வியாழன், 3 செப்டம்பர், 2015

எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு சகாப்தம்...

ராதே கிருஷ்ணா 04-09-2015
Raman Pudhucherry added 2 new photos — with Senthilnath Sugunan.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு சகாப்தம்...
நான்கு தலை முறை நடிகர்களுக்கு பின்னணி பாடிய ஒரே பாடகர் யார் என்றால் அவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான்.வயதாக ஆக அவருடைய குரலில் இளமை மெருகேறிக் கொண்டே இருக்கிறதேயொளிய இறங்கவில்லை.அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளிவந்ந ஆடுகளம் திரைப்படத்தில் அவர் பாடிய ஐயையோ நெஞ்சு அலையதடி... என்ற பாடல்.இந்த பாடல் பாடியதற்காக எஸ்.பி.பி. க்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும் ஏனோ தரவில்லை.தேசிய விருது கொடுத்துதான் அவர் சிறந்த பாடகர் என பறைசாற்ற வேண்டிய அவசியம் எங்கள் எஸ்.பி.பி.க்கு இல்லை.அவர் வாங்கிய விருதுகளை பட்டியலிட்டால் இந்த பதிவை ஒரு வருடத்திற்கு பிறகுதான் முடிக்க முடியும் அவ்வளவு விருகளையும் ,பாராட்டுகளையும் வாங்கி குவித்திருக்கிறார் நம் எஸ்.பி.பி.
அவருடைய தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் அவருடைய தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது நாம் சிறிது வெட்கப்பட வேண்டியிருக்கும்,அவ்வளவு நளினமும்,துல்லியமும் அவர் பாடல்களிலும்,பேசுவதிலும் இருக்கும்.எண்பதுகளில் இசைக்கடவுள் இளையராஜாவும்,எஸ்.பி.பி .யும் இணைந்து உருவாக்கியப் பாடல்கள் பட்டி தொட்டிகளில் பட்டையை கிளப்பியது என்று சொன்னால் அது மிகையாகாது.இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்காக இவர் பாடிய பாடல்கள் ஏராளம் அதுமட்டுமல்லாமல் இன்றும் பாடிக்கொண்டிருக்கிறார்.இசைப்புயலின் முதல் படமான ரோஜாவில் எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் தான் ஏ.ஆர்.ரகுமானை உச்சத்திற்கு இட்டுச் சென்ற காரணங்களில் ஒன்று என்பது உலகறிந்தது.
எம்.எஸ்.வி.க்கும் பாடினார்,கே.வி.மகாதேவனுக்கும் பாடினார்,இசைக்கடவுள் இளையராஜாவுக்கும் பாடினார்,தேனிசை தென்றல் தேவாவுக்கும் பாடினார்,இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கும் பாடினார்,யுவன் சங்கர் ராஜாவுக்கும் பாடினார்,நேற்று வந்த ஜி.வி .பிராகாஷ் குமாருக்கும் பாடினார் ,நாளை வரும் யுவன் சங்கர் ராஜாவின் மகனுக்கும் பாடுவார்.அவரின் உழைப்பு அப்படி .கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பாடல்கள் பாடியிருக்கும் எஸ்.பி.பி. ஒரு சாதனை நாயகன்தான்.அது மட்டுமல்லாமல் ஏறக்குறைய இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார்.இது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்,திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்,
திரைப்படங்களில் நடித்துக்கொண்டும் இருக்கிறார் இப்படி பன்முகம் கொண்ட எஸ்.பி.பி. யின் வாழ்க்கை சிறு குறிப்பாக விக்கிப்பீடியாவின் உதவியுடன் தொகுக்கப்படுகிறது.
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், (அப்போதய மெட்ராஸ் மாகாணம்)தற்போது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் பிறந்தார். 1966 இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படத்துறையில் கால் பதித்தார். 1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.
1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து முன்னணிப் பாடகராகத் திகழ்ந்து வருகிறார்.எம்.ஜி.ஆர்.ருக்காக எஸ்.பி.பி. பாடிய ஆயிரம் நிலவே வா பட்டிதொட்டிகளிலெல்லாம் புகழ்பெற்று ஒலித்தது.
எந்தப் பாடகரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையான
36 ஆயிரம் பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருப்பவர் எஸ்.பி.பி. நாளொன்றுக்கு இரண்டரை பாடல்கள் வீதம் இவர் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடிவருகிறார் என்பது நிச்சயம் அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யும். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்
எஸ்.பி.பி. அவர்கள் முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லையென்றாலும் சங்கராபரணம்என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் அவர்.
எஸ்.பி.பி.பெற்ற தேசியவிருதுகள்
1996 ஆம் ஆண்டு
மின்சார கனவு திரைப்படத்தில் அவர் பாடிய
தங்க தாமரை என்ற பாடலுக்கும்,
1995 ஆம் ஆண்டு
சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை திரைப்படத்தில் வரும்
உமண்டு க்ஹுமண்டு கன கர் என்ற
கன்னட மொழி பாடலுக்காகவும்,
1988 ஆம் ஆண்டு
ருத்ரவீன என்ற தெலுங்கு திரைப்படத்தில் வரும்
செப்பாழனி உண்டி என்ற பாடலுக்காகவும்,
1983 ஆம் ஆண்டு
சாகர சங்கமம் என்ற தெலுங்
திரைப்படத்தில் வரும் வேதம் அனுவனுவுன
என்ற பாடலுக்காகவும்,
1981 ஆம் ஆண்டு ஏக துஜே கே லியே என்ற இந்தி திரைப்படத்தில் வரும்
தேரே மேரே பீச் மேனி என்ற பாடலுக்காகவும்,
1979 ஆம் ஆண்டு
ஷங்கர்பாரணம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் வரும்
ஓம் கார நதானு என்ற பாடலுக்காகவும், ஆக மொத்தம் ஆறு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
எஸ்.பி.பி. யின் தனித்தன்மையே இசையமைப்பாளரின் கற்பனையையும் கடந்த நகாசு வேலை அற்புதமாக வெளிப்படும். மெல்லிசைக்கான அத்தனை லாவகங்களையும் குரலில் வெளிப்படுத்தக்கூடியவர் அவர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் பலகாலமாக இளைஞர்களின் கனவுக்குரலாக இருந்துவருகிறது.
கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும்.இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும் உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல்.
இளையராஜா பிரபலமாவதற்கு முன்பு எஸ்.பி.பி.யின் இசைக்குழுவில் இருந்தார் என்பதால் ஒருவரை ஒருவர் ஒருமையில் கூட்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்குமிடையில் நட்பு. இளையராஜா எஸ்.பி.பி. கூட்டணியில் காலத்தால் அழியாத பல அற்புதப் பாடல்கள் வெளிவந்தன என்பது உண்மை. யாட்லிங் செய்வது, குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியது போல மாற்றிப் பாடுவது, பாடும்போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்கப் பாடுவது என்று வர்ணஜாலங்களையும் பாட்டில் வெளிப்படுத்தக்கூடியவர் எஸ்.பி.பி.
நான்கு தலை முறைகளாக தொடர்ந்து வரும் ஒரு சகாப்தம் எஸ்.பி.பி என்றால் அது மிகையில்லை.
அவர் இன்னும் பல்லாண்டு காலம் இசைத்துறையில் இருந்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டி வாழ்த்துவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக