சனி, 27 ஜூன், 2015

கூரத்தாழ்வார் வைபவம் உறுதி மொழிகள்

ராதே கிருஷ்ணா 27-06-2015கூரத்தாழ்வார் வைபவம் உறுதி மொழிகள்

1. மனித நேயம், கருணை, நேர்மை ஆகியவற்றை கடை பிடிப்போம்

2. ஜகதாசார்யரான இராமானுஜன் திருவடிகளே, உய்ய ஒரே வழி என்று இருப்போம்

3. யாரையும் மனத்தாலும், சொல்லாலும், உடலாலும் துன்புறுத்தாமல் இருப்போம் , இயன்றால் நன்மை செய்வோம்

4. நமக்கு தீங்கு நினத்தவர்களிடமிருந்து விலகி வாழ்வோம்

5. ஸ்ரீ மன் நாராயணனே பரம்பொருள் என்றுணர்ந்து மறந்தும் பிறன் தொழா மாதராக வாழ்வோம்

6.  அடியார்களுக்கு அன்னதானம் செய்வோம்

7. பொறுமையை கடை பிடிப்போம்

8. பிறப்பாலும் செல்வத்தாலும் கல்வியாலும் உயர்ந்தவன் நான்  என்ற  இறுமாப்பு அடையாமல் பணிஉடன் இருப்போம்

9. முன்னோர்கள் செய்ததைச் செய்வோம், செய்யாதன செய்யோம்

10. திருமாலின் திருக்கல்யாண குணங்களை எப்போதும் சிந்தித்து அதில் ஈடுபடுவோம்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக