சனி, 19 செப்டம்பர், 2015

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

ராதே கிருஷ்ணா 20-09-2015

Mohan Thirupparkadal Kannan added 9 new photos.
206. கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண நமோ நமோ
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஜெய ஜெயம்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண நமோ நமோ
சின்னஞ்சிறு பாதம் கொண்டு உலகை காக்க வந்தவன்
சீறி வந்த நதியும் கூட வழி கொடுக்க வைத்தவன்
குறும்பு செய்து அன்னையிடம் கட்டுப்பட்டு நின்றவன்
வாய் திறந்து உலகத்தை காட்டி மலைக்க வைத்தவன்
கிருஷ்ண கிருஷ்ண.... நமோ நமோ....
விஷமங்கள் செய்பவன் வெண்ணெய் திருடி தின்பவன்
புல்லாங்குழல் கீதம் இசைந்து நம்மை மறக்க செய்பவன்
காளிங்கனை அடக்கியே நர்த்தனம் செய்தவன்
தன் மக்களை காக்கவே மலையினை எடுத்தவன்
கிருஷ்ண கிருஷ்ண.... நமோ நமோ....
கையிரண்டும் தூக்கி மனதில் அவனை நாமும் நினைத்திட்டால்
ஓடி வந்து மானம் காப்பான் அவனை நாமும் நம்பிட்டால்
இல்லையென்று சொல்லும் எண்ணம் என்றும் இல்லை அவனிடம்
கண்ணன் பெயரை சொல்லும் போது கவலை பறந்து போகிடும்
கிருஷ்ண கிருஷ்ண.... நமோ நமோ....
வெண்ணெய் திருடி தின்றவன் மனதை கவர்ந்து செல்பவன்
ஆயர்பாடி மாந்தரோடு நடனம் ஆடி மகிழ்ந்தவன்
தன்னை நம்பி வணங்கிவோரை நாளும் காத்து நிற்பவன்
அரக்கர் குலத்தை அழித்து நல்லோர் வாழ்வை கண்ணன் காத்தவன்
கிருஷ்ண கிருஷ்ண.... நமோ நமோ....
வளர்த்த தாயின் வார்த்தை அதற்கு நாளும் கட்டுபட்டவன்
தாயை போல நம்மை காக்கும் தெய்வமாக நிற்பவன்
கண்ணன் நாமம் நாமும் சொல்லி வணங்கியே பாடுவோம்
கண்ணன் கீதை அதை கேட்டு அதன்படியே வாழுவோம்
கிருஷ்ண கிருஷ்ண.... நமோ நமோ....
உலகின் ஆட்டம் ஓட்டம் பாட்டம் அனைத்தும் அவன் இயக்கத்தில்
நன்மை தீமை இன்பம் துன்பம் அனைத்தும் கண்ணன் கைவண்ணமே
கருமையான நிறத்தை வைத்து நம்மை மயக்கி வைத்த மாயவன்
தர்மம், நேர்மை உலகில் நிலைக்க அவதாரம் செய்த காரகன்
கிருஷ்ண கிருஷ்ண.... நமோ நமோ....
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக