புதன், 18 டிசம்பர், 2013

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி

ராதே கிருஷ்ணா 18-12-2013

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி

Hinduism's photo.           Status Update
By Hinduism
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி
( இந்த ஸ்லோகமானது காஞ்சி காமகோடி பீடாதிபதி புது பெரியவாளான ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியதாகும்).

1. அபாரகருணா ஸிந்தும்
ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீசந்த்ரசேகர குரும்
ப்ரணமாமி முதாந்வஹம்

2. குருவார ஸபாத்வாரா
சாஸ்தா ஸம்ரக்ஷணம் க்ருதம்
அநூராதா ஸபாத்வாரா
வேத ஸம்ரக்ஷணம் க்ருதம்

3. மார்கசீர்ஷ மாஸவரே
ஸ்தோத்ரபாட ப்ரசாரணம்
வேதபாஷ்ய ப்ரசாரார்த்தம்
ரத்நோத்ஸவ நிதி: க்ருத:

4. கர்மகாண்ட ப்ரசாரார்த்தம்
வேததர்மஸபா க்ருதா
வேதாந்தார்த்த ப்ரசாரார்த்தம்
வித்யாரண்ய நிதி: க்ருத:

5. சிலாலேக ப்ரசாரார்த்தம்
உட்டங்கித நிதி: க்ருத:
கோப்ராஹ்மண ஹிதார்த்தாய
வேதரக்ஷண கோநிதி:

6. கோசாலா பாடசாலா ச
குருபிஸ் தத்ர நிர்மிதே
பாலிகாநாம் விவாஹார்த்தம்
கந்யாதன நிதி: க்ருத:

7. தேவார்ச்சகாநாம் ஸாஹ்யார்த்தம்
கச்சிமூதூர் நிதி: க்ருத:
பாலாவ்ருத்தாதுராணாம் ச
வ்யவஸ்த்தா பரிபாலனே

8. அநாதப்ரேத ஸம்ஸ்காராத்
அச்வமேத பலம் லபேத்
இதி வாக்யாநுஸாரேண
வ்யவஸ்த்தா தத்ர கல்பிதா

9. யத்ர ஸ்ரீ பகவத்பாதை:
க்ஷேத்ர பர்யடனம் க்ருதம்
தத்ர தேஷாம் சிலாமூர்த்திம்
ப்ரதிஷ்ட்டாப்ய சுபம் க்ருதம்

10. பக்தவாஜிசாபி ஸித்த்யர்த்தம்
நாம தாரக லேகனம்
ராஜதம் ச ரதம் க்ருத்வா
காமாக்ஷ்யா: பரிவாஹணம்

11. காமாக்ஷ்யம்பா விமாநஸ்ய
ஸ்வர்ணபத்ரைஸ் ஸமாவ்ருதி:
ததைவோத்ஸவ காமாக்ஷயா:
ஸ்வர்ணவர்ம பரிஷ்க்ருதி:

12. லலிதாநாம ஸாஹஸ்ர
ஸ்வர்ணமாலா விராஜதே
ஸ்ரீதேவ்யா: பர்வகாலேஷு
ஸுவர்ண ரத சாஸனம்

13. சிதம்பர நடேசஸ்ய
சுவைடூர்ய கிரீடகம்
கரே-அபயப்ரதே பாதே
குஞ்சிதே ரத்னபூஷணம்

14. முஷ்டி தண்டுல தானேன
தரித்ராணாம் ச போஜனம்
ருக்ணாலயே பகவத:
ப்ரஸாத விநியோஜநம்

15. லோகக்ஷேம ஹிதார்த்தாய
குருபிர் பஹுதத் க்ருதாம்
ஸ்மரன் தத்வந்தனம் குர்வன்
ஜன்ம ஸாபல்யமாப்னுயாத்.

ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர...அன்பினால் திருத்துங்கள்
-----------------------------------

* அன்பு செலுத்தாமல் வாழ்வதில் மகிழ்ச்சியே இல்லை. அன்பில் இருக்கும் ஆனந்தம் போல, வேறெதிலும் இல்லை.
* அன்பினால் ஒருவரைத் திருத்துவது தான் நிலைக்கும். கண்டித்துத் திருத்துவதில் பெருமை இல்லை.
* உடல் சுகத்திற்காகவும், மன சந்தோஷத்திற்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வது, பேசுவது, உண்பது என்று இருக்கக்கூடாது. புத்தியைப் பயன்படுத்தி மனதைக் கட்டுப்படுத்துங்கள்.
* இன்று நாம் அனுபவிக்கும் சுகம், துக்கம் எல்லாமே நாம் முற்பிறவியில் செய்த நன்மைக்கும் தீமைக்கும் கிடைத்த பலன் தான்.
* கடவுள் இல்லை என்று நிந்தித்தாலும் அதுவும் கடவுளைச் சிந்திப்பது போலத் தான். அதனால் தான், அவர் தன்னை நிந்தித்தவர்க்கும் தரிசனம் தந்து விடுகிறார்.
* கடவுளிடம் புதிதாக நாம் ஒன்றும் கேட்டுப் பெற வேண்டியதில்லை. நம்முடைய உண்மையான நிலையே ஆனந்தமயம் தான். அதை மனதால் மறைத்து கொண்டு நாம் தான் துக்கப்படுகிறோம்.

- காஞ்சிப்பெரியவர்Status Update
By Kalyanasundaram Ramachandaran
சம்ஸ்கிருதத்தில் மாத்ருகா அக்ஷரங்கள் 51. உலகில் இருக்கும் சகல மந்த்ரங்களுக்கும், வேத-வேதாந்த சாஸ்திரங்களுக்கும் தாய் போன்றவை இந்த 51 அக்ஷரங்கள். அதனால்தான் இவற்றிற்கு மாத்ருகா அக்ஷரங்கள் என்று பெயரே. இவை எந்த அக்ஷரங்கள் என்பதெல்லாம் சம்ஸ்கிருதம் படித்தால் தெரிந்து கொள்ளலாம். முன்னர் சொன்ன 51 பீடங்கள் இந்த 51 அக்ஷரங்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றியது என்றும், இதனாலேயே ஆதி பீஜாக்ஷர பீடங்கள் என்றும் வழங்கப்படுவதும் உண்டு.

அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு. இந்த 51 அக்ஷரங்களும் நம் உடலில் ஆறாதாரங்களில் (ஆறு ஆதாரங்கள்) இருக்கின்றன. இவை முறையே, மூலாதாரத்தில் 4, சுவாதிஷ்டானத்தில் 6, மணிபூரகத்தில் 10, அநாகதத்தில் 12, விசுக்தியில் 16, ஆக்ஞையில் 2, நெற்றிக் கண் பகுதியில் சூக்ஷ்மமாக 1, ஆக மொத்தம் 51 பீடங்கள்.

ஆதிசங்கரர் மந்த்ர சாஸ்திரங்களில் உள்ள விஷயங்களை தனது 'பிரபஞ்ச சாரம்' என்னும் நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த நூலின் காப்பு செய்யுளில் பின்வருமாறு கூறியுள்ளார். "அகர முதலான உயிரெழுத்துக்களும், 'க' வர்க்கம், 'ச' வர்க்கம், 'ட' வர்க்கம், 'த' வர்க்கம்,'ப' வர்க்கம்,'ய' வர்க்கம் ஆகிய ஏழு எழுத்து வர்க்கங்களையும் தனது கை, வாய், பாதம், இடை, இதயம் ஆகிய அவயவங்களாக கொண்டு உலகனைத்துக்கும் ஈஸ்வரியாக உள்ள அம்பிகை நமக்கு மனத்தூய்மை அளிக்கட்டும்" என்கிறார். மஹாகவி காளிதாசனும் அம்பிகையை கூறும் போது 'அக்ஷர சுந்தரி' என்றே வர்ணித்திருக்கிறாராம். அருணகிரிநாதர் இந்த 51 அக்ஷர மகிமை உணர்ந்தே கந்தரனுபூதியை 51 பாடல்களாக எழுதியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஜப-தபங்கள், வழிபாடுகள் ஆரம்பிக்கும்முன் சில நியாஸங்கள் உண்டு. அதில் முக்கியமானது மாத்ருகா நியாஸம், இது ஜபம் எடுத்துக் கொள்ளும் சமயம் குருவானவர் த்ரிபுர-ஸித்தாந்த தத்துவங்களை சுருக்கமாமச் சொல்லி, பின்னர் மாத்ருகா நியாஸம் செய்வித்தபின் மந்த்ரம் உபதேசிக்கப்படும்.

மாத்ருகா நியாஸம் என்பது 51 அக்ஷரங்களையும் தனது உடலின் பல பாகங்களிலும் ஆவிர்பவித்துக் கொள்வது. இதன் காரணமாக அட்சர ரூபமாக
உள்ள அம்பிகையின் வடிவமாகவே வழிபடுபவரும் ஆகிவிடுகிறார். மாத்ருகா நியாஸம் இரு விதமாக செய்ய சொல்கிறது. பஹிர்-மாத்ருகா, அதாவது வெளியில் நம் அங்கங்களைத் தொட்டும், அந்தர் மாத்ருகா என்பதில் உடலுக்குள் இருக்கும் ஆதார சக்ரங்களை மனதால் நினைத்து அதன் இதழ்களிலும் நியாஸம் செய்வது.

மாத்ருகா நியாஸத்தின் தியான ஸ்லோகம் அன்னையை பின்வருமாறு வர்ணிக்கிறது. ஐம்பது அக்ஷரங்களையும் முகமாகவும், கைகால்களாகவும், வயிறு, மார்பு போன்ற பாகங்களாகவும் கொண்டு விளங்குபவளும், சந்திரன் போலும் மல்லிகை போலும் வெண்மை நிறம் கொண்டவளும், அக்ஷ-மாலை, அமிருத-கலசம், புஸ்தகம், வரமுத்திரை ஆகியவற்றை கரங்களில் கொண்டவளும், முக்கண்ணுடையவளும், நிர்மல வடிவும், தாமரையில் வீற்றிருப்பவளுமான பாரதீ தேவியை நமஸ்கரிக்கிறேன்.

இவ்வாறாக சக்தி பீடங்கள் என்பவை இன்றைய பாரதம்-நேபாளம் முழுவதிலும் மட்டுமல்ல, நமது உடலிலும் அன்னை வசிக்கிறாள். அவளை நம்முள்ளேயே காண முற்படவேண்டும். சக்தி பீட கோவில்களிலாகட்டும் அல்லது நமக்குள்ளே இருக்கும் தேவியாகட்டும், அவளருளன்றி உணர முடியாது. அவளை உணரவும் அவளையே இறைஞ்சுவோம்.
காஞ்சி மகாபெரியவர்

நடமாடும் தெய்வம் என பக்தர்களால் போற்றப்பட்ட காஞ்சி மகாபெரியவர், அன்றைய தினம் நித்யபூஜைகளை முடித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பலரும் அவரவர் குறைகளைக்கூறி, அதற்குரிய தீர்வை அருளுமாறு வேண்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஒருபெண் மட்டும் அழுது கொண்டிருந்தாள். அவளது நெற்றியில் திலகமில்லை. தலையில் பூ வைக்கவில்லை. தோற்றமோ இளமையாயிருந்தது. அவளைத் தன்முன் அழைத்து வரும்படி, சீடர்களுக்கு உத்தரவிட்டார். கனிவுடன்,""என்னம்மா உன் பிரச்னை! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? என்றார்.""ஐயா! என் கணவர் வெளிமாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. அவரது உடலை இங்கு கொண்டு வருவது, கொண்டு வந்தாலும் இறுதிக்காரியங்களை எப்படி செய்வது என தெரியவில்லை, என்று கதறினாள்.

முக்காலமும் உணர்ந்த முனிவரான மகாபெரியவர், இதற்கு பதிலேதும் சொல்லவிலை. அவளை நோக்கி நான்கு விரல்களை மட்டும் நீட்டினார். அவளை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி சீடர்களிடம் கூறினார். அந்தப்பெண்ணுக்கு ஏதும் புரியவில்லை. தன்னுடன் வந்த சீடர்களிடம், ""பெரியவர் என்னிடம் நான்கு விரல்களைக் காட்டினாரே! அதன் பொருள் புரியவில்லையே! என்று கேட்டாள்.

""அம்மா! இன்னும் நான்கு நாட்கள் நீங்கள் எந்தக் "காரியமும் செய்ய வேண்டாம். பொறுமையாக இருங்கள், என்றனர் அவர்கள். அவளும் வீடு திரும்பி விட்டாள்.

என்ன ஆச்சரியம்! மூன்றாம் நாள் மாலையில் அவளது கணவர் வீடு வந்து சேர்ந்தார். அவளோ, ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விட்டாள். அவர் கையாலேயே பொட்டு வைக்கச்சொல்லி, பூச்சூடினாள். மறுநாள் காலையில், ஆனந்தக்கண்ணீர் பொங்க, கணவருடன் மகாபெரியவர் முன் வந்து நின்றாள்.

""தீர்க்க சுமங்கலியாக இரு! என வாழ்த்திய பெரியவர், அவர்களுக்கு பிரசாதம் வழங்கினார். தன் ஞானத்தால், ஒரு சுமங்கலியின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெரியவரின் கருணையை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

அன்று மட்டுமல்ல!

இன்றும் அவரை நம்பி வணங்குவோரின் குறை களைத் தீர்த்து கருணையுடன் அருள்கிறார்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர....

உறையூரில் தாமரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக