புதன், 14 அக்டோபர், 2015

திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹசியம்

ராதே கிருஷ்ணா 14-10-2015


திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹசியம்

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரைப்போலே  
1. azhaiththu varugiREn enREnO akrUraraip pOlE


2. அகமொழித்து விட்டேனோ விதுரனைப் போலே 
2. agamozhiththu vittEnO vidhuraraip pOlE


3. தேஹத்தை விட்டேனோ ரிஷி பத்நியைப் போலே
3. dhEhaththai vittEnO rushi pathniyaip pOlE


4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
4. dhasamuganaich seRREnO pirAttiyaip pOlE


5. பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
5. piNam ezhuppi vittEnO thoNdaimAnaip pOlE


6. பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
6. piNa virundhittEnO kaNdAkarNanaip pOlE


7. தாய்க்கோலஞ் செய்தேனோ அந ஸூயைப் போலே
7. thAyk kOlam seydhEnO anasUyaip pOlE


8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
8. thandhai engE enREnO dhuruvanaip pOlE


9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
9. mUnRezhuththuch sonnEnO kshathrabandhuvaip pOlE


10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
10. mudhaladiyaip peRREnO agaligaiyaip pOlE


11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே
11. pinjchAyp pazhuththEnO ANdALaip pOlE


12. எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே
12. emperumAn enREnO pattar pirAnaip pOlE


13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசியார் போலே 
13. ArAyndhu vittEnO thirumazhisaiyAr pOlE


14. நான் (அவன்)  சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே
14. nAn (avan) siRiyan enREnO AzhvAraip pOlE


15. ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே
15. EdhEnum enREnO kulasEkarar pOlE


16. யான் சத்யம்  என்றேனோ கிருஷ்ணனைப் போலே
16. yAn sathyam enREnO krushNanaip pOlE


17  அடையாம் சொன்னேனோ கபந்தனைப் போலே
17. adaiyALam sonnEnO kabandhanaip pOlE


18. அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே
18. andharangam sonnEnO thrijadaiyaip pOlE


19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே
19. avan dheyvam enREnO maNdOdhariyaip pOlE


20. அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே
20. aham vEdhmi enREnO visvAmithraraip pOlE


21. தேவு மாற்றியேன் என்றேனோ மதுரகவியைப போலே
21. dhEvu maRRaRiyEn enREnO madhurakaviyaip pOlE


22. தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியார் போலே
22. dheyvaththaip peRREnO dhEvakiyAr pOlE


23. ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே
23. Azhi maRai enREnO vasudhEvaraip pOlE


24. ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே
24. Ayanai vaLarththEnO yasOdhaiyAraip pOlE25 அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே
25. anuyAththiram seydhEnO aNilangaLaip pOlE


26. அவள் பொறியை ஈந்தேனோ குசேலரைப் போலே
26. aval poriyai IndhEnO kusElaraip pOlE


27.  ஆயதங்களை ஈந்தேனோ அகஸ்த்தியரைப் போலே
27. AyudhangaL IndhEnO agasthiyaraip pOlE28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே
28. andharangam pukkEnO sanjchayanaip pOlE


29  கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போல
29. karmaththAl peRREnO janakaraip pOlE


30. கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே
30. kadiththu avanaik kaNdEnO thirumangaiyAr pOlE


31. குடை முதலானது ஆனேனோ  அனந்தாழ்வான் போலே
31. kudai mudhalAnadhu AnEnO ananthAzhvAn pOlE


32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே
32. koNdu thirindhEnO thiruvadiyaip pOlE


33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே 
33. iLaippu vidAy thIrththEnO nampAduvAn pOlE


34. இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே
34. idaikazhiyil kaNdEnO mudhalAzhvArgaLaip pOlE35 இரு மன்னர்கள் பெற்றேனோ வால்மீகியைப்  போலே  
35. iru mannar peRREnO vAlmIkiyaip pOlE


36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப் பொடியாழ்வார் போலே
36. irumAlai IndhEnO thoNdaradippodiyAr pOlE


37. அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே
37. avan uraikkap peRREnO thirukkachchiyAr pOlE


38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணர் போலே
38. avan mEni AnEnO thiruppANar pOlE39. அனுப்பி வைய்யும் என்றேனோ வசிஷ்டரைப் போலே
39. anuppi vaiyum enREnO vasishtaraip pOlE


40. அடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே
40. adi vAnginEnO kongiRpirAttiyaip pOlE41. மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே
41. maN pUvai ittEnO kuravanambiyaip pOlE


42. மூலம் என்றழைத்தேனோ கஜராஜனைப் போலே
42. mUlam enRu azhaiththEnO gajarAjanaip pOlE


43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே
43. pUsak koduththEnO kUniyaip pOlE


44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே 
44. pUvaik koduththEnO mAlAkAraraip pOlE


45. வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணரைப் போலே
45. vazhi adimai seydhEnO lakshmaNanaip pOlE


46. வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே
46. vaiththa idaththu irundhEnO baradhanaip pOlE


44  அக்கரைக்கே விட்டேனோ குஹப் பெருமாளைப் போலே
47. akkaraikkE vittEnO guhapperumALaip pOlE


44  அரக்கனோடு பொருதேனோ பெரிய உடையாரைப் போலே
48. arakkanudan porudhEnO periya udaiyAraip pOlE49  இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே
49. ikkaraikkE senREnO vibIshaNanaip pOlE


55  இனியது என்றேனோ சபரியைப் போலே
50. niyadhu enRu vaiththEnO sabariyaip pOlE


51  இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே
51. ingum uNdu enREnO prahlAdhanaip pOlE52. இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே
52. ingu illai enREnO dhadhipANdanaip pOlE53  காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே
53. kAttukkup pOnEnO perumALaip pOlE


55  கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே
54. kaNdu vandhEn enREnO thiruvadiyaip pOlE


55. இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே
55. iru kaiyum vittEnO dhraupadhiyaip pOlE


56. இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே
56. ingu pAl pongum enREnO vaduganambiyaip pOlE


57  இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப்  போலே
57. iru midaRu pidiththEnO selvappiLLaiyaip pOlE


55  நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே
58. nil enRu peRREnO idaiyARRUr nambiyaip pOlE


59  நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே
59. nedundhUram pOnEnO nAthamuniyaip pOlE


66  அவன் போனேனோ என்றேனோ மாருதியாண்டான் போலே
60. avan pOnAn enREnO mAruthiyANdAn pOlE


61  அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே
61. avan vENdAm enREnO AzhvAnaip pOlE


66  அத்வைதம் வென்றெனொ எம்பெருமானாரைப் போலே
62. adhvaidham venREnO emperumAnAraip pOlE


63. அருளாழி என்றேனோ நல்லானைப் போலே ..  .          
63. aruLAzhi kaNdEnO nallAnaip pOlE


64  அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே
64. ananthapuram pukkEnO ALavandhAraip pOlE


66  ஆரியானை பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே
65. Ariyanaip pirindhEnO dheyvAriyANdAn pOlE


66  அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே
66. andhAdhi sonnEnO amudhanAraip pOlE


67. அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
67. anukUlam sonnEnO mAlyavAnaip pOlE


68  கள்வன் இவன் என்றேனோ லோக குருவைப் போலே
68. kaLvan ivan enREnO lOkaguruvaip pOlE69. கடலோசை என்றேனோ பெரியாநம்பியைப் போலே ..  .            
69. kadalOsai enREnO periyanambiyaip pOlE


70  சுற்றிக் கிடந்தேனோ மாலையாண்டானைப் போலே
70. suRRik kidandhEnO mAlaiyANdAn pOlE71. சூளுறவு கொண்டேனோ கோட்டியூராரைப் போலே ..  .            
71. sULuRavu koNdEnO kOttiyUrAraip pOlE


72  உயிராய்ப் பெற்றேனோ ஊமையைப் போலே
72. uyirAya peRREnO Umaiyaip pOlE


73  உடம்பைப் வெறுத்தேனோ நறையூராரைப் போலே
73. udambai veRuththEnO naRaiyUrAraip pOlE


74. என்னைப் போல் என்றேனோ உபரிச்சரனைப் போலே ..  .              
74. ennaip pOl enREnO uparisaranaip pOlE


75  யான் என்றேனோ திருமலைநம்பியைப் போலே
75. yAn siRiyEn enREnO thirumalai nambiyaip pOlE


76  நீரில் குதித்தேனோ கணபுரத்தானைப் போலே
76. nIril kudhiththEnO kaNapuraththALaip pOlE77  நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே
77. nIrOrugam koNdEnO kAsi singanaip pOlE78. வாக்கினால் வேன்றேனோ பட்டரைப் போலே .  .            
78. vAkkinAl venREnO battaraip pOlE79  வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே
79. vAyil kaiyittEnO embAraip pOlE80  தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
80. thOL kAtti vandhEnO battaraip pOlE


81  துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே
81. thuRai vERu seydhEnO pagavaraip pOlE
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக