ராதே கிருஷ்ணா 11 - 11 - 2011
பக்தி கதைகள்
இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர்.ஒருசமயம், ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை, மற்றொருத்தி, அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள். சுவாமி! நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள், என்றாள். துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார்.
பின், ஒரு பகுதியை வலதுபுறமாகவும், ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார். உங்களில் வரட்டி தட்டும்போது, விட்டல! விட்டல! என சொன்னது யார்? என்றார். திருட்டுக் கொடுத்த பெண், நான் தான் அவ்வாறு சொன்னேன், என்றாள். அப்படியானால், வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. ஒரு தொழிலைச் செய்யும் போது, கண்ணனின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ, அது காற்றில் பரவி, அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ் வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான விட்டல என்பது ஒலித்தது, என்றார். திருட்டுக் கொடுத்தவள் தன் பொருளைத் திரும்பப் பெற்றதுடன், கண்ணனின் அனுக்கிரகமும் தனக்கு கிடைத்ததற்காக, நன்றியுடன் கண்ணீர் பெருக்கினாள்.
- ▼ 2010 (31)
- ► 12/19 - 12/26 (1)
- ► 12/12 - 12/19 (1)
- ► 11/28 - 12/05 (1)
- ► 11/21 - 11/28 (1)
- ► 11/14 - 11/21 (1)
- ► 10/17 - 10/24 (1)
- ► 09/26 - 10/03 (1)
- ► 09/19 - 09/26 (1)
- ► 09/12 - 09/19 (1)
- ► 09/05 - 09/12 (1)
- ► 08/29 - 09/05 (1)
- ► 08/22 - 08/29 (1)
- ► 08/08 - 08/15 (1)
- ► 08/01 - 08/08 (2)
- ► 07/25 - 08/01 (1)
- ► 07/18 - 07/25 (1)
- ► 07/04 - 07/11 (3)
- ► 06/27 - 07/04 (2)
- ► 06/13 - 06/20 (1)
- ► 05/30 - 06/06 (1)
- ► 05/02 - 05/09 (1)
- ► 03/28 - 04/04 (2)
- ► 02/14 - 02/21 (1)
- ► 01/03 - 01/10 (1)
- பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...
- பகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...
- இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திர வரலாறு உலக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்கியவர் பலராவர். அ...
- தன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...
- ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...
- தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒ...
- துரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...
- அலங்கார ஸ்வரூபனாக கண்ணன் பாமாவின் இல்லத்துள் புகுந்தான். அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் பாமா. அவளைக் கண்ட கண்ணன் அவ...
- சோழநாட்டைச் சேர்ந்த ஆவூர் என்பது வளம் நிறைந்த ஊர். அவ்வூர் நிலங்கள் மிகுந்த விளைச்சலைத் தரக்கூடியவை. சோலைகளும் தோப்புகளும் மிகுந்திருந்தன. அ...
- சிரவணன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனது தாயும் தந்தையும் மிகவும் வயதானவர்கள்.அத்துடன் இருவரும் கண் தெரியாதவர்கள்.தங்களின் மகனி...
- அன்னை (1)
- அன்பு (4)
- அறிவிப்பு (1)
- அறிவு (2)
- ஆசிரியர் (1)
- ஏமாற்றம் (1)
- கதை (21)
- கல்வி (7)
- கவிதை (3)
- குரு (1)
- சுட்டி கதை (12)
- சுதந்திரம் (1)
- தமிழ் அறிவு (1)
- தீர்ப்பு (3)
- தெனாலி ராமன் (7)
- தெய்வம் (1)
- நட்பு (3)
- நம்பிக்கை (3)
- நலம் (2)
- பக்தி (1)
- பண்டிக (1)
- பரிசு (4)
- பலன் (3)
- பாசம் (2)
- பிதா (2)
- பிரபலங்கள் (2)
- புலமை (2)
- புலவர் (3)
- பொறுமை (2)
- முயற்சி (1)
- லாபம் (1)
- வெற்றி (9)
பக்தி கதைகள்
அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போல, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனை வரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்.
பக்தி கதைகள்
அம்மா! நாளை கிருஷ்ண ஜெயந்தி! இன்னைக்கே சீடை தயார் பண்ணிடு! கண்ணனுக்கு நைவேத்தியம் செஞ்சிட்டு, எனக்கு தரணும், என்றான் மகன் கண்ணன். கண்ணா! கண்ணா! என அவனை வாய்நிறைய கூப்பிடுவாள் அம்மா. கண்ணன் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம்.. ஒரே பிள்ளை... கேட்கவா வேண்டும் செல்லத்துக்கு! ஆனால், அம்மா தனக்கு கொடுக்கும் செல்லத்தை கண்ணன் ஒருநாள் கூட தவறாக பயன்படுத்தியதே இல்லை. சமர்த்துப்பிள்ளை...பள்ளியில் அவன் தான் பர்ஸ்ட்! அவன் வீடு இருந்த தெருவிலேயே கிருஷ்ணன் கோயில் ஒன்றும் இருந்தது. கண்ணனும், அம்மாவும் வசதிப்படும் நாட்களில் எல்லாம் அங்கு செல்ல தவறியதே இல்லை. அம்மா நெய்யிலேயே சீடை செய்தாள். சீடை மட்டுமா! முறுக்கு, அதிரசம், லட்டு... இத்யாதிகளெல்லாம் தயாராயின. மறுநாள் கண்ணன் திருப்பாத கோலமிட்டாள். மாலையில், பலகாரங்களை நைவேத்யம் செய்து, காக்கைச் சிறகினிலே நந்தலாலா, என்ற பாடலை இனிய குரலில் பாடினாள். அன்று உறியடி உற்ஸவத்திற்கு ஊர் மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
அம்மா! பூஜை ஆரம்பிக்கறச்சே என்னைக் கூப்பிடு, இங்கே உறியடி உற்ஸவத்தை தான் வேடிக்கை பார்த்துண்டிருப்பேன், என சொல்லிவிட்டு, கண்ணன் வெளியே ஓடிவிட்டான். பூஜைக்கான எல்லா பணிகளையும் அம்மா முடித்து விட்டு, கண்ணா! கண்ணா! என அழைத்தாள். உறியடி உற்ஸவத்தை ரசித்துக் கொண்டிருந்த குழந்தைகள் போட்ட கூச்சலில், கண்ணனின் காதில் அம்மாவின் சப்தம் விழவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், எங்கே நிற்கிறான் என்றும் தெரியவில்லை. ஆனால், கண்ணா... கண்ணா! என்று அவள் சப்தமாக அழைத்தது, கோயிலுக்குள் இருக்கிற கண்ணனின் காதில் விழுந்துவிட்டது. ஐயோ! எனக்கு துவாபரயுகத்தில் தேவகி, யசோதை என்று இரண்டு தாய்கள் இருந்தனர். இந்த யுகத்தில் யாருமில்லையே என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன். இதோ! ஒரு தாய் என் பெயர் சொல்லி அழைக்கிறாள். இதோ வந்துவிட்டேன் அம்மா! அவளது மகன் கண்ணனின் வடிவிலேயே உள்ளே வந்து விட்டான் கண்ணன். அம்மா அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள். எங்கே பூஜைநேரத்தில் வராமல் போய்விடுவாயோ என பயந்தேன். வா வணங்கலாம்! என்றாள்.
நிஜக்கண்ணன் அவள் அருகே நிற்க, சிலைக் கண்ணனுக்கு பூஜை நடந்தது. நைவேத்யம் முடித்து, கண்ணனுக்கு தட்டு நிறைய அள்ளி வைத்து, ஊட்டினாள் அந்தத்தாய். குழந்தை அதை மென்று சாப்பிட்டான். இன்னும் வேண்டுமென்றான்! அவள் மேலும் ஊட்டினாள். கொஞ்சம் மட்டுமே மிச்சம்! அத்தனையையும் சாப்பிட்டு விட்டு, அம்மாவுக்கு முத்தமும் கொடுத்து,அம்மா! ரொம்ப ருசி! பாவம் உனக்குத்தான் கொஞ்சமா இருக்கு! என்று பரிதாபமும் பட்டுவிட்டு அவன் வெளியேறவும், நிஜக்கண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அம்மா! பூஜை முடித்து விட்டாயா! குழந்தைகள் போட்ட கூச்சலில் நீ கூப்பிட்டது கேட்கவில்லை போலும்! சரி சரி... பலகாரங்களைக் கொடு, என்றான்.ஏனடா! அவ்வளவையும் நீ தானே சாப்பிட்டாய், என்றாள் தாய் ஆச்சரியத்துடன்! நானா! நான் இப்போது தானே உற்ஸவம் முடிந்தே வருகிறேன், என்றான் மகன். அப்படியானால் வந்தது.... அந்த நிமிடம் அவள் கண்முன் நிஜக்கண்ணன் தோன்றினான். என் தெய்வமே! உன் திருவடிகள் இல்லத்தில் பட்டதா! என்று மகிழ்ந்தாள். பாத்திரத்தில் இருக்கும் மிச்சத்தை எடுக்கப் போனாள். ஆச்சரியம்! பாத்திரங்கள் நிறைந்து போயிருந்தது. அவள் வீட்டுக் கண்ணனும் ஆசை தீர சாப்பிட்டு மகிழ்ந்தான்.
பக்தி கதைகள்
சிவகிருஷ்ணனுக்கு எல்லா வசதியும் இருந்தது. ஆனாலும், இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அவனை அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியது. மனஅமைதி பாதித்தது. மனஅமைதி பாதித்த பிறகு தான் மனிதனுக்கு தெய்வம், சாதுக்களின் நினைப்பு வரும். அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். அவரை நாடிச்சென்றான். ஐயா! என்னிடம் செல்வவளம் ஏராளமாக இருக்கிறது. இருப்பினும், அது போதாது என்பதால் இன்னும் சேர்க்கிறேன். நான் அனுபவிக்காத வசதிகள் இல்லை. இருப்பினும் ஆசை விடவில்லை. என்னிலும் வசதியானவர்கள் அனுபவிப்பதைப் பார்க்கும்போது, அவர்களையெல்லாம்விட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் கோபம் கொப்பளிக்கிறது. அதை என் மனைவி, குழந்தை, வேலைக்காரர்கள்மீதும் காட்டி விடுகிறேன். உங்களிடம் எதுவுமே இல்லை. ஆனால், உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது.
நிம்மதியாக இருக்கிறீர்கள். இது எப்படி ஐயா சாத்தியம்! உங்களைப் போல எனக்கும் அமைதி கிடைக்க வழி சொல்லுங்களேன், என்றான். துறவி அவனை அமைதியாக பார்த்தார். மகனே! இன்னும் ஏழே நாள் தான் இந்த துன்பமெல்லாம்! அதன்பிறகு உனக்கு நிரந்தர அமைதி கிடைக்கும், நான் சொல்வது புரிகிறதா! என்றார். அவன் புரிந்தும் புரியாமலும் அவரைப் பார்க்கவே, சிவகிருஷ்ணா! அடுத்தவாரம் நீ இறந்து விடுவாய். அதன்பின் உனக்கு நிரந்தர அமைதி தானே! என்றார். என்னடா இது! ஏதோ, மன அமைதிக்காக குறி கேட்க வந்த இடத்தில், சாமியார் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாரே! என விதியை நொந்தவனாய் வீட்டுக்கு திரும்பினான். மனைவியை அணைத்தபடியே, என் அன்பே! என் ஆயுள் அடுத்த வாரம் முடிகிறது. உன்னிடம் நான் பலமுறை கோபித்திருக்கிறேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள், என்றான். பிள்ளைகளையும் தன் மடியில் படுக்க வைத்து, அவர்கள் தேவையில்லாமல் கோபித்ததற்காக வருந்தினான். வேலைக்காரர்களை அழைத்து, உங்கள் மூலம் நான் அதிக லாபம் பெற்றாலும், நீங்கள் சம்பள உயர்வு, கடனுதவி கேட்கும் போதெல்லாம் எரிந்து விழுந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இன்று நீங்கள் கேட்ட தொகையை கணக்குப்பிள்ளையிடம் போய் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான்.
தன் உறவுக்காரர்கள், நண்பர்கள் பகைவர்களாக இருந்தாலும் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று, நடந்த செயலுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டான். இப்படியே ஆறுநாட்கள் ஓடிப் போய் விட்டது. மறுநாள் விடிந்ததும், ரொம்பவே ஆடிப்போயிருந்தான். அவனைச் சுற்றி உறவினர்கள் ஆறுதல் சொல்லியபடியே இருந்தனர். அந்நேரத்தில், அந்த துறவி அந்தப் பக்கமாக வந்தார். அவர் காலில் விழுந்த சிவகிருஷ்ணன், சுவாமி! என் மரணமாவது அமைதியாக இருக்குமா? என்றான். துறவி அவனிடம் சிவகிருஷ்ணா! மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை தான், மனித மனத்தை அமைதியின்மைக்குள் தள்ளுகிறது. அதே நேரம், மரணத்தை நினைப்பவன் வேறு எந்த சிந்தனையுமின்றி, அதையே எதிர்பார்க்கிறான். மேலும், மரணத்துக்கு முன்பாவது ஏதாவது நன்மை செய்வோமே என, நற்செயல்களைச் செய்கிறான். ஒருவன் இல்லறத்தில் இருந்தாலும், துறவியாய் இருந்தாலும் மரணத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திப்பவனுக்கு நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதை தவிர, அதிக ஆசை தோன்றுவதில்லை. ஆசையின்மையே மனஅமைதியைத் தரும். உன் மரணநாள் எனக்கு தெரியாது. உன்னைத் திருத்தவே உனக்கு மரணம் வரப்போவதாகச் சொன்னேன், என்றார்.
பக்தி கதைகள்
ஒரு பெரிய ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படவே நடுவழியில் திடீரென கவிழ்ந்தது. படகில் இருந்த பலர் மூழ்கி விட, நீச்சல் தெரிந்த இரண்டு ஆண்களும், படகோட்டியும் மட்டும் தப்பி, ஒரு பாறையில் ஏறி நின்று கொண்டனர். அப்போது, இன்னொரு படகு வந்தது. ஏறுங்கள், ஏறுங்கள்! வெள்ளம் அதிகமானால் மேலும் ஆபத்து. உங்களை கரை சேர்த்து விடுகிறேன், வாருங்கள், என்றான் அதை ஓட்டி வந்தவன்.
படகோட்டியும், தப்பி நின்ற ஒரு பயணியும் மட்டும் அதில் ஏற, இன்னொருவன் வர மறுத்தான். பயணி அவனிடம்,வந்து விடு! இதுதான் சந்தர்ப்பம், தப்பி கரைக்கு போய் விடலாம், என்றான். வேண்டாமப்பா! இந்தப் படகும் கவிழ்ந்தால் நிலைமை என்னாவது! நான் வரவில்லை. வெள்ளம் வற்றிய பிறகு தான் வருவேன், என்று அடம்பிடித்தான். படகு கிளம்பி விட்டது. அவர்கள் கரையேறி தப்பித்தனர். வெள்ளம் அதிகமாகவே பாறையே மூழ்கி அதில் நின்றவன் மூழ்கிவிட்டான். வாழ்க்கையில் எப்போதாவது தான் நல்ல சந்தர்ப்பம் வரும். குறிப்பாக மாணவர்கள் படிக்கும் காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். இளமையை வீணாக்கிவிட்டால், வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினமாகி விடும்!
பக்தி கதைகள்
லோகசாரங்கர் என்பவர் காவிரியில் புனிதநீர் எடுத்து, ரங்கநாதப்பெருமானுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்ய கொண்டு செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். ஜாதியால் தாழ்த்தப்பட்ட திருப்பாணாழ்வார் தினமும் கரையில் நின்றபடியே மனக்கண்ணால் ரங்கநாதரைத் தரிசிப்பார். லோகசாரங்கர் தண்ணீர் எடுத்து வருவதைப் பார்த்தால் ஒதுங்கி நின்று கொள்வார். ஒருநாள், திருப்பாணாழ்வார் ரங்கநாதரின் சிந்தனையில், தன்னை மறந்து நின்று கொண்டிருந்தார். லோகசாரங்கர் தூரத்தில் வரும்போதே, அவரை ஒதுங்கி நிற்கும்படி சப்தமிட்டார். தன்னையே மறந்து நின்ற ஆழ்வார், திரும்பக்கூட இல்லை. உயர்குடியில் பிறந்த தன்னை அவர் அவமதிப்பதாக நினைத்த லோகசாரங்கர், கல்லை எடுத்து வீசினார். அவரது நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. அந்த நிலையிலும் கூட அவர் கண்விழிக்கவில்லை.
சிந்தனை கலைந்த பிறகு தான் ரத்தம் வழிவதையே அவர் கவனித்தார். சந்நிதிக்குள் சென்ற சாரங்கர் பெருமாளைப் பார்த்தார். பெருமாளின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. என் பக்தனின் நெற்றியைக் காயப்படுத்தினாயே சாரங்கா! என்று அவர் சொல்லவே, லோகசாரங்கர் அடித்துப் புரண்டு வெளியே வந்தார். திருப்பாணாழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு, பெருமாளின் உண்மை பக்தரான உம்மை என் தோளில் சுமந்து சந்நிதிக்கு அழைத்துச் செல்வேன், என்றார். ஆழ்வார் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. தோளில் சுமந்து சென்றார். பெருமாளைக் கண்ட திருப்பாணாழ்வாரின் மகிழ்ச்சிக்கு எல்லைக்கோடு இருந்திருக்குமா என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!
பக்தி கதைகள்
ஒருசமயம், லட்சுமி தாயார் திருமாலிடம், பெருமாளே! பக்தனுக்குரிய தகுதி என்ன? என்றாள்.தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். இதை நானும், சிவபெருமானுமே செய்து காட்டியுள்ளோம், என்றார். அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன்,என லட்சுமி தாயார் கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால். தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தன் தவவலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் பிரம்மாவின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். பிரம்மா, அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் என்னைக் குறிவைத்தான். என்னை அவனால் வெல்ல முடியவில்லை. அதேநேரம்,அவனைக் கொல்ல என்னாலும் முடியவில்லை.
அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப, அவனும் ஒருமுறை கைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத் துவக்கலாம், என்றான். சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான், என்று முடித்தார் பெருமாள்.லட்சுமி தொடர்ந்தாள். சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம் உள்ளது? என்றாள். இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம்.
எதிரிகளின் தலையை இது கொய்து விடும், என்றார் பெருமையாக.ஆமாம்! அசுரனைக் கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றாள் லட்சுமி. அன்பே! இந்த சக்கரத்தைப் பெறுவதற்காக நான் ஒரு கண்ணையே இழந்து திரும்பப்பெற்றேன், என்றார் பெருமாள். அப்படியா! அதைப் பற்றி சொல்லுங்களேன், என்றாள் தாயார். லட்சுமி! இந்த சக்கரம் என்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் அசுரர்களைக் கொல்வதற்கு பயன்படும் என்று உணர்ந்தேன். சிவனிடம் அதைக் கேட்டேன். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார். நானும் அங்கு சென்றேன். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தேன். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. நான் சற்றும் யோசிக்காமல் என் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தேன். என் பூஜையை மெச்சிய சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார், என்றார். கோயில்களில் கண்மலர் நேர்ச்சை நடக்கிறதல்லவா! அது, இந்தசம்பவத்தின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது.
பக்தி கதைகள்
தமிழில் மகாபாரத்தை எழுதியவர்களில் நல்லாப்பிள்ளை என்பவரும் ஒருவர். இவர் 20 வயது வரை அடிப்படை கல்வியறிவு கூட பெறவில்லை. இவரது மனைவி கூட இவரது கல்வியின்மையை கேலி பேசினாள். இதனால், கல்வியறிவு பெறவேண்டும் என்ற வைராக்கியம் அவருக்குள் பிறந்தது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் தங்கி கல்வி கற்றார். ஓயாமல் ஒழியாமல் பாடங்களை இரவு பகலாகப் படித்தார். அரிச்சுவடியில் இருந்து தொல்காப்பியம் வரை பாடங்களை நடத்தப்பட்டன. பாடம் கேட்பதில் இருந்த ஆர்வத்தால், அன்றாட உணவைக் கூட நல்லாப்பிள்ளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 4 ஆண்டுகள் கழிந்தன. ஆசிரியர் விரும்பும் நல்ல மாணவராக நடந்து, தமிழில் நல்ல புலமை பெற்றார் நல்லாப்பிள்ளை. ஒருநாள் மதியம் நல்லாப்பிள்ளை சாப்பிட அமர்ந்தார். தயிர்சாதத்திற்கு துவையல் எடுத்துக் கொண்டவர், துவையல் கசக்கிறதே! என்று தன்னையும் மறந்து கத்திவிட்டார். ஆசிரியரும் மகிழ்ச்சியில் நல்லாப்பிள்ளையை அணைத்துக் கொண்டார். தம்பி! நீ வீட்டுக்குப்புறப்படும் நேரம் வந்து விட்டது. இதுவரை பாடத்தில் கவனத்தைச் செலுத்தினாய். அதனால், நாள் தோறும் சாப்பிடும் வேப்பிலைத் துவையலின் கசப்பு கூட உனக்குத்தெரியவில்லை. பாடங்களை முழுமையாகக் கற்று கொண்டுவிட்டாய். இப்போது தான், புறவுலக சிந்தனை உனக்கு வந்திருக்கிறது. அதனால், துவையலை சாப்பிடமுடியாமல் தவிக்கிறாய், என்று சொல்லி மகிழ்ந்தார். நல்லாப்பிள்ளைக்கு மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பாடத்தில் இருந்த கவனத்தில், அதுவரை தான் சாப்பிட்டது வேப்பிலை துவையல் என்பது கூட தெரியாமல் இருந்ததைப் புரிந்து கொண்டார். எதையும் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதே மாணவர்களுக்கு இக்கதை உணர்த்தும் கருத்து.
பக்தி கதைகள்
ஒரு மிராசுதாருக்கு, சுப்பன் என்ற மகன் இருந்தான். அவன் மகாமோசமானவன். தந்தையார் சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் அழித்து விட்டான். தாயை மதிக்கவே மாட்டான். மனைவி, பிள்ளைகள் அவனிடம் அனுபவிக்காத துன்பமே இல்லை. ஒரு கட்டத்தில் அவன் இறந்து போனான். பாவம் மட்டுமே அவனது மூலதனம் என்பதால், நரகத்தில் அவன் வறுத்து எடுக்கப்பட்டான். ஐயையோ! இங்கே இப்படி நடக்குமென தெரிந்திருந்தால், பூலோகத்தில் வாழ்ந்த போது, என் குடும்பத்தாரை நிம்மதியாக வாழ வைத்திருப்பேனே! என புலம்பினான். நரகத்தில் தண்டனை முடிந்து அவன் ஒரு கழுதையாகப் பிறந்தான். அதன் மீது அதன் உரிமையாளன் அளவுக்கு மீறி பொதி ஏற்றி சுமக்க வைத்தான். ஒருமுறை கழுதை மயங்கி விழுந்து விட்டது. அதைப்பார்த்து பாவப்பட்ட உரிமையாளரின் பிள்ளை, இறைவா! பாவம் இந்தக் கழுதை! இது எங்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறது. நான் செய்த புண்ணியத்தின் பலனை கழுதைக்கு வழங்குகிறேன். இதை எழுப்பு, என்றான்.
கழுதையும் எழுந்துவிட்டது. சில காலம் கழித்து இறந்து விட்டது. கழுதையாக இருந்தபோது பெற்ற புண்ணியத்தால், சுப்பன் பக்தியுள்ள பணக்கார குடும்பத்தில் பிறந்தான். அவனுக்கு முற்பிறவி எண்ணங்கள் நினைவுக்கு வந்தன. தான் கழுதையாக வாழ்ந்த வீட்டுக்குப் போய், உங்கள் வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போன கழுதைக்கு என்னென்ன புண்ணியங்களை கொடுத்தீர்கள்? என உரிமையாளனின் மகனிடம் கேட்டான். நான் அடிக்கடி கிருஷ்ணா கிருஷ்ணா என்பேன். அப்படி சொன்னால் புண்ணியம் என எங்கள் ஊர் கோயிலில் பேசிய உபன்யாசகர் சொன்னார். அந்தப் புண்ணியம் கழுதைக்கு சேரட்டுமே என்றேன், என்றான் அவன். அதன்பிறகு சுப்பனும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று காலமெல்லாம் சொல்லி, பிறப்பற்ற நிலையான முக்தி நிலை அடைந்தான். புண்ணியத்தை தாரை வார்த்தவன் பாற்கடலிலேயே வாசம் செய்யும் பாக்கியம் பெற்றான். உங்களுக்கு எந்தக் கடவுளைப் பிடிக்குமோ, அந்தக் கடவுளின் பெயரை அடிக்கடி உச்சரித்தாலே போதும், சொர்க்கம் கிட்டிவிடும்.
பக்தி கதைகள்
மனதில் சோகம் நிரம்பியிருந்தால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்கள், தங்கள் சோகத்தை தகுந்த நபர்களிடம் கொட்டினால் தான் ஆறுதல் கிடைக்கும். ஒரு கிராமத்தில் வசித்த பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள். ஒருநாள் தந்தை இறந்து விட்டார். அந்தத் தாய் மூவரையும் சிரமப் பட்டு வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்தாள். நன்றி கெட்ட அந்தப் பிள்ளைகள் பெற்றவளை கவனிக்கவில்லை. மருமகள்களோ அவளையே பெரும்பாலான வேலைகளைச் செய்யச் சொல்லி விட்டு, அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விடுவார்கள். நேரத்துக்கு சாப்பாடு கொடுக்க மாட்டார்கள். கொடுத்தாலும் வீட்டில் மிஞ்சியதே கிடைக்கும். மருத்துவ வசதி கிடையாது. ஒருசமயம், அந்தத்தாயின் உடல் குண்டாக ஆரம்பித்தது. அது ஏதோ ஒரு வகை நோய். ஆனால், மருமகள்கள் தங்கள் கணவன்மாரிடம்,உங்க அம்மா நாங்க சொன்னதையே கேட்பதில்லை. கண்டதையும் சாப்பிடுறதாலே உடம்பு பெருத்துக் கிட்டே போகுது! நீங்க கண்டிச்சு வையுங்க, என்றார்கள். உண்மை தெரியாத பிள்ளை களும் அம்மாவை கடிந்து கொண்டார்கள்.அவள் தனக்கு ஏதோ ஒரு நோய் என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. ஒருநாள், மருமகள் களின் தொல்லை தாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் அந்தத்தாய். வழியில் பாழடைந்த மண்டபம் தென்பட்டது. களைப்புடன் போய் உட்கார்ந்தாள். மண்டபத்தில் சிவன், முருகன், பார்வதி சிற்பம் இருந்தது. அதைப் பார்த்து, முருகா, சிவா, அம்மா, என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? என் பிள்ளைகளும், மருமகள்களும் பாடாய் படுத்துகிறார்கள். சாப்பிட சோறில்லை, உடுத்த இந்தக் கந்தை தான். என்ன செய்வேன். கண் திறந்து பாரேன், என்றாள். இப்படியே அங்கு நிரந்தரமாக தங்கி அவள் அழுத அழுகையில், பாதி உடல் கரைந்து விட்டது. யாராவது அந்த மண்டபத்திற்கு தங்க வருபவர்கள் தரும் உணவை சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே தங்கினாள். சோகத்தை சுமப்பவர்கள் தங்கள் குறைகளை கடவுளிடமோ, தங்கள் பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை சொல்லும் நற்குணமுள்ள பெரியோரிடமே எடுத்து சொல்ல வேண்டும். அது மனச்சுமையைப் பெரிதும் குறைக்கும்.
பரமார்த்தரின் பக்தி
பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான்.
பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்த பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.
"குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே... அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே என்றான் மண்டு.
நல்லது! அப்படியே செய்வோம்" என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர்.
தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!" என்றான், மூடன்.
அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர்.
உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல கட கட என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான்.
நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கிக தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர்.
"மட்டியே! அவசரப்படுகிறாயே!" என்று திட்டினார் பரமார்த்தர். மறுபடியும் எல்லோரும்
மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள்.
மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள்.
அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. "அற்புதம், அற்புதம்" என்று குரு மகிழ்ந்தார்.
அப்போது மடையன் மட்டும் அலறினான்
"என்ன? என்ன?" என்று பதறினார் குரு.
"குளிர்கிறதே" என்றான் மடையன்.
"அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்" என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.
குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர்.
அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர்.
அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது.
அதற்கள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி மேலே ஏறி வந்து, "குருவே.. நான் கீழே இறங்கிப் போனேன். அங்கே இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான்; இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்று மூச்சு வாங்கக் கூறினான்.
"அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!" என்ற பரமார்த்தர், "எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்" என்றபடி இறங்கினார்.
எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது.
அப்போது அங்கே சிலக காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், "மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!" என்று கோபத்துடன் திட்டினார்.
வீரர்கள், குருகாட்டிய திசையில் ஓடினார்கள். பரமார்த்தரும், சீடர்களும் திருடன்!திருடன்! விடாதே, பிடி! என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள்.
அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர்.
ராஜ வீதியில் ஒரே கலவரம். கூக்குரல்கள். அப்போது மூடன், "அதோ...அதோ.. பிடியுங்கள்" என்று கத்தினான்.
பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, "அரசே! மந்திரியே! நீங்களா?!" என்று வியந்தனர்.
"எல்லோரும் அரசர் காலில் விழுந்து, "எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்" என்று நடுங்கியபடி கூறினர்.
பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர்.
உடனே அரசர், "பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலேயே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியையும் நான் பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைகிறேன். இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!" என்று கூறினார்.
மக்களும், பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க! என்று முழக்கமிட்டனர்.
குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.
பாட்டி சொல்லும் கதைகள் (ருக்குமணி சேஷசாயி )
BLOG ARCHIVE
POPULAR POSTS
ABOUT ME
Posts
Comments
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக