வியாழன், 24 ஜூலை, 2014

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் தத்துவம்

ராதே கிருஷ்ணா 24-07-2014



அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் தத்துவம்
Posted by பார்வதி அருண்குமார் i

Status Update
By Varagooran Narayanan
அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் தத்துவம்
Posted by பார்வதி அருண்குமார் i

திருமணத்தில் புதுமணத் தம்பதிகள் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது இன்றுவரை நடைமுறையில் உள்ள வழக்கம். ராமரின் குலகுருவான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. இவர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இதன் விளைவாக இவர்கள் வானில் நட்சத்திரங்களாக ஒளிரும் பேறு பெற்றனர். இவர்களைப் போல் மணமக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றனர். ஆனால் இந்த நட்சத்திரம் பகலில் கண்களுக்கு புலப்படுவதில்லை. மானசீகமாக மனதில் நினைத்து வணங்குகிறோம்.

இதற்கு மற்றொரு காரணமும் சொல்வதுண்டு…..புராணங்களில் சப்த ரிஷி மண்டலம் என்று சொல்வார்கள். சப்தம் என்றால் ஏழு, ஏழு முக்கிய ரிஷிகள் ஒன்றாக இணைந்து நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள். இந்த ஏழு நட்சத்திரங்களில் நான்கு, நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும். மற்ற மூன்றும் பட்டம் போல இருக்கும். இந்த பட்டத்தின் வாலில், நடுவில் இருப்பது வசிஷ்ட நட்சத்திரம், அதை ஒட்டி மெல்லியதாக இருப்பது அருந்ததி. இந்த இரு நட்சத்திரங்களும் ஒரே ஈர்ப்பு மையத்துடன் சுழல்பவை. அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்புடையவை. இந்த நட்சத்திரங்களைப் போல புதுமணத் தம்பதிகளும் ஒருவருக்கொருவர் ஈர்ப்புத் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது அருந்ததி பார்ப்பதின் தத்துவம்.







































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக