திங்கள், 28 ஜூலை, 2014

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்:

ராதே கிருஷ்ணா 29-07-2014
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்:

Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்:

1)சுக்கிரனும் ஏழாம் அதிபதியும் கூடி இருக்க ஒரு தாரமே !!!
2) 7க்குடையனும் தன் வீட்டிலும் 2 ம் வீட்டிலும் அமர்ந்து இருக்க இருதாரம் அமையும்
3) சுக்கிரன் விருச்சிக லக்னத்துக்கு 11ல் நீச்சம் அடைந்தாலோ 7க்குடையனும் 6/12 ஆகிய இடங்களில் இருந்தாலும் இரு தாரமே
4) லக்ன பாவர்கள் அமைய இருதாரம்
5) செவ்வாயும் சனியும் சுக்கிரனும் பலமிழந்து 2-4-7-8-12 ஆகிய இடங்களில் அமையப்பெற்ற ஜாதகனுக்கு பலதாரங்கள் அமையும் ..
6) செவ்வாய் 2-4-6-8-12 ஆகிய இடங்களில் பாவர்கள் பார்வை சேர்க்கை அமையப்பெற்ற நிலைக்கு குரு 2-7 இருப்பின் பின் வாழ்க்கை வயோதிகத்தில் 2 ம் தாரம் அமையும்
7)சனியும் ராகுவும் 2-7 தொடர்பு அமைய இரு திருமணம் அமையும் ..
8) 2-7 க்குடைய கோள்கள் பரிவர்த்தனை பெற்றோ மேற்படி இடங்களில் சுக்கிரனின் சேர்க்கை பார்வை பட்டோ சுபர்கள் பார்வை பெற்றால் பலதாரங்கள் அமையும் ..
9) ஏழில் சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற மனைவி மேல் அன்பு கொண்டவர்
10) 7 ம் இடத்தில் அமையப்பெற்ற புதன் மாற்றான் மனைவி மேல் நேசம் கொள்ள வைக்கும் ..
11) 2ம் 7ம் 10ம் 4 ல் சேர அந்த ஜாதகனுக்கு பிற மாதர்கள் மேலே நேசம் கொள்ள வைக்கும்
12) 7ல் கேது அமையப்பெற்ற ஜாதகனின் மனைவி கொடும் குணம் கொண்டவர் ஆகிறார் .Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
ஜோதிட முத்துக்கள் :
பெண்ணின் ஜாதகத்தில் சந்திரனும், சுக்கிரனும், கணவனைக் குறிக்கும் ஏழாமிடத்தில் இருக்க, அவள் கிழவனை மணம்புரிவாள்
சனியும் சுக்கிரனும் சேர்ந்தால். காமம் மிகுதிப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். சஞ்சலமும் உண்டு
பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் சனியிருக்க, அவள் பிரச்சனைகளுடன், காவல் நிலையத்தில் திருமணம் முடிப்பாள். அல்லது பிரச்சனைக்குரியத் திருமணமாகவும் இருக்கும்.
ஏழில் நிற்கும் சனியைக் குரு காணவில்லையென்றால், பஞ்சாயத்திலோ, காவல் நிலையத்திலோ பிரச்சனைகள் பேசப்படுகின்றன. குரு பார்த்தால், நீதிமன்றங்களில் முறையிட்டு, விவாகரத்து செய்கின்றன. " கதிர்மகன் ஏழில் கலந்திட இருந்தால், கன்னியர்க்கு களத்திரம் இரண்டாம்" என்கிறது சுகர்நாடி.


Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
ப்ரசன ஆரூடம்
வெளிநாடு சென்று பொருள் சேர்ப்பேனா? எனும் கேள்வியுடன் வரும் ஜாதகர் வந்த சமயம்
1 ] “சர ராசி” லக்னமாகி அதிலேயே “சந்திரன்” நின்றால் “கேள்வியாளர்” கார்யம் வெற்றி அடையும், செல்லும் இட்த்தில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டு “பொருள் ஆதாயம்” அடைந்து திரும்புவார்,
2] அதே “ஸ்திர ராசி” லக்னமாக அமைந்து அதிலேயே “சந்திரன்” நின்றால் சுபர்கள் பார்வையும் சேர்க்கையும் ஏற்ப்பட்டால் . வெளிநாடு செல்லமாட்டார் இங்கேயே “பொருள் ஆதாயம்” அடைந்து முன்னேற்றம் அடைவார் என பொருள், [ஸ்திர ராசி ஸ்திரம் என்பதை அறியவும் ] இருக்கும் இட்த்தை விட்டு நகர மாட்டார் என்று பொருள்,
3] அதேசமயம் கேள்வி வந்தபோது “இரட்டை படை” ராசியாகி அதில் “சந்திரன்” அமைந்து சுபர்கள் பார்வை இல்லாமல் “பாவர் சேர்க்கை”யுடன் அல்லது “சேர்க்கை”யுடன் இருக்க செல்லும் இட்த்தை விட்டு “வேறு இடம்” செல்வார். மிகவும் துன்படும் சூழ்நிலை உருவாக்கி விடும்,Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
பங்கு வர்த்தகம் : ஷேர் மார்கெட்:
ஜாதகத்தில் குரு தனஸ்தானத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் அதாவது, மிதுன லக்கினத்திற்கு 2-ம் வீட்டில் உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது விருச்சிக லக்கினமாக இருந்து 9-ல் உச்சம் பெற்று இருந்தாலும், மீன லக்கினமாக இருந்து பஞ்சம ஸ்தானம் என்கிற அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கிற 5-ம் இடத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், இவர்கள் ஷேர் மார்க்கெட்டில் லாபம் பெறுவர். அல்லது, குருவோடு தனாதிபதியோ அதாவது லக்கினத்திற்கு இரண்டாம் அதிபதியோ, பஞ்சமாதிபதி என்கிற 5-ம் அதிபதியோ அல்லது, பாக்கியாதிபதி என்னும் 9-ம் அதிபதியோ சேர்ந்து, லக்கினத்திற்கு 2-ல், 5-ல், 9-ல் இருந்தாலும் பங்கு வர்த்தகத்தில் லாபம் அடைவர். உதாரணமாக, கன்னி லக்கினமாக இருந்து குரு சிம்மத்தில் தனித்து இருந்தாலும் லாபம் அடையலாம். உச்சம் பெற்ற கடக குரு, ஆட்சி பெற்ற மீன – தனுசு குருவும், எதிர்பார அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய 5-ம் ஸ்தானத்தை பார்வை செய்தாலும் ஷேர் மார்க்கெட்டில் யோகம் உண்டு. முக்கியமாக ஜாதகத்தில் 5-ம் இடம், 9-ம் இடம் வலுத்து இருக்க வேண்டும். கும்ப லக்கினமாக இருந்து லக்கினாதிபதி சனி, தனாதிபதி குருவுடன் இணைந்து “புஷ்கலயோகம்” அடைந்தாலும், இந்த கூட்டு கிரகங்கள் 2-ல், 5-,ல் 9-,ல் 11-ல் இருந்தாலும் தன லாபமே.


குபேரன் பற்றி சில தகவல்கள்..,
------------------------------------------------------

From the album: Timeline Photos
By பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்
குபேரன் பற்றி சில தகவல்கள்..,
------------------------------------------------------
*பணத்திற்கு அதிபதியாக குபேரனை சாஸ்திரம் கூறுகிறது.

*திருப்பதி வெங்கடாசலபதிக்கே கடன் கொடுத்தவர். 

*ஒரு காலத்தில் குபேரன் எவருக்கும் பணத்தைத் தராமல் மூட்டை கட்டி வைத்திருந்தார். இதனால் பாவம் சேர்ந்து தொழு நோய் வந்து விட்டது. தன் நோய் குணமாக விநாயகரை வணங்கினார்.

*அவருக்குப் பிள்ளையார் அருகம்பில்லை அரைத்து மருந்தாக கொடுத்து நோயை குணமாக்கினார். அதன் பிறகே குபேரன் மக்களுக்குப் பணத்தை வாரி இறைந்தார்.

* விநாயகப்பெருமானை லட்சுமி குபேர கணபதியாக வழிபட்டால் குபேரனுடைய திருவருள் கிடைக்கும்.

*தென் நாட்டில் ஆந்தையைக் கண்டால் அலறி ஒடுகிறோம். ஆனால் வடநாட்டவர் தீபாவளி அன்று மகாலட்சுமியின் வாகனமாக அருகில் வைத்து வழிபடுகின்றனர். அன்று யார் வீட்டிலாவது ஆந்தை வந்து அமர்ந்து குரல் எழுப்பினால் லட்சுமி குபேரன் அருள் வரப்போகிறது என்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆந்தை கண்ணில் பட்டால் யோகம் அடிப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

*கும்பகோணம் மகாமகக் குளத்தில் மொத்தம் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் 20 தீர்த்தங்கள் மட்டுமே வெளியில் தெரிபவை. அவற்றில் ஒன்றுதான் குபேர தீர்த்தம்.

*ஒவ்வொரு வருடமும் மாசி மக தீர்த்த உற்சவத்தின்போது குபேரன் இந்த தீர்த்தத்தில் தங்கி அனைவருக்கும் அருள்வதாக ஐதீகம். இந்திர தீர்த்தத்திலிருந்து சுற்றில் 6வதாக உள்ளது.

*உங்களுக்குப் பெரிய கடன் அடைபடாமல் இருக்கிறதாப கடன் அடைப்பட்டு நிம்மதி அடைவதும் குபேர யோகம் தான்.

* மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் வாங்கிய தொகையில் சிறிதளவு அடைத்து விட்டால் ஒரு ஆண்டிற்குள் கடன் முழுவதும் அடைந்து விடும் என்பது உண்மையாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக