செவ்வாய், 16 செப்டம்பர், 2014

"ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம்"

 ராதே கிருஷ்ணா 17-09-2014


Venkat Apn added 4 new photos — with Mannargudi Sitaraman Srinivasan and 19 others at Shri Hari Foundation Uthiramerur.
"ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம்"


"ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம்"
1.ஸ்ரீயாச்லிஷ்டோ விஷ்ணு: ஸ்திரசரகுருர்வேதவிஷயோ
தியாம்ஸாக்ஷீ சுத்தோ ஹரிரஸுர ஹந்தாப் ஜநயன :
கதீ சங்கீ சக்ரீ விமலவனமாலீ ஸ்திரருசி :
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ க்ஷிவிஷய :
ஸ்ரீலஷ்தேவியையணைந்து, சராசரத்திற்குத் தலைவராய் வேதப்பொருளாய், புத்திகளுக்கு சாக்ஷியாய், அசுரர்களை அழித்தவராய், கமலக்கண்ணனாய் கதை, சங்கு, சக்ரம், வனமாலை இவற்றைக் கொண்டவராய் உலகத்தாருக்கு காக்கும் விஷ்ணு வாய் இருக்கும் கண்ணபிரான் என் கண்ணுக்குத் தெளிவாய் காட்சி தரட்டுமே
2.யத:ஸர்வம் ஜாதம் வியதனிலே முக்யம் ஜகதிகம்
ஸ்திதௌநிசேஷம் யோவதி நிஜஸுகாம்சேந மதுஹா
லயே ஸர்வம் ஸ்வஸ்ன் ஹரதி கலயா யஸ்து ஸ விபு:
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷிவிஷய :
ஆகாயம், காற்று முதலிய இந்த பிரபஞ்சம் முழுதும் எவரிடருந்து தோன்றியதோ, எவர் தனது ஆனந்தாம்சத்தால் தோன்றிய உலகை முழுமையாகக் காக்கிறாரோ, பிறகு, விபுவான எவர் ப்ரலயகாலத்தில் எல்லாவற்றையும் தன்னிடமே இழுத்து லயிக்கச் செய்கிறாரோ அத்தகைய உலக ரக்ஷகணான கண்ணன் என் கண்முன்னே தோன்றட்டும்.
3.அஸுநாயம்யாதௌ யமநியமமுக்யை: ஸுகரணை:
நிருத்யேதம் சித்தம் ஹ்ருதி விலயமாநீய ஸகலம்
யமீட்யம் பச்யந்தி ப்ரவரமதயோ மாயின மஸெள
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷிவிஷய:
சான்றோர் சீரிய கரணங்கள் மூலம் யமம் நியமம் முதலியவற்றைச் செய்து, மனதைக் கட்டுபடுத்தி, மற்றதெல்லாம் ஒடுங்கச் செய்து, மாயையை வசப்படுத்திய பரமனை நேரேகாண்கின்றார்களே அப்பரமன் என் கண்முன்னே காட்சியளிக்கட்டும்.
4.ப்ருதிவ்யாம் திஷ்டன்யோ யமயதிமஹீம் வேத நதரா
யத்யாதௌ வேதோ வததி ஜகதாமீசமமலம்
நியந்தாரம் த்யேயம் முனிஸுரந்ருணாம் மோக்ஷதமஸெள
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷிவிஷய :
பூயில் நின்றுகொண்டு பூயை கட்டுப்படுத்துகிறார். ஆனால் அவரை எவரும் அறிந்துகொள்ளவில்லை என்று வேதம் கூறுகிறது. உலகை அடக்கியாளும் ஈசனை, தியானம் செய்ய வேண்டியவனை, முனிவர், தேவர்கள், மனிதர் ஆகியோருக்கு மோக்ஷம் அளிக்கும் அப்பெருமான் என் கண்முன்னே தோன்றட்டுமே.
5.மஹேந்த்ராதிர்தேவோ ஜயதி திதிஜான்யஸ்ய பலதோ
ந கஸ்ய ஸாவாதந்த்ர்யம் க்வசிதபி க்ருதௌ யத்க்ருதி ம்ருதே
பலாரா தேர்கர்வம் பரிஹரதியோஷிஸெள விஜயிந :
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணே ஷிக்ஷிஷிஷய:
மகேந்த்ரன் முதலிய தேவர், அவரது பலத்தை கொண்டு அசுரர்களை வெல்கின்றனர், அவர் வேலையன்றி எவருக்கும் எதிலும் தன்னுரிமை கிடையாது. இந்த்ரன் வெற்றி பெற்றாலும் கர்வம் அடையாவண்ணம் அவனையாளும், உலகம் போற்றும் அவ்ஈசனை நான் கண்ணால் காண விழைகிறேன்.
6.விநா யஸ்ய த்யானம் வ்ரஜதி பசுதாம்ஸுகர முகாம்
விநா யஸ்ய த்யானம் ஜநிம்ருதிபயம் யாதி ஜனதா
விநா யஸ்ய ய்ம்ருத்யா க்ரு சதஜநிம் யாதி ஸ விபு :
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷிவிஷய:
உலக மக்கள் அவரை தியானம் செய்யவில்லையெனில் பன்றி முதலிய ஐந்தறிவிகளாகவே ஆய்விடுவார்கள். பிறப்பு இறப்பு ஆகியவற்றால் பயத்தையும் கொள்வர். அவர் நினைவின்றி இருந்தால் க்ரு கீடங்களாகவும் அவர் பிறப்பர். அத்தகைய அகில லோக சாரண்யணான கிருஷ்ணன் என் கண்முன்னே தோன்றட்டுமே
7.நராதங்கோட்டங்க:: சரணசரணோ ப்ராந்திஹரணோ
கனச்யாமோ வாம:வ்ரஜ சிசுவயஸ்யோ ரர்ஜூனஸக:
ஸ்வயம்பூர் பூதாநாம் ஜனக உசிதாசாரஸ¨கத:
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷவஷய:
மனிதரின் கவலையை யகற்றுபவர், சரணம் என்போர்க்கு பாதுகாப்பு அளிப்பவர், மயக்கம் தெளிவிப்பவர், நீருண்ட மேகமெனத்திகழ்பவர், குறும்புக்காரர், யாதவ நண்பர், அர்ஜூனனுக்குத் தோழர், தானேதோன்றியவர், ஜவராசிகளுக்குத்தந்தை, நல்லொழுக்கமுடையோருக்கு சுகமளிப்பவர், அத்தகைய கிருஷ்ணர் எனக்கு காட்சியளிக்கட்டுமே
8.யதா தர்மக்லாநிர்பவதி ஜகதாம் க்ஷப கரணீ
ததாலோகஸ்வாமீ ப்ரகடிதவபு:ஸேது த்ருகஜ:
ஸதாம் தாதா ஸ்வச்சோ நிகமகண கீதோ வ்ரஜபதி:
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ க்ஷிவிஷய:
உலகையழிக்கும் தர்ம நலிவு ஏற்படும் பொழுதெல்லாம் தானே தோன்றி உலககைக் காப்பவர். ஸேதுவை கட்டிய பழையவர். நல்லோரைத் தாங்குபவர், தூயவர், வேதம் போற்றும் யது குலத்மதலைவர், அத்தகைய க்ருஷ்ணர் எனக்கு காட்சியளிக்கட்டும்.
ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக