சனி, 28 டிசம்பர், 2013

நிலவேம்பு கஷாயம் !

ராதே கிருஷ்ணா 29-12-2013நிலவேம்பு கஷாயம் !From the album: Timeline Photos
By Pasumai Vikatan
நிலவேம்பு கஷாயம் !

கஷாயம் தயாரிக்கும் முறை: ஒரு ஸ்பூன் பொடியில் 200 மி.லி. தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். நீர் 50 மி.லி.. அளவாக வற்றியவுடன் இறக்கி, வடிகட்டவும். மிதமான சூட்டில் பருகவேண்டும்.

எத்தனை வேளை, யாரெல்லாம் சாப்பிடலாம்?
வாரம் இருமுறை (சனிக்கிழமை / புதன்கிழமை) இந்த கஷாயத்தை செய்து சாப்பிடவேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரம் இருமுறை ஆண்டு முழுவதும் குடித்துவர, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
காய்ச்சல் இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 4 முறை குடிக்கலாம்.

பலன்கள்:
* மூட்டு வலி, உடல் வலி வராது.
* சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
* மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, காய்ச்சல் மற்றும் இதரப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


குறிப்புகள்:
* கஷாயத்தை செய்து வைத்து நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிடவேண்டும். இல்லையென்றால் பலன் தராது.
* 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.
* மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி மழலைகளுக்கு கொடுக்கக்கூடாது.

Status Update
By ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக