத தவமிலி  பசுபாச
வ்யா பார மூடன் யானு முனதிரு
சீர் பாத தூளி யாகி நரகிடை
வீ ழாம லேசு வாமி திருவருள்  புரிவாயே
தூ தாள ரோடு காலன் வெருவிட
வே தாமு ராரி யோட அடுபடை
சோ ராவ லாரி சேனை பொடிபட  மறைவேள்விச்
சோ மாசி மார்சி வாய நமவென
மா மாய வீர கோர முடனிகல்
சூர் மாள வேலை யேவும் வயலியி   லிளையோனே
கூ தாள நீப நாக மலர்மிசை
சா தாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர  மடர்சோலை
கூ ராரல் தேரு நாரை மருவிய
கா னாறு பாயு மேவி வயல்பயில்
கோ னாடு சூழ்வி ராலி மலையுறை  பெருமாளே.
355. இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக  லடியேனை
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ  னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச  கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற  நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர  நதிசூடி
நிசாசர குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர  னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவிதாகவ
வியாதர்கள் விநோதமகள்  மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை  பெருமாளே.
356. நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப்  ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச்  சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக்  குறியாமே
துரால்புகழ் பாரதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற்  றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட்  குடன்மாய்வென்
றிராகன்ம லாராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க்  கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச்  செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப்  பெருமாளே.
357. இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண
முதவிய புகையினி லளவி வகைவகை
கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர்  கொண்டலென
அறலென இசையளி யனெந ளிருளென
நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
நெய்த்துமுசு வின்திரிசை யொத்தசுருள்  குந்தளமும்
இலகிய பிறையென எயினர் சிலையென
விலகிய திலதநு தலும திமுகமும்
உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு  முனைவாளும்
இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு
கடுவது மெனநெடி தடுவ கொடியன
இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி  றைந்தவிழி
தளவன முறுவலு மமுத குமுதமும்
விளைநற வினியமொ ழியுமி னையதென
ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு  றைந்துகமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலை
நெடியக வுடியிசை முரலு சுரிமுக
நத்தனைய கண்டமும்வெண்முத் துவிளைவிண்டனைய  எழில்தோளும்
விதரண மனவித னமதை யருள்வன
சததள மரைமுகி ழதனை நிகர்வன
புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி  ரம்புவன
இமசல ம்ருகமத களப பரிமள
தமனிய ப்ரபைமிகு தருண புளகித
சித்ரவர மங்கலவி சித்ரவிரு  துங்ககன
விகலித மிருதுள ம்ருதுள நவமணி
முகபட விகடின தனமு முயர்வட
பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள  மதியாத
விபரித முடையிடை  யிளைஞர் களைபட
அபகட மதுபுரி யரவ சுடிகைய
ரத்நபண மென்பவழ குற்றவரை  யும்புதிய
நுணியத ளிரெனவு லவிய பரிபுர
அணிநட னபதமு முடைய வடிவினர்
பொற்கலவி யின்பமதி துக்கமென  லன்றியவர்
விரகினி லெனதுறு மனம துருகிய
பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ  தொருநாளே;
தததத தததத ததத தததத
திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி  திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுக டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி  டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
திமிதிமி செககண திமித திகதிக
தத்திமிகத தந்திமித தித்திமிதி திந்திமிதி  யெனவேதான்
தபலைகு டமுழவு திமிலை படகம
தபுதச லிகைதவில் முரசு கரடிகை
மத்தளித வண்டையற வைத்தகுணி  துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
திகுதிகு திகுவென அலகை குறளிகள்
விக்கிடநி ணம்பருக பக்கியுவ  ணங்கழுகு
சதிர்பெற அதிர்தர உததி சுவறிட
எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ  வெகுகோடி;
மதகஜ துரகர தமுமு டையபுவி
யதலமு தல்முடிய இடிய  நெடியதொர்
மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி  டிந்துவிட
இரவியு மதியமு நிலைமை பெறஅடி
பரவிய அமரர்கள் தலைமை பெறஇய
லத்திறல ணங்குசெய சத்திவிடு  கந்ததிரு
வயலியி லடிமைய குடிமை யினலற
மயலொடு மலமற அரிய பெரியதி
ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு  கவிராலி
மலையுறை குரவந லிறைவ வருகலை
பலதெரி விதரண முருக சரவண
உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ  கண்டமய
நிருபவி மலசுக சொருப பரசிவ
குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
சக்ரகிரி யுங்குலைய விக்ரமந  டம்புரியு
மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை
மருவியெ யருமைய இளமை யுருவொடு
சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு  பெருமாளே.
358. உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து  கந்துபேணி
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
யொழியாது வூதை விட்டி  ருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
தருவார்கள் ஞான வித்தை  தஞ்சமாமோ
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
தருமாகி லாகு மத்தை  கண்டிலேனே
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
குடிமாள மாய மிட்டு  குந்திபாலர்
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
குறளாக னூறில் நெட்டை  கொண்டஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
மலைமே லுலாவு சித்த  அங்கைவேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனை யேநி மிர்த்த  தம்பிரானே.
359. எதிரெதிர்கண் டோடி யாட்கள்
களவதறிந் தாசை பூட்டி
இடறிவிழும் பாழி காட்டு  மடமாதர்
இறைவைகொளுங்  கூவல் மூத்த
கறையொழுகுந் தாரை பார்க்கி
லிளமைகொடுங் காத லாற்றில்  நிலையாத
அதிவிகடம் பீழ லாற்ற
அழுகிவிழும் பீற லூத்தை
அடையுமிடஞ் சிலை தீற்று  கருவாயில்
அருவிசலம் பாயு மோட்டை
அடைவுகெடுந் தூரை பாழ்த்த
அளறிலழுந் தாம லாட்கொ  டருள்வாயே
விதுரனெடுந் த்ரோண மேற்று
எதிர்பொருமம் பாதி யேற்றி
விரகினெழுந் தோய நூற்று  வருமாள
விரவுஜெயன் காளி காட்டில்
வருதருமன் தூத  னீற்ற
விஜயனெடும் பாக தீர்த்தன்  மருகோனே
மதியணையும் சோலை யார்த்து
மதிவளசந் தான கோட்டின்
வழியருளின் பேறு காட்டி  யவிராலி
மலைமருவும் பாதி யேற்றி
கடிகமழ்சந் தான கோட்டில்
வழியருளின் பேறு காட்டு  பெருமாளே.
360. ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும்  வெகுரூப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு  வெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு  மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது  சிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது  பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
மண்டு பூதப சாசு பசிகெட  மயிடாரி
வன்கண் வீரியி டாரி ஹரஹர
சங்க ராஎன மேரு கிரிதலை
மண்டு தூளெழ வேலை யுருவிய  வயலூரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச
வென்றி யானச மாதி முறுகுகல்  முழைகூடும்
விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன்
விஞ்ச வீசுவி ராலி மலையுறை  பெருமாளே.
361. கரதல முங்குறி கொண்ட கண்டமும்
விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்
கனவிய கொண்டைகு லைந்த லைந்திட
களபசு கந்தமி குந்த கொங்கைக
ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்
கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை  மிசைவீழா
இரதம ருந்தியு றுங்க ருங்கயல்
பொருதுசி வந்துகு விந்தி டும்படி
யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி  லுறமூழ்கி
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
வனிதையர் தங்கள்மருங்கி ணங்கிய
இளமைகி ழம்படு முன்ப தம்பெற்  வுணர்வேனோ
பரத சிலம்புபு லம்பு மம்பத
வரிமுக எண்கினு டன்கு ரங்கணி
பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி  யிடையேபோய்ப்
பகடியி லங்கைக லங்க அம்பொனின்
மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு
படியு நடுங்கவி ழும்ப னம்பழ  மெனவாகும்
மருதமு தைந்தமு குந்த னன்புறு
மருககு விந்தும லர்ந்த பங்கய
வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி  யவிராலி
மலையில் விளங்கிய கந்த என்றுனை
மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை
வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள்  பெருமாளே.
362. கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி  கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி  சிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானி  பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத  அருளாளோ
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி  வடமேரு
சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு சூர்மாள  வுலகேழும்
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு  கழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு  பெருமாளே.
363. காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய
காதாட்டிய பார இருகுழை  யளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனி லார்வாட்கடை யீடு கனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை  யமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில்மலருட
னேராட்டவி நோத மிடும்விழி  மடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை  மறவேனே
சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி  புவனேசை
சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார னென்வெகு
சீராட்டொடு பேண வடதிசை  கயிலாசக்
கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி யெனவரு  மிளையோனே
கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை  பெருமாளே.
364. கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொழிந்து
குலாவியவ மேதி ரிந்து  புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று  னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி  லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து  மடியாமுன்
தொடாய்மறவி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை  யருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க  வடிவேலா
படாதகுளிர் சோலையண்ட மளாவியுயர் வாய்வளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து  தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த  பெருமாளே.
365. மாயா சொரூப முழுச்ச மத்திகள்
ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
வாணாளை யீரும் விழிக்க டைச்சிகள்  முனிவோரு
மாலாகி வாட நகைத்து ருக்கிகள்
ஏகாச மீது தனத்தி றப்பிகள்
வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள்  வெகுமோ
ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள்
ஈயாத போதி லறப்பி ணக்கிகள்
ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள்  பழிபாவம்
ஆமா றெணொத திருட்டு மட்டைகள்
கோமாள மான குறிக்க ழுத்திகள்
ஆசார வீன விலைத்த னத்திய  ருறவாமோ
காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
காணாத வாறு குடிக்கு மப்பொழு  துரலோடே
கார்போலு மேனி தனைப்பி ணித்தொரு
போர்போ லசோதை பிடித்த டித்திட
காதோடு காது கையிற்பி டித்தழு  தினிதூதும்
வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயாமல் மீள அழைக்கு மச்சுதன்
வீறான மாம னெனப்ப டைத்தருள்  வயலூரா
வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்
சூர்மாள வேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலைத்த லத்துறை  பெருமாளே.
366.மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார  வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு  மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு  மிலைவீணே
நாள்போய் விடாம லாறாது மீதில்
ஞானனோப தேச  மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக  அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை  வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத  பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர்  பெருமாளே.
367. மேக மெனுங்குழல் சாய்த்திரு
கோக னகங்கொடு கோத்தணை
மேல்விழு கின்ற பராக்கினி  லுடைசோர
மேகலை யுந்தனி போய்த்தனி
யேகர ணங்களு மாய்க்கயல்
வேல்விழி யுங்குவி யாக்குரல்  மயில்காடை
கோகில மென்றெழ போய்க்கனி
வாயமு துண்டுரு காக்களி
கூரவு டன்பிரி யாக்கல  வியின்மூழ்கிக்
கூடி முயங்கி விடாய்த்திரு
பார தனங்களின் மேற்றுயில்
கூரினு மம்புய தாட்டுணை  மறவேனே
மோகர துந்துபி யார்ப்பவி
ராலி விலங்கலின் வீட்டதில்
மூவுல குந்தோழு தேத்திட  வுறைவோனே
மூதிசை முன்பொரு காற்றட
மேருவை யம்பினில் வீழ்த்திய
மோகன சங்கரி வாழ்த்திட  மதியாமல்
ஆக மடிந்திட வேற்கொடு
சூரனை வென்றடல் போய்த்தணி
யாமையின் வென்றவ னாற்பிற்  கிடுதேவர்
ஆதி யிளந்தலை காத்தர
சாள அவன்சிறை மீட்டவ
னாளுல கங்குடி யேற்றிய  பெருமாளே.
368. மோதி யிறுகிவட மேரு வெனவளரு
மோக முலையசைய  வந்துகாயம்
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
மூட மென அறிவு  கொண்டதாலே
காதி வருமியம தூதர் கயிறுகொடு
காலி லிறுகஎனை  வந்திழாதே
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
காண வருவதினி  யெந்தநாளோ
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
யாடு மரனுமிவ  ரொன்றதான
ஆயி யமலைதிரி சூலி குமரிமக
மாயி கவுரியுமை  தந்தவாழ்வே
சோதி நிலவுகதிர் வீசு மதியின் மிசை
தோய வளர்கிரியி  னுந்திநீடு
சோலை செறிவுளவு ராலி நகரில்வளர்
தோகை மயிலுலவு  தம்பிரானே.
பிள்ளையார் பட்டி (விநாயகமலை)
369. சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம  அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம  ஜகதீச
பரமசொ ரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம  உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம  அருள்தாராய்
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல்  முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதானி சாசர
ரிகல்கெட மாவேக நீடயில்  விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு  மடிபேண
மயிலுறை வாழ்வேவி நாயக மலையுறை வேலாம கீதர
வனசர ராதார மாகிய  பெருமாளே.
திருச்செங்கோடு (கொடிமாட செங்குன்றூர்)
370. அன்பாக வந்து உன்றாள்ப ணிந்து
ஐம்பூத மொன்ற  நினையாமல்
அன்பால்மி குந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள்  முலைதானும்
கொந்தேமி குந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற  குழலாரைக்
கொண்டேநி னைந்து மன்பேது மண்டி
குன்றாம லைந்து  அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தாமி குந்த
வம்பார் கடம்பை  யணிவோனே
வந்தேப ணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த  வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தாஎ னும்பொ
செஞ்சேவல்  கொண்டு  வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோட மர்ந்த  பெருமாளே.
371. பந்தாடி யங்கை நொந்தார்ப ரிந்து
பைந்தார்பு னைந்த  குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள்  முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய்  தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற  னருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன்  மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை  மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப  அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோ டமர்ந்த  பெருமாளே.
372. வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
வந்தூரு கொண்ட  லதனோடும்
வண்காம னம்பு தன்கால் மடங்க
வன்போர் மலைந்த  விழிவேலும்
கொண்டே வளைந்து கண்டார் தியங்க
நின்றார் குரும்பை  முலைமேவிக்
கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து
குன்றாம லுன்ற  னருள்தாராய்
பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போ னுகந்த  மருகோனே
பண்சார நைந்து நண்போது மன்பர்
பங்காகி நின்ற  குமரேசா
செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை  மகிழ்வாழ்வே
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோ டமர்ந்த  பெருமாளே.
373. கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல்  மடமாதர்
கலவியல் முழுகிய நெறியினி லறிவுக
லங்காம யங்கும்  வினையேனும்
உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
உன்பாத கஞ்ச  மலர்மீதே
உரவொடு புனைதர நினைதரு மடியரொ
டொன்றாக என்று  பெறுவேனோ
வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
வந்தேற இந்த்ர  புரிவாழ
மதவித கஜரத துரகத பததியின்
வன்சேனை மங்க  முதுமீன
திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
திண்டாட வென்ற  கதிர்வேலா
ஜெகதல  மிடிகெட விளைவன வயலணி
செங்கோட மர்ந்த  பெருமாளே.
374. இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
றிணங்காப் பசிப்பொங்  கனல்மூழ்கி
இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண்  டமிழ்நூலின்
உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன்  கவிபாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன்  புறலாமோ
கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
கணைந்தாட் கணித்திண்  புயமீவாய்
கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
துசெங்கோட் டில்நிற்குங்  கதிர்வேலா
அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
கவிழ்ந்தோர்க் குணற்கொன்  றிலதாகி
அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
கறிந்தோர்க் களிக்கும்  பெருமாளே.
375. கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு  மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி  லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு  முடையேனான்
விடைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென  அருள்வாயே
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய  வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக  முடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர  வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை  பெருமாளே.
376.  துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்கும் காட்டிக்
கொண்ட ணாப்பித் துலக்கம் சீர்த்துத்  திரிமானார்
தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத்  துழலாதே
கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்
கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக்  கிடையாநீ
கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப்  பெறுவேனோ
வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்
பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத்  துடையோனே
வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத்  திளையோனே
கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற்  புணர்வோனே
கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
கொங்குநாட்டுத் திருச்செங்கோட்டுப்  பெருமாளே.
377. நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை
நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
நீள்முகந் தாமரையி  னார்மொழிந் தாரமொழி
நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய
நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி  ரண்டுபோல
நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி
நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
னீலவண் டேவியநல் காமனங் காரநிறை
நேசசந் தான அல்குல் காமபண் டாரமுதை
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர்  சம்பையாரஞ்
சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை
சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி
தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை  யஞ்சியோடத்
தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவகுரு
தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு
சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக  விஞ்சைதாராய்
சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும்  விந்தையோனே
சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை
தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
தோகைபங் காஎனவெ தாகமஞ் சூழ்சுருதி
தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
சோரிகொண் டாறு வரவேலெறிந் தேநடன  முங்கொள்வேலா
மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையா
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி  யொன்றுமானை
மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச
வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி
மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர்
வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ்  தம்பிரானே.
378. பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக்  கறியாமே
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட்  கொடியார்மேல்
துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப்  பதிமீதே
தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத்  தருவாயே
குன்றெ டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச்  சுரலோகா
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டையிட்டுப்  பொரும்வேழம்
சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக்  களிகூருஞ்
செண்ப கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப்  பெருமாளே.
379. மந்தக் கடைக்கண் காட்டுவர்
கந்தக் குழற்பின் காட்டுவர்
மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ  ரநுராக
வஞ்சத் திரக்கங் காட்டுவர்
நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்
வண்பற் றிருப்புங் காட்டுவர்  தனபாரச்
சந்தப் பொருப்புங் காட்டுவர்
உந்திச் சுழிப்புங் காட்டுவர்
சங்கக் கழுத்துங் காட்டுவர்  விரகாலே
சண்டைப் பிணக்குங் காட்டுவர்
பண்டிட் டொடுக்கங் காட்டுவர்
தங்கட் கிரக்கங் காட்டுவ  தொழிவேனோ
பந்தித் தெருக்கந் தோட்டினை
யித்துச் சடைக்கண் சூட்டுமை
பங்கிற் றகப்பன் தாட்டொழு  குருநாதா
பைம்பொற் பதக்கம் பூட்டிய
அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்
பங்கப் படச்சென் றோட்டிய  வயலூரா
கொந்திற் புனத்தின் பாட்டிய
லந்தக் குறப்பெண் டாட்டொடு
கும்பிட் டிடக்கொண் டாட்டமொ  டணைவோனே
குன்றிற் கடப்பந் தோட்டலர்
மன்றற் ப்ரசித்தங் கோட்டிய
கொங்கிற் றிருச்செங் கோட்டுறை  பெருமாளே.
380. மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
நிச்சார் துற்பப்  பவவேலை
விட்டே றிப்போ கொட்டா மற்றே
மட்டே யத்தத்  தையர்மேலே
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
பத்தார் விற்பொற்  கழல்பேணிப்
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
முற்பா லைக்கற்  பகமேதான்
செச்சர லிச்சா லத்தே றிச்சே
லுற்றா ணித்துப்  பொழிலேறுஞ்
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
நித்தா செக்கர்க்  கதிரேனல்
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
முத்தார் வெட்சிப்  புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.
381. வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
மயக்கம் பூண மோதிய  துரமீதே
மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
மரிக்கும் பேர்க ளோடுற  வணியாதே
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
பிறப்புந் தீர வேயுன  திருதாளே
பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
பெலத்தின் கூர்மை யானது  மொழிவாயே
இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு
எதிர்த்துஞ் சூரர் மாளவெ  பொரும்வேலா
இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன
எனத்திண் கூளி கோடிகள்  புடைசூழத்
திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
செழித்தன் பாக வீறிய  பெருவாழ்வே
திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
திருச்செங் கோடு மேவிய  பெருமாளே.
382. ஆல காலப டப்பைம டப்பியர்
ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்
யாவ ராயினு நத்திய ழைப்பவர்  தெருவூடே
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள்
ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர்  பலரூடே
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள்  உறவாலே
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
காம போகவி னைக்குளு னைப்பணி
வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி  லுழல்வேனோ
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு னிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு   அடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள் விடுத்தபி  னவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன்  மருகோனே
ஞான தேசிக சற்குரு உத்தம
வேல வாநெரு வைப்பதி வித்தக
நாக மாமலை சொற்பெற நிற்பதொர்  பெருமாளே.
383. காலனிடத்  தணுகாதே காசினியிற்  பிறவாதே
சீல அகத் தியஞான தேனமுதைத்  தருவாயே
மாலயனுக் கரியானே மாதவரைப்   பிரியானே
நாலுமறைப் பொருளானே நாககிரிப்  பெருமாளே.
384. தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத்  தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத்  தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத்  தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத்  துகலாமோ
காமா காமா தீனா நீணா
காவாய் காளக்  கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக்  கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத்  தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.
385. அத்து கிரினலத ரத்து அலனவள
கத்து வளர்செய்புள  கிதபூத
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு  நெடுமாம
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி  பகராதே
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொணிரை
யத்தி னிடையடிமை  விழலாமோ
தத்து கவனவரி ணத்து வுபநிடவி
தத்து முனியுதவு  மொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப  னிருதோளா
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுணர்  குலநாகந்
தத்த மிசைமரக தத்த மனியமயில்
தத்த விடுமமரர்  பெருமாளே.
386. அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத்  தமராயன்
பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற்  றியவோடும்
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித்  திணிதாய
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப்  பெறுவேனோ
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக்  கரசாய
குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக்  குமரேசா
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத்  திடமேவும்
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப்  பெருமாளே.
387.பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பக்ஷிந டத்திய  குகபூர்வ
பச்சிம தக்ஷிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத  மெனவோதும்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி  தடியேனும்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக  மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி  தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப  னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட  மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்ப கிரிச்சுரர்  பெருமாளே.
388. புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு  மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத  பெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழு  மடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோத  நினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி  மருகோனே
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி  மறையோனே
கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர்  கொடிகோவே
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர்  பெருமாளே.
389. பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்
கச்சிட்டுக் கட்டிப் பத்மப்
புட்பத்துக் கொப்பக் கற்பித்  திளைஞோர்கள்
புட்பட்டுச் செப்பத் துப்பற்
கொத்தப்பொற் றித்தத் திட்பப்
பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத்  தனமானார்
கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்
தத்திற்புக் கிட்டப் பட்டுக்
கைக்குத்திட் டிட்டுச் சுற்றித்  திரியாமல்
கற்றுற்றுச் சித்திக் கைக்குச்
சித்திப்பப் பக்ஷத் திற்சொற்
கற்பித்தொப் பித்துக் கொற்றக்  கழல்தாராய்
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
துக்கச்சத் துக்குக் குக்குக்
குக்குக்குக் குக்குக் குக்குக்  கெனமாறா
குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக்
கக்ஷத்திற் பட்சத் தத்தக்
கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக்  குடதாரி
சற்சித்துத் தொற்புத் திப்பட்
சத்தர்க்கொப் பித்தட் சத்துச்
சத்தத்தைச் சத்திக் கொச்சைப்  பதிவாழ்வே
தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்
செற்பற்றைச் செற்றிட் டுச்சச்
சற்பப்பொற் றைக்குட் சொக்கப்  பெருமாளே.
390. கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடியவ னினதருள் கொடுபொரு  மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை  இருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத  மிசையேறிப்
பழைய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை  வரவேணும்
சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித
தமரு கமிருக தரவனி தரசிர  தரபாரத்
தரணி தரதனு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி
சயில விதரண தருபுர சசிதரு  மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ  நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகில சகலமு மடியவொர் படைதொடு
நிருப குருபர சுரபதி பரவிய  பெருமாளே
கொல்லிமலை
391. கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல  மிதுபேணி
கற்ற விஞ்ஞை சொல்லியுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை  நகைமாதர்
இட்டமெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
யிட்டு பொன்னை யில்லை  யெனஏகி
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
யெற்று மிங்ங னைவ  தியல்போதான்
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள  வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி  மணவாளா
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி  மலைநாடா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல  பெருமாளே.
392. தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த  மெனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க  மெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி  யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பௌவமுற வேநின்ற  தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று  குழலூதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல்  கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை  யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற  பெருமாளே.
உய்யக்கொண்டான் மலை-கற்குடி (ராசகெம்பீர வளநாட்டு மலை)
393. மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு
மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு  கண்டுபோல
மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு
சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு
வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு  மன்றுளாடி
சீகரம் வேணுதுடி தோற்ற இடைகொடு
போகபண் டாரபணி தோற்ற அரைகொடு
தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு  வந்துகாசு
தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற
வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு
சீவனொன் றானபர மார்த்த தெரிசனை  வந்துதாராய்
வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
வீரனென் பானொருப ராக்ர னெனவர  அன்றுசோமன்
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
வீழநன் பாரதியு மூக்கு நழுவிட  வந்தமாயன்
ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்
ஏறிவென் றாடுகள நீக்கி முனிவரர்  வந்துசேயென்
றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
ராஜகெம் பீரவள நாட்டு மலைவளர்  தம்பிரானே.
ஞானமலை
394. சூதுகொலை கார ராசைபண மாதர்
தூவையர்கள் சோகை  முகநீலர்
சூலைவலி வாத மோடளைவர் பாவர்
தூமையர்கள் கோளர்  தெருவூடே
சாதனைகள் பேசி வாருமென நாழி
தாழிவிலை கூறி  தெனவோதி
சாயவெகு மாய தூளியுற வாக
தாடியிடு வோர்க  ளுறவாமோ
வேதமுனி வோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூச  லெனஏகி
வீறசுரர் பாறி வீழஅலை யேழு
வேலையள றாக  விடும்வேலா
நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரியபி ராமி  யருள்பாலா
நாரண சுவாமி யீனுமக ளோடு
ஞானமலை மேவு  பெருமாளே.
395.மனையவள் நகைக வூரி னனைவரு நகைத லோக
மகளிரு நகைக்க தாதை  தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளு  மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம  மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
மணுகிமு னளித்த பாத  மருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருக மறைக்கு ழாமு  மலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதி  முருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி  யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு  பெருமாளே.
ஓதிமலை (ஊதிமலை)
396. ஆதிமக மாயி யம்பை  தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த  குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க  அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க  ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு  மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க  வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த  வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள்  வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த  பெருமாளே.
397. கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
சூது விதத்துக் கிதத்து மங்கையர்
கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில்  நினையாதே
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
கூறு மிடத்துக் கிதத்து நின்றருள்  புரிவாயே
நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
போதக மற்றெச் சகத்தை யுந்தரு
நான்மு கனுக்குக் கிளத்து தந்தையின்  மருகோனே
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள்  வடிவேலா
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ  னிசையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள்  புரிவோனே
ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
காரண பத்தர்க் கிரக்க முந்தகு
ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட  ரொளியோனே
ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
காபர ணத்திற் பொருட் பயன்றரு
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள்  பெருமாளே.
குருடிமலை
398. கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென  வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி  களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன  கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை  யறியேனே
வருடை யினமது முருடு படுமகில்
மரமு மருதமு  மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை  குதிபாயும்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ  மயிலேறும்
குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர்  பெருமாளே.
செஞ்சேரிமலை (தென்சேரிகிரி)
399. எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு
இங்கேவ ருனதுமயல்  தரியாரென்
றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ
என்றாசை குழையவிழி  யிணையாடித்
தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
சந்தேக மறவெபறி  கொளுமானார்
சங்கீத கலவிநல மென்றோது முததிவிட
தண்பாரு முனதருளை  யருள்வாயே
சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
சந்தாரும் வெதிருகுழ  லதுவூதித்
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
தங்கூறை கொடுமரமி  லதுவேறுஞ்
சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
சென்றேயும் அமரருடை  சிறைமீளச்
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
தென்சேரி கிரியல்வரு  பெருமாளே.
400. கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
கண்டாரைச் சிந்து விழிகொடு
கொந்தாரச் சென்ற குழல்கொடு  வடமேருக்
குன்றோடொப் பென்ற முலைகொடு
நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு  பலரோடும்
பண்டாடச் சிங்கி யிடுமவர்
விண்டாலிக் கின்ற மயிலன
பண்பாலிட் டஞ்செல் மருளது  விடுமாறு
பண்டேசொற் றந்த பழமறை
கொண்டேதர்க் கங்க ளறவுமை
பங்காளர்க் கன்று பகர்பொருள்  அருள்வாயே
வண்டாடத் தென்றல் தடமிசை
தண்டாதப் புண்ட ரிகமலர்
மங்காமற் சென்று மதுவைசெய்  வயலூரா
வன்காளக் கொண்டல் வடிவொரு
சங்க்ராமக் கங்சன் விழவுதை
மன்றாடிக் கன்பு தருதிரு  மருகோனே
திண்டாடச் சிந்து நிசிசரர்
தொண்டாடக் கண்ட வமர்பொரு
செஞ்சேவற் செங்கை யுடையசண்  முகதேவே
சிங்காரச் செம்பொன் மதிளத
லங்காரச் சந்த்ர கலைதவழ்
தென்சேரிக் குன்றி லினிதுறை  பெருமாளே.
கொங்கணகிரி (அலைவாய்மலை)
401. ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை  வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன  மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை  முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி  யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ  யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய  அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரøக்ஷபுரி
வந்தணைய  புத்தியினை  யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு  ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர்  பெருமாளே.
தீர்த்த மலை
402. பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
கூற்று வருவழி பார்த்து முருகிலை
பாட்டை யநுதின மேற்று மறிகிலை  தினமானம்
பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல்  வழிபோக
மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ  னிதுகேளாய்
வாக்கு முனதுள நோக்கு மருளுவ
னேத்த புகழடி யார்க்கு மெளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை  மருவாயே
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
னாட்ட மறசர ணீட்டி மதனுடல்  திருநீறாய்
ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
யாட்டின் முகமதை நாட்டி மறைமக
ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ  னருள்பாலா
சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய  குருநாதா
தீர்த்த எனதக மேட்டை யுடனினை
ஏத்த அருளுட னோக்கி அருளுதி
தீர்த்த மலைநகர் காத்த சசிமகள்  பெருமாளே.
கிணத்துக்கடவு (கனக மலை)
403. அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட்
டசடனென மனது நொந்திட்  டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட்
டவநெறியின் விழைவு மொன்றைத்  தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்றஃ
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற்  றகமேவும்
படர்கள்முழு வதும கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற்
பதயுகள மிசைவ ணங்கற்  கருள்வாயே
செருவிலகு மசுரர் மங்கக்
குலகிரிகள் நடுந டுங்கத்
சிலுசிலென வளைகு லுங்கத்  திடமான
செயமுதவு மலர்பொ ருங்கைத்
தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
தியைவிடுதல் புரியு முன்பிற்  குழகோனே
கருணைமொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத்  திருமார்பா
கரிமுகவர் தமைய னென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கனககிரி யிலகு கந்தப்  பெருமாளே.
புகலூர் (புகழிமலை)
404. மருவுலர் வாச முறுகுழலி னாலும்
வரிவிழியி னாலு  மதியாலும்
மலையினிக ரான இளமுலைக ளாலு
மயல்கள்தரு மாதர்  வகையாலும்
கருதுபொரு ளாலு மனைவிமக வான
கடலலையில் மூழ்கி  அலைவேனோ
கமலபத வாழ்வு தரமயிலின் மீது
கருணையுட னேமுன்  வரவேணும்
அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
அமரர்முனி ராசர்  தொழுவோனே
அகிலதல மோது நதிமருவு சோலை
அழகுபெறு போக  வளநாடா
பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை  யெறிவோனே
புகலரிய தான தமிழ்முனிவ ரோது
புகழிமலை மேவு   பெருமாளே.
பூம்பாறை
405. மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக  முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி  உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட  விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலை மாதர்  உறவாமோ
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ  எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன்  மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி  திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையில் மேவு  பெருமாளே.
பிரான்மலை (கொடுங்குன்றம்)
406. அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங்  கண்களாலே
அடர்ந்தெழும்பொன் குன்றங்கும்பங்  கொங்கையாலே
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும்  பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங்கண்டின்  றின்புறாதோ
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந்  தெந்தெனானா
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின்  தும்பிபாடக்
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துங்  துன்றுசோலை
கொழுங்கொ டுந்திண் குன்றங் தங்குந்  தம்பிரானே.
407. எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது
குத்தித்தி றந்துமலை
யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி
முத்தச்செ றிந்தவட
மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி
னிற்கொத்து மங்குசநெ  ருங்குபாகர்
எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப
தைக்கக்க டிந்துமிக
இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு
முட்கத்தி ரண்டிளகி
இளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு
டைத்துச்சி னந்துபொரு  கொங்கையானை
பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி
யொக்கத்து வண்டமளி
புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்
செக்கச்சி வந்தமுது
பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய
முத்தத்து டன்கருணை  தந்துமேல்வீழ்
புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்
தட்டுப்ப டுந்திமிர
புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய
சட்டைக்கு ரம்பையழி
பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி
னிர்த்தச்ச ரண்களைம  றந்திடேனே
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்தெ தெந்ததெத
திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கத்த குந்தகுர்த  திந்திதீதோ
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குக்கு குங்குகுகு  என்றுதாளம்
முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு
டுக்கைப்பெ ரும்பதலை
முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம
கத்திக்க ளும்பரவ
முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய
மிக்கக்க வந்தநிரை  தங்கியாட
முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர
வுக்ரப்பெ ருங்குருதி
முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ
டிக்கத்து ணிந்ததிர
முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி
வெட்டிக்க ளம்பொருத  தம்பிரானே.
குன்றக்குடி
408. அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
அமுத புஞ்ச இன்சொல்  மொழியாலே
அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
டணிச தங்கை கொஞ்சு  நடையாலே
சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
தொடுமி ரண்டு கண்க  ளதனாலே
துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
துயரை யென்றொ ழிந்து  விடுவேனோ
எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
யெதிர டைந்தி றைஞ்சல்  புரிபோதே
இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
மொழிய வென்ற கொண்டல்  மருகோனே
மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
மநுவி யம்பி நின்ற  குருநாதா
வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
மலைவி ளங்க வந்த  பெருமாளே.
409. ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
தந்தத்தி னைத்தடிவ தொந்தத் திரத்தையுள
அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
அம்பொற் பதத்தர்தனு வம்பொற்பொ ருப்படர்வ
களபபரி மளமெழுகும் எழிலில்ழுழு குவமுளரி
யஞ்சப் புடைத்தெழுவ வஞ்சக் கருத்துமத  னபிஷேகங்
கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ
இன்பச் சுடர்க்கனக கும்பத் தரச்செருவ
பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்
புந்திக் கிடர்த்தருவ பந்தித் தகச்சடர்வ
கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்
சங்கிப்பி முத்தணிவ பொங்கிக் கனத்தொளிர்வ  முலைமாதர்
வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத
மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ
னும்புட் குரற்பகர வம்புற்ற மற்புரிய
வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
கன்றிச் சிவக்கமகிழ் நன்றிச் சமத்துநக  நுதிரேகை
வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்
உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற் றணைத்தவதி
செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல்
உந்திப் பிறப்பறநி னைந்திட்ட முற்றுனடி
வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர
துன்றட்டசிட்டகுண குன்றக் குடிக்கதிப  அருளாதோ
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத் தகுத்தககு திங்குத் திகுத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண
சங்கச் சகச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனன
தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன  தனனானா
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத் தகுத்தகுகு திங்குத் திகுத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணிடிணிடிணிணி
டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரி  யெனதாளம்
தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்
தம்பட்ட மத்தளமி னம்பட் டடக்கைபறை
பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை
மண்டைத் திரட்பருகு சண்டைத் திரட்கழுகு
துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென
வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர  முதுபேய்கள்
சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்
வெங்குக் குடத்தகொடி துங்குக் குகுக்குகென
வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி
திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல
துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்
மிண்டைக்குலைத்தமர்செய் தண்டர்க் குரத்தையருள்  பெருமாளே.
410. கடினதட கும்ப நேரென
வளருமிரு கொங்கை மேல்விழு
கலவிதரு கின்ற மாதரொ  டுறவாடிக்
கனவளக பந்தி யாகிய
நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
கனியிதழை மென்று தாடனை  செயலாலே
துடியிடைநு டங்க வாள்விழி
குழைபொரநி ரம்ப மூடிய
துகில்நெகிழ வண்டு கோகில  மயில்காடை
தொனியெழவி ழைந்து கூரிய
கொடுநகமி சைந்து தோள்மிசை
துயிலவச இன்ப மேவுத  லொழிவேனோ
இடிமுரச றைந்து பூசல்செய்
அசுரர்கள்மு றிந்து தூளெழ
எழுகடல்ப யந்து கோவென  அதிகோப
எமபடரு மென்செய் வோமென
நடுநடுந டுங்க வேல்விடு
இரணமுக சண்ட மாருத  மயிலோனே
வடிவுடைய அம்பி காபதி
கணபதிசி றந்து வாழ்தட
வயலிநகர் குன்ற மாநக  ருறைவோனே
வகைவகைபு கழ்ந்து வாசவன்
அரிபிரமர் சந்த்ர சூரியர்
வழிபடுதல் கண்டு வாழ்வருள்  பெருமாளே.
411. நேசா சாரா டம்பர மட்டைகள்
பேசா தேயே சுங்கள மட்டைகள்
நீசா ளோடே யும்பழ கிக்கவர்  பொருளாலே
நீயே நானே யென்றொரு சத்தியம்
வாய்கூ சாதோ துங்க படத்திகள்
நேரா லேதா னின்றுபி லுக்கிகள்  எவர்மேலும்
ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ
காயே மீதோ லெங்கு மினுக்கிகள்  வெகுமோகம்
ஆகா தாவே சந்தரு திப்பொழு
தோகோ வாவா வென்று பகட்டிக
ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு  முறவாமோ
பேசா தேபோய் நின்றுநி யிற்றயிர்
வாயா வாவா வென்று குடித்தருள்
பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர்  வருதூது
பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு
பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன்  மருகோனே
மாசூ டாடா டும்பகை யைப்பகை
சூரா ளோடே வன்செரு வைச்செறு
மாசூ ராபா ரெங்கும ருட்பொலி  முருகோனே
வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
தேனா றேசூழ் துங்க மலைப்பதி
மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள்  பெருமாளே.
412. பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
பருவம தன்கைச்  சிலையாலே
பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
பெருவழி சென்றக்  குணமேவிச்
சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
செயலும ழிந்தற்  பமதான
தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
சிலசில பங்கப்  படலாமோ
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
கிலுமெதிர் சண்டைக்  கெழுசூரன்
கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
கிழிபட துன்றிப்  பொருதோனே
குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
பனமநு வுஞ்சொற்  குருநாதா
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
குடிவளர் கந்தப்  பெருமாளே.
413. தவள மதிய மெறிக்குந்  தணலாலே
சரச மதனன் விடுக்குங்  கணையாலே
கவன மிகவு முரைக்குங்  குயிலாலே
கருதி மிகவு மயக்கம்  படவோநான்
பவள நிகரு மிதழ்ப்பைங்  குறமானின்
பரிய வரையை நிகர்க்குந்  தனமேவும்
திவளு மணிகள் கிடக்குந்  திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண்  பெருமாளே.
414. நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
நாடோறு மதிகாயும்  வெயிலாலும்
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
நாடாசை தருமோக  வலையூடே
ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
லேவாரும் விழிமாதர்  துயரூடே
ஏகாம லழியாத மேலான பதமீதி
லேகீயு னுடன்மேவ  அருள்தாராய்
தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
தானேறி விளையாடு  மொருபோதில்
தாயாக வருசோதை காணாது களவாடு
தாமோத ரன்முராரி  மருகோனே
மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
மாலாகி விளையாடு  புயவீரா
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழு
மாயூர கிரிமேவு  பெருமாளே.
பொதிகைமலை (பொதியமலை)
415. மைக்க ணிக்கன் வாளி போல
வுட்க ளத்தை மாறி நாடி
மட்டி முற்ற கோதை போத  முடிசூடி
மத்த கத்தி னீடு கோடு
வைத்த தொத்தின் மார்பி னூடு
வட்ட மிட்ட வாரு லாவு  முலைமீதே
இக்கு வைக்கு மாடை வீழ
வெட்கி யக்க மான பேரை
யெத்தி முத்த மாடும் வாயி  னிசைபேசி
எட்டு துட்ட மாதர் பாய
லிச்சை யுற்றெ னாக மாவி
யெய்த்து நித்த மான வீன  முறலாமோ
துர்க்கை பக்க சூல காளி
செக்கை புக்க தாள வோசை
தொக்க திக்க தோத தீத  வெனவோதச்
சுற்றி வெற்றி யோடு தாள்கள்
சுத்த நிர்த்த மாடு மாதி
சொற்கு நிற்கு மாறு தார  மொழிவோனே
திக்கு மிக்க வானி னூடு
புக்க விக்க மூடு சூரர்
திக்க முட்டி யாடு தீர  வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப
விச்சை கொச்சை மாதி னோடு
செப்பு வெற்பில் சேய தான  பெருமாளே.
416. வெடித்த வார்குழல் விரித்து வேல்விழி
விழித்து மேகலை பதித்து வார்தொடு
மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம  ருங்கினாடை
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை
துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
மிரட்டி யாரைபு மழைத்து மால்கொடு  தந்தவாய்நீர்
குடித்து நாயென முடக்கு மேல்பிணி
யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்
குலத்தர் யாவரு நகைக்க வேயுடல்  மங்குவேனைக்
குறித்து நீயரு கழைத்து மாதவர்
கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
கொடுத்து வேதமு மொருத்த னாமென  சிந்தைகூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென
திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுவி  ரங்குபோரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை
யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ  ரும்பராரை
அடைத்த மாசிறை விடுத்து வானுல
களிக்கு மாயிர திருக்க ணானர
சளித்து நாளுமெ னுளத்தி லேமகி  ழுங்குமாரா
அளித்த தாதையு மிகுத்த மாமனும்
அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்
அகத்ய மாமுனி பொருப்பின் மேவிய  தம்பிரானே.
கழுகுமலை
417. குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
கொடிது கொடிததால் வருத்த மாயுறு  துயராலே
மதலை மறுகிலா லிபத்தி லேவெகு
பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி  முடியாதே
முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
மடிய அயிலையே விடுத்த வாகரு
முகிலை யனையதா நிறத்த மால்திரு  மருகோனே
கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
யிசையை முரலமா வறத்தில் மீறிய
கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய  பெருமாளே.
418. முலையை மறைத்துத் திறப்ப ராடையை
நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ்
முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல  ரணைமீதே
அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர்
மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி
தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக  ளுறவாமோ
தலைமுடி பத்துத் தெறித்து ராவண
னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
தனுவை வளைத்துத் தொடுத்த வாளியன்  மருகோனே
கலைமதி யப்புத் தரித்த வேணிய
ருதவிய வெற்றித் திருக்கை வேலவ
கழுகு மலைக்குட் சிறக்க மேவிய  பெருமாளே.
419. கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப
மேந்து குவடு குழையும்  படிகாதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய
தேங்கு கலவி யமுதுண்  டியல்மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்
வாய்ந்த துயிலை மிகவுந்  தணியாத
வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை
நீந்தி அமல அடிவந்  தடைவேனோ
ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர
மோங்கு ததியின் முழுகும்  பொருசூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாயந்த குருகு மலையில்
ஊர்ந்து மயில துலவுந்  தனிவேலா
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
வேங்கை வடிவு மருவுங்  குமரேசா
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
வேண்டு மளவி லுதவும்  பெருமாளே.
வள்ளியூர்
420. அல்லில் நேருமி  னதுதானும்
அல்ல தாகிய  உடல்மாயை
கல்லி னேரஅ வழிதோறுங்
கையு நானுமு   லையலாமோ
சொல்லி நேர்படு  முதுசூரர்
தொய்ய வூர்கெட  விடும்வேலா
வல்லி மாரிரு   புறமாக
வள்ளி யூருறை  பெருமாளே.
ஸ்ரீலங்கா (கதிர்காமம்)
421. திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப்  பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப்  பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப்  பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப்  பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப்  பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப்  பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப்  பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப்  பெருமாளே.
422. அலகின் மாறு மாறத கலதி பூத வேதாளி
அடைவில் ஞானி கோமாளி  அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளி லாத தோடோய  மருளாகிப்
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு  வெனயாதும்
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத  படிபாராய்
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரில்
எறியும் வேலை மாறாத  திறல்வீரா
இமய மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர்  சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
கதிர காம மூதூரி  லிளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.
423. உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய்  யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ்  வகையாவும்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலோடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி  ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ  தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சில தூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக  வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும்  வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
வரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு  வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய  பெருமாளே.
424. எதிரி லாத பத்தி  தனைமேவி
இனிய தாணி னைப்பை  யிருபோதும்
இதய வாரி திக்கு  ளுறவாகி
எனது ளேசி றக்க  அருள்வாயே
கதிர காம வெற்பி  லுறைவோனே
கனக மேரு வொத்த  புயவீரா
மதுர வாணி யுற்ற  கழலோனே
வழுதி கூனி மிர்த்த  பெருமாளே.
425. கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம்  மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம்  புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந்  தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன்  றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென்  றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண்  டருள்வாழ்வே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண்  டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினும்
ஏழைக் கிரங்கும்  பெருமாளே.
426. சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய வீதிக்குள்  மயில்போலு லாவியே
சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்கு பாசுத்தர்
தமையுணர ராகத்தின்  வசமாக மேவியே
உமதடியு னாருக்கு மனுமரண மாயைக்கு
முரியவர் மகாதத்தை  யெனுமாய மாதரார்
ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
முனதருள்க்ரு பாசித்த  மருள்கூர வேணுமே
இமகிரிகு மாரத்தி யனுபவைப ராசத்தி
யெழுதரிய காயத்ரி  யுமையாள்கு மாரனே
எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
இதணகுரு சேவிக்கு  முருகாவி சாகனே
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
மதிகவித சாமார்த்ய  கவிராஜ ராஜனே
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
அரியகதிர் காமத்தி  லுரியாபி ராமனே.
427. சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே  வருசூரைச்
சரிப்போ னமட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா  னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தோ குவித்தாய்
செகுத்தாய் பலத்தார்  விருதாகச்
சிறைச்சே வல்பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா  ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே  வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார்  வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர்  மதனாரைக்
கரிக்கோ லமிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்கா மமுற்றார்  முருகோனே.
428.சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட்  டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற்  பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற்  பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசொரூ பத்தையுற்  றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக்  ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக்  கருள்வோனே
கரியபூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள்பீ றிப்புசித்  தமராடிக்
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கரிப்  பெருமாளே.
429. பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
யோதர நெருக்குற்ற  இடையாலே
பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற்பொத்தி  விடுமாதர்
காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த
காதில்முக வட்டத்தி  லதிமோக
காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த
கால்களைம றக்கைக்கும்  வருமோதான்
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு  ரத்திற்றெ
சாசிரனை மர்த்தித்த  அரிமாயன்
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்னத்ரி
கோணசயி லத்துகர  கதிர்காம
வீரபுன வெற்பிற்க லாபியெபி னச்சிக்கு
மேகலை யிடைக்கொத்தி  னிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களி லகப்பட்ட  பெருமாளே.
430. மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு  மதனாலும்
மதில்கள் வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு  மதனாலும்
இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த  மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க  வரவேணும்
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர  மணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி  லுறைவோனே
முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை  மயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட  பெருமாளே.
431. மாதர்வச மாயுற்  றுழல்வாரும்
மாதவமெ ணாமற்  றிரிவாரும்
தீதகல வோதிப்  பணியாரும்
தீநகர மீதிற்  றிகழ்வாரே
நாதவொளி யேநற்  குணசீலா
நாரியிரு வோரைப்  புணர்வேலா
சோதிசிவ ஞானக்  குமரேசா
தோமில்கதிர் காமப்  பெருமாளே.
432. முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
முனியு மார வார முற்ற  கடலாலே
முடிவி லாத தோர் வடக்கி லெரியு மால மார்பி டத்து
முழுகி யேறி மேலெ றிக்கு  நிலவாலே
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
வினைவி டாத தாய ருக்கு  மழியாதே
விளையு மோக போக முற்றி அளவிலாத காதல்பெற்ற
விகட மாதைநீ யணைக்க  வரவேணும்
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
கடவு ளேக லாப சித்ர  மயில்வீரா
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொ ருத்தி  மணவாளா
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
அரிய ஞான வாச கத்தை  யருள்வோனே
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
அமரர் லோகம் வாழ வைத்த  பெருமாளே.
433. வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று  தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்து  அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து  விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன்  முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த  குமரேசா
பதிகள்பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காணவந்த  கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர்சடை யாளர்  தந்த  முருகோனே
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்மமை யாள வந்த  பெருமாளே.
ஸ்ரீலங்கா (அருக்கொணாமலை)
434. தொடுத்த வாளென விழித்து மார்முலை
யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல்  கொளுமாதர்
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு  வழியேபோய்ப்
படுத்த பாயலி லணைத்து மாமுலை
பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
கடித்து நாணம தழித்த பாவிகள்  வலையாலே
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
வெளுத்து வாய்களு மலத்தி னாயென
பசித்து தாகமு மெடுத்தி டாவுயி  ருழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன்  மருகோனே
விதித்து ஞாலம தளித்த வேதனை
யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
விழித்து காமனை யெரித்த தாதையர்  குருநாதா
அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
நடுக்க மாமலை பிளக்க வேகவ
டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு  மயில்வீரா
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடணி குறத்தி யானையொ
டருக்கொ ணாமலை தருக்கு லாவிய  பெருமாளே.
ஸ்ரீலங்கா (திருக்கோணமலை)
435. விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ  மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு  கொடியேனைக்
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு  மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள்  தரவேணும்
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்பமாதொரு குறப்பாவை யாள்மகிழ்  தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுனி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு  முருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்  வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி  பெருமாளே.
பல தலங்கள் - பொது குன்றுதோறாடல்
436. அதிருங் கழல்ப ணிந்து  னடியேனுன்
அபயம் புகுவ தென்று  நிலைகாண
இதயந் தனிலி ருந்து  க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க  அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி  நடமாடும்
இறைவன் தனது பங்கி  லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து  விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த  பெருமாளே.
437. எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில்  வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ  தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு  முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ  தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள  மிகவரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக  குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய  முறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யுடைய  பெருமாளே.
438. தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிரு  கொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம  யங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
பவன பூரக வேகிக மாகிய  விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம்  வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபர  அம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு  றிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயக  எங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாலையு மேவிய  தம்பிரானே.
439. வஞ்சக லோப மூடர் தம்பொரு ளுர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது  பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி  லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர  முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ  லருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு  சமண்மூகர்
பண்பறு பீல யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு  தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி  வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதொ றாடல் மேவு  பெருமாளே.
440. வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கணா ரார வாரமு  மருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு  விலைமாதர்
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு  மெலியாதே
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை  யருள்வாயே
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர்  சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர  முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றைய னாளு மேமகிழ்  புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய  பெருமாளே.
ஆறாம்படை வீடு - சோலைமலை (பழமுதிர்சோலை)
441. அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி  அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி  அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி  வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி  வரவேணும்
மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும்  வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம  முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு  மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு  பெருமாளே.
442. இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார
இளநகை யாட ஆடி  மிகவாதுற்
றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால
இணைமுலை மார்பி லேற  மதராஜன்
கலவியி லோடி நீடு வெகுவித தாக போக
கரணப்ர தாப லீலை  மடமாதர்
கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது
கருதிய ஞான போத  மடைவேனோ
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி
குலிசகு டாரி யாயி  மகமாயி
குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
குணவதி யால வூணி  யபிராமி
பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக
பதிவ்ரதை வேத ஞானி  புதல்வோனே
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர
பழமுதிர் சோலை மேவு  பெருமாளே.
443. காரணம தாக வந்து  புவிமீதே
காலனணு காதி சைந்து   கதிகாண
நாரணனும் வேதன் முன்பு  தெரியாத
ஞானநட மேபு ரிந்து  வருவாயே
ஆரமுத மான தந்தி  மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு  விழியோனே
சூரர்கிளை மாள வென்ற  கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற  பெருமாளே.
444. சீலமுள தாயர் மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு  தடுமாறித்
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று  தெருவூடே
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை  மெலியாமல்
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு  புரிவாயே
சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன்  மணிமேடை
சேருமம ரேசா தங்க ளுரிதென வாழ்வு கந்த
தீரமிகு சூரை வென்ற  திறல்வீரா
ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை  களிகூர
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த  பெருமாளே.
445. வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
வேல்விழியி னான்ம யங்கி  புவிமீதே
வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்
வேலைசெய்து மால்மி குந்து  விரகாகிப்
பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு
பாதகனு மாகி நின்று  பதையாமல்
பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை
பாதமலர் நாடி யென்று  பணிவேனோ
பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்
பூவையரு ளால்வ ளர்ந்த  முருகோனே
பூவுல கெலாமடங்க வோரடியி னால ளந்த
பூவைமடி வானு கந்த  மருகோனே
சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
தூள்கள்பட நீறு கண்ட  வடிவேலா
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
சோலைமலை மேல மர்ந்த  பெருமாளே.
446. வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
மால்வரை யசைந்த நங்கன்  முடிசாய
வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்து
மாதவ மறந்து றந்து  நிலைபேரப்
பூரண குடங்க டிந்து சீதகள பம்பு னைந்து
பூசலை விரும்பு கொங்கை  மடவார்தம்
போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து
பூசனைசெய் தொண்ட னென்ப  தொருநாளே
ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
ஆகுதி யிடங்கள் பொங்கு  நிறைவீதி
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு  துறைசேரத்
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
சூழ்மணிபொன் மண்ட பங்கள்  ரவிபோலச்
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த  பெருமாளே.
447. ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு  மிந்துவாகை
ஆர முணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின்  விந்துநாத
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிரு  நந்தியூடே
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை  யின்றுதாராய்
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகை விதத்தருண  செங்கையாளீ
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரெழுபி றப்பையும றப்பையும  தந்தவாழ்வே
காசி ராமொசுரம் ரத்னகிரி சர்ப்பகிரி
ஆருர் வேலுர்தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல்  செந்தில்நாகை
காழி வேளுர்பழ நிக்கரிகு றுக்கைதிரு
நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ்  தம்பிரானே.
448. கருவாகியெ தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு
கனிவாய்விழி நாசியு டற்செவி  நரைமாதர்
கையிலேவிழ வேகிய ணைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினி  லினிதாகித்
தருதாரமு மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
சதமாமிது தானென வுற்றுனை  நினையாத
சதுராயுன தாளிணை யைத்தொழ
அறியாதநிர் மூடனை நிற்புகழ்
தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ  தொருநாளே
செருவாயெதி ராமசு ரத்திரள்
தலைமூளைக ளோடுநி ணத்தசை
திமிர்தாதுள பூதக ணத்தொடு  வருபேய்கள்
திகுதாவுண வாயுதி ரத்தினை
பலவாய்நரி யோடுகு டித்திட
சிலகூகைகள் தாமுந டித்திட  அடுதீரா
அருமாமறை யோர்கள்து தித்திடு
புகர்வாரண மாதுத னைத்திகழ்
அளிசேர்குழல் மேவுகு றத்தியை  அணைவோனே
அழகானபொன் மேடையு யர்த்திடு
முகில்தாவிய சோலைவி யப்புறு
அலையாமலை மேவிய பக்தர்கள்  பெருமாளே.
449. சீர்சி றக்கு மேனி பசேல் பசேலென
நூபு ரத்தி னோசை கலீர் கலீரென
சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேலென  வருமானார்
சேக ரத்தின் வாலை சிலோர் சிலோர்களு
நூறு லக்ஷ கோடி மயால் மயால்கொடு
தேடி யொக்க வாடி யையோ வையோவென  மடமாதர்
மார்ப டைத்த கோடு பளீர் பளீரென
ஏம லித்தெ னாவி பகீர் பகீரென
மாம சக்தி லாசை யுளோ முளோமென  நினைவோடி
வாடை பற்று வேளை அடா அடாவென
நீம யக்க மேது சொலாய் சொலாயென
வாரம் வைத்த பாத மிதோ இதோவென  அருள்வாயே
பார தத்தை மேரு வெளீ வெளீதிகழ்
கோடொ டித்த நாளில் வரைஇ வரைஇபவர்
பானி றக்க ணேசர் குவா குவாகனர்  இளையோனே
பாடன் முக்ய மாது தமீழ் தமீழிறை
மாமு னிக்கு காதி லுணார் வுணர்விடு
பாச மற்ற வேத குரூ குரூபர  குமரேசா
போர்மி குத்த சூரன் விடோம் விடோமென
நேரெ திர்க்க வேலை படீர் படீரென
போய றுத்த போது குபீர் குபீரென  வெகுசோரி
பூமி யுக்க வீசு குகா குகாதிகழ்
சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தொள்
பூணி யிச்சை யாறு புயா புயாறுள  பெருமாளே.
450. துடிகொ ணோய்க ளோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இரும லீளை வாத பித்த  மணுகாமல்
துறைக ளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமு ளாநு பூதி பெற்று  மகிழாமே
உடல்செய் கோர பாழ்வ யிற்றை
நிகமு முணி னாலு யர்த்தி
யுயிரி னீடு யோக சித்தி  பெறலாமே
உருவி லாத பாழில் வெட்ட
வெளியி லாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்ம  முறுவேனோ
கடிது லாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி  யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி
தலைக ளாறு நாலு பெற்ற
அவனை வாளி யால டத்தன்  மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவ தாக ஆடு நிர்த்த  மயில்வீரா
முனிவர் தேவர் ஞான முற்ற
புனித சோலை மாம லைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற  பெருமாளே.
451. பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்
பாரப் பூதர மொத்தத னத்திகள்  மிகவேதான்
பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்
சீவிக் கோதிமு டித்தள கத்திகள்
பார்வைக் கேமய லைத்தரு துட்டிக  ளொழியாத
மாசுற் றேறிய பித்தளை யிற்பணி
நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்
மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள்  அதிமோக
வாய்வித் தாரமு ரைக்கும் பத்திகள்
நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்
மாயைக் கேமனம் வைத்தத னுட்டின  மலைவேனோ
தேசிக் கானக முற்றதி னைப்புன
மேவிக் காவல்க வட்கல் சுழற்றுவள்
சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள்  மணவாளா
தேடிப் பாடிய சொற்புல வர்க்கித
மாகத் தூதுசெ லத்தரில் கற்பக
தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி  வருவோனே
ஆசித் தார்மன திற்புகு முத்தம
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி  படுவோனே
டாரத் தோடகி லுற்றத ருக்குல
மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய
ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ்  பெருமாளே.
452. வாதினை அடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயம தொழிந்து  தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபத மணிந்து  பணியேனே
ஆதிமொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று  தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப  தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானில மலைந்து  திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று  தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து  எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற  பெருமாளே.
453. வார்குழையை யெட்டி வேளினைமருட்டி
மாயநம னுக்கு  முறவாகி
மாதவம ழித்து லீலைகள் மிகுத்து
மாவடுவை யொத்த  விழிமாதர்
சீரும் னழைந்து வாய்கனிவு வைத்துத்
தேனித ழனித்து  அனுபோக
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து
சீர்மைகெட வைப்ப  ருறவாமோ
வாரினை யறுத்து மேருவை மறித்து
மாகனக மொத்த  குடமாகி
வாரவனை வைத்து மாலளித முற்று
மாலைகளு மொய்த்த  தனமாது
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
தோகையுமை பெற்ற  புதல்வோனே
சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து
சோலைமலை யுற்ற  பெருமாளே.
454. அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
விழிகள் கடையினை புரட்டிக் காட்டி
அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி  அனுராக
அவச இதமொழி படித்துக் காட்டி
அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி
அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி  யணியாரம்
ஒழுகு இருதன மசைத்துக் காட்டி
எழுத வரியிடை வளைத்துக் காட்டி
உலகு முடைதனை நெகிழ்த்துக் காட்டி  யுறவாடி
உருகு கடிதட மொளித்துக் காட்டி
உபய பரிபுர பதத்தைக் காட்டி
உயிரை விலைகொளுமவர்க்குத் தேட்டம்  ஒழிவேனோ
முழுகு மருமறை முகத்துப் பாட்டி
கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட
முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு  முனிநாடா
முடுகு முதலையை விரித்துக் கோட்டி
அடியர் தொழமக வழைத்துக் கூட்டி
முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட  முதுநீதர்
பழைய கடகட முகத்துக் கோட்டு
வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு  பரமேசர்
பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
குமர குலமலை யுயர்த்திக் காட்டு
பரிவொ டணிமயல் நடத்திக் காட்டு  பெருமாளே.
455. தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத்  தடுமாறித்
தடிகொடு கத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப்  பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளிய வடித்துத் துய்த்துடல் செத்திட்  டுயிர்போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்செக் குப்பர முத்திக்  கருள்தாராய்
கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகந டத்தித் திட்டென எட்டிப்  பொருசூரன்
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்
களிமயி லைச்சித் ரத்திந டத்திப்  பொருகோவே
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற்  றிரிவோனே
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்
குலகிரி யிற்புக் குற்றுறை யுக்ரப்  பெருமாளே.
456. மலரனை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
மணபரி மளங்கள் வேர்வை  யதனோடே
வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க
வனைகலை நெகிழ்ந்து போக  இளநீரின்
முலையினை ததும்ப நூலின் வகிரிடைசுழன்று வாட
முகமுகுமொ டொன்ற பாய  லதனூடே
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு
முடிவடிவொ டங்கை வேலு  மறவேனே
சிலைநுத விளம்பெண் மோகி சடையழகி யெந்தைபாதி
திகழ்மர கதம்பொன் மேனி  யுமைபாலா
சிறுநகை புரிந்து சூரர் கிரிகெட லெரிந்து போக
திகழயி லெறிந்த ஞான  முருகோனே
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
குணவலர் கடம்ப மாலை  யணிமார்பா
கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு  பெருமாளே.
ஆறு திருப்பதி
457. அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள்  விரகாலே
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள்  அநியாயக்
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட  னினிதாகக்
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி  யருள்வாயே
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவேஅருள்  குருநாதா
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு  மதிசூரா
தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண  நினைவாகா
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய  பெருமாளே.
458. ஈனமிகுத் துளபிறவி  யணுகாதே
யானுமுனக் கடிமையென  வகையாக
ஞானஅருட் டனையருளி  வினைதீர
நாணமகற் றியகருணை  புரிவாயே
தானதவத் தினின்மிகுதி  பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ  முருகோனே
ஆனதிருப் பதிகமரு  ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர்  பெருமாளே.
பஞ்ச பூத தலங்கள்
1. காஞ்சி புரம்  (பிருதிவி )
459. அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்
கணைதருஞ்செச்சைப் பொற்புயனத்தன்  குறவாணர்
அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்
டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன்  குமரேசன்
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்
துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துண்  புகழ்பாடிச்
சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்
துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்
தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும்  படிபாராய்
கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்
கடவுளும் பத்மத் தச்சனு முட்கும்  படிமோதிக்
கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்
கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன்  றபிராமி
பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்
பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன்  செவிபோயப்
பனவிபங் கப்பட் டப்படி வெட்கும்
படிமுனிந் தற்றைக் கொற்றம் விளைக்கும்
பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.

460. கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்
கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும்  பொடியாகக்
கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்
கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும்  புவியோர்போய்
குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்
குமுணனென் றொப்பிட் டித்தனை பட்டிங்  கிரவான
குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்
குலவியுங் கத்தப் பட்டக லக்கந்  தெளியாதோ
சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
தனிபெருங் கற்புச் சக்ரந டத்துந்
தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ்  சுடவேவெஞ்
சமரசண் டக்கொற்  றத்தவ ரக்கன்
கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்
தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங்  களைவோனும்
தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
சசிதரன் திக்குக் கத்தர கத்யன்
திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன்  திரள்வேதஞ்
செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்
சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.
461. செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்
சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந்  தவிகாரம்
திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
செனனபங் கத்துத் துக்கக டற்கண்
திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங்  கரணாதி
குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
குடிலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்
குகைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந்  தடுமாறும்
குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்
குணமடைந் துட்பட் டொக்க இருக்கும்  படிபாராய்
படிதருங் கற்புக் கற்பக முக்கண்
கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்
பணிநிதம் பத்துச் சத்தி யுகக்குங்  குமரேசா
பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்
பரமர்வந் திக்கத் தக்க பதத்தன்  குருநாதா
தொடியிடும் பத்மக் கைக்கு மிடைக்குஞ்
சுருள்படும் பத்திப் பட்ட குழற்குந்
துகிர்கடைந் தொப்பித் திட்ட இதழ்க்குங்  குறமானின்
சுடர்படுங் கச்சுக் கட்டு முலைக்குந்
துவளுநெஞ் சத்தச் சுத்த இருக்கும்
சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.
462. கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்
றசுரர்தண் டத்தைச் செற்ற விதழ்ப்பங்
கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும்  பரையாளுங்
கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்
பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்
கரதலம் பற்றப் பெற்ற வொருத்தன்  ஜகதாதை
புனவிளந் தத்தைக் கிச்சை யுரைக்கும்
புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்
புதியவன் செச்சைப் புட்ப மணக்கும்  பலபாரப்
புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்
பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்
பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம்  பெறுவேனோ
அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்
பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்
பணிதருஞ் சித்ரத் தொற்றை யுரத்தன்   திடமாக
அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண்  டவனீடுந்
தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
தசமுகன் கைக்குக் கட்க மளிக்கும்  பெரியோனும்
தலைவியும் பக்கத் தொக்க விருக்குஞ்
சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்
தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.
463. தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும்
பரிதிகந் தச்சைச் சுற்ற நடத்துஞ்
சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங்  கையில்வாழுஞ்
சிறுவனென் றிச்சைப் பட்டு பஜிக்கும்
படிபெறும் பத்திச் சித்ர கவித்வஞ்
சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம்  பிறவாதே
பரிகரஞ் சுற்றத் தக்கப்ர புத்வம்
பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்
பலவையும் கற்றுத் தர்க்க மதத்வம்  பழியாதே
பரபதம் பற்றப் பெற்ற எவர்க்கும்
பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்
பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென்  துயர்போமோ
சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்
பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்
தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந்  திரிசூலந்
தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்
தரியரும் பிக்கப் பித்தத னத்தந்
தரிசுரும் பிக்குப் பத்தையெ வர்க்குந்  தெரியாத
பெரிய பண்டத்தைச் சத்திய பித்தன்
பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்
ப்ரபையள்தண் டிற்கைப் பத்ம மடப்பெண்  கொடிவாழ்வே
பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்
பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்
பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.
464. புனமடந் தைக்குத் தக்க புயத்தன்
குமரனென் றெத்திப் பத்தர் துதிக்கும்
பொருளைநெஞ்சத்துக் கற்பனைமுற்றும்  பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந்  தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன்  செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைமணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென்  றருள்வாயே
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்குந்  திருவாயன்
கவள துங் கக்கைக் கற்பக முக்கண்
திகழுநங் கொற்றத் தொற்றை மருப்பன்
கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன்  றனையீனும்
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண்  பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்ப நிறுத்தும்
பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.
465. கறையிலங் குக்ரச் சத்தி தரிக்குஞ்
சரவணன் சித்தத் துக்கு ளொளிக்குங்
கரவடன் கொற்றக் குக்குட வத்தன்  தனிவீரக்
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
கடகவஞ் சிக்குக் கர்த்த னெனச்செந்  தமிழ்பாடிக்
குறையிலன் புற்றுக்  குற்றம றுக்கும்
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன்  றிலதான
குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
குருபதஞ் சித்திக் கைக்கருள்சற்றுங்  கிடையாதோ
பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன்
பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங்  கயவாவி
திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின்  திருவான
தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
சிறுவதொண் டர்க்குச் சித்தியளிக்கும்  பெருமாளே.
466. செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்ற விருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்ற தனிச்செஞ்  சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்ட வனைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்று மயக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்பத மொக்கும்  படிநாடும்
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள நிற்கும்  பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும்பக்வத்தைத்தமியெற்கென்  றருள்வாயே
குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கச் சத்யமி ழற்றுஞ்  சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்க முரைக்குங்
கனகனங் கத்திற் குத்தி நிணச்செங்
குடர்பிடுங் கித்திக் குற்ற முகச்சிங்  கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன்  ஜகதாதை
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்ற மடப்பெண்
புகலுகொண் டற்குச் சித்தி யளிக்கும்  பெருமாளே.
467. அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்
றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங்  கொருகோடி
அலகைநின் றொத்தித் தித்தி யறுத்தும்
பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்
தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்  படிபாடிப்
பரிமுகங் கக்கச் செக்கண் விழித்தும்
பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்
படுகளம் புக்குத் தொக்கு நடிக்கும்  படிமோதிப்
படைபொருஞ் சத்திப் பத்ம நினைத்துஞ்
சரவணன் கச்சிப் பொற்ப னெனப்பின்
பரவியுஞ் சித்தத் துக்கு வரத்தொண்  டடைவேனோ
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
சிறியவஞ் சிக்கொத் தெய்த்த நுசுப்பும்
ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங்  குரலாதி
பிரிவில்கண் டிக்கப் பட்ட வுருட்டும்
கமுகமுஞ் சிற்பச் சித்ர முருக்கும்
பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந்  தியும்நீலக்
கரியகொண் டற்கொப் பித்த கதுப்புந்
திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்
கனவடங் கட்டப் பட்ட கழுத்துந்  திருவான
கருணையுஞ் சுத்தப் பச்சை வனப்புங்
கருதுமன் பர்க்குச் சித்தி யளிக்குங்
கவுரியம் பைக்குப் புத்ர எவர்க்கும்  பெருமாளே.
468. கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
கதிரையுஞ் சொற்குட்பட்ட திருச்செந்  திலும்வேலும்
கனவிலுஞ் செப்பத் தப்பு மெனைச்சங்
கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண்  சுழல்வேனைப்
புனிதனம் பைக்குக் கைத்தல ரத்னம்
பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென்  றுருகாஎப்
பொழுதும்வந்திக்கைக் கற்ற எனைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன்  றுளதோதான்
அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந்  தளபாரை
அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்
பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின்  பொலமேருத்
தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
றிணைசுமந் தெய்க்கப் பட்ட நுசுப்பின்
தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம்  பையினூடே
தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்
டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்
தலைவிபங் கர்க்குச் சத்ய முரைக்கும்  பெருமாளே.
469. தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
சரியவெண் கொக்குக் கொக்க நரைத்தந்
தலையுடம் பெய்த்தெற் புத்தளைநெக்கிந்  த்ரியமாறித்
தடிகொடுந் திக்குத் தப்ப நடக்கும்
தளர்வுறுஞ் சுத்தப் பித்த விருத்தன்
தகைபெறும் பற்கொத் துக்களனைத்துங்  கழலாநின்
றசலருஞ் செச்செச் செச்செ யெனச்சந்
ததிகளும் சிச்சிச் சிச்சி யெனத்தங்
கரிவையும் துத்துத் துத்து வெனக்கண்  டுமியாமற்
றவருநிந் திக்கத் தக்க பிறப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ர மணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடைதற்கென்  றருள்வாயே
குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்
குரகதங் கட்டிக் கிட்டி நடத்துங்  கதிர்நேமிக்
குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்
டிரிபுரஞ் சுட்டுக் கொட்டை பரப்புங்
குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங்  கதிர்வேலா
திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
சிகரியுஞ் குத்துப் பட்டு விழத்தென்
டிரையலங் கத்துப் புக்குல விச்சென்  றெதிரேறிச்
சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்
சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும்  பெருமாளே.
470. புரைபடுஞ் செற்றக் குற்ற மனத்தன்
தவமிலன் சுத்தச் சத்ய அசத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந்  துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்  கொடியேனின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்  கதிர்வேலுங்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
கனவிலுஞ் சித்தத் திற்கருதிக்கொண்  டடைவேனோ
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென்  றொருநேமிக்
குவடொதுங் கச்சொர்க் கத்த ரிடுக்கங்
கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங்  குடியேறத்
தரைவிசும் பைச்சிட் டித்த இருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம்  பகையோடத்
தகையதண் டைப்பொற் சித்ர விசித்ரந்
தருசதங் கைக்கொத் தொத்து முழக்குஞ்
சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும்  பெருமாளே.
471. சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
சகலவி னைக்கொத் திருந்தி டும்படி
சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு  தந்தைதாயும்
தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
லுறையு முயிர்ப்பைச் சமன்து ரந்தொரு
தனியி லிழுக்கப் படுந்த ரங்கமும்  வந்திடாமுன்
பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
படியு நெளிக்கப் படர்ந்த வன்கண
படமயில் புக்குத் துரந்து கொண்டிகல்  வென்றிவேலா
பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு
பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட  வந்திடாயோ
சிலையு மெனப்பொற் சிலம்பை முன்கொடு
சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்
திரிபுர மத்தைச் சுடுந்தி னந்தரி  திண்கையாளி
திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
தெரிவை யிரக்கத் துடன்பி றந்தவள்
திசைகளிலொக்கப் படர்ந்திடம்பொரு  கின்றஞானக்
கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்
நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
கருக இடத்திற் கலந்தி ருந்தவள்  கஞ்சபாதங்
கருணை மிகுத்துக் கசிந்து ளங்கொடு
கருது மவர்க்குப் பதங்கள் தந்தருள்
கவுரி திருக்கொட் டமர்ந்த  இந்திரர்  தம்பிரானே.
472. தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தருமயில் செச்சைப் புயங்க யங்குற  வஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும்ப்ரபந்தம்வி  ளம்புகாளப்
புலவ னெனத்தத் துவந்த ரந்தெரி
தலைவ னெனத்தக் கறஞ்செ யுங்குண
புருஷ னெனப்பொற் பதந்த ருஞ்சன  னம்பெறாதோ
பொறைய னெனப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
துறவ னெனத்திக் கியம்பு  கின்றது
புதுமை யலச்சிற் பரம்பொ ருந்துகை  தந்திடாதோ
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
குறைவற முப்பத் திரண்ட றம்புரி  கின்றபேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்னப் புயங்க கங்கணி
குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின  வஞ்சிநீலி
கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி  யெங்களாயி
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
சுருதி துதிக்கப் படுந்த்ரி யம்பகி
கவுரி திருக்கொட் டமர்ந்த இந்திரர்  தம்பிரானே.
473. இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
தியக்கத்திற் றியக்குற்றுச்  சுழலாதே
எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்
றெடுத்துப்பற் றடுத்தற்பத்  துழலாதே
சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
றுவக்கிற்பட் டவத்தைப்பட்  டயராதே
துணைச்செப்பத் தலர்க்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்
கடப்பப்பொற் கழற்செப்பித்  தொழுவேனோ
கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்
குலத்தைக்குத் திரத்தைக்குத்  தியவேலா
குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
குலத்துக்குக் குடக்கொற்றக்  கொடியோனே
கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
பகச்சொர்க்கப் புரப்பொற்பைப்  புரிவோனே
கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப்   பெருமாளே.
474. எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தக்க தவர்க்கிச்சைப்
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக்  குடில்மாயம்
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
பிறக்கைக்குத் தலத்திற்புக்  கிடியாமுன்
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்
பெறச்செச்சைப் புயத்தொப்பித்  தணிவோனே
செருக்சிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
திரட்டப்பிக் கழற்செப்பத்  திறல்தாராய்
பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்
பணத்துட்கக் கடற்றுட்கப்  பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்
றுப் பலப்பப்பத் தருக்கொப்பித்  தருள்வாழ்வே
கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்
கிடைப்புக்குக் களிப்புக்குத்  திரிவோனே
கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
கடற்கச்சிப் பதில்சொக்கப்  பெருமாளே.
475. இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்
டெலுப்புக்கட் டளைச்சுற்றிச்  சுவர்கோலி
எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்
கெனக்குச்சற் றுனக்குச்சற்  றெனுமாசைச்
சிறைக்கொத்திப் பிறப்பிற்பட்
டுறக்கச்சொப் பனத்துற்றுத்
திகைக்கப்பட் டவத்தைப்பட்  டுழலாதுன்
திருப்பத்மத் திறத்தைப்பற்
றுகைக்குச்சித் திரத்தைச்சொற்
றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித்  திரிவேனோ
பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச்
சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்
பிறக்குற்றத் திருப்பக்கச்  சிவநாதர்
பெருக்கப்புத் தடக்கைக்கற்
பகத்தொப்பைக் கணத்துக்குப்
பிரச்சித்தக் கொடிக்குக்டக்  கொடியோனே
பறைக்கொட்டிக் களைச்சுற்றக்
குறட்செக்கட் கணத்திற்குப்
பலிக்குப்பச் சுடற்குத்திப்  பகிர்வேலா
பணப்பத்திக் கணத்துத்திப்
படுக்கைக்கச் சபத்திச்சைப்
படுக்கச்சிப் பதிச்சொக்கப்  பெருமாளே.
476. கடத்தைப்பற் றெனப்பற்றிக்
கருத்துற்றுக் களித்திட்டுக்
கயற்கட்பொற் பிணைச்சித்ரத்  தனமாதர்
கலைக்குட்பட் டறக்கத்திச்
சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்
திரைக்குட்பட் டறச்செத்திட்  டுயிர்போனால்
எடுத்துக்கொட் டிடக்கட்டைப்
படத்தெட்டத் தணற்றட்டக்
கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற்  றவர்போமுன்
இணக்கிப்பத் திமைச்செச்சைப்
பதத்தைப்பற் றுகைக்குச்சொற்
றமிழ்க்கொற்றப் புகழ்ச்செப்பித்  திரிவேனோ
அடைத்திட்டுப் புடைத்துப்பொற்
பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்
டலைப்புப்பற் றெனச்சொற்றிட்  டறுசூரை
அடித்துச்செற் றிடித்துப்பொட்
டெழப்பொர்ப்புப் படக்குத்திட்
டலைத்துச்சுற் றலைத்தெற்றுக்  கடல்மாயப்
புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்
கயிற்கொக்கைப் படக்குத்திப்  பொருவோனே
புனத்திற்பொற் குறத்திக்குப்
புணர்க்கொத்தப் பசப்பெத்திப்
புணர்க்கச்சிப் பதிச்சொக்கப்  பெருமாளே.
477. கருப்பற்றிப் பருத்தொக்கத்
தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்
கருத்திற்கட் பொருட்பட்டுக்  பயில்காலங்
கணக்கிட்டுப் பிணக்கிட்டுக்
கதித்திட்டுக் கொதித்திட்டுக்
கயிற்றிட்டுப் பிடித்திட்டுச்  சமனாவி
பெருக்கப்புத் தியிற்பட்டுப்
புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்
பிணத்தைச்சுட் டகத்திற்புக்  கனைவோரும்
பிறத்தற்சுற் றமுற்றுற்றிட்
டழைத்துத்தொக் கறக்கத்துப்
பிறப்புப்பற் றறச்செச்சைக்  கழல்தாராய்
பொருப்புக்கர்ப் புரக்கச்சுத்
தனப்பொற்புத் தினைப்பச்சைப்
புனக்கொச்சைக் குறத்தத்தைக்  கினியோனே
புரத்தைச்சுட் டெரித்துப்பற்
றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்
புணர்த்தப்பித் தனைக்கற்பித்  தருள்வோனே
செருக்கக்குக் கரைக்குத்திச்
செருப்புக்குப் பிடித்தெற்றிச்
சினத்திட்டுச் சிதைத்திட்டுப்  பொரும்வீரா
திருத்தத்திற் புகற்சுத்தத்
தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்
திருக்கச்சிப் பதிச்சொக்கப்  பெருமாளே.
478. கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்
பிறக்கிட்டுப் படக்கற்பித்  திளைஞோர்தங்
கழுத்தைச்சிக் கெனகட்டித்
தனச் செப்புப் படக்குத்திட்
டுருக்கிக்கற் பழிக்கப்பொற்  பெழு காதல்
புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்
பணிக்கட்டிற் புறத்துற்றுப்  புணர்மாதர்
பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்
பதத்தைப்பெற் றிருக்கைக்குப்   பெறுவேனோ
திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்
கரிக்குப்புத் திரற்குற்றுத்  தளைபூணச்
சினத்துப்பொற் பொருப்பைப்பொட்
டெழுத்தித்திக் கரித்துப்புத்
திரத்தத்திற் சிரித்துற்றுப்  பலபேய்கள்
பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
பரப்பொய்க்கட் டறப்புக்குப்  பொருதோனே
பணிச்செச்சைத் தொடைச்சித்ரப்
புயத்துக்ரப் படைச்சத்திப்
படைக்கச்சிப் பதிச்சொக்கப்  பெருமாளே.
479. அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே.
480. முட்டுப் பட்டுக்  கதிதோறும்
முற்றச் சுற்றிப்  பலநாளும்
தட்டுப் பட்டுச்சுழல்வேனைச்
சற்றுப் பற்றக்  கருதாதோ
வட்டப் புட்பத்  தலமீதே
வைக்கத் தக்கத்  திருபாதா
கட்டத் தற்றத்   தருள்வோனே
கச்சிச் சொக்கப்  பெருமாளே.
481. அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
தத்தத் தத்தத்  தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
தொக்குத் திக்குக்  குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப்  பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
செச்சைச் செச்சைக்  கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
துட்கத் திட்கப்  பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக்  கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக்  களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிப் சொக்கப்  பெருமாளே.
482. சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
சுத்தப் பட்டிட்  டமுறாதே
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
சொற்குற் றத்துத்  துறைநாடி
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
றொத்துக் கித்திப்  பிணிமாதர்
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
பிற்பட் டிட்டுத்  தளர்வேனோ
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
தத்திக் கத்துப்  பலமீவாய்
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
தைக்குச் செச்சைத்  தொடைசூழ்வாய்
கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
கைத்தச் சத்திப்  படையேவுங்
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப்  பெருமாளே.
483. கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
கொத்துற் றுக்குப் பிணியுற்  றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
கொத்தைச் சொற்கற் றுலகிற்  பலபாஷை
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச்  சுமைபேணும்
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப்  பெறுவேனோ
அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
டத்ரத் தெற்றிக் கடுகப்  பொருசூரன்
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
புக்குப் பட்டுத் துருமத்  தடைவாகத்
தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற்  கணமாடிச்
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
சத்திக் கச்சிக் குமரப்  பெருமாளே.
484. தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக்  கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப்   பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற்  றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத்  தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப்  பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக்  கினியோனே
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித்  திடும்வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற்  பெருமாளே.
485.பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக்  குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக்  கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச்  சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப்  பெறுவேனோ
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
செற்பத்ரக் கொக்கைப்  பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்
செச்சைத்கொத் தொப்பித்  தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
கட்கத்தத் தர்க்குப்  பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
கச்சிக்குட் சொக்கப்  பெருமாளே.
486. அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
கணுரத்தைக் கனவெற்புத்  தனமேகம்
அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்
திளகிக்கற் புளநெக்குத்  தடுமாறித்
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
தொடியர்க்கிப் படியெய்த்துச்  சுழலாதே
சுருதிப்பொற்பொருள் செக்கர்க்குரவிட்டுத்தமர்பற்றித்
தொழுசெச்சைக் கழல்பற்றிப்  பணிவேனோ
புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
புனமுத்தைப் புணர்சித்ரப்  புயவீரா
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
புகல்பொற்குக் குடவெற்றிக்  கொடியோனே
கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
கரணிச்சித் தருள்கச்சிப்  பதியோனே
கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
பொருசத்திக் கரசொக்கப்  பெருமாளே.
487. கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன்  மலராலும்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு  மதனாலும்
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல  இனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது  தரவேணும்
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி  லுறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல  கதிர்வேலா
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய  திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த  பெருமாளே.
488. கமலரு சோகாம்பர மடிநடு வேய்பூங்கணை
கலகமலர் வாய்தோய்ந்தம  ளியின்மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
கனவிய வாரேந்தின  இளநீர்தோய்ந்
தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடு  மநுபோகம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய  மருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுலன நீலாம்பர  மறியாத
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியி  லுறைவோனே
விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
வெடிபடு தேவேந்திர  னகர்வாழ
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற மேல்வாங்கிய  பெருமாளே.
489. கரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத்  தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக்  கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக்  கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப்   புகல்வாயே
தரும வீமஅ ருச்சுன நகுலச
காதே வர்க்குப்  புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட்   டினிலாளுங்
குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்க்ஷத்  ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப்  பெருமாளே.
490. கலகலெ னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய  பொறியார்பைங்
கடிதட முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு  வடமாடச்
சலசல சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி  சுழலாடத்
தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி லொத்திட டாய்ந்த வோதியர்
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய  ருறவாமோ
திலதமு கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி  சிவகாமி
திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை  யருள்பாலா
அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர  முடையோனே
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் கண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய  பெருமாளே.
491. கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற்  செயல்மாறித்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப்  புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ  எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக்  கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக்  குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற்  பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத்  தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.
492. கோவைச் சுத்தத் துப்பத ரத்துக்  கொடியார்தங்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத்  தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித்  திரியாதே
பாடப் பத்திச் சித்தமெ னக்குத்  தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப்  பொரும்வேலா
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக்  கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப்  பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப்  பெருமாளே.
493. சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூடு வேகளித்  தநுபூதி
சேர அற்புதக் கோல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக்  கறியாமற்
பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித்  தடியேனைப்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித்  தருள்வாயே
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த்  தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற்  குருநாதா
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்  புலிவேளூர்
காள அத்தியப் பால்சி ராமலைத்
தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற்  பெருமாளே.
494. நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ்க ளங்க  மதியாலும்
நத்தொடுமு ழங்க னத்தொடு முழங்கு
நத்திரைவ ழங்கு  கடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து  மெலியாதே
எத்தனையு நெஞ்சில் எத்தனமு யங்கி
இத்தனையி லஞ்ச  லெனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை யெங்கு  முறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
பத்திரம ணிந்த  கழலோனே
கச்சிவர்கு ரும்பை கச்சவர்வி ரும்பு
கச்சியில மர்ந்த  கதிர்வேலா
கற்பகவ னங்கொள் கற்பகவி சும்பர்
கைத்தளைக ளைந்த  பெருமாளே.
495. படிறொ ழுக்கமு மடம னத்துள
படிப ரித்துட  னொடிபேசும்
பகடி கட்குள மகிழ  மெய்ப்பொருள்
பலகொ டுத்தற  உயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட  மிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத  மருள்வாயே
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி  லமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி  திருமார்பா
பொடிப டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர்  குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய  பெருமாளே.
496. மகுடக்கொப் பாடக் காதினில்
நுதலிற்பொட் டூரக் கோதிய
மயிரிற்சுற் றோலைப் பூவொடு  வண்டுபட
வகைமுத்துச் சோரச் சேர்நகை
மிதழிற்சொற் சாதிப் பாரியல்
மதனச்சொற் பாடுக் கோகில  ரம்பைமாதர்
பகடிச்சொற் கூறிப் போர்மயல்
முகவிச்சைப் பேசிச் சீரிடை
பவளப்பட் டாடைத் தோளிரு  கொங்கைமேலாப்
பணமெத்தப் பேசித் தூதிடு
மதியச்சுத் தீனச் சோலிகள்
பலரெச்சிற் காசைக் காரிகள்  சந்தமாமோ
தகுடத்தத் தானத் தானன
திகுடத்தித் தீதித் தோதிமி
தடுடுட்டுப் டாடப் பேரிகை  சங்குவீணை
தடமிட்டுப் பாவக் கார்கிரி
பொடிபட்டுப் போகச் சூரர்கள்
தலையிற்றிட் டாடப் போர்புரி  கின்றவேலா
திகரிப்பொற் பாணிப் பாலனை
மறைகற்புத் தேளப் பூமனை
சினமுற்றுச் சேடிற் சாடிய  கந்தவேளே
தினையுற்றுக் காவற் காரியை
மணமுற்றுத் தேவப் பூவொடு
திகழ்ச்சித் தேவக் கோன்மகிழ்  தம்பிரானே.
497. மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாதது  மனதாலே
மட்டிட்டுத் தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதி  மதிசூடும்
முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண  மானது  பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவது  புரிவாயே
செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல்  வெகுரூபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பக  முதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாபர யோதர  முலையாள்முன்
கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய  பெருமாளே.
498. மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
வசைபேசு கின்ற  மொழியாலும்
மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
மதிநேரு கின்ற  நுதலாலும்
அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை  வளையாலும்
அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து
அடியேன்ம யங்கி  விடலாமோ
மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
வலமாக வந்த  குமரேசா
மறிதாவு செங்கை அரனாரி டங்கொள்
மலைமாது தந்த  முருகேசா
நயவா னுயர்ந்த மணிமாட மும்பர்
நடுவேநி றைந்த  மதிசூழ
நறைவீசு கும்ப குடமேவு கம்பை
நகர்மீத மர்ந்த  பெருமாளே.
499. முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
முற்செ மத்து மூர்க்கர்  வெகுபாவர்
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
முச்சர் மெத்த சூட்சர்  நகையாலே
எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்ட முற்ற கூட்டர்  விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
இப்ப டிக்கு மார்க்கம்  உழல்வேனோ
தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
சிற்று டுக்கை சேட்டை  தவில்பேரி
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்க டற்கு ளாழ்த்தி  விடும்வேலா
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர்  குருநாதா
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
கச்சி நத்தி நாட்கொள்  பெருமாளே.
500. வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத்  திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற்  றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக்  கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக்  கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப்  படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்கிச் சித்ரத்  திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னுபு யம்பெறு
கைக்குக் கற்புத்  தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப்  பெருமாளே.
501. வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய
நீந்திப்பது மாதியை மீதினி
லூர்ந்துற்பல வோடையில் நீடிய  உகள்சேலை
வார்ந்துப்பக ழீயெதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை
சேர்ந்துக்குழை யோடுச லாடிய  விழியாலே
சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்
வீழ்ந்திப்படி மீதினி லேசிறி  தறிவாலே
சாந்தப்பிய மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
மாய்ந்திப்படி போகினு மோர்மொழி  மறவேனே
சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
காந்தப்பெரு நாதனு மாகிய  மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண  வெனதாளம்
காந்தப்பத மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ
போந்தப்பெரு மான்முரு காவொரு  பெரியோனே
காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய  பெருமாளே.
502. அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி  யறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து  பொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்து  அவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தை யென்று  அருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த  உமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ  லுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட் டித்தி ரிந்த  தவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்த  பெருமாளே.
2. திருவானைக்கா (அப்பு)
503. அஞ்சன வேல்விழி யிட்ட ழைக்கவு
மிங்கித மாகந கைத்து ருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும்  நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பரம் வீணில விழ்த்துடுக் கவு  மிளைஞோர்கள்
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு  மெவரேனும்
நிந்தைசெ யாதுமபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது  மொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண் விக்ரம  கணராஜன்
கும்பிடு வார்வினை  பற்றறுப்பவன்
எங்கள் விநாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக சற்பகப்பிளை  யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்தச டானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய  பரிபாலா
துங்க கஜாரணி யத்திலுத்தம
சம்பு தடாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை  பெருமாளே.
504. அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண  ரருள்பாலா
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு  மணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியா மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி  லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்டுகி லாடைச் சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ  னழிவேனோ
கொம்பனை நல்க கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி  யபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை  யருள்பாலா
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண  மருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை  பெருமாளே.
505. அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாத  வகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல்  மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ  னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம னோதீத
சிவச்சொ ரூப மாயோகி  யென ஆள்வாய்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத  மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர  வயலூரா
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய  மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமி யேதேவர்  பெருமாளே.
506. ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத்  துறவோரை
ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
பாளிதப டீரத்  தனமானார்
காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமயி ராமக்  கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற்  புகல்வேனோ
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப்  பரியேறிப்
பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச்  சிறியோனே
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள னேவற்  புனமேவுந்
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப்  பெருமாளே.
507. ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
னாக மக்கலை கற்றச மர்த்திக
ளார்ம øத்தையு மெத்திவ ளைப்பவர்  தெருவூடே
ஆர வட்டமு லைக்குவி லைப்பண
மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ  ருடன்மாலாய்
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
மாயெடுத்தகு லைப்பொடு பித்தமு
மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி  யதனாலே
மேதி னிக்குள பத்தனெ னப்பல
பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
வீடு கட்டியி ருக்குமெ னக்குநி  னருள்தாராய்
பீலி மிக்கம யிற்றுர கத்தினி
லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
பீற லுற்றவு யுத்தக ளத்திடை  மடியாத
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு  குடனாட
ஏலம் வைத்தபு யத்தி லணைத்தருள்
வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை  யருள்வோனே
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள்  பெருமாளே.
508. உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை  யொன்றுபாட
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பாரி லொப்பார்கள்  கண்டிலேன்யான்
குரைக்கான வித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு  கொண்டுவாபொன்
குலப்பூ ணிரத்னா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின்  மங்குவேனோ
அரைக்காடை சுற்றார் தமிழ்க்கூட லிற்போய்
அனற்கே புனற்கேவ  ரைந்தஏடிட்
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ  மர்ந்தவேளே
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யான முற்றோர்சி  லந்திநூல்செய்
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி  தம்பிரானே
509. ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ  ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது  சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ  னவியோமஞ்
சாரு மனுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல்  பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர்  களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க  வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை  த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள்  பெருமாளே.
510. கருமுகில்திர ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய
கடிகமழள காயக் காரிகள்  புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்
முழுமதிவத னேரப் பாவைகள்
களவியமுழு மோசக் காரிகள்  மயலாலே
பரநெறியுண ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக் காரிகள்
பகழியைவிழி யாகத் தேடிகள்  முகமாயப்
பகடிகள்பொரு ளாசைப் பாடிக
ளுருவியதன பாரக் கோடுகள்
படவுளமழி வேனுக் கோரருள்  புரிவாயே
மரகதவித நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை
மருவியமண வாளக் கோலமு  முடையோனே
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
முறையிடநடு வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய  அதிதீரா
அரவணை தனி லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
அடியிணைமுடி தேடிக் காணவும்  அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக
அழகியதிரு வானைக் காவுறை  பெருமாளே.
511. காவிப் பூவை யேவை யிகல்வன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன  இருதோடார்
காதிற் காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மதமிவை  சிதையாத
பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான ஞான நெறிதனை  யினிமேலன்
பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார  வார பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள  நினையாதோ
கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில்  விளையாடக்
கோரத் தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக் கால மாக அமர்செய்த  வடிவேலா
ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி  லுறைவோனே
ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய  பெருமாளே.
512. குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன  பொதிகாயக்
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய  அதனாலே
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடுந்தி யான மொன்றையு  முயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட  அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய  கரவீரா
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்கு லாவி யின்புற  வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி கோவிந்த கேச வென்றிரு
கழல்தொழு சீரங்க ராச னண்புறு  மருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள்  பெருமாளே.
513. நாடித் தேடித்  தொழுவார்பால்
நானத் தாகத்  திரிவேனோ
மாடக் கூடற்  பதிஞான
வாழ்வைச் சேரத்  தருவாயே
பாடற் காதற்  புரிவோனே
பாலைத் தேனொத்  தருள்வோனே
ஆடற் றோகைக்  கினியோனே
ஆனைக் காவிற்  பெருமாளே.
514. நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜீமுத நேரென  நெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென  நைந்துசீவன்
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை யிட்டுடை சோராவி டாயில  மைந்துநாபி
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னோலய  மென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மனங்க ளித்திட லாமோது ரோகித  முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோ கெடாதினி
வரும்ப டிக்குரை யாய்பார் பலாகவ  மென்றுபேசி
அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன்  மைந்தனான
அனங்கன் மைத்துன வேளே கலாபியின்
விளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய
னலங்கயப்பதி வாழ்வான தேவர்கள்  தம்பிரானே.
515. பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு  முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி யேவிய
பணிவிடை களிலிறு மாந்த கூளனை  நெறிபேணா
விரகனை யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
வெகுளியை யறிவது போங்க பாடனை  மலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது  மொருநாளே
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநக  ருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
கரிவன முறையகி லாண்ட நாயகி  யருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவண
னிடியென அலறிமு னேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன்  மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள்  பெருமாளே.
516. வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
வீதிக் கேதிரி பப்பர மட்டைகள்  முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
வேளுக்காண்மைசெ லுத்தச மர்த்திகள்  களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
காசற் றாரைபி தத்திலொ ழிச்சிகள்
தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் எவரேனும்
தோயப் பாயல ழைக்கும வத்திகள்
மோகப் போகமு யக்கிம யக்கிகள்
சூறைக் காரிகள் துக்கவ லைப்பட  லொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு  முனிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல்  மருகோனே
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
பாயச் சாலித ழைத்திர தித்தமு
தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி  யுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு  பெருமாளே.
3. திருவண்ணாமலை (திருவருணை - தேயு)
517. குமர குருபர குணதர நிசிசர
திமிர தினகர சரவண பவகிரி
குமரி சுதபகி ரதிசுத சுரபதி  குலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
கொடிய வினையனை யவலனை யசடனை  யதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
களவி னொடுபொரு ளளவள வருளிய
கலவி யளறிடை துவளுறும் வெளிறனை  யினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசை
சுருதி புடைதர வருமிரு பரிபுர
கமல மலரடி கனவிலு நனவிலு  மறவேனே
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
மறுகி யலைபட விடந்தி யுமிழ்வன
சமுக முககண பணபணி பதிநெடு  வடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
கனக கிரிதர தரவெகு கரமலர்
தளர வினியதொ ரமுதினை யொருதனி  கடையாநின்
றமரர் பசிசெட வுதவிய க்ருபைமுகில்
அகில புவனமு மளவிடு குறியவன்
அளவு நெடியவ னளவிட அரியவன்  மருகோனே
அரவு புனைதரு புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
அறிவை யறிவது பொருளென அருளிய  பெருமாளே.
518. அருவ மிடையென வருபவர் துவரிதழ்
அமுத பருகியு முருகியு ம்ருகமத
அளக மலையவு மணிதுகி லகலவு  மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
அமளி படஅந வரதமு மவசமொ
டணையு மழகிய கலவியு மலமல  முலகோரைத்
தருவை நிகரிடு புலமையு மலமல
முருவு மிளமையு மலமலம் விபரித
சமய கலைகளு மலமல மலமரும்  வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமர பரிபுர சரணமு மவுனமு  மருள்வாயே
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
யிருகு தையுமுடி தமனிய தநுவுட
னுருளை யிருசுடர் வலவனு மயனென  மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
உடைய வொருவரு மிருவரு மருள்பெற  வொருகோடி
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன புகைவன
திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு  முனிவார்தஞ்
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
சிகரி மிசையொரு கலபியி லுலவிய  பெருமாளே.
519. கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
பிசித அசனம றவரிவர் முதலிய
கலக விபரித வெகுபர சமயிகள்  பலர்கூடிக்
கலக லெனநெறி கெடமுறை முறைமுறை
கதறி வதறிய குதறிய கலைகொடு
கருத அரியதை விழிபுனல் வரமொழி  குழறாவன்
புருகி யுனதருள் பரவுகை வரில்விர
கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
லுணர்வு கெடிலுயில் புணரிரு வினையள  றதுபோக
உதறி லெனதெனு மலமறி லறிவினி
லெளிது பெறலென மறைபறை யறைவதொ
ருதய மரணமில் பொருளினை யருளுவ  தொருநாளே
தருண சததள பரிமள பரிபுர
சரணி தமனிய தநுதரி திரிபுர
தகனி கவுரிப வதிபக வதிபயி  ரவிசூலி
சடில தரியநு பவையுமை திரிபுரை
சகல புவனமு முதவிய பதிவ்ருதை
சமய முதல்வித னயபகி ரதிசுத  சதகோடி
அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு
கருணை வருணித தனுபர குருபர
அருணை நகருறை சரவண குரவணி  புயவேளே
அடவி சரர்குல மரகத வனிதையு
மமரர் குமரியு மனவர தமுமரு
கழகு பெறநிலை பெறவர மருளிய  பெருமாளே.
520. துகிலு ம்ருகமத பரிமள அளகமு
நெகிழ இருதன கிரியசை தரஇடை
துவள மனிதரு மமரரு முனிவரு  முடனோடித்
தொடர வனமணி மகரமி லகுகுழை
யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
சுருதி மொழிவன கயல்விழி புரள்தர  நடுவாக
வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
வனச பதயுக பரிபுர மொலிபட
மறுகு தொறுமுல வியினிய கலவியை  விலைகூறும்
வரைவி லரிவையர் தருசுக சலதியி
லலையு மெனதுயி ரநுதின நெறிதரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவ  தொருநாளே
முகிலு மதியமும் ரவியெழு பரவியு
நெடிய குலைமிட றிடறமு துககன
முகிடு கிழிபட வளர்வன கமுகின  மிசைவாளை
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
தடமு முளரிய அகழியு மதில்களு
முழுது முடையதொ ரருணையி லுறைதரு  மிளையோனே
அகிலு மருதமு முகுளித வகுளமு
மமுத கதலியும் அருணமும் வருடையு
மபரி மிதமத கரிகளு மரிகளு  முடனேகொண்
டருவி யிழிதரு மருவரை தனிலொரு
சவர வனிதையை முனிதரு புனிதையை
அவச முடன்மல ரடிதொழு துருகிய  பெருமாளே.
521. மகர மெறிகடல் விழியினு மொழியினு
மதுப முரல்குழல் வகையினு நகையினும்
வளமை யினுமுக நிலவினு மிலவினு  நிறமூசும்
மதுர இதழினு மிடையினு நடையினு
மகளிர் முகுளித முலையினு நிலையினும்
வனச பரிபுர மலரினு முலரினு  மவர்நாமம்
பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
முருகி நெறிமுறை தவறினு மவரொடு
பகடி யிடுகினு மமளியி லவர்தரு  மநுராகப்
பரவை படியினும் வசமழி யினுமுத
லருணை நகர்மிசை கருணையொ டருளிய
பரம வொருவச னமுமிரு சரணமு  மறவேனே
ககன சுரபதி வழிபட எழுகிரி
கடக கிரியொடு மிதிபட வடகுல
கனக கனகுவ டடியொடு முறிபட  முதுசூதங்
கதறு சுழிகட லிடைகிழி படமிகு
கலக நிசிசரர் பொடிபட நடவிய
கலப மரகத துரகத ந்ருபகிரி  மயில்வாழ்வே
தகன கரதல சிவசுத கணபதி
சகச சரவண பரிமள சததள
சயன வனசரர் கதிபெற முனிபெறு  புனமானின்
தரள முகபட நெறிபட நிமிர்வன
தருண புளகித ம்ருகமத தனகிரி
தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய  பெருமாளே.
522.  முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
முதிய மதியது முகமென நுதலிணை
முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி  யெனமூவா
முளரி தனின்முகு ளிதமலர் முலையென
முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
மொழிய வரியதொர் தெரிவையர் வினையென  மொழிகூறிப்
பகலு மிரவினு மிகமன மருள்கொடு
பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
பழுது மறஅவர் பரிவுற இதமது  பகராதே
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
விகட முடனடை பயில்மயில் மிசைவரு
பவனி தனையநு தினநினை யெனஅருள்  பகர்வாயே
புகல வரியது பொருளிது எனவொரு
புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
பொதுவை யிதுவென தவமுடை முனிவர்கள்
புரமு மெரியெழ நகையது புரிபவர்
புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
புடவி வழிபட புதைபொருள் விரகொடு  புகல்வோனே
அகில கலைகளு மறநெறி முறைமையு
மகில மொழிதரு புலவரு முலகினி
லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை  யதனாலே
அறுவர் முலையுணு மறுமுக னிவனென
அரிய நடமிடு மடியவ ரடிதொழ
அருணை நகர்தனி லழகுடன் மருவிய  பெருமாளே.
523. முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
முலைக ளளவிடு முகபட பகடிகள்
முதலு முயிர்களு மளவிடு களவியர்  முழுநீல
முழுகு புழுககில் குழைவடி வழகியர்
முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்
முனைகொ ளயிலென விழியெறி கடைசிய  ரநுராகம்
மருவி யமளியி னலமிடு கலவியர்
மனது திரவிய மளவள வளவியர்
வசன மொருநொடி நிலைமையில் கபடியர்  வழியேநான்
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
அருணை நகர்மிசை கருணையொ டருளிய
மவுன வசனமு மிருபெரு சரணமு  மறவேனே
கருதி யிருபது கரமுடி யொருபது
கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
கடிய வியனகர் புகவரு கனபதி  கனல்மூழ்கக்
கவச அநுமனொ டெழுபது கவிவிழ
அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
களரி தனிலொரு கணைவிடு மடலரி  மருகோனே
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து
தரும னவர்பதி குடிவிடு பதனிசை  மயில்வீரா
தருண மணியவை பலபல செருகிய
தலையள் துகிலிடை யழகிய குறமகள்
தனது தனமது பரிவொடு தழுவிய  பெருமாளே.
524. விடமு மமுதமு மிளர்வன இணைவிழி
வனச மலதழல் முழுகிய சரமென
விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல  வொருஞான
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென
மொழியு மமுதல வுயிர்கவர் வலையென
விழையு மிளநகை தளவல களவென  வியனாபித்
தடமு மடுவல படுகுழி யெனஇடை
துடியு மலமத னுருவென வனமுலை
சயில மலகொலை யமனென முலைமிசை  புரள்கோவை
தரள மணியல யமன்விடு கயிறென
மகளிர் மகளிரு மலபல வினைகொடு
சமையு முருவென வுணர்வொடு புணர்வது  மொருநாளே
அடவி வனிதையர் தனதிரு பரிபுர
சரண மலரடி மலர்கொடு வழிபட
அசல மிசைவிளை புனமதி லினிதுறை  தனிமானும்
அமர ரரிவையு மிருபுடை யினும்வர
முகர முகபட கவளத வளகர
அசல மிசைவரு மபிநவ கலவியும்  விளையாடும்
கடக புளகித புயகிரி சமுகவி
கடக கசரத துரகத நிசிசரர்
கடக பயிரவ கயிரவ மலர்களும்  எரிதீயும்
கருக வொளிவிடு தனுபர கவுதம
புனித முனிதொழ அருணையி லறம்வளர்
கருணை யுமைதரு சரவண சுரபதி  பெருமாளே.
525. கமரி மலர்குழல் சரிய புளகித
கனக தனகிரி யசைய பொருவிழி
கணைக ளெனநுதல் புரள துகிலதை  நெகிழ்மாதர்
கரிய மணிபுர ளரிய கதிரொளி
பரவ இணைகுழை யசைய நகைகதிர்
கனக வளைகல நடைகள் பழகிகள்  மயில்போலத்
திமிரு மதபுழு சொழுக தெருவினி
லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
திலத மணிமுக அழகு சுழலிக  ளிதழூறல்
திரையி லமுதென கழைகள் பலசுளை
யெனவு மவர்மயல் தழுவு மசடனை
திருகு புலைகொலை கலிகள் சிதறிட  அருள்தாராய்
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர  எனதாளங்
குரைசெய் முரசமொ டரிய விருதொலி
டமட டமடம டமட டமவென
குமுற திமிலைச லரிகி னரிமுத  லிவைபாட
அமரர் முனிவரு மயனு மனைவரு
மதுகை மலர்கொடு தொழுது பதமுற
அசுரர் பரிகரி யிரத முடைபட  விடும்வேலா
அகில புவனமொ டடைய வொளிபெற
அழகு சரண்மயில் புறம தருளியொ
ரருண கிரிகுற மகளை மருவிய  பெருமாளே.
526. கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
கணவகெட் டேனெனப்  பெறுமாது
கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
கதறிடப் பாடையிற்  றலைமீதே
பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
பறைகள்கொட் டாவரச்  சமனாரும்
பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்
பரிகரித் தாவியைத்  தரவேணும்
அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
றருணையிற் கோபுரத்  துறைவோனே
அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
தரியசொற் பாவலர்க்  கெளியோனே
புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
புனமறப் பாவையைப்  புணர்வோனே
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
பொருமுழுச் சேவகப்  பெருமாளே.
527. கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொடுத்
திலகுகட் சேல்களிப்  புடனாடக்
கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
களவினிற் காசினுக்  குறவாலுற்
றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்
றுயர்பொருட் கோதியுட்  படுமாதர்
ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
புணையிணைத் தாள்தனைத்  தொழுவேனோ
மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
செறிதிருக் கோலமுற்  றணைவானும்
மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
றிடஅடற் சூரனைப்  பொரும்வேலா
அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
றருணையிற் கோபுரத்  துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப்  பெருமாளே.
528. பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப்  படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட்  டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
பிணிகளுக் கேயிளைத்  துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
பிரியமுற றோதிடப்  பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
கமைவபற் றாசையக்  கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக்  கொடியோனென்
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோர்கிளைக்
கருணையிற் கோபுரத்  துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப்  பெருமாளே.
529. தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
தழலமளி மீதெ றிக்கு  நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
தறுகண்மத வேள்தொ டுத்த  கணையாலே
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று
மருவுமென தாவி சற்று  மழியாதே
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
மயிலின்மிசை யேறி நித்தம்  வரவேணும்
கருணையக லாவி ழிச்சி கள்பமழி யாமு லைச்சி
கலவிதொலை யாம றத்தி  மணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
கடியமல ராத ரித்த  கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
அருணைநகர் கோபு ரத்தி  லுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
அமரர்சிறை மீள விட்ட  பெருமாளே.
530. முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
முழுமதிநி லாவி னுக்கும்  வசையாலும்
மொழியுட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
முதியமத ராஜனுக்கு  மழியாதே
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
புதுமையினி லாறி ரட்டி  புயமீதே
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
பொருமயிலி லேறி நித்தம்  வரவேணும்
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
ளெழுதரிய கோபு ரத்தி  லுறைவோனே
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
இளமுலைவி டாத சித்ர  மணிமார்பா
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
சிவனைமுத லோது வித்த  குருநாதா
திசைமுகன் ராரி மற்று மறியபல தேவ ருற்ற
சிறையடைய மீள விட்ட  பெருமாளே.
531. வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
மதுரமொழி சைக்கு  மிருநாலு
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
மடியருவ வேள்க ணைக்கு  மறவாடி
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
நிறையுமிகு காத லுற்ற  மயல்தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர
நிலவுமயி லேறி யுற்று  வரவேணும்
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
மவுலியற வாளி தொட்ட  அரிராமன்
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
மவுனமறை யோது வித்த  குருநாதா
இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
ளினியகுண கோபுரத்தி  லுறைவோனே
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
மிடையுருவ வேலை விட்ட  பெருமாளே.
532. ஆலவிழி நீலத் தாலதர பானத்
தாலளக பாரக்  கொண்டலாலே
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
தாரநடை யால்நற்  கொங்கையாலே
சாலமய லாகிக் காலதிரி சூலத்
தாலிறுகு பாசத்  துன்பமூழ்கித்
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
சாவதன்மு னேவற்  கொண்டிடாயோ
சோலைதரு கானிற் கோலமற மானைத்
தோளிலுற வாகக்  கொண்டவாழ்வே
சோதிமுரு காநித் தாபழய ஞானச்
சோணகிரி வீதிக்  கந்தவேளே
பாலகக லாபக் கோமளம யூரப்
பாகவுமை பாகத்  தன்குமாரா
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத்  தம்பிரானே.
533. பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக்  கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித்  தென்படாதே
சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச்  சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற் மானைச்  சிந்தியேனோ
போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக்  கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச்  சென்றவேலா
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக்  கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத்  தம்பிரானே.
534. அமுது மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ  னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெடாமல்  நினருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேஸ்வரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய சூலிசு டாரணி யாமளி  மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக தாரிஉ தாரி பராபரி
குருப ராரிவி காரி நமோகரி  அபிராமி
சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி  பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை  யருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண  விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுலி மானந வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய  பெருமாளே.
535. உருகு மாமெழு காகவு மேமயல்
பெருகு மாசையு ளாகிய பேர்வரி
லுரிய மேடையில் வார்குழல் நீவிய  வொளிமானார்
உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
நெகிழ நாடிய தோதக மாடியு
முவமை மாமயில் போல்நிற மேனிய  ருரையாடும்
கரவ தாமன மாதர்கள் நீள்வலை
கலக வாரியில் வீழடி யேனெறி
கருதொ ணாவதி பாதக னேசம  தறியாத
கசட மூடனை யாளவு மேயருள்
கருணை வாரிதி யேயிரு நாயகி
கணவ னேயுன தாளிணை மாமலர்  தருவாயே
சுருதி மாமொழி வேதியன் வானவர்
பரவு கேசனை யாயுத பாணிநல்
துளப மாலையை மார்பணி மாயவன்  மருகோனே
தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
துகள தாகவு மேயெதி ராடிடு
சுடரின் வேலவ னேயுல கேழ்வலம்  வருவோனே
அருணர் கோடியி னாரொளி வீசிய
தருண வாண்முக மேனிய னேயர
னணையு நாயகி பாலக னேநிறை  கலையோனே
அணிபொன் மேருயர் கோபுர மாமதி
ளதிரு மாரண வாரண வீதியு
ளருணை மாநகர் மேவியு லாவிய  பெருமாளே.
536. கரியுரி அரவ மணிந்த மேனியா
கலைமதி சலமு நிறைந்த வேணியர்
கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர்  கஞ்சமாதின்
கனமுலை பருகி வளர்ந்த காமனை
முனிபவர் கயிலை யமர்ந்த காரணர்
கதிர்விரி மணிபொ னிறைந்ததோளினர்  கண்டகாள
விரிவென வுனது ளுகந்த வேலென
மிகவிரு குழையு மடர்ந்து வேளினை
யணையவ ருயிரை விழுங்கி மேலும்வெ  குண்டுநாடும்
வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
விதமிகு கலவிபொருந்தி மேனியு
மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ  ழிந்திடாதோ
எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
றிருபிறை சயில மிரண்டு தோள்முகி
லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ  டிந்துவீழ்வ
தெனவிழ முதுகு பிளந்து காளிக
ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ
எதிர்பொரு துதிர முகந்த வேகமு  கைந்தவேலா
அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை
அருணையி லறவு முயர்ந்த கோபுர
மதினுறை குமர அநந்த வேதமொ  ழிந்துவாழும்
அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்
அடவியி லரிவை குயங்கள் தோய்புப
அரியர பிரம புரந்த ராதியர்  தம்பிரானே.
537. கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
வடதம னியகிரி கம்ப மாய்நட
கணபண விபரித கந்த காளபு யங்கராஜன்
கயிறென அமரர நந்த கோடியு
முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
கதியற வுலகைவி ழுங்கு மேகவொ  ழுங்குபோல
வினைமத கரிகளு மெண்டி சாமுக
கிரிகளு முறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு  நஞ்சுபோல
விடுகுழை யளவும ளந்து காமுக
ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ  ழிந்திடாதோ
முனைபெற வளையஅ ணைந்த மோகர
நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
முகிலென வுருவமி ருண்ட தாருக  னஞ்சமீன
முழுகிய திமிரத ரங்க சாகர
முறையிட இமையவர் தங்க ளூர்புக
முதுகிரி யுருவமு னிந்த சேவக  செம்பொன்மேரு
அனையன கனவித சண்ட கோபுர
அருணையி லுறையும ருந்து ணாமுலை
அபிநவ வனிதைத ருங்கு மாரநெ  ருங்குமால்கொண்
டடவியல் வடிவுக ரந்து போயொரு
குறமகள் பிறகுதி ரிந்த காமுக
அரியர பிரமபு ரந்த ராதியர்  தம்பிரானே.
538. இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
புவிதனி லினமொன்  றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
மிடர்கொடு நடலம்  பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
டுயிரினை நமனுங்  கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
கழலிணை கருதும்  படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
டிசைகிடு கிடவந்  திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
சிடவலி யொடுகன்  றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
புடையவ ருயஅன்  றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையி லுறையும்  பெருமாளே.
539. விரகொடு வளைசங் கடமது தருவெம்
பிணிகொடு விழிவெங்  கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
றெனவிதி வழிவந்  திடுபோதில்
கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
கையருற வினர்கண்  புனல்பாயும்
கலகமும் வருமுன் குலவினை களையுங்
கழல்தொழு மியல்தந்  தருள்வாயே
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
படவர வணைகண்  டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
பயமற விடமுண்  டெருதேறி
அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
கையுமுற அனலங்  கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையில் மருவும்  பெருமாளே.
540. இடமடு சுறவை முடுகிய மகர
மெறிகட லிடையொழு  திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவி
லெரியென வருசிறு  தென்றலாலே
தடநடு வுடைய கடிபடு கொடிய
சரம்விடு தறுகண  நங்கனாலே
சரிவளை கழல மயல்கொளு மரிவை
தனிமல ரணையின  லங்கலாமோ
வடகுல சயில நெடுவுட லசுரர்
மணிமுடி சிதறஎ  றிந்தவேலா
மறமக ளமுத புளகித களப
வளரிள முலையம  ணந்தமார்பா
அடலணி விகட மரகத மயிலி
லழகுட னருணையி  னின்றகோவே
அருமறை விததி முறைமுறை பகரு
மரியர பிரமர்கள்  தம்பிரானே.
541. கெஜநடை மடவார் வசமதி லுருகா
கிலெசம துறுபாழ்  வினையாலே
கெதிபெற நினையா துதிதனை யறியா
கெடுசுக மதிலாழ்  மதியாலே
தசையது மருவீ வசையுட லுடனே
தரணியில் மிகவே  யுலைவேனோ
சததள மலர்வார் புணைநின கழலார்
தருநிழல் புகவே  தருவாயே
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
திருநெடு கருமால்  மருகோனே
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
திரிபுரை யருள்சீர்  முருகோனே
நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
நிறையயில் முடுகா  விடுவோனே
நிலமிசை புகழார் தலமெனு மருணா
நெடுமதில் வடசார்  பெருமாளே.
542. அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித்  தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட்  டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற்  பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப்  புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத்  துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக்  குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப்  பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
றிருக்கோ புரத்திற்  பெருமாளே.
543. அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக்  கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தணையா வலிகெட்  டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
றிளையா வுளமுக்  குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக்  கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
டுரமோ டெறிபொற்  கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற்  புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக்  கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவி தியினிற்  பெருமாளே.
544. அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்
கவசமா யாதரக்  கடலூடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
கறியொணா மோனமுத்  திரைநாடிப்
பிழைபடா ஞானமொய்ப் பொருள்பெறா தேவினைப்
பெரிய ஆதேசபுற்  புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
பெறுவதோ நானினிப்  புகல்வாயே
பழைய பாகீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
படியுமா றாயினத்  தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
பரமமா யூரவித்  தகவேளே
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
பொடிபடா வோடமுத்  தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
பொருதவே லாயுதப்  பெருமாளே.
545. ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
டாடைமறைத் தாடுமலர்க்  குழலார்கள்
ஆரவடத் தோடலையப் பேசிநகைத்  தாசைபொருட்
டாரையுமெத் தாகமயக்  கிடுமோகர்
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
தூதுவிடுத் தேபொருளைப்  பறிமாதர்
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
சோதியொளிப் பாதமளித்  தருள்வாயே
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
சாயகடற் சூரைவதைத்  திடுவோனே
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
தாபரம்வைத் தாடுபவர்க்  கொருசேயே
தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
தேயுருகிச் சேருமணிக்  கதிர்வேலா
சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்
தேவமகட் கோர்கருணைப்  பெருமாளே.
546. இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
மிறுதிச் சிறுகால்வரு  மதனாலே
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
லெரியைத் தருமாமதி  நிலவாலே
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத் தனிவீசிய  கடலாலே
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோதுயர்  தொலையாதோ
வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுடஏவிய  வடிவேலா
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய  மயில்வீரா
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
லருணைத் திருவீதியி  லுறைவோனே
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
அமரர்க் கரசாகிய  பெருமாளே.
547. இமராஜனி லாவதெ றிக்குங்  கனலாலே
இளவாடையு மூருகொ றுக்கும்  படியாலே
சமராகிய மாரனெ டுக்குங்  கணையாலே
தனிமானுயிர் சோரும தற்கொன்  றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன்  குருநாதா
குறமாமக ளாசைத ணிக்குந்  திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன்  றருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும்  பெருமாளே.
548. இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க
இசலி யிசலியுப ரிதலிலை யுற்று இடைநூல் நுடங்க வுளமகிழ்ச் சியினோடே
இருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்த
அளக மவிழவனை களுமே கலிக்க நயனார விந்த
லகரி பெருகஅத ரமுமே யருத்தி முறையே யருந்த உரையெழப் பரிவாலே
புருவ நிமிரஇரு கணவாள் நிமைக்க வுபசார மிஞ்ச
அவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்த
புதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு மொன்றி அதிசுகக் கலையாலே
புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
மனமு மனமுமுரு கியெயாதரிக்க வுயிர்போலுகந்து
பொருளதளவுமரு வுறுமாய வித்தை விலைமாதர் சிங்கி விடஅருட் புரிவாயே
பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
தமர திமிரபிர பலமோக ரத்ன சலராசி கொண்ட
படியை முழுதுமொரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத் தமர்சேயே
பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவாவினன்கு
டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ணிகையூடு மண்டர்
பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவாகி நின்று கவிதையைப் புனைவோனே
அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்ப
ரடையு மிடரைமுடு கியெநூற் துட்ட கொலைகார ரென்ற
அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிராம செந்தி லுரகவெற் புடையோனே
அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
இரண கரணமுர ணுறுசூர னுட்க மயிலேறு கந்த
அருணை யிறையவர்பெ ரியகோ புரத்தில் வடபா லமர்ந்த அறுமுகப் பெருமாளே.
549. இரவுபற் பலகாலும்  ;  இயலிசைமுத் தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத்  ; திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே ; பரசிவதத் துவஞானா
அரனருள்சற் புதல்வோனே - அருணகிரிப் பெருமாளே.
550. இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ  அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிரையு மொலிதா  னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய்  மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா  கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா  கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா  கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல்  விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ்  பெருமாளே.
551. இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க  மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ  டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த  அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ  டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட  விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய்  தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த  குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள்  பெருமாளே.
552. இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
யிடரடை பாழ்ம்பெ தும்ப  கிதவாரி
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
மிரவிடை தூங்கு கின்ற  பிணநோவுக்
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
டுயிர்குடி போங்கு ரம்பை  யழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
னுபயய தாம்பு யங்க  ளடைவேனோ
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
ளமரர் குழாங்கு விந்து  தொழவாழும்
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
அபிநவ சார்ங்க கண்டன்  மருகோனே
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
கடவுள்ந டேந்த்ரா மைந்த  வரைசாடும்
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
கரகுலி சேந்த்ரர் தங்கள்  பெருமாளே.
553. இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்
இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க  எவராலும்
எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த
இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து  முனிவாறி
முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து
மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து  விடுபோதும்
முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று
முனிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று  மறவேனே
ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து
உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து  சபையூடே
ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று
உதறிமுறை யிடுபழைய வேத வித்தர்தந்த  சிறியோனே
அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
அமரரொடுபலர் முடுகி ஆழியைக்கடைந்து  அமுதாக
அருளுமரி திருமருக வார ணத்தை யன்று
அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த
அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த  பெருமாளே.
554. இறுகு மணிமுலை மருவு தரளமு
மெரியு முமிழ்மதி  நிலவாலே
இரவி யெனதுயிர் கவர வருகுழ
லிசையி லுறுகட  லலையாலே
தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
சரமி லெளியெனு  மழியாதே
தருண மணிபொழி லருணை நகருறை
சயில மிசையினில்  வரவேணும்
முறுகு திரிபுர மறுகு கனலெழ
முறுவ லுடையவர்  குருநாதா
முடிய கொடிமுடி  யசுரர் பொடிபட
முடுகு மரகத  மயில்வீரா
குறவர் மடமக ளமுத கனதன
குவடு படுமொரு  திருமார்பா
கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
குறுக விடவல  பெருமாளே.
555. உலையிக லொத்த வுடலினனல் பற்றி
யுடுபதியை முட்டி  யமுதூற
லுருகிவர விட்ட பரமசுக முற்று
வுனதடியை நத்தி  நினையாமற்
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
திகழ்முகவர் முத்து  நகையாலே
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டு
திருடனென வெட்கி  யலைவேனோ
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
கனகமயில் விட்ட  கதிர்வேலா
கருதலரின் முட்டி கருகிவரு துட்ட
கதவமண ருற்ற  குலகாலா
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
அருணைவளர் வெற்பி  லுறைவோனே
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
அரசுநிலை யிட்ட  பெருமாளே.
556. கடல்பரவு தரங்க மீதெழு  திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ  தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய  தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந  லங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரி  றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ  றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு  னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர்  தம்பிரானே.
557. கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
கயலெனபொற் சுழலும்விழிக்  குழல்கார்போல்
கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
கரகமலத் துகிர்விரலிற்  கிளிசேருங்
குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்
குவிமுலைசற் றசையமணிக்  கலனாடக்
கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
குனகிபொருட் பறிபவருக்  குறவாமோ
திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமித் திமிதிமெனட்
டிமிடிமிடிட் டிகுர்திமிதித்  தொலிதாளம்
செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்
டிகைசிலைபட் டுவரிபடச்  சிலைகோடித்
துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
தொகுதசைதொட் டலகையுணத்  தொடும்வேலா
துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
சுகமொடணைத் தருணகிரிப்  பெருமாளே.
558. கமலமொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
நிலைகு லைத்துப் பொற்க டத்தைத் தமனிய
கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற  இளநீரைக்
கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத  னபிஷேகம்
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ  டிருதாளம்
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக  ளுறவாமோ
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட  எனவோதிச்
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்
தசைகள் பட்சித் துக்களித்துக் கழுதொடு  கழுகாட
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென
அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு  மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள்  பெருமாளே.
559. கரிமுகக் கடகளிற் றிதிககற் பகமதக்
கஜமுகத் தவுணனைக்  கடியானை
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
கனிவயிற் றினிலடக்  கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
தமர்புரிக் கணபதிக்  கிளையோனே
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
றியைமிகுத் தறுமுகக்  குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக்க டிவளக்
கையில்பிடித் தெதிர்நடத்  திடுமீசன்
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
கரியுரித் தணிபவற்  கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
துரியமெய்த் தரளமொய்த்  திடவீறிச்
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
சுடரயிற் சரவணப்  பெருமாளே.
560. கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
மதன தந்திரங் கடியன கொடியன
கனக குண்டலம் பொருவன வருவன  பரிதாவும்
கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன
கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன  இளையோர்முன்
செருவை முண்டகஞ் சிறுவன் வுறுவன
களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன
தெனன தெந்தனந் தெனதென தெனதென  எனநாதம்
தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
மருள்செய் கண்கள்கொண் டணைவர்ந்த முயிரது
திருகு கின்றமங் கையர்வச மழிதலை  யொழிவேனோ
மருவு தண்டைகிண் கிணிபரி புரமிலை
கலக லன்கலின் கலினென இருசரண்
மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு  மிகவேறாய்
வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு  வுளநாடி
அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக
சதத ளம்பணிந் ததிவித கலவியு
ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட  னணைவோனே
அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
அருணை வந்துதென் திசைதனி லுறைதரு  பெருமாளே.
561. காணாத தூர நீணாத வாரி
காதார வாரம  தன்பினாலே
காலாளும் வேளும் ஆலால நாதர்
காலால் நிலாவுமு  னிந்துபூமேல்
நாணான தோகை நூலாடை சோர
நாடோர்க ளேசஅ  ழிந்துதானே
நானாப வாத மேலாக ஆக
நாடோறும் வாடிம  யங்கலாமோ
சோணாச லேச பூணார நீடு
தோளாறு மாறும்வி  ளங்குநாதா
தோலாத வீர வேலால டாத
சூராளன் மாளவெ  குண்டகோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல்சி  றந்தமார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள்  தம்பிரானே.
562. காரா டக்குழ லாலா லக்கணை
கண்கள் சுழன்றிட வேமு கங்களி
னாலா பச்சிலை யாலே மெற்புசி
மஞ்சள் கலந்தணி வாளி கொந்தள
காதா டக்கலன் மேலா டக்குடி
யின்ப ரசங்குட மார்ப ளிங்கொளி  கொங்கைமாதர்
காசா சைச்செய லாலே சொக்கிடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
போலே நற்றெரு வூடா டித்துயல்
தொங்கல் நெகிழ்ந்திடை யேது வண்டிட
கால்தா விச்சதி யோடே சித்திர
மென்ப நடம்புரி வாரு டன்செயல்  மிஞ்சலாகிச்
சீரா டிச்சல நாள்போய் மெய்த்திரை
வந்து கலந்துபி ரோட வங்கமொ
டூடா டிப்பல நோயோ டுத்தடி
கொண்டு குரங்கென வேந டந்துசொல்
சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
டங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளி  யுங்கண்மாறிச்
சேரா மற்பொறி கேளா மற்செவி
துன்பமொ டின்பமு மேம றந்துபின்
ஊரார் சுற்றமு மாதோர் மக்களு
மண்டியு மண்டையு டேகு விந்திது
சீசீ சிச்சிசி போகா நற்சனி
யன்கட வென்றிட வேகி டந்துடல்  மங்குவேனோ
மாரோன் முப்புர நீறா யுற்றிட
அங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலி
தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை
கங்கை யிளம்பிறை யார ணிந்தவர்
மாடே றிக்கட லாலா லத்தையு
முண்டவரெந்தை சிவாநு பங்குறை  யென்றன்மாதா
மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி
யம்பிகை சங்கரி மோக சுந்தரி
வேதா மக்கலை ரூபாள் முக்கணி
ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்
மாஞா னக்கும ராதோ கைப்பரி
யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர்  தொண்டுபாடச்
சூரார் மக்கிட மாமே ருக்கிட
அங்கட லெண்கிரி யோடி பங்கொடு
தீபே ழற்றிட பாதா ளத்துறை
நஞ்சர வின்பண மாயி ரங்கெட
சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
விண்கணி றைந்திட வேந டம்புரி  கின்றவேலா
சோர்வே தத்தலை மேலா டிச்சுக
பங்கய செங்கர மோட கம்பெற
வாகா னக்குற மாதோ டற்புத
மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்
தூணோ டிச்சுட ராகா சத்தைய
ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ்  தம்பிரானே
563. காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
காகளம டங்கவுமு  ழங்கு மதனாலே
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
காமன்விடு விஞ்சுகணை  அஞ்சு மலராலே
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
ஓரிரவு வந்தெனது  சிந்தை யழியாதே
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
லாவிய டம்பமலர்  தந்த ருளுவாயே
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
ராதிபர வும்படிநி  னைந்த குருநாதா
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
யாளுமுர முந்திருவும்  அன்பு முடையோனே
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
வேலையலை யும்பகையும்  அஞ்ச விடும்வேலா
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
வீதியிலெ ழுந்தருளி  நின்ற பெருமாளே.
564. கீத விநோத மெச்சு  குரலாலே
கீறு மையார் முடித்த  குழலாலே
நீதி யிலாத ழித்து  முழலாதே
நீமயி லேறி யுற்று  வரவேணும்
சூதமர் சூர ருட்க  பொருசூரா
சோண கிரீயி லுற்ற  குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ  லருள்வோனே
ஆனை முகார்க னிட்ட  பெருமாளே.
565. குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ  குழையாத
குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ  கொடியேன்யான்
பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
புலையனிவ னெனவுலக மேசப் போக்கென
பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள்  பெருகாதே
புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
பொதுவகையி லருணைநிலை  நீள்கர்த் தாத்தென
புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட  நினையாதோ
அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய  அறிவோனே
அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
தருமமுது சரவணையில் வாவித் தேக்கியெ
அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய  இளையோனே
சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட
துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட  முனிவோனே
துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை
கரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை  பெருமாளே.
566. குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
குலவனு மாய்நாடு காடொடு  தடுமாறிக்
குனிகொடு கூனீடு மாகிடு கிழவனுமாயாவிபோய்விட
விறகுடனே தூளி யாவது  மறியாதாய்ப்
பழயச டாதார மேனிகழ் கழியுடல் காணா நிராதர
பரிவிலி வானாலை நாடொறு  மடைமாறிப்
பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாதபோதக
பதியழி யாவீடு போயினி  யடைவேனோ
எழுகடல் தீமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
மிரவியும் வாய்பாறி யோடிட  முதுசேடன்
இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி
யிருபிள வாய்வீழ மாதிர  மலைசாய
அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்
அவுணர்த மாசேனை தூளெழ  விளையாடி
அமரினை மேவாதசூரரை அமர்செயும் வேலாயுதாவுயர்
அருணையில் வாழ்வாக மேவிய  பெருமாளே.
567. கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
கேவலம தான அற்ப  நினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
கேடுறுக வேநினைக்கும்  வினையாலே
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
மேதினியெ லாமுழற்று  மடியேனை
விடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
வீறுமயில் மீதிலுற்று  வருவாயே
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள்  குடியேற
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
நீலநிற மால்தனக்கு  மருகோனே
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபைவட கோபுரத்தி  லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
தோளின்மிசை வாளெடுத்த  பெருமாளே.
568. கோடான மடவார்கள்  முலைமீதே
கூர்வேலை யிணையான  விழியூடே
ஊடாடி யவரோடு  முழலாதே
ஊராக திகழ்பாத  மருள்வாயே
நீடாழி சுழல்தேசம்  வலமாக
நீடோடி மயில்மீது  வருவோனே
சூடான தொருசோதி  மலைமேவு
சோணாடு புகழ்தேவர்  பெருமாளே.
569. கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
கூறுசெய்த ழித்து ரித்து  நடைமாணார்
கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட
கோபநுத லத்த ரத்தர்  குருநாதா
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
நீறெழமி தித்த நித்த  மனதாலே
நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
நீலமயில் தத்த விட்டு  வரவேணும்
ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
ஆரமது மெத்து சித்ர  முலைமீதே
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
ஆறிருதி ருப்பு யத்தில்  அணைவீரா
தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
சீருறவு ளத்தெ ரித்த  சிவவேளே
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
தேவர்சிறை வெட்டி விட்ட  பெருமாளே.
570. சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
திலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ்  தனிலேறிச்
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக  விழிசீறிப்
புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
புரிவளை கைக்குட் கலின்க லென்றிட  அநுராகம்
புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள்  மறவேனே
கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
கணகண கட்கட் கணின்க ணென்றிட  நடமாடும்
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள்  புயவீரா
அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட  வருவோனே
அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்
தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள்  பெருமாளே.
571. சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே  பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
திகைலோ கமெலா  மநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோ
ரிளையோ னெனவே  மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா  அருள்வாயே
தவலோ கமெலா முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோ  யசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
தவம்வாழ் வுறவே  விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
கடனா மெனவே  அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
கனல்மால் வரைசேர்  பெருமாளே.
572. சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்
செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந்  துன்பமேவு
செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்
தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்
சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந்  தொன்றுநாயேன்
கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்
குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்
கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண்  டன்பரோடே
கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்
புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்
கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன்  சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந்  தண்டர்பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிடிமிட டிகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ்  சிந்திமாளச்
சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்
திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்
செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண்  டஞ்சல்பாடத்
திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்
கவுரிமுன முருகவொரு கங்கைகண் டன்புறுந்
திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந்  தம்பிரானே.
573. சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றுநளி
னத்தி லப்புவென ரத்த முற்றிசுக
சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை  வந்துகோலத்
தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக
வட்ட மிட்டுடல் வெப்ப முற்றுமதி
சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினடை  விஞ்சையாலே
கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை
யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்
கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை  அந்தமேவிக்
கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி
லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி
கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல்  மங்குவேனோ
தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட
ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு
சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன்  மருகோனே
செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி
யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு
சித்தனைத்தையும்வி ழித்தசத்தியுமை  தந்தபாலா
தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை
யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசை
தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின்  மண்டும்வேலா
தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு
றத்தி கற்பகவ னத்தி சித்தமவை
தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ்  தம்பிரானே.
574. செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
கும்பத் தந்திக் குவடென வாலிய
தெந்தப் பந்தித் தரளம தாமென  விடராவி
சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
திண்டுப் புந்தித் திடுகனி தானுமு  னிதழாமோ
மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை
கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென  முறையேய
வந்தித் திந்தப் படிமட வாரொடு
கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு
மந்தப் புந்திக் கசடனெ நாளுன  தடிசேர்வேன்
நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை  யுகிராலே
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
நந்திக் கம்பத் தெழுநர கேசரி
நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென  மிகநாடி
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி
விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர்  புனமீதே
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
துங்கத் துங்கத் கிரியரு ணாபுரி
வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய  பெருமாளே.
575. செயசெய அருணாத் திரிவிச யநமச்
செயசெய அருணாத் திரிமசி வயநச்
செயசெய அருணாத் திரிநம சிவயத் திருமூலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
செயசெய அருணாத் திரிவய நமசிச்
செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் தெனமாறி
செயசெய அருணாத் திரிதனில் விழிவைத்
தரகர சரணாத் திரியென உருகிச்
செயசெய குருபாக் கியமென மருவிச் சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
திருவடி சிவவாக் கியகட லமுதைக் குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
கணமிது வினைகாத் திடுமென மருவச்
செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச்
சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
சிவகிரி யருணாத் திரிதல மகிழ்பொற்  பெருமாளே.
576. தமரகு ரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
தழலுமிழ் கண்களுங் காள மொத் கொம்பு முளகதக்  கடமாமேல்
தனிவரு மந்தகன் பாசம் விட்டெறிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து
தமரழ மைந்தருஞ் சோக முற்றிரங்க மரணபக்  குவமாநாள்
கமலமு கங்களுங் கோம ளத்தி லங்கு
நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு
கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க தமுமடற்  சுடர்வேலுங்
கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த
மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை
கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து வரமெனக் கருள்கூர்வாய்
இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
யிளமுலை யின்செழும் பால்கு டித்தி லங்கு மியல்நிமிர்த் திடுவோனே
இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற
ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த அயிலுடைக்  கதிர்வேலா
அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
கழுவி லுதைந் துதைந் தேற விட்டு நின்ற
அபிநவ துங்ககச் காந திக்கு மைந்த அடியவர்க கெளியோனே
அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை
தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ
லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த அறுமுகப்  பெருமாளே.
577. தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்
தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின்  சுவைசேருந்
தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்
சரிரர்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின்  சுடர்பாயக்
குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்
கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின்  கொடிமாதர்
குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்
சரணூபுர குரலோசையு மோந்திடு மாண்டலையின்
கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுன்  தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் றியல்பேரி
திசைமுடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
கரிதேர்பரி யசுரர்கள் மாண்டிட நீண்டரவின்
சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் கதிர்வேலா
கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்
தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவன்
கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் குரவோனே
கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்
சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்
கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண்  பெருமாளே.
578. தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
சடையை வளர்த்துப் புரிந்து  புலியாடை
சதிரொ டுவப்பப் புனைந்து விரகொ டுகற்கப் புகுந்து
தவமொ ருசத்தத் தறிந்து  திருநீறு
கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
கதறு நிலைக்கைக் கமர்ந்த  எழிலோடே
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
கவலை யொழித்தற்  கிரங்கி  யருள்வாயே
அலைக டலிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து
மமரு லகத்திற் புகுந்து  முயரானை
அருளொ டுகைப்பற றிவந்து மருண கிரிப்புக் கிருந்து
மறிவு ளபத்தர்க் கிரங்கு  மிளையோனே
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
வறிது நகைத்திட் டிருந்த  சிவனார்தாம்
மதலை புனத்திற் புகுந்து டிவுற்றுத் திரிந்து
மறம யிலைச்சுற் றிவந்த  பெருமாளே.
579. திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள்  மிகநாணார்
சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
சிரித்து மானடர் சித்தமு ருக்கிகள்  விழியாலே
வெருட்டி மேல்விழு பப்பற மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி  மிகநீறால்
விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
விடுத்துநானொரு மித்திரு பொற்கழல்  பணிவேனோ
தரித்த தோகண தக்கண செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு  எனதாளந்
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
மிடக்கை தாளமு மொக்க டித்தொளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென  கணபூதம்
அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ
லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண  அறவேதான்
அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
திருக்கை வேல்தனை விடடரு ளிப்பொரும்
அருட்டு காவரு ணைப்பதி யுற்றருள்  பெருமாளே.
580. தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
தேனளி சூழ மொய்த்த  மலராலே
சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
சீத நிலாவெ றிக்கு  மனலாலே
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
போர்மத ராஜ னுக்கு  மழியாதே
போகமெ லாநி றைத்து மோக விடாய்மி குத்த
பூவையை நீய ணைக்க  வரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
மாயனு மாத ரிக்கு  மயில்வீரா
வானவர்  சேனை முற்றும் வாழம ராப திக்குள்
வாரண மான தத்தை  மணவாளா
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
வீதியின் மேவி நிற்கு  முருகோனே
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
வேலடை யாள மிட்ட  பெருமாளே.
581. தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
தோகை யர்க்கு நெஞ்ச  மழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
சூழ்பி ணிக்க ணங்க  ளணுகாதே
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
பாசம் விட்டெறிந்து  பிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
பாடல் மிக்க செஞ்சொல்  தரவேணும்
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
வீர பத்ர கந்த  முருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
வேலை யிற்றொ ளைந்த  கதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
கோம ளக்கு ரும்பை  புணர்வோனே
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
கோபு ரத்த மர்ந்த  பெருமாளே.
582. பாண மலரது தைக்கும்  படியாலே
பாவி யிளமதி கக்குங்  கனலாலே
நாண மழிய வுரைக்குங்  குயிலாலே
நானு மயிலி லிளைக்குந்  தரமோதான்
சேணி லரிவை யணைக்குந்  திருமார்பா
தேவர் மகுட மணக்குங்  கழல்வீரா
காண அருணையில் நிற்குங்  கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும்  பெருமாளே.
583. பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்சொற்  கொடியார்தாம்
பாடா வாடா வேடா வாலே
பாடா யீட்ற்  றிடைபீறுந்
தோலா லேகா லாலே யூனா
லேசூழ் பாசக்  குடில்மாசு
தோயா மாயா வோயா நோயால்
சோர்வாய் மாளக்  கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக்  கிரியோனே
ஞானா சாரா வானாள் கோனே
நானா வேதப்  பொருளோனே
வேலா பாலா சீலா காரா
வேளே வேடக்  கொடிகோவே
வீரா தாரா ஆறா தாரா
வீரா வீரப்  பெருமாளே.
584. புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
பொறியுட லிறந்து போன  தளவேதுன்
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி
பொருளென நினைந்து நாயெ  னிடர்தீர
மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு
மணிகிரி யிடங்கொள் பாநு  வெயிலாசை
வரிபர வநந்த கோடி முனிவர்கள் புகழ்ந்து போத
மயில்மிசை மகிழ்ந்து நாடி  வரவேணும்
பணைமுலை யரம்பைமார்கள் குயில்கிளி யினங்கள்போல
பரிவுகொ டுகந்து வேத  மதுகூறப்
பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
படை கட லிறந்து போக  விடும்வேலா
அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல
அமளியில் களங்க ளோசை  வளர்மாது
அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக
அருணையின் விலங்கல் மேவு  பெருமாளே.
585. புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
பொறையி லாத கோபீகன்  முழுமூடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடு போய்வீழு  மதிசூதன்
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி  குலபாதன்
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி  யருள்வாயே
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி  யொருசீதை
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன்  மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை  மயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு  பெருமாளே.
586. போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
பாரியைப் பொற்குவையுச்  சிப்பொழுதிலீயும்
போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
தோரைமெச் சிப்பிரியப்  பட்டுமிடிபோகத்
த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
தாரமுட் பட்டதிருட்  டுக்கவிகள்பாடித்
தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
சேல்வளைப் பட்டடிமைப்  பட்டுவிடலாமோ
ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
றாதரிக் கைக்கருணைத்  துப்புமதில்சூழும்
ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
காகவெற் றிக்கலபக்  கற்கியமர்வோனே
தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
தூணிமுட் டச்சுவறத்  திக்கிலெழுபாரச்
சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
சூரனைப் பட்டுருவத்  தொட்டபெருமாளே.
587. மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை  வடிவேலை
வாளை வனத்துற் பலத்தி னைச்செல
மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்
மாய வலைப்பட் டிலைத் துடக்குழல்  மணநாறும்
ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு
வூறு முபத்தக் கருத்த டத்தினை
யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு  தடுமாறும்
ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையு
பாதியை யொப்பித் துனிப்ப வத்தற
வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை  தெளியாதோ
சானகி கற்புத் தனைச்சு டத்தன
சோக வனத்திற் சிறைப் படுத்திய
தானை யரக்கற் குலத்த ரத்தனை  வருமாளச்
சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன்  மருகோனே
சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
லானை மதத்துக் கிடக்கு மற்புத
சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ  மணிநீபத்
தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடி
யாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர்
சூரனை வெட்டித் துணித்த டக்கிய  பெருமாளே.
588. முகத்து லக்கிக ளாசா ரவினிகள்
விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்
முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள்  முந்துசூது
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை
பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ
முயற்று பொட்டிகள் மோகா வலமுறு  கின்றமூடர்
செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்
திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்
சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை  சிந்தைமாயத்
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப
கடத்த சட்டைகள் மூதே விகளொடு
திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி  யென்றுசேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு  தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
திகுத்தி குத்திகு தீதோ எனவொரு
துவக்க நிர்த்தன மாடா வுறைபவர்  தொண்டர்பேணும்
அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்
வளர்த்த கற்பக மாஞா லியுமகி
ழவுற்ற நித்தபி ரானே அருணையில்  நின்றகோவே
அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ
முறித்து ழக்கிய வானோர் குடிபுக
அமர்த்தி விட்டசு வாமீ அடியவர்  தம்பிரானே.
589. மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
வாளி யொத்தவிழி யார்மு கக்கமல
மீது பொட்டிடழ கார்க ளத்திலணி  வடமாட
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்
வீறிடத்துவளு நூலொ டொத்தஇடை  யுடைமாதர்
தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு
நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்
சோர நற்றெருவு டேந டித்துமுலை  விலைகூறிச்
சூத கச்சரச மோடெ யெத்திவரு
வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல்
தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க  ளுறவாமோ
சேக ணச்செகண தோதி மித்திகுட
டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
தீத கத்திமித தோவு டுக்கைமணி  முரசோதை
தேச முட்கவர ஆயி ரச்சிரமு
மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்
தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற  விடும்வேலா
ஆக மத்திபல கார ணத்தியெனை
யீண சத்தியரி ஆச னத்திசிவ
னாக முற்றசிவ காமி பத்தினியின்  முருகோனே
ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு
மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி
ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ்  பெருமாளே.
590. மொழிய நிறங்கறுத்து மகர வினங்கலக்கி
முடிய வளைந்தரற்று  கடலாலும்
முதிர விடம்பரப்பி வடவை முகந்தழற்குள்
முழுகி யெழுந்திருக்கு  நிலவாலும்
மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
மயல்தணி யும்படிக்கு  நினைவாயே
மரகத துங்கவெற்றி விகட நடங்கொள்சித்ர
மயிலினில் வந்துமுத்தி  தரவேணும்
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
னமுத தனம்படைத்த  திருமார்பா
அமரர் புரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
மருணை வளம்பதிக்கு  மிறையோனே
எழுபுவ னம்பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க
எழுசயி லந்தொளைத்த  சுடர்வேலா
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
ரிவர்கள் பயந்தவிர்த்த  பெருமாளே.
591. வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறள்சூலை குட்டமொடு  குளிர்தாகம்
மலிநீ ரிழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
வருநீ ரடைப்பினுடன்  வெகுகோடி
சிலைநோ யடைத்தவுடல் புவிமீ தெடுத்துழல்கை
தெளியா வெனக்குமினி  முடியாதே
சிவமார் திருப்புகழை எனுநா வினிற்புகழ
சிவஞான சித்திதனை  யருள்வாயே
தொலையாத பத்தியுள திருமால் களிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை  யருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள்  முருகோனே
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுரா ரிறக்கவிடு  மழல்வேலா
அமுதா சனத்திகுற மடவாள் கரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை  பெருமாளே.
592. விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
விழிகொடு வாபோவென  வுரையாடும்
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
ம்ருகமத கோலாகல  முலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
அவனியு மாகாசமும்  வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
அடியவ ரோடாள்வது  மொருநாளே
வடகுல போபாலர்த மொருபதி னாறாயிரம்
வனிதையர் தோள்தோய்தறா  மபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
மகிபச தாகாலமு  மிளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
உலகுய வாரார்கலி  வறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
ஒருதனி வேலேவிய  பெருமாளே.
593. விதிய தாகவே பருவ மாதரார்
விரகி லேமனந்  தடுமாறி
விவர மானதொ ரறிவு மாறியே
வினைவி லேஅலைந்  திடுமூடன்
முதிய மாதமி ழிசைய தாகவே
மொழிசெய் தேநினைந்  திடுமாறு
முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந்  தருள்வாயே
சதிய தாகிய அசுரர் மாமுடீ
தரணி மீதுகுஞ்  சமராடிச்
சகல லோகமும் வலம தாகியே
தழைய வேவருங்  குமரேசா
அதிக வானவர் கவரி வீசவே
அரிய கோபுரந்  தனில்மேவி
அருணை மீதிலெ மயிலி லேறியே
அழக தாய்வரும்  பெருமாளே.
594. விந்துப் புளகித இன்புற் றுருகிட
சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி
விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி
யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி
விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு
மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு
மெழுக்கி லுருவென வலித்து எழுமதி
கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு
விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு
கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு  மருள்கூர
மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை
யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்
வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை
துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட
முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு
விதித்த முறைபடி படித்து மயல்கொள
தெருக்க ளினில்வறா கொஞ்சக் குயில்மொழி
விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி
துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென
நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு  வழியேபோய்ச்
சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை
கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ
டணைத்து மலரிதழ் கடித்து இருகர
மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர்
சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்
சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்
வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத
சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு
வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை
சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி
பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர்  நரைமேவித்
தன்கைத் தடிகொடு குந்திக் கவியென
உந்திக் கசனம றந்திட் டுளமிக
சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி
விழிப்பு மறைபட கிடத்தி மனையவள்
சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்
சண்டக் கருநம னண்டிக் கொளுகயி
றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை
பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல
சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ
ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை
தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு
கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு  முடலாமோ
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி
பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு
செம்பொற் குடகுழ வுந்தப் புடன்மணி
பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
செழித்த மறைசிலர் துதிப்ப முனிவர்கள்
களித்து வகைமணி முழக்க அசுரர்கள்  களமீதே
சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்
ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ
சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்
சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு
செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த
தும்பக் கருடன டங்கொட் டிடகொடி
மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்
நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல்
செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட
வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட
சிமக்கு முரகனு முழக்கி விடபட
மடைத்த சதமுடி நடுக்கி யலைபட  விடும்வேலா
தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி
பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி
கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய்
தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி
கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்
தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்
மிகுத்த புரமதை யெரித்த நகையினர்
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
தொந்திக் கடவுளை தந்திட் டவரிட
சுகத்தி மழுவுழை கரத்தி மரகத
நிறத்தி முயலக பதத்தி அருளிய  முருகோனே
துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை
ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்
சுகிப்ப மணவறை களிக்க அணையறு
முகத்தொ டுறமயல் செழித்த திருபுய
செம்பொற் கரகம லம்பத் திருதல
மம்பொற் சசியெழ சந்தப் பலபடை
செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை
சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள்
தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி
டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்
தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை
நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய  பெருமாளே.
595. வீறுபுழு கானபனி நீர்கள்பல தோயல்விடு
மேருகிரி யானகொடு  தனபார
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
மேகமனு காடுகட  லிருள்மேவி
நாறுமலர் வாசமயில் நூலிடைய தேதுவள
நாணமழி வார்களுட  னுறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத  மருள்வாயே
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
கோலமயி லானபத  மருள்வோனே
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
கூருசிவ காமியுமை  யருள்பாலா
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
மாரவிளை யாடிமண  மருள்வோனே
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
ஆதியரு ணாபுரியில்  பெருமாளே.
Share  
Bookmark and Share









































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக