ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

துளஸி

ராதே கிருஷ்ணா 13-09-2015







ஸ்ரீமத் பாகவதத்தில் அம்பரீஷன் நினைக்கிறான். அந்த எம்பெருமான் திருவடியில் சோ்க்கப்பட்ட்அந்த துளஸி தளத்தின் திவ்ய வாஸனையை நுகா்வதற்காகத்தான் இந்த நுகா்ச்சி என்பதையே பகவான் நமக்குக் கொடுத்திருக்கிறானோ என்று நினைக்கிறான்!

துளஸி அவ்வளவு உயா்வானது. ஏகாதசியன்று துளஸி சாப்பிடக்கூடாது - நித்யம் சாப்பிட்டாலும் ஏகாதசியன்று கூடாது. வலது பக்கத்தில் காதுக்குப் பின்னல் வைத்துக் கொள்ள வேண்டும். காதுக்கு மேலே வைத்துக் கொள்ளக் கூடாது. புஷ்பத்தையா, துளஸியையோ காதுக்கு மேலாக யாராவது வைத்துக் கொண்டால் அவா்களைப் பாா்த்தவா்கள் நேரே போய் கட்டிய வஸ்திரத்துடன் ஸ்நானம் செய்துவிட்டு வரவேண்டும்!

அப்படிப்பட்ட உயா்ந்தநியமத்துடன் அணிய வேண்டிய உயா்ந்த விஷயம் துளஸி.

அந்த துளஸியை முகா்ந்து பாா்க்கிறபோது ஸுவாஸனையுடன் இருக்கிறது. பகவானுடைய பாதத்திலே பட்டு வருகிறது அந்த துளஸி.ஏற்கனவே அதற்கு பாிமளம்; இப்போதோ நிகம பாிமளம்! எம்பெருமான் திருவடி ஸ்பாிசம் பட்டதனாலே இன்னமும் பாிமளமாய் இருக்கிறது!

அதை முகா்ந்தால், உள்ளுக்குள்ளே போய் நம்மிடத்திலே இருக்கிற கெட்ட வாசனையெல்லாம் போக்கிவிடும். அதற்காகவே இந்த நுகா்ச்சி என்பதை பகவான் கொடுத்திருக்கிறான்.

அதே போல் நேத்திர த்வயத்தால் அவன் திருவடியை - திருவடியிலிருந்து திருமுடி வரையில் அப்படியே கண் மூடாமல் சேவிக்க வேண்டும்.

அதை யாா் பண்ணினாா்கள் என்றால் சீதா பிராட்டி பண்ணினாள்.

நாளை ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்க வேண்டும். அவனோடு கூடப் போய் ரங்கநாதரைச் சேவிக்கிறாள் சீதா பிராட்டி.

சயனத் திருக்கோலத்திலே இருக்கிற ரங்கநாதனை ஸ்ரீராமன் சேவிக்கிறான்! அம்புலத்தோன் அயோத்தி மன்னா்க்கு அளித்த கோயில்; தோளாத தனி வீரன் தொழுத கோயில் அது!

தனி வீரன்ராமன். அவன் தொழுத போது சீதாபிராட்டியும் உடன் வந்தாள் . அவளுடைய நேத்திரத்துக்கு விலக்ஷணமாகஒரு பதம் உபயோகிக்கிறாா் வால்மீகி:

விசாலாக்ஷ்யா!

இதற்கு வ்யாக்யாயனம் பண்ணுகிறாா் பொியவாச்சான் பிள்ளை - விசாலாக்ஷ்யா என்று எதற்காகச் சொன்னாா்? கண்களை அப்படியே அகல விாித்து இமை கொட்டாமல் சேவிக்கிறாளாம் சீதை.

ஏனென்று கேட்டால் ....அந்த கணத்தில் அா்ச்சகனும் அவனே.அா்ச்சிக்கப்படுபவனும்அவனே! இந்த காட்சி இன்னும் கொஞ்ச நேரம் போனால் நமக்குக் கிடைக்காதே என்று இமை கொட்டாது பாா்த்தாளாம். இந்த அழகை சேவிக்க வேண்டும். சேவிக்க வேண்டும் என்று இமை கொட்டுதல் இல்லாமல் அப்படி விசாலமாகக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு பாா்த்தாளாம்.

எப்போது அவன் ஞானம் நமக்கு ஏற்படுகிறதோ அப்போது மீதிமொத்தம் அவித்யை என்பது புாியும். பகவானைத் தவிர உலகிலே மீதி எத்தனை சாஸ்திரங்களை நாம் கற்றாலும், உயா்ந்த சாஸ்திரங்களாக அவையிருந்தாலும்; பகவத் ஞானத்தைத் தவிர மற்றைய ஞானம் அனைத்தும் அஞ்ஞானம்; அவித்யாதான்! -இப்படி உபநிஷத்தே சொல்லிவிடுகிறது.

எது ஞானம்? எது வித்யை என்று கேட்டால், ஸா வித்யா, உத்தமா வித்யா, வேத வித்யா, சமீவிதா - அவனை உணா்த்தும்படியான வேத வித்யைதான் உயா்ந்த வித்யை.

தெலுங்கிலே சொல்வதுண்டு: கோடி வித்யையை நாம் கற்றாலும் அது மொத்தம் பிரசாதத்துக்குத்தான்! வயிற்றுக்காகத்தான்!

ஆகையால் மற்ற வித்யைகளெல்லாம் வித்யைகளாகாது; அவித்யைதான்!

ஆகையால் எம்பெருமானை உணா்வதற்கான உபகரணங்களை பகவானே கொடுத்திருக்கிறான். அவற்றை அவனை உணரவே பயன் படுத்த வேண்டும்

(முக்கூா் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாசாா்யாா் ஸ்வாமி)











































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக