ராதே கிருஷ்ணா 01-01-2014
காஞ்சி மகா பெரியவா - பகுதி 1
காஞ்சி மகா பெரியவா - பகுதி 1
From the album: Timeline Photos
By Varagooran Narayanan
"உம்மாச்சி தாத்தா' என்றால், "அம்மாவைப் பெற்றவர்'
(தினமலர் 30-10=2013)
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தீபாவளியன்று, காஞ்சி சங்கரமடத்தில் மகாபெரியவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். அந்த வரிசையில், ஒன்பது வயது மதிக்கத்தக்க சிறுமியும் நின்றாள். நீலநிற பட்டுப்பாவாடை, பச்சை நிற சட்டையுடன், நெற்றியில் திலகமிட்டு, தலை நிறைய பூச்சூடி "பால திரிபுரசுந்தரி' போல், அவள் தோற்றமளித்தாள். அவளது கையில் மூன்று டப்பாக்கள் இருந்தன.
வரிசையில் நின்ற பக்தர்களின் பார்வை அந்தச்சிறுமியின் மீது பதிந்திருந்தது. எல்லாரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ""இப்படிக்கூட திவ்ய அழகுடன் ஒரு பெண் இருப்பாளா!'' என்பதே அவர்களின் ஆச்சரியப் பார்வைக்கு காரணம்.
திடீரென, பெரியவர் அந்தச் சிறுமியை அழைத்தார்.
""உன் பெயர் என்னம்மா? எங்கிருந்து வருகிறாய்? உன் பெற்றோர் வந்திருக்கிறார்களா?'' என்று பரிவுடன் கேட்டார்.
தீபாவளிக்கு என்னென்ன பட்சணம் சாப்பிட்டாய்?'' என்று கேள்விகளை அடுக்கினார்.
அவள், ""ஒக்காரை, பஜ்ஜி, வடை... என தான் சாப்பிட்ட பலகார வகைகள் பற்றி பெரியவரிடம் சொன்னாள்.
""சரி... நிறைய டப்பா வச்சிருக்கியே! அதில் என்ன இருக்கு?'' என்று கேட்டார் பெரியவர்.
அவள் அதற்கு, ""உம்மாச்சி தாத்தாவுக்கு பிடித்தமான கோதுமை அல்வாவும், பால்கோவாவும் வச்சிருக்கேன்,'' என்று சொல்லி, இரண்டு டப்பாக்களை மட்டும் பெரியவர் முன் வைத்து, அவரை வணங்கி எழுந்தாள்.
தன் மடியில், ஒரு சிறிய டப்பாவை வைத்திருந்த அந்த சிறுமியை நோக்கி,""சரி...இரண்டு டப்பா நிறைய பட்சணம் கொண்டு வந்து தந்திருக்கியே! இன்னொரு டப்பாவிலே என்ன வச்சிருக்கே! அதை ஏன் தரலை!'' என்றார்.
""இதிலா....இதிலே தீபாவளி மருந்து வச்சிருக்கேன். உம்மாச்சி தாத்தா பட்சணத்தை சாப்பிட்டதும், இதையும் கொடுத்துட்டு போகலாமுனு இருக்கேன்,'' என்று மழலை மொழியில் பதிலளித்தாள் குழந்தை. பிறகு என்ன நினைத்தாளோ! அந்த டப்பாவையும் பெரியவர் முன் வைத்து விட்டு, அவரை வலம் வந்து வணங்கினாள். பிறகு அங்கிருந்து எழுந்து போய்விட்டாள்.
அவளுக்கு எந்த ஊர்? தாய் தந்தை யார்? என்ற விபரத்தை மட்டும் அவள் கடைசி வரை சொல்லவே இல்லை.
அந்தச் சிறுமியை பக்தர்கள் மடம் முழுவதும் தேடியலைந்தனர். உஹூம்... யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்னை பாலதிரிபுர சுந்தரியே அங்கு வந்து, பெரியவருக்கு பட்சணம் அளித்ததாகத்தான் எல்லாரும் பேசிக்கொண்டார்கள்.
பெரியவருக்கு அம்பாளின் வடிவான பாலதிரிபுர சுந்தரி என்றால் மிகவும் பக்தி. அவளே நேரில் வந்ததாகத்தான் அவரும் கருதியிருப்பார்.
"உம்மாச்சி தாத்தா' என்றால், "அம்மாவைப் பெற்றவர்' என்று பொருள். ஆம்...அந்த அம்பாளே மகாபெரியவரை தன் தந்தையாக ஏற்றிருக்கிறாள் என்று தான் இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும்! ஆம்...நம்மைப் பெற்றது ஒரு தந்தை. நம் எல்லோருக்கும் தந்தை, நடமாடும் தெய்வமாய் விளங்கிய காஞ்சி மகாசுவாமிகள்.

உருண்டை சாப்பிட்ட பெரியவர்
(என்ன உருண்டை?)
டிச. 29 மகாபெரியவர் ஆராதனை
(இரண்டு நாள் முன்பு தினமலரில் வந்தது)
காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது ஒரு மூதாட்டி வந்தார்.
""பெரியவா! என் கணவர் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார். என் மகளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டேன். வருங்காலத்தில் என் சொத்தையெல்லாம், தர்ம காரியங்களுக்கு செலவிட விரும்புகிறேன்,'' என்றார். அதற்குரிய நேரம் வரும் போது, இதுபற்றி பதில் தெரிவிப்பதாக பெரியவர் பதிலளித்தார்.
கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற பெரியவர், மூதாட்டியின் நினைவு வர, மடத்திற்கு அழைத்து வரச் சொன்னார். அவரிடம், காஞ்சிபுரத்திலுள்ள சில கோயில்களுக்கு திருப்பணியும், வேத பாடசாலைக்கு நிதியுதவி செய்யும் படியும் கூற, அதை அந்த அம்மையார் நிறைவேற்றினார். அதன்பின், மடத்திலேயே தங்கி பெரியவரை தினமும் தரிசனம் செய்து வந்தார். ஒருமுறை, அந்த மூதாட்டி, தான் தயாரித்த, சத்துமாவு உருண்டையை ஏற்று உண்ண வேண்டும் என பெரியவரிடம் வேண்டிக் கொண்டார். மகாபெரியவரும் மகிழ்ச்சியுடன், அதில் சிறிது மட்டும் எடுத்து உருண்டைகளாக்கி சாப்பிட்டார்.
மீதியை அவரிடமே கொடுத்து விட்டார். அன்று நாள் முழுவதும் பெரியவர் பிட்சை ஏற்கவில்லை.
பெரியவரின் வழக்கத்திற்கு மாறான இந்தச் செயல் மடத்திலுள்ள ஊழியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஊழியர் மட்டும் பெரியவர் அருகே சென்றார். அப்போது, பெரியவர் , சிறு சிறு உருண்டைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட ஒரு ஊழியர், ""பெரியவா! இன்னுமா அந்த சத்துமாவை சாப்பிடுறீங்க!'' எனகேட்டார்.
""டேய்! சத்துமாவு ருசியாக இருந்தது. அதனால், அதை விரும்பி சாப்பிட்டேன். ஆனா, நாக்கு கேட்கும் போதெல்லாம் ருசியானதை சாப்பிட்டு கிட்டே இருக்கக்கூடாது. அதனாலே, அந்த ருசியை மாற்றக்கூடிய வகையிலே, சாண உருண்டையை சாப்பிட்டேன். சாண உருண்டை சாப்பிட்டா, எதையும் சாப்பிடத் தோன்றாது. சாப்பிட்ட உணவும் செரித்து விடும்'' என்றார்.
உணவு விஷயத்தில், மனிதர்கள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல. பசுஞ்சாணத்தின் மகத்துவத்தையும் மக்களுக்கு அவர் போதித்தார்.

பக்தர்களின் மனக்குறையை தீர்த்த மகான்
மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர் இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம்
பலவருடங்களுக்கு முன்னாள் மகானின் அருகே அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார் மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். பக்தர்களின் வரிசை மெதுவாக நகர்ந்தது, அப்போது ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார் அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர் நகர முயற்சித்த போது பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது
"எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறியே "
பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவரது கையில் இருந்த பையில் நெல்லிக்கனிகள் அவரது தோட்டத்தில் விளைந்த முதல் கனிகள் அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.
"இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே தான் கொண்டு வந்ததை எடுத்துண்டு போறேன் ...".
ஒரு மூங்கில் தட்டை காண்பித்து "நீ கொண்டு வந்ததை எடுத்துவை" என்று மகான் உத்தரவிட பக்தர் தன் பையில் இருந்த நெல்லிக்கனிகளை எடுத்து தட்டில் பக்தியோடு வைத்தார்.
கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளுக்கு ஒரே வியப்பு பக்தர் நெல்லிக்கநிதான் கொண்டுவந்திருக்கிறார் என்று மகானுக்கு எப்படித் தெரியும்?
அன்று துவாதசி மகான் அக்கனியை விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் இப்போது கனபாடிகளுக்கு புரிந்தது .
ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தபோது அவர் வாயிலிருந்து அப்போதே கனகதாரா ஸ்தோத்திரம் கிளம்பியது இப்போது இவ்வளவு கனிகளை மகானுக்கு சமர்பித்த அந்த பக்தர் எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார் என்று கனபாடிகள் வியந்தார்.
அண்மையில், மகான் நெல்லிக்கனி பெற்ற விவரத்தை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள், சேலம் பெரியவா கிரகத்தைச் சேர்ந்த ராஜகோபாலிடம் சொன்னார். துவாதசியன்று நெல்லிக்கனியை உண்பது எவ்வளவு விசேடமானது என்பதை மகான் புரிய வைத்திருக்கிறார்.
இந்த நெல்லிக்கனி விஷயத்தில் மகான் இன்னொரு அற்புதத்தையும் சேலத்திலேயே நிகழ்த்தியிருக்கிறார். இங்கே பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .
இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி நடக்க மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் ஆராதனை என்பதால் யாரிடமும் எள்ளளவும் சுணக்கம் தென்படவில்லை.
அன்னதானம் செய்யும் போது பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் பச்சடி போன்றவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து , நெல்லிக்கனியை தேடி சேலம் முழுதும் அலைந்தார்கள் ஆனால் முதல் நாளும் ஜெயந்தி அன்றும் எவ்வளவு தேடியும் யாருக்கும் கிடைக்கவில்லை. மிகவும் மனகிலேசம் அடைந்த ராஜகோபாலன் எல்லாம் பரிபூரணமாக இருக்க இந்த நெல்லிக்கனி விஷயத்தில் குறை ஏற்பட்டுவிட்டதே என்ற எண்னம் மேலோங்கியது. அதை அப்படியே விட்டு விட வேண்டியதுதான் என்று அநேகர் சாந்தமடைந்து விட்டனர்
பூஜைகள் ஆரம்பமாகி வேதியர்கள் அமர்ந்து முறைப்படி எல்லாமே நடைபெற்றுக் கொண்டிருந்தது
ஹால் நிறையக் கூட்டம்
அந்த நேரத்தில் பெரியவா கிரகத்தின் வாயிலில் ஒரு நபர் வந்து நின்றார்
அவரது கையில் ஒரு பை
நான் "ராஜகோபால் மாமாவை பார்க்கவேண்டும்" என்றார் வந்தவர்
"அவர் பூஜை செய்யும் வேதியர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் இப்போது அவர் இங்கு வர முடியாது" இந்த பதிலைக் கேட்டு வந்தவர் சற்று தயங்கினார்
"சரி இந்த பையை அவரிடம் கொடுத்துவிடுங்கள்" என்று தன் கையில் இருந்த பையை கொடுத்தார்
"யார் தந்ததாகச் சொல்வது?"
"சங்கரன்" என்று சொல்லுங்கள், பையைக் கொடுத்தவர் விறு விறு என்று வந்தவழியே சென்றுவிட்டார்
அவர் கொடுத்த பையில் நிறைய நெல்லிக்கனிகள் இருந்தன அங்கே இருந்தவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
இதில் முக்கியமான விஷயம் அந்த சங்கரன் யார் என்றே இன்றுவரை ராஜகோபாலுக்குத் தெரியாது
பக்தர்களின் மனக்குறையை மகான் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பதற்கு இதைவிட சான்று தேவையா?

“எங்கேயும் போகலே பாட்டி …இங்கேதான் இருக்கேன் “
(இது முன்பு படித்ததுதான். பல பேர் ரசித்து அதை எழுதியிருக்கிறார்கள்
அதில் ஒன்று)
இடம்: ரிஷிவந்தியம் என்ற பெயரில் தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் தஞ்சை மாவட்ட ரிஷிவந்தியம். அக்கிராம எல்லையில் தனித்து உள்ள ஒரு பழைய வீடு.
காலம்:1930-களீல் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.
“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக்கொண்டு ஓர் அந்தண விதவையம்மாள் தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது).
உள்ளே சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டியம்மை தனக்குத் தானே பொரிந்து தள்ளிக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன.
“கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்த்க் கண்ணசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்? என்ன திமிரு? அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!”
“எங்கேயும் போகலே பாட்டி! இங்கேதான் இருக்கான்” என்று சொல்லிக் கொண்டே அப்போது பாட்டியம்மாளின் முன் போய் நின்றது——ஸாக்ஷாத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்!
பாட்டியம்மை ஆடிப் போய்விட்டாள் ஆடி! அவளுக்குக் கையும் வரவில்லை, காலும் வரவில்லை, வாயும் வரவில்லை. வாயடைத்து நின்றாள். “ பெரியவாளா? நிஜமாகவே பெரியவாள்தானா? விடிய விடியத் தன் பொத்தல் குடிசை வாசலிலா?
அதோடு என்ன விபரீதம்?’ க’—போனவனாகத் தம்மையே சொல்லிக்கொள்கிறார்! மூளை கெட்ட பாவி, மஹா அபசாரமா ஏதோ பண்ணீப்பிட்டேனா என்ன?”
பதைபதைத்தப் பாட்டிக்கு அபயம் தரும்போதே ஸ்ரீசரணரின் திவ்ய நேத்ரங்களில் ஒரு குறும்புக் குறுகுறுப்பு! ஹிதமாகச் சொல்வார்,: “ பயப்படாதே பாட்டீ ! பால்காரன் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் பார்த்தான்! நீ நன்னாத் தூங்கிப்பிட்டே! எழுந்தே வரல்லை ஒனக்காக ஒன் மாதிரி வேஷம் போட்டுக்கிண்டு நான்தான் பாலை வாங்கி உள்ளே வெச்சேன்! அவன் ஒண்ணும் தப்புப் பண்ணல்லை. நான்தான் திருட்டுத்தனம் பண்ணீயிருக்கேன்!”
நடந்தது இதுதான். கிராமம் கிராமமாக ஸ்ஞ்சரித்து வந்த பெரியவாள் முதல் நாள் இரவில் மேனாவில் ரிஷிவந்தியம் பக்கம் வந்திருக்கிறார். பல்லக்குத் தூக்கும் போயிக்கள் நெடுநேரம் சுமந்து வந்து விட்டதால், இரவு இரண்டாம் ஜாமமாயிருக்கலாம். அப்போது அவர்களைக் கிராம வெளி எல்லையிலேயே ஓரமாக ஒரு மரத்தடியில் ‘ஸவாரி” கட்டச் சொல்லி விட்டு (அதாவது மேனாவை இறக்கி வைக்கச் சொல்லிவிட்டு) உறங்கப்போகுமாறு ஸ்ரீசரணர் பணித்தார். தாமும் வழக்கம் போலவே மேனாவுக்குள் முடங்கிக் கொண்டார். பாட்டியம்மாளின் வீட்டுக்கு வலப் புறத்தில் அம் மரத்தடி இருந்தது.
விடிவதற்கு முஹூர்த்த காலம் முன்பு பாட்டியம்மை வாசற்கதவின் பழைய தாழ்ப்பாளைத் திறக்கும் சப்தம் “கிறீச், கிறீச்” கேட்டது. இரவு மூன்று—முன்றரைக்கே துயிலெழுந்து விடும் பெரியவாள்தான் அதை மேனாவிலிருந்தே கேட்டுக்கொண்டது. அம்மையார் வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் பால்காரன் வராததால், தனக்குத் தானே பேசிக்கொள்ளூம் சுபாவப்படி அவனுக்கு அஷ்டோத்தர சத அர்ச்சனை பாடி விட்டு உள்ளே போனாள். அடுத்து வாசற்கதவின் ‘கிரீச்’ எழாததை, அதாவது, பாட்டியம்மை கதவைச் சாத்தவில்லை என்பதைக் கவனம் கொண்டார், எந்தச் சிறிய விஷயத்தையும் கவனிக்கத் தவறாத மேனா மேலவர். வீட்டின் பின்புறத்திலிருந்து, நிலத்தோடு பதிந்து விட்ட உளுத்த கதவைத் திறப்பதன் ‘ மதுர ஸ்வர’ங்களை அடுத்தாற்போல் ஸுப்ரபாத கீதமாக அம் மேலவர் கேட்டுக் கொண்டார். பாட்டியம்மை கொல்லைப்புறம் செல்வதைப் புரிந்து கொண்டார். சில நிமிஷங்கள் ஆகியும் ஸுப்ரபாதம் ‘ரிபீட்’ ஆகாததால் அந்தக் கதவையும் சத்தாமலே பாட்டியம்மாள் வீட்டுக்குள் திரும்பியிருக்கிறாள் என்பதையும் கவனம் கொண்டார்.
பின்னரே பால்காரர் வந்தார், பன்முறை குரல் கொடுத்துப் பார்த்தார்.
‘ பாவம், பாட்டி தூங்கிப் போய் விட்டாள்’ என்று ஸ்ரீசரணர் புரிந்து கொண்டார்.நெஞ்சில் அருள் அரும்பியது. அதில் குறும்பும் கலந்து குதூஹலிக்க எண்ணீனார். அவருடைய சூழ்ச்சித் திட்டத்திற்கு வசதியாக மேனா மூலையில் வெள்ளைச் சால்வை ஒன்றிருந்தது. அதை எடுத்துத் தலையோடு கால் நன்றாக முக்காடிட்டுப் போர்த்திக்கொண்டு மேனாவிலிருந்து வெளி வந்தார். சற்றுத் தொலைவில் போயிக்கள் நித்ரா தேவியின் அணைப்பிலிருந்து வெளீவராது கிடந்ததும் அவருக்கு வசதியாயிற்று. இருள் மூட்டம் விலகாத அவ் வேளையில் அடி மேல் அடி வைத்துப் பாட்டியம்மை வீட்டுப் புறக்கடை வந்து, குட்டிச் சுவர் ஏறிக் குதித்து—ஆம், திருட்டு ஸம்ஸ்காரத்தில் மிச்சம் மீதி வைக்காமல்தான்—உள்ளே தோட்டப்புறத்தில் இறங்கி, திறந்தே இருந்த சுப்ரபாதக் கதவைத் தாண்டி வீட்டினுள்ளேயே பாதம் பதித்தார்.பின்புற ரேழி வழியாக முற்றத்தண்டை வந்தார். பக்கத்தில் அடுக்களை வாசலில் காலிப் பால் பாத்திரமிருந்தது. அதை எடுத்துக்கொண்டு, கூடத்து மூலையில் இரண்டாம் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பாட்டியம்மாளை ‘கப்சிப்’ என்று கடந்து, வஸ்திரத்தை மீண்டும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளி வாசலுக்கு வந்தார். பால் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தார்.
பாட்டாளிப் பால்காரருக்கு பால் வாங்குபவரை ஏறிட்டுப் பார்க்க எங்கே நேரமிருந்தது? அந்த இருள் மூட்டத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஒரு ஏழைப் பாட்டியம்மையாக வேஷமிடுவார் என்று அவர் சொப்பனத்திலேனும் எண்ணீயிருப்பாரா என்ன? கொண்டு வந்திருந்த கைப் பாலைப் பாத்திரத்தில் ஒரே கவிழாக கவிழ்த்து விட்டு நடையைக் கட்டினார்.
போலிப் பாட்டியம்மை அடுக்களை வாசலில் பாலை வைத்து விட்டு மீண்டும் மேனாவுக்கு ஏகி, தமது நகைச்சுவை நாடகத்திற்குப் பாட்டியம்மாள் எப்படி அடுத்த காட்சி அமைக்கப்போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அக்காட்சிதான் பார்த்து விட்டோமே!
கண்ணன் பாலைத் திருடி விட்டுத் திட்டு வாங்கினான். இவரோ, திருட்டுத்தனமாகப் பாலை வாங்கி வைத்துப் பாட்டியம்மைக்குச் சேவை செய்து விட்டு, அந்தக் கண்ணன் கூட வாங்காத ‘க—போகிற’ திட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு தானே திட்டுக்கு உரிமையாளன் என்று திட்டியவளிடமும் தெரிவித்துக் கொள்கிறார்!
விஷயமறிந்த பாட்டியம்மை வெலவெலத்து விட்டாள். எப்பேற்பட்ட ராஜோபசார தேவோபசாரத்துடன் வரவேற்கப்பட வேண்டியவர், எளியவராகத் தன் வீடு முழுவதும் பாதம் பதித்து ,ஐயோ இந்த அவலப் பிண்டத்திற்காக பால் வாங்கி வைத்துப் போயிருக்கிறார்? அந்த தெய்வத்தை என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்?
மன்னிப்புக் கேட்கக்கூட வராமல் உளறிக் கொட்டி, கண்ணீரைக் கொட்டிக்கொண்டு நிற்கும் பாட்டியிடம் ப்ரஸன்ன முகராக ஸ்ரீசரணர்,” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப்பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?” என்றார். அவளுடைய வசவுக்கும் மெய்ம்மை கூட்டி, பாஷ்யம் செய்தார், வைதாரையும் வாழவைக்கும் வள்ளற்பிரான்.

குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ?
(பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுத்த ஒரு அறிவுரை)
நேற்றைய தினமலர் 28-12-2013
ஒரு சமயம், காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். வரிசையில் நின்ற தம்பதி ஒரு தட்டில் பூ, பழம், கல்கண்டு கொடுத்து அவரை வணங்கினர்.
திருமணமாகி ஏழு ஆண்டாகியும் குழந்தைப் பேறு இல்லாததைச் சொல்லி வருந்தினர்.
பெரியவர், ஒரு கணம் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்து, ""எத்தனை வருஷமா கோணல் வகிடு எடுத்து தலைவாருகிறாய்?'' என்று கேட்டார்.
அந்த பெண்ணோ, நினைவு தெரிந்த நாளாக இப்படியே தலை சீவுவதாக தெரிவித்தாள்.
""இன்று முதல் நேர் வகிடு எடுத்துக்கோ! அப்படியே தலை வாரி, அதில் குங்குமம் இட்டுக் கொள். சவுந்தர்ய லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் இரண்டு மாதம் படித்து வா'' என்று சொல்லி ஆசியளித்தார்.
பெரியவர் கூறியபடியே அந்த பெண்ணும் செய்து வந்தாள். பெரியவரிடம் ஆசி பெற்று சென்ற, 51வது நாளில், மருத்துவரிடம் சோதித்தபோது, அவள் தாய்மை அடைந்தது உறுதியானது.
பெண்குழந்தை பிறந்தது. குழந்தையை மடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் ஆசி பெற்றனர்.
அவர்களிடம் பெரியவர், ""உங்கள் குல தெய்வம் எது?'' என கேட்டார்.
அவர்கள், ""திருவாச்சூர் மதுரகாளியம்மன்'' என்றனர். பெரியவர் குழந்தைக்கு ""மதுராம்பாள்'' என்று பெயரிட்டு ஆசியளித்தார். அந்த தம்பதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

-சிதம்பரம் கொத்சு –
இறுதிப் பகுதி-4
நன்றி-பால ஹனுமான்.
சீக்ரெட் ரெசிபி
கொத்சு வெவ்வேறு முறைகளில் செய்யப்படுகிறது. சில நேரம் கத்தரிக்காயை சுட்டுப் பிசைந்து செய்யப்படும். ஆனால் சிதம்பரம் கொத்சுக்கு கத்தரிக்காயை சுட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வேக நேரம் எடுக்கும். இருந்தாலும் சுவை அலாதிதானே ? பாரம்பரிய முறைப்படி செய்ய நேரம் இல்லா விட்டால், குக்கரில் நிமிடங்களில் செய்து விடலாம். இரண்டு முறைகளும் இதோ உங்களுக்காக…
கொத்சு பொடி
என்னென்ன தேவை ?
கொத்தமல்லி (தனியா) – கால் கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – கால் டீ ஸ்பூன்
எப்படிச் செய்வது ?
எண்ணெய் விட்டு மேற்கூறிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.
என்னென்ன தேவை ?
ரொம்ப பொடியாக இல்லாத இளசான கத்தரிக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
கொத்சு பொடி – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
நீர்க்க கரைத்த புளித் தண்ணீர் – அரை கப்
கடுகு – அரை டீ ஸ்பூன்
வெல்லம் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது ?
பாரம்பரிய முறை
மண் சட்டியில் அல்லது வெண்கலச் சட்டியில் செய்தால் சுவை தனிதான். கடாயை அடுப்பில் வைத்து ஒரு பெரிய குழிக் கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். 2 நிமிடங்களில் கத்தரிக்காய் சேர்த்து எண்ணெயில் நன்றாக வேகும் வரை வதக்கவும். கத்தரிக்காய் சுருள வதங்கியதும், புளித் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மசிய வேக விடவும். மத்தில் நன்கு மசித்தும் விடவும். இறுதியில் கொத்சு பொடியும், உப்பும், வெல்லமும் சேர்த்து, மீதமிருக்கும் எண்ணெயில் கடுகு, தேவைப்பட்டால் கறிவேப்பிலை தாளித்து, கொத்சில் கலந்து, ஒரு நிமிடம் அடுப்பில் வைக்கவும். கொதிக்க வேண்டாம். சிதம்பரம் கொத்சு ரெடி!
இறுதியில் சேர்த்த எண்ணெய் கொத்சின் மேலே மிதக்கும். இந்த கொத்சு ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். கெடாது. சாப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இதன் அருஞ்சுவையை உணர முடியும்.
ப்ரஷர் குக்கர் முறை
கத்தரிக்காய், வெங்காயத்தைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு 3 விசில் வேக வைக்கவும். மூடியை திறந்து புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். இறுதியில் வெல்லம், கொத்சு பொடி சேர்த்து எண்ணெயில் கடுகு தாளித்து கொத்சில் கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் வைக்கவும்.

மருந்தை விட பத்தியம் முக்கியம்!
குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்? பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம் போனால்தான் அடக்கம் வரும். ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம்தான்.
மருந்தைவிட பத்தியம் முக்கியம். கல்விஎன்கிற மருந்தைவிட விநயம் என்ற பத்தியம் மாணாக்கனின் பிரதான லக்ஷணமாக வைத்தார்கள். ‘விநயமுடையவன்’ என்ற பொருள் கொண்டதான ‘விநேயன்’ என்றே மாணாக்கனுக்குப் பேர். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனை குருகுலவாஸம் என்று ஒரு ஆசார்யனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு விட்டார்கள். எட்டு வயசுக்குள் உபநயனம் (பூணூல் கல்யாணம்) பண்ணி குருகுலத்துக்கு அனுப்பினார்கள்.
உபநயனம் என்றால் என்ன? ‘நயனம்’ என்றால் ‘அழைத்துப் போவது’. கண்ணில்லாதவனை இன்னொருத்தன்தான் அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. இதிலிருந்து கண்தான் நம்மை அழைத்துப் போகிற தென்று தெரிகிறது. எனவேதான் அதற்கு நயனம் என்று பேர். ‘உப’ என்றால் ‘ஸமீபத்தில்’ என்று ஒரு அர்த்தம். ‘உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்? குருவுக்கு ஸமீபத்தில்தான்.
இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று Stage of life என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம்.
முதல் ஆச்ரமத்தில் இவனுக்கு ஸகலமுமாக இருப்பது குருதான். கடைசியில் ஸந்தியாஸ ஆச்ரமத்திலும் இன்னொரு குரு வருகிறார். இப்போது போட்ட பூணூலைக் கத்தரித்துப் போடுவதற்கு அந்த குரு வந்தாக வேண்டும்.
முதல் குரு சொல்லிக்கொடுத்த உபநிஷத் லக்ஷ்யமான பிரம்மத்தை இவன் ஸாக்ஷாத்காரம் பண்ணுவதற்கு ஸஹாயம் செய்வதற்காக அந்தத் துறவியான குரு வருகிறார். ‘குரு பரம்பரை’ என்று நாம் நமஸ்காரம் பண்ணுவதெல்லாம் அந்த ஸந்நியாஸி குருமார்களைத்தான்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

உழைப்பே தியானம்
By காஞ்சி மஹாபெரியவர்
(நேற்றைய தினமணியில் வந்தது)
ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று ""இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?'' என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது. ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது. உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும்
பாறை மீது நின்று, "இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது. உடனே விண்ணிலிருந்து ஒரு குரல். ""உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.
மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை, எப்படியும் உணவு கிடைத்துவிடும்'' என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.
நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது. மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.
""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு. அப்போது ஒரு குரல் கேட்டது. "என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?'' என்றதைக் கேட்டதும்
கழுகுக்கு அழுகை வந்துவிட்டது. "குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது''
கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது. கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?''
என்ற போது இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.
கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது. அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது.

தேனம்பாக்கத்தின் மகத்துவத்தையும், அங்கே பெரியவா எப்படி வாழ்ந்து வந்தார் என்பதையும் விவரித்தார்.
வைத்திய நாதன்,
அலஹாபாத்தில் இருக்கும் சகஸ்ரலிங்கம், பெரியவா ஏற்பாட்டில் இங்கேதான் வேதம் சொல்லச் சொல்லிப் பண்ணினது. அப்புறம்தான் அதை லாரியிலே ஏத்தி எடுத்துண்டு போக ஏற்பாடு ஆச்சு. இங்கே ஒரு மாமரம்கூட இருந்தது. அங்கேதான் அத்வைத சபா வெள்ளி விழா கொண்டாட்டம் எல்லாம் நடத்தி வச்சார். அந்த மாமரத்துக்குக் கீழேபெரியவா உட்கார்ந்திருந்த போட்டோ கூட இருக்கு.
ஒரு நாள் பெரியவா, திண்ணையிலே படுத்திண்டிருந்தார். நாங்கள் பக்கத்துத் திண்ணையிலே படுத்திண்டிருந்தோம். பெரியவா திடீர்னு திண்ணையிலே இருந்து கீழே விழுந்த மாதிரி இருந்தது. கையிலே தண்டம் மட்டும் அப்படியே பிடிச்சபடியே நேரா இருந்தது! பெரியவா அப்படியே பிராகாரத்துக்கு வந்து அங்கப்பிரதட்சிணம் செய்ய ஆரம்பிச்சுட்டார். நாலு பிராகாரத்தை யும் முழுசா சுத்தி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார். எதுக்காக அவர் அப்படி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார்னு எங்களால புரிஞ்சுக்கவே முடியலே.தொண்ணூறு வயதில், காமாட்சி அம்பாளுக்குக் கும்பாபிஷேகம் பண்ற போது, அங்கே நாலு வீதியிலயும் பெரியவா அங்கப் பிரதட்சிணம் செய்தபோதுதான் தெரிந்தது, தன்னால முடியுமான்னு அன்னிக்கு தேனம்பாக்கத்தில் அதுக்கு முன்னோட்டம் பார்த்திருக்கார் பெரியவா!
அதேமாதிரிதான், தேவி காமாட்சி கிளம்பி கொட்டகைக்குப் போனப்புறம், ஜபம் பண்ணிண்டே வரதராஜப் பெருமாள் கோயிலின் நாலு மாட வீதியிலேயும் பிரதட்சிணம் பண்ணினார். அதுவும் ஒரு பரீட்சை மாதிரிதான். சதாராவுக்கு நடந்து போகத் தன்னால் முடியுமான்னு சோதனை பண்ணிப் பார்த்திருக்கார்.சதாராவுக்குப் போறதுக்கு முன்னால, ரிஜிஸ்திரார் ஆபீசுக்குப் போய், தேனம்பாக்கம் நிலத்தை எங்க சங்கர பக்த ஜன சபா பெயரில் ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துட்டுத் தான் போனார். நீலகண்ட குருக்கள் இங்கே இருந்தார். கடனை எல்லாம் முழுக்க அடைச்சு, அனுபவ பாத்யதையை எங்களோட சங்கர பக்த ஜன சபாவுக்கு எழுதி வைச்சுட்டார். 'இந்த சிவா ஸ்தானத்தை நீங்கதான் நிர்வாகம் பண்ணணும்’னு சொல்லிட்டார். மடத்துக்குக்கூட எழுதி வைக்கலே! பெரியவா சொன்னதன்பேரில் திருக்குளத்திலே நீலோத்பல மலர் போட்டோம். இந்தத் திருக்குளத்தை ஹிந்துஜா குரூப் செப்பனிட்டுத் தர்றதா சொல்லியிருக்காங்க.
பெரியவா ஆசியோட வேத பாடசாலை இப்பவும் நடக்கிறது. இருபது மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் படிக்கிறார்கள். அதிகாலை 4 மணிக்குப் பாடங்கள் ஆரம்பித்தால், ராத்திரி 9:30 மணி வரை படிப்பார்கள். ஸ்போர்ட்ஸும் உண்டு. இங்கிலீஷ், கணிதம் சரித்திரம் எல்லாம் சொல்லித்தர ஏற்பாடு பண்ணிட்டு வரோம்.மகா பெரியவா ஆராதனை நடத்த, சி.சி.எல் கம்பெனி இங்கே ஒரு பெரிய மண்டபம் கட்டித் தந்திருக்கு. உபநயனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மாதிரி வைதீகக் காரியங்கள் எல்லாம் இங்கே நடத்தலாம். இங்கே இருக்கிற பிரம்மபுரீஸ்வரர் லிங்கத்துக்குப் பின்னாலே, ஸ்ரீசோம கணபதியுடன் ஆதிசங்கரரும் இருப்பதைப் பார்க்கலாம். அப்படியே சுவரில் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது.
ஆதிசங்கரர் இங்கேதான் கடைசியில் வந்து தங்கியிருந்தார் என்பார்கள். 'பிரம்ம காஞ்சி’ என்று தேனம்பாக்கத்தைச் சொல்லுவார்கள். இங்கே ஏகாந்தமாக இருக்க விரும்பினா பெரியவா. சிவாஸ்தானம் புனிதமானது என்பது தவிர, சங்கரர் சம்பந்தப்பட்ட ஸ்தலம் என்பதாலேயே அதை உணர்ந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் பெரியவா. தாம் தங்கியிருக்க ஒரு சிறு குடிசை போதும் என்று இருந்துவிட்டார். தன் கை நிறைய தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு, தம் இடத்தைத் தாமே சுத்தம் செய்து விடுவார். தினமும் அதிகாலைல விஷ்ணுவைத் தரிசிக்க, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே விஷ்ணுகாஞ்சிக்கு நடந்து போவார்.
இந்தத் தேனம்பாக்கத்தை சிவாஸ்தானம் என்பார்கள். பல்லவர் காலத்துக் கோயில். இங்கே இருக்கிற துர்கையின் மேல் துர்கா பஞ்ச ரத்னம் எழுதியிருக்கார் பெரியவா. சதாரா போற வழியில் இருக்கிற அக்ரி கிராமத்தில் தங்கியிருந்தபோது. 'தே தியான யோகானுதா’ என்று தொடங்கும் பஞ்ச ரத்னம் அது. 'தன்னுடைய குணங்களாலேயே மறைத்திருக்கக்கூடிய பராசக்தியான உன்னை, யார் தியான யோகத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களே காண்கின்றனர். ஏ தேவி, நீதான் பரமேஸ்வரனுடைய சக்தியாகின்றாய். ஏ தேவி, மோட்சத்தைக் கொடுப்பவளே, சர்வேஸ்வரி, என்னைக் காப்பாயாக!’ என்ற அர்த்தம் உள்ளது அந்த ஸ்லோகம்.அன்னிக்கு அதி ருத்ரம் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெரு மழை வந்து, கொட்டகையே சாமி மேல் சாய்ந்துவிடும் போல் இருந்தது. பெரியவா அப்படியே படுத்துண்டிருந்தா. அவருக்கு ஒண்ணுமே ஆகலே! தண்ணி எல்லாம் உள்ளே வந்துட்டுது. அப்புறம் மண் கொண்டு வந்து போட்டு சமன் பண்ணினோம்.
பக்கத்திலே இருக்கிற இறவாஸ்தானேஸ் வரரைத் தரிசனம் பண்ணி பூஜை பண்ணினால் இறப்பு கிடையாது என்றும், பிறவாஸ்தானேஸ்வரைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டால் பிறப்பு கிடையாது என்றும் சொல்வார்கள். 'தேவ தேவ மமாஸ்தானம் சிவாஸ்தானம் மிதம் க்ருதம்; சிவாஸ்தானேஸ்வரம் நாம ஸ்தானமேதத் பிரசித்தமத்’ என்று இந்த தேனம்பாக்கத்தை மிக உயர்வாகச் சொல்லுவார்கள்.பிரம்மா யாகம் பண்ணின இடம் தேனம்பாக்கம். ஆனால் யாகத்துக்கு அவர் சரஸ்வதியைக் கூப்பிடவில்லை. அதனால் சரஸ்வதிக்குக் கோபம். நதியாக வேகமாக வந்தாள். ஊரையே அழிச்சுடற வேகம். அதனால், நதிக்கு வேகவதின்னு பேர்.மகாவிஷ்ணு வஸ்திரத்தை அவிழ்த்துக் கீழே போட்டுப் படுத்துண்டுட்டார். யாகம் பூரணமாச்சு. அதனால்தான் யதோத்காரி அல்லது சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று அவருக்குப் பெயர். ஆனால், தானம் பண்ண ஒரு எஜமானர் வேணுமே! பரமேஸ்வரன் நின்றார். அவர்தான் பிரம்மபுரீஸ்வரர். இங்கே இருக்கிற சோம கணபதி, யாகத்தை ரட்சித்தார். நதியாக வந்து இருட்டாகப் போனதால், உலகமே இருண்டு போச்சு. யாகம் நடக்க பெருமாளே வந்தார். அவர்தான் விளக்கொளி பெருமாள் அல்லது தீபப் பிரகாசர். பக்கத்திலேயே அவர் கோயில் இருக்கிறது. பிரம்மா யாகம் பண்ணினதிலிருந்து வந்த பெருமாள் விக்கிரகம்தான் வரதராஜர் உற்ஸவ மூர்த்தி. அவர் முகத்தில் யாகத்தோட அக்னி பட்ட வடு கூடத் தெரியும்! இதை மோட்சபுரின்னும் சொல்லுவா.
இங்கே ஆதிசங்கரர் கடைசியாக வந்திருந்தார். அதனால, இந்த இடத்தோட விசேஷம் பெரியவாளுக்குத் தெரிஞ்சிருக்கு. இங்கே சுவாமிக்கு இரண்டு வேளை பூஜையும் ராஜப்பா குருக்கள்தான் செய்து வருகிறார்.பெரியவா ஏப்ரல் 15, 1978 அன்னிக்கு சிவாஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு கால்நடைப் பயணமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் யாத்திரை எல்லாம் முடித்துக்கொண்டு, ஏப்ரல் 13, 1984-ல் திரும்பி வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட 4000 கி. மீ. தூரம் நடந்திருக்கார். இந்த மாதிரி எந்த மகானாவது மக்களைப் பார்க்கணும்னு அவர்கள் இருக்கிற இடத்துக்குப் போய் தரிசனம் கொடுத்து வந்திருக்கிறாரான்னு தெரியலை. இது ஓர் ஆச்சரியமான, பிரமிப்பான விஷயம்!அதனால்தான் தேனம்பாக்கத்துக்கு அத்தனை விசேஷம். பெரியவாளின் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் அதிஷ்டானத்தை தரிசனம் பண்ணின கையோடு இங்கேயும் வந்து தரிசனம் பண்ணுகிறார்கள். இது அத்தனை புனிதமான ஸ்தலம்!
வைத்திய நாதன்,
அலஹாபாத்தில் இருக்கும் சகஸ்ரலிங்கம், பெரியவா ஏற்பாட்டில் இங்கேதான் வேதம் சொல்லச் சொல்லிப் பண்ணினது. அப்புறம்தான் அதை லாரியிலே ஏத்தி எடுத்துண்டு போக ஏற்பாடு ஆச்சு. இங்கே ஒரு மாமரம்கூட இருந்தது. அங்கேதான் அத்வைத சபா வெள்ளி விழா கொண்டாட்டம் எல்லாம் நடத்தி வச்சார். அந்த மாமரத்துக்குக் கீழேபெரியவா உட்கார்ந்திருந்த போட்டோ கூட இருக்கு.
ஒரு நாள் பெரியவா, திண்ணையிலே படுத்திண்டிருந்தார். நாங்கள் பக்கத்துத் திண்ணையிலே படுத்திண்டிருந்தோம். பெரியவா திடீர்னு திண்ணையிலே இருந்து கீழே விழுந்த மாதிரி இருந்தது. கையிலே தண்டம் மட்டும் அப்படியே பிடிச்சபடியே நேரா இருந்தது! பெரியவா அப்படியே பிராகாரத்துக்கு வந்து அங்கப்பிரதட்சிணம் செய்ய ஆரம்பிச்சுட்டார். நாலு பிராகாரத்தை யும் முழுசா சுத்தி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார். எதுக்காக அவர் அப்படி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார்னு எங்களால புரிஞ்சுக்கவே முடியலே.தொண்ணூறு வயதில், காமாட்சி அம்பாளுக்குக் கும்பாபிஷேகம் பண்ற போது, அங்கே நாலு வீதியிலயும் பெரியவா அங்கப் பிரதட்சிணம் செய்தபோதுதான் தெரிந்தது, தன்னால முடியுமான்னு அன்னிக்கு தேனம்பாக்கத்தில் அதுக்கு முன்னோட்டம் பார்த்திருக்கார் பெரியவா!
அதேமாதிரிதான், தேவி காமாட்சி கிளம்பி கொட்டகைக்குப் போனப்புறம், ஜபம் பண்ணிண்டே வரதராஜப் பெருமாள் கோயிலின் நாலு மாட வீதியிலேயும் பிரதட்சிணம் பண்ணினார். அதுவும் ஒரு பரீட்சை மாதிரிதான். சதாராவுக்கு நடந்து போகத் தன்னால் முடியுமான்னு சோதனை பண்ணிப் பார்த்திருக்கார்.சதாராவுக்
பெரியவா ஆசியோட வேத பாடசாலை இப்பவும் நடக்கிறது. இருபது மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் படிக்கிறார்கள். அதிகாலை 4 மணிக்குப் பாடங்கள் ஆரம்பித்தால், ராத்திரி 9:30 மணி வரை படிப்பார்கள். ஸ்போர்ட்ஸும் உண்டு. இங்கிலீஷ், கணிதம் சரித்திரம் எல்லாம் சொல்லித்தர ஏற்பாடு பண்ணிட்டு வரோம்.மகா பெரியவா ஆராதனை நடத்த, சி.சி.எல் கம்பெனி இங்கே ஒரு பெரிய மண்டபம் கட்டித் தந்திருக்கு. உபநயனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மாதிரி வைதீகக் காரியங்கள் எல்லாம் இங்கே நடத்தலாம். இங்கே இருக்கிற பிரம்மபுரீஸ்வரர் லிங்கத்துக்குப் பின்னாலே, ஸ்ரீசோம கணபதியுடன் ஆதிசங்கரரும் இருப்பதைப் பார்க்கலாம். அப்படியே சுவரில் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது.
ஆதிசங்கரர் இங்கேதான் கடைசியில் வந்து தங்கியிருந்தார் என்பார்கள். 'பிரம்ம காஞ்சி’ என்று தேனம்பாக்கத்தைச் சொல்லுவார்கள். இங்கே ஏகாந்தமாக இருக்க விரும்பினா பெரியவா. சிவாஸ்தானம் புனிதமானது என்பது தவிர, சங்கரர் சம்பந்தப்பட்ட ஸ்தலம் என்பதாலேயே அதை உணர்ந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் பெரியவா. தாம் தங்கியிருக்க ஒரு சிறு குடிசை போதும் என்று இருந்துவிட்டார். தன் கை நிறைய தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு, தம் இடத்தைத் தாமே சுத்தம் செய்து விடுவார். தினமும் அதிகாலைல விஷ்ணுவைத் தரிசிக்க, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே விஷ்ணுகாஞ்சிக்கு நடந்து போவார்.
இந்தத் தேனம்பாக்கத்தை சிவாஸ்தானம் என்பார்கள். பல்லவர் காலத்துக் கோயில். இங்கே இருக்கிற துர்கையின் மேல் துர்கா பஞ்ச ரத்னம் எழுதியிருக்கார் பெரியவா. சதாரா போற வழியில் இருக்கிற அக்ரி கிராமத்தில் தங்கியிருந்தபோது. 'தே தியான யோகானுதா’ என்று தொடங்கும் பஞ்ச ரத்னம் அது. 'தன்னுடைய குணங்களாலேயே மறைத்திருக்கக்கூடிய பராசக்தியான உன்னை, யார் தியான யோகத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களே காண்கின்றனர். ஏ தேவி, நீதான் பரமேஸ்வரனுடைய சக்தியாகின்றாய். ஏ தேவி, மோட்சத்தைக் கொடுப்பவளே, சர்வேஸ்வரி, என்னைக் காப்பாயாக!’ என்ற அர்த்தம் உள்ளது அந்த ஸ்லோகம்.அன்னிக்கு அதி ருத்ரம் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெரு மழை வந்து, கொட்டகையே சாமி மேல் சாய்ந்துவிடும் போல் இருந்தது. பெரியவா அப்படியே படுத்துண்டிருந்தா. அவருக்கு ஒண்ணுமே ஆகலே! தண்ணி எல்லாம் உள்ளே வந்துட்டுது. அப்புறம் மண் கொண்டு வந்து போட்டு சமன் பண்ணினோம்.
பக்கத்திலே இருக்கிற இறவாஸ்தானேஸ் வரரைத் தரிசனம் பண்ணி பூஜை பண்ணினால் இறப்பு கிடையாது என்றும், பிறவாஸ்தானேஸ்வரைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டால் பிறப்பு கிடையாது என்றும் சொல்வார்கள். 'தேவ தேவ மமாஸ்தானம் சிவாஸ்தானம் மிதம் க்ருதம்; சிவாஸ்தானேஸ்வரம் நாம ஸ்தானமேதத் பிரசித்தமத்’ என்று இந்த தேனம்பாக்கத்தை மிக உயர்வாகச் சொல்லுவார்கள்.பிரம்மா யாகம் பண்ணின இடம் தேனம்பாக்கம். ஆனால் யாகத்துக்கு அவர் சரஸ்வதியைக் கூப்பிடவில்லை. அதனால் சரஸ்வதிக்குக் கோபம். நதியாக வேகமாக வந்தாள். ஊரையே அழிச்சுடற வேகம். அதனால், நதிக்கு வேகவதின்னு பேர்.மகாவிஷ்ணு வஸ்திரத்தை அவிழ்த்துக் கீழே போட்டுப் படுத்துண்டுட்டார். யாகம் பூரணமாச்சு. அதனால்தான் யதோத்காரி அல்லது சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று அவருக்குப் பெயர். ஆனால், தானம் பண்ண ஒரு எஜமானர் வேணுமே! பரமேஸ்வரன் நின்றார். அவர்தான் பிரம்மபுரீஸ்வரர். இங்கே இருக்கிற சோம கணபதி, யாகத்தை ரட்சித்தார். நதியாக வந்து இருட்டாகப் போனதால், உலகமே இருண்டு போச்சு. யாகம் நடக்க பெருமாளே வந்தார். அவர்தான் விளக்கொளி பெருமாள் அல்லது தீபப் பிரகாசர். பக்கத்திலேயே அவர் கோயில் இருக்கிறது. பிரம்மா யாகம் பண்ணினதிலிருந்து வந்த பெருமாள் விக்கிரகம்தான் வரதராஜர் உற்ஸவ மூர்த்தி. அவர் முகத்தில் யாகத்தோட அக்னி பட்ட வடு கூடத் தெரியும்! இதை மோட்சபுரின்னும் சொல்லுவா.
இங்கே ஆதிசங்கரர் கடைசியாக வந்திருந்தார். அதனால, இந்த இடத்தோட விசேஷம் பெரியவாளுக்குத் தெரிஞ்சிருக்கு. இங்கே சுவாமிக்கு இரண்டு வேளை பூஜையும் ராஜப்பா குருக்கள்தான் செய்து வருகிறார்.பெரியவா ஏப்ரல் 15, 1978 அன்னிக்கு சிவாஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு கால்நடைப் பயணமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் யாத்திரை எல்லாம் முடித்துக்கொண்டு, ஏப்ரல் 13, 1984-ல் திரும்பி வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட 4000 கி. மீ. தூரம் நடந்திருக்கார். இந்த மாதிரி எந்த மகானாவது மக்களைப் பார்க்கணும்னு அவர்கள் இருக்கிற இடத்துக்குப் போய் தரிசனம் கொடுத்து வந்திருக்கிறாரான்னு தெரியலை. இது ஓர் ஆச்சரியமான, பிரமிப்பான விஷயம்!அதனால்தான் தேனம்பாக்கத்துக்கு அத்தனை விசேஷம். பெரியவாளின் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் அதிஷ்டானத்தை தரிசனம் பண்ணின கையோடு இங்கேயும் வந்து தரிசனம் பண்ணுகிறார்கள். இது அத்தனை புனிதமான ஸ்தலம்!
ஏன் காம்போஜின்னு பேரு?
(இந்த வார கல்கி)
காம்போஜம் என்கிறது கம்போடியான்னு பல பேருக்கு தெரிஞ்சிருக்கும். அங்கே பாரத கலாசாரம் ரொம்ப அழமாப் பரவியிருக்கிறதும் தெரிஞ்சிருக்கலாம். ஒரு வேளை அந்ததேசத்திலிருந்து இறக்குமதி பண்ணிண்ட ராகம்தான் காம்போஜியோன்னா, அப்படியில்லைன்னு ஸாம்பமூர்த்தி மாதிரியான ரிஸர்ச்காரா சொல்றா.
நம்மகிட்டேயிருந்து தான் அவா அநேக ஸமாச்சாரம் கடன் வாங்கிண்டாளே தவிர, நாம அந்த காலத்திலே நாகரிகத்திலே ரொம்ப பின்தங்கியிருந்த அவாகிட்டேயிருந்து எதுவும் எடுக்கலை. நிச்சயமா, ஸங்கீதத்திலே ரொம்ப முன்னேணியிருந்த நாம ஏதோ போக் மியூசிக் தான் இருந்த கிழக்காசிய தேசங்களிலிருந்து எதுவும் கடன் வாங்கலைன்னு சொல்றா.
பின்னே ஏன் காம்போஜின்னு பேருன்னா இன்னொண்ணு தோணறது. கம்போடியாவை மாத்திரம் காம்போஜம்னு சொல்லலை. இந்தியாவோட வடக்கத்தி எல்லையை ஒட்டினாப்பல இருக்கிற ஒரு பிரதேசத்தையும் காம்போஜம்னே சொல்லியிருக்கான்னு தெரியறது. காளிதாஸன் ரொம்ப விஷயம் தெரிஞ்சவர். மேக ஸந்தேசத்துல இந்தந்த வழியா போன்னு மேகத்துங்கிட்ட யக்ஷன் சொல்லிண்டு போறதை வெச்சே கரெக்டா மேப் போட்டுடலாம். அவ்வளவு ஸரியா சொல்லியிருப்பார்.
அவர் ரகுவம்சத்துல ரகு தேசம் தேசமாப்படை எடுத்துண்டு போய் ஜயிச்சதை வரிசையாக சொல்லிண்டு போறச்சே ஸிந்து நதியை தாண்டி வடக்கே இமய மலையை ஒட்டினாப்போலயே காம்போஜத்தை சொல்லியிருக்கார். இதிலேருந்து அண்ட பாரதம்னும் விசால இந்தியான்னும் சொல்ற தேசத்துக்குள்ளேயே ஹிண்டுகுஷ் பிராந்தியத்திலே ஒரு காம்போஜம் இருந்திருக்கிறதா தெரியறது. அங்கே விசேஷமாயிருந்த ஒரு ராகத்திலேயிருந்து காம்போஜி உண்டாச்சு போலேயிருக்கு.
-ஸகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க வேண்டும்?
சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும்.
உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது. ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !
ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர். உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன். ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம். எப்பேர்ப்பட்ட மகான் !
இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம். ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு.

ஒரு ஸ்வாமிகள் சீக்ரம் ஸித்தி அடையப்போறார்!.... அதுக்கப்புறம் பண்ண வேண்டிய ஏற்பாடுகளை பண்ணுங்கோடா !..."
பெரியவா தானும் நிறைய தமாஷ் பண்ணுவார்,
யாராவது பண்ணும் தமாஷையும் நன்றாக ரசிப்பார். ஒருநாள் ஸ்நானம் பண்ணுவதற்காக ஒரு சிக்குப் பலகையின் மேல் உட்கார்ந்திருந்தார். அப்போது மேலேயிருந்த கூரையில் இருந்து ஒரு பல்லி, பெரியவா தலை மேல் விழுந்துவிட்டது! சட்டென்று காஷாயத் துணியால் பெரியவா தன் தலையை மூடிக் கொண்டார்.
அதோடு நில்லாமல் அங்கிருந்த பாரிஷதர்களிடம் "ஒரு ஸ்வாமிகள் சீக்ரம் ஸித்தி அடையப்போறார்!.... அதுக்கப்புறம் பண்ண வேண்டிய ஏற்பாடுகளை பண்ணுங்கோடா !..." என்று வேறு சொன்னார்.
தொண்டர்கள் திகைத்தனர்! அப்போது மடத்தில் நாலைந்து ஸ்வாமிகள் இருந்தார்கள்.இதில் எந்த ஸ்வாமிகள் ஸித்தி அடையப் போகிறார்? பெரியவா ஏன் இதை இப்படி முன்கூட்டியே சொல்ல்கிறார்? ஒரே குழம்பாக குழம்பினார்கள்.
ஒரு சன்யாசி ஸித்தி அடைந்து விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இருந்தாலும்......ஒருவரை ஒருவர் பேந்தப் பேந்த பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை பார்த்ததும் பெரியவாளால் அதற்கு மேல் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
மெல்ல தன்னுடைய தலையை போர்த்தியிருந்த காஷாயத்தை நறுவிசாக எடுத்தால்.......பெரியவாளுடைய திருமுடி மேல் தும்பைப் பூ போல், ஜம்மென்று ஒரு பல்லி அசைவற்று கிடந்தது! மெல்ல தலையை குனிந்து ஆட்டியதும், பொத்தென்று கீழே விழுந்து ஓடியது!
ஒரு பாரிஷதர் "பஞ்சாங்கத்துல.... தலை மேல பல்லி விழுந்தா, 'மரணம்'ன்னு பலன் போட்டிருக்கு; இன்னொண்ணுல "கலகம்"ன்னு போட்டிருக்கு...." என்றார்.
"மொதல்ல சொன்ன பலன்தான்! எனக்கு மரணம் சம்பவிக்கப் போறது" என்றார் பெரியவா.
உடனே சமயோசிதமாக ஒரு பாரிஷதர் அழகாக விளக்கம் சொன்னார்....
.."மரணம்ன்னு எழுதியிருக்கே தவிர, யாருக்குன்னு சொல்லலியே! அதுனால, பல்லிக்குத்தான் மரணம்! அதுவும் பெரியவாளோட தலைல விழுந்து பெரியவாளோட சம்மந்தம் கெடைச்சதுனால, அதுக்கு மோக்ஷந்தான் !..." என்றதும், அவருடைய யுக்தி பூர்வமான பேச்சைக் கேட்டதும் பெரியவா அதை ரொம்ப ரசித்து சிரித்தார்.
இன்னொரு பாரிஷதர், "நம்ம காஞ்சிபுரத்துல பல்லி தோஷமே கெடையாது...ன்னு ஒரு பேச்சு உண்டு! வரதராஜ பெருமாள் கோவில்ல, பல்லியை தர்சனம் பண்ணறதுக்காக டிக்கெட் வாங்கிண்டு கியூவுல நின்னு தவம் கெடந்து பாக்கறா.....அதுனால, மரணம், கலகம் ரெண்டுமே இங்கே பொருந்தாது" என்றதும், பெரியவா சிரித்துக் கொண்டே ஸ்நானம் பண்ண ஆரம்பித்தார்.
பெரியவா தானும் நிறைய தமாஷ் பண்ணுவார்,
யாராவது பண்ணும் தமாஷையும் நன்றாக ரசிப்பார். ஒருநாள் ஸ்நானம் பண்ணுவதற்காக ஒரு சிக்குப் பலகையின் மேல் உட்கார்ந்திருந்தார். அப்போது மேலேயிருந்த கூரையில் இருந்து ஒரு பல்லி, பெரியவா தலை மேல் விழுந்துவிட்டது! சட்டென்று காஷாயத் துணியால் பெரியவா தன் தலையை மூடிக் கொண்டார்.
அதோடு நில்லாமல் அங்கிருந்த பாரிஷதர்களிடம் "ஒரு ஸ்வாமிகள் சீக்ரம் ஸித்தி அடையப்போறார்!.... அதுக்கப்புறம் பண்ண வேண்டிய ஏற்பாடுகளை பண்ணுங்கோடா !..." என்று வேறு சொன்னார்.
தொண்டர்கள் திகைத்தனர்! அப்போது மடத்தில் நாலைந்து ஸ்வாமிகள் இருந்தார்கள்.இதில் எந்த ஸ்வாமிகள் ஸித்தி அடையப் போகிறார்? பெரியவா ஏன் இதை இப்படி முன்கூட்டியே சொல்ல்கிறார்? ஒரே குழம்பாக குழம்பினார்கள்.
ஒரு சன்யாசி ஸித்தி அடைந்து விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இருந்தாலும்......ஒருவரை ஒருவர் பேந்தப் பேந்த பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை பார்த்ததும் பெரியவாளால் அதற்கு மேல் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
மெல்ல தன்னுடைய தலையை போர்த்தியிருந்த காஷாயத்தை நறுவிசாக எடுத்தால்.......பெரியவாளுட
ஒரு பாரிஷதர் "பஞ்சாங்கத்துல.... தலை மேல பல்லி விழுந்தா, 'மரணம்'ன்னு பலன் போட்டிருக்கு; இன்னொண்ணுல "கலகம்"ன்னு போட்டிருக்கு...." என்றார்.
"மொதல்ல சொன்ன பலன்தான்! எனக்கு மரணம் சம்பவிக்கப் போறது" என்றார் பெரியவா.
உடனே சமயோசிதமாக ஒரு பாரிஷதர் அழகாக விளக்கம் சொன்னார்....
.."மரணம்ன்னு எழுதியிருக்கே தவிர, யாருக்குன்னு சொல்லலியே! அதுனால, பல்லிக்குத்தான் மரணம்! அதுவும் பெரியவாளோட தலைல விழுந்து பெரியவாளோட சம்மந்தம் கெடைச்சதுனால, அதுக்கு மோக்ஷந்தான் !..." என்றதும், அவருடைய யுக்தி பூர்வமான பேச்சைக் கேட்டதும் பெரியவா அதை ரொம்ப ரசித்து சிரித்தார்.
இன்னொரு பாரிஷதர், "நம்ம காஞ்சிபுரத்துல பல்லி தோஷமே கெடையாது...ன்னு ஒரு பேச்சு உண்டு! வரதராஜ பெருமாள் கோவில்ல, பல்லியை தர்சனம் பண்ணறதுக்காக டிக்கெட் வாங்கிண்டு கியூவுல நின்னு தவம் கெடந்து பாக்கறா.....அதுனால, மரணம், கலகம் ரெண்டுமே இங்கே பொருந்தாது" என்றதும், பெரியவா சிரித்துக் கொண்டே ஸ்நானம் பண்ண ஆரம்பித்தார்.
மூலம் பற்றி நம் ஆதிமூலம்
(முக நூலில் திரு கார்த்தி நாகரத்தினம் தட்டச்சு செய்தது 25-12-2013)
ஓர் அத்யந்த கைங்கர்ய பரர் ஐயனிடம் கேட்டார்.
பெரியவா ஏன் மூலா நக்ஷத்ரத்தில் காஷ்ட மௌனம் அனுஷ்டிக்கிறா?
பெரியவா பதில் சொன்னார்...
"மூலா நக்ஷத்ரம் சரஸ்வதியோட நக்ஷத்ரம்.
சரஸ்வதி வாக்குக்கு தெய்வம்.
அன்னிக்கு காஷ்ட மௌனம் இருந்து அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தா வாக் விரயம் ஆகாமலும் இருக்கும்.
அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்த மாதிரியும் இருக்கும்.
அதனால, மூலா நக்ஷத்ரம் அன்னிக்கு எதுவும் பேசாம இப்படி காஷ்ட மௌனம் இருக்கறது. "
ஆனா, நாம்ப மூலா நக்ஷத்ரம் பெண் குழந்தைகளுக்கு ஆகாது ன்னு நிறைய மூட நம்பிக்கையை வளர்த்துண்டு இருக்கோம்.
அந்த குழந்தைகளும் கல்யாணம் ஆறதுக்கு ரொம்ப சிரமப் பட்டுண்டு இருக்கா.
இன்னொரு சிஷ்யர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மூலா நக்ஷத்ரம்.
பெரியவா அவரிடம் 'ஏண்டா, பொம்மனாட்டி கொழந்தை, அதுவும் மூலா நக்ஷத்ரம். ஒனக்கு கவலையா இல்லியோ?' என்றாராம்.
அடியாருக்குத் தெரியாதா என்ன? ஐயனின் திருவிளையாடல்கள்...
'பெரியவா இருக்கா. அதெல்லாம் பெரியவா பாத்துப்பா. அப்புறம் அவள் க்ஷேமத்துக்கு என்ன குறை இருக்கப் போறது?' என்ற ரீதியில் சொல்லிவிட்டாராம்.
பெரியவா அவரை நிரம்ப ஆசிர்வாதம் பண்ணி, 'மூலா நக்ஷத்ரம் சரஸ்வதி அம்பாளோட நக்ஷத்ரம். குழந்தைக்கு சரஸ்வதி ன்னு பேரு வை. க்ஷேமமா இருப்பா' என்று ஆசி சொன்னாராம்.
இன்று அந்த பெண் குழந்தை நல்ல இடத்தில் மணமாகி குழந்தைகளுடம் பரம க்ஷேமமாக இருக்கிறார்.
நன்றி : ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் நிகழ்த்திய உரையைத் தழுவி.

‘Amudhum Thaenum Edharkku…' The hero woos the heroine, the dulcet tones of playback singer Sirkazhi Govindarajan, caressing the listener. But the same voice shakes us out of our romantic reverie when we hear the words ‘Aadi Adangum Vaazhkaiyadaa..’ (film: Neerkumizhi). Here Sirkazhi’s voice plumbs the depths of pathos, while pointing out that at the end of a tumultuous life all that is left is a quiet burial. One notices a quiver when Sirkazhi sings ‘Aadi’, which brings out the nebulousness of life, and the way he stresses ‘da’ in ‘Adangum,’ gives the whole thing an air of finality. K. Balachander says, “I wanted Sirkazhi to sing that song, because his emphasis on certain words and letters always produced the effect required.”
With the curtain on the Tamizh Isai Sangam’s festival going up tomorrow, it is apt to recall the contribution of this musician to Tamil music and his association with the Sangam. Sirkazhi’s musical journey began when he was in school. Even though he played minor roles in school plays, he would, in deference to the wishes of the audience, stay on stage longer than the hero, singing one song after another. After completing ESLC, Sirkazhi joined the Devi Nataka Sabha, but his uncle P.S. Chettiar, assistant director with Ellis R. Dungan, felt the future belonged to films. So Sirkazhi joined Modern Theatres, and, after a stint there, applied to the Tamil Music College in Madras. Upon completion of the course, Sirkazhi enrolled for a degree in the Government Music College, where Thiruppamburam Swaminatha Pillai, impressed by his talents, took Sirkazhi under his wing.
Sirkazhi’s first film solo was ‘Sirupputhaan Varugudhaiyya,’ in 1954, for the film ‘Ponvayal.’ (Music by Thuraiyur Rajagopala Sarma). Sirkazhi’s guru said, “Sing in films by all means. But make sure you do not bring dishonour to the divine music I’ve taught you.” And Sirkazhi scrupulously adhered to his guru’s advice. Violinist Sikkil Bhaskaran remembers, “The first hour of a Sirkazhi concert would be devoted to compositions of the Trinity, the next to Tamil songs, and the last to devotionals from films.”
One-man orchestra
Sirkazhi’s voice was invariably heard in theme songs, and as a disembodied voice in poignant situations, such as ‘Odam Nadiyinile’ in the film ‘Kaathirunda Kangal.’ “When Sirkazhi came for this recording, he asked me why there were only a few members of my orchestra present. I touched his throat and said, ‘The orchestra I need is in here,’” says M.S. Viswanathan.
Critic Subbudu observed, “Sirkazhi does not require a mike. If he sings in Mangadu, he will be heard in Mahabalipuram.” Music director Deva, who has tuned devotionals for Sirkazhi, says, “I’ve seen speakers vibrate excessively, when Sirkazhi sang.”
Sirkazhi has to his credit many devotional albums, the music for most of which was by T.R. Paappa. Talking of ‘Kannan Vandhaan’ (from ‘Ramu’), A.V.M. Saravanan recalls, “Sirkazhi’s singing was weighty and the other popular singer who initially sang along with Sirkazhi, couldn’t match his singing. So TMS was brought in to sing with Sirkazhi.”
The song was tuned by MSV, who says, “One of my fans was in hospital. Doctors told the family to do what they could to make his last hours happy. So they played a few songs of mine. And soon the man perked up and said, ‘I want to hear ‘Kannan Vandhaan.’ And from then on, recovery was rapid!”
Subbu Arumugam, who has written and tuned villupattus for Sirkazhi in films and 93-year-old mridangam vidwan ‘Madras’ Kannan, who refers to Sirkazhi as ‘kuzhandai,’ emphasise his humility.
“In the early days, I used to imitate Sirkazhi, and my father used to be very proud of this,” says T.L. Maharajan, Tiruchi Loganathan’s son. Sirkazhi sang for theatre too. A.L. Raghavan says, “Tiruchi Loganathan was the hero, and T.R. Rajakumari the heroine in the play ‘Anarkali’, which was inaugurated at Raja Annamalai Mandram. The opening song, the title song, and songs for all male characters, except the hero, were sung by Sirkazhi.”
Justice P.R. Gokulakrishnan, president, Tamil Isai Sangam says, “Sirkazhi was unique, because he made a mark both in classical and film music. If asked to describe his voice, I would say it was alluring.” Sirkazhi received the Isai Perarignar title from Tamil Isai Sangam in 1982.
Dr. M. Thangarasu, retired vice-chancellor, Periyar University, and advisor, Tamil Isai Sangam, says, “Sirkazhi’s distinguishing characteristic was his humility. He would be present at all the Pann research conferences, and now his son Sivachidambaram attends these conferences. No other musician sang so many Tamil songs as Sirkazhi.”
Sirkazhi’s daughter Gnanavalli has one regret though. “Why was my father ignored by mainstream sabhas and the English media?”
Sirkazhi was often asked why he did not sing for heroes. He would point to pictures of deities and say, “I sing about these heroes.” And after his untimely death at the age of 55, Sirkazhi, perhaps, continues to sing for the Gods, as he roams the Elysian Fields.

"தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது"
ஸ்ரீ சி. ஆர். சுவாமிநாதன் - மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர் அவர் சொன்னதிலிருந்து:
சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி, சாயந்திரம் தினமும் பிரசங்கம் நடைபெறும். கேக்கணுமா. பெரியவா பேச்சை கேக்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு பண்ணலை. பக்கத்திலே ப்ரொபசர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து அவரை பக்கத்திலே கூப்பிட்டா.
அவர்கிட்ட ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி அதிலே முதல் ரெண்டு வரியை சொன்னா.
''உனக்கு அடு த்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா?
.
''பெரியவா க்ஷமிக்கணும். எனக்கு தெரியலை''
இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்லே எல்லோருக்கும் கேட்டுடுத்து.
கூட்டத்திலே ஒருத்தருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து ப்ரொபசர் சங்கரநாராயணன் கிட்டே '' சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும் அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை ப்ரொபசர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட
''பெரியவா அந்த மீதி ரெண்டு வரி இது தான் என்று சொன்னவுடன்
''நான் கேட்ட போது தெரியாதுன்னியே''?
''ஆமாம் பெரியவா. கூட்டத்திலே யாரோ ஒருவருக்கு தெரியும்னு வந்து எங்கிட்ட சொன்னதைத்தான் பெரியவா கிட்ட சொன்னேன். ''
''அவரை இங்கே அழைச்சிண்டு வா''
இந்த நிகழ்ச்சியை சொன்ன சி.ஆர். சுவாமிநாதனை மேடையில் தன் கிட்ட கூப்பிட்டு பெரியவா
''நீ தான் அந்த ரெண்டு வரியை சொன்னதா?''
''ஆமாம் பெரியவா''
''எங்க படிச்சே?''
''மெட்ராஸ்லே பிரெசிடென்சி காலேஜ்லே''
''நான் அதைக் கேக்கலே. இந்த ஸ்லோகத்தை எங்கே படிச்சே?''
''எங்க தாத்தா சொல்லிகொடுத்தது சின்ன வயசுலே''
''எந்த வூர் நீ, உங்க தாத்தா யார்?''
சுவாமிநாதன் விருத்தாந்தம் எல்லாம் சொன்னார்.
பெரியவா சுவாமிநாதன் பேசினது அத்தனையும் மைக் வழியா சகல ஜனங்களும் கேட்டிண்டு இருந்தா.
பெரியவா சொன்ன ஸ்லோகம் இது தான்
அர்த்தாதுரணாம் ந குருர் ந பந்து ,
க்ஷுதாதுராணாம் ந ருசிக்கி ந பக்வம் ,
வித்யாதுராணாம் , ந சுகம் ந நித்ரா ,
காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா
பணமே லக்ஷியம் என்று தேடுபவனுக்கு குரு ஏது பந்துக்கள் ஏது?
பசி காதடைக்கிறவனுக்கு ருசியோ, பக்குவமோ அவசியமா?
படித்து முன்னேர முனைபவனுக்கு வசதியோ தூக்கமோ ரெண்டாம் பக்ஷம் தானே?
காமாந்தகாரனுக்கு பயமேது வேடகமேது?
தான் பிறகு பேசும்போது பெரியவா கேநோபநிஷதிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். எப்படி பார்வதி தேவி தேவர்களுக்கு பிரம்மத்தை உபதேசித்தால் என்றெல்லாம் விளக்கிவிட்டு
இப்போ பேசுறதுக்கு முன்னாலே ஒருத்தரை மேடைகிட்ட கூப்பிட்டு ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு அடிகளை சொல்லி பாக்கி தெரியுமா என்றதற்கு தெரியும் என்றார். எங்கே தெரிஞ்சுண்டே என்று கேட்டதற்கு,சின்ன வயசிலே தாத்தா வீட்டிலே சொல்லிக்கொடுத்தார் என்றார். எனக்கு அவா குடும்பத்தை தெரியும்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிகிறது?
நான் எதுக்கு இதை பெரிசா எடுத்து சொல்றேன்னா, இதெல்லாம் வீட்டிலே பெரியவா கிட்டே தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயோ, காலேஜ்லேயோ சொல்லித்தரமாட்டா. சேர்ந்து ஒண்ணா வாழற குடும்ப வாழ்க்கையிலே இது ஒரு பெரிய லாபம் என்பதைபுரிந்து கொள்ள உதவும்.
தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம்
சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது
— withGanesan Malayappan and Thillai Kaaliamman Vaithiyanathan.ஸ்ரீ சி. ஆர். சுவாமிநாதன் - மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர் அவர் சொன்னதிலிருந்து:

"I and my father are one"
மாற்று மதத்தினரையும் மதித்த மகா பெரியவா.
இன்று கிறிஸ்துமஸ் 25-12-2013.
நினைவு கூர்ந்தவர் : எஸ் சீதாராமன், .
மஹாபெரியவாள் ஆந்திரப் பிரதேசத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சமயம்.
புகழ் பெற்ற தத்துவமேதையும், பெரியவாளிடம் எல்லையற்ற பக்தி கொண்டிருந்தவருமான டாக்டர் டி.எம்.பி.மஹாதேவன் அவர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவருடன் தரிசனத்துக்கு வந்திருந்தார். அந்தப் பாதிரியார், ஜப்பான் நாட்டில் தங்கி ஜென் புத்திஸம் (புத்தமதத்தில் ஜென் என்ற ஒரு பிரிவு) பற்றி நன்றாகக் கற்றறிந்தவர். சென்னைப் பல்கழைக்கழகத்தில், ’ஜென் புத்தமதமும் அத்வைதமும்’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.
அந்த ஜெர்மானியர் வயது முதிர்ந்தவர்; கிறிஸ்தவப் பிரசாரத்துக்காக ஜப்பானிலேயே வாழ்நாளைக் கழித்தவர்.
பெரியவாளுடன் அவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போதே, இஸ்ரேல் நாட்டு அமைச்சர் ஒருவரும், அவருடைய செயலாளரான ஒரு பெண்மணியும் தரிசனத்துக்கு வந்து, பேச்சில் கலந்து கொண்டார்கள்.
பெரியவாள், அந்தப் பாதிரியாரிடம், அவர் நிகழ்த்திய சொற்பொழிவின் சாராம்சத்தைப் பற்றி வினவினார்கள். டாக்டர் மஹாதேவன் மொழிபெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.
“பைபிளில், I and my father are one என்று கிறிஸ்து சொல்கிறாரே, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறார்கள்?” என்று பெரியவாள் கேட்டார்கள்.
பாதிரியார், பல சமய தத்துவங்களையும் பற்றித் தெரிந்தவர் என்பதால், பெரியவாளுடைய கேள்வியின் உட்கருத்தை உடனே புரிந்து கொண்டார்.
”இது அத்வைதத்துக்குச் சமமானதுதான். நீங்கள் சொல்வது சரி. ஆனால், கிறிஸ்தவ மதம் இந்த வாக்கியத்தைத் தாங்கள் கூறிய கருத்தில் ஒத்துக் கொள்ளவில்லை. கிறிஸ்தவர்கள் அத்வைத தத்துவத்தை வேறுவிதமாகச் சொன்னாலும்கூட நேரிடையாக ஏற்றுக் கொள்வதில்லை.”
அப்போது இஸ்ரேல் அமைச்சர் ஒரு கேள்வி கேட்டார்: “Self-centred என்றால் என்ன?”
“இதற்கு இரண்டு விதமாக அர்த்தம் கூறலாம்” என்றார் டாக்டர் மஹாதேவன். “ஒன்று : Selfish (சுயநலம்) மற்றொன்று: Centered in the Self (ஆன்மாவில் லயித்திருப்பது). இவற்றில் தாங்கள் எதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?”
“இரண்டாவதாகச் சொன்னீர்களே, அதைப்பற்றித் தான் கேட்கிறேன்”.
சில நிமிஷ இடைவெளி. பெரியவாள் சொன்னார்கள் : “நாம், நமக்குள்ளே இருக்கும் பேரொளியில் நம்மை உட்படுத்திக் கொள்ளுதல்.”
செயலாளப் பெண்மணி மெல்லக் கேட்டார்: “இது First-sinக்குச் சமம் அல்லவா?”
பாதிரியார் சூழ்நிலை தனக்கு எதிராகச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்ததும், மனத்திற்குள் கொஞ்சம் வெம்மை அடைந்தார்.
“இந்தப் பெண்மணிக்கு நிறையக் குழப்பம். இவரும் Jesuit தான். ஆனால், இவர் மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கிறார். இன்னும் ரொம்ப உயரத்துக்குப் போக வேணும். மேலே போய்விட்டால், இதைப்பற்றிய சர்ச்சையெல்லாம் வராது. ஆனால், மேலே செல்வதற்கு நிறையப் பயிற்சி செய்ய வேண்டும். மேல்நிலையை அடைந்தவுடன் அப்யாசம் என்ற ஏணியை உதைத்துக் கீழே தள்ளி விடலாம்.”
பெரியவாள் : அந்த ஏணியை உதைத்துத் தள்ள வேண்டாமே? அது, அப்படியே இருக்கலாம்; மேலே வர முயற்சிக்கும் வேறு ஒருவருக்குப் பயன்படும், இல்லையா? (ஆன்மிக முன்னேற்றத்துக்கு, சனாதன தர்மத்தில் விதித்துள்ள நித்திய கர்மாக்கள், சமயானுஷ்டானங்கள் தான் ஏணி, அதை உதைத்துத் தள்ளி விடக்கூடாது என்றால் நித்திய கர்மாக்கள் அவசியம் செய்யப்பட வேண்டும் என்பது பெரியவாளின் அடிமனத்தில் இருந்த உள்நோக்கம்.)
சாதனைகளின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறியதைக் கேட்டதும், வெளிநாட்டுக்காரர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
பெரியவாளின் தெளிவான, அவரவர் பழக்கவழக்கத்தை அங்கீகரிக்கும் விசால மனத்தை, தொலை நோக்குப் பார்வையை உணர்ந்து மனமுருகிப் போனார்கள்.
வந்திருந்தவர்கள் வெவ்வேறான தத்துவக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள். ஆனால், பெரியவாள் அவர்கள் எல்லோரையும் தம் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்கள்!
அத்வைதம், ஆழங்காண முடியாத, எல்லைகாணமுடியாத, எவ்வளவு சுவைத்தாலும் திகட்டாத அமுதசாகரம். மஹாபெரியவாள் அந்தப் பெருங்கடலிலேயே எப்போதும் திளைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை அன்றைய உரையாடலைக் கேட்டவர்கள் எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.வாதங்கள் ஒருவாறு சமாதானமாக முடிந்தன.பாதிரியார், பெரியவாளிடம் ஆசி வேண்டி நின்றார்.
“நீங்கள் உங்கள் வழியிலேயே போகலாம். அது உங்களை மேலே கொண்டு செல்லும்” என்று கூறினார்கள் பெரியவாள்.
செயலாளரான பெண்மணிக்குக் கண்களில் நீர் தளும்பியது. “தெய்வ சன்னிதானத்தை விட்டுப் போக வேண்டியிருக்கிறதே!” தன்னால் முடிந்தபடி வந்தனம் செய்தார். அவளுக்குப் பிரத்யேக ஆசீர்வாதமாக, கல்கண்டுப் பிரசாதம் அளித்தார்கள் பெரியவாள். இஸ்ரேல் அமைச்சருக்குப் பழங்கள் கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

“இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…”
நன்றி;பால ஹனுமான். & தீபம் இதழ்
சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை பூஜையறையில் வைக்க வேண்டும். பழங்கள் கெட்டுவிட்டால், ஏதாவது மரத்தினடியிலோ ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளிலோ போட்டுவிட வேண்டும். ஜூஸ் செய்தோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடக்கூடாது’ என்று பதிலளித்திருக்கிறார். இந்தப் பதிலை படித்ததும், எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
என் தந்தைக்கு, ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள்தான் குலதெய்வமே. அவர் எங்கு முகாமிட்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது தரிசிக்காமல் இருக்கமாட்டார். (1952ஆம் ஆண்டு ‘வியாஸ பூஜை’ ஆடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் (‘திருமூலர்’ சாத்தனூர் என்பார்கள்) எங்கள் கிரஹத்தில்தான் நடைபெற்றது! அநேக தடவைகள் எங்கள் கிராமத்தில் மகா பெரியவர் முகாமிட்டிருந்தாலும், அந்த முறை மூன்று மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம்போல் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்தபோது, அவர் ஆந்திர மாநிலம் ‘ரேப்பள்ளி’யில் முகாமிட்டிருந்தார். ‘ரேப்பள்ளி’க்கு நானும் என் தந்தையுடன் சென்று ஸ்ரீபெரியவரையும், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜையையும் இரண்டு நாள் தங்கி தரிசனம் செய்தோம்.
மூன்றாவது நாள் என் தந்தை வந்தனம் செய்து, ‘அப்ப நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா…” என்று பெரியவாளிடம் உத்தரவுக்காக பணிந்து நின்றார். உடன் அவர், “ஊருக்குத்தானே நேரே போகிறாய்…” என்றார். “ஆமாம்” என்று என் தந்தை கூறவும், தன் கழுத்திலிருந்த எலுமிச்சம் பழ மாலையை கழட்டி என் தந்தையிடம் கொடுத்து, இன்னும் ஒரு மாலையையும் கொடுத்து, “இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” என்றார். என் தந்தை உடனே “பெரியவா உத்தரவு” என்றபடி மாலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் கூட தங்காமல் சாத்தனூர் வந்து ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு கொடுத்தார்! எலுமிச்சம் பழ மாலையைப் பார்க்கும் போதெல்லாம், பெரியவாளின் கருணை முகம்தான் பளிச்சிடும்!
- ஜி.நீலா, சென்னை
–நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்

"சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் கப்பலோட்டி"
வாயிலை ஒட்டியுள்ள அறையில் அமர்ந்திருந்த பெரியவா, கப்பல்களை பற்றிய விசாரணை செய்தார்......எத்தனை கப்பல் ஒன்றுக்கொன்று இடிக்காமல் போகின்றன, எதாவது மூழ்கி போயிடுத்தா என்று கேள்விகள் வேறு.
யாரை கேட்க்கிறார் என்று ஒருத்தருக்கும் புரியவில்லை. விசாகபட்டினம் போர்ட் ஆபீசர் ஒருவர் தன்னிடம்தான் பெரியவா கேட்கிறார் என்றுநினைத்தார். புரிபடாத
கேள்வியாக இருந்ததால், பெரியவாளிடமே தெளிவுபடுத்துமாறு கேட்டார்.
பெரியவா அழகாக சிரித்தார். "த்ளாயிரத்து முப்பத்தார்ல நான் வைசாக் வந்து போர்ட் எல்லாம் சுத்தி பாத்திருக்கேன். ஆனா,......இப்ப நான் கேள்விகேட்டுண்டு இருந்தது, ஒங்க கப்பலை பத்தி இல்லே......நான் பண்ணின கப்பல்களை பத்திதான் கேட்டுண்டு இருந்தேன். இங்கே சில பசங்கள் அழுதுண்டுஇருந்ததுகள். மழை பெய்யறதோன்னோ? அதனால காயிதத்துல அஞ்சாறு கப்பல் பண்ணி அதுகளுக்கு கொடுத்து, ரோட்ல ஜலம் ஓடிண்டிருக்கொன்னோ, அதுல விட்டு வெளையாட அனுப்பிச்சேன்....அந்த கப்பல்களோட "க்ஷேமலாபம்"தான் விசாரிசுண்டிருக்கேன். நீ என்னமா பதில்சொல்லுவே?"
சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் கப்பலோட்டி இப்படி ஒரு இனிய விதத்தில் கப்பல் தயாரிப்பாளராகி இருக்கிறார் !!!!!!!!

"மைத்ரீம் பஜத"-புதிய தகவல்.
கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான்.
எம்.எஸ்.அம்மாவுக்கு 'யுனைடட் நேஷன்ஸ்'ல பாட
வாய்ப்பு வந்தது.அவர் பெரியவாளிடம் தெரிவித்து
ஆசி வேண்டி நின்றார். அவரும் "இது உனக்கு மட்டும்
கிடைத்த கௌரவம் இல்லை; இந்திய மண்ணுக்கே
கிடைத்த பெருமை.வெற்றிக் கொடி நாட்டி வா!"
என்று ஆசி கூறி அனுப்பினார்.
அப்போதுதான் அது சர்வதேச அரங்கமாக இருப்பதால்
அங்கு பாட 'மைத்ரீம் பஜத' என்ற பாட்டை எழுதிக்
கொடுத்தார்.அது பெரியவா உபதேசப் பாடல்.பிரபல
இசை மேதை வஸந்த தேசாய் என்பவர் மெட்டமைத்துக்
கொடுத்தார்.
நியூயார்க்கில் போய் இறங்கியதும் சோதனை போல்
எம்.எஸ்.அம்மாவுக்குத் தொண்டை கட்டிக்கொண்டது.
சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி.வருத்தம்
தாங்காமல் பெரியவாளையே நினைத்துப் புலம்ப,
"தேசத்துக்கே பெரிய பெருமை என்று பாராட்டி,பாட்டும்
எழுதிக் கொடுத்துவிட்டு இது என்ன சோதனை?"
என்று ஏங்கினார் எம்.எஸ்.
கச்சேரி பண்ண வேண்டிய நாளும் வந்துவிட்டது.
அரங்கத்துக்கும் சென்றாகிவிட்டது. தொண்டை அடைப்பில்
எந்தவித மாற்றமும் இல்லை. "ஈசுவரன் விட்ட வழி" என்று
மேடை ஏறினார்.
ஸ்ருதி கூட்டப்பட்டது.கண்ணை மூடிக்கொண்டார். தன்னை
மறந்து பாடத் தொடங்கினார்.கடைசியில் அவர் 'மைத்ரீம்
பஜத' பாட சபையே STANDING OVATION செய்து கரவொலியால்
அதிர்ந்தது.அதைக் கேட்டுத்தான் அவருக்கு, "தான் பாடிக்
கொண்டுதான் இருந்தோம்" என்ற சுய உணர்வே வந்தது.
வாழ்நாள் இறுதிவரை இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர்
நினைத்தவுடன் அழுது விடுவார்.
"பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது"
என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக