திங்கள், 22 செப்டம்பர், 2014

பெருமையாய் சொல்லலாம் நாங்கள் "துக்ளக்" வாசகர்கள் என்று...

ராதே கிருஷ்ணா 22-09-2014பெருமையாய் சொல்லலாம் நாங்கள் "துக்ளக்" வாசகர்கள் என்று...

Status Update
By உறையூரில் வந்தியத்தேவன்
பெருமையாய் சொல்லலாம் நாங்கள் "துக்ளக்" வாசகர்கள் என்று...

1) இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது இதிகாசங்களிலும், வேதங்களிலும் அவருக்குப் பெருத்த மரியாதையும் பண்டிதமும் உண்டு. அவற்றைப் பற்றி அவர் எழுதியிருக்கும் மஹாபாரதம் பேசுகிறது,இந்து மகா சமுத்திரம் போன்றவைகளைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

(2) தமிழ் தமிழ் என்று மொழி மேல் உள்ள வெறியினால் மற்ற மொழிகளின் மீது தார் பூசுவதோ அல்லது அதற்காக பந்த், கடையடைப்பு போன்றவை நடத்துவதோ கடுமையாய் எதிர்ப்பவர். நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது ஆசையைப் பல சமயங்களில் வெளிப்படுத்துபவர்.

(3) தீவிரவாத இயக்கங்களை பயங்கரமாய் எதிர்ப்பவர். அவற்றைப் பற்றி தனது கருத்துக்களை மிக தைரியமாய் எழுதியும் வருபவர். தீவிரவாதிகளும், கொள்ளையர்களும் …அவர்களின் தர்க்கங்களில் எள்ளளவு நியாயமிருந்தாலும், பாதை மோசமானது என்று சொல்லி துளியும் இரக்கம் காட்டாமல் எதிர்த்து வருபவர்.

(4) பி.ஜே.பி தலைவர்கள், அந்தக் கட்சி மற்றும் அதிமுக மற்றும் ஜெயலலிதா போன்றோரிடம் மிகப் பரிவு கொண்டிருப்பவர். இருப்பினும் அவர்களை எங்கெங்கு திட்ட வேண்டுமோ அல்லது கிண்டல் செய்ய வேண்டுமோ அங்கே தயங்காமல் அவற்றையெல்லாம் செய்து, நார் நாராய் கிழிப்பவர்.

(5) வருமானத்துக்காகவோ, புகழுக்காகவோ எந்தவொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ அல்லது நிறுவனங்களுக்கோத் தன்னையோ தனது பத்திரிக்கையையோ இதுவரை அடகு வைக்காமல், தைரியமாக எல்லாரைப் பற்றியும், எவற்றைப் பற்றியும் எழுதுபவர்.

(6) எந்த ஒரு தலைவரின் தனிப் படத்தையும் அட்டையில் போட்டு கௌரவிக்காத துக்ளக் மூலம், நல்லகண்ணுவின் புகைப்படத்தைப் போட்டு, அவரின் நேர்மையான அரசியலைப் பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து எழுதியவர். நேர்மையான அரசியல் தலைவர்களை, அவர்களின் திறமைகளை பாராட்டத் தயங்காதவர். தனக்குக் கருத்து ரீதியாகப் பிடிக்காத தலைவர்களிடம் கூட, பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தால்…சமயம் கிடைக்கும் போது, அதை வெளியே சொல்லத் தயங்காதவர்.

(7) இட ஒதுக்கீட்டை வைத்துத் தற்போதைய அரசியல்வாதிகள் செய்யும் ஓட்டு வங்கி அரசியலை எல்லாம் புள்ளி விவரங்களோடும், ஒரு வக்கீலின் வாதாடும் திறமையோடும் விவாதிப்பவர்.

(8) அசத்தலான நகைச்சுவையுணர்வும்,புத்தி கூர்மையும் கொண்டவர். அவர் இயக்கிய அரசியல் நகைச்சுவைப் படமான முகம்மது பின் துக்ளக், மற்றும் திரைப்படங்களைக் கிண்டலடித்து எடுத்த தொலைக்காட்சித் தொடரான சரஸ்வதியின் செல்வன் போன்றவற்றை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்குமளவுக்கு தீர்க்கதரிசனப் பார்வையோடு எழுதி,இயக்கியவர்.

(9) அப்துல்கலாம் எது செய்தாலும் ‘ஆஹா ஓஹோ’ என்று பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுத ஆரம்பிக்கவும், எப்படி அப்துல் கலாம் எது சொன்னாலும் வியாபாரமாக்கப்படுகிறது என்று அதையும் கிண்டலடித்துத் தள்ளியவர். தமிழில் நையாண்டி, கண்ணியமான அரசியல் நகைச்சுவை போன்றவற்றில் தனி இடம் பிடித்து வைத்திருப்பவர்.

(10) மற்றப் பத்திரிகைகள் எல்லாம் கிசு கிசுவெல்லாம் எழுதி அதில் ஜீவிதம் நடத்தும்போதும் சரி, அரசியல் தலைவர்களின் தனபட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் போதும் சரி, துக்ளக் மட்டுமே இந்த காரியங்களில் ஈடுபடாமல் தன் தரத்தைக் காப்பாறிக் கொண்டுள்ளது. அது இன்றைக்கும் தொடர்கிறது. ..

அவரது பல கருத்துக்களில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் அரசியலுக்கென்றே நடந்து வரும் பத்திரிக்கையில் கண்ணியமாகவும், வியாபார நோக்கத்திற்காக சமரசங்கள் செய்யாமலும் நடந்து வரும் ஒரே தரமான பத்திரிக்கை ‘துக்ளக்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சோவும் சில இடங்களில் இடறியிருக்கலாம், அவரது கருத்துக்கள் சிலவற்றில் உடன்பாடு இல்லாமல் போகலாம்…ஆனால், தமிழகப் பத்திரிக்கையுலகிலும் இன்ன பிற கலைத்துறைகளிலும் அவருக்கென்று இருக்கும் இடம் அலாதியானது, அசைக்க முடியாதது!

எல்லோருக்கும் பிடித்தமான விதமாக எந்த ஒரு மனிதராலும் இருந்து விட முடியாது…சோ மட்டும் விதிவிலக்கா என்ன?

நன்றி அருண்..

Sj Idhayaகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக