திங்கள், 21 ஜூலை, 2014

ஜூலை 21: விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்தவர்

ராதே கிருஷ்ணா 22-07-2014






From the album: Timeline Photos
By Chutti Vikatan
ஜூலை 21: விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்தவர் டேவிட் ரொனால்ட் டி மே வாரனின் நினைவு தினம் இன்று.

இவரது தந்தை 1934 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். சிட்னி பல்கலைக்கழகம் சிட்னிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டதாரியானார்.
1952 முதல் 1983 வரை மெல்பேர்ணில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி ஆய்வாளராகப் பணியாற்றினார். 1953 இல் கொமெட் என்ற உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானத்தின் விபத்துக் குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்த போது அவர் விமானத் தரவுப் பதிவு செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுகளை ஆரம்பித்தார். விமான விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிய இது மிகவும் உதவியாக இருக்கும் என அவர் நம்பினார். விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதினூடாக மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியுமென உணர்ந்த அவர் இதனைக் கண்டுபிடித்தார். 1960ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் 'கறுப்புப் பெட்டி' பொருத்தப்பட்டது.



































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக