செவ்வாய், 9 ஜூன், 2015

பெரியவா

ராதே கிருஷ்ணா 09-06-2015



பெரியவா





"நானும் நீயும் ஒண்ணுதான்"

(பெரியவாளின் எளிமையான விளக்கம்)

கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா
எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.

ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை
குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.

அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?"
என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!"
என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை
விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.....எல்லாரும்
புரிஞ்சிண்டாளா?" என்றார்.

"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?"
என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை
சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக்
கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.
அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை.
கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல்
பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.

அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு
எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று
அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.

"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும்,
'நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத்
தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து-

"நானும் நீயும் ஒண்ணுதான்!"

என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக்
கொள்ளலாமா?" என்றார்.

கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து.
"இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி உருகினார்

"இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்...
எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை,
அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்









"நானும் நீயும் ஒண்ணுதான்"

(பெரியவாளின் எளிமையான விளக்கம்)


கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா
எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.

ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை
குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.

அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?"
என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!"
என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை
விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.....எல்லாரும்
புரிஞ்சிண்டாளா?" என்றார்.

"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?"
என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை
சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக்
கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.
அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை.
கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல்
பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.

அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு
எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று
அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.

"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும்,
'நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத்
தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து-

"நானும் நீயும் ஒண்ணுதான்!"

என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக்
கொள்ளலாமா?" என்றார்.

கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து.
"இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி உருகினார்

"இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்...
எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை,
அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்








"நானும் நீயும் ஒண்ணுதான்"

(பெரியவாளின் எளிமையான விளக்கம்)


கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா
எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.

ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை
குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.

அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?"
என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!"
என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை
விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.....எல்லாரும்
புரிஞ்சிண்டாளா?" என்றார்.

"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?"
என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை
சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக்
கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.
அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை.
கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல்
பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.

அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு
எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று
அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.

"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும்,
'நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத்
தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து-

"நானும் நீயும் ஒண்ணுதான்!"

என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக்
கொள்ளலாமா?" என்றார்.

கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து.
"இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி உருகினார்

"இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்...
எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை,
அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்
















எனக்குக் கொஞ்சம் தரக் கூடாதா நாராயணா’னு வாய் விட்டே கேட்பார் பெரியவா." (உப்புமா)

ஞானாம்பிகா‘ ஜெயராமன் கூறுகிறார்…


அரண்மனையில் நடக்கிற விருந்தைக் காட்டிலும் அமர்க்களமான விருந்து நடக்கிற இடம் காஞ்சி சங்கர மடம்! வருடா வருடம் மகா பெரியவர் பிறந்த தினத்தின்போது பாயசம், கூட்டு, பொரியல்னு அமோக விருந்து நடக்கும். அப்பாவோட (நன்னிலம் நாராயணசாமி ஐயர்) சமையல் மீது பெரியவாவுக்கு மிகுந்த மதிப்பும், விருப்பமும்இருந்தது. அதிலும் தயிரை சம்பாரம் செய்து அப்பா சுவையாகத் தயாரிக்கும் மோர் பெரியவாளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

மோரை சம்பாரம் செய்றதுன்னா என்னன்னு கேட்கறீங்களா ? தயிரை நீரில் ஊற்றி, இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து எல்லோரும் சேர்ந்து கடைவோம். ஒரு முறை பருகியவர்கள் மறு முறை சம்பாரம் செய்த மோரைக் கேட்டு வாங்கிப் பருகுவார்கள். அந்தளவுக்குச் சுவையாக இருக்கும். இத்தனைக்கும் மோரை சம்பாரம் செய்வது ரூம் போட்டு யோசித்து எடுத்த ஐடியா அல்ல.

ஒரு முறை பெரியவா விழா நடந்தபோது மோர் போதவில்லை. சாம்பார், ரசத்தோடு சாப்பாடு முடிந்தால் குறையாகி விடுமே என்று, அப்பா அடுத்த சில நிமிடங்களில் அடுத்த நாள் உபயோகத்துக்காக எடுத்து வைத்திருந்த தயிரை, தண்ணீரோடு கலந்து இஞ்சி, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து அவசர கதியில் தயாரித்த பானம் அது!

சம்பாரம் செய்த மோரைக் கூட பெரியவா கேட்டு வாங்கிப் பருக மாட்டார். ஆனால், அப்பா செய்யும் உப்புமாவின் வாசம் நாசியை எட்டி விட்டால், சமையற்கட்டுக்கே வந்து விடுவார்

பெரியவா. ‘உப்புமா ரொம்ப வாசனையா இருக்கே… எனக்குக் கொஞ்சம் தரக் கூடாதா நாராயணா’னு வாய் விட்டே கேட்பார்

பெரியவா. அந்த அளவுக்கு அப்பா உப்புமா ஸ்பெஷலிஸ்ட்








"இந்த மடத்ல யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் கம்பெனில தானே இருக்கும்?.."

(10 வயதுப் பையன் பெரியவாளிடம் கேள்வி)

இது 2013 போஸ்ட்-என் மெயில் பாக்ஸிலிருந்து."

பத்து வயஸ் பையன் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடம் ஏதோ கேட்கும் ஆசையில் நகர்ந்து போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவன் மனஸில் பொங்கும் கேள்வியின் துடிப்பு, முகத்தில் ப்ரதிபலித்தது. பெரியவா அனுஷ்டானமெல்லாம் முடிந்து விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தார்.

இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு, "என்ன?" என்பது போல் ஜாடை செய்தார். குழந்தைக்கு பயம் கிடையாது என்பதை இதோ.. ப்ரூவ் பண்ணிவிட்டான்......

"பெரியவா....இந்த மடத்ல யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் கம்பெனில தானே இருக்கும்?..."

சுற்றி இருந்த கார்யஸ்தர்கள், பக்தர்கள் எல்லாருக்கும் உள்ளே ஒரே உதறல்! எசகுபிசகா எதையாவது கேட்டுடறதுகள்....என்று தவித்தார்கள். பெரியவா குழந்தையின் முகத்தைப் பார்த்தார்.
...
." அந்தக் காலத்ல, நம்ம தேசத்ல நெறைய ராஜாக்கள் இருந்தா.....முன்னாடி மடத்ல இருந்த ஸ்வாமிகளை தர்சனம் பண்ண வரச்சேயெல்லாம் யானை, குதிரை, ஒட்டகம், பசு மாடு, காளை மாடு, அம்பாரி எல்லாம் காணிக்கையாக் குடுத்துட்டுப் போவா.....இப்போ இங்க இருக்கற ம்ருகங்கள் எல்லாம்...மடத்ல வம்ஸ பரம்பரைன்னு சொல்றா மாதிரி இருந்துண்டிருக்கு. பசுவுக்கும், யானைக்கும் தெனோமும் பூஜை நடக்கறது. நவராத்ரி காலத்ல குதிரைக்கும் பூஜை உண்டு.....

......இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா........எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா....அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"

ஒரு மஹா பெரிய கசப்பான உண்மையை படாரென்று போட்டு உடைத்தார்! குழந்தைக்கோ குதிரை, யானை, ஒட்டகம் விஷயத்துக்கு பெரியவா குடுத்த explanation பரம த்ருப்தி ! சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான். ஆனால் நாம்?

முன்பு ஒருமுறை ஒரு கார்யஸ்த்தரிடம் "ஏண்டா....கண்ணா! மடத்துக்கு ஏன் இவ்ளோவ் கூட்டம் வருது தெரியுமோ?" என்று கேட்டார்.

"பெரியவாளை தர்சனம் பண்ண......."

"ஆமா......பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா.....மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.







மஹா பெரியவா பிருந்தாவனம் சென்று சங்கரன் வீற்றிருக்கும் தனி அழகை காண கண்கோடி வேண்டும்!

பல அற்புதங்களையும் மகிமைகளையும் தனக்குள்ளே
நாளும் புரியும் சத்குருவின் பிருந்தாவனம்!
என்னவெல்லாம் நடக்காதோ, நடக்கமுடியாதோ அத்தனையும் நடத்திக்காட்டும் சந்திரசேகரனின் பிருந்தாவனம்!
மலடு என்று சொல்லி பல மருத்துவர்களால் கைவிடப்பட்டவரையும், இரட்டை குழந்தை ஈன்றெடுக்க வைக்கும்
கர்ப்பரக்ஷாம்பிகை கொலுவிருக்கும் மஹா பெரியவா பிருந்தாவனம்!
இதய கோளாறினால் மரண தருவாயில் உள்ளவரும், தலை எழுது மாறி துள்ளி குதித்து விளையாட்டு வீரனைபோல் ஓடவைக்கும்
மஹா பெரியவா நான்முகன் குடியிருக்கும் பிருந்தாவனம்!
செவிடரும் கேட்டு, ஊமையும் கவி பாடி, குருடரும் சங்கரன் அருளை கண்டு களிக்கும்படி செய்யும்
கோவிந்தன் ஆதிசேஷனில் துயில் கொள்ளும் பிருந்தாவனம்!
பல நாள் வைத்தியம் பார்த்தும் தீராத பைத்தியத்தையும், ஒரு நொடியில் குணப்படுத்தும் வைதீஸ்வரன் வீற்றிருக்கும் மஹா பெரியவா பிருந்தாவனம்!
தீயவரும் மனம் திருந்தி, செய்த தவறுக்காக மிக வருந்தி , பல நன்மைகளை புரிய வைக்கும் சாந்தரூபனின் பிருந்தாவனம்!!
இன்னும் இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம், எண்ணிக்கையில் அடங்கா பல அரிய நிகழ்சிகளை நித்தியமும் நடத்திகொண்டிருக்கும் சத்தியசந்தனின் பிருந்தாவனம்!
இன்ன வேண்டும் என்றே கேட்கமால், வேண்டியதோடு இன்னும் அதிகமான நலன்களையும் அன்பர்களிக்கும் அஷ்டலக்ஷ்மிகளும் ஒருங்கிணைந்து அருளும் பிருந்தாவனம்!
இன்னும் என்ன தாமதம் உடனே புறப்படுவோம், குறை களைந்து குணம் பெறவைக்கும் பக்தவத்சலன் வசிக்கும் பிருந்தாவனம்!
என் குலதெய்வம் சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பிருந்தாவனத்திற்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
எல்லாம் பகவத் சங்கல்பம். குருவருளும் திருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.பிருந்தாவனம் நாடி!
மஹா பெரியவா சரணம்!!









(ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா பற்றி எழுதியது)
நித்தம் காமாக்ஷி அன்னையை வலம்வந்து தொழுதவன்தாள் வணங்கியே போற்றிடுவோம்!
"ஸாக்ஷாத்க்ருத ஜகன் மாத்ரு ஸ்வரூபாய நமோ நமஹ":
"ஜகன்மாத்ரு ஸ்வரூபத்தை நேரில் கண்டவருக்கு நமஸ்காரம்"
"Obeisance to Him who has directly seen the form of the Mother of the universe" 
உலகெலாமீன்ற தாயை, காமாக்ஷி அன்னையை, ஓர்கணமும்
விலகாமல் அருகிருந்து நித்தம் கண்டுருகி
வலம்வந்து தொழுதவன்தாள் வணங்கியே
நலம்கொண்ட ஸ்ரீ சந்திரசேகரசங்கரனாய் வந்துதித்த
எம் ஸத் குருவை போற்றிடுவோம்.
வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம்
குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம்!
(ஸத்குரு ஸ்ரீ சந்திர சேகரரை வணங்குகிறேன்)
அத்வைதானந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம்
ஸர்வ சாஸ்திரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே
ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும்
பக்தாநாம் ஹிதவக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே!
“அத்வைத நிலையின் பேரானந்தத்தினால் திளைத்துள்ளவரும் நல்லோர்களுக்கு விருப்பத்தை நிறைவேற்றுபவரும் எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவரும் அமைதியே வடிவானவரும் ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்”.
அத்வைதம் வளர்க்கும் குருபீடம்
தத்துவம் நிறைந்த குருபீடம்
கருணையின் சிகரம் குருபீடம் -காஞ்சீ
காமகோடீ ஜகத்குரு பீடம்
தவநிலை வளர்க்கும் குருபீடம்
தன்னகரில்லா குருபீடம்
கவலைகள் போக்கும் குருபீடம்
காஞ்சி காமகோடீ ஜகத்குரு பீடம்






ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்துதி

மஹாத்புத சேகரம்! ஸ்ரீ சிவ ஞான சசிசேகரம் ஜகத்குரும் ஸ்ரீ சந்திரசேகரம்!
மஹாலக்ஷ்மி தனயம் அனுஷ அவதார ஸ்ரீ ஸ்வாமி நாத கருணா சாகரம்
ஸச்சிதானந்த சசிசேகர ஸ்ரீ சிவ ஞான சங்கர ஸ்வரூபம்
கைலாசபதிம் ஸதாஸ்ருதிச்ரவ ப்ரியம் ஜகத்குரும் சங்கரம்
சிவாவதார சங்கர ப்ரதீஷ்டித ஸுகுண வல்லபம் சுந்தர நயனம் சரணம்
ஸசிஷ்ய ஸேவ்ய சந்த்ர சேகரேந்த்ர தேசிகம் நித்யானந்த நிருபம சரிதம்
க்ருபா கடாக்ஷ வீக்ஷணைஸ் ஸமஸ்த்ததாபஹாரிணம் சாந்த வதனம்
ஞான சாகரம் க்ருபா சாகரம் மந்தஹாஸ அரவிந்த ஸங்காச வதனம்
ஸத்ய சம்ரட்சணம் ஸத்குரு அவதாரம் காஞ்சீம் ஜகத்குரும் ஸ்ரீ சந்திரசேகரம்
அஹம் மமேதி பாநஹீன மானஸம் க்ருபா நிதிம் ஞானாந்த சேகரம் ஸ்ரீ சந்திர சேகரம்
யமாதியோக ஸாத நாதி போதக குணோததிம் வேத நாத காருண்ய ரூப நாயகம்
ஸமஸ்த பீட முக்ய காமகோடி பீட பாஸ்வரம் மங்கள சத்ஸ்வரூப ஸ்ரீ சந்திர சேகரம்
ஸசிஷ்யஸேவ்ய சந்த்ரசேகரேந்த்ர தேசிக ஞான சசிசேகர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரம்
ஸ்ரீ சந்த்ரசேகர யதீந்த்ர ஸரஸ்வதீனாம் சாந்தாந்தரங்க கலிதாகில பாவுகானாம் |
காஞ்சீ புரஸ்தித மஹோன்னத காமகோடீ பீடீமுபாஸ்ரீதவதாம் சரணாவுபாஸே
ஸ்ரீ ஜகத்குரும் நித்ய ஸ்மரணார்த்தம் ஸர்வ மங்களானி பவந்து.
ஸ்ரீமத் சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸத்குரவே நம:
ஓம் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே சார்வ பௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத் ||
அந்த மஹானின் பொன்னடிகள்தாம் பெயர் தெரியாத எத்தனை குக்க்ராமங்களில் பட்டு, பல காலம் தங்கி, அவற்றை புனித ஸ்தலங்களாக புகழ் பெற வைத்திருக்கின்றன.
ஸ்ரீமஹா பெரியவா சரணம்! ஸ்ரீமஹா பெரியவா சரணம்! ஸ்ரீமஹா பெரியவா சரணம்!
ஸ்ரீமஹாபெரியவா அபயம்! ஸ்ரீமஹா அபயம்! ஸ்ரீமஹா அபயம்!
Composed and Placed in the Lotus feet of Sri.Maha Periyava
By:ஸ்ரீ காஞ்சீ மஹா பெரியவா தாஸன் .
Dr.Krishnamoorthi Balasubramanian.
KANCHI ACHARYAS,THE MAHAN OF THIS MILLINEUM.
Dedicated to :
Sri.Paramacharya of Kanchi on HIS 108th Peetarohana Jayanthi and 122nd Janma jayanthi Mahotsav





"பாலுவுக்கு கிடைக்காத காட்சி பக்தைக்கு"

புதிய தகவல்

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

தேனம்பாக்கம் பக்கத்தில் வெள்ளிக்குளம் என்று
ஒன்று இருக்கு. அங்கு ஒரு நாயுடு அம்மா
இருந்தார்கள்.அவர்கள் நெற்றியில் நாமம்
போட்டுக் கொள்வார்கள். அவர் தினமும்
ஸ்ரீ மகாபெரியவாளை நமஸ்காரம் செய்ய வருவார்.

ஸ்ரீமகாபெரியவாளிடம் ரொம்ப பக்தி. ஒரு நாள்
அவர் என்னை (பாலு) தன் வீட்டிற்கு வரும்படி
அழைத்தார்.நான் வரவில்லை என்றேன். இதை
ஸ்ரீ மகா பெரியவா பார்த்துக் கொண்டே இருந்தார்.

என்னிடம் "ஏன் அவள் வீட்டிற்கு போனால் என்ன?
உன்னை கூப்பிடறா" என்றார்.இல்லை, பெரியவா
சொன்னா சென்று வருகிறேன் என்றேன்.
'போய்ட்டு வா' என்றார்.

அந்த அம்மா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
என்னை ஒரு பெஞ்சில் உட்கார சொல்லிவிட்டு வீட்டை
சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு ஒரு பலகாயை
கொண்டு வந்து வைத்தார்.பலகாயிலும் கோலம் போட்டு
வைத்து விட்டு ஸ்ரீ பகவானே,குருநாதா என்று சொல்லிக்
கொண்டு பால்,தயிர்,நெய்,வெண்ணெய் இவற்றை கொண்டு
வந்து பலகாயின் பக்கத்தில் வைத்தார்.வீட்டில் பூத்த
பூக்களை கொண்டு வந்து பலகாய் மேல் போட்டு பின் அதில்
பால்,தயிர்,நெய், வெண்ணெய் கிண்ணங்களை வைத்தார்.
மெதுவாக நமஸ்காரம் செய்தார்.ஒரு ஐந்து நிமிடம் சென்றது.

பிறகு என்னிடம் 'சாமி ஸ்ரீ பெரியவாளை பார்த்தீகளா?' என்றார்.
இல்லையேம்மா என்றேன்.

;ஸ்ரீ பெரியவா வந்து சாப்பிட்டார்' என்றார்.

பின் கிண்ணங்களை பார்த்தால் எல்லா கிண்ணங்களும் காலியாகஇருந்தது. ஸ்ரீ பெரியவா அந்த அம்மாளுக்கு காட்சி கொடுத்திருக்கா.எனக்கு காட்சி கொடுக்கவில்லை
திரும்பி மடம் வந்தேன்.

ஸ்ரீ பெரியவா, 'என்ன அவாத்துக்கு போயிட்டு வந்தாயா? என்றார்.போயிட்டு வந்தேன்.பார்த்தேன் என்றேன்.

"சரி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்.
பாலு பொய் சொல்கிறான் என்ற பேச்சு வரும்.
வீணாக விஷயம் பரவும், வேண்டாம் என்றார்.

ஸ்ரீ பெரியவா தெய்வம்.







ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

01.மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீக்ஷை தந்துவிடும் குருவாகச் சொல்லிருக்கிறார்கள்.இது மத்ஸ்ய தீக்ஷை. காமாக்ஷி, பக்தனை ஸ்பரிஷித்து அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடுபவள். ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீக்ஷை வேண்டுகிறோம். காசியில் இருக்கும் விஷாலாக்ஷி , பக்தர்களை அனுக்ரஹ சிந்தனையோடு மனதால் நினைத்தே ஞானமளிக்கும் கமட தீக்ஷை குருவாக இருக்கிறாள்.

02.காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்

03.சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீச்வரர் என்றோ வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர். அந்த மஹாலிங்கம் மத்தியார்ஜுனத்தில் இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். காரணம் சோழதேசமே ஒரு கோயிலாக இருக்கிறது. “சிவ: சோளே” என்று சொல்வதுண்டு. சைவத்திற்குச் சோழதேசம் பிரசித்தம் என்பது அதன் அர்த்தம்

04.சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நற்பார். அவரை எப்பொழுதும் நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.

05.பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம். வில்வம் மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை. சிவ ஸ்வரூபமும் அத்தகையதே

06.ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்

07.குரு என்றால் கனமானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மஹிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை ‘மஹாகனம் பொருந்தியவர்’ என்று சொல்லுகிறோம். கனமென்றால் Weight அதிகமென்றா அர்த்தர்? ஒருவர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர். வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர். வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதேலே சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவுக்கும் சீடனுக்கும் ‘லிங்கா’க உபதேசம் இருக்கிறது. குருவிடம் இருந்து புறப்பட்டுபோய் , சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செலுத்துவது ‘தீட்சை’ என்று அறியப்படுகிறது.

08.உலகத்திலுள்ள எல்லாருமே சிவன் குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும்.

09.வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர், ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.

10.சுவாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் இல்லை. சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய்சொலுவானா? கெட்ட காரியம் செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும்.

11.ஒரே ஒரு சூரியன் தான் உள்ளது; கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதை தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அனேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்று தான்! அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினுமினுக்கின்ற அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புதான் . இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கரசார்யரவர்கள் 'பிரம்ம சூத்ர பாஷ்யத்தில் சொல்லிருக்கிறார்.

12.நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார். குழந்தையைப் பார்த்து ‘உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்’ என்று அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தைகளின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா. உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை - உம்மாச்சி என்பது யாரைக் குறிக்கிறது?

13.ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவரை ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள். அவர்களில் திருநல்லமென்னும் கோனேரி ராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேச்வரர் என்பது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த உமாமகேச்வரையர் என்று ஒருவர் அங்கே இருந்தார். அவரைத் தான் ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். ஆகவே உமாமகேச்வரர் என்பது ‘உம்மாச்சு’ என்றாயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று. ஆகையால் குழந்தை பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமாமகேச்வரர் என்பது தெரிந்தது. அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.

14.பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர்போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கிவிடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். (‘சிவ’ என்ற நாமாவே அது).

15. தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, கொசு, மரம், நீர்வாழ் – நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதிலிருந்து அன்பு, ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாக பிராகாசிக்க வேண்டும். இந்த உத்தம்மான சிந்தனையில் தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

16.சப்தத்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம். கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை இவைமிக அவசியம்

17.நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், உள்ளே சுத்தஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்

18.வேத அத்யயனம், யோகம், த்யானம், பூஜை இவற்றை கஷ்டப்பட்டு அப்யாசம் செய்வதால் கிடைக்கும் ஈஸ்வரானுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாக பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ச்ம்ருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லி இருக்கிறார்.வீணா கானத்தை அவர் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.கடுமையான பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக்ஷ மார்கத்தில் போய்விடலாம் என்கிறார்.

19.மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வதே. 'சேவை' என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காக சேவை செய்கிறோம். அதோடு நமக்கு சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு , ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவே சமூக சேவை வேறா என்று கேட்க கூடாது. உலகத்திற்கு சேவை செய்வதாலேயே சொந்த கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும்.

20.பிறவி எடுதிருப்பதின் பிரயோஜனமே யாரிடமாவது ஒருவரிடம் மாறாத ப்ரியம் வைப்பதுதான். நாம் ப்ரியம் வைக்கும் பொருள் நம்மோடு எந்தக் காலத்திலும் சண்டைக்கு வராததாக இருக்க வேண்டும். நம்மைவிட்டு எக்காலத்திலும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அந்த வஸ்துவிடம் ப்ரியம் வைத்தால்தான் நம் ஜன்மம் பிரயோஜனம் உடையதாகும். நாம் எல்லாரும் எந்த வஸ்து வினிடமிருந்து உண்டாகி, எந்த வஸ்துவினோடு முடிவில் ஐக்கியமாக விடுகிறோமோ அந்த வஸ்துவிடம் வைக்கிற ப்ரியம் தான் சாஸ்வதமானது.அந்த வஸ்துவைத் தான் ஸ்வாமி என்கிறோம்.

21.அன்புடைமை,அருளுடைமை போன்றவற்றைதான் அப்யாசம் பண்ணாமல், பகவான் தனக்கு மட்டும் அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை,யாகம் செய்தும் பிரயோஜனம் இல்லை. அப்பய்ய தீட்சிதர், கோவிந்த தீட்சிதர், திருவிசநல்லூர் அய்யவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் சேரி ஜனங்கள் உட்பட எல்லோருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் கலந்து போகவும் கூடாது ; ஒரேயடியாக பிரிந்தும் இருக்ககூடாது. ஸ்வதர்மப்படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும் ; மனதிலே ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்

22.கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைதிருப்பதர்க்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம். வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக் கொள்கைகளும், ஒழுங்கு முறைகளும், நன் நெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன.அவை அடிப்படை உண்மைகளை நாம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன. பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப் படித்து, ஆராய்ந்து நாமும் நன்மை பெற்று உலகும் நன்மை பெறச் செய்வோமாக .

23.நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால் ஒரு நதி சமுதிரத்தை அண்டும்போது அதன் ஓசையும், வேகமும் அடங்கி சாந்தபடுவதைப் போல நாமும் சாந்தியை பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத்தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தை தேடி அந்த ஒன்றிடம் பக்தி செலுத்துகிறான். தன்னையே ஒருவன் அறிந்து கொள்ளும்போது தானும் கடவுளும் வேறல்ல ஒன்றுதான் என்ற உணர்வு ஏற்படும்.

24.பக்தியே இல்லாது வெறும் கர்மாக்களை மாத்திரம் செய்பவனிடமும், வேலை ஒன்றும் செய்யது வெறுமே பகவானை மாத்திரம் ஸ்தோத்திரம் செய்பவனிடமும் ஆண்டவன் மகிழ்ச்சி கொள்வதில்லை. ஸ்தோத்ரங்கள், பகவானின் மகிழ்ச்சிக்காக சொலப்படுவதில்லை. நாம் அவற்றை சொல்வதால் நம் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் அவனை நினைக்கிறோம். அவனது அருளையும் பெறுகிறோம்

25.தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திர்ம,தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில்தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால்மு, கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கையும், மனசையும் அவையவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

26.இன்பத்துக்கு சாதனமாக வேண்டுவது பொருள். ருசியாக சாப்பிடலாம், அது ஒரு சந்தோஷம் - ஜீரமானவுடன் அந்த இன்பம் போய்விடும். சங்கீதம் கேட்பதால் உண்டாகும் இன்பமும் அப்படியே; மறுபடி கச்சேரி கேட்கப்போக வேண்டி இருக்கும்.நமக்கு ஒரு நல்வரவு பத்திரம் வாசித்துக் கொடுத்தால் அது ஒரு சந்தோஷம். அது சிறுது நேரமேஇருக்கும். நான்கு பேர்கள் அதை ஒப்புக் கொள்ள வில்லை என்றால் சந்தோஷம் போய்விடுகிறது. இந்த இன்பத்திற் கெல்லாம் ஆதாரம் - பொருள்;

27.கோடிகோடி மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரசாரங்களைச் செய்கிறோம்.

28.நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.

29.ஸ்வப்னம் என்பதே வாழ்க்கையில் நிறைவேறாத அபிலாஷைகளின் ஸ்வரூபம். ஸ்வப்னத்தில் கெட்ட காரியங்கள் பண்ணுவது போல கண்டால், நாம் அப்படி எண்ணிக் கொண்டிருந்திருக்கிரோமோ என்று மனது துக்கப் பட வேண்டும். கெட்ட காரியமோ கெட்ட காமமோ ஒரு நாளும் ஸ்வப்னத்தில் வராமலிருந்தால் அப்போது நல்லவர்களாக இருக்கிறோம் என்று சந்தோஷப்படலாம். நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளத்தான் ஈஸ்வரன் ஸ்வப்னத்தை வைத்திருக்கிறான்.

30.பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவை மனப்பான்மை , தியாகம் எல்லாம். இதைப் பொதுவாக அன்பு என்று சொல்லலாம். பெரியவர்களிடம் அன்புடன் இருப்பது விசேஷம் இல்லை . மஹா பாவிகளிடமும் அதே அன்பு வைக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவனிடமே அன்பு வைக்க வேண்டும்.

31.அவனவனும் தன் உடலையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே பெரிய பரோபகாரம் தான். துர்ப் பழக்கங்களால் ஒருவன் வியாதியை சம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்பறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ணமடியும்? அது மட்டுமல்ல. அவனது நோய் மறவர்கள்கும் பரவக்கூடும். துர்ப்பழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொள்வது பர அபகாரம் ஆகும். நம்மை மீறி வந்தால் அது வேறு விஷயம்.

32.உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவது போல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு,நாடிகளை, பலம் பெறச் செய்கிறது. இதனால் சித்தம் சுத்தி பெற்று, நம்முள் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது. நடத்தையாலும் ஆசார அனுஷ்டனங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளை பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பற்றவும் முடியும்.








விசிஷ்டாத்வைத ரீதியாக தத் த்வம் அஸி என்பதை ஆராய்ந்தால், 'தத்' என்றால் சூஷ்மமாய் இருக்கின்ற பரமாத்மா. த்வம் என்றால் ஸ்தூலமாய் இருக்கின்ற பரமாத்மா என்று பொருள்.ஸ்தூலமாயும் சூஷ்மமாயும் அவனே இருக்கின்றான் என்று அா்த்தம்.பிரளய காலத்திலே சூஷ்மம்.சிருஷ்டி காலத்திலே ஸ்தூலம்.

தான் எப்படி சத்யமாகவும் நித்யமாகவும் அனந்தமாகவும் அளவிலா ஆராமுதமாகவும் பரமாத்மா இருக்கிறானோ...அதே மாதிாிதான் எல்லா சராசரங்களையும் அழியாமல் காத்து,தன்னுள்ளே அடக்கி வெளியே விடுகிறான். ஆகையினால்தான் நம் ஸம்ப்ரதாயத்தில் அழிவு என்பதே கிடையாது என்கிறாா்கள். அப்படியானால் அழிவு என்கிற சொல் எதைக் குறிக்கிறது..?

அழிவு என்றால் எது..? என்ன..? ஒரு வஸ்துவாய் மாறி நிற்பதுதான் அழிவே தவிர,இல்லாமலே போய் விடுவது அல்ல.

மண்ணினுடைய அழிவு எது...?

அது பானையாக பாிணிமிக்கிறதே...அப்போது மண் இல்லாமல் போகிறது. மண் உருண்டையை அழித்து பானையாக்கினால்,மண் உருண்டை அழிகிறது.

பானையை எடுத்து ஒரு தடியால் அடிக்கிறோம். அது ஓட்டாஞ்சில்லியாகிக் கீழே விழுகிறது. இப்போது பானையினுடைய அழிவு எது என்று கேட்டால், ஓட்டாஞ்சில்லி!

அந்த ஓட்டாஞ்சில்லியை இன்னும் அடிக்கிறோம்.அது அணுவாகி,பரம அணுவாகிப் போகிறதே ஒழிய அடியோடு அந்த வஸ்துவே இல்லாமல் போகாது.

அதே மாதிாிதான் ஆத்மாவுக்கும் அழிவு கிடையாது. அழிவில்லாத ஆத்மாவையும் தன்னுள்ளே அடக்கிக் காக்கிறான் பரமாத்மா. ஆகையினாலே பிரளய காலத்தில் மிக ஜாக்கிரதையாகச் செயல்படுகிறான். அந்தக் காட்சியை மாா்க்கண்டேய மஹாிஷி பாா்த்து ஆனந்தப்படுகிறாா். உள்ளுக்குள்ளே அவ்வளவையும் அடக்கிக் காத்து, மறுபடியும் சிருஷ்டி கிரமத்தில் வெளியே விடுகிறான் பரமாத்மா.

இதை சிலந்திப் பூச்சி உவமையைக் கொண்டு அழகாக எடுத்துச் சொல்கிறது சாந்தோக்ய உபநிஷத்.

சிலந்தியிருக்கிறதே, கிடுகிடுவென்று மேலே வரும்,கீழே இறங்கும். வலை பின்னும். நூல் போல திரவத்தை வெளியே விடும். மறுபடியும் உள்ளே இழுத்துக் கொள்ளும்.

எதற்காக வெளியே விடுகிறது? எதற்காக நூலை மறுபடியும் உள்ளே இழுத்துக் கொண்டது? பசையுள்ள அந்த நூலில் நூற்றுக்கணக்கான கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அது மொத்தத்தையும் உள்ளே இழுத்துக் கொள்ளத்தான் அப்படிச் செய்கிறது சிலந்தி.

அதே போல்தான் பரமாத்மா. தன்னுள் இருப்பதை வெளியே விடுகிறான். பிறகு தன்னுள்ளேயே இழுத்துக் கொள்கிறான். எல்லாவற்றையும் சாப்பிடுகிறான் - சராசரங்கள் அனைத்தையும் விழுங்கிக் காக்கிறான் பரமாத்மா. பிறகு அத்தனையும் வெளியிலே விட்டு,அந்தா்யாமியாய்தானே கூட நின்று ரக்ஷிக்கிறான் பரமாத்மா.

அவனே வாிக்கப்பட வேண்டியவன்.

அவன்தான் வரத்தைக் கொடுக்கக் கூடியவன்.

அவனே சிருஷ்டிக்கிறான்; அவனே சிருஷ்டிக்கப்படுகிறான்; அவனே உண்கிறான், அவனே விழுங்கப்படுகிறான்!

'பாருண்டான் பாருமிழ்ந்தான் பாாிடந்தான் பாரளந்தான்...' என்றாா் நம்மாழ்வாா். இந்தப் பாரை அவன் எதுதான் பண்ணவில்லை...!?

பாரை எடுத்து உண்டான்; மறுபடியும் அதை உமிழ்ந்தான். நடந்தான், அளந்தான்...இந்த உலகம் ' தன்னுடையது தன்னுடையது' என்று அவன் இவ்வளவு காரியம் பண்ணியிருக்கிறபோது, அது நம்முடையது நம்முடையது என்று சொல்லலாமா..? நாமும் நம்மைச் சோ்ந்ததும் கூட அவனுடையதுதானே!

ஹே வரதா! ப்ரபோ! என்னைச் சோ்ந்தது, என்னுடையது, யானும் எல்லாம் உன்னைச் சோ்ந்தது. நீயே எடுத்துக் கொள் என்று பிராா்த்தனை பண்ணினால் பரமாத்மா அனுக்ரஹம் பண்ணுகிறான்.

(Mukkur Sri Lakshminarasimma chariar swamy)






காஞ்சி மஹா ஸ்வாமிகளுக்கு மஹா அனுஷ ஜயந்தி மஹா அபிஷேகம்!
காஞ்சி சங்கரமடத்தில்… மடத்து வாத்தியாராக இருந்து, மஹா பெரியவருக்கு உண்டான கைங்கர்யங்களை மிகுந்த சிரத்தையுடன் செய்து வந்தவர்- மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். மெத்தப் படித்தவர்; காஞ்சி மகானை கண் கண்ட தெய்வமாகவே எண்ணி போற்றி வருபவர்!
காஞ்சி மஹான் இருந்தபோதே, அவரது ஜன்ம நட்சத்திரமான அனுஷ நாளில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வேத பாராயணம், பாதுகாபிஷேகம் என்று விமரிசையாகக் கொண்டாடினார் பட்டு சாஸ்திரிகள். இதற்காக தன் பாதுகைகளையும் 32 ரூபாயையும் கொடுத்து, அனுஷத்தைக் கொண்டாடுவதற்கு பட்டு சாஸ்திரிகளுக்கு ஆசிர்வாதம் செய்தார், மஹா பெரியவர்! சாஸ்திரிகளின் இல்லத்தில்… பெரியவாளின் பாதுகைகளைக் கொண்டு, மாதந்தோறும் அனுஷ நட்சத்திர உற்ஸவம் நடைபெறும். மகா அனுஷ நட்சத்திர உற்ஸவம் மேற்கு மாம்பலம்- அயோத்தியா மண்டபத்தில் கொண்டாடப் படும். துவக்கத்தில் சொந்த செலவில், இந்த வைபவத்தை கொண்டாடி வந்தார் சாஸ்திரி கள். பின்னர், காஞ்சி மஹானின் அருளுக்குப் பாத்திரமான அன்பர்கள் இவரது சேவைக்கு உதவினர்; உதவியும் வருகின்றனர்.
2001-ஆம் வருட மஹா அனுஷ உற்ஸவம், அயோத்தியா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமிநாதன் (மகானின் பூர்வாஸ்ரமப் பெயர்… சுவாமிநாதன்) என்ற பக்தர், இரண்டு பித்தளை சொம்புகளை பட்டு சாஸ்திரிகளிடம் கொடுத்து, ” மஹா ஸ்வாமிகளுக்குப் பஞ்ச லோக விக்கிரகம் வடித்து, உற்ஸவம் நடத்துங்கள்” என்று கூறி விட்டு நகர்ந்தார். இதை மைக்கில் அறிவித்ததுடன், பித்தளை சொம்பு கொடுத்தவரை கௌரவிக்கும் விதமாக, ‘சுவாமிநாதனை மேடைக்கு அழைக்கிறேன்’ என மைக்கில் கூறினார் சாஸ்திரிகள். ஆனால், சுவாமிநாதன் வரவே இல்லை. எனவே, ‘இது ஸ்வாமிகளின் விருப்பம் போலும்’ என தீர்மானித்த அன்பர்கள், அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொருவரது வீட்டில் இருந்தும் சொம்பு மற்றும் பழைய பாத்திரங்களை கொண்டு வந்தனர். பஞ்ச லோக விக்கிரகம் வடிப்பதற்குத் தேவையான உலோகங்கள் வந்து சேர்ந்ததும், அவற்றை சுவாமிமலையில் உள்ள ஸ்தபதி ஒருவரிடம் வழங்கி, விக்கிரகம் வடிக்கும் பணியை ஒப்படைத்தார் பட்டு சாஸ்திரிகள்.
இதையடுத்து, மஹா பெரியவாளின் ஜயந்தி நாள் நெருங்கும் வேளையில் (வைகாசி மாதம்), தான் வடித்த மகா பெரியவாளின் விக்கிரகத்துடன் பட்டு சாஸ்திரிகளின் இல்லத்துக்கு வந்தார் ஸ்தபதி. சாஸ்திரிகள் சொன்ன கால அவகாசத்துக்கு முன்னரே வேலையை முடித்திருந்தார் ஸ்தபதி. இதுகுறித்து மகிழ்ச்சியடைவதற்கு பதில் கவலைக்குள்ளானார் சாஸ்திரிகள். காரணம்? விக்கிரகம் வடிப்பதற்காக ஸ்தபதிக்கு முன்பணம் கொடுத்திருந் தார் சாஸ்திரிகள். இப்போது மீதத் தொகையான ஆறாயிரம் ரூபாயை ஸ்தபதிக்கு தர வேண்டும். ஆனால், சாஸ்திரிகளிடம் பணம் இல்லை. எனவே தயங்கியபடி, ”இப்ப பணம் இல்லையே…” என்றார். உடனே ஸ்தபதி, ”பரவாயில்லீங்க. பணம் வந்ததும் கொடுங்க!” என்று கூறிச் சென்றார்.
தன் உண்மையான பக்தன் கஷ்டப்படுவதைக் கண்டு காஞ்சி மஹானுக்கு பொறுக்கவில்லை போலும்!
கணேஷ்குமார் (கடம் விநாயக்ராமின் சகோதரரின் மாப்பிள்ளை) என்பவர், மஹா பெரியவாளின் தீவிர பக்தர்; அப்போது அமெரிக்காவில் இருந்தார். ஒருநாள் இரவில்… இவரின் கனவில் தோன்றிய பெரியவாள், ‘மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்கிட்ட ஆறாயிரம் ரூபாயை உடனே கொடுத்துடு’ என்று கூறி மறைந்தார். சட்டென்று விழித்த கணேஷ்குமார், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அசதியில் அப்படியே தூங்கிப் போனார். அப்போது எவரோ வந்து தன்னை தட்டி எழுப்புவது போல் உணர்ந்தார் கணேஷ் குமார். இதன் பிறகு, கனவு குறித்து யோசித்தவர், சென்னையில் உள்ள உறவினர் மூலம் பட்டு சாஸ்திரிகளிடம் ஆறாயிரம் ரூபாயை கொடுக்கும்படி தெரிவித்தார். மறுநாள்! பட்டு சாஸ்திரிகளிடம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கண்ணில் நீர் மல்க வாங்கிய சாஸ்திரிகள், உடனே பூஜை அறைக்கு ஓடிச் சென்று, மஹா பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன் விழுந்து நமஸ்கரித்தார். ஸ்தபதிக்கு பணத்தை பட்டுவாடா செய்தார்; பஞ்ச லோக விக்கிரகத்தை பூஜிக்கலானார்!
இந்த விக்கிரகத்தைக் கொண்டு, மாதந் தோறும் சாஸ்திரிகளின் இல்லத்திலும் மஹா அனுஷ நாளில் அயோத்தியா மண்டபத்திலும் உற்ஸவ வழிபாடுகள் நடந்தேறும். காஞ்சி மகானின் மஹா அனுஷ ஜயந்தி மஹோத்ஸவம், கொடியேற்றத்துடன் துவங்கி, ஹோமங்கள், வேத பாராயணம், கச்சேரிகள், விக்கிரக ஊர்வலம் என்று அமர்க்களப்படும் விழாவில்… தினமும் 108 குடங்களில் திரவியங்கள் மற்றும் மலர்கள், விபூதி ஆகியவை சேகரித்து அபிஷேகம் செய்யப்படும். தவிர 1008 சங்காபிஷேகம், 1008 இளநீர் அபிஷேகம், பாதுகைக்கு 1008 வடைமாலை மற்றும் 1008 ஜாங்கிரி மாலை ஆகியவையும் சார்த்தப்படுகிறது.
”என் காலத்துக்குள்ளேயே மஹா பெரியவாளுக்கு ஒரு கோயில் கட்டணும்னு ஆசை” என்கிற பட்டு சாஸ்திரிகளுக்கு வயது 86. இவர் மகன் சந்திரமௌலியும் இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
முகவரி: சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி பக்த ஜன ட்ரஸ்ட், 18/9, காமாட்சிபுரம் முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033.
போன்: (044) 2371 1971, 98844 95578.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா நவமணி மாலை
நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம் யான் பாடக் கார்மேனி ஐங்கரனே காப்பு
1. திருவளரும் காஞ்சி வாழ் ஸ்ரீ காமகோடி
நாதனவர் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா அமலனவர்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீ மஹா பெரியவா புனிதரவர்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா தேவரவர்
கண்ணிரண்டும் தினமும் காக்க
2. புவியிறைஞ்சும் ஸ்ரீ மஹா பெரியவா புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீ மஹா பெரியவா பக்த சேவகர்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவர் ஸ்ரீ மஹா பெரியவா என்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியார் ஸ்ரீ மஹா பெரியவா என்
நாசியினை நயந்து காக்க
3. கண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா என் தெய்வமவர்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா விமலரவர்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா பரமரவர்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா மாதவர் என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க
4. தூயசுடர் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீ மஹா பெரியவா நவநீதரவர்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸ்ரீ மஹா பெரியவர்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸ்ரீ மஹா பெரியவா வள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க
5. குரு ஸ்ரீ மஹா பெரியவா பகவானவர் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா உத்தமர் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா என்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீ மஹா பெரியவா போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க
6. கனிவுமிகு ஸ்ரீ மஹா பெரியவா கடவுளவர்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா இறையவர் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா பதியவர் என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீ மஹா பெரியவா என்
பாத விரல் பத்தும் காக்க
7. இருதொடையும் ஸ்ரீ மஹா பெரியவா ஈசரவர்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீ மஹா பெரியவா
வானவர்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீ மஹா பெரியவா என் வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீ மஹா பெரியவா ஆண்டவர் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க
8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீ மஹா பெரியவா கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீ மஹா பெரியவா பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீ மஹா பெரியவா அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீ மஹா பெரியவா உடனே காக்க
9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீ மஹா பெரியவா என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீ மஹா பெரியவா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீ மஹா பெரியவா
ஸ்ரீ சிவனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் காஞ்சி சேர்
ஸ்ரீ மஹா பெரியவா சித்தர் காக்க.
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா மூல மந்திரம்
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!
Composed and Presented by:
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாசன்
Dr.Krishnamoorthi Balasubramanian
34/26,5th Main Road,Nanganallur,
Chennai-600061.
122nd Maha Periyava Jayanthi Samarpanam
KANCHI ACHARYAS, PERIYAVA THUNAI
THE MAHAN OF THIS MILLINEUM




காம்போஜி வந்தது எப்படி?-பெரியவா
====================
காஞ்சி மகா பெரியவர் தன்னை சந்திக்க வரும் குறிப்பிட்ட துறையில் சிறந்த வல்லுனர்களிடம் அவரவர் துறையில் ஏதாவது கேள்வி கேட்டு புதியதாக ஒரு தகவலையும் சொல்லுவார். அப்படி, ஒரு முறை இசை தொடர்பான சுவாரஸ்யமான தகவல் அவரிடம் இருந்து வெளிவந்தது.

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் ஒரு முறை மகா பெரியவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரிடம் காம்போஜி ராகம் எப்படி வந்தது தெரியுமா என்றார். கேட்டு விட்டு அவரே சொன்னாராம்
......
காம்போதி என்று இப்போது சொல்கிறோமே?

ஆனால், புத்தகப் பெயர் காம்போஜிதான். காம்போஜம் என்பது கம்போடியாங்கிறது பல பேருக்கு தெரிந்திருக்கும். அங்கே பாரத கலாசாரம் ரொம்ப ஆழமா பரவியிருக்கு.

ஒரு வேளை அந்த தேசத்திலிருந்து இறக்குமதி பண்ணின ராகம்தான் என்று நினைக்காதீர்கள்.பேராசிரியர் சாம்பமூர்த்தி நாம் எதுவும் அங்கிருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்று ஆராய்ச்சி பண்ணிச் சொல்லியிருக்கிறார்.

பின் ஏன் காம்போஜின்னு பேரு வந்தது?

கம்போடியா மட்டும் காம்போஜம் இல்லை.இந்தியாவின் வடக்கு எல்லையை ஒட்டினாற்போலிருக்கிற ஒரு பிரதேசத்தையும் காம்போஜம்னு சொல்லியிருக்கிறார்கள். ரகுவம்சத்தில் காளிதாசர், தேசம் தேசமாக விவரிக்கிறபோது சிந்து நதியைத் தாண்டி வடக்கே இமயமலையை ஒட்டினாற்போல் உள்ள காம்போஜத்தைக் குஇப்பிட்டிருக்கிறார். விசால இந்தியாவென்று சொல்லுகிற பிரதேசத்தில் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஒரு காம்போஜம் இருக்கிறதா தெரிகிறது. அங்கே விசேஷமாக உள்ள ஒரு ராகத்திலிருந்து காம்போஜி வந்ததோ?

சௌராஷ்டிரம்,கன்னட, சிந்துபைரவி,யமுனா கல்யாணி....
இப்படி அந்த இடத்திலுள்ளவர்கள் அந்தந்த ராகத்தை மெருகேற்றியிருக்கலாமே? - பெரியவா சங்கீத சங்கரர்.
 — with Pitchai Iyer Swaminathan.





"யார் செய்த தப்பை யார் ஏற்பது? ஸ்ரீ பெரியவா
ஏற்றுக் கொண்டார்கள்.எப்பேர்பட்ட ஒரு பெரிய மனது".

மெய்சிலிர்க்கும் கட்டுரை.-புதிய தகவல்.

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

புத்தகம்-தாயுமான மகான்-3

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கும்பகோணத்தில் ஒரு செட்டியார் பெரிய பணக்காரர்
மிகவும் வயிற்றுவலியால் துடித்தார். டாக்டர்கள்
அவர்களை காப்பாற்ற வழியில்லை என்பதால்
ஸ்ரீ மகாபெரியவாளை பார்க்க வந்தார்.ஸ்ரீ பெரியவாளிடம்
100 திருமாங்கல்யம் செய்து ஏழைகளுக்கு கொடுங்கள்
என்றார். இது எதற்கு என்றார் ஸ்ரீ பெரியவா.

யாராவது ஏழைகளுக்கு கொடுங்கள் என்று சொல்லிவிட்டு
போய்விட்டார்.இதை யாரிடமாவது பொறுப்பாக ஒப்படைக்க
வேண்டும் என்பதற்காக வேதபுரியை அழைத்தார். அவர்
பயந்து கொண்டு அந்த பொறுப்பை எடுக்க மறுத்துவிட்டார்.
ஸ்ரீ கண்டன் மாட்டேன் என்றார். கண்ணனை கேட்டால்
அவன் காசிக்கு சென்றுவிடுவான் பாலுவிடம் பொறுப்பை
ஒப்படை என்றார்.

திருநெல்வேலியிலிருந்து ஒரு சமையல்காரர் வந்தார்.
பாலுமாமா என்று என்னை கத்திக்கொண்டே இருந்தான்.
நான் கொஞ்சம் தாராளமாக இருப்பதை மற்றவர்களுக்கு
கொடுப்பேன்.

'பாலுமாமா நான் மடத்தில் கைங்கர்யம் செய்திருக்கேன்.
என் மகளுக்கு கல்யாணம். கொஞ்சம் ஒத்தாசை வேணும்
என்றார். நானும் ஸ்ரீ பெரியவாளிடம், இவர் (மலையப்பன்)
பெண்ணுக்கு கல்யாணமாம் என்றேன். "சரி அவனுக்கு
ஏதாவது பார்த்து செய்" என்றார். நான் புடவை,வேஷ்டி
கொடுத்தேன். திருமாங்கல்யம் கொடு என்றார். இரண்டு
திருமாங்கல்யம்,ரூ 2000மும் கொடுத்தனுப்பினேன்.

இரண்டு மூன்று மாதம் கழித்து பெண் அழுது கொண்டே
ஸ்ரீ மடத்துக்கு வந்தாள். காரணம் தெரியவில்லை.

வா ஏம்மா அழறாய்? என்றேன்.

"எனக்கு ஸ்ரீ பெரியவா திருமாங்கல்யம் கொடுத்தார்.
என் வீடு ரொம்ப வறுமையில் இருக்கு. சாப்பிடக்கூட
வசதியில்லை. அதனால் இந்த திருமாங்கல்யத்தை
அடகு கடையில் வைக்கப்போனோம். கடைக்காரர்
இதை தங்கமில்லை,செப்பு என்கிறார். எனக்கு மனசு
ரொம்ப கஷ்டமாக இருக்கு.என் மாமியாரும்,கணவரும்
என்னை அடிப்பார்கள். அதனால் இங்கு ஓடிவந்தேன்
என்று அழுதாள்.

ஸ்ரீ பெரியவா ஒரு டெஸ்க் (Desk) கொண்டு வா என்றார்.
டெஸ்க் என்றால் என்ன என்று ஸ்ரீ வேதபுரிக்கு
தெரியவில்லை.இரண்டு பெஞ்ச் கொண்டுவா என்றார்.

ஒரு மேடை மாதிரி செய்து அதில் ஏறி நின்றார்.

ஸ்ரீ பெரியவாளுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
"அவன் (செட்டியார்) தங்கமில்லை, செப்பு என்று
சொல்லியிருந்தால் இத்தனை கஷ்டமில்லை" என்று
சொல்லிக்கொண்டே "டேய் பாலு பக்கத்துல கடைக்கு\
போய் திருமாங்கல்யம் வாங்கிண்டுவா" என்றார்.

நானும் இரண்டு செட் திருமாங்கல்யம் 2 குண்டு வாங்கி
வந்தேன்.அந்த பெண்ணிடம் ஸ்ரீ பெரியவா ஆசி வழங்கி
கொடுத்தார். அந்த பெண் நமஸ்கரித்து சென்றுவிட்டாள்.
நான்கு நாட்கள் கழித்து ஸ்ரீ பெரியவாள் ஜெயந்தி வந்தது.
அன்று மக்களுக்கு தரிசனம் கொடுக்க ஸ்ரீ பெரியவா ஒரு
மேடைமீது ஏறி நின்றார்கள்.எல்லோரும் முன்னிலையில்.

"நான் தப்பு செய்துவிட்டேன்.நான் தெய்வம் சங்கராசார்யார்
என்று எல்லோரும் வருகிறீர்கள். நான் தங்கம் என்று
நினைத்து பித்தளையை கொடுத்துவிட்டேன் என்றார்.

(யார் செய்த தப்பை யார் ஏற்பது. ஸ்ரீ பெரியவா ஏற்றுக்
கொண்டார்கள்.எப்பேர்பட்ட ஒரு பெரிய மனது. இந்த
லோகத்துக்கே குரு எல்லோர் முன்னிலையில் இப்படி
பேசினார்.இன்று நினைத்தாலும் என் மனது அழுகிறது)

ஸ்ரீ மகாபெரியவா பொய்யே சொல்லமாட்டார்

































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக