புதன், 21 அக்டோபர், 2015

HRE-23:ராமேஸ்வரம்-ராமநாதசுவாமி {மூர்த்தி-ஸ்தலம்-தீர்த்தம்}

ராதே கிருஷ்ணா 22-10-2015



HRE-23:ராமேஸ்வரம்-ராமநாதசுவாமி {மூர்த்தி-ஸ்தலம்-தீர்த்தம்}


ராமநாதசுவாமிராமலிங்கேஸ்வரர்-பர்வதவர்த்தினி, (மலைவளர்காதலி)

*மணல் லிங்கம் (ராமநாதசுவாமி)-சீதை ஸ்தாபிதம்
*விஸ்வலிங்கம் (விஸ்வநாதர்)-
ஆஞ்சநேயர் ஸ்தாபிதம்
*ஸ்படிக லிங்கம்-
ஆதிசங்கரர் ஸ்தாபிதம்
*உப்புலிங்கம்-
பாஸ்கரராயர் ஸ்தாபிதம்
*ஜோதிர் லிங்கம்(
சிவன் ஐக்கியம்)-விபீஷணன் ஸ்தாபிதம்
00-RMM         சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானதுதோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவபூஜை செய்ய விரும்பினார்இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படிஆஞ்சநேயரை அனுப்பினார்அவர் வர தாமதமாகவேசீதை கடற்கரைமணலில் லிங்கம் அமைத்தாள்.1-RMM      அகத்தியரின் ஆலோசனைப்படி, அந்த மணல் லிங்கத்தை ராமர்பூஜித்ததால் “ராமநாதசுவாமி‘ என்ற திருநாமம் அமைந்தது.
     திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானவர் சுவாமிகள் பாடல் பெற்ற தலம்.

காசிராமேஸ்வரம் யாத்திரை

{முதல் ராமேஸ்வரம்⇒அலகாபாத்(திரிவேணி)⇒காசி⇒கயா⇒ மீண்டும் ராமேஸ்வரம்}

 ராமேஸ்வரம்-ராநாதசுவாமி-தீர்த்தயாத்திரை     

  1. ராமநாதர்-பர்வத வர்த்தினி

       ராமேஸ்வரம் சிவன் 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில்உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் . ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.
2-RMM3-RMM             தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம்.
11
4-RMM6a-RMM
  1. பதஞ்சலி முக்தி தலம்

     பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். பல்லாயிரக்கணக்கானருத்ராட்சங்கள் பின்னப்பட்ட பந்தலின் கீழ் நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம்மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.
  1. ஸ்படிக லிங்க பூஜை

      ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர்பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.
  1. மூன்றாம் பிரகாரம்

           1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது.
          மூன்றாம் பிரகாரம் எப்போதும் திறந்தே இருக்கும். இந்தியாவிலேயே திருச்சுற்று அமைப்புக்குப் பெயர் பெற்றது ராமேஷ்வரம்.
7-RMM        பிரகாரத்தில் சீதைமணலில் லிங்கம் பிடிக்கஅதற்கு ராமர் பூஜைசெய்யும் காட்சி சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயர்,சுக்ரீவன் உள்ளிட்ட வானர வீரர்களும் இருக்கின்றனர்.
     மேலும் நளன்நீலன்கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும் இப்பிரகாரத்தில் உள்ளன.
     சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி,சங்கரநாராயணர்அர்த்தநாரீஸ்வரர்ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.
       அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கியசண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
  1. காசிராமேஸ்வரம் யாத்திரை

{ராமேஸ்வரம்-அலகாபாத்(திரிவேணி)-காசி-கயா-ராமேஸ்வரம்}
     காசிராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில்ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்தீர்த்தத்தில் நீராடிமணல் மற்றும்தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.
     கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டுவிஸ்வநாதருக்குஅக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும்அங்கிருந்து கங்கைதீர்த்தம் எடுத்து வந்துராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
     ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்தயாத்திரையை முடிக்க வேண்டும்.
     காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.
  1. ஜோதிர்லிங்கம்

      விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம் ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமிசன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
  1. அக்னி தீர்த்தம்- ராமேஸ்வரம் சுவாமி சன்னதி கடல் (காஞ்சி-காமகோடி மடம்)-உஜ்ஜயினிகாளி

      ராமேஸ்வரம் கடல், “அக்னி தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர்.
26         அக்னிபகவான், சீதையின் கற்பு தன்னை சுட்டெரிப்பதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை என்றும் வேதனையில் துடித்தான்.
BabuSelvi
     அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டார். அக்னியைப் பார்த்த ராமர், ‘நீ இந்த சமுத்திரத்தில் மூழ்கி உன்னுடைய வேதனையைக் குறைத்துக்கொள்’ என்று கட்டளையிட, அக்னிபகவான் அந்தப் பகுதி சமுத்திரத்தில் மூழ்கினார். அவர் மூழ்கிய இடம் அக்னி தீர்த்தம்.
      இதில் மூழ்குகிறவர்களுக்கு சகல பாபங்களும் தீரும். இங்கு அமர்ந்து பித்ருக்களுக்கு நீர் வார்ப்பவர்களுக்கு, பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்; அந்த பித்ருக்களின் தாகம் தணியும் என்று ராமர் ஆசிர்வதித்தார்.
    ராமேஸ்வரம் கோவில் முன்புள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம். இது ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் கடுமையான பிதுர் தோஷங்கள் நிவர்த்தியாகும்.ராமேஸ்வரத்தில் எல்லா நாட்களிலும் பிதுர் தோஷப் பரிகாரம் செய்யலாம்.
          மிகக்கடுமையான பித்ரு தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். திலா(எள்) ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.
      மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்த பின்பு அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சீதை தீக்குளித்த போது அக்னி தேவன் சீதா தேவியை தீண்டிய பாவத்தை போக்க அக்னி தீர்த்தத்தில் நீராடியதால் இது அக்னி தீர்த்தம் எனப்படுகிறது.
It may also be noted that
       வேலூர் மாவட்டத்தில் திருமாதலம் பாக்கத்தில் சுயம்புதிருமாலீஸ்வரர் கோவில் இருக்கிறதுதிருமால் இங்கு ஈசனை நோக்கிதவம் புரிந்து மனோபவம் பெற்றதால் மகாலட்சுமி வாசம் செய்யும்தலமாக விளங்குகிறது.
    பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரை பறிப்பவருக்கும்பிரம்மஹத்திதோஷம்பித்ருதோஷம் உண்டாகும்இத்தகைய தோஷம்கொண்டவர்கள்  திருமாதலம்பாக்கம் சென்று திருமாலீஸ்வரரைவழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்பரசுராமர் இங்கு வந்து தன்பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.
       செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில் உள்ளதுஇச்சன்னதியில் சிரார்த்தம்செய்ய இயலாதவர்களுக்காக லட்சுமி நாராயண பெருமாளே  தானேமுன்னின்று சிரார்த்தம் செய்விப்பதாக ஐதீகம்.
            சிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள்,பச்சரிசிஅகத்திக்கீரைகருப்பு எள்வெல்லம்வாழைக்காய்ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்கபித்ரு,தோஷம் நீங்கும்தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளியபரிகாரத்தைச் செய்ய வேண்டும்இதனால் பித்ரு தோஷம் முழுமையாகநீங்கும்
  1. ராமேஸ்வர தீர்த்தமாடல்

     முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும்.

9-RMMராமநாதர் கோவில் தீர்த்தங்களும் பலன்களும்

       ராமேஸ்வரம் கோவில் சுவாமி தரிசனம் முன் கோவிலில் தீர்த்தமாடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.
கிழக்கு பிதானவாயில் அநுமன் சன்னதி
1.மகாலட்சுமி தீர்த்தம்(எதிரில்): செல்வ-வளம்
பிதானவாயில் அநுமன் சன்னதி மேல்புறம் (2,3 & 4)
2சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன்.
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை
4.சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
பிதானவாயில் உட்புறம்-2ம் பிரகாரம்(5 & 6)
5சங்கு தீர்த்தம்(தெற்க்கு பாகம்):  வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6சக்கர தீர்த்தம்(வடக்குக்கு பாகம்): மனஉறுதி பெறுதல்
3-ம் பிரகாரம் மேற்க்கு(7,8 & 9)
7.சேது மாதவ தீர்த்தம்(தெப்ப குளம் எதிரில்): தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.10-RMM8நள தீர்த்தம்(சேது மாதவ சன்னதி தென்புறம்)
9நீல தீர்த்தம்(சேது மாதவ சன்னதி வடபுறம்),
3-ம் பிரகாரம் ; சேது மாதவ சன்னதி முன்புறம்(10,11,12)
10.கவய தீர்த்தம்
11.கவாட்ச தீர்த்தம்
12.கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்-2-ம் பிரகாரம்-வடக்கு-பைரவர் சன்னதி
2-ம் பிரகாரம்-கருவுலம் மேற்கு(14,15&16)
14.கங்கா தீர்த்தம்
15.யமுனை தீர்த்தம்
16.கயா தீர்த்தம்
17சர்வ தீர்த்தம்: பிறவி பாவங்கள் நீங்குதல்-முதல் பிரகாரம்
18. 
சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்- சுவாமி-அம்மன் சன்னதி நுழைவு   வாயில் இடையில்
11-RMM19.சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி- அம்மன் சன்னதி நுழைவு வாயில்
2-ம் பிரகாரம்
20சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்-மேற்கு
21.
சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்-மேற்கு
22.கோடி தீர்த்தம்
: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)-வடக்கு
  1. ராமேஸ்வரம்-முதல்தரிசனம்:விஸ்வநாதர்விசாலாட்சி

     `ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, “விஸ்வநாதர் என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது.12-RMM         ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜைசெய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்குபூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்குபூஜை நடக்கிறது.
       கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும்.
13-RMM        ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவுவாயிலின் வலப்பக்கம் உள்ளது.
  1. ராமேஸ்வரம் அடுத்து தரிசனம்: ராமநாதர்பர்வத வர்த்தினி

 14-RMM
  1. உப்புலிங்கம்

      ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர்.
      பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.
          ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்குபின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
  1. காலில் சங்கிலியுடன் பெருமாள்- சேதுமாதவர்

     சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குழந்தை பாக்கியம் இல்லா குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.
     மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.
     இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.
  1. பாதாள பைரவர்

     ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்திதோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.
  1. காவியுடை இரட்டை விநாயகர்

      பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.
  1. ரங்கநாதர் (விபீஷணன் ஸ்தாபித்தது)

      அம்பாள் சன்னதி பிரகாரத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது அமைப்பு.
  1. தாழம்பூ

     பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும்சூட்டுகின்றனர்.
     கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு.  பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.

17.ராமநாதர் கோவில் சன்னதிகள்

i. ஆஞ்சநேயர்
ii.
 நந்தி (22’ x 12’ x 17’)
iii. பிள்ளையார்
iv. முருகன்
v. நவகிரகங்கள்
vi. விஸ்வநாதர்விசாலாட்சி-ராமநாதர் சன்னதி இடப்புறம்
vii. ராமநாதர்-மூலவர்
viii. ஸ்படிக லிங்கம்-ஆதிசங்கரர் (5 AM)
ix. உப்புலிங்கம்- ராமநாதர் சன்னதிக்கு பின்புறம்
x. ஜோதிர்லிங்கம்-சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு
xi. பர்வதவர்தினி-மலைவளர்காதலி
Xii. இரட்டை விநாயகர்-அம்பாள் சன்னதி
xiii. பள்ளிகொண்ட பெருமாள்
xiv. நடராஜர்
xv. மஹாலஷ்மி
xvi. பாதாள பைரவர்-கோடிதீர்த்தம் அருகில்
xvii. சேதுமாதவர்-லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர்
xviii. மேல் கோபுரவிநாயகர்
xix. மேல் கோபுரமுருகன்பாம்பன் சுவாமிக்குஅருளியவர்.

திருவிழாக்கள்:

        மாசி-மகா சிவராத்திரி, வைகாசி-வசந்தோற்சவம், ஆனி-ராமலிங்க பிரதிஷ்டை உற்சவம், திருக்கல்யாணத் திருவிழா, நவராத்திரி விழா, கந்தசஷ்டி விழா, ஆருத்ரா தரிசன விழா ஆகியன முக்கிய விழாக்களாகும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ராமேஸ்வரத்தில் மேலும் பார்க்க வேண்டியஇடங்கள்

  1. உஜ்ஜயினி காளிஅக்னி தீர்த்தம் அருகில் (நகர்-கிழக்கு)
  2. முனீஸ்வரர்தெற்கு கோபுர வாசல் எதிரில் (நகர்-தெற்கு)
  3. நம்பு நாயகி (நகர்-மேற்கு)
  4. பத்ரகாளி (நகர்-வடக்கு)
  5. ராமர் பாதம்கந்தமான பர்வதம்
          சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடம், ராமர்பாதம் சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்ற பின் ராமபிரானும், லட்சுமணனும், அனுமான் சேனைகளுடன், ராமேஸ்வரம்கந்த மாதன பர்வதம் என்னும் இடத்தில் நின்று இலங்கை செல்ல கடலில் பாலம் அமைப்பது என, ஆலோசனை செய்ததாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
7a-RMM        கடல் மட்டத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் நின்று, ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதையும் கண்டு ரசிக்க முடியும். இக்கோயிலுக்கு சென்று திரும்பினால், இழந்து விட்ட குலப்பெருமைகளை மீண்டும் பெறலாம்என, காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுவதால், ராமர் பாதம் கோயிலுக்கு சென்று வரலாம்.
19-RMM
  1. சாட்சி அநுமார்
  2. ராமர் தீரத்தம்
  3. ராமர் கோவில்
  4. கிருஷ்ணன் கோவில்
  5. பஞ்சமுக அநுமார்
  6. மிதக்கும் கல்
  7. சீதாதீரத்தம்
  8. லஷ்மணன் தீரத்தம்
  9. சுக்ரீவன் கோயில்
     சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது.
17-RMM      தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ.,தூரத்தில் இருக்கிறது.
  1. வால் இல்லா ஆஞ்சநேயர்

          கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் வருந்தினார்.
18-RMM     அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது.
          ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.
  1. தீவுக்குள் ராமர் கோயில்

       விபீஷணன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு “கோதண்டராமர் என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.
     அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில்,
     வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.
  1. மிதக்கும் பாறைகள் துளசி பாபா மடம்

           ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்க குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார். பாறைகளை கடலுக்குள் போட்டார். அந்த பாறைகள் மூழ்காமல் மிதந்தன. மிதந்த பாறைகளின் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் ராமர்.
    இந்த பாறைகள் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையில்அமைந்துள்ளன. இதைத் தான் ராமர் பாலம் என்று அழைக்கிறோம்.
19-RMM      பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ், பத்திரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே! புதுச்சேரியில் உள்ள அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்.
         இந்த துளசி பாபா மடத்தில் ராமர் பயன்படுத்திய பாறைகள் , தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
      விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் ஒரு சமயம் கங்கைக் கரையில் மரங்களின் கனிகளைப் பறித்துத் தின்பதும் மரக்கிளையில் தாவித் திரிவதுமாக இருந்தான்.
       அப்போது சற்று தூரத்தில் ஒரு அந்தணர் சாளக்கிராமத்தை வைத்துப் பூஜை செய்து கொண்டிருப்பது அவன் கண்களில் பட்டது.
        மெதுவாகச் சென்று விளையாட்டுத்தனமாக அந்தச் சாளக்கிராமத்தை எடுத்துக் கங்கை நீரில் வீசி எறிந்து விட்டான்.
       கோபம் கொண்ட அந்தணர் நீ தண்ணீரில் எதை எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என்று சாபமிட்டார். அதனால்தான் கடலில் நளன் வைத்த கற்கள் மூழ்கிவிடாமல் நின்றன.
  1. தனுஷ்கோடி

     இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரியத் துனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.
20-RMM     இங்குள்ள வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். இங்குள்ள கோதண்டராமர் கோயில் ராமேஸ்வரத்திலிருந்து 12 கி. மீ., தொலைவில் உள்ளது.
  • வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி,(தனுஷ்=வில்) என்றனர்.
  • கோடி என்பது முனை. வானைத் தொடும் முனை ‘கோடு’. அதுபோலக் கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தக் ‘கோடி
      அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது.
   ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமானபோது இந்த கோவிலும் சிதைந்து போனது.
      அந்த புயலுக்கு பின்னர், அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன.
     தனுஷ்கோடி அழிந்த பிறகு, ராமேஸ்வரம்-ராமநாதர் கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதுர் கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
  • Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

HRE-27:காசி புனித யாத்திரை(இராமேஸ்வரம் ; திரிவேணி சங்கமம்; காசி; கயா; இராமேஸ்வரம்)


இராமேஸ்வரம்⇒ திரிவேணி சங்கமம் காசிகயா இராமேஸ்வரம்

Aug, 24, 25, 26, 2015⇒ Sept, 4, 5, 6 & 7, 2015Sept, 21, 22, 23, 24, 2015
 1
  1. காசி (வாரணாசிபனாரஸ், ஆனந்த பவனம், அபிக்தம்) உத்தரப்பிரதேசம் (UP)

    சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி-தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது.
     இவ்வூருக்கு வாரணாசிபனாரஸ், ஆனந்த பவனம், அபிக்தம்,மகாமயானம் ஆகிய பெயர்களும் உள்ளன.
    கல்வி கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரக பதவி பெற்றார். மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.
   சூரியனின் புத்திரர்கள் எமனும்சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், சனிதேவன் நவக்கிரகங்களில் கிரகமாகப் பதவி பெற்றார்.
2        பிரம்மா இங்கு யாகம், தவம் செய்து பிரம்ம பதவியைப் பெற்றார்.சப்தரிஷிகள் இங்கு தவம் செய்து, நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுகின்றது.
    காசி என்றால் ஒளிநகரம். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும். இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.
1.1.காசி-வரலாறு
       இந்த கோயிலை முதன் முதலில் கட்டியது முகலாய சக்ரவர்த்தி அக்பர்தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் இந்தப் பணியைச் செய்துள்ளார்.
       அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார்.
1.2.துண்டிவிநாயகர்
       காசிக்கு செல்பவர்கள் துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.
     காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், காசியில் காவாசி அவினாசி என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர். தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.
       கங்கையின் மகிமை உணர்ந்தவர்கள், சிவகங்கை, கங்கைகொண்ட சோழபுரம் எனவும் தங்கள் ஊர்களுக்குப் பெயரிட்டு மகிழ்கின்றனர். மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.
1.3.காசிஇராமேஸ்வரம்
    முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசிஇராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்புமிக்க தலம் காசி ஆகும்.
     பூலோகக் கைலாசம் என்று போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை. ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும்.
  1. காசி யாத்திரை

     முதலில் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்த கரையில் மண் எடுத்துக் கொண்டு அலஹாபாத் சென்று அங்கே (முதல் முறையாக தம்பதியாக செல்பவர்கள் வேணி தானம் செய்ய வேண்டும்) சங்கல்பம் செய்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வந்த மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜை செய்து அதை திரிவேணி சங்கமத்தில் விட்டு அங்கே கங்கை நீரை எடுத்துக் கொண்டு காசி (வாரணாசி) சென்று விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.
3.          மீதம் இருக்கும் நீரை எடுத்துக்கொண்டு அதை மறுமுறை ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம்ஸ்ரீ ராமநாத சுவாமிக்கு கங்கை நீர் மட்டும் தான் அபிஷேகம் செய்யப் படும். இந்த காசி யாத்திரை பூர்த்தி ஆகும்.
           திரிவேணி சங்கமம் கங்கை, யமுனை, சரஸ்வதி(அந்தர்வாகினி} மூன்றும் சேருமிடம் ஆகும். காசி நகருக்கு திரிவேணி சங்கம நீர் வடக்கு நோக்கி பாய்ந்து நம் பாவங்களைப் போக்குகிறது.
   காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீவிசாலாக்ஷி, அன்னப்பூரணி, மற்றும் பைரவரை வழிபடலாம்.
     தீபாவளி நாட்களில் சென்றால் தங்க அன்னப்பூரணி, தங்க விசாலாக்ஷி ஸ்வர்ண லிங்கேஸ்வரர், அன்னக்கூடு (லட்டு தேர்) இந்த லட்டு தேர்(நகராது) எல்லா ஆலயங்களிலும் எல்லா விதமான உணவு பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப் பட்டு வைத்திருப்பார்கள் ஆனந்தமாக கண்டு களிக்கலாம். அந்த பிரசாதங்களை பின்னர் பொது மக்களுக்கு வழங்குவார்கள்).
     யாத்திரையை பூர்த்தி செய்து அவரவர் இல்லங்களுக்கு சென்று வாங்கி வந்த பொருட்கள் கங்கை நீர்,போன்ற வற்றை வீட்டில் வைத்து பூஜை செய்து உறவினர்களைக் கூப்பிட்டு அன்னதானம் செய்து எல்லாவிதமான நண்மைகளையும் அடையலாம்.
  1. காசி-மூலவர் விசுவநாதர்

     காசிவிசுவநாதர் கோயில் வடநாட்டுப்பாணியில் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது.
    மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர்.
      விசுவநாதருக்குத் தங்க விமானம் – சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம்.
   லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.
4     காசி மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றும் அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே சூட்டப்பட்டது.
5           பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம். காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய ஸ்தலம்.
        ராமேஸ்வர அக்னி-கோடி திர்த்தங்கள், பால், வில்வம், எருக்கம் பூமாலை, ஊமத்தங்காய் போன்றவைகள் சமர்பணம் செய்யப்படுகிறது. விஸ்வநாதர் பக்கத்தில், ஆதி விஸ்வநாதர் ஒரு கிணரில் இருப்பதையும் உணரலாம்.
LINK-1(Video Play): விஸ்வநாதர் பூஜை :https://www.youtube.com/watch?v=OcDitnmLBYg
LINK-2(Video Play): சப்த ரிஷி பூஜை :https://www.youtube.com/watch?v=20Nx4CfQ9i0
6LINK-3(Video Play): கங்கை ஆரத்தி –https://www.youtube.com/watch?v=1Q0gPJ2HIdM
3.1.பரிவார மூர்த்திகள்
அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர்
3.2.ஆதி நந்தி
           கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. அந்த நந்தியின் அருகே ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது.
               இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
3.3.அன்னபூரணி
        அன்னபூரணிவிசாலாட்சி கோயில்கள் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோயில் தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள். லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.
7நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|
நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|
ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ
என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார்.
      உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள்.
               அன்னபூரணி சந்நிதானத்தில் அரக்கட்டளையால் அறுசுவைஉணவு பகல் முழுவதும் வழங்கப்படுகிறது
          வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்துடன் காசியில் எழுந்தருளியிருக்கிறாள்.
       இமையாத வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும் வருக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் தங்க அன்னபூரணியாக காசியில் அருளிபாலிகிறாள்.
    சாம வேதத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
3.4. விசாலாஷி
     விசாலாஷி கோவில் விஸ்வநாதர் சன்னதிக்கு சிறிது தொலைவில் ஒரு குறுகிய சந்தில் உள்ளதுமிகவும் அழகிய கோவில். காசியில்
8       அம்மன் விசாலாஷியாகவும்அன்னபூர்ணியாகவும்எழுந்தருளியுள்ளாள். காசி விசாலாட்சி அம்பாள் சக்தி பீடங்களில்பெரும் பெருமை கொண்ட பீடம்.
9      விசாலாஷி கோவில் தென்னாட்டு பாணியில் அமைந்துள்ளது.சுற்றிலும் சிவ-லிங்கங்கள். மூலவர் சந்நதிலேயே (மூலவர் விசாலாஷி) அம்மன் பின்புறமாக ஆதி விசாலாஷி அம்மனையும் தரிசிக்கலாம்.
10     அம்மனுக்கு விளக்கு பூஜை மகாமேரு பூஜை, பிரகாரத்தில் சிவலிங்க பூஜையும் மிகவும் விசேஷம்.
3.5.வியாச காசி
    வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர்கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால் தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞானவாவியைத்தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது.
  1. வாரணாசி(காசி)

       காசி, தற்போது வாரணாசி என்றே அழைக்கப்படுகிறது. வாரணா, ஹசி என்ற நதிகளுக்கு இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள்.
11      இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. வாரணாசி பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் தொழிற்கல்வி நிலையமாகும்.
      சப்த மோட்ச புரிகளில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி(அவந்தி), துவாரகை.
    காசி நாட்டின் தலைநகராக விளங்கிய வராணாசியில் கௌதம புத்தர் பல ஆண்டுகள் கடும் தவமியற்றி, பின் ஞானம் அடைந்த பின், வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் தன் சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார்.
       வாரணாசி வந்த சீன யாத்திரிகரும் வரலாற்று அறிஞருமான் யுவான் சுவாங், கங்கைக் கரையில் 5 கி. மீட்டர் நீளத்தில் இருந்த வாரணாசியில் செழித்திருந்த சமயம் மற்றும் கலைநயங்கள் குறித்து பெருமையுடன் தனது பயண நூலில் குறித்துள்ளார்.
     எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் வாரணாசியில் சிவவழிபாட்டை நிலைநாட்டினார்.
12     வாரணாசியிலிருந்து 12 கி. மீ., தொலைவில் உள்ள பாபத்பூர் (Babatpur) விமான நிலயம் , இந்தியாவின் முக்கிய நகரங்களான தில்லி, சென்னை, பெங்களூரு, கொச்சி, கோவா, கோழிக்கோடு, கோவை, லக்னோ, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், புனே, இந்தூர், ஜெய்ப்பூர், நாக்பூர், ஜம்மு, கௌஹாத்தியை வான் வழியாக இணைக்கிறது.
  1. பனாரஸ்(காசி)

          பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.
  1. ஆனந்த பவனம் (காசி)

    இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில்காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தரவாகினி என்று அழைக்கின்றனர்.
  1. அவிமுக்தம் (காசி)

   அவி=தலைவன், முக்தன்=சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் பெயர் ஏற்பட்டது
  1. மகாமயானம் (காசி)

     சிவபெருமான் சுடலையை விரும்பி வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்குமகாமயானம் என்ற பெயர் உண்டாகியது. இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.
  1. தீர்த்தக் கட்டங்கள்(64)

பஞ்சதீர்த்தம் (5)
    கங்கை நதியின் ஓரத்தில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அஸ்சங்கம், தசாஸ்வமேதம், வரணசங்கம், பஞ்சகங்கா, மணிகர்ணிகா ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும்.இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும்.
139.1.அஸ்சங்கமம்
      அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
9.2.தசாஸ்வமேதம்
     இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது.
14LINK-4(Video Play): கங்கை ஆரத்தி :https://www.youtube.com/watch?v=1Q0gPJ2HIdM
9.3.வரணசங்கம்
    இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கலாம்.
9.4.பஞ்சகங்கா
     வரணசங்கத்திலிருந்து யமுனைசரஸ்வதிசிரணாதூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.
159.5.மணிகர்ணிகா
    பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம்செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.
  1. கேதார்நாத் (கேதார்நாத் காட்)

      அனுமன்இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம்.காசி. மகாராஜா ரஞ்சித் சிங், காசி விசுவநாதர் ஆலய விமானத்தைப் பொன் தகடுகளால் வேய்ந்தார். இன்றும் கோபுரம் தங்கமாக ஒளிர்கிறது. கோயில் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. காசியில் மீட்டருக்கு ஒரு கோயில் எனப் பலகோயில்கள் உள்ளன.
16      கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.
   அம்மன்மதுரை மீனாட்சி, பக்தர்கள் தாங்களாகவே சிவலிங்க பூஜைசெய்யலாம்
  1. தக்கன்

        இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம் செய்தார். தமது கணவனை அவமதித்த தங்கள் யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார்.
         ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம் தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார நாத்திலிருந்து கொண்டு வந்தார். மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை அக்கினியில் இடமுனைந்தார். சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தார். அப்போது அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார். சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக் கேட்டார்.
        திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச் சுட்டிக் காட்ட, சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்தது. கிணற்றினுள்ளிலிருந்து பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி இருந்தது.
  1. திருமாலுக்கு விசுவரூபம்

       திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு தோன்றினார்.
     திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார். மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம் எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில் ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
      திருமாலுக்கு விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்குவிசுவநாதர் எனப்பெயர் உண்டாகியது. அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர் பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு திருமாலின் வேண்டுதலின்படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என வழங்கப்பட்டு வருகிறார்.
  1. ஹரிச்சந்திரன்

    இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில் வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும், பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று சுபிட்சம் அடைந்தார்.
     இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம் கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம் நீங்கப் பெற்றார்.
    மகாபாரதக் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடு செய்ததாகவும் மகா பாரதத்தில் கூறப்படுகிறது.

14. கங்கா ஸ்நானம்(ஹரித்துவார்-ரிஷிகேஷ்)

     கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது.
    கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும் நீங்கிவிடும். எனவேதான் காசி பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள் அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட வேண்டும்என்கின்றனர்.
 17      கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத் தொட்டு வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால்தான், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் விலகும்.

15.கங்கை உற்பத்தி

        மாபலிச்சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்ட நாராயணன்,திருவிக்கிரமராக ஓங்கி உலகளந்து மற்றொரு காலை தேவலோகம் வரை நீட்ட, ஆகாச கங்கை நீர்கொண்டு பிரம்மா அத்திருப்பாதத்தைக் கழுவிப் பூஜித்தார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய கங்கை நீரைச் சிவபெருமான் தன் சடையில் தாங்கிப் பூமியில் விட்டார். அந்த கங்கையே காசியில் புனிதத்தீர்த்தமாக விளங்குகிறது என்கின்றனர்.
        கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப்பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது.
     இமாலய மலைத்தொடர் மையத்தில் பிறக்கும் கங்கை நதி, 25,000 அடி உயரச் சிகரத்தின் கங்கோத்திரி பனிக்களஞ்சியம் உருகி பாகீரதி, அலெக்நந்தா ஆறுகளின் இணைப்பாகப் பெருகிப் பால்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல், குன்றாமல் சுமார் 1560 மைல் தூரம் ஓடி வங்காள விரிகுடாவில் சங்கமம் ஆகிறது. பாகீரதி நதி சுமார் 13,000 அடி உயரத்திலும், அலக்நந்தா 25,646 அடி உயரச் சிகரமான நந்தி தேவிக்குக் கீழாகவும் உற்பத்தியாகின்றன.
15.1.சகரனனும்-கங்கையும்
    சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர்என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார்.
      தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான்.
         ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
15.2.பகீரதன்-கங்கை
         கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர வேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள்.
18         சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார்.
      இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர்.
19     ஸ்ரீ ஆதி சங்கரர் விசுவநாத அஷ்டகம், அன்னபூரணி அஷ்டகம், மணி கர்ணிகா அஷ்டகம் முதலியவை பாடியுள்ளார்.

16.அகோரிகள்

       அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனித மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை.
      இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும்.
        உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. காசி நகரத்தில் இவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

17.காசியில் கருடன் (காசிக்கு ஐந்து அதிசயங்கள்).

     காசியில் கருடன் பறப்பதில்லைபல்லி ஒலிப்பதில்லைமாடுமுட்டுவதில்லைபூக்கள் மணப்பதில்லைஎரிக்கப்படும் பிணங்கள்நாறுவதில்லை.
     காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை, பல்லிகள் ஒலிப்பதில்லை.
      ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.
           காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது.
           அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.
     அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

18.அலகாபாத் (திரிவேணி சங்கமம்):திருமாலின்-திருமுகமண்டலம்

  1. மூன்று ஆறுகள் கூடுமிடம்)- உத்தரப்பிரதேசம்(UP)
       அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை,யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது.
20

19.கயா(பிகார்;100km from பாட்னா): திருமாலின்-திருப்பாதம்

       கயா நதிக்கரையில் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்துப் படைப்பது மிகவும் புனிதமான சடங்கு. கயா சென்று பிண்டம் படைப்பது சிறப்பு-நீத்தார் கடன்” என்று போற்றுகிறது.
      பித்ருகர்மாக்கள் கயாவில் செய்யப்பட்டால் கிடைக்கும் புண்ணியம் அளவில்லாதது எனப் புராணங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் கயாவில் செய்யப்படும் ஸ்ரார்த்தத்தாலேயே த்ருப்தியடைந்து, பிறவித் தளையிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைகிறார்கள்.
           கயாவைத் தவிர வேறெங்கு ஸ்ரார்த்தம் செய்ப்பட்டாலும், அதன் நிறைவில், ‘கயாவில் செய்த பலன் கிடைக்கட்டும்’ என்று பிரார்த்தித்து, அக்ஷய வடம் இருக்கும் திசை நோக்கி சில அடிகள் நடப்பது சம்பிரதாயமாக இருக்கிறது.
      கயாவில் செய்யப்படும் ஸ்ரார்த்தம் மிக அதிக நேரம் எடுப்பதாக இருக்கிறது. கிட்டத்தட்ட பகல் 9 மணிக்கு ஆரம்பித்தால், பிற்பகல் குறைந்தது மூன்று மணியாவது ஆகும்.
19.1.கயாசுரன் (கயா)
        கயாவில் பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் வழிபாடு செய்து, பிண்டம் வைக்க முன்னோர்கள் முக்தி அடைவார்கள் என்பது நம்பிக்கை. இப்படியொரு வரத்தைக் கேட்டுப் பெற்றவன் கயாசுரன்.
      கயாசுரன் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். விஷ்ணு அவன் முன் தோன்ற, கயாசுரன், “என்னுடைய உடல் எல்லா தீர்த்தங்கள், மானிடர்கள், முனிவர்கள் தேவர்கள்,ஆகிய அனைவரைக் காட்டிலும் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும் ” என்று வரம் கேட்க, விஷ்ணுவும் அவ்வாறே அருள் புரிந்தார்.
21       அதுமுதல் மக்கள் பலரும் கயாசுரனின் உடலைத் தொட்டு தங்கள் பாவங்களைக் போக்கிக் கொண்டனர். இதனால் எமதர்மராஜனின் பணி பாதிக்கப்பட்டது. பூமியில் சுமை அதிகரித்தது. எமன் பிரம்மாவிடம் முறையிட, விஷ்ணு, பிரம்மாவிடம் “ நீ கயாசுரனின் சென்று உன் உடல் பவித்ரமானது. அதில் யக்ஞம் செய்ய வேண்டும் எனக் கேள்” என்றார். பிரம்மாவும் அதன்படி சென்று கயாசுரனிடம் கேட்க, அவன், ”ஒரு நல்ல காரியத்துக்கு என் உடல் பயன்படுமானால் அது எனக்கு மகிழ்ச்சியே” என்று கூறி வடக்கே தலை வைத்து, தெற்கே கால் நீட்டி தன் உடலை கீழே கிடத்தினான். அவனது உடல் மீது பிரம்மா வேள்வியைத் துவக்கினார்.
            வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அசுரனின் தலை அசையத் துவங்கியது.பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் எமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. விஷ்ணு தன் கதாயுதத்தால் அவன் மார்பை அழுத்தி, தனது பாதத்தை அவன் மீது வைத்து அவன் தலை ஆட்டத்தை நிறுத்தி அவனை பாதாள லோகம் அனுப்பினார். கயாசுரன், ”இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர் அனைவருக்கும் எந்தப் பாவமும் அண்டாமல் முக்தி கிடைக்க வேண்டும்”
  • இந்தப் புனிதமான க்ஷேத்திரம், தம் பெயராலேயே வழங்கப்பட வேண்டும்
  • பித்ருகர்மாக்கள் நிறைவேறும் புனிதத் தலமாக இது திகழ வேண்டும். இங்கு வரும் அனைவரும், தம் தாய், தந்தையருக்கு மட்டும் அல்லாது, தமக்குத் தெரிந்தவர், அறிந்தவர், தூரத்து உறவினர், நண்பர்கள், வளர்ப்புப் பிராணிகள் முதலிய யாவருக்கும் பிண்டம் அளித்து அவர்களை நற்கதி அடையச் செய்ய வேண்டும்.
  • எந்த நாளில் பிண்டங்கள் ஸ்ரீவிஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையோ அன்று தனக்கு மீண்டும் உயிர் பிச்சை அளிக்க வேண்டும் என்றும் வேண்டினான். அவன் வேண்டுகோள்கள் நிறைவேறும் என்று ஸ்ரீவிஷ்ணு உறுதியளித்தார்.
  • அது முதல் இங்கு பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபாடு செய்வது தொடர்கிறது.
22
  • இங்கு ஒவ்வொருவரும் தம்தம் தாய், தந்தையருக்கு மட்டுமல்லாது, தெரிந்தவர் அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் ஸ்ரார்த்தத்தில், தாய், தந்தை வழிகளில் மூன்று தலைமுறையினருக்காக,  மூன்று பிண்டங்கள் மட்டுமே அளிக்கப்படும். பிரயாகையிலும், காசியிலும் தீர்த்த ஸ்ரார்த்தத்தின் போது 16 பிண்டங்கள் அளிக்கப்படும். ஆனால் கயாவில் மட்டும் 64 பிண்டங்கள் அளிக்கப்படும்.
            இதில் 32 பிண்டங்கள் தாய்க்கும், 16 பிண்டங்கள் மூதாதையருக்காகவும், மீதி 16, மற்ற உறவினருக்காகவும் அளிக்கப்படுகிறது.
        தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், கருச்சுமந்த காலத்திலிருந்து, தன்னைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்காகப் பட்ட ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் மன்னிப்பு வேண்டி ஒவ்வொரு மனிதனும் கயாவில் பிண்டங்களை அர்ப்பணிக்கிறான்.
          என்னை வயிற்றில் சுமந்த போது, உனக்கு வாந்தி முதலிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமே, அதற்காக இந்தப் பிண்டத்தை அர்ப்பணம் செய்கிறேன். நீ விரும்பியதை உண்ண முடியாமல் தவித்திருப்பாயே அதற்காக இது. தூங்கும் நேரத்தில் கூட, புரண்டு படுத்தால் எனக்கு மூச்சு முட்டக்கூடும் என, எழுந்து கொண்டு மறுபுறம் படுத்தாயே அதற்காக இதை அர்ப்பணம் செய்கிறேன். நான் வயிற்றில் உதைப்பதை வலியாக எண்ணாமல், மகிழ்ந்தாயே அதற்காக இது, பொறுக்க முடியாத பெரும் வலியைத் தாங்கி என்னைப் பெற்றெடுத்தாயே அதற்காக இது, பிறந்ததும், தாய்ப்பால் தந்து என் பசி ஆற்றியதற்காக இது,…’ இவ்வாறு ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் ஒன்று அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
      முதலில் பல்குணி நதிபின் விஷ்ணு பாதம்அதன் பின் அக்ஷயவடம் ஆகிய இடங்களில் பிண்டம் அளிக்க வேண்டும்.
         கயையில் தங்கள் முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், ஆசையுடன் வளர்த்த மிருகங்கள், செல்லப் பிராணிகள், மரம், செடி, கொடிகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் பிண்டத்தால் அவர்கள் நற்கதி பெறுவார்கள்.
19.2.பல்குணி நதி (i)
      பல்குணி நதி நதி பெயரே தவிர, வறண்ட பூமி தான். ஆங்காங்கே ஊற்றுகள் இருக்கிறது. ஒரு படித்துறையில், தேயிலைத் தோட்டத்தில் வைக்கும் ஸ்ப்ரிங்ளர் போல் அமைத்து நீர் தெளிக்கிறார்கள்.
23
     ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், சீதா தேவியும் கயாவில் சிரார்த்தம் செய்ய வந்த போது, ஸ்ரீ ராமர், அனுஷ்டானங்களை முடித்து விட்டு வருகிறேன்’ என்று சென்று விட்டார். பல்குணி நதியின் கரையில், ஸ்ரீராமருக்காக, சீதா தேவி காத்திருந்த வேளையில்,  திதி கொடுக்கும் நேரம் நெருங்கி விட்டது.
        ஸ்ரார்த்த சமயம் நெருங்கியதும், தசரதர் சீதை முன் தோன்றினார். தமக்குப் பசி எடுப்பதாகவும், தம்மால் காத்திருக்க முடியாதென்றும் கூறினார். சீதை, உருண்டைகள் பிடித்து, தன் மாமனாருக்கு அளித்து, தன்னை ஆசீர்வதிக்க வேண்டினாள். தசரதரும் மகிழ்வோடு அதனை ஏற்றார்.
               அச்சமயம், அங்கிருந்த பல்குணி நதி, அக்ஷய வடம் (ஆலமரம்), துளசிச் செடி, ஒரு பசு, மற்றும் அந்தணர் ஒருவர் ஆகியோர் அந்த நிகழ்வுக்கு சாட்சிகளாக நின்றனர்.
            ஸ்ரீராமர் முறைப்படி ஸ்ரார்த்த கர்மாவை நிறைவேற்றினார். ஆனால் தசரதர் வந்து பிண்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘தாம் செய்த கர்மாவில் ஏதேனும் தவறு நிகழ்ந்ததோ’ எனும் பதற்றம் ஸ்ரீராமருக்கு. சீதை, தான் செய்த செயலைக் கூறினாள். ‘நீ செய்த செயலுக்கு யார் சாட்சி?’ என்று  கேட்டார்.
        பல்குணி நதிதுளசிச் பசுஅந்தணர் முதலியோர், சீதையின் செயலை தாம் பார்க்கவில்லை என பொய்யுரைத்தனர்அக்ஷய வடம்எனும் ஆலவிருக்ஷம் மட்டும், சீதையின் சொல்  உண்மையென்றுசொன்னது .
           சீதைக பொய்யுரைத்த பல்குணி நதி, துளசி, பசு, அந்தணர் முதலானோருக்கு சாபமிட்டாள். கயாவில் பல்குணி நதி எப்போதும் வற‌ண்டு ஊற்றுகள் மட்டுமே இருக்கும் , கயாவில் துளசி முளைக்காது, பசுவின் பின்பாகம் மட்டுமே பூஜிக்கப்படும் என்றும், கயையில் வாழும் அந்தணர்கள், தாம் கற்ற வித்தையை விற்று வாழவேண்டிய நிலை உருவாகும், எவ்வளவு கொடுத்தாலும் அதனால் அவர்கள் திருப்தியில்லாமல் வாழ்வார்கள் என்றும் சாபம் தந்தாள். பல்குணி நதி எதிரே சீதா மாதா ஆலயம் உள்ளது.
          பல்குணி நதிக்கரையில் விஷ்ணுதலம்; விஷ்ணுவின் முன்பு விஷ்ணு பாதம், விஷ்ணு கோவில் வளாகத்தில் அக்ஷய வடம் என ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
19.3.விஷ்ணுபாதம் (ii)
      விஷ்ணு பாதக் கோவிலில் திதி முடிந்ததும், அங்கு அர்ப்பிக்கப்பட்ட பிண்டங்களை, ஒரு தாமரை இலையில் எடுத்துக் கொண்டு, ஸ்ரீவிஷ்ணு பாதம் பதிக்கப்பட்ட சந்நிதியை நோக்கிச் சென்று, அங்கு விஷ்ணு பாதத்தில் அர்ப்பணம் செய்வர்.  வெள்ளிக் கவசம் சாற்றப்பட்ட தொட்டி போன்ற எண்கோண அமைப்பினுள் விஷ்ணுபாதம் இருக்கிறது. விஷ்ணு பாதத்திற்கு நேராக ஸ்ரீ விஷ்ணுவின் சந்நிதானம் இருக்கிறது. ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு சந்நிதகள் இருக்கின்றன.
24        ஒரு பெரிய கூடத்தில் ஹோமத்துடன் கூடிய சிரார்த்தம் ஆரம்பமாகியது.  இங்கும் பிண்டங்கள் அர்ப்பணம் செய்வார்கள்.  அதன் பின், புது வேட்டிகளை அணிந்து, பெரிய வரிசையில் அமர்ந்திருக்கும் வைதீகர்களுக்கு உணவிட வேண்டும். ஒவ்வொரு தம்பதிக்கும் இரண்டு வைதீகர்கள் என்ற கணக்கு. முதலில் பெண்கள் அனைவரும் சேர்ந்தே, அனைத்து வைதீகர்களுக்கும் பரிமாறி விட்டு, அதன் பின் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வைதீகர்களைக் கவனித்துப் பரிமாற வேண்டும்.
19.4.அக்ஷய வடம் (iii)
               அக்ஷய வடத்தையுக யுகாந்தரங்களுக்கு நீடுழி வாழவாழ்த்தியுகங்களின் முடிவில் பிரளயம் தோன்றும் போது,அக்ஷயவடத்தில் இலையிலேயேபரமாத்மா குழந்தை வடிவில்தோன்றுவார்அவரது திருவடிகளில் உலகங்களனைத்தும் லயமாகும்என்றும் அருளினாள்.  கயாவிற்கு வருவோர் அக்ஷய வடத்திலும்பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள்அப்போது தான் கயாவில்செய்யும் ஸ்ரார்த்தத்தின் பலன் கிடைக்கும் என்றும் ஆசீர்வதித்தாள்.
25         ஒரு இலைஒரு காய்ஒரு பழம் என துறந்துவிஷ்ணுபாதத்தில்பிண்டம் சமர்பித்து, விஷ்ணுபாத வலம் வந்து விஷ்ணு தரசனம் செய்துஅக்ஷய வடம் சென்று சிவலிங்கஅக்ஷய வடம் அபிஷேகம் செய்துபிதூர் பிரசாதம் அருந்தி அன்னதானம்வஸ்தரதானம் செய்து பூஜைமுடிக்க வேண்டும்.
புத்த கயா சென்று புத்தரையும் போதி-மரத்தையும் தரிசனம் செய்யலாம்
&&&&&&&&&&&&&&&&&&&&

காசி யாத்திரை-சிராத்தம் செய்யும் முறை

சிராத்தம் என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய கொடுக்கபடுவது.

1.இராமேஸ்வரம்- சிராத்தம் & மணல் எடுத்தல்

            ஒருவர் தனது மூதாதையருக்கு திதி கொடுக்க அவரது மூதாதையரின் சாம்பலுக்கு காசி யாத்திரை புறப்படும் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
       அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் , ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று  சொல்லி திதி தர வேண்டும்.
26          அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து அதற்கு பூஜை செய்து மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் கட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
21(b)             இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள் வரை மலர் வைத்து பூஜை செய்யவேண்டும்.
       காசி யாத்திரை தொடங்கும் நாளில் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன் இந்த மணல், தேன் 50 ml, பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.

2. அலகாபாத்(த்ரிவேணி; கங்கை-யமுனா-சரஸ்வதி பூமிக்கடியில்     சங்கமம்):திருமாலின்திருமுகமண்டலம்முண்டம்(முடிஎடுத்தல்)- மணல் விடுதல். 

       முதலில் அலகாபாத் த்ரிவேணி சங்கமத்தில் இந்த மணலை விடவேண்டும்.திதி கொடுப்பவர் இங்கே முடியை எடுத்துக்கொள்ளவேண்டும். (மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்). பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகளை இணைத்துக்கட்டி ஒரு திறந்தவெளி பாத்ரூம் போல அமைத்திருப்பார்கள்.
         நீரில் நின்றுகொண்டு அந்த மணலில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது பூவை வைத்து வருடம், மாதம், அன்றைய கிழமை, அன்றைய திதி, அன்றைய நட்சத்திரம், தான் இன்னார் மகன் அல்லது மகள், திதி தருபவருக்கு என்ன உறவு போன்றவைகளை சொல்லி என்னால் கொடுக்கப்படும் இந்த திதியை ஏற்று அவர்களின் ஆன்மாவை கைலாயத்திற்க்கோ வைகுண்டத்திற்கோ சேர்த்து ஆன்மாவிற்கு விடுதலை தரவேண்டும் தாயே என்றவாறு மணலை கையில் ஏந்தி நம் தலையில் வைத்து கங்காதேவி, யமுனாதேவி, சரஸ்வதி தேவியை நினைத்து அப்படியே நீரில் மூழ்கி விட்டு விடவேண்டும்.
            இப்படியே நமது அத்தனை உறவினர்களுக்கும் ஒவ்வொருவராக சொல்லி சொல்லி மணலை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க வேண்டும்.
27       நினைவில் இல்லாதவர்களுக்கும் இறுதியில் எனது வம்சம்,எனது தாயார் வம்சம், எனது தந்தையார் வம்சம் எல்லோருக்கும் என்று சொல்லி விட்டு விடலாம். கோபம் பாராட்டாமல் விரோதம் பாராட்டாமல் கொடுக்கவேண்டும்.
28      ஆத்மாக்களுக்கு சொந்தமில்லை நாமெல்லோரும் உறவுகளே !!! எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் நன்றாக குளித்துவிட்டு படகில் ஏறி இன்னும் கொஞ்சம் நதியின் உள்ளே சென்று ஒரு கேன் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் த்ரிவேணி தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
          பின்னர் தம்பதியர் எல்லா நலனையும் வேண்டி தங்களுக்குள் சுமங்கலி பூஜை செய்து கொள்வது விசேஷம்.
    நதிக்கரையில் ராம-லஷ்மண-சீதா மற்றும் பள்ளிகொண்ட ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்

3.வாரணாசி (காசி)-தண்டம் (சுவாமியை தண்டனிடுதல்)-திருமாலின்-நாபிக்கமலம்

     அலகாபாத்தில் இருந்து சுமார் 220km தொலைவில் இருக்கும் வாரணாசிக்கு வந்து கங்கையில் நீராடி ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசித்து அங்கே சாஷ்ட்டாங்கமாக தண்டனிடவேண்டும்.       29        “ஐயனே எனக்கு தெரிந்தவகையில் எனது மூதாதையருக்கு என்னால் ஆன வகையில் திதி தந்துள்ளேன். பெருமான் அதனை ஏற்று எனது மூதாதையரின் ஆன்மாக்களை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ அங்கு சேர்க்க வேண்டும் என்று சிந்தித்து தண்டனிட வேண்டும்.
30
32       இங்கு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருமேனியில் (சிவலிங்கத்தில்) நமது சிரம் வைத்து வணங்கி வேண்டுதல் செய்யலாம். இங்கு பார்க்க வேண்டிய கோயில்கள் ஏராளம், கங்கை கரை ஓரங்களில் முதலைகள் உண்டு.

31

4.கயா-பிண்டம்பல்குனி ஆறு;கயாசுரன்(விஷ்ணு பாதம்)ஆலமர வேர்-திருமாலின்-திருப்பாதம்

            மூன்றாவதாக கயாசுரன் எனும் அரக்கனால் நமக்கு கிடைத்த “பித்ரு பிண்டார்ப்பன ஸ்தலம்”
            இங்கு நாம் ஒரு தமிழ் தெரிந்த ஐயரை பார்த்து பேசிக் கொள்ள வேண்டும்.
34      இங்கு பல்குனி எனப்படும் ஆறு ஓடுகிறது. அதில் குளித்து விட்டு வந்து விடவேண்டும். ஐயர் நம்மிடம் எள், பச்சரிசி மாவு, தேன் தந்து அதனை கலக்கி பிசைந்து தயார் செய்ய சொல்வார், நாம் வைத்துள்ள எள், தேன், பச்சரிசி மாவுடன் அதையும் சேர்த்து நிறைய மாவாக்கி அதனை பிசைந்து கொள்ளவேண்டும்.
33       அதனை மூன்று பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் முப்பத்திரண்டு சிறு சிறு உருண்டைகளாக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தனித்தனியாக நம்மிடம் மூன்று முப்பத்திரண்டு உருண்டைகள் உள்ளது.
       நாம் நிர்மாணித்த ஐயர் மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்வார், பிறகு நம்மிடம் நமக்கு மிகவும் பிடித்த ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம்இவைகளை நமது மூதாதையருக்காக இனி பயன்படுத்தமாட்டேன் என்று விட்டுவிட சொல்வார்.
முதல் முப்பத்திரண்டு:பல்குனி ஆறு(i)
     முதல் முப்பத்திரண்டு உருண்டைகளை பல்குனி ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், மீன்களுக்கு உணவாகும்.
36இரண்டாவது முப்பத்திரண்டு:கயாசுரன்-மகாவிஷ்ணுவின் ஒரு பாதம்(ii)
    இரண்டாவது முப்பத்திரண்டு உருண்டைகளை கயாசுரன் மார்பில்மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்வொரு உருண்டையாக நமது உறவினர்களின் பெயரைச் சொல்லி சொல்லி விட வேண்டும்
,35     அப்போதும் நாம் “எம்பெருமானே! என்னாலான வகையில் எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், இதனை மனமுவந்து ஏற்று அவர்களின் ஆன்மாவை திருக்கைலாயமோ, ஸ்ரீ⇒வைகுண்டமோ அங்கு அழைத்துச் செல்வாயாக” என்று வேண்டி ஒவ்வொன்றாக அந்த திருவடியின் மீது விடவேண்டும்.
மூன்றாவது முப்பத்திரண்டு: அக்ஷய வடம் ஆலமர வேர்(iii)
    மூன்றாவது முப்பத்திரண்டு உருண்டைகள் கோயிலுள்ளே இருக்கும்ஆலமரத்தின் வேர்களில் இடவேண்டும்.
36           இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி காசியிலும் ,கடைசிப்பகுதி இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.
     நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.
     இதனை அலகாபாத்தில் முண்டம் (முடிஎடுத்தல்காசியில் தண்டம்(சுவாமியை தண்டனிடுதல்கயாவில் பிண்டம் (பிண்டார்ப்பணம் செய்தல்)என்பார்கள்.
                அங்குள்ள ஒரு ஐயரை அழைத்து நாம் நிர்மாணித்த ஐயர் கேட்பார்
  • இவர்களின் மூதாதையர் சொர்க்கம் சென்று விட்டார்களா? அவர்கள், ஆம், சென்று விட்டார்கள்,
  • நமது ஐயர், அவர்கள் இவர்களின் செய்கையினால் சந்தோஷப்பட்டார்களா? அவர்கள், ஆம், மிகவும் சந்தோஷப்பட்டார்கள்,
  • நமது ஐயர், சரி, இவர்களை ஆசீர்வதியுங்கள்.
37       அந்த ஐயர், உங்கள் உறவினர்கள் சார்பில் உங்களை ஆசிர்வதிக்கிறேன், உங்கள் செய்கையினால் அவர்கள் மிக சந்தோஷம் அடைந்து சொர்க்கம் சென்றார்கள். உங்களுக்கு ஆசீர்வாதம், இனி நன்றாக இருங்கள், என்று சொல்வார்கள். இதற்கு “சொஸ்தி சொல்வது” என்பார்கள்.

5. புத்த-கயா

புத்தகயா சென்று புத்தபிரானையும் போதி மரத்தையும் தரிசிப்பது நன்று
Buththa Gaya-4
38
Buththa Gaya-5
THIRIVENI SANGAMAM (UP)⇒ VARANASI(UP)⇒ GAYA(Bihar)
1.THIRIVENI SANGAMAM(Allahabad):
Varanasi-AllahabadDitance = Road (131km); Train(118 km)
———————————————————————
2.GAYA:
Varanasi-GayaDitance = Road (276 km); Train(214 km)
      Allhabad -Gaya                                                                                                     
Ditance = Road (381km); Train(355 km)
———————————————————————————
3.Butha GAYA
Gaya-Butha Gaya
          Ditance = Road (20 km)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
  • 6.மீண்டும்-இராமேஸ்வரம் (சுவாமிக்கு கங்கா அபிஷேகம்).

    மீண்டும் இராமேஸ்வரம் வந்து அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை கோயிலில் கங்கா அபிஷேகம் என்று சொல்லி இரசீது போட்டு அதனை இங்குள்ள கோயில் ஐயரிடம் தரவேண்டும், அவர் கங்கை நீரினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை காணச்செய்வார்.
AG-1     “ஐயனே என் அறிவுக்கு தெரிந்தவாறு எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், அதனை ஏற்று அவர்களை நின் மலர்ப்பதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அங்கே வரும் கோடித் தீர்த்தம் பிடித்து வந்து வீட்டில் எல்லோருக்கும் தரவேண்டும். வீட்டிலும் வைத்துக்கொள்ளலாம். காசியிலும் கங்காதீர்த்தம் பிடித்து வந்து வைத்துக் கொள்ளலாம். கங்காதீர்த்தம் வீட்டில் இருப்பது நன்றாகும்.
   காசி யாத்திரை முடியும் தருவாயில் இராமாநுஜர் உலகுக்கு திருமந்திர உபதேசம் செய்த திருகோஷ்டியூர், இராமர் சீதையை தேடும்முன் வணங்கிய தேவிபட்டிண-நவகிரக தலம், சயனம் கொண்ட திருப்புல்லாணி,சேது அணைகட்டிய சேதுக்கரை மற்றும் தனுஷ்கோடி போன்ற புண்ணிய தலங்களையும் தரிசித்து, இராமநாதர் சந்நதி தீர்த்தமாடி, இறுதியாக இராமநாதருக்கு கங்கா ஸ்நானம் செய்வது நன்று.
  1. திருக்கோஷ்டியூர்- சௌவுமிய நாராயணர்

     சௌவுமிய நாராயணர்: சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு “பிரார்த்தனை கண்ணன்’ என்று பெயர்.
AG-2     மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.
      தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். “ஓம்’, “நமோ’, “நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.
      விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சௌவுமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் நாராயணர்(தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில்பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.
    திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.
      ராமானுஜருக்கு உபதேசம்: இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார்.
AG-4     நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, “நான் செத்து வா!’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், திருக்கோஷ்டியூர் நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் “அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, “ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார்.
AG-3   கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி “நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.
    ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே திருக்கோஷ்டியூர் நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு “கல்திருமாளிகை’ என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.
    பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர்.
    தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதாலும்,தேவர்கள்கோஷ்டிகளாக கூடி இரண்யவத ஆலோசனை செய்தமையாலும் ” திருக்கோஷ்டியூர் OR திருக்கோட்டியூர்’ என்றும் பெயர் பெற்றது.
    மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது.
  1. தேவிப்பட்டிணம்

    இது இராமநாதபுரத்திற்கு வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள சிற்றுர். நவகிரகங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்கள் இவ்வூர் கடலுக்குள் இருப்பதால் இவ்வூரை ‘நவபாசனம்’ என்று அழைக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தென்னம் பண்ணையும், பழத்தோட்டங்களும் இங்கு உள்ளன.
    AG-5                தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள்உள்ளன.  பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.
    AG-6
  1. திருப்புல்லாணி-ஆதிஜெகன்னாத பெருமாள்

   ராமநாதபுரத்துக்கு, தென்கிழக்கே 8 கி.மீ. தூரத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தலம் ஆதிஜெகநாத பெருமாள் கோயில்.
AG-8      இராமநாதபுரம் அருகே உள்ள மிக சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலம் இந்த திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோவில். தசரதர் இங்கு வேண்டிக்கொண்ட பிறகுதான் இராமரே பிறந்தார்.
   திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர்.
    அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் முதன் முதலில் இங்குதான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய 3 முப்பெருமைகளை உடையது.
    இலங்கை மீது படையெடுக்க கடலைத் தாண்டிச் செல்ல, ஒரு அணையைக் கட்டி அதன் வழியே சென்றிட ஸ்ரீராமர் திட்டமிட்டபோது, அனுமதி வேண்டி கடலரசனுக்காகக் காத்திருக்க நேரிட்டது. அப்போது, தருப்பை புல்லணை மீது அவர் சயனித்திருந்தார்.
AG-9     தருப்பை புல் அணை என்பது, நாளடைவில் திருப்புல்லாணி என மருவியதாக பெயர்க்காரணம் கூறுவர்.
     சயன ராமன்:சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
    சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
     மனைவியுடன் கடலரசன்: ராமர், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டியபோது, கடல் அரசன் முதலில் அவர் முன் தோன்றவில்லை. எனவே, ராமர் கடல் மீது பாணம் எய்ய முயன்றார். இதனால் பயந்துபோன கடலரசனான சமுத்திரராஜன், மனைவி சமுத்திர ராணியுடன் தோன்றி அவரை சரணடைந்தான்.
       மர வடிவில் மகாவிஷ்ணு: பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில், “மரங்களில் நான்அரசமரமாக இருக்கிறேன்’ எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரச மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சன்னதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.
     பட்டாபிராமன்:சீதையை மீட்டு ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த ராமர், இங்கு  சுவாமியைத் தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, லட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சன்னதியில் காட்சி தருகிறார்.
      ராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். ராமன், அந்த பாணத்தை பிரயோகித்து ராவணனை அழித்தார். இதன் அடிப்படையில் எச்செயலையும் துவங்கும்முன்பு, ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்கிறார்கள்.இந்த சுவாமிக்கு, “வெற்றி பெருமாள்’ என்றும் பெயருண்டு. ராமர் வழிபட்டதால் இவர் “பெரிய பெருமாள்’ என்றும் பெயர் பெறுகிறார்.
    புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோயில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகம் மகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார்.
AG-7      அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம்.
         ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
        மூன்று மூலவர் சந்நிதிகள் உள்ள ஆலயம்: இத்திருக்கோயிலில் 3 முலவர்களுக்கும், தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன.
       அருள்மிகு ஆதிஜெகநாதர் (அமர்ந்த கோலம்) ஸ்ரீதர்ப்பசயனராமர் (சயனக் கோலம்) ஸ்ரீபட்டாபி ராமர் (நின்ற கோலம்) ஆகிய 3 முலவர்களுடன் அருள்பாலிக்கும் தலம்.
       விபீஷணன், சமுத்திரராஜன், சுகஸ்தாணன் போன்றவர்கள் சரணாகதி அடைந்த இடமாதலால், இதற்கு சரணாகதி ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.
AG-10    ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர்(நின்ற கோலம்), அரசமரப் பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.
     இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். பெருமாளுக்கே அருள் புரிந்ததால் பெரிய பெருமாள் என்றும் வெற்றிப் பெருமாள் என்றும் அழைக்கபடுகிறார்! ராமர் சன்னிதிக் கருவறையில் அனுமனும், சேஷன் லக்ஷ்மணன் ஆகவும் ஸ்ரீராமனுடன் தரிசனம் தருகின்றனர்!
  1. சேதுக்கரை

திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார்.
AG-11     சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார்.
இங்குள்ள கடல், “ரத்னாகர தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. சித்திரை, பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சுவாமி இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். அமாவாசை நாட்களில் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.
  1. தனுஷ்கோடி

       இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரியத் துனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.
    அக்னி தீர்த்தம் என்ற ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது.
    ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது.
     புயலுக்கு பின்னர், அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன.
      தனுஷ்கோடி அழிந்த பிறகு, ராமேஸ்வரம்-ராமநாதர் கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதுர் கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.
      இலங்கையுடன் கடல்வாணிபம் புரியத் துனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது
      1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது.
  • தனுஷ்கோடியை புயல் தாக்கிய அதே நேரத்தில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரப்புயல் வீசியது.
  • அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது. தற்போது புதிய தனுஷ்கோடி உருவாக்கப்படுகிறது.
  • இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம்.
  • தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது.
    AG-18         தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைப்பது “பாம்பன் பாலம்.” இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும். இந்த அதிசயப் பாலம், பலத்த சேதம் அடைந்தது.
      பாம்பன் பாலம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதை, 1914ம் ஆண்டில், தென் இந்திய ரெயில்வே தலைமை என்ஜினீயராக இருந்த ஒசன்சே என்ற வெள்ளைக்காரர் அமைத்தார். இந்தப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம்தான் ராமேசுவரத்துக்கு போகவேண்டி இருந்தது.
     இந்தப்பாலம் 6,700 அடி நீளம் கொண்டது. இதை அமைக்க 2,600 டன் இரும்பு செலவாயிற்று. கட்டி முடிக்க 1 ஆண்டு பிடித்தது. முன் காலத்தில், ராமேசுவரம் தனித்தீவாக இருக்கவில்லை. தமிழ்நாட்டுடன் சேர்ந்தே இருந்தது.
    1573ம் ஆண்டில் பெரும் புயல் அடித்து, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டபோது ராமேசுவரம் பகுதி துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறிவிட்டது. அதன்பின், பாம்பன் பாலம் கட்டப்படுகிறவரை, படகு மூலமாகவே மக்கள் ராமேசுவரம் போய் வந்தார்கள்.
  வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம்தனுஷ்கோடி:-AG-13அமைதியான வங்கக் கடல்:-
AG-14ஆர்பரிக்கும் இந்துமகா சமுத்திரம்:-
Untitled            இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக நம்புகின்றனர்.
Snanam         வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்றனர். (வில் = தனுஷ்)

AG-166.கோதண்டராமர் கோயில்

      இங்குள்ள கோதண்டராமர் கோயில் ராமேஸ்வரத்திலிருந்து 12 கி. மீ., தொலைவில் உள்ளது.
AG-19      விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினான். ராவணன் அதை ஏற்க மறுத்ததுடன், வீடணனை காலால் மிதிக்கச் சென்றான். இதனால் வெறுப்புற்ற வீடணன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைந்தான்.
AG-20     வீடணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். வீடணனை பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும். இக்கோயிலில் ராமபிரான் அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.
          இராமர்,லஷ்மணனைக் கொண்டு விபீஷணனுக்கு கடல் நீரால் இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்த தலம்
  1. நம்புநாயகி அம்மன்

    இராமேஸ்வரத்திலுள்ள நம்பு நாயகி அம்மன் கோவில் பெருமதிப்பு பெற்ற கோவிலாகும். இராமேஸ்வரத்தின் முக்கிய கோவிலில் இருந்து 8 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இராமநாதசுவாமி கோவிலில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ளது.
     ஒவ்வொரு வருடமும் தசரா திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 14-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை, இராமநாதபுரத்தை சேர்ந்த உள்ளூர்வாசிகளே கட்டியுள்ளனர்.
      இந்த கோவிலின் பெரிய மணிகளிலிருந்து எழும் மகிழ்ச்சியைத் தூண்டும் புனித ஒலி இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்வூட்டும்.
AG-21
            கோவிலை சுற்றிலும் நல்ல நீர் உள்ள தடாகங்கள், பல்வேறு நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையதாக இருப்பது அதிசயம். உள்ளது. இங்கு தீராத நோய் உற்றோர், மனநலம், பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கி தீர்த்தத்தில் நீராடி அம்மனுக்கு சாத்திய மஞ்சள் காப்பு பிரசாதத்தை உண்டு குணமடைந்தோர் அதிகம் உண்டு.
       குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் கன்னிப்பெண்களும், கணவனால் கை விடப்பட்ட பெண்களும் இங்கு விரதமிருந்து, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நம்புநாயகி அம்மனை வழிபட பிராத்தனை பலிக்கும் என்பது நம்பிக்கை.
        இந்த தலத்தில் தட்சிணத்துருவன்பச்சிமத்துருவன் என்ற இரண்டுமுனிவர்களும் கடுமையான தவத்தின் காரணமாக பார்வதி தேவி பிரத்தியட்சமாகி, காளி வடிவில் தோன்றினாள். இரு முனிவர்களும் ஆனந்தம் கொண்டு, தெற்கு முகமாக காட்சி அளித்த தஷிணா காளியை வழிபட்டு, இந்த பகுதி பிணியுற்ற மக்களுக்கு வைத்தியம் செய்து இங்கேயே தங்கி விட்டனர். பின்பு சமாதி நிலை அடைந்து விட்டனர். ராமேஸ்வரம் இலங்கை மன்னரின் ஆளுகையில் இருந்த பொழுது ,அந்த மன்னனுக்கு தீராத நோயுற்று எந்த மருத்துவமும் பலன் அளிக்கவில்லை. இந்த காளி கோவிலுக்கு வந்து மிகுந்த நம்பிக்கையோடு இங்கேயே சிறிய குடில் அமைத்து காளியை வழிபட்டு நன்னீர் தடாகங்களில் நீராடி பூரண சுகம் பெற்றான். தனது செயலை எண்ணி நகையாடியவர்களைப் பார்த்து, “நம்புநாயகியை வணங்கினால், வம்பில்லை” என்று கூறினான். அவனே இந்த கோவிலையும் நிர்மாணித்தான்.
       ராமேஸ்வரத்தின் ராமநாதர் கோவிலுக்கு அடுத்ததாக அனைவராலும் வணங்கப்படும் கோவில் இது. இவ்வூரில் உள்ள பெரும்பாலானோர் பெயர்கள் நம்பு என்ற பெயருடன் சேர்த்துதான் இருக்கும்.
        ராமேஸ்வரம் சிங்களர்களின் பிடியில் இருந்தபோது சூலோதரன் என்ற சிங்கள மன்னன் இந்த தீவின் வடக்கு பகுதியில் உள்ள உயரமான மண் குன்றில் கோட்டை ஒன்றை அமைத்து ஆட்சிசெய்து வந்தான்.
      அந்த மன்னனுக்கு தீராத நோய் கண்டு எந்த மருத்துவமும் பயனளிக்காத நிலையில் காளியின் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். உடன் இருந்த சகோதரர்கள், அமைச்சர்களின் கேலிப்பேச்சுக்கு இடையில் மிகுந்த நம்பிக்கையுடன் காளியே கதி என்று முடிவு செய்த சூலோதரன் காளிஅம்மன் வீற்றிருந்த குடிசையின் அருகிலேயே ஒரு சிறிய குடிலை அமைத்து அங்கேயே தங்கினான்.
   மராட்டிய பிராமணர்களின் குலதெய்வமாக விளங்கும் நம்புநாயகியின் திருப்பெயரை இந்த பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர்.
இங்குள்ள இத்தல-ஆலமரம் மிகவும் பிரசித்திப் பெற்றது
AG-22   இப்படியாக இராமேஸ்வரத்தில் துவங்கி இராமேஸ்வரத்தில்முடிகிறது காசி யாத்திரை.
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

காசியில் பார்க்க வேண்டிய இடங்கள்

  1. துண்டிவிநாயகர்
  2. விஸ்வநாதர் கோயில்
  3. விசாலாட்சி அம்மன் கோயில்
  4. அன்னபூரணி-கோயில் (பிட்சாடனர்).
  5. கால பைவரவர் கோயில்
  6. அனுமார் கோயில்-எதிரில் ராம-லஷ்மண-சீதை சந்நதி-பிரகாரத்தில் ஆலமரம்
  7. துர்கை கோயில்
  8. சோழியம்மன் கோயில்
  9. துளசி மானஸ மந்திர் (SANKATMOCHAN TEMPLE)- ராமாயண-மகாபாரத காவியங்கள் பொம்மலாட்டமாக சித்தரிப்பு.
    39
  10. சாரநாத்
  11. இந்து பனாரஸ் பல்கலைக்கழகம்- விஸ்வநாதர் கோயில்
  12. வித்தியா பீடம்
  13. பாரதீய கலா பவன்
  14. ஜந்தர் மந்தர்
  15. பாரதமாதா கோயில்
  16. பஞ்சதீர்த்த ஸ்நானம்: 1.அஸ்சங்கமம்; 2.தசாஸ்வமேதம்;3.வரணசங்கம்; 4.பஞ்சகங்கா; 5.மணிகர்ணிகா.
  17. “அரிச்சந்திர காட்.
  18. இரவு30 மணி விசுவநாதர் சந்நிதியில் சப்தரிஷி பூசை.
  19. அநுமான் காட்
  20. ஸ்ரீசங்கரமடம்;
  21. கேதார் காட்
  22. திருப்பனந்தாள் குமாரசாமி-ஸ்ரீகாசி மடம்.AG-23

    ஓம் நமோ நாராயணாயாஓம் நமசிவாயா

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
  • Please click the LINK below to go to CONTENTS for all the Articles in HRE:










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக