புதன், 9 நவம்பர், 2011

வெளிநாட்டுக் கோயில்கள் அமெரிக்கா ( பகுதி - 2 )


ராதே கிருஷ்ணா 10 - 11 - 2011

வெளிநாட்டுக் கோயில்கள்

அமெரிக்கா  ( பகுதி - 2 )


ரோசஸ்டர் இந்துக் கோயில்,நியூயார்க்
நவம்பர் 14,2008,13:42  IST
தலவரலாறு : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ரோசஸ்டர் பகுதியில் அமைந்துள்ளது அழகிய இந்துக் கோயில். 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோசஸ்டர் பகுதியில் இருந்த கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இப்பகுதியில் ஒரு கோயில் அமைக்க தீர்மானித்தனர். மிக விரைவிலேயே இக்கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இக்கோயிலுக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டு 1989 ம் ஆண்டு தற்போதுள்ள 9.5 ஏக்கர் பரப்பளவிலான நிலம் பெறப்பட்டது. கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் 1990 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெறப்பட்டது. இக்கோயிலின் தோற்றம் வடிவமைக்கப்பட்டு, 1990 ம் ஆண்டு அக்டோபர் 22 ம் தேதி ஹொன்ரியட்டா நகர அமைப்பின் அனுமதி பெறப்பட்டது. 1991 ம் ஆண்டு ஜுலை 10 ம் தேதி இக்கோயிலின் முதல் ஆண்டு விழாவின் போது சந்த் மராரி பாபுவால் இக்கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. 1992 ம் ஆண்டு மே மாதம் 9 ம் தேதி ரமேஷ் பாய் ஓஷா மற்றும் சுவாமி சிதானந்த சரஸ்வதி ஆகியோரால் இக்கோயிலின் அஸ்திவார பூஜை நடத்தப்பட்டது. இவ்விழாவின் போது சத்ய நாராயண பூஜையும் நடத்தப்பட்டது. மேலும் இக்கோயிலின் சுற்றப்புறத்தில் வசிக்கும் சுமார் 75 குடும்பங்களைச் சேர்ந்த மக்களால் சாமூஹ் பூஜையும் நடத்தப்பட்டது. இக்கோயிலின் கட்டிடப் பணிகள் 1993 ம் ஆண்டு வசந்த காலத்தில் துவங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இக்கோயிலின் முதல் கட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது. பின்னர் இக்கோயிலின் இறுதிக் கட்டப்பணிகள் 1994 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி நிறைவு செய்யப்பட்டது.
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி : காலை 9.00 - 11.30 ; மாலை 6.00 - இரவு 8.30 ஆரத்தி : காலை 11.30 மற்றும் இரவு 8.00 
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை : காலை 9.00 - பகல் 12.00 ; மாலை 4.30 - இரவு 8.30 
ஆரத்தி : காலை 11.30 மற்றும் இரவு 8.00 . 
புதன்கிழமை முழுவதும் கோயில் மூடப்படுகிறது.
கோயில் முகவரி :
Hindu Temple of Rochester,

120, Pinnacle Road,

Pittsford, NY 14602

Mailing Address Hindu Temple of Rochester

P.O. Box 20061 ,Rochester, NY 14602
தொலைப்பேசி : (585) 427-8091 
இணையதளம் : www.hindutempleofrochester.com


பக்தர்களால் உருவாக்கப்பட்ட ஒக்லஹோமா இந்துக் கோயில்
நவம்பர் 13,2008,09:35  IST
தலவரலாறு : அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் அழகுற அமைக்கப்பட்டுள்ள ஆலயம், ஒக்லஹோமா இந்துக் கோயிலாகும். இக்கோயில் இப்பகுதியில் வாழ்ந்த இந்திய கலாச்சார அமைப்பினரால் 1982 ம் ஆண்டு லாப நோக்கமற்ற மையமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் உருவாக்கப்பட்டது. 1984 ம் ஆண்டு 5 இப்பகுதியில் வாழ்ந்த 5 குடும்பத்தினரால் சுமார் 10 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் அமோக ஆதரவினால் 1989 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 4000 சதுரடி பரப்பளவில் இக்கோயில் கட்டிடம் உருவாக்கப்பட்டது. பக்தர்களின் விருப்பப்படி அருள்மிகு வெங்கடேஷ்வரர் இக்கோயிலின் முக்கிய தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டார். பின்னர் 1994 ம் ஆண்டு இக்கோயிலில் இந்திய சிற்பிகளைக் கொண்டு பாலாஜி, கணேசர், சிவன், ராம பரிவாரங்கள் மற்றும் ராதா-கிருஷ்ணர் ஆகிய சன்னதிகள் உருவாக்கப்பட்டது. 1997 ம் ஆண்டு கோயிலுக்கென கூடுதலாக 5.11 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. மேலும் இக்கோயிலில் தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடனான புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு மே மாதம் கோயிலின் செப்பனிடும் பணிகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மே 2 ம் தேதி கோயிலின் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்டிட விரிவாக்கத்தின் போது புதிய மேற்கூரை, குளிர் மற்றும் வெப்பமூட்டும் வசதிகள், புதிய விளக்கு வசதிகள் போன்ற பணிகள் நடத்தப்பட்டு, ஓய்வு அறைகளும் ஆகம சாஸ்த்திர முறைப்படி அமைக்கப்பட்டது. அவற்றுடன் கூடுதலாக 6500 சதுரடி பரப்பளவில் மடப்பள்ளி, ஓய்வு அறை, வகுப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் பிரம்மாண்ட ராஜகோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டது. பின்னர் மகாலட்சுமி மற்றும் ஹனுமன் சன்னதிகளும் புதிதாக அமைக்கப்பட்டன.சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளுடன் சுமார் 1.6 மில்லியன் டாலர்கள் செலவில் இக்கோயில் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
கோயில் நேரங்கள் : 
திங்கள் - வெள்ளி : காலை 9.00 - 11.00 ; மாலை 5.30 - இரவு 7.30 
சனி, ஞாயிறு : காலை 10.00 - பகல் 1.00 ; மாலை 4.00 - இரவு 7.00 (8.00)
கோயில் முகவரி :
Hindu Temple of Oklahoma,

P.O.BOX : 7495,EDMOND,
OK 73083-7495

அமைவிடம் :
7200 N.COLTRANE

OKLAHOMA CITY OK- 73121

தொலைப்பேசி : (405) 478 0787 
பேக்ஸ் : (405) 478 0796 
இணைதளம் :www.hindutempleokc.org

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், கலிஃபோர்னியா
நவம்பர் 11,2008,13:12  IST
தலவரலாறு : அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ரிவர்சைடு பகுதியில் அமைந்துள்ளது, அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில். 1993 ம் ஆண்டு இன்லாந்து எம்பயர் பகுதியில் இருந்த இந்து சமூகத்தினரால் சுமார் 7600 சதுரடி நிலப்பரப்பில் இக்கோயிலுக்கான நிலம் பெறப்பட்டது. 1994 ம் ஆண்டு நடைபெற்ற கோயில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் லட்சுமி மற்றும் நாராயணர் ஆகிய தெய்வங்கள் முக்கிய தெய்வங்களாக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இக்கோயிலின் பெயர் லட்சுமி நாராயணர் திருக்கோயில் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது. அதே ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியன்று லட்சுமி நாராயணரின் உற்சவ மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மேலும் அவ்வாண்டு முதல் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகாசிவராத்திரி மற்றும் ராம நவமி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1995 ம் ஆண்டு இக்கோயிலின் பிரகாரங்கள் அமைக்கப்பட்டது. 1995 ம் ஆண்டு ஆகஸ்ட் 18 ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி அன்று 5 அடி உயரமுள்ள மார்பிள் கல்லால் ஆன லட்சுமி நாராயணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 1997 ம் ஆண்டு மார்ச் மாதம் சிவராத்திரி அன்று இக்கோயில் வளாகத்தில் உள்ள சிவாலயம் மற்றும் தியான மண்டபம் திறக்கப்பட்டது. அதே சமயம் இக்கோயிலின் பிரகாரத்தில் சிவன், பார்வதி தேவி, நந்தி மற்றும் கிரானைட் மற்றும் மார்பிளால் ஆன இரண்டு கருப்பு சிவலிங்கங்கள் ஆகியன பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர் ஜுன் மாதம் சரஸ்வதி தேவியின் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஜுலை மாதம் இக்கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புற தோற்றங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. 1999 ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஏக்கர் நிலம் கூடுதலாக பெறப்பட்டு, கோயிலின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஜுன் மாதம் இக்கோயிலில் நுழைவு வாயில், முகப்பு வளைவு, பிரகார நடைபாதை, பிரசாத அறைகள் போன்ற முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2000 ம் ஆண்டு முதல் இக்கோயிலில் இளம் வயதினருக்கான பகவத் கீதை வகுப்புக்கள், லட்சுமி நாராயணர் நூலகம் மற்றும் 10 நாட்கள் நவராத்திரி/ தசாரா பண்டிகை போன்றவை துவங்கப்பட்டது. 2001 ம் ஆண்டு இக்கோயில் சார்பில் 32,672 அமெரிக்க டாலர்கள் இந்தியாவின் குஜராத் பூகம்ப நிதிக்காக வழங்கப்பட்டது. ஜுலை மாதம் உலக நன்மைக்காக நவகிரக பூஜைகள், பெயர்ச்சி விழாக்கள் ஆகியனவும் நடத்தப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இக்கோயிலில் கூடுதலாக இரண்டு வளைவுகள் அமைக்கப்பட்டதுடன் டிசம்பர் மாதம் பாலாஜி கோயிலில் பாலாஜி மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2003 ம் ஆண்டு வருடாந்திர திருவிழாவின் போது பத்ம பீடமும், அழகிய திருமண மண்டபமும் அமைக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு கலாச்சார மையத்திற்கான அனுமதி பெற்றதுடன் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் குஜராத்தி பூஜைகளும், மாதாந்திர லலிதா சகஸ்ரநாம பாராயணங்களும் துவங்கப்பட்டது. 2005 ம் ஆண்டு இக்கோயிலின் 10 ம் ஆண்டு நிறைவு விழா 3 நாள் மகா உற்சவமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் போது உற்சவ மூர்த்தி பிரணபிரதிஷ்டனம் மற்றும் மூர்த்தி ஸ்தாபனம் ஆகியன நடத்தப்பட்டது. அத்துடன் சன்னதிகளுக்கு தங்க முலாமும் பூசப்பட்டது. 2007 ம் ஆண்டு 48 நாட்கள் மகாமண்டலாபிஷேகம் நடத்தப்பட்டு 3 நாட்கள் விழாவாக நவகிரக பிரணபிரதிஷ்டனம் மற்றும் மூர்த்திகள் ஸ்தாபனம் நடைபெற்றது. 49 வது நாள் மகா அபிஷேகமும் நடத்தப்பட்டது. மேலும் கோயில் சுவர்களில் கிரானைட் கல்லால் ஆன 3 தெய்வங்களின் சிலைகள் பதிக்கப்பட்டன. 
கோயில் நேரங்கள் : 
திங்கள் - வெள்ளி : காலை 9.00 - பகல் 12.00 : மாலை 5.00 - இரவு 8.00 
வாரத்தின் இறுதி நாட்கள் : காலை 9.00 - இரவு 8.00 
கோயில் முகவரி :
Hindu Society of the Inland Empire, 
Shri Lakshmi Narayan Mandir,
292 Magnolia Ave. Riverside, 
CA -92503, U.S.A.
தொலைப்பேசி : (951) 359-4743
பேக்ஸ் : (951) 637-0741 
இணையதளம் : www.lakshminarayan.com


புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் கலிஃபோர்னியா இந்துக் கோயில்
நவம்பர் 11,2008,12:32  IST
தலவரலாறு : அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கலாபசாஸ் பகுதியில் அமைந்துள்ளது புதுப்பொலிவுடன் மதைக் கவரும் அழகிய இந்துக்கோயில். 1977 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஒன்றிணைந்து, அப்பகுதியில் இந்துக் கோயில் மற்றும் கலாச்சார மையம் அமைக்க தீர்மானித்தனர். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர்களின் மனதில் வழிபாட்டுத் தலம் அமைப்பது தொடர்பான எண்ணம் மேலோங்கியது. இறுதியாக 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் லாப நோக்கமற்ற மத வழிபாட்டு மையமாக இக்கோயில் உருவாக துவங்கியது. பின்னர் இக்கோயில் அமைப்பதற்கு ஏற்ற இடம் தேடும் பணிகள் துவங்கப்பட்டது. கிலின்டேலி, வடக்கு ஹாலிவுட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவாக மலிபு பகுதியில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு காரணங்களுக்காக நிலம் வாங்கப்பட்டது. சுமார் 2 வருட போராட்டத்திற்கு பிறகு கோயில் அமைக்கும் பணிகள் சிறப்பாக துவங்கப்பட்டது. 1981 ம் ஆண்டு ஜனவரி மாதம் கேசவதாஸ் சுவாமிகளால் அருள்மிகு கணேசர் திருக்கோயிலுக்கான பூமி பூஜை மற்றும் அஸ்திவாரம் அமைக்கும் விழா நடத்தப்பட்டது. வெங்கடேஷ்வரர் சன்னதிக்கான அடிக்கல் நாட்டு விழா 1982 ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்பட்டது. 1983 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கணேசர் கோயிலின் கலச கும்பாபிஷேகம் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திருத்தலமான அருள்மிகு மதுரை மீனாட்சி திருக்கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட தங்கம் பட்டர் என்பவரால் நடத்தி வைக்கப்பட்டது. பிரதான கோயிலின் மகாகும்பாபிஷேகம் 1984 ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த புரோகிதர்களால் பாரம்பரிய முறைப்படி இவ்விழா நடத்தப்பட்டது. கோயில் துவங்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள் இக்கோயில் அபார வளர்ச்சி மற்றும் புகழை பெற்றது. சிவாலய வளாகத்தில் அமைக்கப்பட்ட கைலாச மண்டபமும் இவ்வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்துக்கோயில் சமூகத்தினரால் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவ்வமைப்பில் சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். நாளுக்கு நாள் இக்கோயில் அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சிக்கான பணிகள் கோயில் நிர்வாகக் குழு இயக்குனர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கோயில் நேரங்கள் : 
திங்கள் - வெள்ளி : காலை 9.00 - பகல் 12.00 ; மாலை 5.00 - இரவு 8.00 
சனி மற்றும் ஞாயிறு : காலை 8.00 - இரவு 8.00 
கோயில் முகவரி :
Hindu Temple of California,

1600, Las Virgenes Canyon Rd.

Calabasas ,CA 91302.
இணையதளம் : www.hindutemplemalibu.com

கான்சாஸ் இந்துக்கோயில்
நவம்பர் 08,2008,16:07  IST
தலவரலாறு : அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் உள்ள சாவ்னீ பகுதியில் அமைந்துள்ள அழகிய எளிமையான ஆலயம் கான்சாஸ் இந்துக் கோயில் மற்றும் கலாச்சார மையமாகும். 1982 ம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற இந்து சமுதாய மக்கள் கூட்டத்தில் இக்கோயில் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், தங்களுக்கான வழிபாட்டுத் தலம் அமைப்பதுவுமே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமானது. கென்சாஸ் பகுதியில் வாழ்ந்த அபைய் மற்றும் மினா பிசாரா, சுவரன் மற்றும் குஷம் ஜெயின், அசோக் மற்றும் அல்கா ரத்தான், ஓம் மற்றும் சுமித்ரா ரத்தன் ஆகிய நான்கு குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து இக்கோயில் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபடத் துவங்கினர். இதற்கான திட்டப் பணிகள் வடிவமைக்கப்பட்டு கென்சாஸ் மாகாணத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கென்சாஸ் மாகாணம் மற்றும் அதற்கான வருவாய்த்துறை அமைப்பும் இக்கோயிலுக்கு லாப நோக்கமற்ற அமைப்பிற்கான ஒப்புதல் வழங்கியது. இப்பகுதியில் வாழ்ந்த இந்திய சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் 1982 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம் தேதி காலை 11.00 மணியளவில் இக்கோயிலின் முதல் பூஜை ஓம் மற்றும் சுமத்ரா ரத்தனின் வீட்டில் நடத்தப்பட்டது. பக்தர்களின் ஒத்துழைப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் சுமார் 6,594 டாலர்கள் நன்கொடையாகவும், உதவித் தொகையாக சுமார் 33,933 டாலர்களும் நிதி உதவியாகப் பெற்றனர். சமூகத்தாரின் மிகுந்த ஒத்துழைப்புடன் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் புதிய கோயில் கட்டுவதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதித் தொகையைக் கொண்டு நிலம் பெறுவதற்கான தொகை திரட்டப்பட்டது. இறுதியாக 1984 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ம் தேதி கென்சாஸ் பகுதியில் பெரும்பாலான இந்தியர்கள் வாழும் பகுதிக்கு அருகில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் நிலம் பெறப்பட்டது. கென்சாஸ் பகுதியில் பெறப்பட்ட இந்துக்கோயில் மற்றும் கலாச்சார மையத்திற்கான நிலம் வரலாற்று முக்கிழத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 1985 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இப்புதிய கோயிலுக்கான பூமி பூஜை விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா ஆகியன மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பலவிதமான கருத்துக்கள் பெறப்பட்டு, இறுதியாக கோயில் நிர்வாக உறுப்பினர்களின் ஆலோசனைக்கு பிறகு கோயில் வடிவமைக்கப்பட்டு பாப் சத்யநாராயணர் மேற்பார்வையில் கோயிலின் கட்டிடப் பணிகள் நடத்தப்பட்டது. கோயில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு 1988 ம் ஆண்டு மே மாதம் 22 ம் தேதி காலை 9.00 மணியளவில் இக்கோயிலின் திறப்பு விழா நடைபெற்றது. தற்போது வழிபாட்டிற்கான தனிக்கோயில் மட்டுமல்லாது குழந்தைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாச்சார மையமும் அமைக்கப்பட்டது. பின்னர் கோயில் தேவஸ்தானம் நிறைவு பணி மற்றும் மூர்த்திகள் ஸ்தாபிப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்தப்பட்டது. தேவஸ்தான வடிவமைப்பில் பிரதீப் சுக்லாவும், அபாய் பிசாரா, ஜகன் அகர்வால், தாகூர் படேல் மற்றும் லட்சுமி நாயுடு போன்றவர்கள் அழகிய மூர்த்திகள் அமைப்பதிலும் பெரும் பங்காற்றினர். 1991 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்கோயிலின் மூர்த்தி ஸ்தாபனம் நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளில் நிதானமாகவும் மிகவும் நேர்த்தியாகவும் கோயிலின் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு தடைகளைக் கடந்து 1982, ஜுலை மாதம் முதல் 1991, ஏப்ரல் மாதம் வரை இக்கோயிலின் பணிகள் முழுமை பெற்று வந்துள்ளன. கோயில் நேரங்கள் : 
திங்கள் -வெள்ளி : காலை 10.00 -பகல் 12.00 ; மாலை 5.30 - இரவு 9.00 
காலை 11.00 மற்றும் இரவு 8.00 மணிக்கு--- ஆரத்தி 
சனிக்கிழமை : காலை 9.00 - இரவு 9.00 ;
பகல் 12.00 மற்றும் இரவு 8.00 மணிக்கு--- ஆரத்தி 
ஞாயிற்றுக்கிழமை : காலை 9.00 - இரவு 8.00 ; 
பகல் 12.00 மற்றும் இரவு 7.00 மணிக்கு ஆரத்தி.
கோயில் முகவரி :
Hindu Temple & Cultural Center of Kansas City,

6330 Lackman Road,
Shawnee, KS 66217-9739

தொலைப்பேசி : (913) 631-7519 
இணையதளம் : http://www.htccofkc.org

பிரணவ மந்திரத்தின் மகிமை உணர்த்தும் ஒஹியோ இந்துக் கோயில்
நவம்பர் 07,2008,12:01  IST
தலவரலாறு : அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள சின்சின்னாடி பகுதியில் அமைந்துள்ளது அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த இந்துக்கோயில். 1977 ம் ஆண்டின் முற்பகுதியில் சின்சின்னாடி பகுதியில் வாழ்ந்த இந்துக் குடும்பத்தினர் இப்பகுதியில் வழிபாட்டுத் தலம் ஒன்றை அமைக்க விரும்பினர். இவர்கள் தங்களின் இல்லங்களிலேயே பூஜைகள் நடத்தி வந்தனர். கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கே செல்ல வேண்டி இருந்தது. 1978 ம் ஆண்டு பஷந்த் பஞ்சமி தினத்தன்று முதல் சின்சின்னாடி பகுதியிலேயே கலாச்சார நிகழ்வுகள் மற்றும் மத நிகழ்ச்சிகளை நடத்த துவங்கினர். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் அட்டவணை முறையில் பக்தர்களின் இல்லங்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. முதன் முதலில் 1978 ம் ஆண்டு மார்ச் மாதம் கங்காதர் சவுத்ரி என்பவரின் இல்லத்தில் தான் முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டது. அதற்கு அவரே குருக்களாகவும் இருந்தார்.பின்னர் பக்தர்களின் ஒத்துழைப்புடனும் அப்பகுதியின் தேசிய வங்கியின் உதவியுடனும் சின்சின்னாடி இந்து சமுதாய அமைப்பு என்ற பெயரில் மத ரீதியான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. 1979 ம் ஆண்டு இந்த அமைப்பிற்கான சட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு, 1980 ம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி ஒஹியோ மாகாணத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இக்கோயிலின் தவக்க விழா பூஜைகள் சிக்காக்கோ வேதாந்த அமைப்பின் பஷ்யானந்தா சுவாமிகளால் 1983 ம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதி நடத்தி வைக்கப்பட்டது. சிவஸ்தவா என்பவரது தலைமையில் 1986 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் தேதி சுமார் 100 ஏக்கர் நிலம் இக்கோயிலுக்காக பெறப்பட்டது. மேலும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் 12 ம் தேதி ஜோதிர்மயானந்த சுவாமிகள் பூமி பூஜை யை நடத்தி வைத்தார். 1992 ம் ஆண்டு ஜுன் 13 ம் தேதி இப்புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 1994- 95 ம் ஆண்டுகளில் கோயிலில் கூடுதல் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. இப்புதியக் கோயில் 1995 ம் ஆண்டு நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் முறைப்படி திறப்புவிழா நடத்தப்பட்டது. பழைய கோயிலில் இருந்து தெய்வ சிலைகள் புதிய கோயிலின் கீழ்தளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1996 ம் ஆண்டு நவம்பர் 9 ம் தேதி முதல் இக்கோயிலில் கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்பட்டது. 1997 ம் ஆண்டு மே மாதம் 22 முதல் 26 ம் தேதி வரை இக்கோயிலில் தெய்வங்கள் நிரந்தரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருந்து புரோகிதர்கள் அழைத்து வரப்பட்டு கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இக்கோயிலில் மூர்த்தி பிரண பிரதிஷ்டன மகாஉற்சவம் மற்றும் மகாகும்பாபிஷேகம் ஆகியன ஒரே நாளில் நடத்தப்பட்டன. அதன் பின்னர் இக்கோயிலில் புதிய முறையாக பல்வேறு தெய்வங்களின் பின்னணியில் பிரணவ மந்திரமான ஓம் வடிவம் அமைக்கப்பட்டது. பிரணவ மந்திரத்தின் மகிமையை உலகிற்கு உணர்த்துவதற்காகவே இது போன்று அமைக்கப்பட்டிருப்பதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். 2000 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேத முறைப்படி இக்கோயிலில் பிரணவ மந்திர வடிவங்கள் அமைக்கப்பட்டன. மேலும் இக்கோயிலில் குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்புக்கள் ஞாயிறுதோறும் நடத்தப்படுகின்றன. விழாக்காலங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்படுவதுடன் திருமண வைபவங்கள் போன்ற தனிப்பட்ட விசேஷங்களும் நடத்தப்படுகின்றன. ஆண்டு திருவிழாக்களும் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இக்கோயில் வளாகத்தில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் இக்கோயில் சார்பில் மாதாந்திர இதழான ஆராதனா வெளியிடப்படுகிறது. சித்திர குப்தர், ஜனநாதர், பல்பத்ரா, சுபத்ரா போன்ற தெய்வங்களின் சிலைகளும் அண்மையில் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 
கோயில் நேரம் : 
திங்கள் -வெள்ளி : காலை 9.00 - பகல் 12.00 ; மாலை 5.00 - இரவு 8.00 
சனி, ஞாயிறு மற்றும் அமெரிக்க விடுமுறை நாட்கள் : காலை 9.00 - இரவு 8.00 
கோயில் முகவரி :
Hindu Temple of Ohio,

4920 Klatte Road, Cincinnati,

Ohio 45244
தொலைப்பேசி : (513) 528 3714 / (513) 652 5382 
இணையதளம் : www.cincinnatitemple.com

கான்சாஸ் மாகாணத்தின் முதல் இந்துக்கோயில்
நவம்பர் 04,2008,16:42  IST
தலவரலாறு : அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டா பகுதியில் அமைந்துள்ள முதல் இந்துக் கோயில் இதுவே ஆகும். இக்கோயில் அமைதியான சூழலில் சனாதன தர்ம சபையின் சார்பில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் முக்கிய தெய்வமான வெங்கடேஷ்வரர் , மகாலட்சுமி தேவி மற்றும் பூமா தேவி சமேதராக காட்சி அளிக்கிறார். மேலும் இக்கோயிலில் சிவன், துர்க்கை, கிருஷ்ணர் மற்றும் ராதா, ராம பரிவாரங்கள், கணேசர், முருகன் மற்றும் மகாவீரர் போன்ற தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விசிட்டா பகுதியில் உள்ள இக்கோயிலின் துவக்க விழா மிகப் பெரிய அளவில் 2002 ம் ஆண்டு ஜுன் மாதம் 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. நீண்ட கால திட்டங்கள், ஆலோசனைகளுக்கு பிறகு கடும் முயற்சியின் விளைவாக இக்கோயில் உருவாக்கப்பட்டது. இக்கோயிலில் உள்ள 7 இந்து மத புரோகிதர்கள் மற்றும் 1 ஜெயினிய மத புரோகிதர்களைக் கொண்டு ஆகம விதிப்படி வேத பாராயணங்கள் முழங்க இக்கோயிலில் உள்ள மூர்த்திகள் பிரதிஷ்டைகள் நடைபெற்றன. பல்கலைக்கழக மாணவர்களான கிருஷ்ணன் கிருஷ்ணய்யர் மற்றும் பிரதீப் நடராஜ் ஆகியோர்களால் இக்கோயிலில் தினசரி பூஜைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகளை பெண்களே தயாரிக்கின்றனர். இம்மாகாணத்தின் மேயர் நைட் ஜுன் 16 ம் தேதியை இக்கோயிலின் தினமாக அறிவித்தார். இக்கோயிலில் பொங்கல், தைப்பூசம், மகாசிவராத்திரி, யுகாதி, ராமநவமி, மகாவீரர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, துளசி விவாஹம் போன்ற இந்திய விழாக்கள் மற்றும் பண்டிகைகள் அனைத்தும் சிறபாக கொண்டாடப்டுகின்றன. இக்கோயிலின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் ராம பரிவாரங்கள் மற்றும் பூமாதேவி ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 2 ம் நிறைவு விழாவில் உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 2005 ம் ஆண்டு ஜுன் மாதம் கொண்டாடப்பட்ட 3 ம் ஆண்டு நிறைவு விழாவில் பாலாஜி அபிஷேகமும் மகா சத்யநாராயண பூஜையும் நடத்தப்பட்டன. பூஜைக்காக வெள்ளியால் ஆன சிறப்பு தெய்வ சிலைகளும் வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் அதே நாளில் குழந்தைகளுக்கான பால விஹாரும் துவங்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கு கலாச்சாரம் மற்றும் சனாதன தர்மங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அவற்றுடன் முதன்முறையாக இக்கோயிலில் தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும் அன்னகுட் விழாவும் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சுமார் 100 வகையான உணவுப் பொருட்கள் நிவேதனமாக படைக்கப்படுகிறது. 2006 ம் ஆண்டு முதல் இக்கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம் நடத்தப்படுவதுடன் தினமும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் நடத்தப்படுகிறது. ஜுலை மாதம் முதல் தினமும் 1000 முறை இப்பாராயணம் நடத்தப்படுகிறது. நாள்தோறும் பாலாஜி அபிஷேகம் மற்றும் குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறுகின்றன. 2007 ம் ஆண்டு 5 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன் 5 ஹோமகுண்டங்களில் ஹோமங்கள் நடத்தப்பட்டு, பாலாஜி அபிஷேகம் மற்றும் பாலாஜியின் பூலங்கி சேவை (முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுவது) நடத்தப்பட்டது.
கோயில் நேரங்கள் : 
திங்கள் -புதன்கிழமை : காலை 9.30 - 11.30 ; மாலை 6.00 - இரவு 8.00 
வியாழக்கிழமை : முழுவதும் மூடப்படும் 
வெள்ளிக்கிழமை : காலை 9.30 - 11.30 ; மாலை 6.00 - இரவு 8.00 
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை : காலை 10.00 - பகல் 1.00 ; மாலை 5.00 -இரவு 8.00 
கோயில் முகவரி :

Hindu Temple of Greater Wichita,

320 N. Zelta st, Wichita Kansas 67206
தொலைப்பேசி : (316) 684-1556 
இணையதளம் : www.htgw.org

வெர்ஜினியாவின் மிகப் பெரிய இந்துக் கோயில்
அக்டோபர் 31,2008,15:42  IST
தலவரலாறு : அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் அமைந்துள்ளது, வெர்ஜினியாவின் மிகப் பெரிய இந்துக் கோயில். இக்கோயில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 24 ஆயிரம் சதுரடியில் இந்து சமூகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோயில் கட்டும் பணியில் ஈடுபட துவங்கினர். இக்கோயிலில் தினசரி வழிபாடு மட்டுமல்லாது கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. 1985 ம் ஆண்டு ஜுன் 15 ம் தேதி இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது. சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மக்களின் கூட்டு முயற்சியில் இக்கோயில் அமைக்கப்பட்டது. பல முக்கிய பிரமுகர்கள் இக்கோயிலுக்கான நிலத்தை அளித்ததுடன் பல வருடங்கள் தொடர்ச்சியாக இக்கோயிலுக்கான நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 20 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டுமான பணிகளுக்கான நிகழ்வுகள் 1990 ம் ஆண்டு நடைபெற்றது. இக்கோயிலின் பணிகள் 1991 ம் ஆண்டு நிறைவடைந்தது. மேலும் இக்கோயிலில் கலாச்சார மற்றும் மத நல்லிணக்க நிகழ்வுகள் ஆகியனவும் நடத்தப்பட்டன. இங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் குழந்தைகள் அதிக ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். 1994 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இக்கோயிலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயம் இக்கோயிலில் பக்தர்களும், நிர்வாக உறுப்பினர்களின் குடும்பத்தினரும் விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த துயர நிகழ்விற்கு பிறகு, நிலையான அழகிய ஆலயம் ஒன்றை அமைக்க நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீண்ட கால முயற்சிக்கு பிறகு புதிய கோயில் வடிவமைத்துக் கட்டப்பட்டது. இரும்பு மற்றும் செங்கற்களைக் கொண்டு தீ பற்ற முடியாத கூரைகளைக் கொண்ட புதிய கோயில் கட்டப்பட்டது. சுமார் 12 வருடங்களுக்கும் மேலாக இக்கோயில் கட்டுவது தொடர்பான ஆலோசனையில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். 1994 ம் ஆண்டு இக்கோயில் கட்டி முடிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 3 ஆண்டுகள் கழிந்த பிறகே கோயில் பணிகள் நிறைவு பெற்றது. சுமார் 5 மொழிகள் அறிந்து, அதில் பூஜைகள் செய்யத் தெரிந்த புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர். இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் நடத்தப்பட்டது. இக்கோயில் மட்டுமல்லாது அமெரிக்காவின் பெருமாபாலான இந்துக் கோயில்களும் இவரால் துவங்கி வைக்கப்பட்டது.
கோயில் நேரங்கள் : 
திங்கள் - வெள்ளி : காலை 10.00 - பகல் 12.00 ; மாலை 6.00 - இரவு 8.00 
சனிக்கிழமை : காலை 9.00 - பகல் 12.00 ; மாலை 6.00 - இரவு 8.00 
ஞாயிற்றுக்கிழமை : காலை 11.00 - இரவு 8.00 
தினசரி பூஜைகள் : காலை 11.30 மற்றும் இரவு 7.30
கோயில் முகவரி :
Hindu Temple and Community Center,

Hampton Roads,
P.O. Box 62146

Virginia Beach, VA 23462
தொலைப்பேசி : 757-382-7777 
இணையதளம் : www.hindutemplehr.org

அமெரிக்காவில் உள்ள உலகின் முதல் இந்து-ஜெயின் திருக்கோயில்
அக்டோபர் 31,2008,15:35  IST
தலவரலாறு:அமெரிக்காவின் பென்சைல்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் பகுதியில் அமைந்துள்ளது உலகின் முதல் இந்து- ஜெயினிய திருக்கோயில். சமூக மற்றும் மத தேவைகளுக்காக இப்பகுதியில் வாழ்ந்த இந்துக்களால் சுமார் 7 ஏக்கர் நிலம் 1973 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெறப்பட்டது. வழிபாட்டுத் தலம் அமைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் மத, சமூக, கலாச்சார மற்றும் நல்லிணக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டது. தேவாலயமாக இருந்த இடமே பின்னர் கோயிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 1980 ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள சில குடும்பத்தினர்களின் நிதி உதவியுடன் இந்த புதிய கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்திய நல்லிணக்கவாதியான பிர்லா என்பவர் இக்கோயிலின் கட்டிடம் அமைப்பதற்கு உதவியதுடன் மூர்த்திகளும் வழங்கினார். இந்திய முறைப்படியான கோயில் அமைப்பு மற்றும் முக்கிய தெய்வங்களின் பிரதிஷ்டை ஆகியவற்றிற்கு ஒப்புதல் பெறப்பட்டது. 1981 ம் ஆண்டு தசரா பண்டிகையன்று இக்கோயிலின் அஸ்திவாரப் பணிகள் துவங்கப்பட்டது. இக்கோயிலின் முதல் பணியாக புதிய கட்டிடம் உள்நாட்டு கலைஞர்களாலும், கோயிலின் உள்புற சிறபங்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் இந்திய சிற்பிகளாலும் செய்யப்பட்டது. 1984 ம் ஆண்டு மே 13 ம் தேதி இக்கோயிலின் தெய்வங்கள் வேத கலாச்சார முறைப்படி பிரண பிரதிஷ்டனம் செய்யப்பட்டது. 1986 ம் ஆண்டு இந்துக்கோயில் என்ற பெயர் மாற்றப்பட்டு இந்து ஜெயின் கோயில் என அழைக்கப்பட துவங்கியது. இறுதியாக இக்கோயிலின் கட்டிடப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோயில் பிட்ஸ்பர்க் வடஅமெரிக்க இந்துக்கோயில் சமூகத்தாரால் நடத்தப்படுகிறது. இக்கோயில் உறுப்பினர்களின் உதவியுடன் இக்கோயிலின் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் இளைய சமுதாயத்தினருக்கு தாய்மொழி, மத மற்றும் கலாச்சாரம் போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகிறது. வழிபாட்டிற்காக நாள்தோறும் இக்கோயிலுக்கு ஏராளமான குழந்தைகள் வருகின்றனர். மதங்களை ஒன்றிணைத்து உண்மை, அஹிம்சை, அமைதி போன்றவற்றை போதிக்கும் இந்து சமுதாய சின்னமாக இக்கோயில் விளங்குகிறது. இரு மதங்களின் கொள்கைகளையும் கலாச்சாரத்தையும் உணத்தும் வடஅமெரிக்கா இந்து ஜெயின் திருக்கோயில், உலகின் முதல் இரு மத ஒருங்கிணைப்பு திருக்கோயிலும் இதுவே ஆகும். 
கோயில் நேரங்கள் : இளவேற்/கோடை காலம் : காலை 9.00 - இரவு 9.00 
தினசரி ஆரத்தி : காலை 10.00 மற்றும் இரவு 8.00 
குளிர்காலம் : காலை 9.00 - இரவு 8.00 
தினசரி ஆரத்தி : காலை 10.00 மற்றும் இரவு 7.00
கோயில் முகவரி :
Hindu Jain Temple,

615 Illini Drive,
Monroeville, PA 15146, U.S.A

தொலைப்பேசி : 724-325-2073 / 724-325-2054 
பேக்ஸ் : 724 - 733 - 7475 
இ-மெயில் : info@hindujaintemple.or
இணையதளம் : www.hindujaintemple.org

தெற்கு புளோரிடா இந்துக் கோயில்
அக்டோபர் 30,2008,15:43  IST
தலவரலாறு : அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பகுதியில் காண்பவரின் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்துள்ள அழகிய ஆலயம் இந்த இந்துக் கோயிலாகும். ஞாயிறுதோறும் இக்கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருவதுடன், இக்கோயில் விழாக்களிலும் கலந்து கொள்கின்றனர். வாரந்தோறும் ருத்ர அபிஷேகம், ஹனுமன் பாராயணம், லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை நடத்தப்படுகின்றன. அழகிய கட்டிடக் கலைச் சான்றாக விளங்கும் இக்கோயிலில் குழந்தைகளுக்கான சுற்றுப்புறச் சூழல் தொடர்பான கருத்துக்கள் சனாதன தர்ம கொள்கைகளின் அடிப்படையில் கற்றுத் தரப்படுகிறது.பெரியவர்கள் படிப்பதற்கான புத்தக தொகுப்புக்களும் காணப்படுகின்றன.தெற்கு புளோரிடா இந்துக் கோயிலில் மத மற்றும் கல்வியியல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. திருவிழா அல்லாத நாட்களில் கலாச்சார நிகழ்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இக்கோயிலில் பரதநாட்டிய வகுப்புக்கள், தபேளா வாத்தியங்கள், கதக் வகுப்புக்கள் மற்றும் யோகா வகுப்புக்கள் ஆகியன குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக நடத்தப்படுகிறது. இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் பிரசாத விநியோகங்களுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை உறுதுணையாக இருந்து வருகிறது.
கோயில் முகவரி :
Hindu Temple in South Florida,

13010 W. Griffin Road,
South West Ranches,

Florida -33330
தொலைப்பேசி : 954-252-8802 
இணையதளம் : www.sfht.org

வாஷிங்டனில் அமைந்துள்ள ராஜதானி மந்திர்
அக்டோபர் 29,2008,16:38  IST
தலவரலாறு : அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள அழகிய திருக்கோயில் ராஜதானி மந்திராகும். லாப நோக்கமற்ற அமைப்பாக துவங்கப்பட்ட இக்கோயில் மத, ஆன்மிக, கலாச்சார மற்றும் சமூக தேவைகளுக்காக இந்து சமூகத்தினரால் வாஷிங்டன் பகுதியில் துவங்கப்பட்டதாகும். விர்ஜினியாவின் சான்டிலி பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அழகிய சூழ்நிலையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 2000 ம் ஆண்டு மார்ச் மாதம் துவக்கப்பட்டதாகும். 
முக்கிய தெய்வங்கள் : கணேசர், பாலசுப்ரமணியம், ஐயப்பன், ஸ்ரீநாத்ஜி, பாலாஜி, துர்க்கை, சிவ பரிவாரங்கள், லட்சுமி நாராயணர், ராம பரிவாரங்கள், ராதா-கிருஷ்ணர், சரஸ்வதி, ஹனுமான், ஷீரடி சாய்பாபா, புத்தர், மகாவீரர் மற்றும் பர்ஸ்வந்த் ஆகிய தெய்வங்கள் இக்கோயிலின் முக்கிய தெய்வங்களாக போற்றப்படுகின்றன. 
கோயில் நேரங்கள் : 
வார நாட்கள் : காலை 8.00 - பகல் 12.00 ; மாலை 5.00 - இரவு 9.00 
வாரத்தின் இறுதி நாட்கள் : காலை 8.00 - இரவு 9.00 
முக்கிய விழாக்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் : காலை 8.00 - இரவு 9.00 
பூஜை நேரங்கள் : 
ஆரத்தி---காலை 8.00 மற்றும் இரவு 7.30 
ஜெயின் ஆரத்தி மற்றும் பக்தி---மாலை 6.30
கோயில் முகவரி :
Rajdhani Mandir,

4525 Pleasant Valley Road,
Chantilly, VA 20151

தொலைப்பேசி : 703.378.8401 ந 703.378.8402 
இணையதளம் : www.rajdhanimandir.org

சமூக தொண்டாற்றும் அமெரிக்க இந்து கோயில்
அக்டோபர் 26,2008,10:20  IST
தலவரலாறு: அமெரிக்காவின் நிபிரஸ்கா பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் இந்திய மற்றும் நேபாளியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டதாகும். 1970களின் முற்பகுதியில் இந்தியா வம்சாவழியினரான பொறியாளர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் ஒமஹா பகுதியில் குடியேறினர். துவக்கத்தில் இவர்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி வந்தனர். 1970களின் மத்தியில் இந்திய வம்சாவழியினரில் மேலும் பலர் லின்கோல் மற்றும் ஒமஹா பகுதிகளில் குடியேறினர். இவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவர்களாக இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்து மதத்தினர் இப்பகுதியில் அதிகளவில் வேலையில் இருந்ததுடன், அதிகளவில் குடியேறவும் துவங்கினர். 1990களின் முன் பகுதியில் நகரின் மத்திய பகுதியில் இந்து சமுதாயத்தினருக்கென வழிபாட்டுத்தலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதுள்ள வழிபாட்டுத்தல கட்டிடம் வாங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக கோயில் பணிக்கான நிதி சேகரிக்கப்பட்டு, ஒமஹா இந்து கோயில் 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி நிறைவு பெற்றது. இப்பகுதியில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினரில் 98 சதவீதம் பேர் இந்தியர்களாகவும், மீதமுள்ள 2 சதவீதம் பேர் நேபாளிகளாகவும் இருந்தனர்.
இக்கோயிலின் வெளிப்புறம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். ஒரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாரம்பரிய முறையிலான இந்துக் கோயிலும், மற்றொரு புறம் கோயிலின் கலாச்சார மையம் மற்றும் நூலகம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. கலாச்சார மையத்திற்கு அருகில் மடப்பள்ளி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதலில் வாங்கப்பட்ட கட்டிடத்தில் பல்வேறு உணவுவிடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் சமூகக்கூடம் இப்பகுதியில் உள்ள இந்திய சங்கத்தினரால் பயன்படுத்தப்படுவதுடன், பொதுமக்களின் தனிப்பட்ட விசேஷங்களுக்காகவும் வாடகைக்கு விடப்படுகிறது. இக்கோயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் 6 முதல் 12 வயதுடைய மாணவர்களுக்கான ஞாயிறு வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. புதன்கிழமைகளில் மாலை 6.15 முதல் 7.45 வரை குண்டலினி யோக வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இது தவிர சமூகக் கூடத்தில் பேச்சாளர்கள், இசை கலைஞர்கள் போன்றவர்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுடன் கூடுதலாக கோயில் சார்பில் தீபம் செய்தித்தாள் 4 முதல் 6 முறை வெளியிடப்படுகிறது. இந்து மத கலாச்சார நிகழ்வுகளுடன் பல்வேறு சமூக சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன. சுகாதார கூட்டம், எய்ட்ஸ் பாதுகாப்புக் கழகம் போன்ற கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நிகழ்ந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்வாக உறுப்பினர்கள் ஒன்று கூடி 48 மணிநேரம் தொடர்ச்சியாக பிரார்த்தனை நடத்தினர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக 35 ஆயிரம் டாலர் நிவாரண நிதி உதவியும் அளிக்கப்பட்டது.
கோயில் நேரங்கள்: வார நாட்கள் : காலை 10.00 - பகல் 1.00 ; மாலை 5.30 - இரவு 8.30 ; வாரத்தின் இறுதி நாட்கள்: சனிக்கிழமை: காலை 9.00 - பகல் 1.00; மாலை 5.30 - இரவு 8.30; ஞாயிற்றுக்கிழமை: காலை 10.00 - பகல் 2.00 ; மாலை 5.30 - இரவு 8.30





































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக