வியாழன், 10 நவம்பர், 2011

ஆன்மிக சிந்தனைகள்

ராதே  கிருஷ்ணா 10 - 11 - 2011


ஆன்மீக சிந்தனைகள்

http://temple.dinamalar.com/


ஆன்மிக சிந்தனைகள்
Share  
Bookmark and Share





ஆன்மிக சிந்தனைகள் »ஆதி சங்கரர்

    * பக்திவேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடையவேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான். 
    * வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்படை காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம் தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை. 
    * குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம். 
    * செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள். 
    * குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்து விடுகிறார்கள்.
    -ஆதிசங்கரர்
    * நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
    * அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.
    * உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.
    * காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
    * பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.
    * தந்தைக்குக் கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கின்றனர் ஆனால் அறியாமைத் தளையை நீக்கி விடுவிக்க அவரவரால் மட்டுமே முடியும்.
    * சிரத்தையும், பக்தியும், தியானயோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார். 
    * உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக. 
    * மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.
    * பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.
    * பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள். நோயினால் தளர்ந்தபோன பின் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். 
    * ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

    * நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும். 

    * பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால், ஆசை மட்டும் மனிதனை விடுவதில்லை. 
    சம்பாதிக்கும் வரை தான் மதிப்பு
    மே 14,2008,
    19:29  IST
    குருடன் எவ்வாறு பிரகாசிக்கும் சூரியனை காண இயலாதோ அது போல, ஞானம் இல்லாதவன் உயிர்களில் இறைவனைக் காண இயலாது.நம் உயிரைப் பறிக்கும் காலதேவன் நம்மை விடாது நெருங்குவது அறிந்தும், நாம் பயிலும் சாத்திர அறிவு நம்மை பாதுகாக்கும் என்றெண்ணி மதிமயக்கத்தில் இருக்காதீர்கள். உற்ற துணை கோவிந்த நாம சங்கீர்த்தனமே. அவனை போற்றி வழிபடுங்கள். யமனின் பாசக்கயிற்றில் இருந்து தப்பிக்க இதுவே வழி. சம்பாதிக்கும்வரை மட்டுமே சொந்தபந்தங்கள் நம் மீது அன்பு காட்டும். எனவே, சொந்தபந்தம் மற்றும் நட்புகளிடம் தாமரை இலை நீர்த்துளி போல பட்டும் படாமல் வாழ்வதே சிறந்தது. பாலபருவத்தில் விளையாட்டில் கருத்து செலுத்துகிறோம். இளைஞனாய் திரியும் காலத்தில் காதல் விளையாட்டில் மனம் அலைபாய்கிறது. கிழப்பருவத்தில் குடும்பக்கவலைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. எவரும் மெய்ப்பொருளாகிய இறைவன் மீது நாட்டம் கொள்வதே இல்லை. இரவுக்குப் பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், வாட்டி எடுக்கும் குளிர்காலத்திற்குப்பின் வசந்த காலமும் மாறி மாறி வருகின்றது. காலம் மாறிமாறி வந்து லீலை புரிகின்றது. ஆயுள் தேய்ந்து கொண்டே போகின்றது. இப்படியிருந்தும் வீண்ஆசைகள் மட்டும் நம்மை விட்டு தேய மறுக்கிறது.

    * 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.
    * வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.
    * சந்திரனும் சூரியனும் அக்கினியும் அவனுடைய முக்கண்கள். வேள்வியின் சொரூபம் அவன்.
    * ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.

    தீமைக்கெல்லாம் காரணம் பணம்
    * செல்வத்தின் பாலுள்ள விருப்பை விடு. ஒன்றொன்றுக்குள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளுடன் திருப்தி அடை.
    * தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமே. உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. செல்வருக்குத் தம் மக்களிடமிருந்தே அச்சம் தோன்றும். எங்கும் இதே நிலைதான்.
    * உன் மனைவி யார்? உன் மகன் யார்? இவ்வுலகம் மிக விசித்திரமானது நீ யார்? யாருடையவன் நீ? நீ எங்கிருந்து வந்தாய்? இவ்விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்.
    * உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றையும் ஒரு கணத்தில் விழுங்கிவிடுவான். பொய்யான இப்பொருள்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு அவனிடம் சரணடைந்து விடு.
    * உணர்ச்சிவெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்.
    * ஆத்ம ஞானம் இல்லாத மூடர் பயங்கர நரகங்களையே அடைவர். இவர்கள் கோயிலிலோ, மரத்தடியிலோ வசிக்கலாம். தரையில் படுத்துறங்கலாம். மான்தோல் போர்த்துக் கொள்ளலாம். விஷய போகங்களை துறக்கலாம். இத்துறவுகளால் யாருக்கு இன்பம் ஏற்படப் போகிறது?
    * நண்பனிடமோ, பகைவனிடமோ, மகனிடமோ, உறவினிடமோ, யுத்தத்தின் பாலோ, சமாதானத்தின்பாலோ பற்று வைக்காதே. நீ விரைவில் பரம நிலை அடைய விரும்பினால், எதிலும் சமபுத்தியுடையவனாக இரு. உண்மையைப் பொய்யினின்று வேறுபடுத்தி அறி.
    * செல்வத்தின் பாலுள்ள விருப்பை விடு. ஒன்றொன்றுக்குள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளுடன் திருப்தி அடை. * தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமே. உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. செல்வருக்குத் [...]
    குரு என்பவர் உண்மையை அறிந்தவர். தன்னை அண்டின சீடர்களின் நலனுக்காக இடைவிடாது பாடுபடுபவர். தூயோன் என்பவன் உள்ளமும் மனமும் தூய்மையாக இருக்கிறவன். பண்டிதன் என்பவன் விவேகி.
    சம்சாரத்தில் சாரமாக இருப்பது எது? அடிக்கடி இதை நினைத்துக் கொண்டிருப்பதேயாகும். 'சம்சாரத்தில் ஏது சாரம்' என்று நினைத்துக் கொண்டே இருந்தால் பற்றைவிட்டுப் பிறப்பை அறுக்கலாம்.
    சூரன் என்பவன் துன்மார்க்கத்தில் மனம் போகாமல் மனதை அடக்குகிறவன்; பெண்களின் பார்வைகளான பாணங்களால் அடிபடாதவன். சமர்த்தன் என்பவன் பெண்களின் நடையினால் வஞ்சிக்கப்படாதவன். குருடன் என்பவன் படித்திருந்தும் கெட்ட காரியம் செய்பவன். செவிடன் என்பவன் இதத்தை நல்லதை கேட்காதவன்.
    இந்தப் பிரபஞ்சம் பிரியமாகப் பேசக் கற்றுக் கொண்டு தர்மத்தை அனுஷ்டிப்பவனுக்கு மட்டுமே வசப்படும்.
    லட்சுமி சுறுசுறுப்பான சித்தமுடையவனையும், நீதி தவறாத நடையுடை பாவனையுடையவனையுமே விரும்புவாள். முயற்சி செய்பவனுக்கே பயன் கிடைக்கும்.
    இரவும் பகலும் சிந்திக்கத்தக்கது ஈஸ்வரனுடைய பாதார விந்தங்களே; மனிதரால் எப்போதும் ஸ்மரிக்கத் தக்கது ஹரிநாமமே! சம்சாரமல்ல. கண்ணிருந்தும் குருடர் நாஸ்திகரே.
    எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது உலோபம் எனும் கருமித்தனமே. எந்தப் பொருள் நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறதோ அதுவே உயர்மதிப்புள்ள செல்வம்.
    ஆண்டவனைப் பக்தியுடன் ஆராதிப்பவனுக்கே ஐஸ்வரியம் உண்டாகும். உடலெடுத்தவனுக்குப் பெரிய பாக்கியம் ஆரோக்கியம். செய்யக் கஷ்டமானது மனதை இடைவிடாது தடுத்துக் கட்டிப் போடுவதே.
    ''ஹரியை நான் துதிக்கிறேன். அவன் சர்வவியாபி. இந்த உலகம் தோன்றுவதற்கு காரணமான பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் வகையில் தான், சம்சார சக்கரம் அவனிடம் சுழல்கிறது. இந்த உலகம் அவனிடமிருந்தே தோன்றி உள்ளது. அது ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதும், இன்ப துன்பங்களின் மூலம் இயங்குவதும் அவனால்தான். அவன் ஆனந்தமே வடிவானவன். பூரணமாக இருப்பவன். எண்ணற்ற குணங்களை உடையவன். அவனையன்றி வேறு ஏதுமே இவ்வுலகில் இல்லை.

    அவன் அனைவருக்குள்ளும் வசிக்கிறான். அவனது உடலே நமது உடல். எல்லாம் தெரிந்த அவனை எவராலும் அறிய முடியாது. அவனே உண்மைப்பொருள். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வேள்வி என அவன் பலவிதமாக கூறப்படுகிறான்.

    ஏக பரமாத்மாவாகிய அவன் விவரிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதன் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஐக்கியப்படுகிறான்.

    சிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.

    விஷ்ணு பிரபுவே! என் கர்வத்தை அழித்துவிடு. என் மனத்தின் தீய போக்குகளை அடக்கு. விஷய இச்சைகளான கானல் நீரை நீக்கு. எவ்வுயிரின்பாலும் உள்ள உன் கருணையை என்னிடமும் காட்டு. இந்த சம்சார சாகரத்தினின்று என்னை விடுவித்துவிடு. பல அவதாரங்கள் எடுத்து உலகை நீ என்றும் காக்கிறாய். இவ்வுலக துன்பங்களைக்கண்டு அஞ்சி, இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்''.
      * பழமையான பெரிய ஆசாரியர்களின் உபதேசங்களில் நம்பிக்கை கொள்ளுங்கள். உலக இன்பங்களில் ஒரு பொழுதும் அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள். * இறைவனுடைய மகிமை பற்றியும் அவனுடைய படைப்பின் அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே அடிக்கடி பயிலுங்கள். * பரமனுடைய திருநாமங்களையும் [...]
      *கடவுளின் பக்தர்களுக்குப் பணிபுரிவதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இருதயத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.* [...]
      * இறைவன் தொண்டினையும், அடியவர்களின் தொண்டினையும், ஆசிரியரின் தொண்டினையும் சமநிலையில் கருதிச் செய்யவேண்டும். முன்னோர்கள் [...]
       இறைவனை மகிழ்விப்பதை விட அடியார்களை மகிழ்விப்பது சிறந்தது; இறைவனிடம் செய்யும் குற்றங்களை விட அடியார்களிடம் செய்யும் [...]
      * ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. [...]







    கிருஷ்ண ஜெயந்தி
    ஆகஸ்ட் 31,2010,
    19:08  IST
    * வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். "எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
    * அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
    * கிருஷ்ணலீலையைக் கேட்டால் பசி, தாகம் போன்ற உலகியல் விஷயங்கள் நமக்கு தோன்றாது. மதுரமான கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
    * புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய கண்கள் தாமரை மலர் போல மலர்ந்துள்ளன. வசீகரமான மயில் இறகு தலையில் அசைய கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்ததுபோல நம் உள்ளத்தை மயக்குகிறார். கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர், நமக்கு மழை போல் அருளை வாரி வழங்குகிறார்.

    -வேதாந்த பிரபுபாதா



    மனப்புயலை அடக்கிவிடு
    டிசம்பர் 06,2007,
    19:04  IST
    * தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.
    * சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.
    * எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.
    * ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.
    * வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.
    * சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்.


    இன்று மகாசங்கடஹர சதுர்த்தி
    ஆகஸ்ட் 25,2010,
    22:08  IST
     ஆவணி தேய்பிறை சதுர்த்தியை, மகாசங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கிறோம். இந்நாளில் பாரதியார் அருளிய விநாயகர் துதியை படித்து அருள் பெறுவோம்.
    * கேட்டதை அருளும் கற்பக மூர்த்தியே! உன்னைப் போற்றுகின்றேன். ஆனை முகத்தோனே! உன் மலர் போன்ற திருவடிகளுக்கு வெற்றி உண்டாகட்டும். அருள்நிறைந்தவனே! நீ என் இதயத்தாமரையில் எப்போதும் வீற்றிருக்க வேண்டும்.
    * நிலவினைத் தலையில் சூடியிருப்பவனே! உன் திருவடிகளை சிந்திப்பவருக்கு நன்மைகள் பல உண்டாகும். ஆண்மை பெருகும். எட்டுத்திக்கும் வெற்றிக்கொடி நாட்டும் புகழ் மேலோங்கும்.
    * விநாயகனே! உன்னை வணங்கினால் அச்சம் தீரும். ஆற்றல் பெருகும். விஷம், பகை, நோய் போன்ற தீமைகள் பறந்தோடும். நித்யவாழ்வு உண்டாகும். வித்தைகள் வளரும். என்றென்றும் நிலைத்திருக்கும் அமரவாழ்வு வந்து சேரும்.
    * கணபதியே! திருவருளை என் மீது பொழிவாயாக. அதற்கு நன்றிக்கடனாக உனக்கு ஒரு பொற்கோயில் கட்டி வழிபடுவேன். வீணாகக் காலம் கழிக்காமல் சக்தி மைந்தனும், சங்கரன் புதல்வனுமான உனது திருவடிகளைச் சரணடைகிறேன்..

    குழந்தைகளுக்கு தெய்வப் பெயரிடுங்கள்
    செப்டம்பர் 17,2009,
    16:35  IST
    * நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவனே நம்மை வழி நடத்துபவன். அதனால், பக்தி மார்க்கத்தை விட்டு விலகுதல் கூடாது.அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான். 


    * கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் வழியாகும். நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை.
    * பூஜை செய்தாலும், மந்திரங்களை ஜெபித்தாலும் இறைவனை நினைப்பது தான் முக்கியம். இறைவன் நமக்கு துணை செய்கிறான் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. இதனால், நாம் செய்யும் செயல்கள் சுலபமாகின்றன. மனதில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.
    * குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமங்களைப் பெயரிடுங்கள். பிள்ளைகளை அன்போடு கூப்பிடும்போது, நம்மையும் அறியாமல் நாமஜபம் செய்த புண்ணிய பலனைப் பெற்றவர்களாகி விடுவோம்.
    -ஹரிதாஸ்கிரி சுவாமி



     ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * ஒரு பிறவியில் செய்த பாவத்தை மற்றெரு பிறவியில் தீர்த்துக் கொள்ளட்டும் என்பதற்காக, ஈஸ்வரன் கருணையுடன் மறுபடியும் பிறவியைத் தருகிறான்.* பகவானிடம் பக்தி உண்டாகவும், அவனது அருள் கிடைக்கவும் முதலில் பிறருக்கு உதவி செய். மனம் பக்குவமடைந்தால் உண்மையான பக்தியும், ஈஸ்வரனின் அருளும் கிடைக்கும்.* [...]
      * இறைவனின் அழகு, கருணை, சக்தி, ஞானம் ஆகிய கல்யாண குணங்களை கடைபிடித்தால் நமது தோஷங்கள் நீங்கி நல்லவர்களாகிறோம்.* முளைக்கிற போதே பயிரைக் கவனிப்பது போல, குழந்தைகளாக இருக்கிற போதே, நல்ல ஒழுக்கத்தையும், பக்தியையும் கற்றுக்கொடுத்தால் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.* தனக்கென்று எதுவும் [...]
      * மனம், வாக்கு, உடம்பு மற்றும் பணத்தால் நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். * ஒரு பொருளைப் பெற மனிதன் முயற்சி செய்கிறான். நியாயமான வழியில் கிடைக்காவிட்டால் குறுக்கு வழியில் பெற முயற்சிப்பது பாவம்.* விக்கிரமாதித்தன் கதையில் கூறப்பட்ட வேதாளத்தை போன்றது மனம். நம் மனத்தை நமக்கு [...]
      * மனதில் ஏற்படும் ஆசைகள் தான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதனால் பல நேரங்களில் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் ஏற்படாது.* எல்லோரும் சாந்தமாக இருந்தால் குற்றங்களும் நோய்களும் இராது.* ஜனங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். தப்பு தண்டாவில் சிக்கிக் கொண்டு கஷ்டப்படக் கூடாது. [...]
      * எந்த தெய்வத்தின் மூலம் எந்த பலன் கிடைக்க வேண்டுமானாலும் விநாயகரை வணங்கினாலே போதும். அவர் அந்த தெய்வத்திடம் கூறி அருளை பெற்றுத் தருவார்.* இஷ்டதெய்வம் இருந்தாலும், வம்சாவளியாக வரும் குலதேவதையை அவசியம் பூஜிக்க வேண்டும். இதற்கு முன் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம்' குட்டிக் கொள்ள வேண்டும்.* [...]
      * பிறரிடம், நம் அன்பை ஒப்புக்கு காட்டாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்.* வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டால், பொருளுக்காக எப்போதும் அலைய வேண்டிய அவசியமில்லை.* வெளிநாட்டு வியாபாரத்தால் அந்நியச் செலாவணி ஒரு தேசத்துக்கு கிடைக்கும். அதுபோல, மனிதனுக்கு மறு உலகத்தில் செலாவணி [...]
      * ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் மற்றொருவருக்கு துக்கத்தைத் தருகிறது. எது நடக்கவேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதுவே நடக்கிறது.* வீட்டுக்குப் பயனற்ற பொருட்களை வாங்குவதால் பணமும், காலமும் விரயமாகிறது. எதை வாங்கினாலும் அவசியம் தேவையா என சிந்தித்து வாங்குங்கள்.* மாதம் இரு முறையாவது [...]
      * அலைபாயக் கூடிய மனதை அடக்க முடியாது என பலர் எண்ணுகிறார்கள். அதற்கு சரியான ஒரு கடிவாளம் போட்டுவிட்டால் அலைபாய்ந்து கொண்டிருக்காது. * முயற்சி, பக்தி, தியானம் உள்ளவர்கள் மனதை வசப்படுத்திவிடுகிறார்கள். செயல்களில் ஒருமுகத்தன்மையோடு ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பார்கள்.* மனதில் ஏற்படும் ஆசைகளே [...]
      * ஒரு வண்டியைப் பார்த்தால் அதை வடிவமைத்தவன் ஒருவன் என்று நம்புகிறோம். ஆகவே, அவை தாமாகவே உண்டாகவில்லை. ஒரு உத்தேசத்தோடு ஒரு அறிவுஜீவி அதை உண்டாக்கி இருக்கிறான் என்று அறிகிறோம்.* எதைப்பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அதேபோல் தான் இந்த பிரபஞ்சத்தை செய்த ஒருவன் இருக்கிறான் [...]
      * பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடும் என்றால், நாம் செலுத்தும் பக்தியே நேராக முக்தியைக் கொடுத்துவிடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல் எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை. பலன்களைத் தருபவர் ஈஸ்வரனாகவே இருக்கிறார். * பாவ புண்ணியம் பார்த்து அனைவருக்கும் அனைத்து [...]
    1 - 10 of 13 பாகேஷ்

      * பசு என்றால் நம்மைப்போல் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். * நம் மனதிற்கும் பாலுக்கும் ஒற்றுமை பலவுண்டு. முதலில் உள்ளத்தை பால் போல் தூய்மை ஆக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை [...]
      * இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ. அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும்.* இறைவனிடம் எதைக் [...]
      * நல்லது கெட்டது பற்றி பாடம் கற்பிக்காமல், காலவாரியாக பல ராஜாக்கள் சண்டைபோட்டதை சரித்திரம் என்ற பெயரால் கற்றுக் கொடுப்பதில் எந்த பயனுமில்லை. வாழ்க்கைக்கு பயன்படும் படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம்.* புராணங்கள் பாவ புண்ணியங்கள் தொடர்பாக மக்களுக்கு பாடம் கற்பித்து, அவர்களை [...]
      * ஓய்வு பெற்றவர்கள் முழு நேரமும் சமூகத்தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். அலுவலகங்களுக்கு செல்லும் காலத்தில் குடும்ப பொறுப்பும் நிறைய இருந்திருக்கும். இப்போது அவற்றை கூடிய வரை குறைத்துக் கொண்டு, அதற்குப் பதில், ஜனங்களுக்கு தொண்டு செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க [...]
      * தயை என்பது ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். * தானம் செய்தது பற்றி வெளியில் சொல்ல வேண்டாம். நாலு பேருக்கு நாம் தானம் செய்ததை தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதுவும் கூட தோஷம் தான்.* நாம் செய்யும் பாவம் முழுவதையும் கருணையோடு மன்னிக்கும் இறைவன், சிலரை மட்டும் [...]
      * சேதுவில் அணை கட்டிய ராமனுக்கு அணில் செய்த உதவிபோல், நாமும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும்.* ஆசிரியர் கடமைக்கு கல்வி கற்று தராமல், மாணவனை சோதித்து சுத்தம் செய்து, நற்குணம் உள்ளவனாக, புத்தியுள்ளவனாக மாற்ற வேண்டும்.* அரசை எதிர்பார்த்து குறை கூறி கொண்டு இருக்காமல், [...]
      *குருகுல கல்வி முறையில் தெய்வ பக்திக்கும், குருபக்திக்கும் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. * வீட்டில் பெற்றோருக்கும், பள்ளியில் ஆசிரியருக்கும் கட்டுப்பட்டு மரியாதையாக நடந்து கொள்வது பிள்ளைகளின் கடமை. இதையும்விட, இஷ்டதெய்வத்திடம் பக்தி செலுத்துவதும் அவசியம்.*மாணவர்கள் தினமும் [...]
      * சாதாரணமாக ஒரு தப்புச் செய்கிற போது, ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே, இந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்றுகிறது. நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால் அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல அந்தத் தப்பை அகற்றிவிடும்.* [...]
      * அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது.* மந்திரங்களை நாம் கூறாமல் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. வழிபாட்டு நேரங்களில் மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.* [...]
      * எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனதை அன்பு மயமாகச் செய்து கொள்வதே அகிம்சை.* புத்திப்பூர்வமாக ஒரு தவறைச் செய்தால் தான் அது பாவமாகிறது, புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலும் பாவம் இல்லை.* நம்முடைய துன்பத்தையே பெரிதாக நினைத்துக் [...]
    11 - 20 of 13 பாகேஷ்

    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * ஒழுக்கம் இருக்கும் ஒவ்வொரு துறையும் அழகாக இருக்கிறது. இதனால் தான் பழங்காலச் சிற்பங்கள், சித்திரங்கள், எழுத்து உட்பட அனைத்தும் ஒழுங்காக, அழகாக இருக்கின்றன.* நாம் நல்லது செய்தால் ஈஸ்வரன் நமக்கு கைகொடுப்பார். அவர் நமக்குக் கை, கால், கண், ஆலோசிப்பதற்கு புத்தி கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் [...]
      * பெயருக்கு தொண்டு செய்தால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணியதாகத்தான் அர்த்தம்.* சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் ஆடம்பரமாக இல்லாமல் கணக்காயிருப்பது சிக்கனம். சிக்கனம் செய்யும் பணம் தர்மம் செய்வதற்கு உதவும்.* பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப அனைவரும் ஆசைப்பட [...]
      * மனதாலும், இனிமையான பேச்சாலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களை தினமும் செய்.* நம்மிடம் உள்ள பணமெல்லாம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு இருக்கட்டும்.* அனைத்து செயல்களிலும் அளவறிந்து நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகும்.* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற [...]
      * மனதினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டுவிடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.* அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக்கூடாது.* நம் துக்கங்கள் [...]
      * நல்லது செய்தால் இறைவன் நமக்கு கைகொடுப்பார். குறிப்பாக கை, கால், கண்களை வழங்கிய இறைவன், சிந்திப்பதற்கு புத்தியும் வழங்கியுள்ளார். சக்தியும், புத்தியும் இருப்பதற்குள் நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.* ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை, அப்படி மற்றவர்களைப் [...]
      * வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்து இருக்கிறோம். அவற்றை அதே வாக்கு, மனம், உறுப்புகளால் புண்ணியம் செய்து கரைத்துவிட வேண்டும்.* அவரவருக்குரிய கடமையை நியதியோடு பின்பற்றினால் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை உண்டாகும்.* குணத்தினாலும், உடலாலும் சேர்ந்து [...]
      * அவரவர் கடமையை சரிவர செய்தாலே மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை அனைத்தும் உண்டாகிவிடும். * மனசுத்தத்தோடு மகிழ்ச்சியாக இருங்கள். எங்கு சென்றாலும் அங்கு நல்லமுறையில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள். * மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அதே நிலையிலிருந்து அவர்களை முன்னுக்கு அழைத்துச் [...]
      * மனத்தாலும், வாக்காலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடமுள்ள பணம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு முதலில் இருக்க வேண்டும்.* துணியும், உடம்பும், வீடும் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.* மனம், வாக்கு, உடம்பு [...]
      * அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் கிடைக்கும்.*வாழ்வை எளிதாக்கிக் கொண்டால், அடிப்படை பொருள்களைக் கூட தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.* நமக்கு உணவு தருபவனுக்கு நல்ல உணவும், நமக்கு உடை தருபவனுக்கு நல்ல உடையும் கொடுக்கத் தவறி விட்டோம். நமது ஊர் கோயில் சுவாமியின் ஆடை,[...]
      * மனம் தூய்மை பெறவும், முன்வினைப் பயனைத் தாங்கிக் கொள்ளவும், புதிதாக பாவச்சுமையை ஏற்படுத்தாமல் இருக்கவும் தியானம் உற்ற துணையாக விளங்குகிறது. * அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்துவிட்டு, அடுத்த நிமிடமே நிழல் வந்து மூடிக் கொள்வது போல, உலகத்தின் [...]
    21 - 30 of 13 பாகேஷ்

    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர ஆடம்பரத்துக்கு அல்ல.* இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்பது இயற்கை வகுத்த நியதி. அச்சட்டத்தை நம்மால் மீற முடியாது. பூர்வ ஜென்மங்களில் வினையை விதைத்தோம். அவ்வினை தரும் பலன் இன்பமோ துன்பமோ இப்போது [...]
      * சத்தியம் என்றால், வாக்கும் மனதும் ஒன்றுபடுவது மட்டுமன்று. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம்.* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன் தான் குடி இருக்கிறார், ஒருவரை நமஸ்கரிக்கும் போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாக தான் அர்த்தம்.* மனம் தியானத்தில் நிலைத்து நிற்க, அசையாத [...]
      * சமூக சேவையும், தெய்வப்பணியும் கைகோர்த்து நடப்பதுடன், தெய்வத்தின் அனுமதியுடன் தேசப்பணி செய்ய வேண்டும்.* ஆசைகளை விடுவது முதலில் சிரமமாக இருக்கும், அம்பாளை வேண்டி அவளுடைய அருள் பலத்தால் தேறித் தெளிந்து வெற்றி பெற்ற பிறகு தான் எளிய வாழ்க்கையில் எத்தனை நிம்மதி இருக்கிறது என்பது தெரியும்.* [...]
      * இதயத்தில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற ஸ்விட்சைத் போட்டால், கடவுள் திவ்யமங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார்.* "பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்த வாழ்வில் சிக்கனமாய் இருப்பது' என்ற உயர்ந்த கொள்கையை கடைபிடித்தால் புண்ணியத்துக்கு புண்ணியமும், நிம்மதிக்கு நிம்மதியும் [...]
      * கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அதுபோல் நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி [...]
      * எதையும் கண்டிக்கும் அதிகாரம் இருப்பதாக நினைக்காமல், எதிலும் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முயலும் அதிகாரம் தான் நமக்கு உள்ளது.* உயர்ந்து மேல்நோக்கி வளரும் மனிதன் மற்ற பிராணிகளைவிட அதிகமான சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால், உண்மையில் நாம் துக்கத்தையே அதிகம் அனுபவிக்கிறோம்.* புரியாமல் [...]
      * சமூகப்பணியையும், தெய்வப்பணியையும் சேர்த்து செய்ய வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றைச் செய்வது சரியல்ல. தெய்வத்தின் ஒப்புதலுடன் தான் தேசப்பணியைச் செய்ய வேண்டும்.* நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவே இல்லை. அவற்றில் ஒரு ருசியை ஏற்படுத்திக் [...]
      * சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகிற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.* இறைவனை நினைத்துச் செய்யும் எந்தக் காரியத்துக்கும் பயன் உண்டு. அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.* நாம் நிலையாக நிற்க [...]
      * அவரவர் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் கூட எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன சமூகத்துக்கும் நல்லது.* பெண்கள் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக உள்ளனர். இவர்களின் பண்பு கெடுகிறதற்கு இடம் தரக்கூடாது.* இன்றைய [...]
      *பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மனநிறைவோடு இருப்பது தான்.*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற [...]
    31 - 40 of 13 பாகேஷ்


    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஈஸ்வரன் மறுபடியும் ஜென்மத்தை அளிக்கிறார்.* வாழ்க்கையில் போட்டி இருக்கிற வரை மனநிறைவு எவருக்கும் கிடைக்காது. வசதி அதிகரித்தாலும் வேறு ஏதோ வகையில் போட்டி இருக்கத்தான் செய்யும். * அனைவரிடம் அன்பாக இரு, [...]
      * பூர்வ ஜென்மங்களில் செய்த செயல்களுக்கு கடவுள் தருகிற பலன் அல்லது கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம்.* தியாகம் பண்ண வேண்டும் என்பதைவிட தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.* ஒரே தெய்வத்தை தொடர்ந்து வழிபடுவது சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவலாம். ஆனால், இன்னொரு [...]
      * ஒருவருக்கு ஆனந்தத்தை தரும் சம்பவம் மற்றொருவருக்கு துக்கத்தை தருகிறது. எது நடக்க வேண்டுமோ அது இறைவன் செயல் என்று நினைப்பதே சரியாகும்.* உடல், வாய், மனம், பணம் என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.  பாவத்திற்கு பிராயச்சித்தமாக அந்த நான்காலும் புண்ணியம் செய்ய வேண்டும். உடலால் பரோபகாரம், [...]
      * நம் உடல் சுத்தமாக, தண்ணீரில்  குளிக்கிறோம், ஆனால், அம்பிகையைத் தியானித்தால், தியானம் என்ற அந்த புனித நீரில் நம் மனமும் சுத்தமாகிறது.* பசியோ, கஷ்டமோ தாங்க முடியாமல் போனால் "அம்மா' என்று கத்தி கண்ணீர் விடுகிறோம். காரணம் உலகத்துக்கெல்லாம் தாயாக விளங்கும் பராசக்தி ஓடிவந்து நம் துயரை  [...]
      * குழந்தையாகவே இருக்க வேண்டும் என்று உபநிஷதம் கூறுகிறது. காரணம் குழந்தைப்பருவம் கபடம் இல்லாததுடன், கடவுளுக்கும் ஒப்பானதாகும்.* இறைவனை நினைத்துச் செய்யும் எந்தச் செயலுக்கும் பயன் உண்டு. அறியாமல் செய்தால் அதற்கும் பலன் உண்டு,* பழைய தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதை விடப் புதிதாக தவறேதும் [...]

      * சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில்  எழுகின்ற நல்ல எண்ணங்களை மட்டும் வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம். நல்ல விளைவுகளைத் தரும் நல்ல சொற்களைப் பேசுவதே சத்தியம்.* தர்மம், நீதி ஆகிய குணங்களைக் கொண்டவனே பண்புடையவன். எந்த சூழலிலும் தர்மத்தைப் பின்பற்றுபவனே [...]
      * மனதிலுள்ள ஆசைகளைக் குறைப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பம் குறைந்து ஆனந்தம் பெருகும். வெளியிலுள்ள பொருட்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வருவதில்லை, நம்மிடையே இருந்து தான் ஆனந்தம் பிறக்கிறது.* உடல் மற்றும் மனரீதியாக செய்யும் பாவத்தை போக்க புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* [...]
      * உலகில் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிற போது நாம் மட்டும் டாம்பீகங்களைச் செய்வது நியாயமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். செலவை தர்ம நியாயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டால், எத்தனையோ தானதர்மம் செய்யலாம்.* சிரமமும், செலவும் குறைச்சல் என்றாலும், வாயும் தொண்டையும் வற்றி விடுகிறவர்களுக்கு [...]
      * தீபாவளி அன்று நாம் மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது துணிகள் கட்டிக் கொள்வது என்பதோடு நிற்காமல், ஏழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், புதிய துணிகள் வழங்க வேண்டும். கோயிலிலுள்ள அறுபத்தி மூவர் உட்பட அனைத்து மூர்த்திகளுக்கும் தைலம் சார்த்தி, புது வஸ்திரம் அணிவித்தும் கொண்டாட வேண்டும்.* [...]
      * பொழுது போக்கையே வாழ்க்கைப் போக்காக, அதிலும் வழுக்கிவிடுகிற போக்காக ஆக்கிக் கொள்ளாமல், எந்த அளவோடு ருசித்துவிட்டு நிறுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நிறுத்திக் கொள்ள வேண்டும்.* எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டோ, மூக்கைச் சிந்திப் போட்டுக் கொண்டோ இல்லாமல், "ஆஹா' என்று எப்போதும் [...]
    41 - 50 of 13 பாகேஷ்

     ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * கடவுள் நமக்கு உடல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இப்பரந்த உலகம், தேவையான உணவு, உடை ஆகியவற்றையும் தந்திருக்கிறார். அதனால், நாள்தோறும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இதன் அடையாளமாகச் சிலர் உண்பதற்கு முன் கடவுளுக்கு நிவேதனமாக உணவைக் காட்டியபிறகு சாப்பிடத் துவங்குவர். * ஒவ்வொரு வீட்டிலும் [...]
      * கடவுள் நமக்கு கை, கால், கண் என்று எல்லா உறுப்புகளையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சிந்திப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். அந்த புத்தியால் இது நல்லது இது கெட்டது என்று செயலின் விளைவை யோசித்து அணுகவேண்டும்.* எச்செயலைச் செய்தாலும் அதனை முறையோடு செய்யப் பழகுதல் அவசியம். முறை தவறி [...]
        * கண்டதை எண்ணி மனதை குப்பைத்தொட்டி போல ஆக்கிவிட்டோம். அதைச் சுத்தப்படுத்தி, கடவுளை வைத்து வழிபட வேண்டும். கடவுள் நாமங்களைச் சொல்லி புண்ணியம் தேடுவதே பிறவிப்பயன்.* கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். உலக இயக்கங்கள் அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று [...]
      * இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே வழிபடுகிறோம். பொதுவாக, நம் வழிபாடு எதையாவது கடவுளிடம் கேட்பதாகவே இருக்கும். சில சமயங்களில் நாம் கேட்டது கிடைக்கும். சில சமயங்களில் அது நிறைவேறுவதில்லை. * நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ [...]
      * நாள் முழுவதும் இயந்திரங்களுடன் வேலை செய்வதால் நாமும் இயந்திரம் போல் ஆகிவிட்டோம். நம் மனதில் எப்போதும் அமைதியோ, தெளிவோ இருப்பதில்லை. அலுவலகம் சென்று வந்ததும் களைத்துப்போய் தூங்கி விடுகிறோம் அல்லது பொழுது போக்குகிறோம். தரமான நல்ல புத்தகங்களை படிக்கக் கூட நினைப்பதில்லை. * பெரும்பாலான [...]
       * எந்தவித குற்றமும் செய்யாத பாவமற்றவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவன் முகத்தில் பிரகாசமாய் ஜொலிக்கும். * ராமநாமத்தை தாரக மந்திரம் என்பார்கள். தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்கி மேலே போவது எனப்பொருள்.* நீ தானதர்மங்களைச் செய்தால் பலனை எதிர்பார்க்காமல் செய். பலன் கொடுக்க [...]
      * காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.* அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.* புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.* வாரத்தில் [...]
      *நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பூமியில் பிறப்பெடுத்துவிட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இவ்வுலகைவிட்டுப் போய் தான் ஆக வேண்டும். அதுவரை இந்தப்பிறவியால் நம் மனதில் எவ்வளவோ அழுக்கை ஏற்றுக்கொண்டு விடுகிறோம். * மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால் எவ்வளவோ பாவங்களைச் செய்துவிட்டோம். [...]
      * மனம் நிம்மதி பெற நல்லவர்களின் சேர்க்கை அவசியம். நல்லவர்களின் சேர்க்கையால் கடவுளைப் பற்றிய நினைப்பு உண்டாகும். கடவுளை நினைத்தால் கவலை விலகும்.* வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாகச் சொல்லிக் கொண்டு, அன்றாடத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் தவறான ஆசைகள் தான், மனதில் வளர்கின்றன. [...]
      * உடம்புக்கு எந்த துன்பம் வந்தாலும் துவண்டுபோய் விடக்கூடாது. நோய்வந்தாலும், வறுமை வந்தாலும், வேறு எந்த விதமான துன்பங்கள் வந்தாலும் அவற்றை வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். * ஆடம்பரத்திற்காக பல மனிதர்கள் ஊதாரித் தனமாகச் செலவழிக்கிறார்கள். போலி கவுரவத்தைக் [...]
    51 - 60 of 13 பாகேஷ்


    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் [...]
      * கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். நமக்கு செயலுக்குத் தகுந்த பலன்களைத் தருபவர் அவரே. இந்த எண்ணம் நமக்கு இருந்தால்  தான் நம் மனம் தர்மவழியை விட்டு விலகாமல் இருக்கும். * கடவுளுக்கு காணிக்கையாகப் பணத்தை உண்டியலில் செலுத்துகிறோம். உலகைப் படைத்துக் காக்கின்ற பரம்பொருளுக்கு நன்றி செலுத்தும் [...]
      * நாம் "தானம் கொடுக்கிறோம்' என்ற வார்த்தையைச் சொல்வதே தவறு."பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்' என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.* நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு, [...]
      * மனிதனைப் பாவத்தில் தள்ளிவிடும் சக்தி ஆசைக்கும், கோபத்திற்கும் உண்டு என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணைபிரியாதவை. * ஒருவனைப் பாவி என்று வெறுக்கும்போது, நாம் பாவமே செய்யாதவர்களா என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாவச்செயல்களைச் [...]

      * எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சுமயமாகவே மாறிவிட்டது. * பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும்.மேல்நாட்டில் கூட ""பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம்'' என்று தான் குறிப்பிடுகிறார்கள். * [...]
      * கண்டதை எண்ணி மனதை குப்பைத்தொட்டி போல ஆக்கிவிட்டோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, கடவுளை அமரவைத்து வழிபட வேண்டும். கடவுள் திருநாமங்களைச் சொல்லி புண்ணியம் தேட வேண்டும். அதுதான் மனிதப்பிறவியின் பயன்.* மின்சாரத்தைப் போன்று கடவுளை நம்மால் காண முடியாது. ஆனால், அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். [...]
      * ஒரே தெய்வத்தையே இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபடுவது மன ஒருமைப்பாட்டுக்கு உதவும். நல்லவிஷயம் தான் என்றாலும், மற்ற தெய்வ வழிபாடுகளை ஒருபோதும் தாழ்வாக எண்ணுதல் கூடாது. ஒரே தெய்வமே பல வடிவங்களில் இருக்கிறது என்ற தெளிவும் நமக்கு இருக்க வேண்டும்.* யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே [...]
      * கல்வியின் பயன் நாம் அடக்கமுடையவர்களாக இருப்பது தான். ஆனால், நேர்மாறாக அகங்காரம் கொண்டவர்களாக பிள்ளைகள் வளர்வது பெருங்குறையாகும். பரம்பொருளான கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதே பயனுள்ள கல்வி.* நமஸ்காரம் செய்வதைத் "தண்டம் சமர்ப்பித்தல்' என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல, [...]
      * எந்தச் செயலையும் அதற்குரிய தர்மத்துடன் முறையாகச் செய்ய வேண்டும். முறை பிறழும் போது, அதற்கான பின்விளைவை ஏற்றுத் தான் ஆகவேண்டும். * நமக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அநியாயமாகத் தெரியலாம். அதனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான நியாயத்தைச் செய்வது தான் நல்லது.* நிலையான இன்பம் [...]
      * உணவு உண்ணாமல் விரதம் இருப்பதால் ஆரோக்கியம் போய்விடும் என்று நினைப்பது அறியாமை. உண்மையில் விரதத்தால் உடம்பில் இருக்கும் நோய்கள் விலகுகின்றன. விரதம் என்பது தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், பயிற்சியினால் பழகிவிடலாம். * தொடக்கத்தில் இன்பமாக இருப்பது முடிவில் துன்பமாக அமையும். விரதத்தால் [...]
    61 - 70 of 13 பாகேஷ்

    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * குழந்தை குறும்பு செய்தால் பெற்றவர்கள் கட்டிப் போடுகிறார்கள். நம்மிடம் ஆசை என்னும் குறும்பு இருப்பதால் நம்மை இறைவன் கட்டிப் போடுகிறான்.* எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் உண்மையாக இருப்பவனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். உண்மையாக இருப்பவன் இறைவன் மட்டுமே.* நம் சொந்த [...]
      * காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.* புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், மகான்கள் முதலியோர்களை ஒரு நிமிட நேரமாவது பக்தியோடு நினைப்பது அவசியம். * வாரம் ஒருமுறையாவது [...]
      * தொண்டு செய்வதால் நமக்கென்ன பயன் என்று எண்ணுகிறார்கள். ராமாயண அணில் நமக்கெல்லாம் உதாரணம். பாலம் செய்யும் பணியில் தன்னால் முடிந்த மணலைக் கொண்டு சேர்த்த அணிலைப் போல நம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.* கடவுள் அருள் என்பது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. ஆனால், நம் மனம் கல்லாக [...]
      * நாம் அனைவரும் இறைவனைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். பரம்பொருளைத்தவிர, வேறெதுவுமே உலகில் நிலையானது அல்ல என்பதை உணர்வதே ஞானம். * வாழ்வில் இன்பங்களை எல்லாம் வெளியுலகில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் நம்மை மயக்கக் கூடியவை. என்றென்றும் பூரண இன்பம் தருபவர் [...]
      * மனிதனாகப் பிறப்பதன் நோக்கமே மக்களுக்கு சேவை செய்வது தான். சேவை செய்வது என்பது நமக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு செய்வது தான் என்பதில்லை. நம் குடும்பத்திற்கு செய்வதும் சேவை தான் என்பதை உணர வேண்டும்.* சிக்கனமாய் இருப்பதை கருமித்தனம் என்று சொல்லக்கூடாது. பணம் தான் என்றில்லாமல் நாம் [...]
      * உடம்பில் உள்ள உறுப்புகளில் வாய்க்குத் தான் அதிகமான வேலை கொடுக்கிறோம். சாப்பிடுவது மட்டுமின்றி பேசுவது என்று இரு செயல்களில் வாய் ஈடுபடுகிறது. 'வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி' என்பார்கள். இதில் சாப்பாடு, பேச்சு என்ற இரண்டு விஷயங்களும் அடங்குகின்றன. * நடைமுறையில் நாம் தேவைக்கு அதிகமாக வாய்க்கு [...]
      * மனிதனைப் பாவத்தில் தள்ளிவிடும் சக்தி ஆசைக்கும், கோபத்திற்கும் உண்டு என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை. * ஒருவனைப் பாவி என்று வெறுக்கும்போது, நாம் என்ன, பாவம் என்பதே செய்யாதவர்களா, என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாவச்செயல்களைச் [...]
      * கல்வியின் பயன் உலகத்தை இயக்குகின்ற ஆண்டவனைத் தெரிந்து கொள்வது தான். ஆனால், இந்தக் காலத்தில் படிப்பவர்கள் பலபேருக்குத் தெய்வபக்தி என்பதே இல்லாமல் போய்விட்டது. * கல்வி கற்றதன் அடையாளமே அடக்கம் தான். பெரியவர்களைக் கண்டால் வணக்கம் சொல்லவேண்டும் என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுத்தரவேண்டும்.* [...]
      * பணத்தை சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று எண்ணி நாம் போட்டி பொறாமையை மனதில் வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், பணக்காரர்கள் பெரும்பாலும் மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள். * கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது நல்ல குணமல்ல. கருணைக்கடலான கடவுளிடம் [...]
      * சிக்கனம் என்ற பெயரில் தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்கவிடாமல் கருமியாய் இருக்கக்கூடாது. செலவாளியாக இருப்பவன் [...]
    71 - 80 of 13 பாகேஷ்

    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * நம்முடைய வீடுகளில் பலவிதமான வடிவங்களில் கடவுளை வழிபாடு செய்கிறோம். கடவுளுக்கு இத்தனை பெயர்கள் உண்டா என்பதும், அவரின் உண்மைத் [...]
      * பகவத்கீதையின் அடிப்படையே அர்ப்பணமாக கடமையாற்றுவது தான். எந்தச் செயலைச் செய்தாலும், அதை காமகுரோதம் இல்லாமல் தூய உள்ளத்தோடு [...]
      * மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் [...]
      * ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். இன்ன இன்ஜினியர் இதைக்கட்டினார் என்று [...]
      * ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். இன்ன இன்ஜினியர் இதைக்கட்டினார் என்று [...]
      * நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட [...]
      * பணம்,பேச்சு, நாம் செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது [...]
      * இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே [...]
      * மற்ற எந்த உறுப்பையும் விட, வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது மற்றும் பேசுவது என்று அதற்கு [...]
      * சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். [...]
    81 - 90 of 13 பாகேஷ்

    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * நாம் எல்லோரும் கடவுளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். ஞானம் என்பது என்ன? பரம்பொருளாகிய கடவுள் மட்டுமே உண்மை, [...]
      * பணம், பேச்சு, செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது [...]
      * நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல. கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே [...]
      * கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் [...]
      * எது நல்லதோ அதுவே தர்மம் ஆகும். தர்மத்தை "அறம்' என்பர். இதை அவ்வையார், "அறம் செய விரும்பு' என்று சொன்னார். தர்மத்திற்கு அடுத்த [...]
      * மற்ற எந்த உறுப்பையும் விட, வாய்க்குத் தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது மற்றும் பேசுவது என்று அதற்கு [...]
      * சாப்பாடு நம் உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் வளர்ப்பதாக இருப்பதால் நாம் திட்டமிட்டு அன்றாடச் சாப்பாட்டை கவனமாக அமைத்துக் [...]
      * சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். [...]
      * மனிதனாகப் பிறந்தவனுக்கு வாழ்வில் உண்டாகும் பாக்கியங்களிலேயே மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. சேவை என்றால் [...]
      * ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் நாளைக் கடத்திக் கொண்டிருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும். அப்படியே மந்திரங்களை [...]
    91 - 100 of 13 பாகேஷ்




     ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களும் ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிந்து செல்லத்தான் வேண்டும். மனிதர்களாகிய நாம், ஆடு மாடு [...]
      * ஒருவர் எடுத்த செயலில் வெற்றி பெற்றுவிட்டால், அவரை போற்றுபவர்கள் இச்செயலை அவர் சிரத்தையுடன் (கவனமாக)செய்தார், அதனால்தான் [...]
      எமன் ஒரு நொடி நேரத்தைக் கூட வீணாகக் கழிப்பதில்லை. ஒவ்வொரு வினாடியும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மை [...]
      * பல மாமரங்கள் இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகிறது. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம். விளைந்த விதைகள் அனைத்தும் மாமரமாக உருவாகிவிடுவதில்லை. ஒரு சில விதைகள் மட்டுமே மரமாகிறது. இவ்விடத்தில் மற்ற [...]
      * மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே அடிப்படையாக இருக்கிறது. ஆசையினால் ஒன்றை அடைய விரும்புகிறோம். அதனை அடைவதற்காக சிலர் [...]
      "நியாயம்' என்றால் "முறை' என்று பொருள். எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறைதவறி செய்யும் செயல் களால் துன்பம் தான் [...]
      மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம். தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம். [...]
      நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு [...]
      கல்யாணம் என்பது இக்காலத்தில் அக்கிரமமாக மாறிவிட்டது. நாம் எல்லோரும் பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்கள் தானே! அப்படி இருக்கும் [...]
      நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர் கள் வாழ வேண்டும் என்று நினைப்பது உத்தமமான எண்ணம். அதே நேரம், ஆசையை வளர்த்துக் கொண்டே [...]
    101 - 110 of 13 பாகேஷ்


     ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      * நம்முடைய இந்த உடம்பை மட்டுமே "நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பதனால் தான், இதை பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையில் நம் [...]
      மழை நாளில் அடுப்பு பற்ற வைப்பது சிரமம். நெருப்பு அணைவது போல இருக்கும். அதனால், அடுப்பில் இருக் கும் நெருப்புப்பொறிகளை விடாமல் [...]
      ஜீவகாருண்யம் என்று குறிப்பிடுவதை கருணை என்று நீங்கள் அறிவீர்கள். கருணை காட்டுவது என்றால் உதவி செய்பவர் ஒரு படி மேலே போய் [...]
      * பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது. * நம் நாட்டில் முற்காலத்தில் கல்வியின் முதல் நோக்கம் அமைதியை அடைவதே ஆகும். ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் 'பரவித்யை' எனவும், [...]
      வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதைக் காட்டிலும் வராமலே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உபவாசம் ஒரு பத்தியம். மிகவும் கீழான இடத்தில் மனதை வைத்தால் கீழான பைத்தியம் உண்டாகிறது. மேலான இடத்தில் மனதை வைத்தால் மேலான பிரம்மவித்தாக ஆகிறோம். ஈசுவர சரணாரவிந்தத்தைப் பிடித்தால் [...]
      எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை சாப்பிட்ட மாத்திரத்தில் வயிறு நிரம்பி விடுகிறது. ஆனால், அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்கிறது? வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி, ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு [...]
      தேகம், மனம், சாஸ்திரம், ÷க்ஷத்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட [...]
      திங்கள், வியாழன், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மவுனம் அனுஷ்டிக்கலாம். சோமவாரம், குருவாரம் ஆபீஸ் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மவுனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம். நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும், வாக்குதேவியான [...]
      * குரு என்றால் கனமானது, பெரியது, அதாவது பெருமை உடையவர். மகிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை 'மஹாகனம் பொருந்திய' என்று சொல்கிறோம். கனமென்றால் வெயிட் அதிகமென்றா அர்த்தம்? உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் படிப்பிலே பெரியவர். [...]
      கல்வியின் பயன் மெய்ப்பொருளாகிய ஆண்டவனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால், இந்தக்காலத்தில் படிக்கிறவர்கள் பலபேருக்குத் தெய்வ பக்தியே இல்லை. அதுதான் அடிப்படையான குறை. கல்வியறிவினால் கிடைப்பது அடக்கம். கல்வியின் முதற்பயனாக வினயம் ஏற்பட வேண்டும். இதனால் பழைய நாளில் மாணவனுக்கு 'வினேயன்' என்றே [...]
    111 - 120 of 13 பாகேஷ்


    ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
      செம்பைத் தேய்த்து வெளுப்பாக்கிவிட்டால் மறுநாளும் அழுக்காகத்தானே செய்கிறது. மறுபடி தேய்க்க வேண்டும். இதேபோல் நாம் சித்தத்தையும் விடாமல் அனுஷ்டானத்தால் சுத்தம் செய்துகொண்டு இருக்க வேண்டும். பகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும் சர்வ சக்தனாகவும் இருந்துகொண்டு நம் கர்மங்களுக்குப் [...]
      * தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது. * பால பிராயத்திலேயே காயத்ரியை ஜபிக்க ஆரம்பித்துவிட்டால் அது பசுமரத்தாணியாக பதியும். காயத்ரியானது முக்கியமான மனோசக்தி, தேஜஸ், ஆரோக்கியம் எல்லாவற்றையும் அபரிமிதமாக தரவல்லது. * நீ பலனை எதிர்பார்க்காமல் [...]
      * அதிகமாகப் பொருள்களைத் தேடிப்போவதால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மன நிறைவோடு இருப்பதுதான். * நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதே போல் மனம் [...]
      * ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன்னால் ஒழுக்கம் அவசியம். இல்லாவிட்டால் செயல்கள் பிழையாகி கெட்டதை வளர்க்கும். * குறைச்சலான வசதியைக் கூடப் பெற முடியாதவர்களுக்கு உதவுவதுதான் தியாகம், தர்மம், புண்ணியம். * அன்பு [...]
    121 - 124 of 13 Pages








































































































































































































































































































































































































































      சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.
      * வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.
      * சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக