வியாழன், 15 அக்டோபர், 2015

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் !

ராதே கிருஷ்ணா 15-10-2015Rathinavel Selvakumar
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் !
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.
கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான்.
அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.
தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.
பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.
எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது.
அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.
இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?
எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர்.
அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர்.
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்.
ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.
நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.
எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.
இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!
இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.
12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும்.
ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.
கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.
நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம்.
இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.
கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.
{ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்
இந்த கதையை.}
நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!
காற்றை கண்டதும்...
'அமைதி‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாது’ என்று அணைந்துவிட்டது.
'அறிவு‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று
வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.
அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.
சிறுவன் உடனே..
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..
'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது...!!
மனதிற்கான மருந்துகள்
மனவளக் கட்டுரை
1) செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக்
கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்கா
விட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப்
பணத்தைச் செலவழியுங்கள்.
2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்
3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்துப்
பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.
4.உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ,
நீங்கள் செத்தபிறகுதான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கிவிடாதீர்கள்.
5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ
அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள்
என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப்போவதில்லை.
6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்
ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும்
அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை
மனதில் வையுங்கள்!
7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலைவிதிப்படிதான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ!
8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்னதான் உழைத்தாலும், தினசரி
வாழ்க்கை ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த
காலத்தில் இருந்து சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம்வரை
ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்?
ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி
இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
”வந்ததை வரவில் வையுங்கள்
சென்றதை செலவில் வையுங்கள்”
அதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்த மகிழ்ச்சிக்கான
சூத்திரம்!
9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய்,
நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!.
10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள்
வாழ்க்கை தனிமைப்பட்டுப் போய்விடும்!
11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,
நடப்பிற்கும் உள்ள இடைவெளிதான் மன அழுத்தத்தை உண்டு
பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக அதிகமாக மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்
12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை
உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக்
கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள்.
அதுதான் நல்லது.
சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச்
செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக