ஞாயிறு, 19 ஜனவரி, 2014

”2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை

ராதே  கிருஷ்ணா 20-01-2014














Photos from Jaganathan Kaarthika's post in தாய் தமிழக சிந்தித்து செயல்படுவோர் சங்கம்
By Jaganathan Kaarthika
”2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்களேன்?”
”இந்தக் கேள்விக்கு என்னுடைய ’2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்’ புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் பினாமிகள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இந்த ஊழலில் சிக்கி இருக்கிறார்கள். இந்த வி.ஐ.பி-க்கள் எல்லோரையும் சினிமாவில் வருவதுபோல், ஒரே ஃப்ரேமில் கைது செய்துவிட முடியாது. இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே மூன்றாவது
குற்றப் பத்திரிகையில் இடம்பெறுவார்கள். எனக்குக் கிடைத்த தகவல்படி, அடுத்தடுத்து 11 குற்றப் பத்திரிகைகள் வரை தாக்கல் ஆகப்போகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் விரைவில் சிக்குவார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். அடுத்து சிக்கப்போகிறவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இவருக்குப் பிறகு, மிகப் பெரிய பெயர் வரும். அது யார் என்று இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன்!”
”அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா?”
”நிச்சயமாகத் தமிழகத்தில் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க-வில் முக்கியமானவர்கள் எல்லாம் சிக்கிவிட்டார்கள். கருணாநிதிக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவரை எந்த முறையில் கொண்டுவரலாம் என்று ஆலோசித்து வருகிறோம். தயாளு அம்மாள், சாட்சிகள் வரிசையில் வருகிறார். ராஜாத்தி அம்மாளின் பெயரும் இருக்கிறது. இவை எல்லாம் பெரிய சமாசாரம் இல்லை. அதைவிட உயர் பதவியில் இருப்பவர்களை வளைத்துப் பிடிப்பதுதான் விஷயம்.ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் பலன் பெற்றவர்கள் என்கிற பட்டியலும் தயார் ஆகும்போது, அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் சிக்கலாம். கடைசியில், சோனியா காந்தி பெயரும் வரும். இவர்களை எப்போது வழக்கில் கொண்டுவருவேன் என்பதை நான்தான் முடிவு செய்வேன்(!). ஏனென்றால், இதை சி.பி.ஐ. செய்யாது. ஆட்சியில் இருப்பவர்களை அது நெருங்காது. காலம் வரும்போது, நான் நீதிமன்றம் மூலம் இதே சி.பி.ஐ-யை வைத்து சோனியாவை விசாரிக்கச் சொல்வேன்.
சோனியாவுக்கு இரண்டு தங்கைகள். அனுஷ்கா, நாடியா. இருவரும் அவரவர் கணவரைவிட்டுப் பிரிந்தவர்கள். இருவரும் அடிக்கடி துபாய்க்குப் போய் வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் டீலிங்கில் வந்த பணத்தை இவர்கள் சீனாவில் ‘மக்காவ்’ என்கிற இடத்தில் உள்ள வங்கியில் பதுக்கிவைத்து இருக்கிறார்கள். எவ்வளவு தெரியுமா? 35 ஆயிரம் கோடி. சுவிஸ் வங்கியில்கூட பணம் போட்டு இருப்பவர் ஒரு கிரிமினல் என்று தெரிந்தால், அவரது முதலீடு விவரங்களை வெளியே சொல்லிவிடுவார்கள். மக்காவ்வில் இந்த வசதி இல்லை. என்ன குற்றம் செய்து இருந்தாலும், அங்கு இருந்து ஒரு ‘பிட்’ தகவலைக்கூட பெற முடியாத அளவுக்கு சீக்ரெட் பாங்க் அது. அதன் விவரங்கள் விரைவில் வெளிவரப்போகிறது.
மத்தியில் நிதித் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயித்த கமிட்டியில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம், ஆ.ராசாவுடன் இணைந்துதான் முடிவு எடுத்து இருக்கிறார். இதை ஒரு ஃபைலில் ஆ.ராசாவே குறிப்பிட்டு இருக்கிறார். (அதன் நகல்களை நம்மிடம் காட்டுகிறார்) பல பேட்டிகளில் ஆ.ராசாவும், சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதற்கு, பத்திரிகை ‘கட்டிங்’குகளே சாட்சிகள். இப்படி இருக்கும்போது, ஆ.ராசா மட்டும் திகார் ஜெயிலில் இருக்க… இன்னொரு காரணகர்த்தாவான அவர் மட்டும் மத்திய மந்திரியாக நீடிப்பது எந்த வகையில் நியாயம்? நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது வழக்குப் போட பிரதமரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அந்தத் துறையில் இருந்து சிதம்பரம் மாற்றப்பட்டுவிட்டார். ஆகவே, எனக்கு இப்போது பிரதமரின் அனுமதி தேவைப்படாது.
இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு ஆகஸ்ட் 24-ல் வருகிறது. இதோ… நான் உங்களிடம் காட்டும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அவற்றைப் பரிசீலித்து நல்ல முடிவு சொல்வார்கள் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடக்கும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி, கோ-அக்யூஸ்டாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்கிற விவாதம் வரப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள்!” என்று சிரித்தார்.
இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் புயல் அடங்காதோ!



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக