செவ்வாய், 7 ஜனவரி, 2014

குருவின் மகத்துவம் :

ராதே கிருஷ்ணா 08-01-2014


குருவின் மகத்துவம் :






  • குருவின் மகத்துவம் :

    22 . மகாதேவி ! இங்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன் ! குருவை எவன் நிந்தனை செய்கிறானோ அவன் சந்திரசூரியர்கள் உள்ளளவும் கொடும் துயரத்துக்கும் சிக்கலுக்கும் ஆட்படுவான் !

    23 . தேவி ! தேகம் உள்ளளவும் ; கல்பம் முடியுமளவும் ஒருவன் குரு பக்தியில் லயிக்கவேண்டும் ! சுதந்திரமானவனாக இருந்தாலும் குருவுக்கு லோபம் செய்யலாகாது !!

    24 . தெளிவுள்ள சிஷ்யன் ஒரு போதும் குருவின் அருகாமையில் குசுகுசுவென பிறரோடு பேசலாகான் ! ஒருபோதும் உலகியல் விசயங்களை அலட்டித்திரியான் !!

    25 . குருவின் சந்நிதியில் அவரை அலட்சியப்படுத்தியும் ; அவமானப்படுத்தியும் பேசுகிறவன் தனது குருநிந்தனையால் அடர்ந்த காட்டிலும் தண்ணீரில்லாத வணாந்திரத்திலும் பிறந்து உழல்வான் !!

    26 . குரு இட்ட பணியை விட்டு விலகிச்செல்லலாகாது ! அவரின் உத்தரவில்லாமலும் அவ்விசயத்தில் தலையிடலாகாது ! குருவின் திருவருளால் பிரகாசிக்கிற ஞானத்தின் வழியில் மட்டுமே வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் !!

    27 . குருவின் ஆசிரமம் உள்ள தளத்தில் சுற்றி பொழுது போக்குவதும் ; குடிகூத்தில் ஈடுபடுவதும் கூடாது ! குருவே செய்யவேண்டிய தீஷை ; சாஸ்திர வியாக்கியானம் செய்து பிறருக்கு வழிகாட்டுதல் ; தூண்டுதல் ; உத்தரவிடுதல் போன்றவற்றில் முந்திரிக்கொட்டை போல ஈடுபடக்கூடாது !!

    28 . சிரமபரிகாரம் செய்து கொள்ளுதல் ; அங்கங்களுக்கு போகத்தை நாடுதல் ; களிக்கூத்தை நடத்துதல் ; சுற்றுலா செல்லுதல் ஆகியவற்றை குருவின் ஸ்தலத்தில் செய்யலாகாது !!

    29 . குருவின் ஸ்தலத்தில் தங்கியிருக்கும்போது அவரின் அடிமை போல இரவுபகலாக இட்ட கட்டளையை மட்டுமே செய்யவேண்டும் ! குருவால் எது சொல்லப்பட்டதோ அது நன்றாக தெரிந்தாலும் தீதாக தெரிந்தாலும் முரண்படாமல் ஈடுபாடோடு செய்யவேண்டும் !!

    30 . குருவிற்கு சமர்பிக்காமல் எந்தப்பொருளையும் அனுபவிக்கலாகாது ! சமர்பித்ததன் எஞ்சியதையே பிரசாதமாக உட்கொள்ளவேண்டும் ! இதனால் நித்ய ஜீவனை அடைந்துகொள்ளமுடியும் !!

    31 . குரு அணுக்கமாக பயன்படுத்தும் பாதுகை ; படுக்கை ; ஆசனம் அனைத்தையும் புனிதமாக பாவிக்கவேண்டும் ! காலால் அவற்றை கைப்பிசகாக கூட தொடக்கூடாது !!

    32 . குருவை பின்தொடர்ந்தே நடக்கவேண்டும் ! அவரைத்தாண்டி செல்லலாகாது ! அவரின் அருகாமையில் பகட்டாக அலங்காரமும் செய்து கொள்ளாமால் அடக்கத்தை பேணவேண்டும் !!

    33 . குருவை நிந்திப்போர் இருக்குமிடத்தை விட்டு அகன்று விடவேண்டும் ! ஏனென்றால் சக்தியிருந்தாலும் அவன் நாவை அறுக்காமல் அகன்று விடுவதே உத்தமம் !!

    34 . குரு உண்டு மிஞ்சியதை அடுத்தவருக்கு கொடுத்துவிடலாகாது ! அதை அப்படியே கைப்பற்றிக்கொள்வது நல்ல சீடனுக்கு அதிஸ்ட்டம் !! நித்தியத்தை அளிக்கவல்ல குருவின் கட்டளையை ஒருபோதும் மீறலாகாது !!

    35 . அநித்யமானதும் ; விரும்பப்படக்கூடாததும் ; அகம்பாவமுள்ளதும் ; புனையப்பட்டதும் ; குருவின் வழிகாட்டுதல்களுக்கு மாறுபாடானதுமான விசயங்களை பேசுவதை தவிர்த்து அவரின் வார்த்தைகளைப்பற்றியே சிந்தித்து வரவேண்டும் !!

    36 . பிரபோ ; தேவோ ; சாமி ; ராஜா ; குலவிளக்கே ; குலேசுவரா என்றிவ்வாறு குருவை மரியாதையுடன் அழைப்பவனாகவும் ; எப்போதும் அவருக்கு கீழ்படிதலுள்ளவனாகவும் இருப்பாயாக !!

    37 . பார்வதி ! முனிவர்களின் சாபத்திலிருந்தும் ; பாம்புகளிடமிருந்தும் ; தேவர்களின் அபசாராத்திலிருந்தும் ; இடி மின்னல்களிலிருந்தும் ; சந்தர்ப்ப சுழ்நிலையால் பகையாவோரின் தாக்குதல்களிலிருந்தும் குருவின் தயவு காப்பாற்றும் !!

    38 . குரு சாபத்தை அடைந்தவனை முனிவர்களாலும் காக்க இயலாது ; இவ்விசயத்தில் தேவர்களும் சக்தியற்றவர்களே !!

    39 . மந்திரங்களுக்கெல்லாம் ராஜமந்திரம் குரு என்ற இரண்டெழுத்து ஆகும் ! ஸ்மிருதி - வேத விளக்கங்களுக்கும் குருவின் வார்த்தையே பரம உறைவிடமாகும் !!

    40 . பிறரால் மதிக்கப்படவும் ; பூஜிக்கப்படவும் ; வெகுமானத்தையும் எதிர்பார்த்து காவியும் தண்டமும் தரித்தவன் சந்நியாசி எனப்படான் ! ஞானத்திலே பொதிந்து நிற்பவனே உண்மையான சந்நியாசியாவன் !!

    41 . யாரை சரணனடைந்து சேவை செய்தாலே மகாவாக்கியங்கள் பலரால் புரிந்துகொள்ள முடிகிறதோ அவரே சந்நியாசி ஆவார் ; மற்றவர்களெல்லாம் வேஷாதாரிகளே !!

    42 . என்றுமிருப்பதும் ; வடிவமற்றதும் ; நிர்க்குணமானதும் ஆன பிரம்மபாவத்தை தானும் மென்மேலும் உணர்ந்துகொண்டும் ; ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றுவதுபோல பிரம்மபாவத்தை பிறருக்கும் போதிப்பவனே சந்நியாசியாவான் !!

    43 . குருவின் அருளாகிய பிரசாதத்தால் தனது ஆத்மாவை பரமாத்மாவின் குமாரனாக (ஜீவாத்மாவாக) உணரப்பெறலாம் ! மனச்சமநிலை அடைந்து முக்திமார்க்கத்தில் ஆத்மஞானம் பெருகிப்பரவும் !!

    44 . அசையும் பொருளாயும் அசையாப்பொருளாயும் ; சிறு புல் முதல் சகலமாயும் ; உலக வடிவங்கள் அனைத்துமாயும் பரமாத்ம சொருபமே துலங்கும் ஞானம் உணரப்பெறலாம் !!

    45 . சச்சிதானந்தம் உறையப்பெற்ற வடிவானவரும் ; உணர்வுகளை (பாவனையை) கடந்தவரும் ; என்றுமுள்ளவரும் ; பரிபூர்ணமானவரும் ; குணங்களை கடந்தவரும் ; உருவமில்லாதவருமான பரமாத்மாவே(அருவ உருவம்) வடிவெடுத்து வருபவரான சற்குருவையே(உருவம்) நான் வணங்குகிறேன் !!















































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக