சனி, 24 அக்டோபர், 2015

மகாபாரதத்தில் இரந்திதேவன்

ராதே கிருஷ்ணா 24-10-2015
மகாபாரதத்தில் இரந்திதேவன் என்னும் அரசன் பிராமணர்களுக்கு பசு மாமிசம் சமைத்துப் போட்டதாக ஒரு கேடுகெட்ட பதிவு உலா வருகிறது. அது ஒரு அயோக்கியனின் வடிகட்டிய பொய்.
--------------------------------------------------------------------------------
இப்படி ஒரு அயோகியன் இட்டு கட்டிய ஸ்லோகத்துடன் ஒரு பொய்யை உலாவ விட்டுள்ளான். அவர் கூறும் ஸ்லோகங்கள் எதுவும் மகாபாரதத்தில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அந்த ஸ்லோகம் எந்த புத்தகத்தில் உள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால் ராகுல சாங்கிருத்தியாயன் என்பவர் எழுதிய ”வால்கா முதல் கங்கை வரை” என்ற புத்தகத்தில் உள்ள ஸ்லோகம். மகாபாரதத்தில் கூறப்பட்டவை அல்ல

யார் இரந்தித்தேவன்?
-------------------------------
இரந்தித்தேவன் என்னும் அரசன் பாரி வள்ளலைவிட ஏன் கர்ணனை விட கொடையில் சிறந்தவன். மக்களுக்கு கொடுத்து கொடுத்தே கரம் சிவந்தவன். ஒருமுறை விஷ்னு பகவான் அவனை சோதிக்கும் பொருட்டு அவனது நாட்டில் பஞ்சம் பட்டினியை உருவாக்குகிறார். அந்த பஞ்சத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு தன் அரண்மைனையில் உள்ள அனைத்தையும் விற்று மக்களை காக்கிறான்.

அதில் மன்னனும் அவனது மனைவியும், மகனும் சாப்பிட்டு 48 நாட்களுக்கு மேல் ஆயிற்று இதை அறிந்த ஊர் மக்கள் மன்னனை காக்கும் பொருட்டு தங்களிடம் மீதம் இருந்த தானியத்தை கொண்டு மன்னனுக்கு கஞ்சியை தயாரித்து கொடுக்கின்றனர்.

மன்னனும் அவன் குடும்பமும் அந்த கஞ்சியை வாயில் வைக்கும் போது ஒரு அந்தணன் யாசகத்திற்கு வருகிறார். வந்தவர் மன்னனின் கண்ணிற்கு பெருமாளாகவே தென்படுகிறார். மன்னன் தான் வைத்திருந்த கஞ்சை அந்த அந்தணனுக்கு வளங்குகிறார். அந்த அந்தணன் போலவே வைசியர், சூத்திரர், வேடன் என வரிசையாக வருகிறார்கள் அவர்கள் அனைவரும் மன்னனுக்கு திருமாளாகவே தெரிகின்றனர் அனைவருக்கும் தான் வைத்திருந்த கஞ்சி முழுவதையும் கொடுத்துவிட்டார். கொடுத்து முடித்ததும் பின் வரும் ஸ்லோகத்தை கூறுகிறார்.

” க்ஷ§த்-த்ருட்-ச்ரமோ காத்ர பரிப்ரமச்ச
தைன்யம் க்லம:சோக விஷாத மோஹா:மி
ஸர்வே நிவ்ருத்தா: க்ருபணஸ்ய ஜந்தோ:
ஜிஜீவிஷோ ஜீவ ஜலார்ப்பணாத் மேமிமி”

இந்த ஸ்லோகத்திற்கு பொருள் உயிர்வாழ வேண்டுமென்று விரும்பும், நிராதரவான சகல ப்ராணிகளும் நான் கொடுக்கிற இந்த தீர்த்த தானத்தால் தாகம் இவற்றால் ஏற்படும் சிரமத்திலிருந்தும் வியாதி மாதிரியான சரீரக் கஷ்டங்களிலிருந்தும் மனசின் கஷ்டமான தீனநிலை, மனத்தளர்ச்சி, துக்கம், கலக்கம் (dejection) , மயக்கம் முதலிய எல்லாத் துன்பங்களிலிருந்தும் நிவாரணம் பெறட்டும் என்று திருமாலிடம் வேண்டுகிறான்.
------------------------------------------------------------------------------
இத்தகைய தர்மவானா நாளொன்றுக்கு 2000 பசு மாட்டை பலியிட்டு பிராமணர்களுக்கு விருந்து படைத்தான். இதை சொன்னவனது நாக்கு அழிகிப் போகட்டும். Kannan Kanna Veera


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக