செவ்வாய், 3 டிசம்பர், 2013

இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு

ராதே கிருஷ்ணா 03-12-2013



இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு 
  • இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகிறது ஏனென்றால் மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான். ரொம்ப வேதனையான விஷயம் அல்லவா?

    பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.

    சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.

    1 . அனால்ஜின் ( Analgin)
    பயன்பாடு - வலி நிவாரணி
    பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு

    2 . நிமிசுலைட் (Nimisulide)
    பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
    பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு

    3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine )
    பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
    பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

    4 . சிசாபிரைடு ( cisapride )
    பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து
    பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு

    5 . குயிநோடக்ளர் (quinodochlor )
    பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
    பக்க விளைவு - கண்பார்வை பாதிப்பு

    6 . பியுரசொளிடன் (Furazolidone )
    பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
    பக்க விளைவு – புற்றுநோய்

    7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
    பயன்பாடு - கிருமிகளை அழித்தல்
    பக்க விளைவு – புற்றுநோய்

    8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )
    பயன்பாடு - வலி நிவாரணி
    பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு

    9 . பைப்பரசின் ( Piperazine )
    பயன்பாடு - வயிற்றுப் புழுக்களை அழித்தல்
    பக்க விளைவு - நரம்புச் சிதைவு

    10 . பினப்தலின் (Phenophthalein )
    பயன்பாடு - மலமிலக்கி
    பக்க விளைவு – புற்றுநோய்

    சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா

    1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
    2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
    3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
    4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
    5 . பியுரசொளிடன் - Furoxone
    6 . பைப்பரசின் -Piperazine citrate
    7 . குயிநோடக்ளர் - Entero quinol

    இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இல்லாவிட்டால் குலதெய்வத்துக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் , மருத்துவர்களுமேதான்.

    ஒரு முக்கியமான மருந்து தடை செய்யப்பட்டதற்கான காரணம் வேறு ஒன்றும் இல்லை.

    G.S.R. No. 510 (E) dt 25-7-2005 (with effect from 25-7-2005)
    79. Valdecoxib and its formulations for human use.

    மேலே இருக்கும் இந்த மருந்தானது மிகச் சிறந்த வலி நிவாரணியாக கருதப்பட்டு மருந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது, நம்ம வியாபாரிகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? காதலை மையப்படுத்தி ஒரு சினிமா வெற்றி பெற்றால் போதும், உடனே வரிசையாக காதல் படமா எடுப்பார்கள் என்று அதேபோல் இந்த மருந்தை எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தன பின்புதான் தெரிந்தது. இதன் பக்க விளைவு இதைத் தொடர்ச்சியாக எடுத்துகொண்டால் இதயநோய் வரும் என்று வந்தது வினை, 2004 ம் ஆண்டு இந்த மருந்தை விற்பனை செய்ய கூடாது என்று தடை கூட வந்தது.

    ஆனால் மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்து விற்பனைக்கு வைத்துள்ளன என்ன செய்வதென்று முழிபிதுங்கி, தடைசெய்த 2004 ம் ஆண்டில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவரின் தந்தையிடம் 200 கோடி கொடுத்தன ஒரு ஆறு மாதம் விற்பனை செய்த சம்பாதித்தன மருந்து நிறுவனங்கள். மருந்தை உண்டவன் செத்தானா இருக்கிறானா என்று தெரியவில்லை.

    கொஞ்சம் சிந்தியுங்கள். உயிர் கொல்லி மருந்து உங்களுக்கு தேவை தானா?...சம்பத் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக