திங்கள், 28 ஜூலை, 2014

ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதார டிப்ஸ்! – நடிகர் சிவகுமார்

ராதே கிருஷ்ணா 29-07-2014


ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதார டிப்ஸ்! – நடிகர் சிவகுமார்
இந்த வயதிலும் அவ்வளவாக உதிராத, நரைக்காத, உங்க தலை முடியின் அழகு ரகசியம் என்ன ஸார்?”

From the album: Timeline Photos
By Chandrasekaran Vembu
ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதார டிப்ஸ்! – நடிகர் சிவகுமார்

இந்த வயதிலும் அவ்வளவாக உதிராத, நரைக்காத, உங்க தலை முடியின் அழகு ரகசியம் என்ன ஸார்?”

வாரம் ரெண்டு தடவை விளக்கெண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பேன். எத்தனையோ வருஷப் பழக்கம் இது. நோ ஷாம்பூ. நான் பேசப் போகிற காலேஜ் பசங்க கிட்ட கூட இதை சொல்றேன். நீங்க செய்து பாருங்க. முடி நல்லா வளருதா இல்லையான்னு. சீயக்காய் உபயோகிங்க.

தினமும் குளிக்கும் முன்னால் உடல்ல ஆலிவ் எண்ணெய் தடவிட்டு குளிச்சா சருமத்துல இருக்கிற சொர சொரப்பெல்லாம் போயிடும். வழுவழுன்னு ஆகும்” என்று பளபளப்பான சருமத்துக்கு டிப்ஸும் தருகிறார்.

இவரைப் பாதித்த இன்னொரு விஷயம் இன்றைய இளைய தலைமுறையின் இரவு நேர பார்ட்டிகள்.

ஒருவரைப் பார்த்த உடனே சாஃப்ட்வேர் ஆசாமி என்று கண்டுபிடித்து விடலாம். சிறிய வயதிலேயே தலையில் சொட்டை, மூக்குக் கண்ணாடி. முகத்தில் சோர்வு ஓடி ஓடி சம்பாதிப்பவருக்கு ஓய்வு தான் எப்போது?

இப்ப கம்ப்யூட்டர் கம்பெனிகள், வார இறுதி நாட்களில் ரிசார்ட் கேளிக்கை விடுதிகள் என ரிலாக்ஸ் ஏற்பாடு செய்து தருகின்றன. அதில் வேலை பார்க்கும் ஆண், பெண்கள் இருபாலரும் தான் செல்கின்றனர்.

‘தண்ணீராய்’ ஓடும் பார்ட்டிகள் இவை. இங்கெல்லாம் நிறைய காண்டம்கள் கிடைப்பதாகத் தகவல்.

நன்றாக நினைவில் வையுங்கள்.

நமக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு மனிதப் பிறவி தான்.

ஒழுக்கம் கெட்டுப் போனால் ஆரோக்கியம் கெட்டு விடும். இன்று குஷி தருபவை அத்தனையும் கூடிய விரைவில் நம்மேல் நோய்களாய் வந்து அழுத்தும். ஓய்வுக்கு, மன ரிலாக்ஸ்க்கு வேறே நல்ல வழிகள் எத்தனையோ இருக்கின்றன. சாஃப்ட்வேரில் பெரிய பதவி வகித்து 35 வயதிலேயே மன அழுத்தத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனவரை எனக்கு தெரியும். திரை உலகிலும், மது, மங்கை என தீய வழியில் சென்று கண் பார்வை பறி போய், கோமாவில் விழுந்து உடல் நலிவுற்று பரிதாபமாக இறந்தவர்களையும் நான் அறிவேன். ஒழுக்கம் தான் நல்ல ஆரோக்கியம்! இதை இன்றைய யூத் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்டர்நெட்டில் நல்லது நாலாயிரம் வந்தால், கெட்டது ஐயாயிரம் வருகிறது. உங்க பிள்ளைங்க நல்லா இருக்கணும்னு நினைச்சா, கண்டிப்பா கம்ப்யூட்டரை ஹால்ல வையுங்க.” சிவகுமாரின் அழுத்தமான வேண்டுகோள் இது.

தூங்கறப்போ,பிள்ளைங்களை உங்க கூடவே படுக்க வைங்க. எங்க பசங்க சூர்யா,கார்த்தி, பொண்ணு பிருந்தா எல்லாரும் காலேஜ் போறப்ப கூட எங்க ரூம்லதான் படுப்பாங்க.”

வெற்றிகரமான குடும்பத்தலைவரின், தந்தையின் அனுபவ அறிவுரையால் அவரது பிள்ளைகள் நல்ல பெயரையே வாங்கியிருக்கிறார்கள்!

எல்லோரும் எளிதா செய்யற மாதிரி உடற்பயிற்சி சொல்லுங்க ஸார்”

டைனிங் டேபிள் கிடக்கட்டும். விருந்தினர் வந்தா உபயோகப்படுத்திக்கலாம். வீட்டுல தரையிலே உட்கார்ந்து சாப்பிடுங்க. காலை சம்மணம் போட்டு உட்காருவது ஒரு வித பத்மாசனம், குனிந்து நிமிர்ந்து சாப்பிடும் போது கைக்கும் வயிற்றுக்கும் பயிற்சி.”

அடிக்கடி தரையில உட்கார்ந்து எழுந்திருங்க.

லிஃப்ட் இருந்தாலும் கூடுமானவரை படியேறிப் போங்க. இதயத்தின் வலிமை அதிகரிக்கும். ஓசோன் இருக்கிற அருமையான காலைப் பொழுதுல மூச்சுப் பயிற்சியோ, நடைப்பயிற்சியோ பண்ணுங்க. நடக்க முடிந்த இடத்துக்கு நடந்தே போகலாமே!

வெண்ணெய், உப்பு, தயிர்,பால் எல்லாம் சாப்பிடுங்க ஆனால் அளவோடு இருக்கட்டும் அதற்கு மனக் கட்டுப்பாட்டைப் பழகிக்குங்க. 40 வயசுக்கு மேலே அசைவம் சாப்பிட வேண்டாமே! முற்றிலும் நிறுத்திடலாம்.

முடிந்த வரை ஆர்கானிக் காய்கறிகளை வாங்குங்க.

சாதம் போட்டுக்கிற இடத்தில அந்த அளவைக் குறைச்சுட்டு நிறைய காய்கறிகளை வச்சு சாப்பிடுங்க.

அரிசியைக் குறைச்சு சப்பாத்தி சாப்பிட்டா ஷுகருக்கு நல்லதுன்னு சொல்றாங்க. என்னைக் கேட்டா அதிலும் கார்போஹைட்ரேட் இருக்கு. அதை விட சிறு தானியங்கள், மில்லெட்ஸ் வகையான தினை, கம்பு, சோளம் இதெல்லாம் சாப்பிடப் பழகினாலே நல்லது.

என்ன வேணா சாப்பிடுங்க, ஆனா அதுக்குத் தகுந்த மாதிரி உடலுக்கு உழைப்பைக் கொடுங்க. அதுதான் முக்கியம்.

பிள்ளைங்களுக்கு அடிக்கடி ஜங்க் ஃபுட் வாங்கித்தர்ற தால அவங்க ஆரோக்கியத்துக்குக் கெடுதல் பண்றோம்னு இளம் பெற்றோர் உணருங்க. வேலைக்குப் போறோம்னு க்ரீஷ் அல்லது ஆயாகிட்ட ஒரு வயசுக் குழந்தைகளை விட்டுட்டுப் போகாதீங்க ப்ளீஸ். அதனால் எத்தனை கெட்ட விளைவுகள்னு நான் கேள்விப்பட்ட செய்திகளைத் தனியா ஒரு புத்தகமே போடலாம்” என்பவர் மீண்டும் வலியுறுத்துவது, மனசு உறுதியா இருந்தா… உடல் ரிலாக்ஸ்டா இருக்கும்”

ஓவியம், ஆன்மிகம், இலக்கியம், வரலாறு, ஆரோக்கியம் என எந்த விஷயத்திலும் ஆழ்ந்த ஞானம் கொண்ட சிவகுமார் சொல்வது எல்லாமே கடைப்பிடிக்க எளியவைதானே.. அவரைப் போலவே!

–நன்றி மங்கையர் மலர்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக