புதன், 1 ஜனவரி, 2014

பஞ்ச பத்ர பாத்ரம் = பஞ்ச பாத்திரம்

ராதே கிருஷ்ணா 02-01-2014




பஞ்ச பத்ர பாத்ரம் = பஞ்ச பாத்திரம்.


பஞ்ச பத்ர பாத்ரம் = பஞ்ச பாத்திரம்.

"இது நம்ம ஆளு" படத்தில் பாக்யராஜுக்கு வந்த சந்தேகம் எனக்கும் நெடுநாட்களாக இருந்தது.அது "பஞ்ச" என்றால் ஐந்து.அப்போ பஞ்ச பாத்திரம் கொடுங்கள் என்றால் ஐந்து பாதிரங்களைத்தானே கொடுக்கவேண்டும்? என்பதுதான் அந்த சந்தேகம்.
சரி யோசித்தேன்.பெருமாள் கோவிலுக்கு போனேன் அங்கு ஸ்ரீனிவாசர் முன் ஐந்து வட்டில்கள் வைத்திருந்தார்கள்."ஓ ஹோ. இது தான் மருவி பஞ்சபாத்திரம் ஆனதோ" என்று நினைத்தேன்.
பின்னர் புரிந்தது.அது அப்படி அல்ல.
பண்டைய காலங்களில் ஒரு சிறிய தாமிர அல்லது வெள்ளி அல்லது தங்க பாத்திரத்தில் அதிகாலையில் தூய்மையான நீர் நிரப்பி, அதில் மூன்று இலைகள் அடங்கிய சில வில்வ பத்திரம்,சில துளசி இலைகள்,அருகம்பில்,வேப்பிலை,மற்றும் வன்னி இலைகளை சேர்த்து அந்த பாத்திரத்திற்கு சந்தானம் குங்குமம் இட்டு அப்பாத்திரத்தை வலதுகையால் மூடி "கங்கே ச யமுனே சைவ கோதாவரி!
நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!!"
என்று பிராதிப்பர்.
அதாவது "இப்பாத்திரத்தில் சப்த புண்ய நதிகளான கங்கா,யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி ஆகிய நதிகளில் புனிதம் வந்து சேரட்டும்" என்று பிரார்த்தனை செய்து பின் அந்த புனித நீரை இறைவனுக்கு ஆசமனம்,பாத்யம் உள்ளிட்டவை செய்து அந்நீரை தினமும் வீட்டிலுள்ளோர் அருந்த பயன்படுத்தும் நீர்நிறைந்த குடத்திலோ பானையிலோ ஊற்றி விடுவர்.அந்த ஐந்து இலைகளும் நீரில் நன்று ஊறி மருத்துவ குணம் நிறைந்த நீராக மற்றும்.நோயெதிர்ப்பு சக்தியை அந்நீர் நமக்கு அதிகரிக்கும்.
பஞ்ச-என்றால் ஐந்து.
பத்ரம்- என்றால் சமஸ்கிருதத்தில் இலை என்று பொருள்.
ஆக வில்வம்,துளசி,அருகம்பில்,வன்னி,வேம்பு ஆகிய பஞ்ச பத்ரங்களை அதாவது ஐந்து இலைகளை வைத்து பூசை மேற்கொள்ளும் பாத்திரம் ஆதலால் “பஞ்ச பத்ர பாத்திரம்” ஆனது.பின் அது மருவி பஞ்ச பாத்திரம் ஆனது.
இன்மேல் நாமும் மேல்சொன்னே ஐந்து இலைகளையும் நீரில் ஊறவைத்து அந்த நீரை தினமும் பருகி ஆரோக்யமாக வாழ்வோம்.ஐந்து கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் ஏதாவது சில இலைகளை தினமும் பயன்படுத்துவோம்.
வரும் புதிய வருடத்தில் எந்த நோய்களும் அண்டாவண்ணம் இருப்போம்.அனைவருக்கும் இனிய ஆங்கில
புத்தாண்டு நல்வாழ்த்துகள்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக