சனி, 7 டிசம்பர், 2013

சைதன்ய மகாப்ரபுவின் வரலாறு

ராதே கிருஷ்ணா 07-12-2013

சைதன்ய மகாப்ரபுவின் வரலாறு 



நம் நண்பர் ஹிந்து சிவா என்பவரின் ஆசைக்கு இணங்க சைதன்ய மகாப்ரபுவின் வரலாறு தமிழில் பதிய படுகிறது. சைதன்ய மகாப்ரபு கிருஷ்ணர் மற்றும் ராதையின் அவதாரம். அவர் அவதாரம் எடுக்க சில காரணங்கள். 1. கலி யுகத்தில் நாமசங்கீர்தனமே மோட்சத்தை அடைய ஒரே வழி என்று நமக்கு வழி காட்ட. 2. த்வாபர யுகத்தில் ராதை தன்னை பிரிந்து வாடியபோது எப்படி இருந்தால் என்று உணர, மற்றும் ராதை எதற்காக தன்னை காதல் செய்தால் என்று தெரிந்து கொள்ள. 3. முகலாயர் ஆட்சி காலத்தில் சனாதன தர்மத்தை கடை பிடிபவர்களை உத்தாரணம் செய்ய. பரித்ராணாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே|| நவத்வீபம் என்பது பெங்காலில் ஒரு கிராமம். அங்கே ஜெகநாத மிஸ்ரர் சசி தேவி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு பிறந்த முதல் எட்டு பெண் குழந்தைகளும் பிரசவத்திலேயே இறந்தது. பிறகு ஒன்பதாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விஸ்வரூபன் என்று பெயர் சூட்டினர். பிறகு அந்த குழந்தைக்கு உபநயனம் செய்து அத்வைதாசாரியார் என்பவரின் குருகுலத்தில் சேர்த்தனர். விஸ்வரூபன் பிறந்து பத்து வருடம் கழித்து சசி தேவி மறுமுறை கருவுற்றாள். பங்குனி மாதத்தில் நிறைந்த பௌர்ணமியில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் சுக பிரசவம் நடந்தது. அந்த குழந்தை பிறக்கும் போதே மிகவும் தேஜச்வியாக இருந்தது. நவத்வீப வாசிகள் அனைவரும் வந்து குழந்தையை பார்த்து மகிழ்தனர். குழந்தைக்கு “விஸ்வம்பரன்” என்ற பெயர் வைத்தனர். மற்றும் கௌடியன், நிமாய் என்றும் பெயர் வைத்தனர். இந்த நிமாய் தான் கிருஷ்ணா சைதன்யராக போகிறார். நிமாய் அழுதால் சசி மாதா தன் மடியில் போட்டு கிருஷ்ணா ராம கோவிந்தா ராம கிருஷ்ணா கோவிந்தா என்று பாடுவாள். மற்ற குழந்தைள் தூங்கிவிடும் ஆனால் நிமாய் மட்டும் கையை தட்டி கொண்டு பஜனை செய்வது போல ஆடுவான். ஒரு நாள் நிமாய் காணவில்லை என்று சசி மாதா தேடினாள். விறகு வைக்கும் இடதில் நிமாய் ஒரு பாம்புடன் விளையாடி கொண்டு இருந்தான். இதை பார்த்த சசி மாதா மயங்கி கிழே விழுந்தாள். கண்ணன் காளிய நர்த்தனம் செய்தது போலே நிமாய் செய்தது ஆச்சர்யம். இன்னொரு நாள் நிமாய் இரண்டு திருடர்களால் கடத்தப்பட்டான். திருடியவர்கள் நிமாயின் அழகில் மயங்கி நிமாயிடம் இருந்து எதையும் கழட்டாமல் தனது திருட்டு தொழிலையே கைவிட்டனர். பின் வரபோகும் காலத்தில் இதே நிமாய் கிருஷ்ணா சைதன்யராக மாறிய பின் பல அயோக்கியர்களை சாதுக்களாக மாற்ற போவதை இப்பதே சூட்சமமாக காட்டுகிறார். ஒருநாள் ஜெகநாத மிஸ்ரர் ஒரு வழி போக்கரை தனது வீட்டுக்கு அழைத்து உணவு படைத்தார். வழிபோக்கர் விஷ்ணுவுக்கு தனது உணவை படைக்க கண்ணை மூடி பிரார்தனை செய்து முடிபதற்குள் நிமாய் அதை தின்ன தொடங்கிவிட்டான். இதனால் அவர் அந்த உணவை சாப்பிட வில்லை. அன்று இரவு விஷ்ணு அவர் கனவில் வந்து “ என்னை சாப்பிட அழைத்தாய் வந்தால் ஏன் என்னை திட்டினாய்? நான் வேறு நிமாய் வேறு அல்ல என்று கூறி மறைந்தார்”. இதை கண்ட அந்த வழிபோக்கர் அடுத்தநாள் நிமாய் காலில் விழுந்தார். விஸ்வரூபன் தனது இல்வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் வீட்டிற்கு தெரியாமல் சந்யாசம் வாங்க சென்று விட்டார். இது தெரிந்த ஜெகநாத மிஸ்ரர் அந்த வாட்டதிலேயே உயிர் இழந்தார். இதற்க்கு இடையில் நிமாயிக்கு உபநயனம் முடிந்து தனது பனிரெண்டு வயதில் கங்காதாஸ் என்பவரின் குருகுலத்தில் வ்யகரம் முடித்தார். விஸ்வரூபன் சந்யாசம் சென்றதாள் பயந்து போன சசி மாதா நிமாய் இனி படிக்க வேண்டாம் என முடிவு செய்தாள். நிமாய் வற்புறுத்தலுக்கு இணங்க சசி மாதா படிக்க அனுமதித்தாள். இனி வாசுதேவ சார்வபூமர் என்பவரின் குருகுலத்தில் நிமாய் ஞானசாஸ்த்ரம் படிக்க தொடங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக