செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஜோதிடம் மதம் சார்ந்ததா?

ராதே கிருஷ்ணா 08-01-2014

ஜோதிடம் மதம் சார்ந்ததா?


Status Update
By பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்
ஜோதிடம் மதம் சார்ந்ததா?
------------------------------------
ஒரு வருடத்திற்கு முன் வேறு மதத்தை சார்ந்த பெண்மணி என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார்.தங்கள் மதத்தை சேர்ந்த பெரும் பாலான நபர்கள் ஜாதகம் பார்க்க மாட்டார்கள்,தனக்கும் ஜாதகத்தின் மீது நம்பிக்கையில்லை இருந்தாலும் நான் மிகவும் துயரமான நிலையில் இருக்கிறேன் அதனால் ஜாதகம் பார்க்க வந்ததாக கூறினார்.

திருமணம் ஆகி ஏழு வருடங்களாக குழந்தை இல்லை,கணவர் வீட்டில் மறுமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள் அதனால் ஜாதகம் பார்க்க வந்ததாக கூறினார்.கணவர்,மனைவி இருவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பரிகாரம் கூறி அனுப்பினேன்.நேற்று என் அலுவலகத்துக்கு பழங்களுடன் வந்திருந்தார்.பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் ரொம்ப சந்தோசமாக இருப்பதாகவும் கூறினார்.எனக்கும் மனதுக்கு சந்தோசமாகவும்,நிறைவாகவும் இருந்தது.

ஜோதிட கலை என்பது மதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.இந்து மதத்தை சேர்ந்தவர்களை தவிர மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் ஜோதிடத்தை விரும்பாததற்கு காரணம்,ஜோதிட பரிகாரங்கள் பெரும்பாலும் இந்து சமய தெய்வங்களை வணங்குவதாக இருக்கிறதால்தான் தயக்கத்திற்கு காரணம் என நினைக்கிறேன்.

மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் பரிகாரமாக அவரவர் தெய்வ வழிப்பாட்டினை கடை பிடிக்கலாம்.மேலும் பரிகாரம் என்பது தெய்வங்களை வணங்குவது மட்டுமல்ல,ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவுவது,ரத்ததானம் செய்வது,கல்விக்கு உதவி செய்வது இப்படி ஏகப்பட்ட பரிகாரங்கள் இருக்கின்றன.உதாரணமாக ஒருவர் கேதுவுக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றால்,கேது வால் பாதிக்கப்பட்ட மனிதருக்கு உதவிகள் செய்து மனதை குளிர்விப்பதும் பெரிய பரிகாரமாகும்.

ஜோதிடம் என்பது பல ரகசியங்களும்.
சூட்சுமங்களும்,அதிசயங்களும் கொண்ட அற்புத கலையாகும்.கலைக்கு மதமும் இல்லை,எல்லையும் இல்லை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக