வியாழன், 17 செப்டம்பர், 2015

வாழ்க்கையின் பய‌னுள்ள குறிப்புகள்....!!

ராதே கிருஷ்ணா 18-09-2015




வாழ்க்கையின் பய‌னுள்ள குறிப்புகள்....!!
1. நான் தான், நான் சொல்வது தான், நான் செய்வது தான் என்ற எண்ணம் கொண்ட மனிதனின் அருகில் அவன் நிழல் மட்டுமே இருக்கும்...!!
2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். நமக்கு கற்றுக் கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
3. நோயை விட அதன் அச்சமே அதிகம் நம்மை கொல்லும்!
4. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் அந்த கோபத்துக்கான காரணம் தான் நல்லதாய் இருப்பதில்லை.
5. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
6. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
7. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
8. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
9. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
10. இவர்கள் ஏன் இப்படி? என்று எண்ணுவதை விட, இவர்கள் இப்படித் தான் என எண்ணிக்கொள்.
11. யார் சொல்வது "சரி" என்பதல்ல, எது "சரி" என்பதே முக்கியம்
12. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
13. "உண்மை" புறப்பட ஆரம்பிக்கும் முன்னமே "பொய்" பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
14. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத் தான் துணை வேண்டும்.
15. "வாழு வாழவிடு".....இது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்க வேண்டும்.
16. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே அதிகமாக ஏமாந்து போகிறான்.
17. மனிதனுக்கு எப்போதும் வேலை இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
18. அன்பையும் ஆற்றலையும் இடை விடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
19. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
20. ஒன்றைப் பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
21. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
22. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
23. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
24. பேசும் முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
#யாழினி
பிடிச்ச #லைக் பண்ணுங்க...
ரொம்ப பிடிச்ச #ஷேர் பண்ணுங்க...
மறக்காம #கமெண்ட் பண்ணுங்க...
 — with Ram.







நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்

புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக