திங்கள், 1 செப்டம்பர், 2014

உத்யோகத்திலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகாவது,,, (Retired but not tired..) (”வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து ஒரு சில வரிகள்.)

ராதே கிருஷ்ணா 01-09-2014



Sarma Sastrigal added 3 new photos.
உத்யோகத்திலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகாவது,,,
(Retired but not tired..)
(”வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து ஒரு சில வரிகள்.)


Status Update
By Sarma Sastrigal
உத்யோகத்திலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகாவது,,,
(Retired but not tired..)
(”வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து ஒரு சில வரிகள்.)

இன்று உத்யோகத்திலிருக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் “ரிடையர்” ஆகின்றோம். அதற்குப் பிறகு பலர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்களே தவிர மற்றபடி தமது வாழ்க்கை முறையிலேயோ, சிந்தனை முறையிலேயோ, குறிப்பிடத்தக்க எந்த மாறுதலும் கொண்டு வராமல், அதே ‘ஹிண்டு’ அதே ‘காபி’, ‘டி.வி. சீரியல்’, முடிந்தால் மாலையில் ‘ஏதாவதொரு கோயிலுக்குச் சென்று வருதல் என பொழுதைக் கழித்து விடுகின்றதை பார்க்கின்றோம். அதில் திருப்தியும் அடைந்து விடுகின்றனர். சொச்ச வாழ்நாளும் இப்படியே ஓடிவிடுகின்றது.

இது சரியா? சற்று யோசிப்போம்.

நாம் உயர்ந்த “த்விஜன்ம” குலத்தில் பிறந்த மாத்திரத்தில் நமக்கு “பிராமணத்தன்மை” பூர்ணமாக வந்துவிடுவதில்லை. சிரேஷ்டமான குலத்தில் பிறப்பது விசேஷம்தான். ஆனால் பிறவிக்கு தகுந்த வாழ்க்கையை வாழாமல் இருப்போமாகில் எல்லாம் வ்யர்த்தம்தான்.
“சர்வீஸில்” இருக்கும் போது நமக்கு பல நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம். நேரமும், நம் கையில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஓய்வு பெற்ற பின் எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. நேரமும் நம் கையில்தான். அதுபோது நாம் தொலைத்துவிட்ட நமது வாழ்க்கையை இனிமேலாவது வாழ நாம் யோசிக்க வேண்டாமா? நாம் “நாமாக” வாழ வேண்டாமா? சற்று சிந்திப்போம்.

நாம் “நாமாக” வாழ்வது என்றால் என்ன? குறைந்தது கீழ்க்
கண்ட அம்சங்களில் நமது கவனம் திரும்பினால் நல்லது. உடல் ஆரோக்கியமும், வீட்டு சூழ்நிலையும் அனுகூலமாயிருக்குமாயின் கீழ்கண்ட அம்சங்களை பற்றி யோசிக்கலாம். (ஏற்கனவே செய்யாமலிருந்தால்).

* ஸந்தியாவந்தனாதி அனுஷ்டானங்கள், பூஜை முதலியவைகளை காலத்தில் தினமும் செய்யலாம்.
* தினமும் ஸந்தியாவந்தனத்தை தவிர ஸஹஸ்ர காயத்ரி (1008) ஜபம் செய்ய முயற்சி செய்யலாம்.
* பஞ்சாயதன (அ) ஸாளக்ராம பூஜை நித்யமும் விதிப்படி செய்யத் துவங்கலாம்.
* ஆலயங்களில் கைங்கர்யம் போன்ற பொது சேவைகளில் ஈடுபட முயற்சிக்கலாம்.
* சிகை வைத்துக் கொள்ளலாம். குடுமியை, ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் வைத்துக் கொள்ள வேண்டாமா? பள்ளிக்கூடம், காலேஜ், ஆபிஸ் என்ற காரணங்களை நாமே ஊகித்துக் கொண்டு (அல்லது ஏற்படுத்திக் கொண்டு) குடுமியை ஒதுக்கிவிட்டோம். குறைந்தது ரிடையர் ஆனபிறகாவது மிகவும் விசேஷமானதும், நமது அடையாளமாகயிருக்கின்ற குடுமியை நாம் வைத்துக்கொள்ள யோசிக்க வேண்டும். வெட்கப்படக் கூடாது.
* மீசை வைத்திருந்தால் அதன் மேலுள்ள காதலை முறித்துக் கொள்ள முயற்சி செய்து மீசையை எடுத்துவிட ஆலோசிக்கலாம்.
* ஒற்றை வஸ்த்ரத்துடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
* மூத்ராதி விஸர்ஜனத்தின்போது பூணூலை விதிப்படி போட்டுக் கொள்ள வேண்டும். விஸர்ஜனத்திற்கு பிறகு வாய் கொப்பளிப்பதையும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.
* ஆன்மிக சிந்தனையை தகுந்த குரு மூலம் வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடலாம்.

மேற்கொண்ட குறிப்புகள் ஒரு உதாரணத்திற்குத்தான் தரப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் யோசிக்க ஆரம்பித்தால், உங்களுக்கே இன்னும் பல விஷயங்கள் தோன்றலாம்.

நாமும் நமது பேரன் பேத்திகளும்
நமது தாத்தா (அ) கொள்ளு தாத்தாவை பற்றி நாம் பெருமையாக பேசுகிறோம் அல்லவா. அதற்கு காரணம் என்ன? அவர்கள் அந்தமாதிரி ஆசார சீலர்களாக வாழ்ந்துள்ளார்கள். நமது பேரன்களுக்கும் நாமும் தாத்தாதானே. நமது பேத்தி பேரன்கள் பெருமையாக பேசும்படி நாம் நமது “பிராஹ்மண” வாழ்க்கையை வாழ்ந்தோமா? சற்று யோசியுங்கள்.

பாங்க், இன்கம்டாக்ஸ், ரயில்வே, இன்சூரன்ஸ், சென்ட்ரல் கவர்ணமென்ட், டிவிஎஸ், அசோக் லேலண்ட் போன்ற பெரிய ஸ்தாபனங்களில் உயர்ந்த உத்யோகத்திலிருந்து நாம் “ரிடையர்டு” ஆகியிருக்கலாம். சிலர் சிறிய வேலைகளிலிருந்தோ (அ) வியாபாரிகளாகவும் காலம் தள்ளியிருக்கலாம். அந்த சமயங்களில் நேர்மையாகவும் இருந்திருக்கலாம். இது மட்டும்தான் பெருமையா? இதற்கு மட்டும்தான் நமக்கு இந்த அரிய ஜன்மம் கிடைத்துள்ளதா? நாம் “பிராமின்” ஆக வாழ வேண்டாமா?

வெறும் பூணூல் மட்டும் போதுமா? யோசிக்க வேண்டிய விஷயமல்லவா?

சிலர் நினைக்கலாம். “நாம்தான் கோவிலுக்குச் செல்கிறோமே, நாம்தான் அன்னதானம், அனாதாஸ்ரமம் போன்றவைகளுக்கு நன்கொடை அளிக்கின்றோமே, இது போதாதா என்று” இது நல்லது தான், அதனால் இதுமட்டும் “பிராமணத்தன்மை” ஆகாது.

இதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

(’வேதமும் பண்பாடும்’ நூலில் இந்த பொருளை பற்றி மேலும் பல விஷயங்களை தன்னகத்தே கொண்ட நீண்ட அத்யாயம் உள்ளது)





















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக