புதன், 21 அக்டோபர், 2015

HRE-10: நாதமுனிகள்

ராதே கிருஷ்ணா 22-10-2015HRE-10: நாதமுனிகள்


ஓம் நமோ நாராயணாய

     ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாடி, நமக்கு நல்கிய நாதமுனிகள்-நமக்கு குலதெய்வம்
 1. ஆசார்ய பரம்பரை

    ஸ்ரீவைணவ ஆசார்ய பரம்பரை, பெருமாள்பிராட்டிவிஷ்வக்சேனர்,நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்து வருவது. முதல் மூவர் பரமபதத்தில் உள்ளவர்கள்.இவ்வுலகில், நம்மாழ்வார் ‘ஆழ்வார்’.ஆகவே, நம்மாழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற நாதமுனிகள்முதலாசார்யர் எனக் கொள்வது வைணவ மரபாகும்.
 1. நாதமுனிகள்(திருவரங்கநாதன்) அவதாரம்

       நாதமுனிகள் கிபி 824 ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; ஆனி மாதம், அனுச நட்சத்திரம் ; பௌர்ணமி திதி புதன் கிழமையன்று சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர் அம்சமாகதிருவரங்கநாதன் என்னும் இயற்பெயருடன் பிறந்தவர்.
நாதமுனிகள் யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவரை திருவரங்கநாதமுனிகள் என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று.
 1. நாதமுனிகள் யாத்திரை-எம்பிரான் மீண்டும் வீரநாராயணபுரம் வருமாறு அழைப்பு

       தம் தந்தை ஈச்வரபட்டரரோடும் குமாரர் ஈச்வர முனிகளோடும் குடும்பத்தோடு வடநாட்டு யாத்திரை சென்றார் இவர். பல வைணவத் திருத்தலங்களைப் பார்த்துப் பாடிப் பரவசமடைந்து ஸ்ரீகோவர்த்தனபுரம் என்னும் கிராமத்தில் ‘யமுனைத் துறைவன்‘ பகவான் திருத்தொண்டால் மகிழ்து சில ஆண்டுகள் தங்கியிருந்தார்.ஒரு நாள், காட்டுமன்னனார் (வீரநாராயணபுரம்) கோயிலில் திருவருள் புரியும் எம்பிரான் நாதமுனிகள் கனவில் தோன்றி மீண்டும் வீரநாராயணபுரத்திற்கே வருமாறு அழைத்தார்.
     இறைவனின் திருவுளப்படி, வீரநாராயணபுரம் திரும்பிய நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர், திருவிளக்கு கைங்கரியம், கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று இறைத் தொண்டு செய்து வந்தார். அவ்வாறு செய்து வருகையில் ஒருநாள், திருக்குடந்தை ஆராவமுதன் (சார்ங்கபாணி) கோயிலுக்கு புனிதயாத்திரை வந்த சில வைணவர்கள்,
ஆராவமுதேஅடியேனுடலம் நின்பால் அன்பாயே
 நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
 சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை
 ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்கண்டேன் எம்மானே!
……………………………….
திருவாய்மொழி 5-8-1
என்னும் பாடலில் தொடங்கி,
உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்
கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே
……………………………
திருவாய்மொழி 5-8-10
என்னும் பாடல் முடிய பத்து பாடல்களையும் பாடினர்.
    அவற்றைக் கேட்ட திருவரங்க நாதமுனிகள், அப்பாடல்களில் தன்னை மறந்தார். அவர்களிடம், ”நீங்கள் கடைசியாகப் பாடிய பாட்டில், ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருகிறதே, அப்படியென்றால், உங்களுக்கு அந்த ஆயிரம் பாடல்களும் தெரியுமா?” என்று வினவினார்.அவர்கள், எங்களுக்கு இந்த பத்து பாடல்கள் மட்டுமே தெரியும்” என்று பதிலளித்தனர்.
 1. நாதமுனிகள் திருக்குருகூர் விஜயம்

    அப்பாடலில் ”குருகூர்ச்சடகோபன்” என்று வருவதால், அவர் திருக்குருகூர் சென்று விசாரித்தால் அவற்றைப் பற்றி அறிய இயலும் என்று திருக்குருகூர் சென்றார்.
    அங்கு எவரும் இதைப்பற்றி அறியவில்லை. இறுதியில், அவர்மதுரகவியாழ்வாரின் சீடனான பராங்குசதாசரை சந்தித்து அவரிடம் இதைப்பற்றி விசாரிக்கையில், அவர், ” திருவாய்மொழியும், பிரபந்த பாடல்களும் சில காலம் முன்னமேயே மறைந்துவிட்டன, தம் குருவான மதுரகவியாழ்வார் தமக்களித்த ”கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் பிரபந்தம் மட்டும் தம்மிடம் இருப்பதாகவும் அந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி, வேண்டுவன அருளுவார்” என்று பதிலளித்தார்.
    அதைக்கேட்ட நாதமுனிகள், மிகுந்த உவகையுடன், பராங்குசதாசரிடம், கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை உபதேசமாகப் பெற்று, நேரே ஆழ்வாரின் திருப்புளியமரத்திற்குச் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார்.பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடல்களை ஒருமுகமாய் ஓதினார்.
 1. நம்மாழ்வார் தரிசனம்-நாதமுனிகளுக்கு திவ்யப் பிரபந்தத்தை அளித்தல்

    இதனால் அகம் மகிழ்ந்த நம்மாழ்வார், அசரீரீயாய்த் தோன்றி நாதமுனிகளின் வேண்டுதலை வினவினார். நாதமுனிகளும், திருவாய்மொழியுடன் மற்ற பிரபந்த பாடல்களையும் அடியேனுக்கு அருளுமாறு வேண்டினார்.”
    நம்மாழ்வார், நாதமுனிகளின் முன் தோன்றி, பிரபந்தத்தின் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோகஇரகசியங்களையும் அருளினார்.
    அவற்றைப் பெற்றபின்பும் நாதமுனிகள் யோகசமாதியிலேயே நிலைத்திருந்தார். மீண்டும் காட்டு மன்னனார் பெருமாள், அவரை திரும்ப வருமாறு அழைக்கவே மீண்டும் வீரநாராயணபுரம் புறப்பட்டார்.
    ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள்‌அனைவரும் பாடிய பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்து முறைப்படுத்தி மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற இரு அக்காள் மகன்களை (மருமக்களை) திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார். இவர்களிருவரும் தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன் முன் பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர்.
***திருக்குடந்தை ஆராவமுதன் (சாரங்கபாணி) திவ்ய தேசம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திவ்ய தேசத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிற்கு கிடைக்கும் வழியை நாதமுனிகள் பெற்றார்.
   பின்னர் ,மணவாள மாமுனிகள்நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அருளினார்.

நாலாயிர திவ்யபிரபந்தம்:-

முதல் ஆயிரம்-947
பெரியாழ்வார்: திருபல்லாண்டு -12
பெரியாழ்வார் : பெரியாழ்வார் திருமொழி -461
ஆண்டாள்: திருப்பவை -30 (வேதங்களுக்கு வித்து)
ஆண்டாள்: நாச்சியார் திருமொழி -143
குலசேகர ஆழ்வார்: பெருமாள் திருமொழி -105
திருமழிசை ஆழ்வார்: திருச்சந்த விருத்தம் -120
தொண்டரடிபொடி ஆழ்வார்: திருமாலை -45
தொண்டரடிபொடி ஆழ்வார்: திருப்பள்ளி எழுச்சி -10
திருபாணாழ்வார்: அமலனாதிபிரான் -10
மதுரகவி ஆழ்வார்: கண்ணிநுண் சிறுதாம்பு -11
இரண்டாம் ஆயிரம்-1134
திருமங்கை ஆழ்வார்: பெரிய திருமொழி -1084
திருமங்கை ஆழ்வார்: திருக்குறுந்தாண்டகம் -20
திருமங்கை ஆழ்வார்: திருநெடுந்தாண்டகம் -30
மூன்றாம் ஆயிரம்-709
பொய்கை ஆழ்வார்: முதல் திருவந்தாதி -100
பூதத் ஆழ்வார்: இரண்டாம் திருவந்தாதி -100
பேயாழ்வார்: மூன்றாம் திருவந்தாதி -100
திருமழிசை ஆழ்வார்: நான்முகன் திருவந்தாதி -96
நம்மாழ்வார்: திரு விருத்தம் (ரிக் வேதசாரம்)-100
நம்மாழ்வார்: திரு வாசிரியம் (யஜுர் வேதசாரம்)-7
நம்மாழ்வார்: பெரிய திருவந்தாதி (அதர்வண வேதசாரம்)-87
திருமங்கை ஆழ்வார்: திருவெழு கூற்றருக்கை -1
திருமங்கை ஆழ்வார்: சிறிய திருமடல் -40
திருமங்கை ஆழ்வார்: பெரிய திருமடல் -78
நான்காம் ஆயிரம்-1210
நம்மாழ்வார்: திருவாய் மொழி (சாம வேதசாரம்)-1102
திருவரங்கத்தமுதனார்: ராமானுஜ நூற்றந்தாதி(பிரபந்த-காயத்ரி)-108
Please refer HRE-7, click the LINK below for a Pasuram in each title
HRE-7: நாலாயிர திவ்ய பிரபந்தம்: முதல் பாடல்கள்:6-2-2015https://drdayalan.wordpress.com/2015/02/06/hre-6
 1. அரையர்கள்

    நாலாயிரம் பாசுரங்களை ராகத்துடனும் தாளத்துடனும் அபிநயத்துடனும் பாடிய இவர்களின் வழித்தோன்றல்களே “அரையர்கள்” என அழைக்கப்பட்டனர். “அரையர் ” என்ற சொல்லுக்கு  “தலைவர்” என்று பொருள். அவர்கள் செய்யும் திவயப்பிரபந்த சேவையே “அரையர்சேவை” என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீமந் நாராயணனை திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைக் கொண்டு அபிநயத்துடன் பாடுவதில் தலைசிறந்தவர்கள் என்பதைக் குறிக்கும் பொருட்டு “தலைவர்கள்” என்ற பொருள்படும்படி “அரையர்க்ள்” எனபட்டனர். ”
 1. நாதமுனிகள் அருளிச்செய்த பெரியாழ்வார்தனியன்

      நாதமுனிகள், திவ்ய பிரபந்த வரிசையில், முதல் பாசுரத்தை அருளியபெரியாழ்வார், மற்றும் தனக்கு திவ்ய பிரபந்தத்தை அளித்த-திவ்ய பிரபந்தத்தை அருளிய மதுரகவியாழ்வார் ஆகியோர் பாடல்களுக்குத்தனியன்கள் பாடியுள்ளார்.
குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷான்
நரபதி – பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:
ஸ்வஸுர மமவரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.
    குருவின் மூலம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் அனைத்துவேதங்களையும் குறைவின்றி அறிந்துமக்கள் தலைவனானபாண்டியன் கட்டிவைத்த பொற்கிழியை அடைந்ததேவர்களால்வணங்கப்பெறும் திருவரங்கனுக்கு மாமனாரானவேதியர் குலத்திலகமானவிஷ்ணுசித்தராம் பெரியாழ்வாரை போற்றுகிறேன்.     
 1. நாதமுனிகளின் சீடர்கள்

***உய்யக்கொண்டார் (திருவெள்ளறை புண்டரிகாட்சன்)
***குருகைக் காவலப்பன்
*கீழையகத்தாழவான்
*மேலையகத்தாழ்வான்
*திருகண்ணமங்கையாண்டான்
*பிள்ளை கருணாகரதாசர்
*நம்பி கருணாகரதாசர்
*ஏறுதிருவுடையார்
*வானமாமலை தெய்வநாயக ஆண்டான்
*உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை
*சோகத்தூர் ஆழ்வான் .
    இவர்களில் இருவர் மிக முக்கியமானவர். 1) புண்டரீகாட்சர் என்ற உய்யக் கொண்டார் 2) குருகைக்காவலப்பர்.
    குருகைக்காவலர் எனக்கு யோகத்தையே உபதேசியும்” என்று வாங்கிக் கொண்டார். அவரிடம், “”என் பேரன் யமுனைத்துறைவன் (ஆளவந்தார்) வருவான். அவனுக்கு யோக வித்தையை நீ உபதேசிக்க வேண்டும்” என்று கூறியனுப்பினார் நாதமுனிகள்.
    புண்டரீகாட்சரை அழைத்து “யோகமா, வேதாந்தமா? எது உமக்கு வேண்டும்?” என்று நாதமுனிகள் கேட்டார். மக்களை அறியாமைப் படுகுழியிலிருந்து விடுவித்து இறைவன் திருவடியில் சேர்ப்பிக்கும் திருவாய்மொழி திவ்யப் பிரபந்த ஞானமே வேண்டும்” என்று கேட்டார்.
    ஆகா! மக்களை உய்விக்கவந்த “உய்யக் கொண்டாரே’ என்று நாதமுனிகள் அழைக்க, புண்டரீகாட்சர் ‘உய்யக் கொண்டார்‘ ஆனார், அவரிடம் “ரகசியம் வெளியிடாதீர்” என்று கூறி, என் அந்திம தசைக்குப் பிறகு, பிறக்கப் போகும் என் பேரன் யமுனைத்துறைவனிடம் வேதாந்த என்றதையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
    உய்யக்கொண்டாரும் (ஆளவந்தார் தக்க நேரத்தில் பிறக்காததால்) தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால்நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்
 1. நாதமுனிகள் பக்திப் பிரேமை

    ஒரு சமயம் வீரநாராயணபுரம் அருகில் இருந்த காட்டில் வேட்டையாடி விட்டு அரசன், அரசி ,அமைச்சர் வேலையாட்களுடன் நாதமுனிகளைப் பார்க்க வந்தபோது நாதமுனிகள் சமாதியில் இருந்தார். அவர் பெண்ணிடம் தான் வந்ததாகச் சொல்லி விட்டு அரசன் சென்றான். யோகநிலை விட்டு ஸ்ரீமந்நாதமுனிகள் எழுந்ததும் அவர் பெண், அரசன் வந்ததை விவரித்தாள். கையில் வில், அம்பு, தலையில் கொண்டையிட்டு இரு ஆடவர், ஓரிளம்பெண், கூட ஒரு குரங்கு என்று சொல்ல, ஸ்ரீராமனே தம்பி இலக்குவன், சீதாபிராட்டி , ஆஞ்சநேயருடன் வந்திருக்கிறார் என்று பக்திப் பிரேமையால் அவர்கள் போன திசையில் ஓடினார். குரங்குக் காலடித் தடம் கண்டாராம். அவ்விடம் “குரங்கடி’ எனப் பெயர் பெற்று இன்றும்  இருக்கிறது.
    எங்கும் ஸ்ரீராமரைக் காணாமல் பல இடங்களிலும் அலைந்து பரமபதித்து விட்டார். “வைகுந்தம் சென்றேனும் அவர்களைக் கண்டு வருவேன்’ என்றே மூச்சை விட்டாராம்.அப்போது அவர் வயது 93,  (917 ல், தாது ஆண்டு, மாசி மாதம், சுக்லபட்ச ஏகாதசி அன்று திருநாடு அலஙகரித்தார்). இவர் யோகசீடர் குருகைக்காவலப்பர் அந்த இடத்திலேயே தம் 70 ம் ஆண்டு கடைசி தினம் வரை யோகத்தில் இருந்தார்.
 1. நாதமுனிகள் இயற்றிய நூல்கள்

    யோக மார்க்கத்தை  பிரதானமாக ஸ்ரீமந் நாதமுனிகள்   நியாயதத்வம், புருஷநிர்ணயம் மற்றும்  யோகரஹஸ்யம்  என்று மூன்று நூல்களை இயற்றினார்.
 1. கம்ப இராமாயண அரங்கேற்றத்தில்நாதமுனிகள் தலைமை ஏற்றல்

    இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந் நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி எதிரிலுள்ள மணடபத்தில் அரங்கேற்றினார்.
 1. ஆளவந்தார் அவதாரம்

      நாதமுனிகள்தம் குமாரர் ஈச்வரமுனிகளிடம் “உனக்கு ஒரு மகன் பிறப்பான். என் பேரனான அவனுக்கு ‘யமுனைத் துறைவன்‘ எனப் பெயர் வை” என்றும் உணர்த்தி வைத்தார்.
ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யமுனைத்துறைவர்(யாமுனமுனிகள் என்றஆளவந்தார்) . தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.
உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்.
***பெருமாள் கோவில்களில், பன்னிரு ஆழ்வார்களையும்,ஆச்சாரியரகள் வரிசையில் குறிப்பாக நாதமுனிகள், ஆளவந்தார், இராமாநுஜர், மணவாளமுனிகளையும் காணலாம்.
———————###—————HRE-10:நாதமுனிகள்
NOTE-Contents for Articles published on 01, June, 2015

HRE-14:திருவல்லிக்கேணி- 

ஸ்ரீ பார்த்தசாரதி


  திரு+அல்லி+கேணி=திருவல்லிக்கேணி. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர். மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசம்

    சுமார் 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.

     கும்பாபிஷேகம் 1975, 1992 மற்றும் 2004–ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் 12-6-2015 (7-8am)

Parthasarathy-1
வடக்கு வாசல்

கோவில் அமைப்பு

     கோயில் ராஜகோபுரம், ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள், பலிபீடம், கொடிமரம். பின்னர், துவஜாரோகண மண்டபம். இவைகளையும் கருடாழ்வார் சந்நதியையும் தாண்டி உள்ளே நேராகச் சென்றால் ஓங்கி உலகளந்தப் பெருமாளான பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம்.
Parthasarathy-2
சந்நதி கோபுரங்கள்

      நான்கு மாட வீதிகளைச் சுற்றிலும் வைணவர்களுக்கான அஹோபில மடம், வானமா மலை மடம், மாத்வர்களின் உத்திராதி மடம், வியாசராஜமடம், ராகவேந்திர மடம் என கிருஷ்ணனைப் போற்றிய பக்தர்களின் மடம்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்:வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லாமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.
Parthasarathy-3
கோவில் குளம்
      இக்கோயிலில் உள்ள குளத்தில் மஹரிஷி ப்ருகுவிற்கு, ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரே, ஸ்ரீ வேதவல்லியாக பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த குளத்தில் ஐந்து கேணிகள் உள்ளதாகவும், எப்பொழுதும் அல்லி பூக்கள் நிறைந்து இருந்தது என கூறப்படுகிறது. இதனாலேயே இந்த ஷேத்திரம் திருவல்லிக்கேணி என வழங்கப்படுகிறது.இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.

 

Parthasarathy-4
மூலவர்-சந்நதி

மூலவர்பார்த்தசாரதி

        மூலஸ்தானத்தில்-கண்ணன் குடும்பம்வேங்கடகிருஷ்ணன்-வெள்ளை மீசையுடன், வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, இடுப்பில் கத்தி சலக்கிராம மாலை ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சி-அருகே ருக்மணி தேவி.
       கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக, இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையைதந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார்.
      இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.
ருக்மணி தேவியின் வலப்பக்கம்:கலப்பையோடு பலராமர்.
பார்த்தசாரதி இடப்பக்கம்:
தம்பி-சாத்யகி,அவருக்கு அருகே தெற்கு நோக்கி                            மகன்பிரத்யும்னன்,
பேரன்-அநிருத்தனன்.
    இப்படி குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும்தான். மற்ற இடங்களில் பெருமாள் தனியாகவோ அல்லது பிராட்டியுடனோதான் நமக்கு தரிசனம் தருவார். ஆனால், திருவல்லிக்கேணி தரிசனமே வேறு, தனிச் சிறப்புடையது.

உற்சவர்:

பார்த்தசாரதி, ஸ்ரீ தேவி-பூதேவி
Parthasarathy-5
உற்சவர்

பிற சன்னதிகள்

ஸ்ரீவேதவல்லி தாயார்:
       அத்ரி முனிவர், மார்க்கண்டேயர், பிருகு, ஜாபாலி போன்ற மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கும் பிருந்தாரண்யம் என்று சொல்லப்படுகிற திருவல்லிக்கேணியில், ஒரு சந்தன மரத்தடியில் அழகிய பெண் குழந்தையாகத் தோன்றுகிறாள் லட்சுமி. லட்சுமியைக் கண்ட பிருகு முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை தனது மனைவியிடம் கொடுத்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.
   பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணன், பூலோகம் வருகிறார். பிருந்தாரண்யத்தில் மனைவியை வேதவல்லி என்கிற பெயருடன் காண்கிறார். பிருகு முனிவரிடம் தான் யார் என்கிற ரகசியத்தைச் சொல்ல, முனிபுங்கவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரானையும், பிராட்டியையும் சேர்த்து வைக்கிறார்கள். திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார்
யோக நரசிம்மர்:
         இவர் யோகத்தில் இருப்பதால் பக்தர்கள் மவுனமாக செல்ல வேண்டும்.இவர் கருவறையில் நாதம் எழுப்ப வேண்டிய மணிக்குக் கூட நாக்கு கிடையாது!
       அமர்ந்த நிலையிலுள்ள தெள்ளிய சிங்கப் பெருமாள் எனும் யோக நரசிம்மனாக பிரகலாதனுக்கு கிருத யுகத்தில் தரிசனம் தந்த கோலம், கோயிலின் பின்புற சந்நதியில் அமைந்துள்ளது. இதிலும் ஓர் அற்புதம் இருக்கிறது.
யோக நரசிம்மர் சந்நதியிலிருந்து வெளியே தெருவிற்கு வந்தால், பிரகலாதனாக முன் ஜென்மத்தில் இருந்த ராகவேந்திர சுவாமிகள்,பிருந்தா-வனஸ்தராய் காட்சி தருகிறார்.
      இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் , மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன.
நின்ற நிலையில் அருள்பாலிக்கும் வேங்கட கிருஷ்ணன் எனும் பார்த்தசாரதி, அமர்ந்த நிலையில் யோக நரசிம்மராகவும், படுத்த நிலையில் ரங்கநாதராகவும் மூன்று சந்நதிகளில் நமக்குத் தனித்தனியே தரிசனம் தருகிறார்.
         பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன.
          நின்ற நிலையில் காட்சி தரும் வேங்கட கிருஷ்ணனை எதிர்த் தெருவிலுள்ள மகான் வியாசராஜர் பிருந்தாவனத்திலிருந்தபடியே வணங்கிக் கொண்டிருக்கிறார்.வியாசராஜர் த்வைத சித்தாந்தம் கொண்ட மகான். இவர் கிருஷ்ண தேவராயரின் குரு.

பிரகாரத்தில்

    பிரகாரத்தில் கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார். எனவே இவரை, “நித்திய கருடசேவை சாதிக்கும் பெருமாள்’ என்று அழைக்கின்றனர். திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.
ஐந்து மூலவர் ஸ்தலம்:
       பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில்ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும்யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், “பஞ்சமூர்த்தி தலம்’ என்றழைக்கப்படுகிறது.
               ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் “”என்னவரே!” என்ற பொருளில், “”ஸ்ரீமன்நாதா!” என்றழைத்தார். எனவே இவருக்கு “ஸ்ரீமன்நாதர்’ என்ற பெயரும் உண்டு.
        கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.

தல விருட்சம்: மகிழம்

தீர்த்தம்: கைரவிணி புஷ்கரிணி

தல வரலாறு

         சுமதி என்கின்ற மன்னன் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு . ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டுமென்று பெருமாளை கேட்டுக் கொண்டான்.
         சுமதி மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள் பிருந்தாரண்யம் என்ற துளசிக்காடு(பிருந்தா-துளசி,ஆரண்யம்-காடு)- (திருவல்லிக்கேணி) இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் தான் காட்சி அளிப்பதாக கூறினார்.சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான்.பின் கோவிலும் எழுப்பியதாக வரலாறு.
            ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செய்தி உண்டு.
         இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள். பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு.
இராமாநுஜர் திருஅவதாரம்
     பெரிய திருமலை நம்பிகள் (ஸ்ரீசைலபூரணர்) என்பவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். மூத்த காந்திமதி அம்மையார் (பூமிபிராட்டி), ஸ்ரீபெரும்பந்தூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாளுக்கும், இளையவரான பெரியபிராட்டியை மதுரமங்கலம், கமலநயன பட்டர் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
     திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாள், இல்லத்தில் இளைப்பாறி வருவது வழக்கம். சிலகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருந்த கேஸவப்பெருமாள் ஒருநாள் தன் மனக்குறையை நம்பிகளிடம் பகிர்ந்துகொண்டர்.
புத்ர காமேட்டி யாகம்
      நம்பிகள் வரதராஜ பெருமாளிடம் விண்ணபிக்க, பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-வேதவல்லித்தாயார் திருதலத்தில் புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்ய பணித்தார்.
   கேஸவப்பெருமான்-காந்திமதி அம்மையார் தம்பதிகள் பல திவ்யதேஸங்களுக்குச் சென்று சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-வேதவல்லித்தாயாரை தரிசித்து தங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்து ஸ்ரீபெரும்பூதூர் திரும்பினர்.
         வேங்கட கிஷ்ணன் அருளால், காந்திமதி அம்மையார் கருவுற்றாள். கி.பி. 1017, பிங்கள ஆண்டு சித்திரை மாதம், சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் வியாழக்கிழமை அந்த தம்பதிகளுக்கு யதிராஜவல்லி சமேத ஆதிகேசவப்பெருமாள் சேவை சாதிக்கும் ஸ்ரீபெரும்மந்துரில் இராமாநுஜர் மகனாகப் பிறந்தார்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், , ஸ்ரீராமானுஜர்.
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்வேழமும் பாகனும் வீழச்செற்றவன்-தன்னை புரம் எரி செய்தசிவன் உறு துயர் களை தேவைபற்றலர் வீயக் கோல் கையில் கொண்டுபார்த்தன்-தன் தேர்முன் நின்றானைசிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே
…….
திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி  (1)
 • ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை -பிப்ரவரி- 10 நாட்கள் திருவிழா –பிரம்மோற்ஸவம்– ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா – வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள்.
 • திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்
 • தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர்.
 • சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.
  Please go  to CONTENTS for all the Articles in HRE:https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

வைணவம்

சைவம்

1.ஸ்ரீலஷ்மிநாராயணன்ஸ்ரீஉமாமகேஸ்வரன்
2.கருடன்நந்தி
3.சங்கு-சக்ரதாரிமான்-மழு
4.அரவணையன்அரவாபரணன்
5.நீலவண்ணன்பொன்மேனியன்
6.அலைமகள்மலைமகள்
7.அலங்காரப் பிரியர்அபிஷேகப் பிரியர்
8.துளசிவில்வர்
9.பட்டுபுலித்தோல்
10.பஞ்சாயுதன்சூலாயுதன்
11.தாமரைகொன்றை
12.மோகனிஅர்த்தநாரி
13.திருமண்திருநீர்
14.ஓம்நமோநராயணாயாநமசிவாயா
15.நித்திய சூரிகள்பூதகணங்கள்
16.திருவேங்கடன்அண்ணா மலையான்
17.திருவேங்கடம் பர்வதமலை
18.திரிவிக்ரமன்நடராசன்
19.EightFive
20.ஆழ்வார்கள்நாயன்மார்கள்
21.ஆழ்வார்கள்-12நாயன்மார்கள்-63
22.திவ்வ பிரபந்தங்கள்பன்னிரு திருமுரைகள்
23.Four thousandAbout 18,000
24.திருபள்ளி எழுச்சிதிருபள்ளி எழுச்சி
25.திருப்பாவைதிருவெம்பாவை
26.மதுரகவி ஆழ்வார்அப்பூதி அடிகள்
27. மார்கழி-விசேஷம் மார்கழி-விசேஷம்
28. வைகாசி-விசேஷம் பங்குனி-விசேஷம்
29.திருவோணம்திருவாதிரை
30.ஏகாதசிபிரதோஷம்
   For more details regarding  this article:- Please  contact the  the Author(Prof.Dr.A.DAYALAN)ஓம் நமோ நாராயணாய

A. இறைவனின் சங்கல்பம்

 1. தேவகியின் எட்டாவது குழந்தையாக பிறந்து கண்ணன்-மாயைஇடமாற்றம்.

  B. கண்ணன் பால லீலைகள்

 2. மண்ணைத் தின்று யசோதைக்கு அண்டத்தை காண்பித்தல்
 3. கோவர்த்தன மலையை குடையாக பிடித்தல்.
 4. மாண்ட பிள்ளையை மீட்டு , குருதட்சணையாகக் கொடுத்தல்.

  C.கண்ணன் குடும்பம்

 5. அஷ்டபார்யா என அழைக்கப்பட்ட 8 மனைவிகள் முதன்மையானவர்.
 6. பிற16,100 பேர் அவரது சுதேசி மனைவிகள்
 7. கண்ணன்-ஜாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன்சாம்பன்
 8. கிருஷ்ணன்ருக்மிணிக்கு மன்மதன் அம்சனான பிரத்தியும்னன்பிறந்தான்.
 9. ருக்மிணியின் மகன் பிரத்தியும்னன்.
 10. பார்த்தசாரதி :மூலஸ்தானத்தில்-கண்ணன் குடும்பம்.
 11. பகவான் கண்ணன், கீதையில் வாழ்வில் வெற்றி கொண்டு தன்னையடைய இந்திரிய-புலனடக்கம் , குறிப்பாக காமங்களை தவி்ர்த்தல் , போன்ற தலையாய உபதேசங்களை செய்கின்றார். 
 12. கிருஷ்ணன் நித்ய பிரம்மசாரி . மணந்தார் என்பது காமம் அல்ல.
 13. இதைதான் பல ஆழ்வார்களும் நாயகன்நாயகி பாணியில் பக்திசெய்தனர்.  

  D. கண்ணனின் அரச தர்மம்

 14. திரௌபதைக்கு மாளாத் துயில் அளித்தல்
 15. ஒரு பருக்கை கீரை உண்டு துர்வாசர் முதலியோர் பசி தீர்த்தல்
 16. கண்ணன் தூது-விதுரன் விருந்து-மதியா துரியோதனன் தரையில் மண்டி.

  E.மாயக்கண்ணன் பாரதபோர்

 17. அமாவாசை நாள் மாற்றம்
 18. குந்திதேவிக்குகர்ணன் அவள் முதல் மகன் என்ற ரகசியத்தைக் கூறல்.
 19. போர் செய்ய மறுத்த அர்சுனனைத் தேற்ற அர்சுனனுக்கு பகவத்கீதைஉபதேசம்
 20. தன் சங்கல்பத்தையும் மீறி, தன் பக்தன் பீஷ்மர் சங்கல்பத்தை நிறைவேற்ற,  10ம் நாள் போரில் ஆயுதம் ஏந்தல்.
 21. போரில், கதிரவனை மறைத்தல்-மறைத்த கதிரவனைக் மீண்டும் காண்பித்தல்
 22. தேரை அழுத்தி கர்ணனின் நாகாஸ்திரத்திடமிருந்து அர்சுனனை காத்தல்
 23. கர்ணனிடம் அவன் செய்த தானங்களை தானமாகப் பெருதல்
 24. போரில் பீமனுக்கு, துரியோதனின் ஆவி தொடையில் எனக் காட்டல்
 25. உத்தரை வயிற்றில், கருவாக இருந்த பரிட்சித்தை காத்தல்.
 26. யாதவர்களையும் வீழ்த்தி, இறுதியாக உத்தவருக்கு உத்தவ கீதைஉபதேசம்.You may please contact the AUTHOR (Prof.Dr.A.DAYALAN)for more details regarding this Article.
  HRE-4:கண்ணன் லீலைகள்…………>>>
  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
  Back to CONTENTS Click below:
ஆழ்வார்வேறு பெயர்கள்அம்சம்பிறப்பிடம்பெற்றோர்மாதம்நட்சத்திரம்பாசுரம் ஆயிரம்வரிசை,மொத்தம்திவ்யதேசம்
பெரியாழ்வார்விஷ்ணுசித்தர்கருடன்ஸ்ரீவில்லிபுத்தூர்முகுந்தாச்சாரியார் & பதுமையார்ஆனிசுவாதிபல்லாண்டுபல்லாண்டு-12 பெரியாழ்வார் திருமொழி-461I,47319
ஆண்டாள் நாச்சியார்கோதை, சூடிகொடுத்த சுடர்க்கொடிபூதேவிஸ்ரீவில்லிபுத்தூர்பெரியாழ்வார்(வளர்ப்புதந்தை)ஆடிபூரம்திருப்பவை-30 நாச்சியார்திருமொழி143I,17311
குலசேகரஆழ்வார்கௌஸ்துபமாலைகொல்லி நகர் (கரூர்)திடவிரத மன்னன்மாசிபுனர்பூசம்பெருமாள் திருமொழி105I,1059
திருமழிசை ஆழ்வார்சிவவாக்கியர்,பக்திசரர்சுதர்சனம்(பிண்டமாக)திருமழிசைபார்கவ முனிவர்& கனகாங்கிதைமகம்திருச்சந்த விருத்தம்-120I,21617
நான்முகன் திருவந்தாதி-96  III
தொண்டரடிபொடிஆழ்வார்விப்ரநாராயணண்வனமாலைமாண்டங்குடி;Near:சுவாமிமலைமார்கழிகேட்டைதிருமாலை-45திருப்பள்ளிஎழுச்சி-10I,554
திருபாணாழ்வார்ஸ்ரீவத்ஸம்உறையூர்கார்த்திகைரோகிணிஅமலனாதிபிரான்-10I,103
மதுரகவிஆழ்வார்குமுதர்திருக்கோளுர்Near:ஆழ்வார்திரு நகரிசித்திரைசித்திரைகண்ணிநுண் சிறுதாம்பு-10I,10
 திருமங்கைஆழ்வார்நீலன்,பரகாலன்
 சார்ங்கம் (வில்)திருக்குறையூர்(Near திருநகரி)கார்த்திகைகார்த்திகைபெரியதிருமொழி-1084திருக்குறுந்தாண்டகம்-20 திருநெடுந்தாண்டகம்-30II,113786
திருவெழுகூற்றருக்கை-1 (46lines)      சிறியதிருமடல்-1 (77½lines) பெரியதிருமடல்1 (148½lines)III
பொய்கைஆழ்வார்   பாஞ்சசன்யம் (சங்கு)காஞ்சிபுரம்(சொன்னவண்ணம் செய்தபெருமாள் கோயில்குளம்)அயோநிஜர் (சுயம்பு)ஐப்பசிதிருவோணம்முதல்திருவந்தாதி-100III,1006
பூதத்ஆழ்வார்  கதாயுதம்கடல்மல்லை(மகாபலிபுரம்)அயோநிஜர் (சுயம்பு)ஐப்பசிஅவிட்டம்இரண்டாம் திருவந்தாதி-100III,10013
பேயாழ்வார் நந்தகம்(வாள்)மயிலாப்பூர்(ஆதிகேசவப் பெருமாள்கோவில் குளம்)அயோநிஜர் (சுயம்பு)ஐப்பசிசதயம்மூன்றாம் திருவந்தாதி-100III,10015
நம்மாழ்வார்திருபுளிஆழ்வார், மாறன், சடகோபன், வகுளாபரன், பராங்குசர்,ஸ்ரீசடாரிகௌஸ்துப மாலைதிருக்குருகூர்(ஆழ்வார் திருநகரி)காரியர்& உடைய நங்கைவைகாசிவிசாகம்திருவாசிரியம்-7II,129636
திருவிருத்தம்-100பெரியதிருவந்தாதி-87III
திருவாய்மொழி-1102IV
திருவரங்கத்தமுதனார் ராமானுஜ நூற்றந்தாதி (பிரபந்த காயத்ரி)IV,108 &&&
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக