புதன், 9 நவம்பர், 2011

வெளிநாட்டுக் கோயில்கள் அமெரிக்கா ( பகுதி - 1 )

ராதே கிருஷ்ணா 10 - 11 - 2011

வெளிநாட்டுக் கோயில்கள்

அமெரிக்கா  ( பகுதி - 1 )


சுவாமி நாராயண் மந்திர், அட்லாண்டா
செப்டம்பர் 12,2011,16:47  IST
அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில், சுவாமிநாராயணனுக்கு புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வேலைப்பாடு அமைந்த இந்துக் கோயில்கள் பத்தில் இதுவும் ஒன்று.
கோயில் அமைப்பு : 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் இது. கட்டிட அளவு 22ஆயிரத்து 442 சதுரடி. கோயிலின் வெளிப்புறம் துருக்கி லிம்ரா சுண்ணாம்புக்கல்லால் ஆனது. தரைத்தளம் இத்தாலிய கராரா மார்பிளால் உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தளம் இந்திய மணற்பாறைகளால் அமைந்தது. 15 கிலோ எடையுள்ள சிறிய கல்லில் இருந்து 5.2 டன் எடையுள்ள பெரிய கல்வரை, 8430 டன் எடையுள்ள கற்கள் இக்கோயில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் 40 ஆயிரம் கற்துண்டுகள் உள்ளன. கோயிலின் நீளம் 213 அடி. அகலம் 122 அடி. விதானம் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பரிக்ரமா (வலம் வருதல்) செய்ய வசதியுள்ளது. ஐந்து பெரிய கலசங்களும், நான்கு சிறிய கலசங்களும், ஒரு பெரிய மாடமும், ஆறு சிறிய மாடங்களும், 129 வளைவுகளும், நான்கு பால்கனிகளும்,14
ஜன்னல்களும், 151 தூண்களும், 75 விதானங்களும் இக்கோயிலில் உள்ளன. 39 வகையான டிசைன்கள் கோயிலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. கோயிலில் உள்ள மண்டபத்தில் கடைசல் வேலைப்பாடுடன் கூடிய தூண்களும், ஜன்னல்களும் அருமையாக உள்ளன. படிக்கற்கள் மார்பிளால் ஆனவை. கீழ்தளம் முழுவதும் ஜெல் டியூபால்
உஷ்ணமாக்கப்பட்டுள்ளது. பைபர் ஆப்டிக் முறையில் ஒளியூட்டப்பட்டுள்ளது. கோயில் கட்ட 19 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்: தூண்களில், வேத, புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் சித்திர வேலைப்பாடுகள் கண்களைக் கவரும். முழுகட்டமைப்பும் "சிற்ப சாஸ்திர' அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மார்பிள், சுண்ணாம்புக்கல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, குறுகலான கூம்பு அமைப்பு, ரோஜாமலர் சிற்பங்கள், இலை போன்ற 500க்கு மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அவை அட்லாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆலய வரலாறு : 1980 களில் இப்பகுதியில் வாழ்ந்த சுவாமி நாராயண் பக்தர்களால், இந்துக்கள் கூடும் இடமாக இக்கோயில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 1988ம் ஆண்டு பழைய பாழடைந்த மண்டபம் ஒன்று வாங்கப்பட்டு, அதில் தற்காலிக கோயில் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பாழடைந்த மண்டபம் சீரமைக்கப்பட்டு தற்போது உள்ள பிரம்மாண்ட கோயிலாக உருப்பெற துவங்கியது. 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இக்கோயிலின் விரிவாக்கப்பணிகள் நடத்தப்பட்டது. 2005 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலுக்கென சொந்தமாக நிலம் முடிவு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. 2006ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுவாமி நாராயண் மந்திர் முழுமை பெற்ற ஆலயமாகவும், பக்தர்கள் கூடும் இடமாக செயல்படத் துவங்கியது.

ஆலய நேரம் : அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.

முகவரி : BAPS Shri Swaminarayan Mandir
460 Rockbridge Road நவ்



ஸ்ரீதேவி கருமாரியம்மன் இந்துக் கோயில்,கல்கேரி
ஜூலை 02,2011,14:44  IST
தலவரலாறு : கனடாவில் கல்கேரி பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் இந்துக் கோயிலாகும். லாப நோக்கமற்ற அமைப்பாக இக்கோயில் செயல்பட்டு வருகிறது. கல்கேரி பகுதியில் நிறுவப்பட்ட முதல் தென்னிந்திய ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக ஸ்ரீதேவி கருமாரியம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் இவ்வாலயத்தில் கணபதி, முருகன், ஹனுமன், சிவன், ஐயப்பன், லட்சுமி நாராயணன், சனீஸ்வர பகவான் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனியே சன்னதி அமைந்துள்ளது. 
கோயில் நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் பகல் 1.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Srithevi Karumari Amman Hindu Temple,
55 325 West Winds Crescent NE




Calgary, Alberta,Canada , T3J 5H2




தொலைப்பேசி : 403-293-9788 or 403-975-3341 or403-973-2311
இ-மெயில் : karumari2007@yahoo.ca

ஸ்ரீ முருகன் ஆலயம், அல்பர்டா
ஜூலை 02,2011,12:42  IST
தல வரலாறு : கனடாவின் அல்பர்டா பகுதியில் உள்ள கல்கேரி அருகே உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ முருகன் ஆலயம். தனிமை சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் 1994ம் ஆண்டு இப்பகுதியில் வாழ்ந்த முருகன் பக்தர்களால் கட்டப்பட்டதாகும். இவ்வாலயத்தை சுற்றிலும் இந்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியதால் சிறிய ஆலயமாக அமைக்கப்பட்ட இந்த ஆலயம் அல்பர்டா ஸ்ரீ முருகன் சமூகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. முருகன் பக்தர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் இக்கோயில், அல்பர்டா பகுதியில் இந்து கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை மேம்படுத்தும் வழிபாட்டு தலமாக விளங்குகிறது. ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மாதம் ஒரு முறை மாத பஜனைக்கு முன் குழந்தைகளுக்காக மாலை 4 மணி முதல் 5 மணி வரை சமய வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
ஆலய முகவரி : Sri Murugan Society of Alberta.
Suite 124, 305 - 4625 Varsity Drive NW, Calgary, AB T3A 0Z9.


இ-மெயில் : albertamurugan@gmail.com
இணையதளம் : http://www.albertamurugan.org/home.html


ஸ்ரீ ஹனுமன் மந்திர், அல்பர்ட்டா, அட்லாண்டா
மே 28,2011,16:03  IST
ஆலய வரலாறு : அட்லாண்டாவின் அல்பர்ட்டா நகரில் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதியன்று ஸ்ரீ ஹனுமன் மந்திர் அமைக்கப்பட்டது. அனைத்து மக்களாலும் எளிதில் அறியப்படும் அம்மாகிச்சன் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் அபிஷேக ஆராதனைகளும், லலிதா சகஸ்ரநாம பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஹனுமன் மந்திர பாராயணம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இக்கோயிலில் யோகா மற்றும் தியான வகுப்புக்களும் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோயிலின் ஒரு பகுதியில் இந்திய உணவகமும், மளிகை கடையும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் திறமை வாய்ந்த புரோகிதர்களால் ஆகம விதிப்படி அனைத்து கால பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
கோயில் நேரம் : காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை; வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. 
ஆலய முகவரி : The Hanuman Mandir,390 Cumming Street Suite B, Alpharetta, GA 30004 
தொலைப்பேசி : (770) 475-7701 
இ-மெயில் : info@Thehanuman.org
இணையதளம் : http://thehanuman.org


அருள்மிகு இந்துக்கோயில், அட்லாண்டா
ஏப்ரல் 07,2011,16:36  IST
தலவரலாறு : அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் 1970 களின் பிற்பகுதியில் வாழ்ந்த மக்கள், மிகச் சிறிய அளவில் ஆலயம்‌ ஒன்றை அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர். எஸ்.பி.ரெட்டி, பி.கே.மோகன், சைலேந்திரன், ஹரி உபத்யாயா உள்ளிட்ட சிலர் ஒன்றுணைந்து அட்லாண்டா பகுதியில் இந்துக்கோயில் ஒன்றை அமைக்க தீர்மானித்தனர். பின்னர் நாஸ்வேலி பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றில் தற்காலிகமாக கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த இந்து மக்களிடம் இருந்து 10 ஆயிரம் டாலர்கள் வீதம் வசூலிக்கப்பட்டு கோயிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 5 நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் தற்போது உள்ள இடத்தில் கோயில் அமைக்க அனைவரும் ஒப்புக் கொண்டனர். அட்லாண்டா பகுதி இந்துக் கோயிலின் அடிக்கல்நாட்டு விழாவில் அல்பனா, டென்னிஸ்சி, புளோரிடா, கரோலினா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டுள்ள இக்கோயில், சைவ மற்றும் வைணவ முறைகள் கலந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. வைணவ முறையிலும் வைகாசன மற்றும் பஞ்சரத்ர முறைகளின்படி இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். இக்கோயில் 2 முதல் 16 நிலைகளையும், 7 பிரகாரங்களையும் கொண்ட பிரம்மாண்ட கோயிலாக அட்லாண்டா பகுதியில் காட்சியளிக்கிறது. இக்கோயிலின் கருவறை திருப்பதி வெங்கடேஷ்வரர் திருக்கோயிலின் கருவறையை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ்வரர் சன்னதியில் வலது புறம் ஸ்ரீதேவி சன்னதியும், இடதுபுறம் சத்யநாராயணர் சன்னதியும் அமைந்துள்ளது. சுற்றுபிரகாரத்தில் துர்கையம்மன் சன்னதியும், கருவறையின் முன்புறம் கருடாழ்வார் சன்னதி, பலிபீடம், கொடிமரம் ஆகியன அமைந்துள்ளன. கணேசர், ஆஞ்சநேயர், நவகிரகங்கள் ஆகியோர் தனித்தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். வெங்கடேஷ்வர சன்னதியின் விமானம் ஆனந்த விமானம் என்றழைக்கப்படுகிறது. முகப்பு வாயிலில் 5 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. 
1986ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி‌யன்று புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 3 வருடங்களுக்கு பிறகு 1989 ம் ஆண்டு மார்ச் மாதம் இக்கோயிலின் முதல்கட்டப் பணிகள் துவங்கப்பட்டது. சுமார் 21 மாதங்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்ப கலைஞர்களைக் கொண்டு தென்னிந்தியாவை ஆண்ட சேர, சோழ மன்னர்களின் கட்டிட கலைகளின் கலவையாக இக்கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் மகா கணபதி விக்ரஹகம் முதன் முதலாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1993ம் ஆண்டு மே மாதம் வெங்கடேஷ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி, துர்க்கை, நவகிரகங்கள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கோயிலின் விரிவாக்கப் பணிகளின் முதல்கட்டமாக கலாச்சார நிகழ்வுகள் நடத்துவதற்கென கலையரங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. தடைகள் மற்றும் சோதனைகள் பலவற்றை கடந்து நீண்ட காலத்திற்கு பிறகே இக்கோயிலின் 2ம் கட்டப் பணிகள் துவங்கப்பட்டன . யாகசாலை, கல்யாண மண்டபம், மடப்பள்ளி, போஜனஅறை உள்ளிட்ட 11 நிலைகளைக் கொண்ட கோயிலாக இக்கோயில் அமைக்கப்பட்டது. 
ராஜகோபுரம், சுமார் 40 அடி உயரம் கொண்டதாக உள்ளது. நான்கு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் ஒவ்வொரு நிலையும் 76 தூண்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தின் ஒவ்வொரு நிலை பிரகாரங்களிலும் மகாவிஷ்ணுவின் அவதார சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. ராஜகோபுரத்தின் கிழக்கு பகுதியில் தட்ஷிணாமூர்த்தி, நரசிம்மர், ஆதிவராகர் உள்ளிட்ட மூர்த்திகளின் சிற்பங்கள் சோழர் கால முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் வெங்கடேஷ்வர சன்னதிக்கு வலது புறம் ஆதிவராகர், நரசிம்மர், சத்யநாராயணர், வெங்கடேஷ்வரர், ராமர், கிருஷ்ணர், தட்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களும், கருவறையின் இடது புறத்தில் சரஸ்வதி, லட்சுமி, மீனாட்சி, காமாட்சி, ராஜேஸ்வரி, காமகோடி சக்தி, சுப்ரமணிய சுவாமி, கணேசர் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. 996ம் ஆண்டு மே மாதம் 25, 26 ஆகிய இரண்டு தினங்கள் இக்கோயிலின் மகாகும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மே 27ம் தேதியன்று மகாசத்ய நாராயண பூஜை மிகப் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது.
ஆலய முகவரி : 
THE HINDU TEMPLE OF ATLANTA INC.


5851, GA HWY 85, RIVERDALE, GA-30274

தொலைப்பேசி : 770-907-7102
பேக்ஸ் : 770-907-6080
இ-மெயில் : lnsimhan@hindutempleofatlanta.org
இணையதளம் : www.hindutempleofatlanta.org 























































































































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக