திங்கள், 1 செப்டம்பர், 2014

ஸ்ரீஸ்வாமி தேசிகனனுபவித்த திருமஞ்சனம்

ராதே கிருஷ்ணா 01-09-2014



ஸ்ரீஸ்வாமி தேசிகனனுபவித்த திருமஞ்சனம்.

From the album: Timeline Photos
By Satakopa Tatacharya
ஸ்ரீஸ்வாமி தேசிகனனுபவித்த திருமஞ்சனம்.

ஸ்வாம தேசிகன் அனுக்ரஹித்த தத்வமுக்தாகலாப க்ரந்தத்துக்கு ஸ்ரீமதுபயவேதாந்தேத்யாதி பிருதாலங்க்ருத நாவல்பாக்கம் அய்யா ஸ்வாமி அக்ஷரார்தமென்கிற வ்யாகயானம் ஸாதித்துள்ளார், அதில் முதல் ச்லோகவ்யாக்யானத்தில், லக்ஷ்மீ என்று துடங்கி கைடபாரேஃ என்பதால் லக்ஷ்மீஹயக்ரீவனை இங்கு ஸ்மரிப்பதாக தோன்றுகிறது, லக்ஷ்மீஹயக்ரீவனின் திருமேனியாவது சுத்தஸ்படிகம் போல் வெளுத்தது, அப்படியிருக்க எம்பெருமானுடய நீலவர்ணம் கலயது என்று ஸாதித்தது எப்படியென்பதாக வினவி, அதின் பதிலை, ஸ்படிகம் வெளுத்ததாயினும் அதின் ஸமீபத்திலுள்ள ஜபா-- செம்பருத்தி-குஸுமத்தினால் ஸ்படிகத்தில் சிவப்புவர்ணம் தோன்றுவதுபோல் பிராட்டியின் த்ருஷ்டி, மற்றும் துளசீ முதலானவைகளின் ஸம்பந்தத்தால் நீலமாயிற்று என்பதாக ஸாதித்துள்ளார்,

இந்த ச்லோகத்தை ஸேவித்தால் தேவாதிராஜன் ஸேவைஸாதிப்பதாக தோன்றும் எம்பெருமானின் திருமஞ்சனகாலத்தில் கட்டியத்தில் முதலில் இந்த ச்லோகம் அனுஸந்திக்கப்படுகிறது, காரணம் இன்று புலப்படுகிறது, பெருமாள் சந்தனகாப்பாகி திருத்துழாய் மாலை ஸமர்பித்துக்கொள்வார்,”” அவிரளதுளசீதாம “” என்பதால் திருமுடி முதல் திருவடி வரையில் ஸமர்ப்பித்துக்கொள்ளும் மாலை திருத்துழாய் மாலைதான், (மற்றவைகளை கழுத்தில்தான் ஸ்வீகரிப்பார் EXEPT SOME VISESHA UTHSAVAMS LIKEபூச்சாத்து உத்ஸவம். )ஆனபடியாலே இந்தப்ரகரணத்தில் இந்த ச்லோகாநுஸந்தாநம் எனலாம், மேலும் இதே அர்த்தத்தில் “”வ்யாதந்வாநா தருண துளசீ தாமபிஸ்ஸவாமபிக்யாம்—மாதங்காத்ரௌ மரகதருசிம்-------காபி லக்ஷீகடாக்ஷைஃ பூயஸ்ஸயாமா புவந ஜநநீ தேவதா” என்றனுபவிப்பதால் தேவப்பெருமாளையும் குறிப்பதாகக்கொள்ளலாம்,

உபநிஷத்தில் ஸதேவ ஸௌம்யேதமக்ர ஆஸீத் என்று கூறப்பட்ட ஸத்பதத்தின் ஸ்தானத்தில் ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் என்பதால் ஸத்பதத்தின் பொருள் ப்ரஹ்மம் அது நாராயணனே. ஸத் என பொதுவாக குறிப்பிட்டதை விசேஷமாக நாராயண என குறிப்பிட்டது என்பதாக ஸ்வாமி தேசிகன் வரதராஜபஞ்சாசத்தில்

ஸாமான்யபுத்தி ஜநகாச்சஸதாதிசப்தாஃ
தத்வாந்தரப்ரமக்ருதச்ச சிவாதிவாசஃ.
நாராயணே த்வயி கரீச வஹந்தி அநந்யம்
அன்வர்தவ்ருத்தி பரிகல்பிதமைக்கண்ட்யம் என ஸாதித்தார்.

ஸாமான்யயவிசேஷ ந்யாயத்தால் ஸமானார்த்தம் என்பதாலேயே ஸ்ரீமதுபயவே அய்யா ஸ்வாமி அக்ஷரார்த்தவ்யாக்யாநத்தில் अजायत यतस्सर्वं प्रजापतिमुखं जगत्।अजाश्वमेधेभिव्यक्तं गजाद्रौ भाति तन्महत्।। என்று தேவப்பெருமாள் விஷயமாக மங்களச்லோகம் அனுஸந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபராசர பட்டர் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் திருமஞ்சநகாலத்தில் த்வம் மே அஹம் மே என்றனுஸந்தித்தாராம், காஞ்சியில் இந்த ப்ரகரணத்தில் ஸ்வாமி ஸ்ரீஸூக்தியை லக்ஷ்மீ என்று துடங்கி கைடபாரேஃ¬ என்று மங்களச்லோகமாக அனுஸந்தித்து த்வம் மே அஹம் மே என்றனுஸந்திக்கப்படுகிறது.

வைதேசிகா தேசிகாஃ

ஸ்வாமிதேசிகன் பூர்வாசார்யர்களை குறிப்பிடும் ஸமயத்தில் ஸ்பர்தாவிப்லவ்விப்ரலம்ப பதவீ வைதேசிகா தேசிகாஃ ஆசார்யர்கள் ,போட்டியிடுவது, ஏமாற்றுவது முதலான வழியை விட்டு மிகவும்தூரமானவர்கள்,ஆசாராயர்களுக்கு போட்டியிடுகிற எண்ணம் கிடையாது என குறிப்பிட்டார், ஸ்வாமியும் தேசிகரானபடியால் இதை பின்பற்றுவதாக தோன்றியது, அதாவது ஸ்ரீதேவநாயகபஞ்சாசத்தில் எம்பெருமானின் திருமேனியை வர்ணித்துள்ளார்,ஸ்ரீபேரருளாளன் விஷயமான ஸ்ரீவரதராஜபஞ்சாசத்திலோவெனில் எம்பெருமானின் திருமேனியை வர்ணிக்கும் ச்லோகமில்லை, இங்கு அநேகவேதாந்தார்தங்களை புகுத்தி ச்லோகங்களை ஸாதித்துள்ளார்,திருமேனியை வர்ணிக்காதத்தில் காரணம்,ஸ்ரீஆழ்வான் ஸ்ரீபேரருளாளன் விஷயமாக ஸ்ரீவரதராஜஸ்தவத்தில் திருமேனியை வர்ணித்தபடியால் எனலாம், இதே க்ரமத்தில் பெரியபெருமாள் என்ற ப்ரஸித்தியை பெற்ற ஸ்ரீரங்கநாதன் விஷயமாக, மற்றும் திருவேங்கடமுடையான் விஷயமாக அநேகம் பாசுரங்கள் உள்ளபடியால் ஆழ்வார்களுடன் போட்டியிடாமல் அதிகம் பாசுரத்தை பெறாதவரான நம்மத்திகிரித்திருமால் விஷயமாக ஆறு ப்ரபந்த்தத்தை ஸாதித்து நம்பெருமாள் விஷயமாக 4 பாசுரங்களை, திருவேங்கடமுடையான் விஷயமாக ஒரு பாசுரத்தை மட்டும் ஸாதித்தாரோ எனத் தோன்றுகிறது,
ஆயினும் ஸ்வாமி தேசிகனும் தான் அனுக்ரஹித்த பரமபதசோபான ரஹஸ்யக்ரந்தத்தில் ஒரு பாட்டில் எம்பெருமானின் திருமேனியை. திருமுடிமுதல் திருவடிவரையில் வர்ணனம் செய்கிறார்.

ஸ்ரீவரதராஜபஞ்சாசத்தில்
ஸ்தோத்ரம் மயா விரசிதம் த்வத்தீனவாசா த்வத்ப்ரீதயே வரத யத் ததிதம் ந சித்ரம். ஆவர்ஜயந்தி ஹ்ருதயம் கலு சிக்ஷகாணாம் மஞ்ஜூநி பஞ்ஜர சகுந்த விஜல்பிதானி,

வரத, தாஸனால் உனக்கு அதீனமான வாக்கால் உன்னுடய ப்ரீதியை உத்தேசித்தே ஸ்தோத்ரம் செய்யப்பட்டது, உமக்கும் அது போக்யமாச்சு.இதில் ஆச்சர்யமில்லை, கூட்டில் உள்ள கிளியின் சொற்கள் அதை சிக்ஷிப்பவனின் மனதை ஆகர்ஷிக்கின்றனவல்லவா,-கவர்கின்றன என, ஆக ஸ்வாமிதேசிகனின் வாக்கினால் கவரப்பட்டவர்கள் காஞ்சீ திவ்யதம்பதிகள், ஆனபடியாலேயே ஸ்வாமி தேசிகன் அனுக்ரஹித்த பரமபதசோபான ரஹஸ்யக்ரந்தத்தில் ஸாதித்தப்ரகாரம் எம்பெருமானின். திருமுடிமுதல் திருவடிவரையில் திருமேனி வர்ணனையை எல்லா திருமஞ்சனகாலத்தில் கட்டியத்தில் அனுஸந்திப்பதை கேட்டு மகிழ்கிறார்கள் எனலாம்,
திவ்யதம்பதிகள் சேர்ந்து திருமஞ்சனம் கண்டருளும் மஹோத்ஸவங்கள்—
1,தெப்போத்ஸவம் மூன்று நாள்கள்
2, தவனோத்ஸவம் மூன்று நாள்கள்,
3,மஹாநவமீதினம்,
4.ஸ்ரீதாததேசிகன் சாத்துமறை,
5,நவராத்ரியில் ஹஸ்தம் மற்றும் மாதப்பிறப்பு
6, ஜ்யேடாபிஷேகம் நடைபெறாத வருடத்தில் கோடை உத்ஸவம் வெள்ளிக்கிழமை,
ஸ்ரீபெருமாள் மட்டும் தனியாக பஞ்சபர்வ காலத்தில் மற்றும் அநேக விசேஷ உத்ஸவங்களில் திருமஞ்சனம் கண்டருள்கிறார்.,
ஸ்ரீதாயார் மட்டும் தனியாக நவராத்ரியில் (மஹாநவமீ நீங்கலாக )கடை வெள்ளி தினத்தில் திருமஞ்சனம் கண்டருள்கிறார்,எல்லா திருமஞ்சனத்திலும் ஸ்ரீதேசிகஸ்ரீஸூக்தியை கட்டியமாக ஸ்ரீதாததேசிக திருவம்சஸ்தர்கள் ஸேவிக்க திவ்யதம்பதிகள் திருச்செவி சாய்ப்பது வழக்கம்





















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக