சனி, 26 ஜூலை, 2014

மங்கையர்கள் கவனிக்க வேண்டியவை

ராதே கிருஷ்ணா 27-07-2014
மங்கையர்கள் கவனிக்க வேண்டியவை


From the album: Timeline Photos
By Rajesh Sathyanarayanan
மங்கையர்கள் கவனிக்க வேண்டியவை
பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு எழவேண்டும்.
சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து , முற்றத்தில் பெருக்கி
சாணந் தெளித்துகோலமிட வேண்டும்.
கோலமிடுவதற்கு , மஞ்சள் கலந்த அரிசிமாவு , பச்சிலைப்பொடி ,குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும்.
சுபகாரியங்களுக்கு ஒரு கோடும் ,
அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.
பூஜையறை , சமையலறை , சாப்பிடுமிடத்தை நாள் தோறும் கழுவுதல் வேண்டும்
அமாவசை , பௌர்ணமி , கார்த்திகை , மாதப்பிறப்பு ,
வெள்ளிக்கிழமை , பிறவிசேஷதினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்.
மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது.
தாமிரப் பாத்திரங்களை புளியினாலும் ,
வெங்கலம், பித்தளைப் பாத்திரங்களை சாம்பலாலும்
ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும் ,
எவர்சில்வர் , பீங்கான் பாத்திரத்தை அரப்புப் பொடியினாலும் சுத்தப்படுத்த வேண்டும்.
குளித்த பினபு தான் குடிநீர் எடுக்க வேண்டும்.
தண்ணீர்குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும்.
தோளிலும், தலையிலும் சுமக்கக்கூடாது.
சூரிய அஸ்தமன சமயமான மாலை நேரங்களில் ,
கைகால் கழுவி விளக்கேற்றி வைக்க வேண்டும்.
உரல் , அம்மி , முறம் , வாசற்படி , உலக்கை இவற்றின் மீது உட்காரக்கூடாது.
வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்டாது.4 வது நாளில் கணவனை வணங்கிவிட்டு ,
5ம் நாள் குளித்து விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம்.
அன்று கணவனோடு சேர்வது சிறப்பு
வாழை, புன்னை, மா, பலா இலைகள் சிறந்ததாயினும்,
உணவு படைப்பதற்கு வாழையிலையே மிகச்சிறந்தது.
வாழையிலையில் அடியில் சிறிது அறிந்துரிட்டு,
கழுவிவிட்டு இலையை போட வேண்டும்.
சாப்பிடுபவர்களின் வலது கைப்பக்கம் இலையின் அடிப்பாகமும்,இடக்கைப்பக்கம் நுனிப்பாகம் இருக்கும்படி போடவேண்டும்.
எதையும் கையால் படைக்கக்கூடாது.
அப்பளம் போன்றவற்றை கையை கழுவிவிட்டு போட வேண்டும்.
சோறு, கறி முதலியவற்றை மண்பாண்டத்தில் வைத்தோ அல்லது
அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது.
வீட்டுக்கு வந்த புது மருமகளையும், நோயாளிகளையும்
கர்ப்பிணிப் பெண்களையும். குழந்தைகளையும்
வயதானவர்களையும் முதலில் சாப்பிடச் சொல்ல வேண்டும்.
சாப்பிடும் போது நீர் குடிக்கக்கூடாது.உண்ட பின்பு குடிக்க வேண்டும்.
உணவு அருந்திய பின் குளிக்கக் கூடாது.
மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை கழித்து(2மணி நேரம்) குளிக்கலாம்.
ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது.
தலையில் சூடிய மலரை தானே எடுத்தெறிய கூடாது.
பெண்கள் விரதமிருக்க வேண்டும்.
கணவனுடைய அனுமதி பெற்றே விரதமிருக்க வேண்டும்.
தீபம் ஏற்றும் நேரம்
தீபம் ஏற்றும் நேரம் : பிரம்ம முகூர்த்தம்
காலையில் உஷத் காலத்திலும் ,
மாலையிலும் சூரிய அஸ்தமனத்தக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும்
எவர்சில்வர் விளக்கு ஆகாது.
2 திரியை சேர்த்த முறுக்கி, ஏற்றுவது உத்தமம்.
தீபத்தை கிழக்கு திசையிலும் ,
மேற்குத்திசை நோக்கியும், வடக்கு திசை நோக்கியும் தீப மேற்ற வேண்டும்.
தெற்கு எமனுடைய திசையாதலால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது.
ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக