ராதே கிருஷ்ணா 26-11-2011
திருப்புகழ் ( பகுதி - 1 ) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி
திருப்புகழ் பகுதி-1
திருப்புகழ் ( பகுதி - 1 ) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி
திருப்புகழ் | |
திருப்புகழ் பகுதி-1மார்ச் 21,2011
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி
விநாயகர் துதி
1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக ... மேலும் திருப்புகழ் பகுதி-3மார்ச் 21,2011
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூன்றாம் பகுதி
4. திருக்காளத்தி (வாயு)
திருப்புகழ் பகுதி-4மார்ச் 21,2011
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நான்காம் பகுதி
சேலம்
949. பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற் றதனாலே பனிபடு சோலைக் குயிலது கூவக் குழல்தனி ... மேலும் |
திருப்புகழ் பகுதி-1
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி
விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை யிபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே. 2. உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி ஒண்கலிற் றேனமுதத் துணர்வூறி; இன்பரசத் தேபருகிப் பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயோ; தம்பிதனக் காகவனத் தணைவோனே தந்தை-வலத் தாலருள்-கைக் கனியோனே அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. 3. பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பக்ஷியெனு முக்ரதுர கமுநீபப்- பக்குவம லர்த்தொடையு மக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்; திக்கதும திக்கவரு குக்குடமும் ரøக்ஷதரு சிற்றடிய முற்றியப னிருதோளும்- செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமோடு செப்பென எனக்கருள்கை மறவேனே; இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்- டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்; மிக்க அடி சிற்கடலை பக்ஷணமே னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனு மருளாழி- வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய பெருமாளே. 4. விடமடைசு வேலை யமார்படைசூலம் விசையன்விடு பாண மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின் விளைவேது மறியாதே கடியுலவு பாயல் பகலிர வெனாது கலவிதனில் மூழ்கி வறிதாய கயவனறி வீன னிவனுமுயர் நீடு கழலிணைகள் சேர அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன் மகள் வாய்மை யறியாதே இதயமிக வாடியுடை பிளைநாத கணபதியெ னாம முறைகூற அடையலவ ராவி வெருவ அடிகூர அசலுமறியாமலவரோ அகல்வதென டாசொ லெனவுமுடி சாட அறிவருளும் ஆனை முகவானே. 5. நினது திருவடி சத்திமயிற்கொடி நினைவு கருதிடு புத்திகொடுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்- நெடிய வளைமுறி யிக்கொடு லட்டுகம் நிறவி லரிசிப ருப்பவ லெட்பொரி நிகரி லினிகத் லிக்கனி வர்கமு மிளநீரும்; மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக வொற்றைம ருப்பனை வலமாக- மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே; தெனன தெனதென தெத்தென னப்பல சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளு முறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை- செரும வுதரநி ரப்புசெ ருக்குட னிரைய வரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தள டக்கைகள் செகசேசே; எனவே துகுதுகு துத்தென வொத்துகள் துடிக ளிடமிக வொத்துமு ழக்கிட டிமுட டிமு டிமு டிட்டிமெ னத்தவி லெழுமோசை- இகலி யலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுநடித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமாளே. 6. முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்- முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்; பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப்- பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது மொருநாளே; தித்தித்தெய வொத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கநடிக்கக் கழுகொடு கழுதாடக்- திக்குப்பரி யட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்; கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை- கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே. முதலாவது படைவீடு - திருப்பரங்குன்றம் 7. உனைத்தி னந்தொழு திலனுவ தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடு னடியிணை உறப்ப ணிந்தில னொருதவ மிலனுன தருள்மாறா- உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன் விருப்போ டுன்சிக ரமும் வலம் வருகிலன் உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோல; கனைத்தே ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலித னுழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதை கொடுபொருபோதே- கலக்கு றுஞ்செய லொழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தி லென்பய மறமயில் முதுகினில் வருவாயே; வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமே யுகுதசை கழுகண விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் புரிவேலா- மிகுத்த பண்பயில் குயில் மொழி யழகிய கொடிச்சி கும்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே; தினத்தினஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தவை செயுமுநி வரர் தொழ மகிழ்வோனே- தெனத்தே னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே. 8. கறுக்கு மஞ்சன விழியினை அயில்கொடு நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு கனிக்கு ளின்சுவை யமுதுகு மொருசிறு நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ மனைக்கெ ழுந்திரு மெனமன முருகவொர் கவற்சி கொண்டிடமனைதனி லழகொடு கொடுபோகி நறைத்த பஞ்சனை மிசையினின் மனமுற அணைத் தகந்தனி லிணைமுலை யெதிர்பொர மிடறூடே நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென இசைத்து நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென வுரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென நிரைத்த அண்டமு கடுகிடு கிடுவென வரைபோலும் நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு சிரக்கொ டுங்குவை மலைபுரை தரவிரு நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர அடுதீரா திறற்க ருங்குழ லுமையவ ளருளுறு புழைக்கை தன்கட கயமுக மிகவுள சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு மிளையோனே சினத்தொ டுஞ்சம னுரைபட நிறுவிய பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே 9. வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர் மயக்கியைங்கணை மதனனையொருஅரு மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வருமிரு மெனவுரை வழுத்தி யங்கவ ரொடுசரு வியுமுடல் தொடுபோதே விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள மருட்டி வண்பொருள் கவர்பொழு தினின்மயல் விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை விரைப்ப தந்தனி லருள்பெறநினைகுவ துளதோதான் குடத்தை வென்றிரு கிரியென எழில்தள தளத்த கொங்கைகள் மணிவட மணிசிறு குறக்கரும்பின் மெய்துவள்புயöனைவரு வடிவேலா குரைக்க ருங்கடல் திருவணை யெனமுனம் அடைத்தி லங்கையி னதிபதி நிசிசரர் குலத்தொடும்பட வொருகணை விடுமரி மருகோனே திடத்தெ திர்ந்திடு மசுரர்கள் பொடிபட அயிற்கொ டும்படை விடுசர வணபவ திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே செழித்த தண்டலை தொறுமில கியகுட வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர் திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே. 10. கனகந்திரன் கின்ற -பெருஙகிரி தனில்வந்துத கன்தக னென்றிடு கதிர்மிஞ்சிய செண்டை யெறிந்திடு கதியோனே- கடமிஞ்சி யநந்தவி தம்புணர் கவளந்தனை யுண்டு வளர்ந்திடு கரியின்றுணை யென்று பிறந்திடு முருகோனே; பனகந்துயில் கின்றதி றம்புனை கடல்முன்பு கடைந்த பரம்பரர் படரும்புய லென்றவ ரன்புகொள் மருகோனே- பலதுன்ப முழன்று- கலங்கிய சிறியன்புலை யன்கொலை யன்புரி பவமின்று கழிந்துட வந்தருள் புரிவாயே; அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி புரமுந்திரி வென்றிட வின்புடன் அழலுந்தந குந்திறல் கொண்டவர் புதல்வோனே- அடல்வந்துமு ழங்கி யிடும்பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென அதிர்கின்றிட அண்ட நெரிந்திட வருசூரர்; மனமுந்தழல் சென்றிட வன்றவ ருடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில் வென்றனில் வந்தருளுங்கன பெரியோனே- மதியுங்கதி ருந்தடி வும்படி யுயர்கின்ற வனங்கள் பொருந்திய வளமொன்று பரங்கிரி வந்தருள் பெருமாளே. 11. சருவும்படி வந்தன னிங்கித மதனின்றிட அம்புலி யுஞ்சுடு தழல்கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய பொழிலின்பயில் தென்றலு மொன்றிய தடவஞ்சுனை துன்றியெ ழந்திட திறமாவே இரவும்பக லந்தியு நின்றிடு குயில்வந்திசை தெந்தன வென்றிட இருகண்கள்து யின்றிட லின்றியும் அயர்வாகி இவணெஞ்சுப தன்பத னென்றிட மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன் இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் அடைவேனோ திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள் மனையின்தயி ருண்டவ னெண்டிசை திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின் திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை பவன்மிஞ்சுதி றங்கொள் வென்றடல் ஜெயதுங்கமு குந்தன் மகிழ்ந்தருள் மருகோனே மருவுங்கடல் துந்துமி யுங்குட முழவங்கள்கு மின்குமி னென்றிட வளமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே மதியும்கதி ரும்புய லும்தின மறுகும்படி அண்டமி லங்கிட வளர்கின்றப ரங்கிரி வந்தருள் பெருமாளே. 12. அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துபி னரைதனி லுடைதனை அவிழ்த்து மங்குள அரசிலை தடவியு மிருதோளுற் றணைத்து மங்கையி னடிதொறு நகமெழ வுதட்டை மென்றுப விடுகுறி களுமிட அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென மிகவாய்விட் டுருக்கு மங்கியின் மெழுகென வுருகிய சிரத்தை மிஞ்சிடு மநுபவ முறுபல முறக்கை யின்கனி நிகரென இலகிய முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெ யுருகிட வமுதுகு பெருத்த வுந்தியின் முழுகிமெ யுணர்வற வுழைத்தி டுங்கன கலவியைமகிழ்வது தவிர்வேனோ இருக்கு மந்திர மெழுவகை முநிபெற வுரைத்த சம்ப்ரம சரவண பவகுக இதத்த இங்கிதம் அலகிய அறுமுக எழில்வேளென் றிலக்க ணங்களு மியலிசை களுமிக விரிக்கு மம்பல மதுரித கவிதனை யியற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே செருக்கும் அம்பல மிசைதனி லசைவுற நடித்த சங்கரர் வழிவழி யடியவர் திருக்கு ருந்தடி யருள்பெற அருளிய குருநாதர் திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு குருக்க ளின்திற மெனவரு பெரியவ திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே. 13. கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில் வந்து தித்துக் குழந்தை வடிவாகி கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலையருந்து விக்கக்கி டந்து கதறியங்கை கொட்டித்த வழ்ந்து நடமாடி அரைவடங்கள் கட்டிச் சதங்கை யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை யவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து பிணியுழன்று சுற்றித்தி ரிந்த தமையுமுன்க்ரு பைச்சித்த மென்று பெறுவேனோ இரவி யிந்த்ரன் வெற்றிக்கு ரங்கி னரச ரென்றும் ஒப்பற்ற வுந்தி யிறைவ னெண்கி னக்கர்த்தனென்றும் நெடுநீலன் எரிய தென்றும் ருத்ரற்சி றந்த அநும னென்றும் ஒப்பற்ற அண்டர் எவரு மிந்த வர்க்கத்தில் வந்து புனமேவ அரிய தன்ப டைக்கர்த்த ரென்று அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே அயனை யும்பு டைத்துச்சி னந்து உலக மும்ப டைத்துப்ப ரிந்து அருள்ப ரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே. 14. காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி வாளிம யங்கம னம்பயந் தந்திருள் கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு தொருகோடி காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை யாழியு டன்கட கந்துலங் கும்படி காமனெடுஞ்சிலை கொண்டடர்ந்தும் பொருமயலாலே வாதுபு ரிந்துவர் செங்கைதந் திங்கித மாகந டந்தவர் பின்திரிந்த துந்தன மார்பில ழுந்தவ ணைந்திடுந் துன்பம துழலாதே வாசமி குந்தகடம்பமென் கிண்கிணி மாலைக ரங்கொளு மன்பர்வந் தன்பொடு வாழநி தம்புனை யும்பதந் தந்துன தருள்தாராய் போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ போதவளஞ்சிவசங்கரன் கொண்டிட மொழிவோனே பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி ரீவம டந்தையு ரந்தரன் தந்தருள் பூவைக ருங்குற மின்கலந் தங்குப னிருதோளா தீதகீ மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல சேர்நிரு தன்குல மஞ்சமுன் சென்றடு திறலோனே சீதள முந்தும ணந்தயங் கும்பொழில் சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை பெருமாளே. 15. சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் றுனைநாளும் கண்டுகொண்டன்புற் றிடுவோனோ தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே. 16. தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண் டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படும் தளர்ச்சிப் பம்பரந் தனையூசற் கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடும் கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக் கணத்தில் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன் பணியாகப் பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம் பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்குமங் குலத்திற் கங்கைதன் சிறியோனே குறப்பொற் கொம்மைமுன் புனத்திற் செங்கரம் குவித்துக் கும்பிடும் பெருமாளே. 17. பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம் பருத்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை யொக்குந் தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண் செருக்குவண் டம்பப் பிற்கய லொக்கும் பருத்தகண் கொண்டைக் கொக்கு மிருட்டென் றிளைஞோர்கள் துதித்தமுன் கும்பிட் டுற்றது ரைத்தன் புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றும் துகிற்களைந் தின்பத் துர்க்கம ளிக்குங் துலக்குணும் பங்கப் பித்தன வத்தன் புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந் துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் றருள்வாயே குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங் கடற்கரந் தஞ்சிப் புக்கவ ரக்கன் குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்கும் கதிர்வேலா குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண் தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்கும் குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம் பதிர்ந்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந் திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் கொலைவேடர் தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண் டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண் திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் பெருமாளே. 18. பொப்புறும் கொங்கையார் பொருட்கவர்ந் தொன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் முருக்குவண் செந்துவர் தந்துபோகம் அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல் அறச்சிவந் தங்கையி லன்புமேவும் அவர்க்குழன் றங்கமு மறத்தளர்ந் தென்பயன் அருட்பதம் பங்கயம் அன்புறாதோ மிருத்தணும் பங்கய னலர்க்கணன் சங்கரர் விதித்தெணுங் கும்பிடு மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு மிசைக்கிடுஞ் செந்தமிழ் அங்கவாயா பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு திறற்செழுஞ் சந்தகில் துன்றிநீடு தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை திருப்பரங் குன்றுறை தம்பிரானே. 19. மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர் மண்டிடும் தொண்டையமு துண்டுகொண் டன்புமிகு வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய உந்தியென் கின்றமடு விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும் ஒண்கடம் பும்புனையும் அடிசேராய் பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும் வயலூரா சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை பெருமாளே. 20. வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படும் செங்கை யாலும் மதர்த்திடும் கெண்டை யாலு மனைவோரும் வடுப்படும் தொண்டை யாலும் விரைத்திடும் கொண்டை யாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி எரிப்படும் பஞ்சு போல மிகக்கெடுந் தொண்ட னேனும் இனற்படுந் தொந்த வாரி கரையேற இசைத்திடுஞ் சந்த பேதம் ஒலித்திடுந் தண்டை சூழும் இணைப்பதம் புண்ட ரீக மருள்வாயே சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன் இளக்ரவுஞ் சந்த னோடு துளக்கெழுந் தண்ட கோள மளவாகத் துரத்தியன் றிந்த்ர லோக மழித்தவன் பொன்று மாறு சுடப்பருஞ் சண்ட வேலை விடுவோனே செருக்கெழுந் தும்பர் சேனை துளக்கவென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி மருகோனே தினைப்புனம் சென்று லாவு குறத்தியின் பம்ப ராவு திருப்பரங் குன்ற மேவு பெருமாளே. இரண்டாம் படைவீடு - திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்) 21. அந்தகன் வருந்தினம் பிறகிடச் சந்ததமும் வந்துகண் டரிவையர்க் கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள அந்திபக லென்றிரண் டையுமொழித் திந்திரிய சஞ்சலங் கலையறுத் தம்புயப தங்களின் பெருமையைக் கவிபாடிச் செந்திலையு ணர்ந்துணர்ந் துணர்வுறக் கந்தனைய றிந்தறிந் தறிவினில் சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத சிந்தையும விழ்ந்தவிழ்ந் துரையொழித் தென்செய லழிந்தவிழிந் தழியமெய்ச் சிந்தைவர என்று நின் தெரிசனைப் படுவேனோ கொந்தவிழ் சரண்சரண் சரணெனக் கும்பிடு புரந்தரன் பதிபெறக் குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக் குன்றிடிய அம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக் குணடல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத் தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் தண்டைகள் கவின்கலின் கலிöனைத் திருவான சங்கரி மணங்குழைந் துருகமுதி தந்தர வருஞ்செழும் தளர்நடைச் சந்ததி சுகம்தொழும் சரவணப் பெருமாளே. 22. அருணமணி மேவ ம்ருகமத படீர லேபன அபிநவ விசால பூரண அச்பொற் கும்பத் தனமோதி அளிகுலவு மாதர் விலையின் முழுகியபி ஷேக மீதென அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் கிதமாகி இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி லிழைகளைய மாத ரார்வழி யின்புற் றன்புற் றழியாநீள் இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன் இணையடிகள் பாடி வாழஎ னெஞ்சிற் செஞ்சொல் தருவாயே தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய சதுர்மறையி னாதி யாகிய சங்கத் துங்கக் குழையாளர் தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி தனைமுழுதும் வாரி யேயமு துண்டிட் டண்டர்க் கருள்கூடும் செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை தெளிவினுடன் மூல மேயென முந்தச் சிந்தித் தருள்மாயன் திருமுருக சூரன் மார்பொரு சிலையுருவ வேலை யேவிய ஜெயசரவ ணாம னோகர செந்திற் கந்தப் பெருமாளே. 23. அறிவழிய மயல்பெருக வுரையமற விழிசுழல அனலவிய மலமொழுக அகலாதே அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ அழலினிகர் மறவியெனை யழையாதே செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர் திருவடியி லணுகவர மருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி நிருதிநிதி பதிகரிய வனமாலி நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி நிருதனுர மறஅயிலை விடுவோனே மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு மகிழமவி மிசைவளரு மிளையோனே மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின மறையவுயர் கரையிலுறை பெருமாளே. 24. அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅடி பின்தொ டர்ந்து பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்பலம்பு மவலவுட லஞ்சு மந்து தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கைகொஞ்ச மலரடி வணங்க என்று பெறுவேனோ தினைமிசை சுகங்க டிந்த புன்மயி விளங்கு ரும்பை திகழிரு தனம்பு ணர்ந்த திருமார்பா ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரிவலம் வந்த செம்பொன் இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த இறைவகுக கந்த என்று மிளையோனே எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்ச மிமையவரை யஞ்ச லென்ற 25. இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் தருவாயே மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல் வனசகுற மகளை வந்தித் தணைவோனே கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே. 26. இருகுழையெறிந்தகெண்டைகள் ஒருகுமிழடர்ந்துவந்திட இணைசிலைநெ ரிந்தே ழுந்திட அணைமீதே இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட இதழமுத ருந்து சிங்கியின் மனமாய முருகொடுக லந்த சந்தண அளறுபடு குங்கு மங்கமழ் முலைமுகடு கொண்டே ழுந்தொறு முருகார முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு முகமுடியுந லம்பி றந்திட அருள்வாயே எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையும் இதழியொட ணிந்த சங்கரர் களிகூரும் இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி பெருவாழ்வே அரைவடம லம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைகள் அணிமணிச தங்கை கொஞ்சிட மயில்மேலே அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம் அலைபொருத செந்தில் தங்கிய பெருமாளே. 27. இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு மைந்தரோடே இலைபிள வதனை நடித்துக் கேட்கவு மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவும் எங்கள்வீடே வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும் விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும் வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு நிந்தையாலே வனைமனை புகுதி லடித்துப் போக்கவு மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள் வசைவிட நினது பதத்தைப் போற்றுவ தெந்தநாளோ குருமணி வயிர மிழித்துக் கோட்டிய கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய மண்டுநீரூர் குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை வண்டலாடா முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு செந்தில்வாழ்வே முளையிள மதியை யெடுத்துச் சாத்திய சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர முறையருள் முருக தவத்தைக் காப்பவர் தம்பிரானே. 28. உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்ற லோதிநரை பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேல்விழி மிடைகடையொ துங்கு பிளைகளு முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடை சொருகுபிறை தந்த சூதுகளின் வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய் வனமழியு மங்கை மாதர்களி னிலைதனையு ணர்ந்து தாளிலுறு வழியடிமை யன்பு கூருமது சிந்தியேனோ இதழ்பொதிய விழ்ந்த தாமரையின் மணவறைபு குந்த நான்முகனும் எறிதிரைய லம்பு பாலுததி நஞ்சராமேல் இருவிழிது யின்ற நாரணனு முமைமருவு சந்த்ர சேகரனு மிமையவர்வ ணங்கு வாசவனு நின்றுதாழும் முதல்வசுக மைந்த பீடிகையி லகிலசக அண்ட நாயகிதன் முகிழ்முலைசு ரந்த பாலமுத முண்டவேளே முளைமுருகு சங்கு வீசியலை முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி முதலிவரு செந்தில் வாழ்வுதரு தம்பிரானே 29. ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறிபேணா ஈனனை வீணனை யேடெழு தாமுழு ஏழையை மோழையை அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது மொருநாளே நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் குறமாதை நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி லுடையோனே தேவிம னோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு சிறியோனே சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு பெருமாளே. 30.ஓள தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் டுயிர்சோர ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் டுழல்மாதர் கூரா வன்பிற் சோரா நின்றக் கோயா நின்றுட் குலையாதே கோடார் செம்பொற் றோளா நின்சொற் கோடா தென்கைக் கருள்தாராய் தோரா வென்றிப் போரா மன்றற் றோளா குன்றைத் தொளையாடீ சூதா யெண்டிக் கேயா வஞ்சக் சூர்மா அஞ்சப் பொரும்வேலா சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச் சேவே றெந்தைக் கினியோனே தேனே யன்பர்க் கேயா மின்சொற் சேயே செந்திற் பெருமாளே. 31. கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுன மிட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சம் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற பட்டுருவி நெட்டைக் க்ரௌஞ்சம் பிளந்துகடல் முற்றுமலை வற்றிக் குழம்பும் குழம்பமுனை பட்டஅயில்தொட்டுத்திடங்கொண்டெதிர்ந்தவுணர் முடிசாயத் தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை பெருமாளே. 32. கண்டுமொழிகொம்பு கொங்கை வஞ்சியிடை அம்புநஞ்சு கண்கள்குழல் கொண்ட லென்று பலகாலும் கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பக லென்று நின்று விதியாலே பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு பங்கயப தங்கள் தந்து புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன்க லந்து பண்புபெற அஞ்ச அஞ்ச லெனவாராய் வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டறநெருங்கி யிண்டு வம்பினைய டைந்து சந்தின் மிகமூழ்கி வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை வந்தழகு டன்க லந்த மணிமார்பா திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு செஞ்சமர்பு னைந்து துங்க மயில்மீதே சென்றசுர ரஞ்ச வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து செந்தில்நகர் வந்த மர்ந்த பெருமாளே. 33. களப மொழுகிய புளகித முலையினர் கடுவு மமிர்தமும் விரவிய விழியினர் கழுவு சரிபுழு கொழுகிய குழலின ரெவரோடும் கலக மிடுகய லெறிகுழை விரகியர் பொருளி லிளைஞரை வழிகொடு மொழிகொடு தளர விடுபவர் தெருவினி லெவரையு நகையாடிப் பிளவு பெறிலதி லளவள வொழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் பெருகு பொருள்பெறி லமளியி லிதமொடு குழைவோடே பிணமு மணைபவர் வெறிதரு புனலுணும் அவச வனிதையர் முடுகொடு மணைபவர் பெருமை யுடையவ ருறவினை விடஅருள் புரிவாயே அளைவி லுறைபுலி பெறுமக வயில்தரு பசுவி னிரைமுலை யமுதுண நிரைமகள் வசவ னொடுபுலி முலையுண மலையுட னுருகாநீள் அடவி தனிலுள வுலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர விரல்சேரேழ் தொளைகள் விடுகழை விரன்முறை தடவிய இசைகள் பலபல தொனிதரு கருமுகில் சுருதி யுடையவ னெடியவன் மனமகிழ் மருகோனே துணைவ குணதர சரவண பவநம முருக குருபர வளரறு முககுக துறையில் அலையெறி திருநக ருறைதரு பெருமாளே. 34. கனங்கள் கொண்டகுந்தளங்க ளுங்கு லைந்தலைந்துவிஞ்சு கண்க ளுஞ்சி வந்த யர்ந்து களிகூரக் கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க றங்கு பெண்க ளும்பி றந்து விலைகூறிப் பொனின்குடங்களஞ்சுமென்தனங்களும்புயங்களும்பொ ருந்தி யன்பு நண்பு பண்பு முடனாகப் புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்குழைந்தவம்பு ரிந்து சந்த தந்தி ரிந்து படுவேனோ அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி றந்தி ருண்ட கண்டர் தந்த அயில்வேலா அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு ரிந்த அன்ப ரின்ப நண்ப உரவோனே சினங்கள் கொண்டி லங்கை மன்சிரங்கள் சிந்த வெஞ்ச ரந்தெ ரிந்த வன்ப ரிந்த இன்ப மருகோனே சிவந்தசெஞ்ச தங்கையுஞ்சி லம்புதண்டையும்புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே. 35. கன்றிலுறு மானை வென்றவிழி யாலெ கஞ்சமுகை மேவு முலையாலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை கந்தமலர் சூடு மதனாலே நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி நம்பவிடு மாத ருடனாடி நஞ்சுபுரி தேரை யங்கமது வாக நைந்துவிடு வேனை யருள்பாராய் குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி கொண்டபடம் வீசு மணிகூர்வாய் கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை கொன்றகும ரேசு குருநாதா மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை வண்டுபடு வாவி புடைசூழ மந்திநட மாடு செந்தினகர் மேவு மைந்தஅம ரேசர் பெருமாளே. 36. குகர மேவுமெய்த் துறவினின் மறவாக் கும்பிட் டுந்தித் தடமூழ்கிக் குமுத வாயின்முற் றமுதினை நுகராக் கொண்டற் கொண்டைக் குழலாரோ டகரு தூளிகர்ப் புரதன இருகோட் டன்புற் றின்பக் கடலூடே அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த் தம்பொற் றண்டைக் கழல்தாராய் ககன கோளகைக் கணவிரு மளவாக் கங்கைத் துங்கப் புனலாடும் கமல வாதனற் களவிட முடியாக் கம்பர்க் கொன்றைப் புகல்வோனே சிகர கோபுரத் தினுமதி ளினுமேற் செம்பொற் கம்பத் தளமீதும் தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச் செந்திற் கந்தப் பெருமாளே. 37. குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு சீயூன் பொதிதோல் குலவு குரம்பை முருடு சுமந்து குனகிம கிழ்ந்து நாயேன் தளரா அடர்மத னம்பை யனையக ருங்க ணரிவையர் தங்கள் தோடோய்ந் தயரா அறிவழி கின்ற குணமற வுன்றன் அடியிணை தந்து நீயாண் டருள்வாய் தடவியல் செந்தி லிறையவ நண்பு தருகுற மங்கை வாழ்வாம் புயனே சரவண கந்த முருகக டம்ப தனிமயில் கொண்டு பார்சூழ்ந் தவனே சுடர்படர் குன்று தொளைபட அண்டர் தொழவொரு செங்கை வேல்வாங் கியவா துரிதப தங்க இரதப்ர சண்ட சொரிகடல் நின்ற சூராந் தகனே. 38. கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள் கொண்டளைய டைந்தகுழல் வண்டுபாடக் கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள் கொஞ்சியதெ னுங்குரல்கள் கெந்துபாயும் வெங்கயல் மிரண்டவிழி அம்புலிய டைந்தநுதல் விஞ்சையர்கள் தங்கள்மயல் கொண்டுமேலாய் வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது மின்சரண பைங்கழலொ டண்டஆளாய் சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை தந்தனத னந்தவென வந்தசூரர் சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும் டிந்துவிழ தண்கடல்கொ ளுந்தநகை கொண்டவேலா சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி தங்களின்ம கிழ்ந்துருகு மெங்கள்கோவே சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு சம்புபுகழ் செந்தில்மகிழ் தம்பிரானே. 39. கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள நகமேவு குங்கும பாடீர பூஷண நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி லாதார சோபையில் மருளாதே உம்பர்கள் ஸ்வாமி நமோநம எம்பெரு மானே நமோநம ஒண்டொடி மோகா நமோநம எனநாளும் உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய் துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீபாத நூபுரி கரசூலி பங்கமி லாநீலி மோடிப யங்கரி மாகாளி யோகினி பண்டுசு ராபான சூரனொ டெதிர்போர்கண் டெம்புதல் வாவாழி வாழியெ னும்படி வீறான வேல்தர என்றுமு ளானேம னோகர வயலூரா இன்சொல்வி சாகாக்ரு பாகர செந்திலில் வாழ்வாகி யேயடி யென்றனை யிடேற வாழ்வருள் பெருமாளே. 40. கொலைமத கரியன ம்ருகமத தனகிரி கும்பத் தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் கொண்டுற் றிடுநாயேன் நிலைய்ழி கவலைகள் கெடவுன தருள்விழி நின்றுற் றிடவேதான் நினதிரு வடிமல ரிணைமன தினிலுற நின்பற் றடைவேனோ சிலையென வடமலை யுடையவ ரருளிய செஞ்சொற் சிறுபாலா திரைகட லிடைகரு மசுரனை வதைசெய்த செந்திற் பதிவேலா விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி ரும்பிப் புணர்வோனே விருதணி மரகத மயில்வரு குமரவி டங்கப் பெருமாளே. 41. சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி கின்றமாயா காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும தென்கொலோதான் நேமிச் சூரொடு மேருத் தூளெழ நீளக் காளபு யங்ககால நீலக் ரீபக லாபத் தேர்விடு நீபச் சேவக செந்தில்வாழ்வே ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ லோகத் தேதரு மங்கைபாலா யோகத் தாறுப தேசத் தேசிக வூமைத் தேவர்கள் தம்பிரானே. 42. தகரநறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளருமிடை யேந்து தங்கத் தனமானார் தமைமனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச் சமயஜெப நீங்கி யிந்தப் படிநாளும் புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து வஞ்சித் துழல்மூடர் புனிநிதமிலி மாந்தர் தங்கட் புகழ்பகர்தல் நீங்கி நின்பொற் புளகமலர் பூண்டு வந்தித் திடுவேனோ தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தெனநடன மார்ந்த துங்கத் தனிமயிலை யூர்ந்த சந்தத் திருமார்பா திகையசுரர் மாண்ட ழுந்தத் திறலயிலை வாங்கு செங்கைச் சிமையவரை யீன்ற மங்கைக் கொருபாலா திகழ்வாயிர மேந்து கொங்கைக் குறவனிதை காந்த சந்த்ரச் சிகரமுகி லோங்கு செந்திற் பெருமாளே. 43. தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ரெனவேசார் மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு மந்த வரிசைமொழி பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட மிசையேறி அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலியய மயில்மேல்நீ அந்த மறலியொடு கந்த மனிதனம தன்ப னெனமொழிய வருவாயே சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு மயில்வீரா திங்க ளரவுநதி துன்று சடிலரருள் செந்தி கைரிலுறை பெருமாளே. 44. தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி மதனேவிற் றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி னுடனேநின் றெரிக்கும்பிறை யெனப்புண்படு மெனப்புன்கவி சிலபாடி இருக்குஞ்சிலர் திருச்செந்திலை யுரைத்துய்ந்திட அறியாரே அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர மனுக்குந்தெரி வரிதான அடிச்யசஞ்சடை முடிகொண்டிடு மரற்கும்புரி தவபாரக் கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை வரிக்குங்குரு பரவாழ்வே கிøளிககுந்திற லரக்கன்கிளை கெடக்கன்றிய பெருமானே. 45. துன்பங்கொண் டங்க மெலிந்தற நொந்தன்பும் பண்பு மறந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி லணுகாதே இன்பந்தந் தும்பர் தொழும்பத கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி யென்றென்றுந் தொண்டு செயும்படி யருள்வாயே நின்பங்கொன் றுங்குற மின்சர ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி நின்றன்பின் றன்படி கும்பிடு மிளையோனே பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய குன்றெங்குஞ் சங்கு வலம்புரி பம்புந்தென் செந்திலில் வந்தருள் பெருமாளே. 46. தெருப்பு றத்துத் துவக்கியாய் முலைக்கு வட்டைக் குலுக்கியாய் சிரித்துருக்கித் தருக்கியே பண்டைகூள மெனவாழ் சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய் மனத்தை வைத்துக் கனத்தபேர் தியக்க முற்றுந் தவிக்கவே கண்டுபேசி யுடனே இருப்ப கத்துத் தளத்துமேல் விளக்கெ டுத்துப் படுத்துமே லிருத்தி வைத்துப் பசப்பியே கொண்டுகாசு தணியா திதுக்க துக்குக் கடப்படா மெனக்கை கக்கக் கழற்றியே இளைக்க விட்டுத் துரத்துவார் தங்கள்சேர்வை தவிராய் பொருப்பை யொக்கப் பணைத்ததோ ரிரட்டி பத்துப் புயத்தினால் பொறுத்த பத்துச் சிரத்தினால் மண்டுகோப முடனே பொரப்பொ ருப்பிற் கதித்தபோ ரரக்கர் பட்டுப் பதைக்கவே புடைத்து முட்டத் துணித்தமா லன்புகூரு மருகா வரப்பை யெட்டிக் குதித்துமே லிடத்தில் வட்டத் தளத்திலே மதர்த்த முத்தைக் குவட்டியே நின்றுசேலி னினம்வாழ் வயற்பு றத்துப் புவிக்குள்நீள் திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ் வயத்த நித்தத் துவத்தனே செந்தில்மேவு குகனே. 47. தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்நகையாடித்- தொண்டு கிழவ னிவனா ரென இருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி; வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமே யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக துயர்மேலி- மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்; எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக அபிராம- இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல வருமாயன்; சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய அடுதீரா- திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அலையே கரைபொருத செந்திநகரி லினிதே மருவிளர் பெருமாளே. 48. தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய ழுந்தித் தோமுறுகாளையர் வாசல்தொ றும்புக் கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் புலையேனைக் காரண காரிய லோகப்ர பஞ்சச் சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞான தவஞ்சற் றருளாதோ பாலன மீதும னான்முக செம்பொற் பாலனை மோதப ராதன பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் றமராடிப் பாவியி ராவண னார்தலை சிந்திச் சீரிய வீடணர் வாழ்வுற மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் கினியோனே சீலமு லாவிய நாரதர் வந்துற் றீதவள் வாழ்புன மாமென முந்தித் தேமொழி பாளித கோமள இன்பக் கிரிதோய்வாய் சேலொடு வாளைவ ரால்கள் கிளம்பித் தாறுகொள் பூகம ளாவிய இன்பச் சீரலை வாய்நகர் மேவிய கந்தப் பெருமாளே. 49. நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாசி நாரி யென்பி லாகு மாக மதனூடே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றிந்தி டாம லேக வளராமுன் நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி விளைதீமை நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து வாகு ஞான நூல டங்க வோத வாழ்வு தருவாயே காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து வோல மோல மெனுமாதி காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர் காள கண்ட ரோடு வேத மொழிவோனே ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி யான செந்தில் வாழ்வ தான பெருமாளே. 50. நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் றினைவோரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் புகட்டிக் கொண்டுடம் பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம் புணர்க்கைக் கன்புதந் தருள்வாயே மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் மறத்திற் றந்தைமன் றினிலாடி மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண் டமிழ்ச்சொற் சந்தமொன் றருள்வோனே குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனும் கொழித்துக் கொண்டசெந் திலின்வாழ்வே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே. 51. நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலத்தாட் கமல மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற முதுசூதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு கொதிவேற் படையை விடுவோனே அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர அழியாப் புநித வடிவாகும் அரனார்க் கதித பொருள்காட் டதிப அடியார்க் கெளிய பெருமாளே. 52. பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக பங்க வாண்முக முடுகிய நெடுகிய திரிசூலம் பந்த பாசமு மருவிய கரதல மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு பண்பி லாதொரு பகடது முதுகினில் யமராஜன் அஞ்ச வேவரு மவதர மதிலொரு தஞ்ச மாகியெ வழிவழி யருள்பெறும் அன்பி னாலுன தடிபுக ழடிமையெ னெதிரேநீ அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மடமட நடமிடும் அந்த மோகர மயிலினி லியலுடன் வரவேணும் மஞ்சு போல்வள ரளகமு மிளகிய ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென வந்த தூயவெண் முறுவலு மிருகுழை யளவோடும் மன்றல் வாரிச நயனமு மழகிய குன்ற வாணர்த மடமகள் தடமுலை மந்த ராசல மிசைதுயி லழகிய மணவாளா செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை வஞ்ச கீழ்திசை சகலமு மிகல்செய்து திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் மகமேரு செண்டு மோதின ரரசரு ளதிபதி தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் பெருமாளே. 53. படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல் பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை மடல்பரணி கோவை யார்க லம்பக முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு மதுரகவி ராஜ னானென் வெண்குடை விருதுகொடி தாள மேள தண்டிகை வரிசையொடு லாவு மால கந்தைத விர்ந்திடாதோ அடல்பொருது பூச லேவி ளைந்திட எதிர்பொரவொ ணாம லேக சங்கர அரஹர சிவாம ஹாதெ வென்றுனி அன்றுசேவித் தவனிவெகு கால மாய்வ ணங்கியு ளுருகிவெகு பாச கோச சம்ப்பரம அதிபெல கடோர மாச லந்தர னொந்துவீழ உடல்தடியு மாழி தாவெ னம்புய மலர்கள்தச நூறு தாளி டும்பக லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக் குதவியம கேசர் பால இந்திரன் மகளைமண மேவி வீறு செந்திலி லுரியஅடி யேனை யாள வந்தருள் தம்பிரானே. 54. பதும விருசரண் கும்பிட் டின்பக் கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப் பகடு புளகிதந் துன்றக் கன்றிக் கயல்போலும் பரிய கரியகண் செம்பொற் கம்பிக் குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப் பதற விதமுறுங் கந்துக் கொந்துக் குழல்சாயப் புதுமை நுதிநகம் பங்கத் தங்கத் தினிது வரையவெண் சந்தத் திந்துப் புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் சடைதாரி பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக் கறிவை யிழவிடும் பண்புத் துன்பப் பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் தவிரேனோ திதிதி ததததந் திந்தித் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தாரவென் றொன்றொப் பின்றித் திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் சுவர்சோரச் சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கல் புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித் தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் க்ருபைதாவென் சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப் பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச் சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் பெருமாளே. 55. பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார் படையம படையென அந்திக் குங்கட் கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே அரிதிரு மருகக டம்பத் தொங்கற் றிருமார்பா அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே. 56. பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை யோதி மோகுலம் போலசம் போகமொடு பாடி பாளிதங் காருகம் பாவையிடை வஞ்சிபோலப் பாகு பால்குடம் போலிரண் டானகுவ டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல் பாவ மேகபொன் சாபமிங் தேபொருவ ரந்தமீதே மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை யன்புளார்போல் வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் சந்தமாமோ தீத தோதகந் தீதநிந் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு டீகு டீகுகம் போலவொண் பேரிமுர சங்கள்வீறச் சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும் வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர் சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு மங்கிவேலா தாதை காதிலங் கோதுசிங் காரமுக மாறும் வாகுவுங் கூரசந் தானசுக தாரி மார்பலங் காரியென் பாவைவளி யெங்கள்மாதைத் தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை தம்பிரானே. 57. பூரண வார கும்ப சீதப டீர கொங்கை மாதர்விகார வஞ்ச லீலையி லேயு ழன்று போதவ மேயி ழந்து போனது மான மென்ப தறியாத பூரிய னாகி நெஞ்சு காவல் பாடாத பஞ்ச பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து மயல்தீரக் காரண காரி யங்க ளானெத லாமொ ழிந்து யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து காலுட லூடி யங்கி நாசியின் மீதி ரண்டு விழிபாயக் காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு கயாம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க அருள்வாயே ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு முரவோனே ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற சூரனை மாள வென்று வானுல காளு மண்ட ரானவர் கூர ரந்தை தீரமுனாள்ம கிழ்ந்த முருகேசா வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் மருகோனே வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த பெருமாளே. 58. மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய விழ ஆவி வெங்கண் மறவி தன்கை மருவ வெம்பி யிடறு மொருபாச விஞ்சை விளையு மன்று னடிமை வென்றி யடிகள் தொழவாராய் சிங்க முழுவை தங்கு மடவி சென்று மறமி னுடன்வாழ்வாய் சிந்தை மகிழ அன்பர் புகழு செந்தி லுறையு முருகோனே எங்கு மிலகு திங்கள் கமல மென்று புகலு முகமாதர் இன்பம் விளைய அன்பி னணையு மென்று மிளைய பெருமாளே. 59. மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல் வண்டு புண்டரி கங்களை யும்பழி மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை தங்க வெண்டர ளம்பதி யும்பலு மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு கண்டமாதர் கஞ்சு கங்குர லுங்கழை யம்புய கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி கந்த சந்தன மும்பொலி யுந்துகில் வஞ்சிசேரும் கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை நம்புவேனோ சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டுமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்குதாரை சம்பு வின்கும ரன்புல வன்பொரு கந்த னென்றிடு துந்துமி யுந்துவ சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை விஞ்சவேகண் டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக வென்றவேளே அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின் மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன் அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு தம்பிரானே. 60. மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர் வலிமைகுல நின்ற நிலையூர்பேர் வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள் வரிசைதம ரென்று வருமாயக் கனவுநிலை யின்ப மதனையென தென்று கருதிவிழி யின்ப மடவார்தம் கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து கருவில்விழு கின்ற தியல்போதான் நினையுநின தன்பர் பழவினைக ளைந்து நெடுவரைபி ளந்த கதிர்வேலா நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில் நிலைபெறஇ ருந்த முருகோனே புனைமலர்பு னைந்த புனமறம டந்தை புளகஇரு கொங்கை புணர்மார்பா பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள் பொடிபடந டந்த பெருமாளே. 61. மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில் மூடு சிலைதி றந்தம ழுங்கிகள் வாசல் தோறுநடந்துசி ணுங்கிகள் பழையோர்மேல் வால நேசநி னைந்தழு வம்பிகள் ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள் வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ளெவரேனும் நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள் காசி லாதவர் தங்களை யன்பற நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ளவர்தாய்மார் நீலி நாடக மும்பையில் மண்டைகள் பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள் நீச ரோடுமி ணங்குக டம்பிக ளுறவாமோ பாயு மாமத தந்திமு கம்பெறு மாதி பாரத மென்ற பெருங்கதை பார மேருவி லன்று வரைந்தவ னிளையோனே பாவை யாள்குற மங்கை செழுந்தன பார மீதில ணைந்து முயங்கிய பாக மாகிய சந்தன குங்கும மணிமார்பா சீய மாயுரு வங்கொடு வந்தசு ரேசன் மார்பையி டந்து பசுங்குடர் சேர வாரிய ணிந்த நெடும்புயல் மருகோனே தேனு லாவுக டம்ப மணிந்தகி ரீட சேகர சங்கரர் தந்தருள் தேவ நாயக செந்திலு கந்தருள் பெருமாளே. 62. மான்போற்கண் பார்வை பெற்றிடு மூஞ்சாற்பண் பாடு மக்களை வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு முலைமாதர் வாங்காத்திண் டாடு சித்திர நீங்காச்சங் கேத முக்கிய வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு மொழியாலே ஏன்காற்பங் காக நற்புறு பூங்காற்கொங் காரு மெத்தையில் ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண முதல்நீதா ஈந்தாற்கன் றோர மிப்பென ஆன்பாற்றென் போல செப்பிடும் ஈண்டாச்சம் போக மட்டிக ளுறவாமோ கான்பாற்சந் தாடு பொற்கிரி தூம்பாற்பைந் தோளி கட்கடை காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் அசுரேசன் காம்பேய்ப்பந் தாட விக்ரம வான்றோய்க்கெம் பீர விற்கணை காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் மருகோனே தீம்பாற்கும் பாகு சர்க்கரை காம்பாற்செந் தேற லொத்துரை தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் புதல்வோனே தீண்பார்க்குன் போத முற்றுற மாண்டார்க்கொண் டோது முக்கிய தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் பெருமாளே. 63. முகிலாமெனு மளகம் காட்டி மதிபோலுயர் நுதலும் காட்டி முகிழாகிய நகையும் காட்டி அமுதூறு மொழியாகிய மதுரம் காட்டி விழியாகிய கணையும் காட்டி முகமாகிய கமலம் காட்டி மலைபோலே வகையாமிள முலையுங் காட்டி யிடையாகிய கொடியுங் காட்டி வளமானகை வளையுங் காட்டி யிதமான மணிசேர்டி தடமுங் காட்டி மிகவேதொழி லதிகங் காட்டு மடமாதர்கள் மயலின் சேற்றி லுழல்வேனோ நகையால்மத னுருவந் தீத்த சிவனாரருள் சுதனென் றார்க்கு நலனேயரு ளமர்செந் தூர்க்கு ளுறைவோனே நவமாமணி வடமும் பூத்த தனமாதெனு மிபமின் சேர்க்கை நழுவாவகை பிரியங் காட்டு முருகோனே அகமேவிய நிருதன் போர்க்கு வரவேசமர் புரியுந் தோற்ற மறியாமலு மபயங் காட்டி முறைகூறி அயிராவத முதுகின் தோற்றி யடையாமென இனிதன் பேத்து மமரேசனை முழுதுங் காத்த பெருமாளே. 64. முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு முறுவ லுஞ்சி வந்த கனிவாயும் முருக வீழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த முகிலு மின்ப சிங்கி விழிவேலும் சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த திருமு கந்த தும்பு குறுவேர்வும் தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று செயல ழிந்து ழன்று திரிவேனோ மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு வழிதி றந்த செங்கை வடிவேலா வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை மணிவ டம்பு தைந்த புயவேளே அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க மலறி வந்து கஞ்ச மலர்மீதே அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே. 65. மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு கூட்டிற் புக்குயி ரலையாமுன் கூற்றத் தத்துவ பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர் காப்பைக் கட்டவர் குருநாதா காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல காப்புக் குத்திர மொழிவோனே வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள் வாய்க்குச் சித்திர முருகோனே வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை வாய்க்குட் பொற்பமர் பெருமாளே. 66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர் தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற துளதாகி நாளுமதி வேக கால்கொண்டு திமண்ட வாசியன லூடு போயொன்றி வானின்க ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப அமுதூறல் நாடியதன் மீத போய்நின்ற ஆநந்த மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல் பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த காலன்விழ மோதுசாமுண்டி பாரம்பொ டனல்வாயு காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து தொழுமாது வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல் வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை யிளையோனே மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற பெருமாளே. 67. வஞ்சஞ்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ குண்டுங்குன் றுங்கர டார்மர மதும்வீசி மிண்டுந்துங் கங்களி னாலெத கர்ந்தங்கப் கங்கர மார்பொடு மின்சந்துஞ் சிந்திநி சாசரர் வகைசேர வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை நிணமூளை உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள் தந்தென்றின் பந்தரு வீடது தருவாயே சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட மெங்கெங்கும் பொங்கம காபுனி தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் பெருமாளே. 68. வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக் கொடியிடை மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரும் மண்டிக் கதறிட வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை தரவேணும் கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து கன்றச் சிறையிடு மயில்வீரா கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் கண்டத் தழகிய திருமார்பா செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற் பதிநகர் உறைவோனே செம்பொற் குலவட குன்றைக் கடலிடை சிந்தப் பொரவல பெருமாளே. 69. வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப யின்றவீடு கொந்த ளைந்த குந்த ளந்த ழைந்து குங்கு மந்த யங்கு கொங்கை வஞ்சி தஞ்ச மென்று மங்குகாலம் கொங்க டம்பு கொங்கு பொங்கு பைங்க் டம்பு தண்டை கொஞ்சு செஞ்ச தங்கை தங்கு பங்க யங்கள்தாராய் சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு மந்த ரஞ்செ ழுங்க ரும்பு கந்த ரம்பை செண்ப தங்கொள் செந்தில்வாழ்வே தண்க டங்க டந்து சென்று பண்க டர்ந்த இன்சொல் திண்பு னந்து குந்து கண்டி அந்த கன்க லந்து வந்து கந்த ரங்க லந்த சிந்து ரஞ்சி றந்து வந்த லம்பு அம்பு னம்பு வந்த நண்பர் சம்பு நன்பு ரந்த ரன்த ரம்ப லும்பர் கும்பர் நம்பு தம்பிரனே 70. பெரியார் கருங்கண் மடமாதர் மகவாசை தொந்த மதுவாகி இருபோது நைந்து மெலியாதே இருதாளி னன்பு தருவாயே பரிபால னஞ்செய் தருள்வோனே பரமேசு ரன்ற னருள்பாலா அரிகேச வன்றன் மருகோனே அலைவா யமர்ந்த பெருமாளே. 71. விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் மேறி யென்களை யாற வந்தருள் பாத எந்தணு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி யருள்பாலா சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி லணைவோனே சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் பெருமாளே. 72. வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு வின்ப சாகர மோவடு வகிரோமுன் வெந்து போன புராதன சம்ப ராரி புராரியை வென்ற சாயக மோகரு விளையோகண் தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத சங்க மாதர் பயோதர மதில்மூழ்கு சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு தண்டை சேர்கழ லீவது மொருநாளே பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர் பண்டு போலம ராவதி குடியேறப் பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை பங்க நீறெழ வேல்வீடு மிளையோனே செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாமதி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சூழ்தரு செந்தில் மாநகர் மேவிய பெருமாளே. 73. அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட் பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித் தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் சமனோலை அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப் பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற் கரையவுற வினரலற வுந்திச் சந்தித் தெருவூடே எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப் பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக் கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் கெனநாடா திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட் டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட் டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் பகிராதோ குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச் சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக் குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் கொடியாடக் குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக் கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத் தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகுதீதோ திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத் தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத் திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் குருநாதா திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப் புரளஎறி திரைமகர சங்கத் துங்கத் திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் பெருமாளே. 74. கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங் குமுதஅமு திதழ்பருகி யின்புறும் சங்கையன் குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் பண்புலாவக் கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன் குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளம் குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் தொன்றுபாய்மேல் விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும் வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும் மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் செஞ்செநீடும் வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென் றவிழவுள சிறுகமல மன்பிலன் தந்திலன் விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் தன்புறாதோ படமிலகு மரவினுட லங்கமும் பங்கிடந் துதருமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம் பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் சிந்தும்வேலா படியவரு மிமையவரும் நின்றிறைஞ் செண்குணன் பழையஇறை யுருவமிலி யன்பர்பங் கன்பெரும் பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணன் கங்கைமான்வாழ் சடிலமிசை யழகுபுனை கொன்றையும் பண்புறுந் தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண் சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் பொங்கிநீடும் சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின் றுலகுதரு கவுரியுமை கொங்கைஅந் தன்புறும் தமிழ்விரக வுயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே. 75. அம்பொத் தவிழித் தந்தக் கலகத் தஞ்சிக் கமலக் கணையாலே அன்றிற் குமனற் றென்றற் குமிளைத் தந்திப் பொழுதிற் பிறையாலே எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற் றின்பக் கலவித் துயரானாள் என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக் கின்பப் புலியுற் றிடலாமோ கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக் கொங்கைக் குறவிக் கினியோனே கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச் சிந்தக் கறுவிப் பொரும்வேலா செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச் செந்திற் குமரப் பெருமாளே. 76. கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற் கொண்டற் குழவிற் கொடிதான கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற் கொஞ்சுக் கிளியுற் றுறவான சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற் சந்திப் பவரைச் சருவாதே சந்தப் படியுற் றென்றற் றலையிற் சந்தப் பதம்வைத் தருள்வாயே அங்கப் படைவிட் டன்றைப் படுகைத் கந்திக் கடலிற் கடிதோடா அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற் றஞ்சப் பொருதுற் றொழியாதே செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற் சென்றுற் றவர்தற் பொருளானாய் சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற் செந்திற் குமரப் பெருமாளே. 77. புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் புகழ்வோனும் திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் திகிரிச் செங்கைத் திருமாலும் திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் டெளிதற் கொன்றைத் தரவேணும் தகரத் தந்தச் சிகரத் தொன்றித் தடநற் கஞ்சத் துறைவோனே தருணக் கொங்கைக் குறவிக் கின்பத் தையளித் தன்புற் றருள்வோனே பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப் படியிற் சிந்தத் தொடும்வேலா பவளத் துங்கப் புரிசைச் செந்திற் பதியிற் கந்தப் பெருமாளே. 78. அளக பாரம லைந்துகு லைந்திட வதனம் வேர்வுது லங்கிந லங்கிட அவச மோகம் விளைந்ததுத ளைந்திட அணைமீதே அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து அதர பானம ருந்திம ருங்கிற முலைமேல்வீழ்ந் துளமும் வேறுப டும்படி யொன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குத லொழியு மாறு தெளிந்துள மன்பொடு சிவயோகத் துருகு ஞானப ரம்பர தந்திர அறிவி னோர்கரு தங்கொள் சிலம்பணி உபய சீதள பங்கய மென்கழல் தருவாயே இளகி டாவளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம்புனை யிரதி வேள்பணி தந்தையும் அந்தண மறையோனும் இனிது றாதெதி ரிந்திர னண்டரும் அரஹ ராசிவ சங்கர சங்கர எனமி காவரு நஞ்சினை யுண்டவ ரருள்பாலா வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன் மகர வாரிக டைந்தநெ டும்புயல் மருகோனே வளரும் வாழையு மஞ்சளு மிஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே. 79. கமல மாதுட னிந்துரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையி லங்கையி லிருபோதேய் களபு நூல்தெரி வஞ்சனை யஞ்சன விழியின் மோகித கந்த சுகந்தரு கரிய வோதியி லிந்து முகந்தனின் மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவி லாதஅ றம்பொரு ளின்பமு மடையவோதியு ணர்ந்து தணந்தபின் அருள்தானே அறியு மாறுபெ றும்படி யன்பினி னினிய நாதசி லம்புபு லம்பிடு மருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய் குமரி காளிப யங்கரி சங்கரி கவுரி நீலிப ரம்பரை யம்பிகை குடிலை யோகினி சண்டினி குண்டலி யெமதாயி குறைவி லாளுமை மந்தரி யந்தரி வெகுவி தாகம சுந்தரி தந்தருள் குமர மூஷிக முந்திய ஐங்கர கணராயன் மமவி நாயக னஞ்சுமிழ் கஞ்சுகி அணிக ஜானன விம்பனொ ரம்புலி மவுலி யானுறு சிந்தையு கந்தரு ளிளையோனே வளரும் வாழையு மஞ்சளு மிஞ்சியும் இடைவி டாது நெருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே. 80. அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு திண்டாட் டஞ்சற் றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் றமுநாளும் பதறிய அங்காப் பும்பத் தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கண்பார்த் தன்புற் றருளாயோ தவநெறி குன்றாப் பண்பிற் றுறவின ருந்தோற் றஞ்சத் தனிமல ரஞ்சார்ப் புங்கத் தமராடி தமிழினி தென்காற் கன்றிற் றிரிதரு கஞ்சாக் கன்றைத் தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச் சிவவடி வங்காட் டுஞ்சற் குருபர தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் கரைமோதும் தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றுங்கோட் டிஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே. 81. தொடரிய மன்போற் றுங்கப் படையைவளைந்தோட் டுந்துட் டரையிள குந்தோட் கொங்கைக் கிடுமாயத் துகிலவிழ வுஞ்சேர்த் தங்கத் துளைவிர குஞ்சூழ்த் தண்டித் துயர்விளை யுஞ்சூட் டின்பத் தொடுபாயற் கிடைகொடு சென்றீட் டும்பொற் பணியரை மென்றேற் றங்கற் றனையென இன்றோட் டென்றற் கிடுமாதர்க் கினிமையி லொன்றாய்ச் சென்றுட் படுமன முன்றாட் கன்புற் றியலிசை கொண்டேத் தென்றுட் டருவாயே நெடிதுத வங்கூர்க் குஞ்சற் புருடரும் நைந்தேக் கம்பெற் றயர்வுற் நின்றார்த் தங்கட் கணையேவும் நிகரில்ம தன்தேர்க் குன்றற் றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச் சிறிதுநி னைந்தாட் டங்கற் றிடுவோர்முன் திடமுறு அன்பாற் சிந்தைக் கறிவிட முஞ்சேர்த் தும்பர்க் கிடர்களை யும்போர்ச் செங்கைத் திறல்வேலா தினவரி வண்டார்த் தின்புற் றிசைகொடு வந்தேத் திஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே. 82. அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் தூவிகு லாவிய சீறடி மடமானார் அருக்கன் போலொளி வீசிய மாமர கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை யாவி யிடேறிட நெறிபாரா வினைச்சண் டாளனை வீணனை நீணிதி தனைக்கண் டாணவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி பகராதே விகற்பாங் கூறிடு மோகவி காரனை அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் பெறுவேனோ முனைச்சங் கோலிடு நீலம கோததி அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் மருகோனே முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி திரைக்கங் காநதி தாதகி கூவிள முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு முருகோனே தினைச்செங் கானக வேடுவ ரானவர் திகைத்தந் தோவென வேகணி யாகிய திறற்கந் தாவளி நாயகி காமுறும் எழில்வேலா சிறக்குந் தாமரை யோடையில் மேடையில் நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் பெருமாளே. 83. உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள் உருட்டும் பார்னையர் மாபழி காரிகள் மதியாதே உரைக்கும் வீரிகள் கோளர வாமென வுடற்றுந் தாதியர் காசள வேமனம் உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் புரிவேனோ அருக்கன் போலொளி வீசிய மாமுடி யனைத்தும் தானழ காய்நல மேதர அருட்கண் பார்வையி னாலடி யார்தமை மகிழ்வோடே அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண வடிப்பந் தானென வேயெனை நாடொறும் அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட னினிதாள்வாய் இருக்குங் காரண மீறிய வேதமும் இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள் இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ முடன்மேவி இலக்கந் தானென வேதொழ வேமகிழ் விருப்பங் கூர்தரு மாதியு மாயுல கிறுக்குந் தாதகி சூடிய வேணிய னருள்பாலா திருக்குந் தாபதர் வேதிய ராதியர் துதிக்குங் தாளுடை நாயக னாகிய செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ் திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே. 84. நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள் கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள் நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல தடவாமேல் நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம் ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி யெனவோதி உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை யுருக்குந் தூவைகள் செட்டை குணந்தனி லுழலாமே உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ் கடப்பந் தாரும கப்ரபை யுந்தினம் உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட அருள்வாயே கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் மருகோனே கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி திருச்செங் கோடு இடைக்கழி தண்டலை களர்ச்செங் காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவ நடக்குந் தேரனி கப்படை கொண்டமர் செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை யுருவானோன் செருக்குஞ் சூரக லத்தை யிடந்துயிர் குடிக்கும் கூரிய சத்திய மர்ந்தருள் திருச்செந் தூர்நக ரிக்குள் விளங்கிய பெருமாளே. 85. கரிக்கொம்பந் தனித்தங்கங் குடத்தின்பந் தனத்தின்கண் கறுப்புந்தன் சிவப்புஞ்செம் பொறிதோள்சேர் கணைக்கும்பண் டுழைக்கும்பங் களிக்கும்பண் பொழிக்குங்கண் கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் குழையாடச் சரக்குஞ்சம் புடைக்கும்பொன் றுகிற்றந்தந் தரிக்குந்தன் சடத்தும்பண் பிலுக்குஞ்சம் பளமாதர் சலித்தும்பின் சிரித்துங்கொண் டழைத்துஞ்சண் பசப்பும்பொன் தனத்துன்பந் தவிப்புண்டிங் குழல்வேனோ சுரர்ச்சங்கம் துதித்தந்தஞ் செழுத்தின்பங் களித்துண்பண் சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் சுகராரைத் துவைத்தும்பந் தடித்துஞ்சங் கொலித்துங்குன் றிடித்தும்பண் சுகித்துங்கண் களிப்புங்கொண் டிடும்வேலா சிரப்பண்புங் கரப்பண்புங் கடப்பந்தொங் கலிற்பண்புஞ் சிவப்பண்புந் தவப்பண்புந் தருவோனே தினைத்தொந்தங் குறப்பெண்பண் சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ் செழிக்குஞ்செந் திலிற்றங்கும் பெருமாளே. 86. கருப்பந்தங் கிரத்தம்பொங் கரைப்புண்கொண் டுருக்கும்பெண் களைக்கண்டங் கவர்ப்பின்சென் றவரோடே கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந் துவக்குண்டும் பிணக்குண்டுங் கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் தடுமாறிச் செருத்தண்டந் தரித்தண்டம் பகத்தண்டந் தகற்கென்றுந் திகைத்தந்திண் செகத்தஞ்சுங் கொடுமாயும் தியக்கங்கண் டுயக்கொண்டென் பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ் சிதைத்துன்றன் பதத்தின்பந் தருவாயே அருக்கன்சஞ் சரிக்குந்தெண் டிரைக்கண்சென் றரக்கன்பண் பனைத்தும்பொன் றிடக்கன்றுங் கதிர்வேலா அணிச்சங்கங் கொழிக்குந்தண் டலைப்பண்பெண் டிசைக்குங்கொந் தளிக்குஞ்செந் திலிற்றங்குங் குமரேசா புரக்குஞ்சங் கரிக்குஞ்சங் கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம் புதுக்குங்கங் கையட்குந்தஞ் சுதனானாய் புனக்குன்றந் திளைக்குஞ்செந் தினைப்பைம்பொன் குறக்கொம்பின் புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் பெருமாளே. 87. குழைக்குஞ்சந் தனச்செங்குங் குமத்தின்சந் தநற்குன்றங் குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் கியலாலே குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென் றுரைக்குஞ்செய் கயற்கண்கொண் டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் கியராலே உழைக்குஞ்சங் கடத்துன்பன் சுகப்பண்டஞ் சுகித்துண்டுண் டுடற்பிண்டம் பருத்தின்றிங் குழலாதே உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும் ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண் டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் சடிசேராய் தழைக்குங்கொன் றையைச்செம்பொன் சடைக்கண்டங் கியைத்தங்குந் தரத்தஞ்செம் புயத்தொன்றும் பெருமானார் தனிப்பங்கின் புறத்தின்செம் பரத்தின்பங் கயத்தின்சஞ் சரிக்குஞ்சங் கரிக்கென்றும் பெருவாழ்வே கழைக்குங்குஞ் சரக்கொம்புங் கலைக்கொம்புங் கதித்தென்றுங் கயற்கண்பண் பளிக்குந்திண் புயவேளே கறுக்குங்கொண் டலிற்பொங்கும் கடற்சங்கங் கொழிக்கும்செந் திலிற்கொண்டன் பினிற்றங்கும் பெருமாளே. 88. மனத்தின்பங் கெனத்தங்கைம் புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் படிகாலன் மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழித்தின் றிங் குறத்தங்கும் பலவோரும் எனக்கென்றிங் குனக்கென்றங் கினத்தின்கண் கணக்கென்றென் றிளைத்தன்புங் கெடுத்தங்கங் கழிவாமுன் இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங் கிரக்கும்புன் றொழிப்பங்கங் கெடத்துன்பங் கழித்தின்பம் தருவாயே கனைக்குந்தண் கடற்சங்கங் கரத்தின்கண் தரித்தெங்குங் கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் சிடுமாலும் கதித்தொண்பங் கயத்தன்பண் பனைத்துங்குன் றிடச்சந்தங் களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் பொருளீவாய் திøக்குன்றந் தனிற்றங்குஞ் சிறுப்பெண்குங் குமக்கும்பந் திருச்செம்பொன் புயத்தென்றும் புனைவோனே செழிக்குங்குண் டகழ்ச்சங்கங் கொழிக்குஞ்சந் தனத்தின்பைம் பொழிற்றண்செந் திலிற்றங்கும் பெருமாளே. 89. பருத்தந்தத் தினைத்தந்திட் டிருக்குஞ்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் தனமானார் பரிக்குந்துற் சரக்கொன்றத் திளைத்தங்குற் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் தியைநேரும் துரைச்செங்கட் கடைக்கொன்றிப் பெருத்தின்புற் றிளைத்தங்குத் துணிக்கும்புத் தியைச்சங்கித் தறியேனைத் துணைச்செம்பொற் பதத்தின்புற் றெனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் படியாள்வாய் தருத்தங்கப் பொலத்தண்டத் தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத் தடத்துன்பத் தினைத்தந்திட் டெதிர்சூரன் சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக் கதிர்த்துங்கத் தயிற்கொண்டத் தலத்தும்பர்ப் பதிக்கன்புற் றருள்வோனே திருக்கஞ்சத் தனைக்கண்டித் துறக்கங்குட் டிவிட்டுஞ்சற் சிவற்கன்றப் பொருட்கொஞ்சிப் பகர்வோனே செயத்துங்கக் கொடைத்துங்கத் திருத்தங்கித் தரிக்கும்பொற் றிருச்செந்திற் பதிக்கந்தப் பெருமாளே. 90. பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும் பொதுமாதர் ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் தணையோதே புரக்கைக்குன் பதத்தைத்தந் தெனக்குத்தொண் டுறப்பற்றும் புலத்துக்கண் செழிக்கச்செந் தமிழ்பாடும் புலப்பட்டங் கொடுத்தற்கும் கருத்திற்கண் படக்கிட்டும் புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் புரிவாயே தருக்கிக்கண் களிக்கத்தெண் டனிட்டுத்தண் புனத்திற்செங் குறத்திக்கன் புறச்சித்தந் தளர்வோனே சலிப்புற்றங் குரத்திற்சம் ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன் சமர்த்திற்சங் கரிக்கத்தண் டியசூரன் சிரத்தைச்சென் றறுத்துப்பந் தடித்துத்திண் குவட்டைக்கண் டிடித்துச்செந் திலிற்புக்கங் குறைவோனே சிறக்கற்கஞ் செழுத்தத்தந் திருச்சிற்றம் பலத்தத்தன் செவிக்குப்பண் புறச்செப்பும் பெருமாளே. 91. காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் காலினார் தந்துடன் கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் திருமார்புந் தூயதாள் தண்டையுந் காணஆர் வஞ்செயுந் தோகைமேல் கொண்டுமுன் வரவேணும் ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந் தேவர்வா ழன்றுகந் தமுதீயும் ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந் தாதிமா யன்றனன் மருகோனே சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ் சாரலார் செந்திலம் பதிவாழ்வே தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந் தாரைவே லுந்திடும் பெருமாளே. 92. சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலெ சஞ்சலா ரம்பமாயன்- சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா சம்ப்ரமா நந்தமாயன்; மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால் வம்பிலே துன்புறாமே- வண்குகா நின்சொரு பம்ப்ரகா சங்கொடே வந்துநீ யன்பிலாள்வாய்; கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சையூரா- கம்பியா திந்த்ரலோ கங்கள் கா வென்றவா கண்டலே சன்சொல்வீரா; செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே சென்றுமோ தும்ப்ரதாபா- செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள் செந்தில் வாழ் தம்பிரானே. 93. சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் சந்தமோ கின்பமுத் தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப் பென்றுதாழ் வொன்றறுத் துலகோரைத் துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற் கொண்டுதாய் நின்றுரைத் துழலாதே துன்பநோய் சிந்துநந் கந்தவே ளென்றுனைத் தொண்டினை லொன்றுரைக் கருள்வாயே வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத் துண்டுமே லண்டருக் கமுதாக விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக் குண்டுபே ரம்பலத் தினிலாடி செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத் தின்கணா டுந்திறற் கதிராழித் திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச் செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே. 94. பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற் பந்தபா சந்தனிற் றடுமாறிப் பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப் பண்பிலா டம்பரப் பொதுமாதர் தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச் சங்கைமால் கொண்டிளைத் தயராதே தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனைத் தந்துநீ யன்புவைத் தருள்வாயே அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத் தண்டவே தண்டமுட் படவேதான் அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற் கண்டலோ கங்கொடுத் தருள்வோனே திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற் செஞ்சடா பஞ்சரத் துறுதோகை சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற் செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே. 95. சத்தமிகு மேழுகட லைத்தேனை யுற்றமது தோடுகணை யைப்போர்கொள் சத்திதனை மாவின்வடு வைக்காவி தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவை மிக்கவிளை வானகடு வைச்சீறு தத்துகளும் வாளையடு மைப்பாவு விழிமாதர் மத்தகிரி போலுமொளிர் வித்தார முத்துவட மேவுமெழில் மிக்கான வச்சிரகி ரீடநிகர் செப்பான தனமீதே வைத்தகொடி தானமயல் விட்டான பத்திசெய ஏழையடி மைக்காக வஜ்ரமயில் மீதிலினி யெப்போது வருவாயே சித்ரவடி வேல்பனிரு கைக்கார பத்திபுரி வோர்கள்பனு வற்கார திக்கினு நடாவுபுர விக்கார குறமாது சித்தஅநு ராககல விக்கார துட்டஅசு ரேசர்கல சுக்கார சிட்டர்பரி பாலலளி தக்கார அடியார்கள் முத்திபெற வேசொல்வச னக்கார தத்தைநிகர் தூயவனி தைக்கார முச்சகர்ப் ராவுசர ணக்கார இனிதான முத்தமிழை யாயும்வரி சைக்கார பச்சைமுகில் தாவுபுரி சைக்கார முத்துலவு வேலைநகர் முத்தேவர் பெருமாளே. 96. சந்தனச வாதுநிறை கற்பூர குங்குமப டீரவிரை கத்தூரி தண்ழுக ளாவுகள பச்சீத வெகுவாச சண்பகக லாரவகு ளத்தாம வம்புதுகி லாரவயி ரக்கோவை தங்கியக டோரதர வித்தார பரிதான மந்தரம தானதன மிக்காசை கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர வஞ்சகவி சாரஇத யப்பூவை யனையார்கள் வந்தியிடு மாயவிர கப்பார்வை அம்பிலுளம் வாடுமறி வற்றேனை வந்தடிமை யாளஇனி யெப்போது நினைவாயே இந்த்ரபுரி காவலமுதன் மைக்கார சம்ப்ரமம யூரதுர கக்கார என்றுமக லாதஇள மைக்கார குறமாதின் இன்பஅநு போகசர சக்கார வந்த அசு ரேசர்கல கக்கார எங்களுமை சேயெனரு மைக்கார மிகுபாவின் செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார குன்றெறியும் வேலின்வலி மைக்கார செஞ்சொலடி யார்களெளி மைக்கார திங்கள்முடி நாதர்சம யக்கார மந்த்ரவுப தேசமகி மைக்கார செந்தினகர் வாழுமரு மைத்தேவர் பெருமாளே. 97. முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே- முந்தைவினை யேட ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே; திந்திதிமி தோதி தீதித் தீதி தந்ததன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத்தோடு நடமாடுஞ்- செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்க அநுகூல பார்வைத் தீர செம்பொன் மயில் மீதி லேயெப் போது வருவாயே; அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே- அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம் வெகு வான ரூபக் கார எழிலான; சிந்துரமின் மேவு போகக் கார விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான- செஞ்சமரை மாயு மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே. 98. தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர் தண்டார் மஞ்சுக் குழல்மானார் தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே சம்பா வஞ்சொற் றடிநாயேன் மண்டோ யந்தீ மென்கால் விண்டோய் வண்கா யம்பொய்க் குடில்வேறாய் வன்கா னம்போ யண்டா முன்பே வந்தே நின்பொற் கழல்தாராய் கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர் கொன்றாய் வென்றிக் குமரேசா கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர் குன்றா மன்றற் கிரியோனே கண்டா கும்பா லுண்டா யண்டார் கண்டா கந்தப் புயவேளே கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா கந்தா செந்திற் பெருமாளே. 99. வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப பொருள்தேடி வங்கா ளஞ்சோ னம்சீ னம்போய் வன்பே துன்பப் படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் பொழுதாள்வாய் கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் கினியோனே குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ ரும்போய் மங்கப் பொருகோபா கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் கன்றே யும்பர்க் கொருநாதா கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் பெருமாளே. 100. விதிபோலு முந்த விழியாலு மிந்து நுதலாலு மொன்றி யிளைஞோர்தம் விரிவான சிந்தை யுருவாகி நொந்து விறல்வேறு சிந்தை வினையாலே இதமாகி யின்ப மதுபோத வுண்டு இனிதாளு மென்று மொழிமாதர் இருளாய துன்ப மருள்மாயை வந்து எனையீர்வ தென்றும் ஒழியாதோ மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி வருமால முண்டு விடையேறி மறவாத சிந்தை யடியார்கள் பங்கில் வருதேவ சம்பு தருபாலா அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற அயில்வேல்கொ டன்று பொரும்வீரா அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த பெருமாளே. 101. விறல்மார னைந்து மலர்வாளி சிந்த சிகவானி லிந்து வெயில்காய- மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினை மாதர் தந்தம் வசைகூற; குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர- குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ; மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா- மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா; அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு மடியா ரிடைஞ்சல் களைவோனே- அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே. 102. அங்கை மென்குழ லாய்வார் போலே சந்தி நின்றய லோடே போவா ரன்பு கொண்டிட நீரோ போறீ ரறியீரோ அன்று வந்தொரு நாள்நீர் போனீர் பின்பு கண்டறி யோநா மீதே அன்று மின்றுமொர் போதோ போகா துயில்வாரா எங்க ளந்தரம் வேறா ரோர்வார் பண்டு தந்தது போதா தோமே லின்று தந்தற வோதா னீதே னிதுபோதா திங்கு நின்றதென் வீடே வாரீ ரென்றி ணங்கிகள் மாயா லீலா இன்ப சிங்கியில் வீணே வீழா தருள்வாயே மங்கு லின்புறு வானாய் வானூ டன்ற ரும்பிய காலாய் நீள்கால் மண்டு றும்பகை நீறா வீறா ளிதீயாய் வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ் அம்ப ரம்புனை பாராய் பாரேழ் மண்ட லம்புகழ் நீயாய் நானாய் மலரோனாய் உங்கள் சங்கரர் தாமாய் நாமார் அண்ட பந்திகள் தாமாய் வானாய் ஒன்றி னுங்கடை தோயா மாயேன் மருகோனே ஒண்த டம்பொழில் நீடூர் கோடூர் செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர் உண்ட நெஞ்சறி தேனே வானோர் பெருமாளே. 103. தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையும் தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்- தந்தையினி முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்து நின் றன்பு போலக்; கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்- கண்களுமு கங்களுஞ் சந்திர நிறங்களுங் கண்குளிர என்றன்முன் சந்தியாவோ; புண்டரிக ரண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் கொண்டபோது- பொன்கிரியே னஞ்சிறந்தெங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையுஞ் சிந்தை கூரக்; கொண்டநட னம்பதஞ் செந்திலிலு மென்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே- கொங்கை குற மங்கையின் சந்தமண முண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே. மூன்றாம் படைவீடு - பழநி (திருவாவினன் குடி) 104. நாத விந்துக லாதி நமோநம வேத மந்த்ரசொரூபா நமோநம வெகுகோடி ஞான பண்டித ஸாமீ நமோநம நாம சம்புகு மாரா பாலா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூர் சேத தண்டவி நோதா நமோம கீத கிண்கிணி பாதா நமோநம கிரிராஜ தீர சம்ப்ரம வீரா நமோநம தீப மங்கள ஜோதீ நமோநம. தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய் ஈத லும்பல கோலால பூஜையும் ஓத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத எழ்த லாம்புகழ் காவேரி யால்விளை சோழ மண்டல மீதேம னோகர ராஜ öம்பிபர நாடாளு நாயக வயலூரா ஆத ரம்பயி லாரூரர் கோதுமை சேர்தல் கொண்ட ரோடேமு னாளிகனில் ஆடல் வெம்பரி மீதேறி மாகவி லையிலகி ஆதி யந்தவு லாவாசு பாடிய சேரர் கொங்குவை காவூர்ந னாடியில் 105. போத கந்தரு கோவே நமோநம நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் ஸாமீ நமோநம அரிதானை வேத மந்திர ரூபா நமோநம ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டைகொள் தாளா நமோநம அழகான மேனி தங்கிய வேளே நமோநம வ்õன பைந்தொடி வாழ்வே நமோநம வீறு கொண்டவி சாகா நமோநம அருள்தாராய் பாத கஞ்செறி சூரதி மாளவெ கூர்மை கொண்டயி லாலேபொ ராடியே பார அண்டர்கள் வானாடு, ÷ர்சந்தர அருள்வோனே பாதி சந்திர னேசூடும் வேணியர் சூல சங்கர னார்கீத நாயகர் பார திண்புய மேசேரு சோதியர் கயிலாயர் ஆதி சங்கர னார்பாக மாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயான நாணி அபிராமி ஆவல் கொண்டுவி றாலேசி ராடவெ கோம ளம்பல சூழ்கோயில் மீறிய ஆவி னன்குடி வாழ்வான் தேவர்கள் பெருமளே!. 106. வார ணந்தனை நேரான மாமுலை மீத ணிந்திடு பூணார மாரொளி வால சந்திர னேராக மாமுக மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழி யோலை தங்கிய வார்காது வாவிட வான இன்சுதை மேலான வாயித ழமுதூறத் தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ தோகை யென்றிட வாகாக வூரன நடைமானார் தோத கந்தனை மாமாயை யேவடி வாக நின்றதெ னாஆய வோர்வது தோணி டும்படி நாயேனுள் நீயருள் புரிவாயே கார ணந்தனை யோராநி சாசரர் தாம டங்கலு மீறாக வானவர் காவ லிந்திர னாடாள வேயயில் விடும்வீரா கார்வி டந்தனை யூணாக வானவர் வாழ்த ரும்படி மேனாளி லேமிசை காள கண்டம காதேவ னார்தரு முருகோனே ஆர ணன்றனை வாதாடி யோருரை ஓது கின்றென வாராதெ னாவவ னாண வங்கெட வேகாவ லாமதி லிடும்வேலா ஆத வன்கதி ரோவாது லாவிய கோபு ரங்கிளர் மாமாது மேவிய ஆவி னன்குடி யோனேசு ராதிபர் பெருமாளே. 107. மூல மந்திர மோத லிங்கிலை யீவ திங்கிலை நேய மிங்கிலை மோன மிங்கிலை ஞான மிங்கிலை மடவார்கள் மோக முண்டதி தாக முண்டப சார முண்டப ராத முண்டிடு மூக னென்றொரு பேரு முண்டருள் பயிலாத கோல முங்குண வீன துன்பர்கள் வார்மை யும்பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந்திட நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே பீலி வெந்துய ராவி வெந்தவ சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டருள் எழுதேடு பேணி யங்கெதி ராறு சென்றிட மாற னும்பிணி தீர வஞ்சகர் பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே ஆல முண்டவர் சோதி யங்கணர் பாக மொன்றிய வாலை யந்தரி ஆதி யந்தமு மான சங்கரி குமரேசா ஆர ணம்பயில் ஞான புங்கவ சேவ லங்கொடி யான பைங்கர ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே. 108. வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையி லேமு யங்கிட வீணி லுஞ்சில பாத கஞ்செய அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியு மேயு லைந்தவ மேதி ரிந்துள மேக வன்றறி வேக லங்கிட வெகுதூரம் போய லைந்துழ லாகி நொந்துபின் வாடி நைந்தென தாவி வெம்பியெ பூத லந்தனி லேம யங்கிய மதிபோகப் போது கங்கையி னீர்சொ ரிந்திரு பாத பங்கய மேவ ணங்கியெ பூசை யுஞ்சில வேபு ரிந்திட அருள்வாயே தீயி சைந்தெழ வேயி லங்கையில் ராவ ணன்சிர மேய ரிந்தவர் சேனை யுஞ்செல மாள வென்றவன் மருகோனே தேச மெங்கணு மேபு ரந்திடு சூர்ம டிந்திட வேலின் வென்றவ தேவர் தம்பதி யாள அன்புசெய் திடுவோனே ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி ஆதி யம்பிகை வேத தந்திரி யிடமாகும் ஆல முண்டர னாரி றைஞ்சவொர் போத கந்தனை யேயு கந்தருள் ஆவி னன்குடி மீதி லங்கிய பெருமாளே. 109. கோல குங்கும கற்புர மெட்டொன் றான சந்தன வித்துரு மத்தின் கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் கழுநீரின் கோதை சங்கிலி யுற்றக ழுத்தும் பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங் கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் பொதுமாதர் பாலு டன்கனி சர்க்கரை சுத்தந் தேனெ னும்படி மெத்தரு சிக்கும் பாத கம்பகர் சொற்களி லிட்டம் பயிலாமே பாத பங்கய முற்றிட வுட்கொண் டோது கின்றதி ருப்புகழ் நித்தம் பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் தவனீயே தால முன்புப டைத்தப்ர புச்சந் தேக மின்றிம திக்கவ திர்க்குஞ் சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் தலைசாயச் சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ் சூர னும்பொடி பட்டிட யுத்தஞ் சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் தனிவேலா ஆல முண்டக ழுத்தினி லக்குந் தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென் றாடு கின்றத கப்பனு கக்குங் குருநாதா ஆட கம்புனை பொற்குடம் வைக்குங் கோபு ரங்களி னுச்சியு டுத்தங் காவி னன்குடி வெற்பினி னிற்கும் பெருமாளே. 110. அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே இமவான்ம டந்தையுத் தமிபாலா ஜெபமாலை தந்தசற் குருநாதா திருவாவி னன்குடிப் பெருமாளே. 111. கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற் புரமா ரணந்துளுத் திடுமானார் கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப் பொருளே யிழந்துவிட் டயர்வாயே மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட் டறவே யுலந்துசுக் கதுபோலே வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப் பெனவே நினைந்துனைப் புகழ்வேனோ புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப் புணர்காதல் கொண்டஅக் கிழவோனே புனலேழு மங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட் டெழவே லெறிந்தவுக் கிரவீரா தினமேவு குங்குமப் புயவாச கிண்கிணிச் சிறுகீத செம்பதத் தருளாளா சிவலோக சங்கரிக் கிறைபால பைங்கயத் திருவாவி னன்குடிப் பெருமாளே. 112. கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக் காதல் நெஞ்சயரத் தடுமாறிக் கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க் காய மொன்றுபொறுத் தடியேனும் தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச் சாப மொன்றுநுதற் கொடியார்தம் தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத் தாழ்வ டைந்துலையத் தகுமோதான் சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத் தோய முஞ்சுவறப் பொரும்வேலா தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச் சூழ்பெ ருங்கிரியில் திரிவோனே ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற் றால முண்டவருக் குரியோனே ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற் றாவி னன்குடியின் பெருமாளே. 113. சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலும் அடியேனை அஞ்சலென வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே நவலோக முங்கைதொழ நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் பெருமாளே. 114. பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சிலபாட லன்பொடு பயிலப்பல காவி யங்களை யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய்ம டந்தையர் பசலைத்தன மேபெ றும்படி விரகாலே சகரக்கடல் சூழ மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல் சருகொத்துள மேய யர்ந்துடல் மெலியாமுன் தகதித்தமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி தனிலற்புத மாக வந்தருள் புரிவாயே நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு நுவல்மெய்ப்புள பால னென்றிடு மிளையோனே நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட நொடி யிற்பரி வாக வந்தவன் மருகோனே அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள் அரனுக்கினி தாமொ ழிந்திடு குருநாதா அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி அதனிற்குடி யாயி ருந்தருள் பெருமாளே. 115. வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர் தங்களை வாதை கண்டவர் வங்கண முந்தெரி யாம லன்புகள் பலபேசி மஞ்சமி ருந்தது ராக விந்தைகள் தந்தக டம்பிக ளூற லுண்டிடு மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு முரையாலே சஞ்சல முந்தரு மோக லண்டிகள் இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள் சங்கம மென்பதை யேபு ரிந்தவ னயராதே தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர் கொஞ்சிந டம்பயில வேசை முண்டைகள் தந்தசு கந்தனை யேயு கந்துடல் மெலிவேனோ கஞ்சன்வி டுஞ்சுக டாசு ரன்பட வென்றுகு ருந்தினி லேறி மங்கையர் கண்கள்சி வந்திட வேக லந்தரு முறையாலே கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் மருகோனே குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையும் இன்பமி குந்திடவேய ணைந்தருள் குன்றென வந்தருள் நீப முந்திய மணிமார்பா கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய பண்புத ருந்திரு வாவி னன்குடி குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் பெருமாளே. 116. அணிபட் டணுகித் திணிபட் டமனத் தவர்விட் டவிழிக் கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத் தவன்விட் டமலர்க் கணையாலும் பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற் பெறுமக் குணமுற் றுயிர்மாளும் பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப் பெறுதற் கருளைத் தரவேணும் கணிநற் சொருபத் தையெடுத் துமலைக் கனியைக் கணியுற் றிடுவோனே கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக் கருதிச் சிறைவைத் திடுவோனே பணியப் பணியப் பரமர்ப் பரவப் பரிவுற் றொருசொற் பகர்வோனே பவளத் தவளக் கனகப் புரிசைப் பழநிக் குமரப் பெருமாளே. 117. இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் திடுமாதர் இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற் றிறுகக் குறுகிக் குழல்சோரத் தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித் தழுவிக் கடிசுற் றணைமீதே சருவிச் சருவிக் குனகித் தனகித் தவமற் றுழலக் கடவேனோ அரிபுத் திரசித் தஜனுக் கருமைக் குரியத் திருமைத் துனவேளே அடல்குக் குடநற் கொடி பெற் றெதிருற் றசுரக் கிளையைப் பொருவோனே பரிவுற் றரனுக் கருணற் பொருளைப் பயனுற் றறியப் பகர்வோனே பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் பெருமாளே. 118. கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற் ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக் கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் பவனூணாக் கருதிச் சருவிக் கயலைக் கயமுட் படுவித் துழையைக் கவனத் தடைசிக் கணையைக் கடைவித் துவடுத் தனையுப் பினின்மேவி அடலைச் செயல்சத் தியையக் கினியிற் புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித் தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் தசகோரம் அலறப் பணிரத் நமணிக் குழையைச் சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட் டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் படுவேனோ சடிலத் தவனிட் டவிசிட் டகுலத் தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித் தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் பரிவாலே சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற் குமரர்க் குமநுக் க்ரக மெய்ப் பலகைச் சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் தியில்ஞான படலத் துறுலக் கணலக் யதமிழ்த் த்ரயமத் திலகப் பொருள்வ்ருத தியினைப் பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் குருநாதா பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற் றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப் பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் பெருமாளே. 119. தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத் தநுமுட் டவளைப் பவனாலே தரளத் திரளிற் புரளக் கரளத் மரத் திமிரக் கடலாலே உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக் கொளிமட் குமிகைப் பொழுதாலே உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக் குனநற் பிணையற் றரவேணும் திகைபத் துமுகக் கமலத் தனைமுற் சிறையிட் டபகைத் திறல்வீரா திகழ்கற் பகமிட் டவனக் கனகத் திருவுக் குருகிக் குழைமார்பா பகலக் கிரணப் பரணச் சடிலப் பரமற் கொருசொற் பகர்வோனே பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் பெருமாளே. 120. புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட் பொருமிக் கலசத் திணையாய புளகக் களபக் கெருவத் தனமெய்ப் புணரத் தலையிட் டமரேசெய் அடைவிற் றினமுற் றவசப் படுமெற் கறிவிற் பதடிக் கவமான அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற் றடிமைக் கொருசொற் புகல்வாயே குடமொத் தகடக் கரடக் கலுழிக் குணமெய்க் களிறுக் கிளையோனே குடிபுக் கிடமிட் டசுரப் படையைக் குறுகித் தகரப் பொரும்வேலா படலைச் செறிநற் கதலிக் குலையிற் பழமுற் றொழுகப் புனல்சேர்நீள் பழனக் கரையிற் கழைமுத் துகுநற் பழநிக் குமரப் பெருமாளே 121. கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் தரவேணும் பரிய வரையி னரிவை மருவு பரம ரருளு முருகோனே பழன முழவர் கொழுவி லெழுது பழைய பழநி யமர்வோனே அரியு மயனும் வெருவ வுருவ அரிய கிரியை யெறிவோனே அயிலு மயிலு மறமு நிறமு மழகு முடைய பெருமாளே. 122. தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் அயலாகத் தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே கமல விமல மரக தமணி கனக மருவு மிருபாதம் கருத அருளி யெனது தனிமை கழிய அறிவு தரவேணும் குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா அமர ரிடரு மவுண ருடலு மழிய அமர்செய் தருள்வோனே அறமு நிறமு மயிலு மயிலு மழகு முடைய பெருமாளே. 123. திமிர வுதநி யனைய நரக செனன மதனில் விடுவாயேல்- செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு மணுகாதே; அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின்- அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் வரவேணும்; சமர முகவே லசுரர் தமது தலைக ளுருள மிகவேநீள்- சலதி யலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே; வெமர வணையிலினிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே- மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் பெருமாளே. 124. தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே தனையர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர இசைவாயே சிகர குடையினி னிரைவர இசைதெரி சதுரன் விதுரனில் வருபவ னளையது திருடி யடிபடு சிறியவ னெடியவன் மதுசூதன் திகிரி வளைகதை வசிதநு வுடையவ னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை திமித திமிதிமி யெனநட மிடுமரி மருகோனே பகர புகர்முக மதகரி யுழைதரு வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக பரம குருபர இமகிரி தருமயில் புதல்வோனே பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய நறவு நிறைவயல் கமுகடர் பொழில் திகழ் பழநி மலைவரு புரவல அமரர்கள் பெருமாளே. 125. முருகு செறிகுழல் முகிலென நகில்நறு முளரி முகையென இயலென மயிலென முறுவல் தளவென நடைமட வனமென இருபார்வை முளரி மடலென இடைதுடி யதுவென அதர மிலவென அடியிணை மலரென மொழியு மமுதென முகமெழில் மதியென மடமாதர் உருவ மினையன எனவரு முருவக வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய வுலையின் மெழுகென வுருகிய கசடனை யொழியாமல் உலகை தருகலை பலவுணர் பிறவியி னுவரி தனிலுறு மவலனை யசடனை உனது பரிபுர கழலிணை பெறஅருள் புரிவாயே அரவ மலிகடல் விடமமு துடனெழ அரிய யனுநரை யிபன்முத லனைவரும் அபய மிகவென அதையயி லிமையவ னருள்பாலா அமர்செய் நிசிசர ருடலவை துணிபட அவனி யிடிபட அலைகடல் பொடிபட அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் விடுவோனே பரவு புனமிசை யுறைதரு குறமகள் பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய பணில சரவணை தனில்முள ரியின்வரு முருகோனே பரம குருபர எனுமுரை பரசொடு பரவி யடியவர் துதிசெய மதிதவழ் பழநி மலைதனி லினிதுறையமரர்கள் பெருமாளே. 126. கனத்திறுகிப் பெருத்திளகிப் பணைத்துமணத் திதத்துமுகக் கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் தலமேராய் கவட்டையுமெத் தடக்கிமதர்த் தறக்கெருவித் திதத்திடுநற் கலைச்சவுளித் தலைக்குலவிக் களிகூருந் தனத்தியர்கட் கிதத்துமிகுத் தனற்குண்மெழுக் கெனப்புவியிற் றவித்திழிசொற் பவக்கடலுற் றயர்வாலே சலித்தவெறித் துடக்குமனத் திடக்கனெனச் சிரிக்கமயற் சலத்தின்வசைக் கிணக்கமுறக் கடவேனோ புனத்தின்மலைக் குறத்தியுயர்த் திருக்குதனக் குடத்தினறைப் புயத்தவநற் கருத்தையுடைக் குகவீரா பொருப்பரசற் கிரக்கமொடுற் றறற்சடிலத் தவச்சிவனிற் புலச்சிதனக் கிதத்தைமிகுத் திடுநாதா சினத்தெதிர்துட் டரக்கர்தமைத் திகைத்துவிழக் கணப்பொழுதிற் சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் துடையோனே செருக்கொடுநற் றவக்கமலத் தயற்குமரிக் கருட்புரிசைத் திருப்பழநிக் கிரிக்குமரப் பெருமாளே. 127. குறித்தமணிப் பணித்துகிலைத் திருத்தியுடுத் திருட்குழலைக் குலைத்துமுடித் திலைச்சுருளைப் பிளவோடே குதட்டியதுப் புதட்டைமடித் தயிற்பயிலிட் டழைத்துமருட் கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் குறியாலே பொறித்ததனத் தணைத்துமனச் செருக்கினர்கைப் பொருட்கவரப் புணர்ச்சிதனிற் பிணிப்பிடுவித் திடுமாதர் புலத்தலையிற் செலுத்துமனப் ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப் புரித்தருளித் திருக்கழலைத் தருவாயே பறித்தலைத் திருட்டமணக் குருக்களசட் டுருக்களிடைப் பழுக்களுகக் கழுக்கள்புகத் திருநீறு பரப்பியதத் திருப்பதிபுக் கனற்புனலிற் கனத்தசொலைப் பதித்தெழுதிப் புகட்டதிறற் கவிராசா செறித்தசடைச் சசித்தரியத் தகப்பன்மதித் துகப்பனெனச் சிறக்கவெழுத் தருட்கருணைப் பெருவாழ்வே திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத் தடுத்தடிமைப் படுத்தஅருட் டிருப்பழநிக் கிரிக்குமரப் பெருமாளே. 128. கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு கனதனம் விற்கச் சமைந்த மங்கையர் கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடு மின்பமூறிக் கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு மவச மிகுத்துப் பொருந்தி யின்புறு கலகம் விளைத்துக் கலந்து மண்டணை யங்கமீதே குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல் குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி லங்கம்வேறாய்க் குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர முகதல முத்துப் பொலிந்தி லங்கிட கொடிய மயற்செய்ப் பெருந்த டந்தனில் மங்கலாமோ இலகிய சித்ரப் புனந்த னிந்துறை குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி னினிதுறு பத்மப் ணிந்தருள் கந்தவேளே எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு மிகலர்ப் தைக்கத் தடிந்தி லங்கிய செங்கைவேலா பலவித நற்கற் படர்ந்த சுந்தரி பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு கின்றபாலைப் பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகரென இச்சித் துகந்து கொண்டருள் பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் தம்பிரானே. 129. முகிலன கத்திற் கமழ்ந்த வண்பரி மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ரங்கமீதே முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல் விழியிணை செக்கச் சிவந்து குங்கும ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை யெங்குமேவி உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி லொன்றிமேவி ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற முறுவளை யொக்கக் கலின்க லென்கவு முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ ழிந்திடாதோ செகமுழு தொக்கப் பயந்த சங்கரி அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு மங்கைநீடு திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள் திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை யண்டமீதே பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர் பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி யன்புகூரும் பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள் பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் தம்பிரானே. 130. அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த மகதேவர் மனமகிழ் வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த கழல்வீரா பரமபத மாய செந்தில் முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த பெருமாளே. 131. உலகபசு பாச தொந்த மதுவான உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர் மலசலசு வாச சஞ்ச லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை யணிசேயே சரவணப வாமு குந்தன் மருகோனே பலகலைசி வாக மங்கள் பயில்வோனே பழநிமலை வாழ வந்த பெருமாளே. 132. கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று மறியாமல் அசனமிடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமு நாண மின்றி யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்க ருலகளவு மால்ம கிழ்ந்த மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூதுசென்ற பரமனரு ளால்வ ளர்ந்த குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீளவென்று பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. 133. சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து சுரதக்ரியை யால்வி ளங்கு மதனூலே சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு தொழிலுடைய யானு மிங்கு னடியார்போல் அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து அறிவையறி வால றிந்து நிறைவாகி அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப அமுதையொழி யாத ருந்த அருள்வாயே பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து பரிதகழை யாமுன் வந்து பரிவாலே பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற படைஞரொடி ராவ ணன்ற னுறவோடே எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட ரகுபதியி ராம சந்த்ரன் மருகோனே இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த இமயவள்த னால்ம கிழ்ந்த பெருமாளே. 134. வனிதையுடல் காய நின்ற வுதிரமதி லேயு ருண்டு வயிறில்நெடு நாள லைந்து புவிமீதே மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து வயதுபதி னாறு சென்று வடிவாகிக் கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று கனிவதுட னேய ணைந்து பொருள்தேடிக் கனபொருளெ லாமி ழந்து மயலின்மிக வேய லைந்த கசடனெனை யாள வுன்ற னருள்தாராய் புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த புதல்வியித ழூற லுண்ட புலவோனே பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த புதியமயி லேறு கந்த வடிவேலா பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி பரமகலி யாணி தந்த பெருவாழ்வே பகையசுரர் மாள வென்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதி னின்ற பெருமாளே. 135. மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி மதியொடுபி றந்து முன்பெய் வதையாலே வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த மதலையென வந்து குன்றின் வடிவாகி இருமயல்கொ டுத்து வண்டு பொதுவையர கம்பு குந்து இரவுபகல் கொண்டொ டுங்கி யசடாகும் இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து னிணையடிவ ணங்க என்று பெறுவேனோ திருவொடுபெ யர்ந்தி ருண்ட னவமிசைநடந்தி லங்கை திகழெரியி டுங்கு ரங்கை நெகிழாத திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள் செறிவுடன றிந்து வென்ற பொறியாளர் பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற பரமபத நண்ப ரன்பின் மருகோனே பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க பழநிமலை வந்த மர்ந்த பெருமாளே. 136. விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து விழவதன மதிவி ளங்க அதிமோக விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து விரகமயல் புரியு மின்பு மடவார்பால் இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த இருளகல வுனது தண்டை யணிபாதம் எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி யினியபுகழ் தனைவி ளம்ப அருள்தாராய் அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை அழகி னொடு தழுவு கொண்டல் மருகோனே அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட அமரர்சிறை விடுப்ர சண்ட வடிவேலா பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர்சடையர் விடைய ரன்ப ருளமேவும் பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த பழநிமலை தனில மர்ந்த பெருமாளே. 137. இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி லதுகூவ எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென இகல்புரிய மதன குரு வோராத அனையர்கொடு வசைபேச அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள் அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக மெலிவானாள் அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை வருவாயே நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல் நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் மருகோனே நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி கவுரிபரி ரவியரவ பூணாரி திரிபுவனி நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை யருள்பாலா பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத பதுமகர தலமுருக நால்வேத கரரணிக மயில்வீரா பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் பெருமாளே. 138. இருகனக மாமேரு வோகளப துங்க கடகடின பாடீர வாரமுத கும்ப மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்க னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து தணியாமல் பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து நிலைகாணாப் பிணியினக மேயான பாழுடலை நம்பி உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று திரிவேனோ கருணையுமை மாதேவி காரணிய நந்த சயனகளி கூராரி சோதரிபு ரந்த கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை யருள்பாலா கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு மதிலினொடு மாமாட மேடைகள் துலங்கு கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு புரிவோனே பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு பலிதமென வேயேக மேமயிலில் வந்த குமரேசா பலமலர்க ளே தூவி யாரணந வின்று பரவியிமை யோர்சூத நாடொறுமி சைந்து பழநிமலை மீதோர்ப ராபரணி றைஞ்சு பெருமாளே. 139. சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி யணுகாதே சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல் திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை யொழியாதே மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம் வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது மொருநாளே வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத மருள்வாயே நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு மயிலேறி நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும் நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு முருகோனே குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில் மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு குவிமுலையு மணியிடைபு மெச்சிப் புணர்ச்சிசெயு மணவாளர் குறுமுனிவ னிருபொழுதும் அர்ச்சித்து செப்புத் தமிழ்க்கினிய அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு பெருமாளே. 140. சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி பொரமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் வினைதானே கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன தருள்தார்ய் ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ருளவோனே உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக முதவுமம லாநந்த சத்திகர மேவுணர வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு குருநாதா பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு திறலோனே பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில் சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர் பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் பெருமாளே. 141. தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம் வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே- தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும் வயதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே; உலைவறவி ருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடியினிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம்- உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்; அலைகட லடைத்தேம காகோர ராவணனை மணிமடி துணித்தாவி யேயான சாநகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே- அறுகினை முடித்தோனை யாதார மானவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேயெனவும் வருவோனே; பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை யிருசரண வித்தார வேலாயு தாவுயர் செய் பரண்மிசை குறப்பாவை தோள் மேவ மோகமுறு மணவாளா- பதுமவய லற்பூக மீதேவ ரால்கள்துயில் வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர் பழநிவரு கற்பூர கோலாக லாவமரர் பெருமாளே; 142. கலக வாள்விழி வேலோ சேலோ மதுர வாய்மொழி தேனோ பாலோ கரிய வார்குழல் காரோ கானோ துவரோவாய் களமு நீள்கமு கோதோள் வேயோ உதர மானது மாலேர் பாயோ களப வார்முலை மேரோ கோடோ இடைதானும் இழைய தோமலர் வேதா வானோ னெழுதி னானிலை யோவாய் பேசீ ரிதென மோனமி னாரே பாரீ ரெனமாதர் இருகண் மாயையி லேமூழ் காதே யுனது காவிய நூலா ராய்வேன் இடர்ப டாதருள் வாழ்வே நீயே தரவேணும் அலைவி லாதுயர் வானோ ரானோர் நிலைமை யேகுறி வேலா சீலா அடியர் பாலரு ளீவாய் நீபார் மணிமார்பா அழகு லாவுவி சாகா வாகா ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா ரயலு லாவிய சீலா கோலா கலவீரா வலபை கேள்வர்பி னானாய் கானார் குறவர் மாதும ணாளா நாளார் வனச மேல்வரு தேவா மூவா மயில்வாழ்வே மதுர ஞானவி நோதா நாதா பழநி மேவுகு மாரா தீரா மயுர வாகன தேவா வானோர் பெருமாளே. 143. கொந்துத் தருகுழ லிருளோ புயலோ விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ விழிவேலோ கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ கொங்குற் றுயரல்கு வரவோ ரதமோ எனுமாதர் திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா எனவே சிந்திப் படிபயில் நடமா டியபா விகள்பாலே சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே வந்தித் தருள்தரு மிருசே வடியே சிந்தித் திடமிகு மறையா கியசீ ரருள்வாயே வெந்திப் புடன்வரு மவுணே சனையே துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய் வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே தவவாழ்வே விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய் சஞ்சத் தயனுட னமரே சனுமே விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே லருள்கூர்வாய் தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே செங்கட் கருமுகில் மருகா குகனே சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் கதிர்காமா சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ் இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் பெருமாளே. 144. ஆல காலமெ னக்கொலை முற்றிய வேல தாமென மிக்கவி ழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட னிளைஞோரை ஆர வாணைமெ யிட்டும றித்துவி கார மோகமெ ழுப்பிய தற்குற வான பேரைய கப்படு வித்ததி விதமாகச் சால மாலைய ளித்தவர் கைப்பொருள் மாள வேசிலு கிட்டு மருட்டியெ சாதி பேதம றத்தழு வித்திரி மடமாதர் தாக போகமொ ழித்துஉ னக்கடி யானென் வேள்விமு கத்தவ முற்றிரு தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட அருள்வாயே வால மாமதி மத்தமெ ருக்கறு காறு பூளைத ரித்தச டைத்திரு வால வாயன் ளித்தரு ளற்புத முருகோனே மாய மானொட ரக்கரை வெற்றிகொள் வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு வாளி யேவிய மற்புய னச்சுதன் மருகோனே நாலு வேதந விற்றுமு றைப்பயில் வீணை நாதனு ரைத்தவ னத்திடை நாடி யோடிகு றத்தித னைக்கொடு வருவோனே நாளி கேரம்வ ருக்கைய ழுத்துதிர் சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு ஞான பூரண சத்தித ரித்தருள் பெருமாளே. 145. ஓடி யோடி யழைத்துவ ரச்சில சேடி மார்கள் பசப்பஅ தற்குமு னோதி கோதி முடித்தவி லைச்சுரு ளதுகோதி நீடு வாச நிறைத்தஅ கிற்புழு கோட மீது திமிர்த்தத னத்தினில் நேச மாகி யணைத்தசி றுக்கிக ளுறவாமோ நாடி வாயும் வயற்றலை யிற்புன லோடை மீதி னிலத்ததி வட்கையி னாத கீதம லர்த்துளி பெற்றளி யிசைபாடுங் கோடு லாவிய முத்துநி ரைத்தவை காவுர் நாடத னிற்பழ நிப்பதி கோதி லாதகு றத்திய ணைத்தருள் பெருமாளே. 146. சகடத்திற் குழையிட் டெற்றிக் குழலுக்குச் சரம்வைத் தெற்றிப் புளகித்துக் குவளைக் கட்பொற் கணையொத்திட் டுழலச் சுத்தித் தரளப்பற் பவளத் தொட்டக் களபப்பொட் டுதலிட் டத்திக் குவடான தனதுத்திப் படிகப் பொற்பிட் டசையப்பெட் பசளைத் துப்புக் கொடியொத்திட் டிடையிற் பட்டைத் தகையிற்றொட் டுகளப் பச்சைச் சரணத்துக் கியலச் சுற்றிச் சுழலிட்டுக் கடனைப் பற்றிக் கொளுமாதர் சுகமுற்றுக் கவலைப் பட்டுப் பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற் குளறிட்டுத் தடிதொட் டெற்றிப் பிணியுற்றுக் கசதிப் பட்டுச் சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத் தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் கிடைநாளிற் சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட் டிறுகக்கட் டுயிரைப் பற்றிக் கொளுகப்பற் பலரைக் கட்டிக் கரம்வைத்துத் தலையிற் குத்திச் சுடுகட்டைச் சுடலைக் கட்டைக் கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் சடமாமோ திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட் டிடிபேரி திமிலைக்கைத் துடிதட் டெக்கைப் பகடிட்டுப் பறையொத் தக்கட் டிகையெட்டுக் கடல்வற் றித்தித் தரவுக்கக் கிரியெட் டுத்தைத் தியருக்குச் சிரமிற் றுட்கச் சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் டிடும்வேலா பகலைப்பற் சொரியத் தக்கற் பதிபுக்கட் டழலிட் டுத்திட் புரமட்கிக் கழைவிற் புட்பச் சரனைச்சுட் டயனைக் கொத்திப் பவுரிக்கொட் பரமர்க் குச்சற் குருவொத்துப் பொருளைக் கற்பித் தருள்வோனே பவளப்பொற் கிரிதுத் திப்பொற் றன கொச்சைக் கிளிசொற் பற்றிப் பரிவுற்றுக் கமலப் புட்பத் திதழ்பற்றிப் புணர்சித் ரப்பொற் படிகத்துப் பவளப் பச்சைப் பதமுத்துப் பழநிச் சொக்கப் பெருமாளே. 147. முத்துக்குச் சிட்டுக் குப்பிமு டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு முற்பக்கத் திற்பொற் புற்றிட நுதல்மீதே முக்யப்பச் சைப்பொட் டிட்டணி ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை முச்சட்டைச் சித்ரக் கட்டழ கெழிலாடத் தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ் நச்சுக்கட் கற்புச் சொக்கியர் செப்புக்கொக் கக்கச் சுப்பெறு தனமேருத் திட்டத்தைப் பற்றிப் பற்பல லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர் சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி யுழல்வேனோ மெத்தத்துக் கத்தைத் தித்தியி னிச்சித்தத் திற்பத் தத்தொடு மெச்சிக்சொர்க் கத்திற் சிற்பர மருள்வாயே வித்தைக்குக் கர்த்ருத் தற்பர முக்கட்சித் தர்க்குப் புத்திர விச்சித்ரச் செச்சைக் கத்திகை புனைவோனே நித்யக்கற் பத்திற் சித்தர்க ளெட்டுத்திக் குக்குட் பட்டவர் நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் அமரோரும் நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ நிக்குட்பட் டத்துக் குற்றுறை பெருமாளே. 148. அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன மலிகாரம் அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள வருள்பவர் நட்பே கொட்புறு மொருபோதன் பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய பரமம யச்சோ திச்சிவ மயமாநின் பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு ரவுபயில் நற்றாள் பற்றுவ தொருநாளே புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ் பொடிகொடு புற்பாய் சுற்றிகள் கழுவேறப் பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை புலவரில் நக்கீ ரர்க்குத வியவேளே இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டரு ளெழுபுவி துய்த்தார் மைத்துனர் மதலாய்வென் றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை யெழுதிவ னத்தே யெற்றிய பெருமாளே. 149. அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென அறையு மறையெனஅ ருந்தத்து வங்கௌன அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை வந்துநீமுன் உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை நம்புவேனோ ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுக தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண துங்ககாளி பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில் பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் தம்பிரானே. 150. அரிசன வாடைச் சேர்வைகு ளித்துப் பலவித கோலச் சேலையு டுத்திட் டலர்குழ லோதிக் கோதிமு டித்துச் சுருளோடே அமர்பொரு காதுக் கோலைதிருத்தித் திருநுதல் நீவிப் பாளித பொட்டிட் டகில்புழு காரச் சேறுத னத்திட் டலர்வேளின் சுரத விநோதப் பார்வைமை யிட்டுத் தருணக லாரத் தோடைத ரித்துத் தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட் டிளைஞோர்மார் துறவினர் சோரச் சோரந கைத்துப் பொருள்கவர் மாதர்க் காசைய ளித்தற் றுயரற வேபொற் பாதமெ னக்குத் தருவாயே கிரியலை வாரிச் சூரரி ரத்தப் புணரியின் மூழ்கிக் கூளிக ளிக்கக் கிரணவை வேல்புத் தேளிர்பி ழைக்கத் தொடுவோனே கெருவித கோலப் பாரத னத்துக் குறமகள் பாதச் சேகர சொர்க்கக் கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத் தருவோனே பரிமள நீபத் தாரொடு வெட்சித் தொடைபுனை சேவற் கேதன துத்திப் பணியகல் பீடத் தோகைம யிற்பொற் பரியோனே பனிமல ரோடைச் சேலுக ளித்துக் ககனம ளாவிப் போய்வரு வெற்றிப் பழநியில் வாழ்பொற் கோமள சத்திப் பெருமாளே. 151. அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது நினையாதுன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே எருத்தி லேறிய இறையவர் செவிபுக வுபதேசம் இசைத்த நாவின இதணுறு குறமக ளிருபாதம் பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை பெருமாளே. 152. அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு ளறிவுதா னறவைத்து விலைபேசி அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை அதிகமா வுதவிக்கை வளையாலே உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ ளுலையிலே மெழுகொத்த மடவாரோ டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து ஒழியுமா றொருமுத்தி தரவேணும் மறவர்மா தொருரத்ந விமலகோ கனகத்தி மயிலனாள் புணர்செச்சை மணிமார்பா மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க மயிலிலே றியவுக்ர வடிவேலா பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி பரமர்பா லுறைசத்தி யெமதாயி பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற பழநிமா மலையுற்ற பெருமாளே. 153. ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய தென்றுநாளும் எறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன தென்றுமோதும் ஏழைகள் யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும டங்கல்வேலா சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக தம்பிரானே. 154. இத்தா ரணிக்குள்மனு வித்தாய் முளைத்தழுது கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள் தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில் ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை யிச்சீர் பயிற்றவய தெட்டோடு மெட்டுவர வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்களுடனுறவாசி இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள் தேடிச் சுகந்த அணை மீதில் துயின்றுசுக மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை மூழ்கிக் கிடந்துமய லாகித் தொளைந்துசில பிணியதுமூடிச் சத்தான புத்தியது கெட்டே கிடக்கநம னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது பெற்றார்கள் சுற்றியழ வுற்றார்கள் மெத்தஅழ ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர் தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென எடுமெனவோடிச் சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை பேசிப் பணிந்துருகு நேசத்தைஇன் றுதர இனிவரவேணும் தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாதத் தனந்ததன தானத் தனந்ததன செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாத்த செந்திகுத தீதத்த செந்தரிக தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோதக் கணங்கணக கூகக் கிணங்கிணெண ஒருமயிலேறித் திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் அணிதிருமார்பா மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக ளேதொட்ட கொண்டலுரு வாகிச் சுமந்ததிக மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை மார்பிற் புணர்ந்தரகு ராமற்கு மன்புடைய மருமகனாகி வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி யத்தா பரத்தையறி வித்தாவி சுற்றுமொளி யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுய வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி வாழ்வுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி வருபெருமாளே. 155. இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனி லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள் கசனையை விடுவது மெந்த நாளது பகர்வாயே சிலைதரு குறவர்ம டந்தை நாயகி தினைவன மதனிலு கந்த நாயகி திரள்தன மதனில ணைந்த நாயக சிவலோகா கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ அயிலயி லதனையு கந்த நாயக குருபர பழநியி லென்று மேவிய பெருமாளே. 156. இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு மிருவிழியெ னஞ்சு முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு மிலகியக ரும்பு மயலாலே நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து நெகிழுமுயிர் நொந்து மதவேளால் நிலையழிவு நெஞ்சி லவர்குடிபு குந்த நினைவொடு மிறந்து படலாமோ புலவினைய ளைந்து படுமணிக லந்து புதுமலர ணிந்த கதிர்வேலா புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை பொரமுகையு டைந்த தொடைமார்பா பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த பருமயில டைந்த குகவீரா பணைபணிசி றந்த தரளமணி சிந்து பழநிமலை வந்த பெருமாளே. 157. உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில் ஒருக்காலு நெகிழ்வதிலை யெனவேசூள் உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம துடைத்தாய்பின் வருகுமவ ரெதிரேபோய்ப் பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல படப்பேசி யுறுபொருள்கொள் விலைமாதர் படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு பதத்தாள மயிலின்மிசை வரவேணும் தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள் தரத்தாடல் புரியுமரி மருகோனே தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல் தநுக்கோடி வருகுழகர் தருவாழ்வே செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது செயித்தோடி வருபழநி யமர்வோனே தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு திருத்தோள அமரர்பணி பெருமாளே. 158. ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் தறியேனே பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப்பாடைத் தவிரேனோ துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே விருதுகவி விதரணவி நோதக் காரப் பெருமாளே விறன்மறவர்சிறுமிதிரு வேளைக்காரப் பெருமாளே. 159. ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர் ஒருகுண வழியு றாத பொறியாளர் உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி உறநம னரகில் வீழ்வ ரதுபோய்பின் வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி மறைவரி னனைய கோல மதுவாக மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாத மருள்வாயே திரபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல் திருவிழி யருள்மெய்ஞ் ஞான குருநாதன் திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத திருநட மருளு நாத னருள்பாலா சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி துகளெழ விடுமெய்ஞ் ஞான அயிலோனே சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி தொழமுது பழநி மேவு பெருமாளே. 160. கடலை பொரியவரை பலகனி கழைநுகர் கடின குடவுதர விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது துணைவோனே வடவ ரையின் முகடு அதிர வொருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா மகபதி தருசுதை குறமினொ டிருவரு மருவுச ரசவித மணவாளா அடல சுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட எழில்மீறும் அருண கிரணவொளி யொளிறு மயிலைவிடு மரகர சரவண பவலோலா படல வுடுபதியை யிதழி யணிசடில பசுபதி வரநதி அழகான பழநிம லையருள்செய் மழலை மொழிமதலை பழநி மலையில்வரு பெருமாளே. 161. கதியை விலக்கு மாதர்கள் புதியஇ ரத்ன பூஷண கனதன வெற்பு மேல்மிகு மயலான கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய கனதன மொத்த தோகையு முகமாறும் அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும் அரவுபி டித்த தோகையு முலகேழும் அதிரவ ரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபிநவ பத்ம பாதமு மறவேனே இரவிகு லத்தி ராசத மருவியெ திர்த்து வீழ்கடு ரணமுக சுத்த வீரிய குணமான இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற இதமொட ளித்த ராகவன் மருகோனே பதினொரு ருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கு மீசுர சுரலோக பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே. 162. கரிய மேகம தோஇரு ளோகுழல் அரிய பூரண மாமதி யோமுகம் கணைகொ லோஅயில் வேலது வோவிழி யிதழ்பாகோ கமுகு தானிக ரோவளை யோகளம் அரிய மாமல ரோதுளி ரோகரம் கனக மேரது வோகுட மோமுலை மொழிதேனோ கருணை மால்துயி லாலிலை யோவயி றிடைய தீரொரு நூலது வோவென கனக மாமயில் போல்மட வாருடன் மிகநாடி கசட னாய்வய தாயொரு நூறுசெல் வதனின் மேலென தாவியை நீயிரு கமல மீதினி லேவர வேயருள் புரிவாயே திரிபு ராதிகள் நீறெழ வேமிக மதனை யேவிழி யால்விழ வேசெயும் சிவசொ ரூபம கேசுர னீடிய தனயோனே சினம தாய்வரு சூரர்கள் வேரற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் சிறைகள் மீளவு மேவடி வேல்விடு முருகோனே பரிவு சேர்கம லாலய சீதன மருவு வார்திரு மாலரி நாரணர் பழைய மாயவர் மாதவ னார்திரு மருகோனே பனக மாமணி தேவிக்ரு பாகரி குமர னேபதி னாலுல கோர்புகழ் பழநி மாமலை மீதினி லேயுறை பெருமாளே. 163. கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற் கயல்விழிப் பார்வையிற் பொருள்பேசிக் கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற் கலதியிட் டேயழைத் தணையூடே செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற் றிறமளித் தேபொருட் பறிமாதர் செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச் சிவபதத் தேபதித் தருள்வாயே திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச் சிறிதருட் டேவருட் புதல்வோனே திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத் திருடர்கெட் டோடவிட் டிடும்வேலா பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற் படியினிட் டேகுரக் கினமாடும் பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப் பரிவுறச் சேர்மணப் பெருமாளே. 164. கருகி யகன்று வரிசெறி கண்கள் கயல்நிக ரென்று துதிபேசிக் கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற கடிவிட முண்டு பலநாளும் விரகுறு சண்ட வினையுடல் கொண்டு விதிவழி நின்று தளராதே விரைகமழ் தொங்கல் மருவிய துங்க விதபத மென்று பெறுவேனோ முருக கடம்ப குறமகள் பங்க முறையென அண்டர் முறைபேச முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச முரணசுர் வென்ற வடிவேலா பரிமள இன்ப மரகத துங்க பகடித வென்றி மயில்வீரா பறிதலை குண்டர் கழுநிரை கண்டு பழநிய மர்ந்த பெருமாளே. 165. கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய கடைக்கணொடு சிரித்தணுகு கருத்தினால் விரகுசெய் மடமாதர் கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை கனத்தவிரு தனத்தின்மிசை கலக்குமோ கனமதில் மருளாமே ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி யுனைப்புகழு மெனைப்புவியில் ஒருத்தனாம் வகைதிரு அருளாலே உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி யுரைக்கமறை யடுத்துபொருள் உணர்த்துநா ளடிமையு முடையேனோ பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு படிக்கடலு மலைக்கவல பருத்ததோ கையில்வரு முருகோனே பதித்தமர கதத்தினுட னிரத்தினமணி நிரைத்தபல பணிப்பனிரு புயச்சயில பரக்கவே இயல்தெரி வயலூரா திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிகடிப்பகைமை செயித்தருளு மிசைப்பிரிய திருத்தமா தவர்புகழ் குருநாதா சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல் திருப்பழநி மலைக்குளுறை திருக்கைவே லழகிய பெருமாளே. 166. கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர்பக ரக்க ணாதர் உலகாயர் கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடு கலகலென மிக்க நூல்க ளதனாலே சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி தெரிவரிய சித்தி யான வுபதேசந் தெரிதர விளக்கி ஞான தரிசன மளித்த வீறு திருவடி யெனக்கு நேர்வ தொருநாளே கொலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடு குரகத முகத்தர் சீய முகவீரர் குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே பலமிகு புனத்து லாவு குறவநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணிமார்பா படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு பழநிமலை யுற்ற தேவர் பெருமாளே. 167. கனக கும்பமி ரண்டு நேர்மலை யெனநெ ருங்குகு ரும்பை மாமணி கதிர்சி றந்தவ டங்கு லாவிய முந்துசூதம் கடையில் நின்றுப ரந்து நாடொறு மிளகி விஞ்சியெ ழுந்த கோமள களப குங்கும கொங்கை யானையை யின்பமாக அனைவ ருங்கொளு மென்று மேவிலை யிடும டந்தையர் தங்கள் தோதக மதின்ம ருண்டு துவண்ட வாசையில் நைந்துபாயல் அவச மன்கொளு மின்ப சாகர முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி தருப தங்கதி யெம்பி ரானருள் தந்திடாயோ தனத னந்தன தந்த னாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை தகுதி திந்திகு திந்த தோவென வுந்துதாளந் தமர சஞ்சலி சஞ்ச லாவென முழவு டுண்டுடு டுண்டு டூவென தருண கிண்கிணி கிண்கி ணாரமு முந்தவோதும் பணிப தங்கய மெண்டி சாமுக கரிய டங்கலு மண்ட கோளகை பதறி நின்றிட நின்று தோதக என்றுதோகை பவுரி கொண்டிட மண்டி யேவரு நிசிச ரன்கிளை கொன்ற வேலவ பழநி யங்கிரி யின்கண் மேவிய தம்பிரானே. 168. குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி யுடலூடே குடிக ளெனபல குடிகை வலிகொடு குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை யடல்பேணி மருவி மதனனுள் கரிய புளகித மணிய சலபல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் மயலாகா மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற வெனது தலைபத மருள்வாயே நிருதர் பொடிபட அமரர் பதிபெற நிசித அரவளை முடிகள் சிதறிட நெரிய கிரிகட லெரிய வுருவிய கதிர்வேலா நிறைய மலர்பொழி யமரர் முனிவரும் நிருப குருபர குமர சரணென நெடிய முகிலுடல் கிழிய வருபரி மயிலோனே பருதி மதிகனல் விழிய சிவனிட மருவு மொருமலை யரையர் திருமகள் படிவ முகிலென அரியி னிளையவ ளருள்பாலா பரம கணபதி யயலின் மதகரி வடிவு கொடுவர விரவு குறமக ளபய மெனவணை பழநி மருவிய பெருமாளே. 169. குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல் குமுத வதரமு றுவலாரம் குழைம கரம்வளை மொழிகு யிலமுது குயமு ளரிமுகை கிரிசூது விழிக யலயில்ப கழிவ ருணிகரு விளைகு வளைவிட மெனநாயேன் மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி வெறிது ளம்விதன முறலாமோ கழல்ப ணியவினை கழல்ப ணியையணி கழல்ப ணியவருள் மயில்வீரா கமலை திருமரு கமலை நிருதரு கமலை தொளைசெய்த கதிர்வேலா பழனி மலைவரு பழநி மலைதரு பழநி மலைமுரு கவிசாகா பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர் பெருமாளே. 170. சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி செங்கைகு லாவந டித்துத் தென்புற செண்பக மாலைமு டித்துப் பண்புள தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய லம்புகள் போலவி ழித்துச் கிங்கியில் செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி விலைமாதர் வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை தனிலேறி மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள் மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத மருள்வாயே இந்திர நீலவ னத்திற் செம்புவி யண்டக டாகம ளித்திட் டண்டர்க ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ளொருபேடி இன்கன தேரைந டத்திச் செங்குரு மண்டல நாடும ளித்துப் பஞ்சவ ரின்புறு தோழ்மையு டைக்கத்தன்திரு மருகோனே சந்திர சூரியர் திக்கெட் டும்புக ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய சங்கர னார்செவி புக்கப் பண்பருள் குருநாதா சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய பெருமாளே. 171. ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நாதங்க ளொடுகு லாவி விளையாடி ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம லோமங்கி யுருவ மாகி யிருவோரும் ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட அருள்தாராய் தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி சீரங்க னெனது தாதை ஒருமாது சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி சேர்பங்கி னமல நாத னருள்பாலா கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடந்த மயிலி லேறு முருகோனே காமன்கை மலர்கள் நாண வேடம்பெணமளி சேர்வை காணெங்கள் பழநி மேவு பெருமாளே. 172. திடமிலிசற் குணமிலிநற் நிறிமிலியற் புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றமிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும் கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் பொரும்வேலா கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் கிறகோடே படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் கொருபாலா பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் பெருமாளே. 173. நிகமமெனி லொன்று மற்று நாடொறு நெருடுகவி கொண்டு வித்தை பேசிய நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள பெயர்கூறா நெளியமுது தண்டு சத்ர சாமர நிபிடமிட வந்து கைக்கு மோதிர நெடுதியதி குண்ட லப்ர தாபமு முடையோராய் முகமுமொரு சம்பு மிக்க நூல்களு முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில் முடிவிலவை யொன்று மற்று வேறொரு நிறமாகி முறியுமவர் தங்கள் வித்தை தானிது முடியவுனை நின்று பத்தி யால்மிக மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர அருள்வாயே திகுதிகென மண்ட விட்ட தீயொரு செழியனுடல் சென்று பற்றி விட்ட யாருகர் திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது சிறியகர பங்க யத்து நீறொரு தினையளவு சென்று பட்ட போதினில் தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற மகிதலம ணைந்த அத்த யோனியை வரைவறம ணந்து நித்த நீடருள் வகைதனைய கன்றி ருக்கு மூடனை மலரூபம் வரவரம னந்தி கைத்த பாவியை வழியடிமை கொண்டு மிக்க மாதவர் வளர்பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே. 174. நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு குத்துமு லைக்குட மசைத்து வீதியி னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் மொழியாலே நித்தம யக்கிகள் மணத்த பூமலர் மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு முறவாடி உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ளுறவாமோ உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன் மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற உட்குளிர் புத்தியை யெனக்கு நீதர வருவாயே கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ் வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு கற்பனை பெற்பல அளித்த காரண னருள்பாலா கற்பந கர்க்களி றளித்த மாதணை பொற்புய மைப்புயல் நிறத்த வானவர் கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர எனநாளும் நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர் நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே நட்டுவர் மத்தள முழக்க மாமென மைக்குல மெத்தவு முழக்க மேதரு நற்பழ நிப்பதி செழிக்க மேவிய பெருமாளே. 175. பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியதறி யாதபுக ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி முருகோனே மங்கை மோகசிங் காரரகு ராமரிட தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ் மங்க ளாயிசந் தானசிவ காமியுமை யருள்பாலா கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர அணைவோனே கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல் கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர் கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர பெருமாளே. 176. பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ வடிவமார் புளகித கும்ப மாமுலை பெருகியே யொளிசெறி தங்க வாரமு மணியான பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ வருமானார் உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை மனையிலே வினவியெ கொண்டு போகியெ யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் மயலாலே உருகியே யுடலற வெம்பி வாடியெ வினையிலே மறுகியெ நொந்த பாதக னுனதுதாள் தொழுகிட இன்ப ஞானம தருள்வாயே அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ அடலதோ டமர்புரி கின்ற கூரிய வடிவேலா அரகரா வெனமிக அன்பர் சூழவெ கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ அவனியோர் நொடிவரு கின்ற காரண முருகோனே பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் மருகோனே பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ வனசமா மலரினில் வண்டு லாவவெ பழநிமா மலைதனி லென்று மேவிய பெருமாளே. 177. மந்தரம தெனவேசி றந்த கும்பமுலை தனிலேபு னைந்த மஞ்சள்மண மதுவேது லங்க வகைபேசி மன்றுகமழ் தெருவீதி வந்து நின்றவரை விழியால்வ ளைந்து வந்தவரை யருகேய ணைந்து தொழில்கூறி எந்தளவு மினதாக நம்பு தந்துபொருள் தனையேபி டுங்கி யின்பமருள் விலைமாதர் தங்கள் மனைதேடி எஞ்சிமன முழலாம லுன்தன் அன்புடைமை மிகவேவ ழங்கி என்றனையு மினிதாள இன்று வரவேணும் விந்தையெனு முமைமாது தந்த கந்தகுரு பரதேவ வங்க மென்றவரை தனில்மேவு மெந்தை புதல்வோனே மிஞ்சுமழ கினிலேசி றந்த மங்கைகுற மடமாது கொங்கை மென்கிரியி லிதமாய ணைந்த முருகோனே சிந்தைமகிழ் புலவோர்கள் வந்து வந்தனைசெய் சரணார விந்த செந்தமிழி லுனையேவ ணங்கு குருநாதர் தென்றல்வரை முனிநாத ரன்று கும்பிடந லருளேபொ ழிந்த தென்பழநி மலைமேலு கந்த பெருமாளே. 178. மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள் சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக மதியாலே மருவுநி தம்பத் தடத்தி லேநிறை பரிமள கொங்கைக் குடத்தி லேமிக வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி வலையாலே நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில் வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு மொயிலாலே நிதமிய லுந்தர்க் குணத்தி லேபர வசமுட னன்புற் றிணக்கி லேயொரு நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு மதிகேடாய் அலையநி னைந்துற் பனத்தி லேயநு தினமிகு மென்சொப் பனத்தி லேவர அறிவும ழிந்தற் பனத்தி லேநித முலைவேனோ அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய கசடனை யுன்சிற் கடைக்க ணாடியு மலர்க்கொடு நின்பொற் பதத்தை யேதொழ அருள்தாராய் பலபல பைம்பொற் பதக்க மாரமு மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு மணிவோனே பதியினில் மங்கைக் கதித்த மாமலை யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர் பழிநியி லன்புற் றிருக்கும் வானவர் பெருமாளே. 179. மனக்கவலை யேதுமின்றி உனக்கடிமையேபு ரிந்து வகைக்குமநு நூல்வி தங்கள் தவறாதே வகைப்படிமனோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி மயக்கமற வேத முங்கொள் பொருள்நாடி வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நினைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் முறையாலே வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து மிகுக்குமுனை யேவ ணங்க முறையாலே மனத்தில்வரு வோனே என்று னடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேப ணிந்த முனிவோர்கள் வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயிரங்கி மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா தினைப்புன முனேந டந்து குறக்கொடியை யேம ணந்து செகத்தைமுழு தாள வந்த பெரியோனே செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநிறைந்த திருப்பழநி வாழ வந்த பெருமாளே. 180. முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு முதிர்விலிள தனபார மடவார்தோள் முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள் மொழியுமது மதியாமல் தலைகீழ்வீழ்ந் தகமகிழ விதமான நகையமுத மெனவூற லசடரக மெழவாகி மிகவேயுண் டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி னமுதுபரு கிடஞான மருளாயோ மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி மறுகுபுனல் கெடவேலை விடுவோனே வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி வருபனிரு கரதீர முருகோனே பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு பரமகுரு வெனநாடும் இளையோனே பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு பழநிமலை தனில்மேவு பெருமாளே. 181. முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து முதிய கயல்கள் கயத்தி னிடையோடி முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவு மயக்கி வருமாதர் மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடுமாய மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ் வுனது பதத்தை யருள்வாயே சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து சகடு மருத முதைத்த தகவோடே தழையு மரமு நிலத்தில் கடிய அமரை விளைத்த தநுவை யுடைய சமர்த்தன் மருகோனே அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு ளழகு மயிலை நடத்து பெருமாளே. 182. முருகுசெறி குலழவிழ முலைபுளக மெழநிலவு முறுவல்தர விரகமெழ அநுராகம் முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென முகநிலவு குறுவெயர்வு துளிவீச அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக அகமகிழ இருகயல்கள் குழையேற அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும் அலர்கமல மலரடியை மறவேனே நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும் நெறுநெறென முறியவிடும் வடிவேலா நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர நெடியநெடு ககனமுக டுறைவோனே வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற மதுவினிரை பெருகுவளி மலைமீதே வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு மருவிமகிழ் பழநிவரு பெருமாளே. 183. மூலங்கிள ரோகுரு வாய்நடு நாலங்குல மேனடு வேரிடை மூள்பிங்கலை நாடியொ டாடிய முதல்வேர்கள் மூணும்பிர காசம தாயொரு சூலம்பெற வோடிய வாயுவை மூலந்திகழ் தூண்வழி யேயள விடவோடிப் பாலங்கிள ராறுசி காரமொ டாருஞ்சுடு ராடுப ராபர பாதம்பெற ஞானச தாசிவ மதின்மேவிப் பாடுந்தொனி நாதமு நூபுர மாடுங்கழ லோசையி லேபரி வாகும்படி யேயடி யேனையும் அருள்வாயே சூலங்கலை மான்மழு வோர்துடி வேதன்தலை யோடும ராவிரி தோடுங்குழை சேர்பர னார்தரு முருகோனே சூரன்கர மார்சிலை வாளணி தோளுந்தலை தூள்பட வேஅவர் சூளுங்கெட வேல்விடு சேவக மயில்வீரா காலின்கழ லோசையு நூபுர வார்வெண்டைய வோசையு மேயுக காலங்களி னோசைய தாநட மிடுவோனே கானங்கலை மான்மக ளார்தமை நாணங்கெட வேயணை வேள்பிர காசம்பழ னாபுரி மேவிய பெருமாளே. 184. வசனமிக வேற்றி மறவாதே மனது துய ராற்றி லுழலாதே இசைபயில்ச டாக்ஷ ரமதாலே இகபரசௌ பாக்ய மருள்வாயே பசுபதிசி வாக்ய முணர்வோனே பழநிமலை வீற்ற ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி மிகவாழ அமரர்சிறை மீட்ட பெருமாளே. 185. வரதா மணிநீ யெனவோரில் வருகா தெதுதா னதில்வாரா திரதா திகளால் நவலோக மிடவே கரியா மிதிலேலு சரதா மறையோ தயன்மாலும் சகலா கமநூ லறியாத பரதே வதையாள் தருசேயே பழனா புரிவாழ் பெருமாளே. 186. வாதம் பித்தமி டாவயி றீளைகள் சீதம் பற்சனி சூலைம கோதர மாசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் வெகுமோகர் சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடி லேசுக மாமென இதின்மேவித் தூசின் பொற்சர மோடுகு லாயுல கேழும் பிற்பட வோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநி னருள்தாராய் தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி சேடன் சொக்கிட வேலைக டாகமெ லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு மயில்வீரா வேதன் பொற்சிர மீதுக டாவிந லீசன் சற்குரு வாயவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே வேடிங் கட்டிபி னேகிம காவளி மாலின் பித்துற வாகிவி ணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே. 187. விதமி சைந்தினி தாமலர் மாலைகள் குழல ணிந்தநு ராகமு மேசொலி விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி யழகாக விரிகு ரும்பைக ளாமென வீறிய கனக சம்ப்ரம மேருவ தாமறி விரக மொங்கிய மாமுலை யாலெதி ரமர்நாடி இதமி சைந்தன மாமென வேயின நடைந டந்தனர் வீதியி லேவர எவர்க ளுஞ்சித் மால்கொளு மாதர்கண் வலையாலே எனது சிந்தையும் வாடிவி டாவகை அருள்பு ரிந்தழ காகிய தாமரை இருப தங்களி னாலெனை யாள்வது மொருநாளே மதமி சைந்தெதி ரேபொரு சூரனை யுடலி ரண்டுகு றாய்விழ வேசின வடிவு தங்கிய வேலினை யேவிய அதிதீரா மதுர இன்சொலி மாதுகை நாரணி கவுரி யம்பிகை யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி சிறுவோனே பதமி சைந்தெழு லோகமு மேவலம் நொடியில் வந்திடு மாமயில் மீதொரு பவனி வந்தக்ரு பாகர சேவக விறல்வீரா பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும் வடிவு கொண்டருள் காசியின் மீறிய பழநி யங்கிரி மீதினில் மேவிய பெருமாளே. 188. கறுத்த குழலணி மலரணி பொங்கப் பதித்த சிலைநுத லணிதில தம்பொற் கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் சிரமான கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக் குவட்டு முலையசை படவிடை யண்பைக் கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் கொடிபோலச் சிறுத்த களமிகு மதமொழு கின்சொற் குயிற்க ளெனமட மயிலெகி னங்கட் டிருக்கு நடைபழ கிககள் களபங்கச் சுடைமாதர் திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட் குவடட்டி யவர்வலை யழலுறு பங்கத் திடக்கு தலைபுலை யவர்வழியின்பைத் தவிர்வேனோ பறித்த விழிதலை மழுவுலை செங்கைச் செழித்த சிவபர னிதழிநல் தும்பைப் படித்த மதியற லரவணி சம்புக் குருநாதா பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக் கொதித்த அலைகட லெரிபட செம்பொற் படைக்கை மணியயில் விடுநட னங்கொட் கதிர்வேலா தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற் குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச் சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் றிருபாதா சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக் குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச் சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் பெருமாளே. 189. குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயில்மயிர் குருதியொ டிவைபல கசுமாலக் குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமைய ரிடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலா நெறியிலர் மிருகணை விறலான சரம்ப ருறவனை நரகனை துரகனை யிரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு மயிலேறித் தழைந்த சிவசுடர் தனையென மனதினி லழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு மறவேனே இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழில் உறைந்த குயிலளி யொலிபர விடமயில் இசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் வளநாடா இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக இரைந்த வசுரரொ டிபபரி யமபுரம் விடும்வேளே சிரம்பொ னயனொடு முனிவர்க ளமரர்க ளரம்பை மகளிரொ டரகர சிவசிவ செயம்பு வெனநட மிடுபத மழகியர் குருநாதா செழும்ப வளவொளி நகைமுக மதிநகு சிறந்த குறமக ளிணைமுலை புதைபட செயங் கொடணைகுக சிவமலை மருவிய பெருமாளே. 190. களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து கயலொடுப கைத்த கண்கள் குழைதாவக் கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து கடியிருளு டுக்கு லங்க ளெனவீழ முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்ப முருகிதழ்சி வப்ப நின்று விலைகூறி முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து முடுகுமவ ருக்கி ரங்கி மெலிவேனோ இளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்து இனியபொரு ளைப்ப கர்ந்த குருநாதா இபமுகவ னுக்கு கந்த இளையவ மருக்க டம்ப எனதுதலை யிற்ப தங்க னருள்வோனே குழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்து குமரசிவ வெற்ப மர்ந்த குகவேலா குடிலொடு மிகச்செ றிந்த இதணுள புனத்தி ருந்த குறவர்மக ளைப்பு ணர்ந்த பெருமாளே. 191. குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும் படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர் இந்துஞ் சந்தத் தங்குந் தண்செங் கமலமு மெனவொளிர் தருமுக வனிதையர் கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ் சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் விரகாலும் கும்பம் பம்புஞ் சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் கடியவர் எங்கெங் கெம்பங் கென்றன் றென்றுந் தனதுரி மையதென நலமுட னணைபவர் கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன் பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் மயலாலும் என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண் டுனதிகு மலரடி பரவிட மனதினில் நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந் தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந் தமுமிக வருள்பெற விடைதரு விதமுன மருள்வாயே எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன்விடு மதிசய வினையுறு மலகையை வென்றுங் கொன்றுங் துண்டந் துண்டஞ் செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர் நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண் துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் மருகோனே ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந் தொளைபட மதகரி முகனுடல் நெரிபட டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடியென விழுமெழு படிகளு மதிர்பட ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென் றொலிசெய மகபதி துதிசெய அசுரரை யடுவோனே உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ் சிவனருள் குருபர வெனமுனி வரர்பணி யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென் றொலிபட நடமிடு பரனரு ளறுமுக உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும் விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை புயவீரா அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங் கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில் அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும் படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட அன்பின் பண்பெங் குங்கண் டென்பின் அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு திறலேனே அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங் கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங் கயனிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே. 192. கலகக் கயல்விழி போர்செய வேள்படை நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள் கனியக் கனியவு மேமொழி பேசிய விலைமாதர் கலவித் தொழினல மேயினி தாமென மனமிப் படிதின மேயுழ லாவகை கருணைப் படியெனை யாளவு மேயருள் தரவேணும் இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி குழையத் தழுவிய மேன்மையி னாலுயர் இசைபெற் றருளிய காமுக னாகிய வடிவோனே இதமிக் கருமறை வேதிய ரானவர் புகலத் தயவுட னேயருள் மேன்மைகள் இசையத் தருமநு கூலவ சீகர முதல்வோனே நிலவைச் சடைமிடை யேபுனை காரணர் செவியிற் பிரணவ மோதிய தேசிக நிருதர்க் கொருபகை யாளியு மாகிய சுடர்வேலா நிமலக் குருபர ஆறிரு பார்வையும் அருளைத் தரஅடி யார்தமை நாடொறும் நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு முரியோனே பலவிற் கனிபணை மீறிய மாமர முருகிற் கனியுட னேநெடு வாளைகள் பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய வகையாலே பழனத் துழவர்க ளேரிட வேவிளை கழனிப் புரவுகள் போதவு மீறிய பழநிச் சிவகிரி மீதினி லேவளர் பெருமாளே. 193. புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக் கடினத் தொடுசில சிறுநகை கொண்டற் புதகர்த் தரகர பரசிவ னிந்தத் தனிமூவ ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவுற் பனமொழி யுரைசெய் குழந்தைக் குருநாதா எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக் கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட் டிடவுக் கிரமொடு வெகுளிகள் கிரியாவும் பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச் சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப் புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் தமுமாகப் பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக் குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப் புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் குமரேசா படியிற் பெருமித தகவுயர் செம்பொற் கிரியைத் தனிவலம் வரஅர னந்தப் பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் பதனாலே பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக் கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற் பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் பெருமாளே. 194. ஆதா ளிகள்புரி கோலா கலவிழி யாலே யமுதெனு மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை குழலாலே யாலே மணமலி குழலாலே சூதா ரிளமுலை யாலே யழகிய தோடா ரிருகுழை யதனாலே சோரா மயல்தரு மானா ருறவிடர் சூழா வகையருள் புரிவாயே போதா ரிருகழல் சூழா ததுதொழில் பூணா தெதிருற மதியாதே போரா டியஅதி சூரா பொறுபொறு போகா தெனஅடு திறலோனே வேதா வுடனெடு மாலா னவனறி யாதா ரருளிய குமரேசா வீரா புரிவரு கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே. 195. கோல மதிவதனம் வேர்வு தரஅளக பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல் கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள முகையான கோக னகவுபய மேரு முலையசைய நூலி னிடைதுவள வீறு பறவைவகை கூற யினியகள மோல மிடவளைகள் கரமீதே காலி னணிகனக நூபு ரமுமொலிக ளோல மிடஅதிக போக மதுமருவு காலை வெகுசரச லீலை யளவுசெயு மடமானார் காதல் புரியுமநு போக நதியினிடை வீழு கினுமடிமை மோச மறவுனது காமர் கழலிணைக ளான தொருசிறிது மறவேனே ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக லாக வருமவுணர் சேர வுததியிடை நாச முறஅமர்செய் வீர தரகுமர முருகோனே நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி நாணம் வரவிரக மோது மொருசதுர புரிவேலா மேலை யமரர்தொழு மானை முகரரனை யோடி வலம்வருமுன் மோது திரைமகர வேலை யுலகைவல மாக வருதுரக மயில்வீரா வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு முதல்வவயல் வாவி புடைமருவு வீரை வருபழநி ஞான மலையில்வளர் பெருமாளே. 196. சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் கங்கு காகமிவை தின்ப தொழியாதே தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து நிலைகாணா ஆயதுந மன்கை போகவுயி ரந்த நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று மடவார்பால் ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு புரிவாயே மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு பார்முழுது மண்ட கோளமுந டுங்க வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை யதனாலே வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த வாரண இரண்டு கோடொடிய வென்ற நெடியோனாம் வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து மேயல்புரி செங்கண் மால்மருக துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து பொடியாக வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு கார்கலிசை வந்த சேவகன்க ணங்க வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் பெருமாளே. 197. சீற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடுங் கூறுமொழியதுபொய் யான கொடுமையுள கோள னறிவிலியு னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் புரிவாயே மாறு படுமவுணர் மாள அமர்பொருது வாகை யுளமவுலி புனைவோனே மாக முகடதிர வீசு சிறைமயிலை வாசி யெனவுடடைய முருகோனே வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு மொருபெருமை யுடையோனே வீரை யுறைகுமர தீர தரபழநி வேல இமையவர்கள் பெருமாளே. 198. தோகைமயி லேகமல மானேயு பசமிகு காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை தோயுமநு போகசுக லிலாவி நோதமுழு துணர்தேனே சூதனைய சீதஇள நீரான பாரமுலை மீதணைய வாருமிதழ் தாரீரெ னாணைமொழி சோர்வதிலை யாண்டிமை யாவேனு மாணைமிக மயலானேன் ஆகமுற வேநகம தாலேமி டாதஅடை யாளமிட வாருமென வேமாத ரார்களுட னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி யுனையோதேன் ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் தருவாயே மாகமுக டோடகில் பாதாள மேருவுட னேசுழல வாரியது வேதாழி யாவமரர் வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது கடைநாளில் வாருமென வேயொருவர் நோகாம லாலவிட மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும் வாழஅமு தேபகிரு மாமாய் னாரினிய மருகோனே மேகநிக ரானகொடை மானாய காதிபதி வாரிகலி மாருதக ரோபாரி மாமதன வேள்கலிசை வாழவரு காவேரிசேவகன துளமேவும் வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் பெருமாளே. 199. பாரி யானகொடைக் கொண்ட லேதிரு வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக அபிராம பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள் ஞாலவிளக் கின்ப சீவக பாக சாதனைவுத் துங்க மானத எனவோதிச் சீர தாகஎடுத் தொன்று மாகவி பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை சீறு வார்கடையிற் சென்று தாமயர் வுறவீணே சேய பாவகையைக் கொண்டு போயறி யாம லேகமரிற் சிந்து வார்சிலர் சேய னார்மனதிற் சிந்தி யாரரு குறலாமோ ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு வாயி னேர்படவுற் றன்று மூலமெ னார வாரமதத் தந்தி தானுய அருள்மாயன் ஆதி நாரணனற் சங்க பாணிய னோது வார்களுளத் தன்பன் மாதவ னான நான்முகனற் றந்தை சீதரன் மருகோனே வீர சேவகவுத் தண்ட தேவகு மார ஆறிருபொற் செங்கை நாயக வீசு தோகைமயிற் றுங்க வாகன முடையோனே வீறு காவிரியுட் கொண்ட சேகர னான சேவகனற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநித் துங்க வானவர் பெருமாளே. நான்காவது படைவீடு - சுவாமிமலை (திருவேரகம்) 200. அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் டதனாலே சிவாயமெ னுநாமமொ ருகாலுநி னையாததி மிராகரனை வாவென் றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர் தியானமுறு பாதம் தருவாயே உவாவின யகானுவி னிலாவும யில்வாகன முலாசமுட னேறும் கழலோனே உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ ளிவாகுமயில் வேலங் கையிலோனே துவாதச புயாசல ஷடாநந வராசிவ சுதூஎயினர் மானன் புடையோனே சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே. 201. ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன ஆரமுது கண்டு தேனென இதமூறல் ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென ஆனையுர மெங்கு மோதிட அபிராம மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில் மாயுமனு வின்ப வாசைய தறவேயுள் வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக வாசகம்வ ழங்கி யாள்வது மொருநாளே ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைக ளீடழிய வென்று வானவர் குலசேனை ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர ராசதம றிந்த கோமள வடிவோனே சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு தோளுடைய கந்த னேவய லியில்வாழ்வே சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று லாவிய பெருமாளே. 202. ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம் யோகீச ரெவருமெட் டாத பரதுரி யாதீத மகளமெப் போது முதயம நந்தமோகம் வானாதி சகலவிஸ்த் தார விபவரம் லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன் மாலீச ரெனுமவற் கேது விபுலம சங்கøயால்நீள் மாளாத தனிசமுற் றாய தரியநி ராதார முலைவில்சற் சோதி நிருபமு மாறாத சுகவெளத் தாணு வுடனினி தென்றுசேர்வேன் நானாவி தகருவிச் சேனை வகைவகை சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி லங்கைசாய நாலாறு மணிமுடிப் பாவி தனையடு சீராமன் மருகமைக் காவில் பரிமள நாவீசு வயலியக் கீசர் குமரக டம்பவேலா கானாளு மெயினர்தற் சாதி வளர்குற மானோடு மகிழ்கருத் தாகி மருடரு காதாடு முனதுகட் பாண மெனதுடை நெஞ்சுபாய்தல் காணாது மமதைவிட் டாவி யுயவருள் பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே. 203. எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி னம்பொற் கழலிணை களில் மரு மலர்கொடு என்சித் தமுமன முருகிநல் கருதியின் முறையாடே; சந்தித் தரஹர சிவசிவ சரணெண கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச் சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு னந்தத் திருநட மிடுசர ணழகுற சந்தச் சபைதனில் எனதுள முருகவும் வருவாயே. தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம தூங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா; கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி எந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையருள் இளையோனே; கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள் அம்பொற் கொடியிடை புணரரி மருகநல் கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே. 204. ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந் திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் சனையாலே ஒளிபெறவே யெழுபுமர பாவை துன்றிடுங் கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந் தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் திடுவேனைக் கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன் செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன் கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் டருமாமென் கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந் தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண் கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் தெனையாள்வாய் திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன் தருணமழ விடையனட ராஜ னெங்கணுந் திகழருண கிரிசொருப னாதி யந்தமங் கறியாத சிவயநம நமசிவய கார ணன்சுரந் தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன் திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் புதல்வோனே குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம் புவனகிரி சுழலமறை யாயி ரங்களும் குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் திடுவோனே குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம் பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண் குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் பெருமாளே. 205. கறைபடுமு டம்பி ராதெனக் கருதுதலொ ழிந்து வாயுவைக் கருமவச னங்க ளால்மறித் தனலூதிக் கவலைபடு கின்ற யோககற் பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு மஞ்சும் வேரறச் செயல்மாளக் குறைவறநி றைந்த மோனநிர்க் குணமதுபொ ருந்தி வீடுறக் குருமலைவி ளங்கு ஞானசற் குருநாதா குமரசர ணென்று கூதளப் புதுமலர்சொ ரிந்து கோமளப் பதயுகள புண்ட ரீகமுற் றுணர்வேனோ சிறைதளைவி ளங்கு பேர்முடிப் புயலுடன டங்க வேபிழைத் திமையவர்கள் தங்க ளூர்புகச் சமராடித் திமிரமிகு சிந்து வாய்விடச் சிகரிகளும் வெந்து நீறெழத் திகிரிகொள நந்த சூடிகைத் திருமாலும் பிறைமவுலி மைந்த கோவெனப் பிரமனைமு னிந்து காவலிட் டொருநொடியில் மண்டு சூரனைப் பொருதேறிப் பெருகுமத கும்ப லாளிதக் கரியெனப்ர சண்ட வாரணப் பிடிதனைம ணந்த சேவகப் பெருமாளே. 206. காமியத் தழுந்தி யிளையாதே காலர்கைப் படிந்து மடியாதே ஓமெழுத்தி லன்பு மிகவூறி ஓவியத்தி லந்த மருள்வாயே தூமமெய்க் கணிந்த சுகலீலா சூரனைக் கடிந்த கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த மயில்வீரா ஏரகத் தமர்ந்த பெருமாளே. 207. சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க அறியாத சடகசட மூடி மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை கமழுமண மார்க டப்ப மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த மயில்வீரா அதிசமய நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் முருகோனே. 208. சுத்தியந ரப்புடடென லுப்புறுத சைக்குடலொ டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம்வி ளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் சங்குமூளை துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக வங்கமூடே எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் பஞ்சபூதம் எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை யெத்தனைக வட்டையுந டக்கையு யிர்க்குழுமல் எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் மங்குவேனோ தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள் சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள மண்டியோடச் சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர் கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமெ பக்குவிட வென்றவேலா சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர் சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநடனங் கொள்வோளே செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் தம்பிரானே. 209. சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண் மாதரைவ சம்ப டைத்த வசமாகிச் சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை காலமுமு டன்கி டக்கு மவர்போலே காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு நாளுமிக நின்ற லைத்த விதமாய காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி லேயடிமை யுங்க லக்க முறலாமோ ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை பூகமரு தந்த ழைத்த கரவீரம் யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும் ஏரகம மர்ந்த பச்சை மயில்வீரா சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர பாணியர்தொ ழுந்தி ருக்கை வடிவேலா சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த சூரனுட லுந்து ணித்த பெருமாளே. 210. தருவரிக ராகு மென்று பொருணசையி னாடி வண்டு தனைவிடுசொல் தூது தண்ட முதலான சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப தருமுதல தான செஞ்சொல் வகைபாடி மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து வரினுமிவர் வீத மெங்க ளிடமாக வருமதுவொபோதுமென்றுவொருபணமு தாசினஞ் சொல் மடையரிட மேந டந்து மனம்வேறாய் உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து உழல்வதுவு மேத விர்ந்து விடவேநல் உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப முதவியெனை யாள அன்பு தருவாயே குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள் குதிகொளின வாளை கண்டு பயமாகக் குரைகடல்க ளேய திர்ந்த வருவதென வேவி ளங்கு குருமலையின் மேல மர்ந்த பெருமாளே. 211. தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் வசையாலே தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொ டுக்குங் கணையாலே புளகித முலையா ளலையா மனஞ்ச லித்தம் விடலாமோ ஒருமலை யிருகூ றெழவே யுரம்பு குத்தும் வடிவேலா ஒளிவளர் திருவே ரகமே யுகந்து நிற்கும் முருகோனே அருமறை தமிழ்நூ லடைவே தெரிந்து ரைக்கும் புலவோனே அரியரி பிரமா தியர்கால் விலங்க விழ்க்கும் பெருமாளே. 212. நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று பணிவேனோ வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின் ற குருநாதா வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கிரங்கு மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த பெருமாளே 213. நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து நிறைகுழல் மீத ணிந்து குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள் நினைவற வேமொ ழிந்து மதனூலின் கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து கனியித ழேய ருந்தி யநுராகக் கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு கபடனை யாள வுன்ற னருள்கூராய் உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு முயர்கயி லாய முப்பொன் வரைதானும் உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற உமையரு ளால்வ ளர்ந்த குமரேசா குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த குமரக டோர வெங்கண் மயில்வாழ்வே கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த குருமலை மீத மர்ந்த பெருமாளே. 214. நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க நேராக வாழ்வ தற்கு னருள்கூர நீடார்ச டாத ரத்தின் மீதேப ராப ரத்தை நீகாணெ னாவ னைச்சொ லருள்வாயே சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி சீராக வேயு ரைத்த குருநாதா தேரார்கள் நாடு சுட்ட சூரர்கள் மாள வெட்டு தீராகு காகு றத்தி மணவாளா காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த காவார்சு வாமி வெற்பின் முருகோனே கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமானே. 215. நிறைமதி முகமெனு மொளியாலே நெறிவிழி கணையெனு நிகராலே உறவுகொள் மடவர்க ளுறவாமோ உனதிரு வடியினி யருள்வாயே மறைபயி லரிதிரு மருகோனே மருவல ரசுரர்கள் குலகாலா குறமகள் தனைமண மருள்வோனே குருமலை மருவிய பெருமாளே. 216. பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி அயிலாலே நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர் நிரைதரு மூரலி னகைமீது நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல் நிலையெழ வேயலை வதுவாமோ அரவணை யார்குழை பரசிவ ஆரண அரனிட பாகம துறைசோதி அமையுமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதருள் புதல்வோனே குரவணி பூஷண சரவண தேசிக குககரு ணாநிதி அமரேசா குறமக ளானைமின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே. 217. பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு பலனேபெ றப்பரவு கயவாலே பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல் பதறாமல் வெட்கமறு வகைகூறி விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள் வினையேமி குத்தவர்கள் தொழிலாலே விடமேகொ டுத்துவெகுபொருளேப றித்தருளும் விலைமாதர் பொய்க்கலவி யினிதாமோ மலையே யெடுத்தருளு மொருவாள ரக்கனுடல் வடமேரெ னத்தரையில் விழவேதான் வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு மருகாக டப்பமல ரணிமார்பா சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ் செவியார வைத்தருளு முருகோனே சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள் திருவேர கத்தில்வரு பெருமாளே. 218. பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு மருகோனே கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுர நல காளும் வகையுறு சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு மிளையோனே சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி லுறைவோனே சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல பெருமாளே. 219. மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு நெறிசேர்வார் மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய சாய கக்கண் மடமாதர் இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து இளமை போயொ ளித்து விடுமாறு இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து னினிய தாள ளிப்ப தொருநாளே அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட அதிர வேந டத்து மயில்வீரா அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு அடைய வாழ்வ ளிக்கு மிளையோனே மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க விழைசு வாமி வெற்பி லுறைவோனே விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க வினவ வோது வித்த பெருமாளே. 220. முறுகு காள விடம யின்ற இருகண் வேலினுளம யங்கி முளரி வேரி முகைய டாந்த முலைமீதே முழுகு காதல் தனைம றந்து பரமஞான வொளிசி றந்து முகமொ ராறு மிகவி ரும்பி அயராதே அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை அடைய வாரி மிசைபொ ழிந்து னடிபேணி அவசமாகி யுருகுதொண்ட ருடன தாகி விளையு மன்பி னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து தமர வேலை சுவற வென்ற வடிவேலா தரள மூர லுமை மடந்தை முலையிலார அமுத முண்டு தரணி யேழும் வலம்வ ருந்திண் மயில்வீரா மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து வலிய காவல் புனைய ணங்கின் மணவாளா மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி வளர்சு வாமி மலைய மர்ந்த பெருமாளே. 221. வாதமொடு சூலை கண்ட மாலைகுல நோவு சந்து மாவலிவி யாதி குன்ம மொடுகாசம் வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின் மாதர்தரு பூஷ ணங்க ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து பாயலைவி டாது மங்க இவையால்நின் பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து பாவமது பான முண்டு வெறிமூடி ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று ஈனமிகு சாதி யின்க ணதிலேயான் ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன் ஈரஅருள் கூர வந்து எனையாள்வாய் சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி சூழுமதில் தாவி மஞ்சி னளவாகத் தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த ஸ்வாமிமலை வாழ வந்த பெருமாளே. 222. வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி னீடு மெய்து யர்ந்து வயதாகி வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை மார்க ளுக்கி சைந்து பொருள்தேடி ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த மாப ணிக்கள் விந்தை யதுவான ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ டாவி மெத்த நொந்து திரிவேனோ சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து சூழ்சு ரர்க்க ணன்பு செயும்வீரா சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த சூத னுக்கி சைந்த மருகோனே ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று தானி றைக்க வந்த தொருசாலி யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு மேர கத்த மர்ந்த பெருமாளே. 223. வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து வாவென நகைத்துத் தோட்டு குழையாட வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி வாசனை முலைக்கச் சாட்டி யழகாகச் சீர்கலைநெகிழ்த்துப்போர்த்து நூலிடை நெளித்துக்காட்டி தீதெய நடித்துப் பாட்டு குயில்போலச் சேருறஅழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ருறவாமோ சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி சூர்கிரி கொளுத்திக் கூற்று ரிடும்வேலா தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த தோலுடை யெனப்பர்க் கேற்றி திரிவோனே ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று மேரெழி னிறத்துக் கூர்த்த மகவோனே ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற ஏரக பொரப்பிற் பூத்த பெருமாளே. 224. விடமும்வடி வேலு மதனச ரங்களும் வடுவுநிக ரான மகரநெ டுங்குழை விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு கதுதோயும் ம்ருகமதப டீர பரிமள குங்கும மணியுமிள நீரும் வடகுல குன்றமும் வெருவுவன பார புளகத னங்களும் வெகுகாம நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட மலர்சொருகு கேச பரமுமி லங்கிய நளினமலர் சோதி மதிமுக விம்பமும் அனநேராம் நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ னகையுமுள மாதர் கலவியி னைந்துரு கிடலாமோ வடிவுடைய மானு மிகல்கர னுந்திக ழெகுவகைம ராம ரமுநிக ரொன்றுமில் வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட லவையேழும் மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன் வகையிரவி போலு மணியும லங்க்ருத மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு பதுதோளும் அடைவலமு மாள விடுசர அம்புடை தசரதகு மார ரகுகுல புங்கவன் அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய மயிலேறி அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி லுலகைவல மாக நொடியினில் வந்துயர் அழகியசு வாமி மலையில் மர்ந்தருள் பெருமாளே. 225. விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன தனத்த னந்தன தனதன வெனவொலி விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு மலைபாய மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் வரிபோதத் தரித்த தந்திரி மறிபுய மிசைபல பணிக்கி லங்கிய பரிமள குவடிணை தனக்கொ ழுந்துகள் ததைபடகொடியிடை படுசேலை தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர் சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ தொழியாதோ உரித்த வெங்கய மறியொடு புலிகலை தரித்த சங்கரர் மதிநதி சடையினர் ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர முருகோனே உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல் குவட்டை யும்பொடி படசத முடிவுற வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற விடும்வேலா வரித்த ரந்துள வணிதிரு மருவிய வுரத்த பங்கயர் மரகத மழகிய வணத்த ரம்பர முறவிடு கணையினர் மருகோனே வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு குறத்தி மென்புன மருவிய கிளிதனை மயக்கி மந்திர குருமலை தனிலமர் பெருமாளே. 226. குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர் குருவெனந லுரையுதவு மயிலாஎ னத்தினமு முருகாதே குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர் தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ளனைவோரும் தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள் முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள் தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் வலையாலே சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள் வசமொழுகி யவரடிமை யெனமாத ரிட்டதொழில் தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் தருவாயே சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு தொருநொடியி லவர்கள்படைகெடவேலெடுத்தவணி தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு செருமீதே தவனமொடு மலகைநட மிடவீர பத்திராக ளதிரநிண மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய் தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் பலகோடி திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு திமிரதின கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவு முருகோனே திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி லடிபரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர் சிவசமய அறுமுகவ திருவேர கத்திலுறை பெருமாளே. 227. குமர குருபர முருக சரவண குகசண் முககரி பிறகான குழக சிவசத சிவய நமவென குரவ னருள்குரு மணியேயென் றமுத இமையவர் திமிர்த மிடுகட லதென அநுதின முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடு மபய மிடுகுர லறியாயோ திமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழவுயிர் திறைகொ டமர்பொரு மயில்வீரா நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல் நதிகொள் சடையினர் குருநாதா நளின குருமலை மருவி யமர்தரு நவிலு மறைபுகழ் பெருமாளே. 228. கோமள வெற்பினை யொத்தத னத்தியர் காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள் கோவையிதழ்க்கனி நித்தமும்விற்பவர் மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குட ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல் கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் விரகாலே தூம மலர்ப்பளி மெத்தைப டுப்பவர் யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர் சோலை வனக்கிளி யொத்த மொழிச்சியர் நெறிகூடா தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர் காசுப றிக்கம றித்துமு யக்கிகள் தோதக வித்தைய டித்துந டிப்பவ ருறவாமோ மாமர மொத்தவ ரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக கதிர்காம மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர மாகிரி யிற்றிரை சுற்றிவளைத்திடும் அலைவாயில் ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி னாலுவ கத்தினி லுற்றுறு பத்தர்கள் ஏதுநி னைத்தது மெத்த அளித்தரு ளிளையோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ ராஜத லக்ஷண லக்ஷúமி பெற்றருள் பெருமாளே. 229. வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு வாயிதழ் பொற்கம லர்க்குமிழொத்துள துண்டக்ரீவ வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ரம்பைமாதர் காருறும் வித்திடை யிற்கத லித்தொடை சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை யொண்குலாவக் கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர் காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் சந்தமாமோ சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல சங்கமாகச் சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் செங்கைவேலா ஏரணி நற்குழ லைக்கக னச்சசி மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத வேடமு தச்சொரு பத்தகு றத்திம ணங்கொள்வோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண ராஜத லக்ஷண லக்ஷúமி பெற்றருள் தம்பிரானே. 230. செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியான னத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே. 231. மருவே செறித்த குழலார் மயக்கி மதனா கமத்தின விரகாலே மயலே யெழுப்பி யிதழே யருத்த மலைபோல் முலைக்கு ளுறவாகிப் பெருகாத லுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்ச மறவாதே பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே குருவா யரற்கு முபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து குடகா விரிக்கு வடபாலார் திருவே ரகத்தி லுறைவா யுமைக்கொர் சிறுவா கரிக்கு மிளையோனே திருமால் தனக்கு மருகா அரக்கர் சிரமே துணித்த பெருமாளே. 232. இராவினிருள் போலும் பராவுகுழ லாலும் இராமசர மாகும் விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும் இராதஇடை யாலும் இளைஞோர்நெஞ் சராவியிரு போதும் பராவிவிழ வேவந் தடாதவிலை கூறும் மடவாரன் படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும் அநாதிமொழி ஞானம் தருவாயே குராவினிழல் மேவுங் குமாரனென நாளும் குலாவியினி தோதன் பினர்வாழ்வே குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங் குடாவியிட வேலங் கெறிவோனே துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந் தொடாமல்விணை யோடும் படிநூறுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் பெருமாளே. 233. கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் கதைபோலும் இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங் கிராமலுயிர் கோலிங் கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின் றியானுமுனை யோதும் படிபாராய் விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற வேலங் கெறிவோனே தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ் சுவாச மதுதானைம் புலனோடுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே. 234. கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு தருமா கடப்ப மைந்த தொடைமாலை கனமேரு வொத்தி டும்பனிருமாபு யத்த ணிந்த கருணாக ரப்ர சண்ட கதிர்வேலா; வடிவார்கு றத்தி தன்பொனடிமீது நித்த முந்தண் முடியான துற்று கந்து பணிவோனே வளவாய்மை சொற்பர பந்த முளகீர னுக்கு கந்து மலர்வாயி லக்க ணங்கள் இயல்போதி; அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்றுன் அருளால ளிக்கு கந்த பேரியோனே அடியேன் உரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த னருளேத ழைத்து கந்து வரவேணும்; செடிநேருடற்கு டம்பை தனின் மேவி யுற்றிடிந்த படிதானலக்க ணிங்கணுறலாமோ திறமா தவர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த திருவேர கத்த மர்ந்த பெருமாளே. 235. விழியால் மருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு விரகான லத்த ழுந்த நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச விளையாட லுக்கி சைந்து சிலநாள்மேல் மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த முழுமாயை யிற்பி ணங்கள் வசமாகி முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று முதிராத நற்ப தங்கள் தருவாயே பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று பொருதாளெ டுத்த தந்தை மகிழ்வோனே புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட புனிதாமிரு கக்க ரும்பு புணர்மார்பா செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று திருவாய்மை செப்பி நின்ற முருகோனே திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற திருவேர கத்த மர்ந்த பெருமாளே. 236. இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி னிருவினை யிடைந்து போக மலமூட- இருளற விளங்கி ஆறுமுகமொடு கலந்து பேத மிலையென இரண்டு பேரு மழகான; பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர் பணியவிண் மடந்தை பாத மலர்தூவப்- பரிவுகொடநந்த கோடி முனிவர்கள் புகழ்ந்து பாட பருமயிலுடன் குலாவி வரவேணும்; அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம் அடியென விளங்கி யாடு நடராஜன் அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம் அயலணி சிவன்பு ராரி அருள்சேயே; மருவலர்கள் திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி மறலியுண வென்ற வேலை யுடையோனே- வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி மலை மிசை விளங்கு தேவர் பெருமாளே. 237. கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது கடலளவு கண்டு மாய மருளாலே கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள் கவினறந டந்து தேயும் வகையேபோய் இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்துகூடு மிடமிடமி தென்று சோர்வு படையாதே இசையொடுபு கழ்ந்த போது நழுவியப்ர சண்டர் வாசல் இரவுபகல் சென்று வாடி யுழல்வேனோ மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக மலர்வளநி றைந்த பாளை மலரூடே வகைவகையெ ழுந்து சாம வதிமறைவி யந்து பாட மதிநிழலி டுஞ்சு வாமி மலைவாழ்வே அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப அணிமயில்வி ரும்பி யேறு மிளையோனே அடைவொடுல கங்கள்யாவு முதவிநிலை கண்டபாவை அருள்புதல்வ அண்ட ராஜர் பெருமாளே. ஐந்தாவது படைவீடு - திருத்தணி (குன்றுதோறாடல்) 238. திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி சிவவழி யுடனுற் றேக பரமீதே சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல திரிபுர மெரியத் தீயி னகைமேவி இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி யிருள்கதி ரிலிபொற் பூமி தவசூடே இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ ரிளையவ னெனவித் தார மருள்வாயே பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர் பழமறை பணியச் சூல மழுமானும் பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு பரியினை மலர்விட் டாடி அடியோர்கள் அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல மருள்செயு முமையிற் பாக ரருள்பாலா அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ டடியவர் கயிலைக் கான பெருமாளே. 239. தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநீர் சீரும்ப ழித்தசிவ மருளூறத் தீதும்பி டித்தவினை யேதும்பொ டித்துவிழ சீவன்சி வச்சொருப மெனதேறி; நானென்ப தற்றுயிரோ டுனென்ப தற்றுவெளி நாதம்ப ரப்பிரம வொளிமீதே ஞானஞ்சு ரப்பமகி ழாநந்த சித்தியொடெ நாளுங்க ளிக்கபத மருள்வாயே வானந்த ழைக்க அடி யேனுஞ்செ ழிக்க அயன் மாலும்பி ழைக்க அலை விடமாள வாருங்க ரத்தனெமை யாளுந்த கப்பன்மழு மானின்க ரத்தனருள் முருகோனே; தானந்த னத்ததன னாவண்டு சுற்றிமது தானுண்க டப்பமல ரணிமார்பா தானங்கு றித்துஎமை யாளுந்தி ருக்கயிலை சாலுங்கு றத்திமகிழ் பெருமாளே. 240. நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தி லதிமோகம் நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தி லணைத்து மொழியாலும் திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை திரட்டி யெடுத்து வரவேசெய் திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து படர்ச்சி கறுத்த மயிலேறிப் பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தனமாதை மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து வெளுத்த பொருப்பி லுறைநாதா விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க ம்ருகத்தை யெடுத்தொர் பெருமாளே. 241. பனியின் விந்துளி போலவே கருவினுறு மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர் பனைதெ னங்கனி போலவே பலகனியின் வயிறாகிப் பருவ முந்தலை கீழதாய் நழுவிநில மருவி யொன்பது வாசல்சே ருருவமுள பதுமை யின்செயல்போலவே வளிகயிறி னுடனாடி மனவி தந்தெரி யாமலே மலசலமொ டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின் மயம யின்றொரு பாலனா யிகமுடைய செயல்மேவி வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும் அறம றந்தக மீதுபோய் தினதினமு மனமழிந்துடல்நாறினே னினியுனது கழல்தாராய் தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு வளைபேரி தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு மவுணோர்கள் சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள் குருதி யெண்டிசை மூடவே அலகைநரி சிறையி னங்களி கூரவே நகையருளி விடும்வேலா சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ் திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் பெருமாளே. 242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல; அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே; சமரிலெதிர்த் தகர்மாளத் தனியயில்விட் டருள்வோனே; நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே 243. முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந முலைக்கச் சவிழ்த்த சைத்து முசியாதே முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து மொழிக்குட் படுத்த ழைத்த மளிமீதே நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த நயத்திற் கழுத்தி றுக்கி யணைவார்பால் நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்கவைத்து நயத்துத் தியக்கி நித்த மழிவேனோ செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி யெனஆடும் செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக் கினித்த சித்தி யருள்வோனே மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன் மிகுத்துப் பெயர்த்தெ டுத்த கயிலாய மிசைக்குற்றடுத்துமற்ற பொருப்பைப்பொடித்திடித்து மிதித்துத் துகைத்து விட்ட பெருமாளே. ஸ்ரீசைலம் (திருமலை) 244. ஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ் வெளியொடு வொளிபெற விரவாதே; தெருவினில் மரமென எவரோடு முரைசெய்து திரிதொழி லவமது புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெற அருள் புரிவாயே; பரிவுட னழகிய பழமொடு கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம் பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி எழுதிய கணபதி இளையோனே; பெருமலை யுருவிட அடியவ ருருகிட பிணிகெட அருள்தரு குமரேசா பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள் பிணையமர் திருமலை பெருமாளே திருப்பதி (திருவேங்கடம்) 245. கறுத்ததலை வெளிறு மிகுந்து மதர்த்தஇணை விழிகள் குழிந்து கதுப்பிலுறு தசைகள் வறண்டு செவிதோலாய்க் கழுத்தடியு மடைய வளைந்து கனத்தநெடு முதுகு குனிந்து கதுப்புறுப லடைய விழுந்து தடுநீர்சோ ருறக்கம்வரு மளவி லெலும்பு குலுக்கிவிடு மிருமல் தொடங்கி உரத்தகன குரலு நெரிந்து தடிகாலாய் உரத்தநடை தளரு முடம்பு பழுத்திடுமுன் மிகவும் விரும்பி உனக்கடிமை படுமவர் தொண்டு புரிவேனோ சிறுத்தசெலு வதனு ளிருந்து பெருத்ததிரை யுததி கரந்து செறித்தமறை கொணர நிவந்த ஜெயமாலே செறித்தவளை கடலில் வரம்பு புதுக்கியிளை யவனொ டறிந்து செயிர்த்தஅநு மனையு முகந்து படையோடி மறப்புரிசை வளையு மிலங்கை யரக்கனொரு பதுமுடி சிந்த வளைத்தசிலை விஜய முகுந்தன் மருகோனே மலர்க்கமல வடிவுள செங்கை அயிற்குமர குகைவழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே. 246. சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர எனவோது தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே; கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதை யமுதமொழி தருபவ ருயிர்பெறவருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மதிகன கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே; திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர் மனது குடியுமிரு பொருளிலுமிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு பெருவாழ்வே! அரவணை மிசைதுயில் நரகரி நெடியவ மருகனெ னவௌரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய முருகோனே அதல விதல முதல் கிடுகிடு கிடுவென வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகி னுடனமரு மரகர சிவசவ பெருமாளே 247. நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கச்சுற் றறன்மேவி நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய நிரைதரு மருமலர் செருகிடு பரிமள நிறையுறை மதுகர நெடிதாடி நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற் றொப்புக் கொப்புக் குயர்வாகி நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு நிகழ்புழு கொழுகிய குழன்மேலும் வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட் டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன் மதசிலை யதுவென மகபதி தனுவென மதிதில தமும்வதி நுதன்மேலும் மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப் பொற்பக் கத்திச் சையனாகி மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத மலரல திலைநிலை யெனமொழி தழியமெய் வழிபட லொழிவனை யருள்வாயே நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத் துட்டக் கட்டத் தசிகாண நடத்தி விடத்தை யுடைத்த படத்தினி னடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில் நகைமுக திருவுறை மணிமார்பன் நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத் தைக்கைப் பற்றிப் பொருமாய னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த நரகரி யொருதிரு மருகோனே நகச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப் பட்டுக் குட்பட் டமுதாலுங் கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு கனதன பரிமள முழுகுப னிருபுய கனகதி வியமணி யணிமார்பா கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப் பட்சிக் கக்கொட் டசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு கடவட மலையுறை பெருமாளே. 248. கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும் வாங்கிய வேல்விழியும் இருள்கூருங் கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும் மாந்தளிர் போல்வடிவும் மிகநாடிப் பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு தீங்குட னேயுழலும் உயிர்வாழ்வு பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில் வீழ்ந்தலை யாமலருள் புரிவாயே பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும் வேங்கையு மாய்மறமின் னுடன்வாழ்வாய் பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக பாண்டிய னீறணிய மொழிவோனே வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர் வேங்கட மாமலையி லுறைவோனே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்டவெ றாதுதவு பெருமாளே. 249. சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில மூண்டவி யாதசம யவிரோத சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர் தாந்துணை யாவரென மடவார்மேல் ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு தோய்ந்துரு காஅறிவு தடுமாறி ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம் யான்தனி போய்விடுவ தியல்போதான் காந்தளி னானகர மான்தரு கானமயில் காந்தவி சாகசர வணவேளே காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி யாண்டகை யேயிபமின் மணவாளா வேந்தகு மாரகுக சேந்தம யூரவட வேங்கட மாமலையி லுறைவோனே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்டவெ றாதுதவு பெருமாளே. 250. வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு முழைவார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே வளர்கோங்கிள மாமுகை யாகிய தனவாஞ்சையி லேமுக மாயையில் வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே இருள்போன்றிடு வார்குழல் நீழலில் மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே எனதாந்தன தானவை போயற மலமாங்கடு மோக விகாரமு மிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே கரிவாம்பரி தேர்திரள் சேனையு முடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக் கனபாண்டவர் தேர்தனி லேயெழு பரிதூண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன் திரைநீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்கும் ராமர மேழொடு தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச் சிலைவாங்கிய நாரண னார்மரு மகனாங்குக னேபொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே. திருத்தணி (க்ஷணிகாசலம், செருத்தணி) 251. அமைவுற் றடையப் பசியுற் றவருக் கமுதைப் பகிர்தற் கிசையாதே அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத் தருள்தப் பிமதத் தயராதே தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச் சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ் சரிரத் தினைநிற் குமெனக் கருதித் தளர்வுற் றொழியக் கடவேனோ இமயத் துமயற் கொருபக் கமளித் தளர்வுற் றொழியக் கடவோனே இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக் கிரையிட் டிடுவிக் ரமவேலா சமயச் சிலுகிட் டவரைத் தவறித் தவமுற் றவருட் புகநாடும் சடுபத் மமுகக் குகபுக் ககனத் தணியிற் குமரப் பெருமாளே. 252. குவளைக் கணைதொட்டவனுக் குமுடிக் குடையிட் டகுறைப் பிறையாலே குறுகுற்ற அலர்த் தெரிவைக் குமொழிக் குயிலுக் குமினித் தளராதே இவளைத் துவளக் கலவிக் குநயத் திறுகத் தழுவிப் புயமீதே இணையற் றழகிற் புனையக் கருணைக் கினிமைத் தொடையைத் தரவேணும் கவளக் கரடக் கரியெட் டலறக் கனகக் கிரியைப் பொரும்வேலா கருதிச் செயலைப் புயனுக் குருகிக் கலவிக் கணயத் தெழுமார்பா பவளத் தரளத் திரளக் குவைவெற் பவையொப் புவயற் புறமீதே பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப் பதியிற் குமரப் பெருமாளே. 253. பொரியப் பொரியப் பொலிமுத் துவடத் துகளிற் புதையத் தனமீதே புரளப் புரளக் கறுவித் தறுகட் பொருவிற் சுறவக் கொடிவேள்தோள் தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச் செயலற் றனள்கற் பழியாதே செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத் தெரிவைக் குணர்வைத் தரவேணும் சொரியற் பகநற் பதியைத் தொழுகைச் சுரருக் குரிமைப் புரிவோனே சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச் சுருதிப் பொருளைப் பகர்வோனே தரிகெட் டசுரப் படைகெட் டொழியத் தனிநெட் டயிலைத் தொடும்வீரா தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் பெருமாளே. 254. அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத் தழித்தறக் கறுத்தகட் பயிலாலே அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க் கடுத்தபத் தமுற்றுவித் தகர்போலத் தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத் தலத்துமற் றிலைப்பிறர்க் கெனஞானம் சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச் சறுக்குமிப் பிறப்புபெற் றிடலாமோ பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப் பொருப்பினிற் பெருக்கவுற் றிடுமாயம் புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப் புரிக்கிரக் கம்வைத்தபொற் கதிர்வேலா திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத் தினைப்புனக் கிரித்தலத் திடைதோயுஞ் சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே. 255. கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக் கடைக்கணிற் கொடுத்தழைத் தியல்காமக் கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக் கரைத்துடுத் தபட்டவிழ்த் தணைமீதே சடக்கெனப் புகத்தனத் தணைத்திகழ்க் கொடுத்துமுத் தமிட்டிருட் குழற்பிணித் துகிரேகை சளப்படப் புதைத்தடிப் திலைக்குணக் கடித்தடத் தலத்தில்வைப் பவர்க்கிதப் படுவேனோ இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித் தெழிற்றினைச் சிரிப்புறத் துறைவேலா இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச் சிறைச்சியைப் பசித்திரைக் கிசைகூவும் பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப் பிதற்றறப் படுத்துசற் குருவாய்முன் பிறப்பிலிப் குணத்துசித் தவுற்றநெற் பெருக்குவைப் பெருக்குமெய்த் திருத்தணிப் பெருமாளே. 256. கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக் கனத்தையொத் துமொய்த்தமைக் குழலார்தங் கறுத்தமைக்க கயற்கணிற்கருத்துவைத் தொருத்தநிற் கழற்பதத் தடுத்திடற் கறியாதே இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத் திசைத்தசைத் தசுக்கிலத் தசைதோலால் எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத் தெனக்குநித் தமுத்தியைத் தரவேணும் பனைக்கரச் சினத்திபத தனைத்துரத் தரக்கனைப் பயத்தினிற் பயப்படப் பொரும்வேலா பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப் படைத்தகுக் குடக்கொடிக் குமரேசா தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச் செருக்குறத் திருப்புயத் தணைவோனே திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத் திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே. 257. பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப் பரித்தவப் பதத்தினைப் பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத்திடத்தினைப் பசிக்குடற் கடத்தினைப் பயமேவும் பெருத்தபித் துருத்தனைக் கருத்திமத் துருத்தியைப் பிணித்தமுக் குறத்தொடைப் புலனாலும் பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக் குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக் கழித்தமெய்ப் பதத்தில்வைத் திடுவீரா கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக் கதித்தநற் றிருப்புயத் தணைவோனே செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச் சிரித்தெரித் தநித்தர்பொற் குமரேசா சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே. 258. எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும் உரைத்திடு வார்தங் குளிமேவி உணர்த்திய போதங் தனைப்பிரி யாதொண் பொலச்சர ணானுந் தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள்கொன் றவனீயே விளப்பென மேலென் றிடக்கய னாரும் விருப்புற வேதம் புகல்வோனே சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் பெருமாளே. 259. பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம் ப்ரபுத்தன பாரங் களிலேசம் ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும் ப்ரியக்கட லூடுந் தணியாத கருக்கட லூடுங் கதற்றும நேகங் கலைக்கட லூடுஞ் சுழலாதே கடப்பவர் சேர்கிண் கிணிப்ரபை வீசுங் கழற்புணை நீதந் தருள்வாயே தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ் சதுர்த்தச லோகங் களும்வாழச் சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ் சளப்பட மாவுந் தனிவீழத் திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ் செருக்கு மயூரந் தனில்வாழ்வே சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந் திருத்தணி மேவும் பெருமாளே. 260. மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண் மதிப்பிள வாகும் நுதலார்தம் மயக்கினி லேநண் புறப்படு வேனுன் மலர்க்கழல் பாடுந் திறநாடாத் தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன் சமத்தறி யாவன் பிலிமூகன் தலத்தினி லேவந் துறப்பணி யாதன் தனக்கினி யார்தஞ் சபைதாராய் குருக்கல ராஜன் தனக்கொரு தூதன் குறட்பெல மாயன் நவநீதங் குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன் குணத்ரய நாதன் மருகோனே திருக்குள நாளும் பலத்திசை மூசும் சிறப்பது றாஎண் டிசையோடும் திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகும் திருத்தணி மேவும் பெருமாளே. 261. வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம் பினுக்கெதி ராகும் விழிமாதர் மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ் சமத்திடை போய்வெந் துயர்மூழ்கிக் கனத்தவி சாரம் பிறப்படி தோயுங் கருக்குழி தோறுங் கவிழாதே கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங் கழற்புக ழோதுங் கலைதாராய் புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ் சியைப்புணர் வாகம் புயவேளே பொருப்பிரு கூறும் படக்கடல் தானும் பொருக்கெழ வானும் புகைமூளச் சினத்தொடு சூரன் கனத்தணி மார்பந் திறக்கம ராடுந் திறல்வேலா திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந் திருத்தணி மேவும் பெருமாளே. 262. இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள் பிறவிக டோறு மெனைநலி யாத படியுன தாள்க ளருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே. 263. கலைமட வார்தஞ் சிலையத னாலுங் கனவளை யாலுங் கரைமேலே கருகிய காளம் பெருகிய தோயங் கருதலை யாலுஞ் சிலையாலும் கொலைதரு காமன் பலகணை யாலும் கொடியிடை யாள்நின் றழியாதே குரவணி நீடும் புயமணி நீபங் குளிர்தொடை நீதந் தருள்வாயே சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும்வேலா தினைவன மானுங் கனவன மானுஞ் செறிவுடன் மேவுந் திருமார்பா தலமகள் மீதெண் புலவரு லாவுந் தணிகையில் வாழ்செங் கதிர்வேலா தனியவர் கூருந் தனிகெட நாளுந் தனிமயி லேறும் பெருமாளே. 264. கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங் கரிக்குவ டிணைக்குந் தனபாரக் கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங் கலைத்துகில் மினுக்யும் பணிவாரைத் தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்துனது சித்தங் களிகூரத் தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன் தலத்தினி லிருக்கும் படிபாராய் புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண் பொடிப்பணி யெனப்பன் குருநாதா புயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின் புகழ்ச்சிய முதத்திண் புலவோனே திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந் தெறிப்புற விடுக்குங் கதிர்வேலா சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி ஜயத்தென் திருத்தணி யிருக்கும் பெருமாளே. 265. சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தும லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. 266. தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக துக்கமாற் கடமு மலமாயை துற்றகாற் பதலை சொற்படாக் குதலை துப்பிலாப் பலச மயநூலைக் கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ லப்புலாற் றசைகு ருதியாலே கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல சட்டவாக் கழிவ தொருநாளே அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர் அர்ச்சியாத் தொழுமு னிவனாய அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல் வெற்பபார்ப் பதிந திகுமாரா இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத வத்தினோர்க் குதவு மிளையோனே எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தினார்க் கெளிய பெருமாளே 267. வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை மக்கள்தாய்க் கிழவி பதிநாடு வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள் மற்றகூட் டமறி வயலாக முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை முட்டர்பூட் டியெனை யழையாமுன் முத்தி வீட்டணுக முத்தராக் கசுரு திக்குராக் கொளிரு கழல்தாராய் பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ பத்தின்வாட் பிடியின் மணவாளா பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப திச்சிதோட் புணர்த ணியில்வேளே எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி யெட்டுமாக் குலைய எறிவேலா எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தினார்க் கெளிய பெருமாளே. 268. சினத்தி லத்தினை சிறுமண லளவுடல் செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய லெனபல வதுபோதா செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ தளவேதோ மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை யளவிலை விதிகர மொழியாமல் வகுத்த தெத்தனை மசகனை முருடனை மடைக்கு லத்தனை மதியழி விரகனை மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு தமித்த மத்தள தமருக விருதொலி கடல்போலச் சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை தெறித்திடக்கழு நரிதின நிணமிசை பொரும்வேலா செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ முனிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி திருத்த ணிப்பதி மருவிய குறமகள் பெருமாளே. 269. தொடர்ந்து ளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் முழுமோசந் துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர் விலைமுலை யினவலை புகுதாமல் அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறமென வரவுட னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு விளையாடி அவத்தை தத்துவ மழிபட இருளறை விலக்கு வித்தொரு சுடரொளி பரவந லருட்பு கட்டியு னடியிணை யருளுவ தொருநாளே படைத்த னைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபியொர் பரத்தி னுச்சயி னடநவி லுமையரு ளிளையோனே பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர் தொடுத்த சக்கிர வளைகர மழகியர் படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் மருகோனே திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில் திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல் குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ் திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு பெருமாளே. 270. எலுப்பு நாடிக ளப்பொ டிரத்தமொ டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ சதிகாரர் இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு சமுசா கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்க ளழிப்பர் மாதவ முற்று நினைக்கிலர் கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர் கொலைகாரர் கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள வரிப்பர் சூடக ரெத்தினை வெப்பிணி கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ணுழல்வேனோ ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி யுடைத்து வானவர் சித்தர்து தித்திட விடும்வேலா உலுத்த ராவண னைச்சிர மிற்றிட வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவ னுலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே வலிக்க வேதனை குட்டிந டித்தொரு செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா வனத்தில் வாழும யிற்குல மொத்திடு குறத்தி யாரைம யக்கிய ணைத்துள மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய பெருமாளே. 271. திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியி னித்தந டிப்பவர் சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் வலையாலே திகைத்து ளாவிக ரைத்தும னத்தினி லிதத்தை யோடவி டுத்தும யக்கிடு சிமிட்டு காமவி தத்திலு முட்பட அலைவேனோ தரித்து நீறுபி தற்றிடு பித்தனு மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு முருகோனே சமப்ர வீணம தித்திடு புத்தியி லிரக்க மாய்வரு தற்பர சிற்பர சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண குருநாதா வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட விதித்த வீரச மர்க்கள ரத்தமு மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில் விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய மறவோனே பெருக்க மோடுச ரித்திடு மச்சமு முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் கழுநீரின் பிணித்த போதுவெ டித்துர சத்துளி கொடுக்கு மோடையி குத்ததி ருத்தணி பிறக்க மேவுற அத்தல முற்றுறை பெருமாளே. 272. அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயி லனலென எழவிடு மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவ ருளமதி லுறவருள் முருகேசா பகவதி வரைமக ளுமைதர வருகுக பரமன திருசெவி களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர வுயர்வாய உலகம னலகில் வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு பெருமாளே. 273. இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவ ரிடுக்கினை யறுத்திடு மெனவோதும் இசைத்தமிழ் நடத்துமி ழெனத்துறை விருப்புட னிலக்கண இலக்கிய கவிநாலுந் தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக தலத்தினில் நவிற்றுத லறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல் களிப்புட னொளித்தெய்த மதவேளைக் கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு கனற்கணி லெரித்தவர் கயிலாயப் பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர் தருசேயே புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே. 274. உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத உணர்வி னூடு வானூடு முதுதீயூ டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு மொருவ ரோடு மேவாத தனிஞானச் சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு துரிய வாகு லாதீத சிவரூபம் தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை தொடுமு பாய மேதோசொ லருள்வாயே மடல றாத வாரீச அடவி சாடி மாறான வரிவ ரால்கு வால்சாய அமராடி மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி மடையை மோதி யாறூடு தடமாகக் கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு மலர்வாவிக் கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர கருணை மேரு வேதேவர் பெருமாளே. 275. உடையவர்க ளேவ ரெவர்களென நாடி யுளமகிழ ஆசு கவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவு மான தெனவுரமு மான மொழிபேசி நடைபழகி மீள வறியவர்கள் நாளை நடவுமென வாடி முகம்வேறாய் நலியுமுன மேயு னருணவொளி வீசு நளினஇரு பாத மருள்வாயே விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் விகிர்தர்பர யோகர் நிலவோடே விளவுசிறு பூளை நகுதலையொ டாறு விடவரவு சூடு மதிபாரச் சடையிறைவர் காண உமைமகிழ ஞான தளர் நடையி டாமுன் வருவோனே தவமலரு நீல மலர்சுனைய நாதி தணிமலையு லாவு பெருமாளே. 276. உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது முள்ளவே தத்துறைகொ டுணர்வோதி உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை யுள்ளமோ கத்தருளி யுறவாகி வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய வல்லமீ துற்பலச யிலமேவும் வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி கிள்ளிவீ சுற்றுமலர் பணிவேனோ பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி துய்யவே ணிப்பகிர திகுமாரா பையமால் பற்றிவளர் சையகுமேல் வைக்குமுது நெய்யனே சுற்றியகு றவர்கோவே செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு கையமால் வைத்ததிரு மருகோனே தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ தெய்வயா னைக்கினிய பெருமாளே. 277. எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங் கெத்தனைச ராச ரத்தின் செடமான எத்தனைவிடாவெருட்டங்கெத்தனைவலாண்மைபற்றங் கெத்தனைகொ லூனை நித்தம் பசியாறல் பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம் பெற்றிடநி னாச னத்தின் செயலான பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும் பெத்தமுமொ ராது நிற்குங் கழல்தாராய் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னான னுர்த்துஞ் சதபேரி சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர் திக்குகளொர் நாலி ரட்டின் கிரிசூழச் செக்கணரி மாகனைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின் செக்கர்நிற மாயி ருக்கும் பெருமாளே. 278. எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த மெரிவ ழங்கு வெப்பு வலிபேசா இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ டிரும லென்று ரைக்கு மிவையோடே மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு மயிலில் வந்து முத்தி தரவேணும் நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க நெறியில் நின்ற வெற்றி முனைவேலா நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கு முருகோனே தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி செயல றிந்த ணைக்கு மணிமார்பா திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த சிறைதி றந்து விட்ட பெருமாளே. 279. ஏது புத்திஐ யாஎ னக்கினி யாரை நத்திடுவேன வத்தினி லேயி றத்தல்கொ லோஎ னக்குநி தந்தைதாயென் றேயி ருக்கவு நானு மிப்படி யேத வித்திட வோச கத்தவ ரேச லிற்பட வோந கைத்தவர் கண்கள்காணப் பாதம் வைத்திடை யாத ரித்தெனை தாளில் வைக்கநி யேம றுத்திடில் பார்ந கைக்குமை யாத கப்பன்முன் மைந்தனோடிப் பால்மொ ழிக்குர லோல மிட்டிடில் யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது சிந்தியாதோ ஓத முற்றெழு பால்கொ தித்தது போல எட்டிகை நீச முட்டரை யோட வெட்டிய பாநு சத்திகை எங்கள்கோவே ஓத மொய்ச்சடை யாட வுற்றமர் மான்ம ழுக்கர மாட பொற்கழ லோசை பெற்றிட வேந டித்தவர் தந்தவாழ்வே மாதி னைப்புன மீதி ருக்குமை வாள்வி ழிக்குற மாதி னைத்திரு மார்ப ணைத்தம யூர அற்புத கந்தவேளே மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ லார்வி யப்புற நீடு மெய்த்தவர் வாழ்தி ருத்தணி மாம லைப்பதி தம்பிரானே. 280. ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர ரூப மொத்தநி றத்திகள் விற்கணை யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை யமுதோடே ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர லோடு வைத்துமி ழற்று மிடற்றிகள் ஓசை பெற்ற துடிக்கொ ளிடைச்சிகள் மணம்வீசும் மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி வார ழுத்துத னத்திகள் குத்திர மால்வி ளைத்தும னத்தை யழித்திடு மடமாதர் மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு மாத ருக்குவ ருத்தமி ருப்பது தணியாதோ வேலை வற்றிட நற்கணை தொட்டலை மீத டைத்துத னிப்படை விட்டுற வீற ரக்கன்மு டித்தலை பத்தையு மலைபோலே மீத றுத்துநி லத்தில டித்துமெய் வேத லக்ஷúமி யைச்சிறை விட்டருள் வீர அச்சுத னுக்குந லற்புத மருகோனே நீலி நிஷ்களி நிர்க்குணி நித்தில வாரி முத்துந கைக்கொடி சித்திர நீலி ரத்தின மிட்டஅ றக்கிளி புதல்வோனே நீற திட்டுநி னைப்பவர் புத்தியில் நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு நீல முற்றதி ருத்தணி வெற்புறை பெருமாளே. 281. கச்சணி யிளமுலை முத்தணி பலவகை கைச்சரி சொலிவர மயல்கூறிக் கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர் கட்செவி நிகரல்குல் மடமாதர் இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி யெச்சமி லொருபொரு ளறியேனுக் கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை யிப்பொழு தணுகவு னருள்தாராய் கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை நச்சியெ திருடிய குறையால்வீழ் குற்கிர வினியொடு நற்றிற வகையறி கொற்றவு வணமிசை வருகேசன் அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயி லச்சுதன் மகிழ்திரு மருகோனே அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை யப்பனெ யழகிய பெருமாளே. 282. கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற் கடவுட்ப்ர திஷ்டைபற் பலவாகக் கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க் கருவிற்பு கப்பகுத் துழல்வானேன் சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக் கசரப்ப ளிக்கெனப் பொருள்தேடிச் சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற் சரணப்ர சித்திசற் றுணராரோ குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக் குமுறக்க லக்கிவிக் ரமசூரன் குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத் துதிரத்தி னிற்குளித் தெழும்வேலா சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற் றுவலைச்சி மிழ்த்துநிற் பவள்நாணத் தொழுதெத்து முத்தபொற் புரிசைக்செ ருத்தணிச் சுருதித் தமிழ்க்கவிப் பெருமாளே. 283. கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட லொன்றினாலே கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ரங்களாலே தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம டந்தைகேள்வா திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் கந்தவேளே பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய மங்கைபாகா படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் தம்பிரானே. 284. கிரியு லாவிய முலைமிசை துகிலிடு கபட நாடக விரகிக ளசடிகள் கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் விரகாலே க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள் முழுது நாறிக ளிதமொழி வசனிகள் கிடையின் மேல்மனமுருகிடதழுவிகள் பொருளாலே பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர் அதிக மாவொரு பொருள்தரு பவரொடு பழைய பேரென இதமுற அணைபவர் விழியாலே பகழி போல்விடு வினைகவர் திருடிகள் தமையெ ணாவகை யுறுகதி பெறும்வகை பகர மாமயில் மிசைவர நினைவது மொருநாளே அரிய ராதிபர் மலரய னிமையவர் நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக இளையோனே அரிய கானக முறைகுற மகளிட கணவ னாகிய அறிவுள விதரண அமரர் நாயக சரவண பவதிற லுடையோனே தரும நீதியர் மறையுளர் பொறையுளர் சரிவு றாநிலை பெறுதவ முடையவர் தளர்வி லாமன முடையவ ரறிவினர் பரராஜர் சகல லோகமு முடையவர் நினைபவர் பரவு தாமரை மலரடி யினிதுற தணிகை மாமலை மணிமுடி யழகியல் பெருமாளே. 285.கிறிமொழிக் கிருதரைக் பொறிவழிச் செறிஞரைக் கெடுபிறப் பறவிழிக் கிறபார்வைக் கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க் கிகள்தமைச் செறிதலுற றறிவேதும் அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற் றறவுநெக் கழிகருக் கடலூடே அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற் றடியிணைக் கணுகிடப் பெறுவேனோ பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப் பொறியிலச் சமணரத் தனைபேரும் பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப் புகலியற் கவுணியப் புலவோனே தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித் தவர்திருப் புதல்வநற் சுனைமேவுந் தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத் தணியினிற் சரவணப் பெருமாளே. 286. குயிலொன் றுமொழிக் குயினின் றலையக் கொலையின் பமலர்க் கணையாலே குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக் கொடிகொங் கையின்முத் தனலாலே புயலவந தெரியக் கடனின் றலறப் பொருமங் கையருக் கலராலே புயமொன் றமிகத் தளர்கின் றதனிப் புயம்வந் தணையக் கிடையாதோ சயிலங் குலையத் தடமுந் தகரச் சமனின் றலையப் பொரும்வீரா தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த் தனமொன் றுமணித் திருமார்பா பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற் பணியுந் தணிகைப் பதிவாழ்வே பரமன் பணியப் பொருளன் றருளிற் பகர்செங் கழநிப் பெருமாளே. 287. குருவி யெனப்பல கழுகு நரித்திரள் அரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கரி மரமு மெனத்திரி யுறவாகா குமரி கலித்துறை முழுகி மனத்துயர் கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் நகையாமல் மருவு புயத்திடை பணிக ளணப்பல கரிபரி சுற்றிட கலைகள் தரித்தொரு மதன சரக்கென கனக பலக்குட னதுதேடேன் வரிய பதத்தினி னருவி யிருப்பிடம் அமையு மெனக்கிட முனது பதச்சரண் மருவு திருப்புக ழருள எனக்கினி யருள்வாயே விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு வெகுதாளம் வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட விடும்வேலா அரிய திரிப்புர மெரிய விழித்தவன் அயனை முடித்தலை யரியு மழுக்கையன் அகில மனைத்தையு முயிரு மளித்தவ னருள்சேயே அமண ருடற்கெட வசியி லழுத்திவி ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ டழகு திருத்தணி மலையில் நடித்தருள் பெருமாளே. 288. குலைத்துமயிர்க் கலைத்துவளைக் கழுத்துமணித் தனப்புரளக் குவித்தவிழிக் கயற்சுழலப் பிறைபோலக் குனித்தநுதற் புரட்டிநகைத் துருக்கிமயற் கொளுத்தியிணைக் குழைச்செவியிற் றழைப்பபொறித் தனபாரப் பொலித்துமதத் தரித்தகரிக் குவட்டுமுலைப் பளப்பளெனப் புனைத்ததுகிற் பிடித்தஇடைப் பொதுமாதர் புயத்தில்வளைப் பிலுக்கில்நடைக் குலுக்கிலறப் பசப்பிமயற் புகட்டிதவத் தழிப்பவருக் குறவாமோ தலத்தநுவைக் குனித்தொருமுப் புரத்தைவிழக் கொளுத்திமழுத் தரித்துபுலிக் கரித்துகிலைப் பரமாகத் தரித்துதவச் சுரர்க்கண்முதற் பிழைக்கமிடற் றடக்குவிடச் சடைக்கடவுட் சிறக்கபொருட் பகர்வோனே சிலுத்தசுரர்க் கெலித்துமிகக் கொளுத்திமறைத் துதிக்கஅதிற் செழிக்கஅருட் கொடுத்தமணிக் கதிர்வேலா தினைப்புனமிற் குறத்திமகட் டனத்தின்மயற் குளித்து மகிழ்த் திருத்தணியிற் றரித்தபுகழ்ப் பெருமாளே. 289. கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள் பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள் கோம்புப டைத்தமொ ழிச்சொல்பரத்தையர் புயமீதே கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள் வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர் கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் பலநாளும் ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ ரீங்கிசையுற்றவ லக்குண மட்டைகள் பொருள்தீரில் ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர் பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு காண்டிப அச்சுத னுத்தம சற்குணன் மருகோனே காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி யிளையோனே தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ தேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை குவைவானந் தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர் சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை பெருமாளே. 290. கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை கோடா லழைத்துமல ரணைமீதே கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை கோல்போல் சுழற்றியிடை யுடைநாணக் கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு காதோலை யிற்றுவிழ விளையாடும் காமா மயக்கியர்க ளுடே களித்துநம கானூ ருறைக்கலக மொழியாதோ வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலை வேதா கமத்தொலிகள் கடல்போல வீறாய் முழக்கவரு சூரா ரிறக்க விடும் வேலா திருத்தணியி லுறைவோனே மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில் மாபோ தகத்தையருள் குருநாதா மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு மாலோ டணைத்துமகிழ் பெருமாளே. 291. கொந்து வார்குர வடியினு மடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருகிய குருநாதா கொங்கி லேர்தரு பழநியி லறுமுக செந்தில் காவல தணிகையி லிணையிலி கொந்து காவென மொழிதர வருசம யவிரோத தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர் சந்தி யாதது தனதென வருமொரு சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து விரைநீபச் சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய கிண்கி ணீமுக விதபத யுகமலர் தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே சிந்து வாரமு மிதழியு மிளநவ சந்த்ர ரேகையு மரவமு மணிதரு செஞ்ச டாதரர் திருமக வெனவரு முருகோனே செண்ப காடவி யினுமித ணினுமுயர் சந்த னாடவி யினுமுறை குறமகள் செம்பொ னூபுர கமலமும் வளையணி புதுவேயும் இந்து வாண்முக வனசமு ம்ருகமத குங்கு மாசல யுகளமு மதுரித இந்த ளாம்ருத வசனமு முறுவலு மபிராம இந்த்ர கோபமு மரகத வடிவமு மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய பெருமாளே. 292. சொரியு முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் சமமாகச் சொலியு மனமெட் டனையு நெகிழ்விற் சுமட ரருகுற் றியல்வாணர் தெரியு மருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடித் திரியு மருள்விட் டுனது குவளைச் சிகரி பகரப் பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக் கடையில் விடமெத் தியநீலக் கடிய கணைபட் டுருவ வெருவிக் கலைகள் பலபட் டனகானிற் குரிய குமரிக் கபய மெனநெக் குபய சரணத் தினில்வீழா உழையின் மகளைத் தழுவ மயலுற் றுருகு முருகப் பெருமாளே. 293. தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு சாஸ்த்ர வழிக்கதி தூரணை வேர்விழு தவமூழ்குந் தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர் போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல் சாற்றுத மிழ்க்குரை ஞாளியைநாள்வரை தடுமாறிப் போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள் போற்றுத லற்றது ரோகியை மாமருள் பூத்தம லத்ரய பூரியைநேரிய புலையேனைப் போக்கிவி டக்கட னோஅடி யாரொடு போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் புரிவாயே மூக்கறை மட்டைம காபல காரணி சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி முழுமோடி மூத்தவ ரக்கனி ராவண னோடியல் பேற்றிவி டக்கம லாலய சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு முகிலேபோய் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் மருகோனே வாச்சிய மத்தள பேரிகை போல்மறை வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய பெருமாளே. 294. துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் சொற்பா வெளிமுக் குணமோகம் துற்றா யப்பீ றற்றோ லிட்டே சுற்றா மதனப் பிணிதோயும் இப்பா வக்கா யத்தா சைப்பா டெற்றே யுலகிற் பிறவாதே எத்தார் வித்தா ரத்தே கிட்டா எட்டா அருளைத் தரவேணும் தப்பா மற்பா டிச்சே விப்பார் தத்தாம் வினையைக் களைவோனே தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ தத்தாய் தணிகைத் தனிவேலா அப்பா கைப்பா லைப்போல் சொற்கா வற்பா வைதனத் தணைவோனே அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமரப் பெருமாளே. 295. நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி யதனூடே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி தலமீதில் பிழைத்திட வேநி னருள்தாராய் கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத கவினாரு புயத்திலு லாவி விளையாடிக் களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை கடனாகு மிதுக்கன மாகு முருகோனே பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ அருள்வேளே பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு பவரோக வயித்திய நாத பெருமாளே. 296. நினைத்த தெத்தனையிற் றவறாமல் நிலைத்த புத்திதனைப் பிரியாமற் கனத்த தத்துவமுற் றழியாமற் கதித்த நித்தியசித் தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் கெளியோனே மதித்த முத்தமிழிற் பெரியோனே செனித்த புத்திரரிற் சிறியோனே திருத்த ணிப்பதியிற் பெருமாளே. 297. பகலி ராவினுங் கருவி யாலனம் பருகி யாவிகொண் டுடல்பேணிப் பழைய வேதமும் புதிய நூல்களும் பலபு ராணமுஞ் சிலவோதி அகல நீளமென் றளவு கூறரும் பொருளி லேயமைந் தடைவோரை அசடர் மூகரென் றவல மேமொழிந் தறிவி லேனழிந் திடலாமோ சகல லோகமும் புகல நாடொறுஞ் சறுகி லாதசெங் கழுநீருந் தளவு நீபமும் புனையு மார்பதென் தணிகை மேவுசெங் கதிர்வேலா சிகர பூதரந் தகர நான்முகன் சிறுகு வாசவன் சிறைமீளத் திமிர சாகரங் கதற மாமரஞ் சிதற வேல்விடும் பெருமாளே. 298. பழமை செப்பிய ழைத்தித மித்துடன் முறைம சக்கிய ணைத்துந கக்குறி படஅ ழுத்திமு கத்தைமு கத்துற வுறவாடிப் பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு விரவு குத்திர வித்தைவி ளைப்பவர் பலவி தத்திலு மற்பரெ னச்சொலு மடமாதர் அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய அசட னைப்பழி யுற்றஅ வத்தனை அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை அடியேனை அகில சத்தியு மெட்டுறு சித்தியு மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு மருண பொற்பத முற்றிட வைப்பது மொருநாளே குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள் கரண மிட்டுந டித்தமி தப்படு குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு மொருசூரன் குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித மயில்வீரா தழையு டுத்தகு றத்திப தத்துணை வருடி வட்டமு கத்தில தக்குறி தடவி வெற்றிக தித்தமு லைக்குவ டதன்மீதே தரள பொற்பணி கச்சுவி சித்திரு குழைதி ருத்திய ருத்திமி குத்திடு தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் பெருமாளே. 299. புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப் புளகித வட்டத் தனமானார் பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப் புரளு மசட்டுப் புலையேனைக் கருவழி யுற்றுக் குருமொழி யற்றுக் கதிதனை விட்டிட் டிடுதீயக் கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக் கழல்கள் துதிக்கக் கருதாதோ செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத் திரைகட லுட்கப் பொரும்வேலா தினைவன முற்றுக் குறவர் மடப்பைக் கொடிதன வெற்பைப் புணர்மார்பா பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப் பெரிகை முழக்கப் புவிமீதே ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப் ப்ரியமிகு சொக்கப் பெருமாளே. 300. பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த போர்விடத் தைக்கெ டுத்து வடிகூர்வாள் போலமுட்டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொளைத்து போகமிக் கப்ப ரிக்கும் விழியார்மேல் ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு ளாகிமெத் தக்க ளைத்து ளழியாமே ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை யான்வழுத் திச்சு கிக்க அருள்வாயே வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த மாதர்கட் கட்சி றைக்கு ளழியாமே வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு மாமயிற் பொற்க ழுத்தில் வரும்வீரா வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும் வீறுடைப் பொற்கு றத்தி கணவோனே வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த வேளெனச் சொற்க ருத்தர் பெருமாளே. 301. பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப் புதுமைப் புண்டரிகக் கணையாலே புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற் பொழியத் தென்றல்துரக் குதலாலே தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத் திரியத் திங்களுதிப் பதனாலே செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த தெரிவைக் குன்குரவைத் தரவேணும் அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித் தருமைக் குன்றவருக் கெளியோனே அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித் தயில்கைக் கொண்டதிறல் குமரேசா தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித் தழுவிக் கொண்டபுயத் திருமார்பா தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத் தணிகைச் செங்கழநிப் பெருமாளே. 302. பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர் கைப்பொருள் புக்கிட வேதான் புட்குரல் விச்சையி தற்றுமொ ழிச்சியர் பொட்டணி நெற்றிய ரானோர் அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர் அற்பர மட்டைகள் பால்சென் றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை அற்றிட வைத்தருள் வாயே கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி டக்கைமு ழக்கொலி யாலக் கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள் குத்த தணிக்கும ரேசா சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு றத்தித னக்கிரி மேலே தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த லைக்குலை கொத்திய வேளே. 303. பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர் பொற்பு ரைத்து நெக்கு ருக்க அறியாதே புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க புத்தி யிற்க லக்க மற்று நினையாதே முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி முற்க டைத்த வித்து நித்த முழல்வேனை முட்டவிக்க டைப்பி றப்பி னுட்கி டப்பதைத்த விர்த்து முத்தி சற்றெ னக்க ளிப்ப தொருநாளே வெற்பளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த வித்த கத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா வித்தை தத்வ முத்த மிழ்ச்சொலத்த சத்தம் வித்த ரிக்கு மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி லுறைவோனே கற்பகப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற கற்பு ரத்தி ருத்த னத்தி லணைவோனே கைத்தரக்கர் கொத்துகச்சி னத்துவஜ்ர னுக்க மைத்த கைத்தொ ழுத்த றித்து விட்ட பெருமாளே. 304. மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர் மதிமு கத்திய ரழகான மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர் மனது ருக்கிக ளணைமீதே கலைநெ கிழ்த்தியெ உறவ ணைத்திடு கலவி யிற்றுவள் பிணிதீராக் கசட னைக்குண அசட னைப்புகல் கதியில் வைப்பது மொருநாளே குலகி ரிக்குல முருவ விட்டமர் குலவு சித்திர முனைவேலா குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர் குமர சற்குண மயில்வீரா தலம திற்புக லமர ருற்றிடர் தனைய கற்றிய அருளாளா தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு தணிம லைக்குயர் பெருமாளே. 305. முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள் விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள் மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர் முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ஒழிவாக மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் வடிவேலும் வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ளருளாயோ புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள் பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ளபிராமி பொதுற்றுதி மித்தமி நடமிடு பகிரதி எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை பொருட்பயனுக்குரை யடுகிய சமைபவள் அமுதாகச் செகத்தைய கத்திடு நெடியவர் கடையவள் அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய சிறியோனே செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய பெருமாளே. 306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமு முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு மெனநாடி முதிய கனனென தெய்வதரு நிகரென முதலை மடுவினி லதவிய புயலென முகமு மறுமுக முடையவ னிவனென வறியோரைச் சகல பதவியு முடையவ ரிவரென தனிய தநுவல விஜயவ னிவனென தபனன் வலம்வரு கிரிதனை நிகரென இசைபாடிச் சயில பகலவ ரிடைதொறு நடைசெயு மிரவு தவிரவெ யிருபத மடையவெ சவித வடியவர் தவமதில் வரவருள் புரிவாயே அகில புவனமு மடைவினி லுதவிய இமய கிரிமயில் குலவரை தநுவென அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி அமரு மிடனன லெனுமொரு வடிவுடை யவனி லுரையவன் முதுதமி ழுடையவ னரியொ டயனுல கரியவ னடநவில் சிவன்வாழ்வே திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட திரைக ளெறிகடல் சுவறிட களமிசை திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் பெருகாறாச் சிகர கிரிநெரி படபடை பொருதருள் திமிர தினகர குருபர இளமயில் சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் பெருமாளே. 307. முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தி லிலகிய விழியாலும் முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும் இளைத்த இடையினு மயலாகிப் படுத்த அணைதனி லணைத்த அவரொடு படிக்கு ளநுதின முழலாதே பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன பதத்து மலரிணை யருள்வாயே துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ தொடுத்த சரம்விடு ரகுராமன் துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு துலக்க அரிதிரு மருகோனே தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு தழைத்த கதலிக ளவைசாயத் தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில் தழைத்த சரவண பெருமாளே. 308. முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன் முட்டத்தொ டுத்த மலராலே முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென முற்பட்டெ றிக்கு நிலவாலே எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி இப்பொற்கொ டிச்சி தளராதே எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியி லிற்றைத்தி னத்தில் வரவேணும் மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர வெற்பைத்தொ ளைத்த கதிர்வேலா மெச்சிக்கு றத்திதன மிச்சித்த ணைத்துருகி மிக்குப்ப ணைத்த மணிமார்பா மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை வெட்டித்து ணித்த பெருமாளே. 309. முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச முகிலளக மகில்பொங்க அமுதான மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட முகம்வெயர்வு பெறமன்ற லணையூடே கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று படவுருகி யிதயங்கள் ப்ரியமேகூர் கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற கவலைகெட நினதன்பு பெறுவேனோ அலையெறிவு மெழில்சண்ட உததிவயி றழன்மண்ட அதிரவெடி படஅண்ட மிமையோர்கள் அபயமென நடுநின்ற அசுரர்பட அடியுண்டு அவர்கள்முனை கெடநின்று பொரும்வேலா தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை சடைமுடியி லணிகின்ற பெருமானார் தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற தணிமலையி லுறைகின்ற பெருமாளே. 310. மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை முகிலனைய குழல்சரிய வொக்கக் கனத்துவள ரதிபார முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில மொழிபதற இடைதுவள வட்டச்சி லைப்புருவ இணைகோட அகில்மிருக மதசலிலம் விட்டுப் பணித்தமல ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர மதநீதி அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை நினையாதோ செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத டிமிடடிமி டமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட டிடிதீதோ திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி யெனவேநீள் சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர் தணிகைமலை தனில்மயிலி னிர்த்தத்தி னிற்கவல பெருமாளே. 311.வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை வந்துந் தியதிரு மதனாலே வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற வஞ்சம் பதும்விடு மதனாலே பங்கம் படுமென தங்கந் தனிலுதி பண்பொன் றியவொரு கொடியான பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல் பொன்றுந் தனிமையை நினையாயோ தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள் சென்றென் றியபொலி லதனூடே தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி நின்றுந் திகழ்வொடு மயிலாடப் பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைக ளென்றும் புகழ்பெற மலரீனும் பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி யென்றுஞ் செயவல பெருமாளே. 312. வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை மயக்கியிடு மடவார்கள் மயலாலே மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி வயிற்றிலெரி மிகமூள அதனாலே ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிகநாடி யவரோடே உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை மிகுத்தபல முடனோத மகிழ்வோனே வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள விளைத்ததொரு தமிழ்பாடு புலவோனே செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது திருக்கையினில் வடிவேலை யுடையோனே திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான திருத்தணிகை மலைமேவு பெருமாளே. 313. வாருற்றெழு பூண்முலை வஞ்சியர் காருற்றெழு நீள்குழல் மஞ்சியர் வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் தெருமீதே மாணுற்றெதிர் மோகன விஞ்சையர் சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர் வாகக்குழை யாமப ரஞ்சியர் மயலாலே சீருற்றெழு ஞானமு டன்கல்வி நேரற்றவர் மால்கொடு மங்கியெ சேருற்றறி வானத ழிந்துயி ரிழவாமுன் சேவற்கொடி யோடுசி கண்டியின் மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே போருற்றிடு சூரர்சி ரங்களை வீரத்தொடு பாரில ரிந்தெழு பூதக்கொடி சோரிய ருந்திட விடும்வேலா பூகக்குலை யேவிழ மென்கயல் தாவக்குலை வாழைக ளுஞ்செறி போகச்செநெ லேயுதி ருஞ்செய்க ளவைகோடி சாரற்கிரி தோறுமெ ழும்பொழில் தூரத்தொழு வார்வினை சிந்திடு தாதுற்றெழு கோபுர மண்டப மவைசூழுந் தார்மெத்திய தோரண மென்தெரு தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள் தாமெச்சிய நீள்தணி யம்பதி பெருமாளே. 314. வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன் விட்டகணை பட்ட விசையாலே வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி ரித்தொளிப ரப்பு மதியாலே பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை பட்டதிகி ரிக்கு மழியாதே பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர் பச்சைமயி லுற்று வரவேணும் நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி னைக்குமன மொத்த கழல்வீரா நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற நித்தமிறு கத்த ழுவுமார்பா எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியி லெப்பொழுது நிற்கு முருகோனே எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுர ரிட்டசிறை விட்ட பெருமாளே. | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக