தமிழில் மகாபாரத்தை எழுதிய நல்லாப்பிள்ளை, 20 வயது வரை அடிப்படை கல்வியறிவு கூட பெறவில்லை. இவரது மனைவி கூட இவரது கல்வியின்மை பற்றி கேலி செய்திருக்கிறாள். இதனால், படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் தங்கி கற்றார். ஓயாமல் ஒழியாமல் இரவு பகலாகப் படித்தார். அரிச்சுவடியில் இருந்து தொல்காப்பியம் வரை பாடங்களை நடத்தப்பட்டன. பாடம் கேட்பதில் இருந்த ஆர்வத்தால், அன்றாட உணவைக் கூட நல்லாப்பிள்ளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 4 ஆண்டுகள் கழிந்தன. ஆசிரியர் விரும்பும் சிறந்த மாணவராக நடந்து, நல்ல புலமை பெற்றார்.
ஒருநாள் மதியம் நல்லாப்பிள்ளை சாப்பிட அமர்ந்தார். தயிர்சாதத்திற்கு துவையல் எடுத்துக் கொண்டவர், துவையல் கசக்கிறதே! என்று தன்னையும் மறந்து கத்திவிட்டார். ஆசிரியரும் மகிழ்ச்சியில் நல்லாப்பிள்ளையை அணைத்துக் கொண்டார்.தம்பி! நீ வீட்டுக்குப் புறப்படும் நேரம் வந்து விட்டது. இதுவரை பாடத்தில் கவனத்தைச் செலுத்தினாய். அதனால், நாள்தோறும் சாப்பிடும் வேப்பிலைத் துவையலின் கசப்பு கூட உனக்குத் தெரியவில்லை. பாடங்களை முழுமையாகக் கற்றுக் கொண்டுவிட்டாய். இப்போது தான், புறவுலக சிந்தனை உனக்கு வந்திருக்கிறது. அதனால், துவையலை சாப்பிடமுடியாமல் கசப்பு தெரிகிறது, என்றார். நல்லாப்பிள்ளைக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பாடத்தில் இருந்த கவனத்தில், அதுவரை தான் சாப்பிட்டது வேப்பிலை துவையல் என்பது கூட தெரியாமல் இருந்ததைப் புரிந்து கொண்டார். எதையும் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதே மாணவர்களுக்கு இக்கதை உணர்த்தும் கருத்து.
முழுசாக எதையும் நம்பு!
பக்தி கதைகள்> முழுசாக எதையும் நம்பு! |
பக்தி கதைகள் |
|
|
குமாரிலபட்டர் என்பவர் வேதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். குமாரிலம், பாட்டப்பிரதீபம் ஆகிய நூல்களை எழுதியவர். மண்டனமிசிரர் என்ற இவருடைய சீடர் மிகவும் புகழ்பெற்றவர். பட்டர் காலத்தில், வேதத்தை புத்தமதத்தினர் குறை கூறி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென அவர் எண்ணம் கொண்டார். "புத்தமதக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமல்,எப்படி அதனைக் கண்டிப்பது? என்ற எண்ணம் மேலிட்டது. அதனால், ஒரு மாணவனைப் போல வேடமிட்டுக் கொண்டு புத்த குருகுலத்தில் சீடனாகச் சேர்ந்தார். குருமார்களிடம் நற்பெயர் பெற்றார். குருமார்களில் ஒருவர் ததாகதர்.
ஒருநாள் ததாகதர், பாடம் நடத்தும்போது வேதங்களையும், கடவுளையும் கடுமையாக நிந்தித்தார். அவருடைய வார்த்தைகள் அம்பைப் போல பட்டரின் மனதைக் குத்தியது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. கண்ணீர் சிந்தும் குமாரிலபட்டர் ஒரு வேதியர் என்பதை ததாகதர் கண்டுபிடித்து விட்டார். அவரைக் கொல்ல எழுந்தார். ஐந்தாவது மாடியில் இருந்து அவரைக் கீழே தள்ளிவிட்டார். விழும்போது, ""வேதம் உண்மையானால் நான் பிழைப்பேன் என்று இருகரங்களையும் குவித்தார் பட்டர். கீழே விழுந்தும் பிழைத்துக் கொண்டார். ஆனால், ஒரு கண்ணில் மட்டும் பார்வை போனது.பார்வை இழந்ததற்கான காரணத்தை சிந்தித்தார். "வேதம் உண்மை என்று ஆணித்தரமாக நம்பாமல், அரைகுறையாக "வேதம் உண்மையானால் என்று சொன்ன காரணத்தால் தான் பார்வை இழந்ததை அறிந்து கொண்டார்.
|
|
கர்வம் அழியட்டும்!
பக்தி கதைகள்> கர்வம் அழியட்டும்! |
பக்தி கதைகள் |
|
|
நர்மதை நதிக்கரையில் அஸ்வமேத யாகம் செய்து கொண்டுஇருந்தான் மகாபலி சக்கரவர்த்தி. அவனது நோக்கம் இந்திர பதவியை அடைவது! நர்மதை நதி மிகவும் புண்ணியமானது. இந்த நதியை யாராவது பார்த்திருந்தாலும் சரி... பார்க்காவிட்டாலும் சரி...இரவில் படுக்கச் செல்லும் போதும், காலையில் எழும்போதும் நர்மதா என்று சொல்லி, மானசீகமாக வணங்கினால் போதும்! புண்ணியம் ஏராளமாய் கிடைக்கும். அது மட்டுமல்ல! நர்மதையை நினைப்பவரின் அருகில் விஷப் பூச்சிகள் அண்டவே அண்டாது. இப்படிப்பட்ட புகழ்மிக்க நர்மதை நதி தீரத்தில் மகாபலி யாகம் செய்து கொண்டிருந்த வேளையில், குள்ளமாய் வந்தார் ஒரு அந்தணர். பளிச்சென்ற முகம், பிரகாசிக்கும் உடல், பூணூல் அணிந்திருந்தார். ஒரு கையில் கமண்டலம், மற்றொரு கையில் குடை. யாக காலத்தில் யார் எதைக் கேட்டாலும் மன்னர்கள் கொடுத்து விடுவார்கள். அந்த பிராமணரை வரவேற்றான் மகாபலி. தாங்கள் யார்? அபூர்வமானவன் என்றார் பிராமணர்.
அதாவது... என்று இழுத்த மகாபலியிடம்,என்னை இதற்கு முன் நீ பார்த்திருக்க மாட்டாய், என்றார் பிராமணர். உங்கள் ஊர்...? யாதும் என் ஊரே. இந்த உலகம் முழுக்க என்று வைத்துக் கொள்ளேன்,. இளைஞராக இருக்கிறீர்களே! உங்களுக்கு தாய் தந்தை இருக்கிறார்களா? அந்தணர் கையை விரித்தார். ஓ! யாருமே இல்லாத அனாதையா இவர்? மகாபலியின் தலையில் இப்போது கர்வம் அளவுக்கு மீறியது. என்னை விட இப்பூமியில் அதிக தானம் செய்தவர்கள் யாருமில்லை. அதிலும், அஸ்வமேத யாகம் நடத்தும் இந்த வேளையில், அநாதை பிராமணருக்கு தானம் செய்யப் போகிறேன் என்றால், என்னை விட பாக்கியசாலி யார் இருக்க முடியும்? என்று மனதிற்குள் கர்வம் கொண்டவனாய், அந்தணரே! உமக்கு என்ன வேண்டும்? என்றான். தானம் செய்யும் போது, என்னை விட சிறப்பாக தானம் செய்பவர்கள் யாருண்டு என்று கர்வப்படக்கூடாது. அவ்வாறு கர்வம் கொள்பவர்கள் தானம் செய்து பலனே இல்லை.
வேறு என்னப்பா கேட்கப் போகிறேன்! என் சின்னக்காலுக்கு மூன்றடி நிலம் தந்தால் போதும்! மகாபலி யோசித்தான். ஒருவருடைய காலுக்கு மூன்றடி நிலம் கிடைத்து அதில் அவர் என்ன செய்யப் போகிறார்? சரி...நமக்கென்ன! கேட்பதைக் கொடுத்து விட்டுப் போவோம்,. அளந்து கொள்ளுங்கள் சுவாமி!. குள்ள பிராமணர் திடீரென வளர்ந்து விட்டார். பகவான் விஷ்ணுவாக விஸ்வரூபமெடுத்து! பகவானே! உலகுக்கே படியளக்கும் நீயா, இந்த சிறியேனிடம் யாசகம் கேட்டாய்? இரண்டடியால் உலகை அளந்துவிட்டாய். மூன்றாவது அடிக்காகக் காத்திருக்கிறாய். எப்படி தர முடியும்? வாக்களித்துவிட்டு, மாறுவது என்பது எவ்வளவு பெரிய அவமானம். என் தலையில் உன் திருவடியைப் பதித்து விடு! என்னை எடுத்துக் கொள்... மகாபலி உருக்கமாகப் பேசினான். பகவான் தன் திருவடியால் ஒருமுறை பூமி முழுக்க அளந்தான். அப்போது, அந்தத் திருவடியைப் பெற நாம் முயற்சிக்கவில்லை. இதோ! ஓணம் திருநாள் வருகிறது. அன்று அவனது அருட்பிரவாகம் உலகெல்லாம் பாயும். இந்த உலகிலேயே நான் தான் பெரியவன் என்ற கர்வத்தைக் களைந்து விட்டு, அவனது திருவடிக்காக காத்திருந்தால், அது நம் மீதும் நிச்சயம் படும். பிறப்பில்லா நிலையடைந்து வைகுண்டத்தில் நிரந்தரமாய் நிம்மதியாய் வாழலாம்.
|
|
பொறாமையே இல்லாத ஒரு ஊர்!
பக்தி கதைகள்> பொறாமையே இல்லாத ஒரு ஊர்! |
பக்தி கதைகள் |
|
|
இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது. ஆனால், பூலோகத்தில் இல்லை. வைகுண்டம்தான் அந்த ஊர். இங்கே விரஜா என்ற நதி ஓடுகிறது. காவிரியின் நடுவில் ஸ்ரீரங்கமும், தாமிரபரணிக் கரையில் ஸ்ரீவைகுண்டம் என்னும் ÷க்ஷத்ரமும் இருப்பதுபோல, நிஜ வைகுண்டம் விரஜா நதியைச் சார்ந்து மைந்து உள்ளது. இங்குள்ள நந்தவனத்தில் பகவான் விஷ்ணு தினமும் லட்சுமியுடன் நடமாடுவார். அங்கே நறுமணம் கமழும் பலவண்ண பூச்செடிகள் இருக்கும். பத்து பூச்செடிகளைத் தாண்டினால் ஒரு துளசிச் செடி இருக்கும். விஷ்ணுவுக்கு துளசியை மிகவும் பிடிக்கும். எனவே, துளசியின் அருகில் போய் நின்று கொள்வார்.
இதைப் பார்க்கும் மற்ற பூக்கள்நாம் அழகும், நறுமணமும் கொண்டிருந்தாலும் நம்மை பகவான் பார்க்க மறுக்கிறானே! அவன் கழுத்தை நாம் ஏன் அலங்கரிக்க வேண்டும்? என பொறாமைப்படுவதில்லை. மாறாக, இந்த துளசி இங்கிருப்பதால் தானே பகவான் அதைப் பார்ப்பதற்காக இங்கே வருகிறார். அதனால் தானே நாம் அவரைத் தினமும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. போதாக்குறைக்கு, மகாலட்சுமியும் உடன் வருகிறாள். அவளது திவ்ய தரிசனம் யாருக்கு கிடைக்கும்! இந்த லட்சுமி நாராயண தரிசனம் நமக்கு என்றும் கிடைக்க காரணமான துளசியை நெஞ்சார பாராட்டுவோம், என பாராட்டி மகிழ்ந்தன. மனிதர்களும் இப்படித்தான் நினைக்க வேண்டும். தங்களை விட உயர்ந்தவர் அருகில் இருந்தால், அது தங்களுக்கு கிடைத்த பேறாக கருதி, அவரிடம் விஷய ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், இந்த பூமியில் போட்டி பொறாமைக்கு இடமில்லை.
|
|
திருட்டு இல்லாத உலகம்!
பக்தி கதைகள்> திருட்டு இல்லாத உலகம்! |
பக்தி கதைகள் |
|
|
ஆயர்பாடியில் இருந்த யசோதையின் வீட்டில் கண்ணன் வளர்ந்து வந்த வேளை அது. "வெண்ணெய் என்றால் அவனுக்கு உயிர். யசோதை நிறையவே கொடுப்பாள் அவனுக்கு. ஆனால், அவன் மட்டும் சாப்பிட்டால் போதுமா? நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டுமே! எனவே, நிறைய வெண்ணெய் வைத்திருப்பவர்களின் வீட்டில் போய் கேட்பான். அவர்கள் கொடுக்க மறுத்தால் திருடுவான். "இறைவனே இப்படி செய்யலாமா? எப்படியாயினும் திருடுவது தவறு தானே என்ற கேள்வி, எல்லார் மனதிலும் எழுவது இயல்பு.
திருடுவது தவறு என்பது கண்ணனுக்குத் தெரியும். அவன் பாற்கடலிலேயே படுத்திருப்பவன். அவனுக்கு கிடைக்காத வெண்ணெயா என்ன! அப்படியானால், இப்படி ஒரு லீலையை உலகம் உய்வதற்காக அவன் நிகழ்த்திக் காட்டினான். தங்கள் தேவைக்கு மேல் பொருள் வைத்திருப்பவர்கள் ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும். அப்படி உதவாத பட்சத்தில் தான், பசி தாளாமல் திருட்டு நடக்கிறது. இதற்காக சோம்பேறிகளுக்கு உதவ வேண்டும் என்பது இல்லை. திறமையிருந்தும், தொழில் செய்யவோ, படிக்கவோ பணமில்லாத ஏழைகளுக்கு உதவலாம். வறுமை இருளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு விளக்கொளி காட்டலாம். இதனால் திருட்டு இல்லாத உலகத்தை அமைக்கலாம்.
|
|
கண்ணன் என்னும் மன்னன்!
பக்தி கதைகள்> கண்ணன் என்னும் மன்னன்! |
பக்தி கதைகள் |
|
|
காசியை பவுண்டரீகன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு ஒரு மகன். ஒருசமயம், பவுண்டரீகனுக்கு தன்னைத் தவிர வேறு யாரையும் உலக மக்கள் வணங்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. மமதை காரணமாக நாட்டு மக்களை துன்புறுத்தி, தன்னையே கண்ணனாக பாவித்து வழிபட வேண்டும் என்று உத்தரவிட்டான். இதை பக்தர்கள் ஏற்க மறுத்தனர். உண்மையான கண்ணன் பாற்கடலில் லட்சுமிதேவியுடன் சங்கு சக்கரத்துடன் துயில் கொண்டிருக்கிறான். மேலும் அவன் தற்போது மானிட பிறவியாக துவாரகாபுரியை ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். அந்த கண்ணன் இருக்கும் போது உங்களை நாங்கள் எப்படி விஷ்ணுவாக ஏற்றுக் கொள்ள முடியும்? என எதிர்கேள்வி கேட்டனர்.
கோபமடைந்த மன்னன் கண்ணனைப் போல வேடம் போட்டுக் கொண்டான். தலையில் மயில் இறகு செருகி, கையில் புல்லாங்குழலுடன், நீல நிறத்தை மேனியில் தடவி, சங்கு சக்கரங்களை எடுத்துக் கொண்டு கண்ணனைப் போலவே அரசபீடத்தில் அமர்ந்தான். இப்போதாவது தன்னைக் கண்ணனாக கருதி வணங்க வேண்டும் என உத்தரவு போட்டான். ஆனால், அவனது கட்டளைக்கு யாரும் அடிபணியவில்லை. கண்ணன் உயிருடன் இருக்கும் வரை தனக்கு மதிப்பு இருக்காது என கருதிய பவுண்டரீகன் கண்ணன் மீது போர்தொடுத்தான். கோபமடைந்த கண்ணபிரான் பவுண்டரீகன் மீது சக்கரத்தை ஏவி அவனது தலையை துண்டித்தார். இதைக்கண்டு வெகுண்ட பவுண்டரீகனின் மகன், கண்ணனுடன் போரிட்டான். அவனது தலையும் துண்டிக்கப்பட்டது. இறைவன் ஒருவனே, மனிதராகப் பிறந்தவர்கள் தங்களை இறைவனாக கருதிக் கொள்ளக்கூடாது. கண்ணன் மட்டுமே மன்னன். அவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை இக்கதை காட்டுகிறது.
கண்ணனின் கதை கேளுங்க!
பக்தி கதைகள்> கண்ணனின் கதை கேளுங்க! |
பக்தி கதைகள் |
|
|
கண்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்? என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா? என்றார் மந்திரி. அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும். பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள், என்று உத்தரவு போட்டான். அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார். தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல...பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.
இரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை. அவன் பண்டிதரிடம்,யோவ் பண்டிதரே! என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா! இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே! இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை... என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார். வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள். அப்பா! இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள்? என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான், என்றாள். இவள் என்ன உளறுகிறாள்? என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார். கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, பயப்படாதே! நானிருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது.
மறுநாள், மகளுடன் அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் அந்தச்சிறுமி,மன்னா! நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன், என்றதும், சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய்? என்றான் மன்னன் ஆச்சரியமாக. மன்னா! நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள், என்றாள். அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர். மன்னா! இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள், என்றாள். உனக்கு பைத்தியமா! கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்? என்ற மன்னனிடம்,நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும். கண்ணனின் கதையைப்படித்தால் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா! என்றாள். மன்னன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மைநிலையை உணர்த்திய சிறுமியை வாழ்த்தினான்.
ஒண்ணா இருக்க கத்துக்கணும்! இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்!
பக்தி கதைகள்> ஒண்ணா இருக்க கத்துக்கணும்! இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்! |
பக்தி கதைகள் |
|
|
இன்று நம் வீட்டிலும், நாட்டிலும் குறைந்து வரும் ஒரு நற்குணம் ஒற்றுமை. மொத்த மக்கள் தொகையில், கூட்டுக்குடும்பம் என 10 சதவீதம் இருந்தால் கூட அது அதிகம் தான். பழைய கதை ஒன்று...ஆனாலும், பசுமையாய் நினைவில் நிற்கும் கதை. ஒரு வீட்டில், நான்கு சகோதரர்கள் இருந்தனர். தந்தையோ பெரும் பணக்காரர். பிள்ளைகள் சொத்துக்காக அடித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக ஆளுக்கொரு வீட்டிற்கு குடிபோய் விட்டனர். பெரியவருக்கு பெரும் வருத்தம். தான் உயிருடன் இருக்கும்போதே இப்படி என்றால், தன் காலத்துக்குப் பிறகு, இன்னும் நிலை மோசமாகி விடுமே என கவலைப்பட்டார். ஒருநாள், பிள்ளைகளை அழைத்தார். அவர் முன்னால், ஒரு விறகுக்கட்டு கிடந்தது. மூத்தவனை அழைத்து,இந்த விறகு கட்டை ஒடி, என்றார். கட்டாக இருந்ததால், அதை அவனால் ஒடிக்க முடியவில்லை. தன்னால் முடியவில்லை என கீழே போட்டு விட்டான்.
அடுத்த இரண்டு சகோதரர்களையும் இதே போல செய்யச் சொன்னார். அவர்களாலும் அந்தக் கட்டை ஒடிக்க முடியவில்லை. கடைசி மகனை அழைத்தார். அந்தக் கட்டில் ஒரு விறகை மட்டும் எடுத்து ஒடிக்கச் சொன்னார். சடக்கென ஒடிந்தது.பார்த்தீர்களா! விறகு கட்டாக இருந்த போது, அதை ஒடிக்க முடியவில்லை. தனியே பிரித்ததும் எளிதாக ஒடிந்து விட்டது. நீங்களும் ஒற்றுமையாக இருந்தால், இந்த ஊரில் உங்கள் செல்வாக்கை அழிக்க யாராலும் முடியாது. பிரிந்திருந்தால், ஆளுக்கொன்றாக சொல்லிக் கொடுத்து, உங்களிடையே பகையைப் பெரிதுபடுத்தி, இருக்கிற பணத்தையெல்லாம் அழிக்கும் வழியைச் செய்து விடுவார்கள். எனவே, நீங்கள் ஒற்றுமையாய் இருக்கும் வழியைப் பாருங்கள், என்றார். அந்த சகோதரர்கள் மீண்டும் ஒன்றுபட்டனர். தங்கள் பிள்ளைகளுக்கும் ஒற்றுமையாய் வாழ்வதன் அவசியத்தை கற்பித்தனர். அந்தக் குடும்பம் வாழையடி வாழையாய் தழைத்தது.இன்று வீடுகளில் சகோதர, சகோதரிகளே ஒன்றோ இரண்டோ தான்...அவர்களும் பிரிந்து கிடந்தால்... சிந்தியுங்களேன்!
|
|
|
|
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக