செவ்வாய், 31 டிசம்பர், 2013

பிரபுகண்ணன் முத்தழகன்

ராதே கிருஷ்ணா 31-12-2013


பிரபுகண்ணன் முத்தழகன்




  • via Radhika Narasimhan   (Remove)
    Status Update
    By பிரபுகண்ணன் முத்தழகன்
    உங்கள் மகன் ஒரு காம வெறி பிடித்த மிருகமாக மாற வேண்டாம் என்று நினைத்தாலோ ,
    உங்கள் மகள் யாரோடும் ஓடிப் போக கூடாது என்று நினைத்தாலோ
    உங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்தாலோ

    நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் பெரிய வேலைகள் அல்ல. கீழ்க்கண்ட சிறு விடயங்களை செய்தாலே போதும். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் குடும்ப அழிவை யாராலும் தடுக்க முடியாது.

    1. வீட்டில் தொலைக்காட்சியை ஒரு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தாதீர்கள்.

    2. அதுவும் "உலக அழகி போட்டிகள்" "சொல்வதெல்லாம் உண்மை" போன்ற நிகழ்ச்சிகளை அறவே தவிருங்கள். இவை உங்களை மன நோயாளியாக்கும். இது போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி யாராவது பேசினால் அவர்களிடம் இதைப் பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை என சொல்லி விடுங்கள்.

    3. வீட்டில் சிறு விளையாட்டுக்களை விளையாடுங்கள். பிள்ளைகளுக்கும் படம் வரைவது , கூடை செய்வது போன்ற சிறிய செயல்களை கற்றுக் கொடுங்கள்.

    4. சிறு வயது முதல் உடல் அழகு பற்றி பிள்ளைகளிடம் பேசுவதை தவிருங்கள். நல்ல குணமும், நேர்மையும் , பாசமுமே பெரிய அழகு என்பதை உணரும் வண்ணம் அவர்களிடம் பேசுங்கள்.

    5. உறவினர்களிடம் நல்லபடியாக பழகுங்கள். எல்ல்லா சொந்தக்காரனும் கெட்டவன் தான் போன்ற எதிர் மறையான சிந்தனைகளை தவிருங்கள்.

    6. பிள்ளைகளை குறைந்த அளவு இரண்டு மணி நேரம் ஏதாவது உடல் சம்பந்தப்பட்ட பயிற்சி கொடுங்கள். கிராமத்தில் இருப்பவர்கள் விவசாயத்தில் ஈடுபடுத்துங்கள்.

    7. பிள்ளைகளை அளவுக்கு அதிகமான மன அழுத்தம் கொடுக்காதீர்கள். வீட்டில் பொருளாதார பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களிடம் அதை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் எப்போதும் துணிச்சலுடன் இருக்க பழக்குங்கள்.

    8. உங்களிடம் மது , புகைப் பிடிக்கும் பழக்கங்கள் இருப்பதை தவிருங்கள்.

    9. தேவை இல்லாமல் உங்கள் குடும்பத்தில் யாரும் பரிதாமம் காட்டுவதை எற்று கொள்ளாதீர்கள்.

    10. சினிமா என்பது ஒரு சாதாரண விடயம் என்பதை சிறு வயது முதல் உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள்.

    11. பிள்ளைகளை விடுதியில் தங்கிப் படிக்க வைப்பதை முடிந்த அளவு தவிருங்கள்.

    12. கல்வியை விட ஒழுக்கம் முக்கியம் என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்து சொல்லிக் கொடுங்கள்.

    13. ஜூனியர் விகடன், குமுதம் , நக்கீரன் பொன்ற கேவலமான பாலியல் உணர்வை தூண்டும் பத்திரிக்கைகளை வீட்டில் அனுமதிக்காதீர்கள். இவை சரோஜா தேவி புத்தகத்தை விட மனதை மிருகம் ஆக்கும் சக்தி படித்தவை.

    # உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் காசு பணத்தில் இல்லை. அது வளர்ப்பில் இருக்கிறது. அதை புரிந்து கொள்ளுங்கள்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக