புதன், 23 ஜூலை, 2014

ராமாயணம் உண்மையே: ராமா சேது பாலங்களின் உண்மைகள்!!

ராதே கிருஷ்ணா 23-07-2014
MK Muthu Nadar added a video from July 17 at 7:50pm to his timeline — with Kuru Shith and 47 others in Rameswaram.
(இதை பொறுமையாக படிக்கவும், இதுவே நமது இராமபிரான் நமக்கு விட்டு சென்ற அடையாளம்)
இந்த காட்சியில் இராமாயணம் அறிவியல் புர்வமாக உண்மை என்று ஆங்கிலத்தில் நிறுபிக்கபட்டு உள்ளது, இதை நான் சுருக்கி இங்கு கூறி உள்ளேன். (வாக்கிய பிழைக்கு மன்னிக்கவும்)........
இராமாயணம் புவியியல் ரீதியாக சரியாக எழுதுபட்ட உரை. இதில் கூறப்படும் அனைத்து இடமும் உண்மையில் உள்ளது. கடவுள்
ராமனின் வருகை மற்றும் பிற ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும், ராமாயண புத்தகத்தில் உள்ளது போல தெளிவாக தொல்பொருளில் அடையாளம் காணபடுகிறது.

நாளாகமம் பதிவு என்று வானியல் (ஜோதிடம்) அவதானிப்பை அடிப்படையில், கோள்மண்டலத்தில் மென்பொருள் (planetarium software மென்பொருள்) மூலம், அதை கணிப்பது எளிதாக உள்ளது. இதன் முலம் தொல்பொருள் அடையாளம் மிக சரியாக சாட்சியாகிறது. நம் கடவுள் "ராமர்" பிறந்த நிகழ்வை "ஸ்ரீ ராம நவமி" என்று கொண்டாடுகிறோம். இது ராமயணத்தில், அவர் சித்ரா சந்திர மாதம் 9 ம் நாள் சரியாக பிறந்தார் என்று கூறபடுகிறது. இதை வானியல் கணிப்பை மூலம் துல்லியமாக அவர் 10 ஜனவரி 5114BC அன்று 12.30pm மணிக்கு பிறந்து இருக்கிறார் என்று மென்பொருள் அடிப்படையில் துல்லியமாக காட்டுகிறது,
மேலும், இராமனின் பிறப்பை போல, பிற அனைத்து நிகழ்சிகளும் மிகவும் "இராமாயணத்தில் வருவது போல பொருந்தி ஒத்து போகிறது". இதனால், இராமாயணம் இன்னும் துல்லியமாக உள்ளது என்பது நிரூபிக்கபட்டு உள்ளது.
பண்டைய காலத்தில் பெரும்பாலான அடுத்த தலைமுறை மக்கள், நடந்து முடிந்த தலைமுறைகளை காக்க முற்படவில்லை, மேலும், அயோத்தியாவில் கூறபடும் அனைத்தும் மணலில் புதைந்து உள்ளது.
இது இராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிகழ்வு, ஆகையால், இதை தனியாக ஆராய்வது மிகவும் கடினம்.
ஆனால், இதற்கு ஒரு ஆதாரம் தற்பொழுது கண்டுபிடிக்கபட்டு உள்ளது,

இது செயற்கைக்கோள் மூலம் இந்தியாவை புகைப்படம் எடுக்கும் பொழுது, கற்பனை என்று கருதப்பட்ட ராமர் பாலம் உண்மை என்று வெளிச்சதிற்கு வந்து உள்ளது. இது சிவில் பொறியியல் போன்ற சரியான திட்டமிடல் மூலம் பாலம் கட்டுமானம் நடந்து உள்ளது என்பது மேலும் ஒரு ஆச்சிரியம். இதை ராமாயத்தில் துல்லியமாக கடலில் மிதக்கும் பாலம் கட்டப்படும் விதிமுறையை விளக்கபட்டு உள்ளது.

இந்த கற்பனைக்கு கூட சாத்தியம் இல்லாத பாலத்தை., "நலா" என்னும் உயிர் நூல் அறிஞர் இராமர் அவர்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக முற்பட்டார். இவர் "பாலம் கட்டப்படும் விதிமுறையை" இராமபிரான் அவர்களுக்கு எடுத்து கூறினார். இதுவே, விஸ்வகர்மா இன் சந்ததி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இது போல, "மிதக்கும் பாலம்" என்பது மனிதர்கள் சாத்தியமில்லை ஒரு நிகழ்வு. இதை, சாத்தியம் அடைய வைத்தமையால், "இராமர் பாலம்" விஞ்ஞானிகளுக்கு இன்றும் ஒரு தலைசிறந்த ஆராய்சியாக உள்ளது.
மேலும், இராமயணத்தில், ஒவ்வொரு நாளும் (ஒரு யுகம்) எவ்வளவு தூரம் மூலம் பாலம் அமைக்க மூடப்பட்டிருக்கும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராவணன் அறிவியலில் சிறந்து விளங்குபவன். இதனாலே, இவன் "புஷ்பக் விமானம்" முலம் கடலை கடந்து சென்று சிதையை கடத்தினான். ஆனால், இந்த நுட்பமான "புஷ்பக் விமானம்" பற்றி இராமபிரான் அறியவில்லை. மேலும், "புஷ்பக் விமானம்" பற்றி பல ஆயிர வருடம் முன்பு தமிழில் எழுதப்பட்ட கவிதையில் வந்து உள்ளது என்பது கூறிபிடதக்கது,
இராமபிரான், இராவணனை வெற்றி பெற்று "புஷ்பக் விமானம்" முலம் மிண்டும் சீதா அன்னையுடன் திரும்பி வரும் பொழுது, இந்த பாலம், "நலா" முலமே சாத்தியம் அடைந்தது என்று கூறி, அதனால், இதை இனி நாம் "நலா பாலம்" என்றே அழைப்போம் என்றார், இராமபிரான்.

இது, நாளடைவில், மக்கள் இந்தியாவில் இருந்து நடந்தே இலங்கைக்கு சென்று வர்த்தகம் செய்து உள்ளனர், அதனால், இதை ராமா சேது பாலம் என்றே அழைத்தனர். இதை பற்றி பல காலசுவடிகளில் கூறபட்டு உள்ளது.
அதன்பிறகு, இஸ்லாமிய ஆத்திக்கம் இந்தியாவிலும், இலங்கையிலும் வந்த பிறகு, இதை திட்டம் இட்டு, முஸ்லிம்களும், ஐரோப்பிய வர்த்தகர்களும், இதை "ஆடம் பாலம்" என கூற ஆரம்பித்தார்கள். இது ஒரு திட்டமிட்ட சதியாகும், இதனால், இதன் வரலாறு மெல்ல மெல்ல அழிந்தது, ஆனால், சமிபத்தில் செயற்கைக்கோள் முலம் காட்டபட்டுள்ள படம் மிகவும் துல்லியமாக பாலத்தை சுட்டிகாட்டி உள்ளது. இதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து இது பவள பாறைகள் இல்லை என்று ஏற்றுக்கொண்டு உள்ளனர். மேலும், இது மிதக்கும் கல்லால்
ஆக்கப்பட்ட பாலம், இது தனிப்பட்ட வளைவு துல்லியமாக உள்ளதால். "முதலில், மிதக்கும் கற்கள்" பிறகு தேக்கு போன்ற மர கட்டைகள், பின்பு ஒருவகை பிசு களிமம், அதன் பிறகு மிதக்கும் கற்கள்). இது இயற்கையில் சாத்தியமே இல்லை என்று விஞ்ஞானிகள் சான்று கூறி உள்ளனர். இது கண்டிப்பாக மனிதர்கள் முலதனமகவே கட்டப்பட்டு உள்ளது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

மேலும், இந்த பாலம், 7000 ஆண்டுகளுக்கு மேல் நடந்த உலக வெப்பமயமாதல் மற்றும் பனிமலை உருகுதல் போன்ற காரணத்தால், இந்த பாலம் சரியாக ஒரு மீட்டர் மட்டுமே கடலிலுள் முழகபட்டு உள்ளது என்று கூறபட்டு உள்ளது.

இது இந்தியாவின் புராதன சின்னமாக இருக்கிறது, இதை அரசாங்கம் சரியான முறையில் திட்டமிட்டு, ஆராய்ச்சி செய்தால், நமது பண்டைய கால மக்கள் கட்டிட களை மற்றும் பொறியியல், தற்காலத்தை விட சிறந்ததாக கருதப்படும். இது நம்மை போன்ற தமிழர்க்கு மிகவும் பெருமை சேர்க்கும்.

இதை நாம் அறியாமையில், எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல், இது கற்பனை என்று சொன்னால்; இது நமது முன்னோர்களுக்கு நாம் இளைக்கும் அநியாயம். முடிந்த வரை. இதை உங்கள் நண்பர்க்கு ( share) செய்து, நம்மில் ஒரு விஞ்ஞானியை நாமே உருவாக்கி, உண்மையை வெளிக்கொண்டு வருவோம்..
ஹரே ராமா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக