வியாழன், 16 ஜூலை, 2015

புராணங்கள்

ராதே கிருஷ்ணா 16-07-2015
புராணங்கள்
arrow புராணம் ஒரு அறிமுகம்
arrow பிரம்ம புராணம்arrow பத்ம புராணம்
arrow விஷ்ணு புராணம்arrow சிவமகா புராணம்
arrow லிங்க புராணம்arrow கருட புராணம்
arrow நாரத புராணம்arrow பாகவத புராணம்
arrow அக்னி புராணம்arrow கந்த புராணம்
arrow பவிஷ்ய புராணம்arrow பிரம வைவர்த்த புராணம்
arrow மார்க்கண்டேய புராணம்arrow வாமன புராணம்
arrow வராக புராணம்arrow மச்ச புராணம்
arrow கூர்ம புராணம்arrow பிரம்மாண்ட புராணம்
arrow வாயு புராணம்arrow சூர்ய புராணம்
arrow தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்arrow தேவாங்க புராணம்
arrow குசேலர்arrow தசாவதாரம்
arrow விநாயகர் புராணம்arrow லவகுசா
arrow ஏழுமலையான்arrow கந்தபுராணம்
arrow நாரதர்arrow நளதமயந்தி
arrow சுந்தரகாண்டம்
  தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


புராணம் ஒரு அறிமுகம்
temple
புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார். அதாவது சின்னஞ்சிறியதாக இருப்பதை ...மேலும்


பிரம்ம புராணம்
temple
1. தோற்றுவாய்
புராணங்கள் என்பவை பண்டைய இலக்கியங்கள் ஆகும். அவை மகா புராணங்கள் 18, உப புராணங்கள் 18. மகா புராணங்கள் பதினெட்டின் வரிசையில் சிலர் நான்காவது வாயு புராணம் ... மேலும்

temple
18. கவுதம முனிவரும் கங்கையும்
சிவனை மணம் புரிந்த பார்வதி, அவர் கங்கை மீது ஆசையாய் இருப்பது குறித்து வருத்தமுற்று கங்கையை அகற்ற பலவாறு முயன்றும் வெற்றி கொள்ள இயலவில்லை. ... மேலும்
பத்ம புராணம்
temple
1. தோற்றுவாய்
வேத வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது பத்ம புராணம். இது 55,000 ஸ்லோகங்கள் கொண்டது. வேத வியாசரின் இயற்பெயர் அது இல்லை என்றும், அது அவருக்கு அளித்த ... மேலும்

temple
11. விகுந்தலனின் சரிதம்
சத்திய யுகத்தில் ஹேமகுந்தலன் என்னும் ஒரு வைசியன் இருந்தான். அவன் தர்மவான். பிராமண பக்தன். அவன் கோடிக்கணக்கானப் பொருள் ஈட்டினான். தன் வாழ்நாளின் ... மேலும்விஷ்ணு புராணம்
temple
1. புராணம் கேட்ட வரலாறு
18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் ... மேலும்

temple
9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்
பராசரர் மேலும் தொடர்ந்து கூறலானார்;
மைத்திரேயரே! நீர் அறிந்து கொள்ள ... மேலும்

temple
15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும்
பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்! பிரசேதசர்கள் கடல் நீரில் மூழ்கிக் கடுந்தவஞ் செய்துவந்த காலத்தில் ...மேலும்

temple
1. பிரியவிரத வம்சம்
பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதிலளித்து விட்டீர்கள். நீங்கள் கூறியருளிய முதலம்சத்தில், ... மேலும்

temple
9. சிம்சுமார சக்கரம்
மைத்ரேயரே! ஸ்ரீஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற நட்சத்திரக் கூட்டமாகிய ரூபத்தின் வால்பகுதியில் துருவன் இருக்கிறான். ... மேலும்

temple
1. கடந்த மனுவந்தரங்கள்
மைத்ரேய முனிவர், பராசரரை நோக்கி, மகரிஷியே! பூமி, சமுத்திரங்கள், முதலானவற்றைப் பற்றியும், சூரியன் சந்திரன் முதலிய கோள்களைப் பற்றியும், தேவதைகள் ... மேலும்

temple
11. இல்லற ஒழுக்கம்
சகர மாமன்னன் அவுர்வ முனிவரை நோக்கி, சுவாமி! இல்லறத்தான் கடைபிடிக்க வேண்டிய நல்ல ஒழுக்கங்களைப் பற்றி நான் அறியவிரும்புகிறேன். எத்தகைய ... மேலும்

1. ககுத்துமியின் கதை
பராசர முனிவரை நோக்கி மைத்ரேயர், சுவாமி! சத்கருமம் செய்யப் புகுந்தவருக்குச் செய்யத்தக்க நித்திய நைமித்திக ரூபமான கர்மங்களின் சொரூபத்தையும் ... மேலும்

11. கார்த்த வீரியார்ஜுனன்
இனி யயாதி மகாராஜாவின் மூத்த மகனான யதுவின் குலமுறையைக் கூறுகிறேன்; கேளுங்கள். மனிதர், சித்தர், கந்தருவர், இயக்கர், இராக்கதர், குகியகர், ... மேலும்

1. திருமண ஊர்வலமும் தேவர்களின் பிரார்த்தனையும்
மைத்ரேயர்! பராசர முனிவரை நோக்கி, குருவே! அரசர்களின் வம்சங்களைப் பற்றி விளக்கமாகச் சொன்னீர்கள்! யது குலத்தில் சர்வ ... மேலும்

21. ராஜசபையும் குருதக்ஷணையும் கொடுத்தல்
தேவகி வசுதேவர்கள் துதிப்பதைக் கண்ட கண்ணன் யாதவ சமூகத்தை மோகிப்பிக்கும் பொருட்டு தன் தாய் தந்தையரை நோக்கி அம்மா! உங்களைக் காண ... மேலும்

1. கலியுக தர்மம்
மைத்ரேய முனிவர், பராசர மகரிஷியை நோக்கி, குரு நாதரே! உலக சிருஷ்டியையும் வமிசங்களையும் மனுவந்திரங்களின் நிலைகளையும் எனக்கு விளக்கமாகக் கூறினீர்கள். இனி ... மேலும்


சிவமகா புராணம்
temple
காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  உலகங்கள் அனைத்திற்கும் பரமபிதாவான சிவபெருமானையும் அவ்வுலகங்கள் ...மேலும்

temple
41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும்
நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான சீலரே! அந்தகேஸ்வர லிங்க மகிமையைத் தாங்கள் எங்களுக்குச் சொல்ல ...மேலும்

temple
2. தர்ம ஸம்ஹிதை
காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் - ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் மனிதரில் சிறந்த உத்தமச் சைவரையும் ... மேலும்

temple
16. சிவலிங்க பூஜையின் பயன்
சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய கிரியாயோகத்தை ஸநத்குமார முனிவர் வியாசபகவானுக்கு உபதேசித்த வகையே, ... மேலும்

temple
31. நரகலோக வர்ணனை
வியாசரே! பாதாள லோகத்திற்கு மேலே இருக்கும் நரக லோகத்தையும் அதில் பாவிகள்கிடந்து அனுபவிக்கும் துன்பங்களையும் சொல்லுகிறேன். ரவுரவம், சூகரம், ரோதம், ... மேலும்

temple
3. கைலாய ஸம்ஹிதை: காப்பு: நமஸ் ஸிவாய ஸாம்பாய ஸகணாயஸ ஸூநவே, ப்ரதாந புருஷே ஸாய ஸர்கஸ்தித் யந்தஹேதவே! (பார்வதிதேவியாரோடும் கணபதி, கந்தப்பெருமான் முதலான மைந்தர்களோடும் முதன்மை ... மேலும்

temple
4. ஸநத்குமார ஸம்ஹிதை: காப்பு: ப்ரபத்யே தேவமீஸாந ஸர்வஜ்ஞ மபராஜிதம்! ஸம்பவம் ஸர்வபூதாநாம் அநாதிம் விஸ்வதோமுகம்! (தேவ தேவனாகவும் ஈசான சுருதியினால் பிரதிபாத்தியனாகவும் ...மேலும்

temple
28. பிறை நிலா சூடுதலும் நஞ்சுண்ட கதையும்: பார்வதி தேவி புன்சிரிப்போடு சிவ பெருமானை நோக்கி நாதா! தாங்கள் அடியாளைப் பாதி யுடம்பில் அணிவது போல் பாதி நிலாவை தாங்கள் ... மேலும்

temple
5. வாயுஸம்ஹிதை- (பூர்வ பாகம்)
காப்பு: நமஸ் மைஸ்த ஸம்ஸார சக்ரப்ரமண ஹேதவே, கௌரீ குசதடத்வந்த்வ குங் குமாங்கீத வக்ஷஸே (எல்லாவிதமான சம்சார சக்கரத்தை சுழற்றுகிற காரணரும், ... மேலும்

temple
முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, தேவரே! சிவபெருமானே சர்வலோக நாயகனாகையால் அந்தப் பகவான் விஷயத்திலேயே எங்கள் திரிகரணங்களும் விநியோகிக்கத்தகும். நாங்கள் மன்னர்களின் கதைகளை கேட்க ... மேலும்

temple
வாயு ஸம்ஹிதை (உத்திர பாகம்): நமச்சிவாய ஸோமாய ஸகணாய ஸூநவே, ப்ரதாந புருஷேஸாய ஸர்கஸ்தித்யந்த ஹேதவே
சர்வ மங்களங்களைக் கொடுப்பவனும் ஸோம ஸ்வரூபியும் அஷ்டாதச கணங்களோடும் ... மேலும்

temple
16. ஸாதக தீக்ஷõ விதி: கிருஷ்ணா, ஸாதக தீக்ஷõவிதியைச் சொல்லுகிறேன். மந்திர மகாத்மியத்தைச் சொன்னபோதே ஸாதக தீக்ஷõ விவரணஞ் சொல்ல ஆரம்பித்து, முடிக்காமற் போனேன். அதை இப்பொழுது ... மேலும்

temple
காப்பு: ஆத்யந்த மங்கள மஜாதச மாநபாவ, மாத்யந்த விஸ்வமஜராமர மாத்மதேவம்
பஞ்சாந நம்ப்ரபலபஞ்ச விநோத ஸீலம், ஸம்பாவயேமநஸி ஸவ்கரமம் பிகேஸம்
(கருத்து படைப்பின் துவக்கத்திலும் ... மேலும்லிங்க புராணம்
temple
தோற்றுவாய்: சூதர், நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் ... மேலும்

temple
24. ஜலந்தரன் வரலாறு: ஜலத்திலிருந்து தோன்றிய அசுரன் ஜலந்தரன் எனப்பட்டான். அவன் பரமனை நோக்கித் தவம் செய்து தேவர்களால் தன்னை வெல்லமுடியாதவாறு வரம் பெற்றான். அளவற்ற ... மேலும்


கருட புராணம்
temple
1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான கருட புராணம் 19,000 ஸ்லோகங்கள் கொண்டது. இப்பூவுலகில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் நைமிசாரணியம். அங்கிருக்கும் சவுனகாதி முனிவர்களைத் ...மேலும்

temple
13. பாவ புண்ணியங்களை ஆராயும் பன்னிரு சிரவணர்கள்
சிருஷ்டி தொடங்கி நடைபெற்று வரும்போது எல்லோரும் அவரவர் தொழிலைச் செய்யத் தொடங்கினர்.
யமனது சங்கடம்
ஆற்றல் ... மேலும்

temple
விஷ்ணுவுக்கு கருடன் தந்த வரம்!
ஆணவமும், அகங்காரமும் கர்வமும் ஒருவன் புகழையும் பெருமையையும் அழித்து, அவனை மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடும் என்பது தர்மநியாயம். ... மேலும்நாரத புராணம்
temple
1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான நாரத புராணம் 25,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒரு சமயம் நாரதர் சனத்குமாரருக்குக் கூறிய நாரத புராணத்தைச் சூதர் மற்ற முனிவர்களுக்குக் கூறலானார். ...மேலும்

temple
17. சத்வகுணமூர்த்தி-ஸ்ரீமந் நாராயணன்: ஒரு சமயம் முனிவர்கள் ஒன்று கூடி காசியப முனிவரின் தலைமையில் பெரிய வேள்வி ஒன்றை நடத்திக் கொண்டு இருந்தனர். அவ்வமயம் அங்கு வந்த நாரதர் ... மேலும்

பாகவத புராணம்
temple
1. தோற்றுவாய்: ஸ்ரீ சுக முனிவரால் பரீக்ஷித்து மகாராஜனுக்குச் சொல்லப்பட்ட பகவானுடைய சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம். இது 18,000 ஸ்லோகங்கள் கொண்டது. மக்களின் மனத்திலே பக்தியை ...மேலும்

temple
16. நான்காவது ஸ்கந்தம் : துருவன் கதை
(இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு உள்ளது)
துருவன் நற்பதம் பெற்றிட உதவிய நாரதர் உத்தானபாதரிடம் சென்று அவன் முகவாட்டத்தின் காரணம் ... மேலும்

temple
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்: 1. தோற்றுவாய்
(இது ஸ்ரீவிஷ்ணு புராணம் ஐந்தாவது அமிசத்திலும், ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பத்தாவது ஸ்கந்தத்திலும், ஸ்ரீபிரம்ம வைவர்த்த புராணம் ...மேலும்

temple
18. பலராமன் கல்யாணம்
ஆதிசேஷன் மனைவி வாருணியைப் பார்த்து வருணன் ஆதிசேஷனே பலராமனாக பூவுலகில் அவதரித்துள்ளார். அவர் மகிழுமாறு உதவவேண்டும் என்று வேண்டினான். வாருணி, ... மேலும்அக்னி புராணம்
temple
1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் 15,000 ஸ்லோகங்கள் கொண்டது. நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் பகவான் ஸ்ரீஹரியைக் குறித்து ஓர் அற்புத யாகத்தைத் ... மேலும்

temple
25. பாபங்கள், பிராயச்சித்தம்: ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ இழைத்துவிட்ட தவறுக்காக மனமுருகி வருந்துவது பிராயச்சித்தம் எனப்படும். அவ்வாறு செய்வதன் மூலம் மறுபடியும் அத்தகைய ...மேலும்

கந்த புராணம்
temple
முருகன் போற்றி: மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி கருணை போற்றி, ஏவருந்துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி,மாவடி வைகுஞ்செல்வேள் மலரடி போற்றி அன்னான், சேவலும் மயிலும் ...மேலும்

temple
மகாவிஷ்ணுவின் அருள் பெற்ற அசுரர்கள்: அசுரன் தாரகனுக்கு ஸ்ரீமன் நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்ட லோகத்தை ஜெயிக்கும் எண்ணம் வந்தது. படைகளை வைகுண்டம் நோக்கித் ...மேலும்

temple
வீரபாகு, தாரகன் வதம்: வீரபாகுவின் படைகள் கோட்டைக்குள் சென்று விட்டன. தடுத்த வாயிற் காவலர்களை தவிடு பொடியாக்கி விட்டன வீரபாகுவின் படைகள். கோட்டைக்குள் முருகனின் படை ... மேலும்

temple
போர்க்களத்தில் சூரபத்மன்!
வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன் இறங்கிய உடனேயே அசுரர்கள் ஆரவாரம் செய்தனர். ஒட்டுமொத்த அசுர வம்சத்துக்கே தலைவனான ... மேலும்


பவிஷ்ய புராணம்
temple
முன்னுரை: பதினெண் புராணங்கள் வரிசையில் ஒன்பதாவது பவிஷ்ய புராணம். இதனை பவிஷ்யத் புராணம், பவிஷ்ய புராணம், பவிஷ்யோத்தர புராணம் என்று பலவாறாகக் கூறுவர். இது 15,500 ஸ்லோகங்கள் கொண்ட ... மேலும்

temple
9. வருணாசிரம தருமங்கள்: தலைப்பு ஒரேமாதிரி இருப்பினும் பவிஷ்ய புராணத்தில் வருணாசிரம தருமங்கள் சிறிது மாறுபட்டிருக்கின்றன என்று அறியலாம். வகுப்புகளில் மற்ற புராணங்களில் ... மேலும்

பிரம வைவர்த்த புராணம்
temple
1. தோற்றுவாய்: பிரம வைவர்த்த புராணம் ஒரு ராஜஸிக புராணம். மேலும், பிரமாண்ட புராணம். மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம் ஆகியவையும் ராஜஸிக ...மேலும்

temple
18. லக்ஷ்மி கடாக்ஷம்
இப்புராணம் ஸ்ரீலக்ஷ்மியைப் பற்றியும் கூறுகிறது. சிருஷ்டியின் போது கிருஷ்ணன் இடது பக்கத்திலிருந்து ஓர் அழகிய தேவி தோன்றி இரண்டு பகுதியாகி ... மேலும்

மார்க்கண்டேய புராணம்
temple
1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணம் 9000 ஸ்லோகங்கள் கொண்டது. வியாசரின் சீடர்களில் ஒருவர் ஜைமினி. இவர் மனதில் மகாபாரத இதிகாசம் பற்றிச் சில ஐயப்பாடுகள் ... மேலும்

temple
20. வைவஸ்வத மந்வந்தரம் சூரியன் சம்ஜ்ஞா: விவஷ்வான் என்ற சூரியன், விஸ்வகர்மாவின் புதல்வி சம்ஜ்ஞாவை மணந்தான். அவர்களுக்குப் பிறந்த மகள் மனு. அடுத்த தடவை சூரியன் தன்னை ...மேலும்

வாமன புராணம்
temple
1. தோற்றுவாய்: மகாபுராணங்களில் வாமன புராணம் ஒன்று. இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.இந்த வாமன புராணத்தில் பூர்வபாகம், உத்தரபாகம் என இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. தொண்ணூற்றைந்து ... மேலும்

temple
8. சுகேசியும் சூரியனும்: வித்யுத்கேசி என்னும் ராக்ஷசனின் மகன் சுகேசி. இவன் பிரகலாதனைப் போல் தெய்வபக்தியும், தர்மபுத்தியும் பெற்று இருந்தான். அவன் சிவபெருமானைக் ... மேலும்

வராக புராணம்
temple
1. தோற்றுவாய்: மகாவிஷ்ணு வராக (பன்றி) வடிவில் அவதாரம் எடுத்து பாதாளத்திலிருந்து தன்னை வெளிக்குக் கொண்டு வந்து காப்பாற்றிய பகவான் விஷ்ணுவை பூதேவி துதி செய்து அவள் கேட்ட ... மேலும்

temple
16. மன்னன் சுவேதனும், மன்னன் வினிதஷ்வனும்
அடுத்து வராகம், பிருதிவிக்கு விஷ்ணுவைப் பூசிப்பதற்கான சடங்குகள் பற்றி கூறிற்று. கார்த்திகை மாதம் துவாதசி திதி இதற்கான ... மேலும்

மச்ச புராணம்
temple
1. தோற்றுவாய்: பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் இருபதுக்கும் மேற்பட்டவை என்று பாகவதம் கூறுகிறது. எனினும் அவற்றுள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, பலராம, ... மேலும்

temple
8. ஸ்ரீவெங்கடேஸ்வரரும், அலமேலு மங்கைத் தாயாரும்
கஜனி முகம்மதுவுக்கு ஓர் அழகிய மகள் இருந்தாள். அவளுடைய அந்தப்புரத்திற்கு ஸ்ரீவெங்கடேச்வரர் ஓர் இரவு வந்து தன்னைப் ... மேலும்கூர்ம புராணம்
temple
1. தோற்றுவாய்: பதினென் புராணங்களில் கூர்ம புராணமும் ஒன்று. 17,000 ஸ்லோகங்கள் கொண்டது. இது பகவான் விஷ்ணு அமிர்த மதனத்தின்போது மந்தரமலை கடலில் அமிழ்ந்து போகாமல் நிலையாக ... மேலும்

temple
11. துர்ஜயனும் ஊர்வசியும்: சந்திர வம்சத்தில் தோன்றிய துர்ஜயன், கற்பில் சிறந்த தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் காளித்தி நதி தீரத்தில் அழகிய கானம் ஒன்று ... மேலும்

பிரம்மாண்ட புராணம்
temple
1. தோற்றுவாய்: மஹாபுராணங்கள் எனப்படும் புனித நூல்கள் பதினெட்டு. அவை சாத்விக, ராஜஸிக, தாமஸிக புராணங்கள் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிருஷ்டி பற்றி ... மேலும்

13. கைலாயம்: இது சங்குபோல் வெண்மையாய், மிகப்பரந்து, தேவர்களால் விரும்பி வரக்கூடிய இடமாக உள்ளது. இதன் நடுவில் குபேரன் அவனது அழகிய அரண்மனையில் வசிக்கிறான். அவனுடைய அவைக்கு ... மேலும்

வாயு புராணம்
temple
1. தோற்றுவாய்: புராணங்கள் முதன்முதலில் பிரம்மாவால் கூறப்பட்டது. இவற்றை அறிவதன் மூலம் வேதங்கள், உபநிஷத்து களை நன்கு அறிய உதவும் என்று கூறுகிறது வாயுபுராணம். 18 புராணங்களில் வாயு ... மேலும்


சூர்ய புராணம்
temple
தக தகவென்று தங்கத் தாம்பாளம் போன்று ஜொலித்துக் கொண்டு ஆயிரம் கிரணங்களோடு கீழ்த்திசையில் சூரியன் உதயமாகும் போதே உலகைச் சூழ்ந்துள்ள இருள் விலகிச் செல்லுகிறது. புதிய ... மேலும்

temple
19. ஆலயப் பிரதிஷ்டை: வசிஷ்டர் பிரகத்பலனைப் பார்த்து மேலும் சொல்லலானார். ராஜன், மகர் எனப்படும் உத்தமர்களுடைய மகிமையை உனக்குச் கூறினேன். இப்போது சூரிய விக்கிரகத்தைப் ... மேலும்

temple
புராணங்களில் காணப்படும் கதைகள்: (சாம்ப புராணம் எனப்பட்ட சூரியபுராணத்தில் சூரியன் பரம்பொருளாகச் சொல்லப்பட்டுள்ளார். அவரே மும்மூர்த்திகளாக இருந்து உலகைப் படைத்துக் ... மேலும்

temple
சூரிய கோயில்கள் கோணார்க்: வேத காலம் தொட்டு சூரிய வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தாலும் ஆறாம் நுற்றாண்டு முதல் தான் வட இந்தியாவில் சூரியனுக்குத் தனிக் கோயில்கள் ... மேலும்

temple
சூரிய வழிபாடு: உலகத்தின் உயிராக விளங்கும் சூரியனுடைய வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. வேதங்கள் சூரியனைப் போற்றிக் கொண்டாடுகின்றன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித ...மேலும்

temple
சூரிய நமஸ்காரப் பதிகம் வெண்பா: மின்னுஞ் சூரியன் மீது மேவச் சிறு பதிகம், பன்னும் படி யெனக்குப் பாலிப்பாய்-துன்னக், கடவாரணனே காண்பரிய காரணனே, யிடமாகு முன் ... மேலும்

temple
ஆதித்யன்(சூரியன்)  காயத்ரி மந்திரங்கள்
(கண்பார்வை மற்றும் புத்திகூர்மை பெற)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய ... மேலும்
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்
temple
பாண்டவர்கள் திரவுபதியை மணந்து கொண்டு வாழ்வதை அறிந்த திருதராஷ்டிரன், காண்டவபிரஸ்தம் என்னும் நிலப்பரப்பை அளித்து சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதித்தான்.உண்மையில் ... மேலும்தேவாங்க புராணம்
temple

தேவாங்க புராணம்!பிப்ரவரி 26,2014

தேவாங்க வம்சத்தில் அறநெறி வழுவாமல் ஆட்சி செய்த மன்னர்களும், சைவ சமயத்தையே உயிர்மூச்சாகக்கொண்டு நெறி பிறழாமல் வாழ்ந்த சான்றோர்களும் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் ... மேலும்


குசேலர்
temple

குசேலர் பகுதி-1மார்ச் 28,2011

குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக இருந்தது. பிறந்ததில் இருந்து கண்ணே விழிக்காததால், கவலையடைந்த தாய் உத்தரையும், ... மேலும்

temple

குசேலர் பகுதி-2மார்ச் 28,2011

அவந்தி நகரத்தில் இருந்த மலையில் கோயிலில் மட்டுமே நாம் காணும் யாளி என்னும் மிருகம் கூட உண்டு. சிங்கம், புலி, கரடி, மான் ஆகிய எல்லா மிருகங்களும் உண்டு. வேடர்கள் கூட இந்த மலையிலுள்ள ...மேலும்

temple

குசேலர் பகுதி-3மார்ச் 28,2011

குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் பேச்சில் சிறு மாறுபாடு கூட இருக்காது. இப்போதெல்லாம் மாணவர்கள் ... மேலும்

temple

குசேலர் பகுதி-4மார்ச் 28,2011

சாந்தீப முனிவரின் வாக்கிற்கு ஏற்பவே கண்ணனுக்கு அருமையான வாழ்வு அமைந்தது. அவன் துவாரகாபுரியின் அரசனானான். குசேலருக்கு ஏழ்மை இருந்தாலும் அதுபற்றி அவர் கண்டுகொண்டதே இல்லை. ... மேலும்

temple

குசேலர் பகுதி-5மார்ச் 28,2011

குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க அணிகலன்கள் இல்லை. பாலை மணி எனப்படும் சிறிய ஆபரணத்தையே அவர்கள் ... மேலும்

temple

குசேலர் பகுதி-6மார்ச் 28,2011

சுசீலா கேள்! பிரம்மன் ஒருவனுக்கு எந்தளவுக்கு ஆயுளை எழுதி வைக்கிறான் என்பதை அறிவுடைய அனைவரும் அறிவர். அதை எப்படி கணிப்பதென்று மயங்காதே. ஒவ்வொருவரும் புண்ணியம், பாவம் என்ற ... மேலும்

temple

குசேலர் பகுதி-7மார்ச் 28,2011

எல்லோருமே மனம் உவந்து நெல் கொடுத்தனர். அதைக் குத்தி அவல் தயார் செய்தாள். அவல் தயாராயிற்று...கிருஷ்ணனுக்கு எடுத்துப் போக வேண்டும் என்றால் வெள்ளிப்பாத்திரம் இருந்தால் எடுத்துப் ... மேலும்

temple

குசேலர் பகுதி-8மார்ச் 28,2011

எந்த வீட்டில் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ அதை கோயில் என்று சொல்லலாம். கோயிலுக்குச் சென்றால் மனம் ஒருமைப்படுவது போல, பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்து ... மேலும்

temple

குசேலர் பகுதி-9மார்ச் 28,2011

கண்ணபிரான் கொலுவிருக்கும் அறை வாசல் அருகேயே அவர் வந்துவிட்டார். அங்கே காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, கைகளில் சங்கு, சக்கர முத்திரை ...மேலும்

temple

குசேலர் பகுதி-10மார்ச் 28,2011

அந்த பட்டியல் தான் என்ன? பிராமணரே! செல்வந்தர்களே ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க இயலும். அவ்வாறு வருபவர்கள் கைகளில் தங்கக்காப்பு அணிந்திருக்க வேண்டும். காதுகளில் மகர குண்டலங்கள் ஒளி ... மேலும்

temple

குசேலர் பகுதி-11மார்ச் 28,2011

அந்தப்புர வாயிலை பெண்கள் காவல் செய்து கொண்டிருந்தனர். பெண்களுக்கு அந்தக் காலத்திலேயே அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு தரப்பட்டிருக் கிறது. அதுவும் காவல் பணி. இப்போதைய பெண் போலீஸ் ... மேலும்

temple

குசேலர் பகுதி-12மார்ச் 28,2011

தன் முன்னால் கைகூப்பியும், உடலை வளைத்தும் மரியாதை செய்த துவார பாலகர்களிடம், என்ன விஷயம்? என்று அதிகாரமாய்க் கேட்டார் கிருஷ்ணர். அவர்கள் அவரை வாழ்த்தினர். வேதங்களின் தலைவரே ...மேலும்

temple

குசேலர் பகுதி-13மார்ச் 28,2011

நீண்ட தூரம் சென்று விட்ட சைதன்யர் ஏனோ நின்றார். அப்படியே திரும்பினார். அவருடன் சென்றவர்களுக்கு ஏதும் புரியவில்லை. மீண்டும் ஸ்ரீகூர்மம் கிராமத்தை நோக்கி நடந்தார். ஊர் ... மேலும்

temple

குசேலர் பகுதி-14மார்ச் 28,2011

குசேலர் அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். கண்ணபிரான் பேச ஆரம்பித்தார். வாழ்வில் யார் ஒருவனுக்கு நட்பு சரியாக அமைகிறதோ, அவன் வாழ்வில் ... மேலும்

temple

குசேலர் பகுதி-15மார்ச் 28,2011

ஒரு ஊருக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றி அன்றைய புராணங்களிலேயே சொல்லி வைத்துள்ளனர். காடுகள் எல்லாம் செழிப்பாக வளர்ந்துள்ளதா என்று குசேலரிடம் கண்ணபிரான் கேட்டதன் மூலம் ... மேலும்தசாவதாரம்
temple

மச்சாவதாரம்மார்ச் 22,2011

உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் ... மேலும்

temple

கூர்ம அவதாரம்மார்ச் 22,2011

பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்:தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் ... மேலும்

temple

வராக அவதாரம்மார்ச் 22,2011

பெருமாளின் அவதாரங்களில் இது 3வது அவதாரமாகும்:  பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை ... மேலும்

temple
பெருமாளின் அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக ...மேலும்

temple

வாமன அவதாரம்மார்ச் 22,2011

பெருமாளின் அவதாரங்களில் இது 5வது அவதாரமாகும்:பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து ... மேலும்

temple
பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு ... மேலும்

temple

ராம அவதாரம்மார்ச் 22,2011

பெருமாளின் அவதாரங்களில் இது 7வது அவதாரமாகும்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ...மேலும்

temple
பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்:கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ...மேலும்

temple
பெருமாளின் அவதாரங்களில் இது 9வது அவதாரமாகும்:வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் ... மேலும்

temple

கல்கி அவதாரம்!மார்ச் 22,2011

பெருமாளின்  அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு ... மேலும்


விநாயகர் புராணம்
temple
அடியே குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று <உன் தாய் வீட்டுக்கு தாரை வார்த்து விட்டாயா? உடனே அவற்றை என்னிடம் கொடு. இல்லாவிட்டால், உன்னை ... மேலும்

temple
எமகிங்கரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ராஜாதி ராஜா! இந்த மனிதன், பூலோகத்தில் செய்யாத அட்டூழியமே இல்லை. பல பெண்களின் கற்பை சூறையாடிய கயவன் இவன். இவனுக்கு என்ன தண்டனை ... மேலும்

temple
அந்த தபஸ்வியின் பெயர் சிவனன். பிருகு மகரிஷிக்கும் புலோமைக்கும் பிறந்த செல்வ புத்திரர். அவர், காட்டில் வேதனையுடன் திரிந்த அரச தம்பதியரை பார்த்தார். அழகில் ஊர்வசியையும், ... மேலும்

temple
பிருகுவின் தவவலிமைக்கு அந்த பூதம் மதிப்பளித்து, முனிவரே! நான் ஒரு அந்தணன். முற்பிறவியில், இந்த சோமகாந்தனால் கொலை செய்யப்பட்டேன். கொடூர மரணமடைந்தவர்களுக்கு சொர்க்கம் இல்லை ... மேலும்

temple
அசுரேந்திரனின் மனதில் சற்றே நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன், குருவே! மரகதரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அவர் எப்படிப்பட்டவர்? ஒரு பெண்ணால் அவரை மயக்கி விட முடியுமா? ... மேலும்

temple
கண்மூடியிருப்பது போல் நடித்த விபுதா, மரகதர் தன்னை நெருங்கட்டுமே என காத்திருந்தாள். மரகதர் அருகில் வந்ததும், மூச்சுக்காற்றின் வெப்பம் அவள் மீது பட, அப்போது தான் விழித்தவள் ...மேலும்

temple
பார்வதிதேவியும் பரமேஸ்வரனும் கயிலாயத்திலுள்ள சித்திர மண்டபத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அன்று மிதமிஞ்சிய மகிழ்ச்சியுடன் இருந்தனர். அந்த மண்டபத்தில் ஒரு ஆண் ...மேலும்

temple
சிவபெருமானிடம் சென்ற அவர், மைத்துனரே! சக்தியின் இந்த சாபம் எனக்கு எப்போது தீரும்? என்று கேட்டார். அதற்கு சிவன், விஷ்ணுவே! நீர் வடதீவு என்னுமிடத்திற்கு சென்று இதே வடிவில் ... மேலும்

temple
சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் ... மேலும்

temple
காஷ்யப முனிவருக்கு திதி, அதிதி என்ற இரண்டு பத்தினிகள். இவர்களில் திதி அசுர வம்சத்தவள். அசுரக்குழந்தைகளை அவர் மூலம் பெற்றவள். அதிதி தேவர் குலத்தினரைப் பெற்ற மகராசி. இவளது ...மேலும்

temple
அவளது தவம் நூற்றாண்டுகளைக் கடந்தது. பெண்களின் தவத்திற்கு குறைந்த காலத்திலேயே பலன் கிடைத்து விடும். பல ஆண்கள் உயிருடன் நீண்ட காலம் பூமியில் வாழ காரணமே பெண்கள் தான். அவர்கள் ... மேலும்

temple
உடனடியாக சுரசை தன் அரக்க வடிவத்தை மாற்றினாள். காஷ்யபரின் ஆஸ்ரமத்திற்கு செல்வதனால், அந்தணப்பெண்ணின் வடிவமே ஏற்றது என முடிவெடுத்தாள். அதுபோலவே தன்னை மாற்றிக் கொண்டு, ஆஸ்ரமத்தை ... மேலும்

temple
அதிதியின் மடியில் படுத்திருந்த குழந்தை மகோற்கடன், ஒரு பருந்தாக வடிவெடுத்தான். மின்னல் வேகத்தில் கிளிகளை நோக்கிப் பறந்தான். அந்தக் கிளிகளை வாயால் கவ்வினான். அதன் இறக்கைகளை ... மேலும்

temple
நீராடிவிட்டு வந்த அவர்கள் தங்களிடம் இருந்த விக்ரகங்களுக்கு பூஜை செய்ய துவங்கினர். பூஜை முடிந்ததும், அப்படியே தியானத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரம் கழித்து கண்விழித்துப் ... மேலும்

temple
மகோற்கடனின் அருகில் வந்ததும் ஐவரும் ஒன்றிணைந்து, தங்கள் கையிலுள்ள அட்சதையை கணபதியின் மீது தூவினர். அட்சதை அரிசி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஆயுதமாக மாறி மகோற்கடனை நோக்கிப் ... மேலும்

2 Next >

விநாயகர் புராணம்
temple
அக்னிக்கும் வாயுதேவனுக்கு இருந்த அதே மனநிலையே இருந்தது. இருப்பினும், அவனும் தனது கடமையைச் செவ்வனே செய்தான். எங்கும் நெருப்பு பற்றி வெப்பம் தாளாமல் அலறினர். உலகங்கள் அனைத்தும் ... மேலும்

temple
சிரம்பை காசிக்கு வருவதற்கு முன்பே, மகோற்கடன் அங்கு சென்று சேர்ந்து விட்டார். அவர் காசிராஜனுடன் அரண்மனைக்குள் நுழைய முயன்ற போது, தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட கூடன் என்ற ...மேலும்

temple
மாமன்னரே! நம் இல்லத்திற்கு எழுந்தருளியிருக்கும் மகோற்கடர் வேதாந்தக, நராந்தகரின் உறவுக்காரர்களை அழித்து விட்டார். இதனால். இப்போது அவர்கள் நம் மீது கோபமாக இருப்பது <உறுதி. ... மேலும்

temple
காசிராஜனுக்கு நிலைமை புரிந்து விட்டது. இந்நிலையில், தங்களைக் காக்க மகோற்கடரை விட்டால் ஆளில்லை என்பதால், அவர் தங்கியிருந்த அறைக்கு ஓடினான். மகோற்கடரை சித்தி, புத்தியர் மூலம் ... மேலும்

temple
வித்ருமையின் கணவர், சுக்கிலர் உஞ்சவிருத்திக்காக வெளியே சென்றிருந்தார். அக்காலத்தில் வேதியர்கள், உஞ்சவிருத்தி எனப்படும் பிøக்ஷ எடுத்து வரும் அரிசியை சமைத்து ஆண்டவனுக்கு ... மேலும்

temple
தம்பி! நீ போய்விட்ட பிறகு நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? ஆனால், உன்னைக் கொன்றவர்களை பழிவாங்காமல், நான் மடிந்தால், உன் ஆத்மா சாந்தி பெறாது. இப்போதே புறப்படுகிறேன்! உன் ... மேலும்

temple
கடவுளே அருகில் இருந்தாலும் கூட பயம் என்ற தொற்று வியாதி மட்டும் ஏனோ மனிதனை விட்டு மறைய மறுக்கிறது. மனித இனத்தின் ஸ்பாவம் அப்படி? என்ன நடந்தாலும் நடக்கட்டுமே! இறைவன் நம் அருகில் ... மேலும்

temple
பக்தர்களே! நான் சொல்லும் இந்தக் கதையைக் கேளுங்கள். இதைக் கேட்ட பின், என் லோகத்தை அடைய, இங்கே கூடியிருக்கும் அனைவரும் கொடுக்க வேண்டிய விலையைத் தெரிந்து கொள்வீர்கள், என்று சொல்லி ... மேலும்

temple
அது ஒரு எருக்கஞ்செடி. அந்தச் செடியிலுள்ள பூக்களை எனக்கு அணிவித்தால் போதும் என்றார் விநாயகர். இறைவன் நம்மிடம், எதிர்பார்ப்பது பக்தியை மட்டும் தான். அன்புடன் அவனது பாதத்தில் ...மேலும்

temple
ராஜகுமாரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இவர் நிச்சயமாக மனிதர் இல்லை. தேவராகவோ, பூதமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையில் இனி சாப்பிடுவதற்கென எந்தப் பொருளும் இல்லை. காவலர்கள் மூலமாக ... மேலும்

temple
விரோசனா! வன்னி இலையின் முக்கியத்துவத்தைக் கேள்.அருகம்புல்லை மாலையாகவும், வன்னியை எனக்கு அர்ச்சனை செய்வதற்காகவும் நீ பயன்படுத்தலாம். ஒரு காலத்தில், விதர்ப்ப தேசத்தை புண்ணிய ... மேலும்


லவகுசா
temple

லவகுசா பகுதி-1பிப்ரவரி 01,2011

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ... மேலும்

temple

லவகுசா பகுதி-2பிப்ரவரி 01,2011

அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு பேரானந்தம் உண்டு. இத்தனைக்கும் ராமன் சியாமளவண்ணன். கரிய நிறமென்று ... மேலும்

temple

லவகுசா பகுதி-3பிப்ரவரி 01,2011

சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் ...மேலும்

temple

லவகுசா பகுதி-4பிப்ரவரி 01,2011

உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் ...மேலும்

temple

லவகுசா பகுதி-5பிப்ரவரி 01,2011

அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, குனிந்த தலை நிமிராத லட்சுமணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சீதை ...மேலும்

temple

லவகுசா பகுதி-6பிப்ரவரி 01,2011

சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. திடீரென எழுவாள். தன் இரு கைகளாலும் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிப்பாள். ஐயோ! இதென்ன கொடுமை என்றபடியே மயங்கிச் சாய்வாள். ஒரு கட்டத்தில், ... மேலும்

temple

லவகுசா பகுதி-7மார்ச் 15,2011

எதற்கும் கலங்காத அந்த மாவீரன் லட்சுமணன், அப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை. அண்ணியாரே! தாங்கள் களங்கமில்லா மதிமுகம் கொண்ட என் சகோதரனின் மனைவி. உங்கள் முகம் பார்த்து பேசும் ...மேலும்

temple

லவகுசா பகுதி-8மார்ச் 15,2011

குழந்தைகள் பிறந்தால் அவற்றை பூதங்களும், பிசாசுகளும் அணுகும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இப்போதும் கூட இருக்கிறது. இதற்காகத்தான், குழந்தையின் இடுப்பில் மந்திரித்த ... மேலும்

temple

லவகுசா பகுதி-9மார்ச் 15,2011

ராமன் தலையசைத்தார். அண்ணா! விருத்திராசுரன் என்பவனை இந்திரன் கொன்றான். இதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலைப்பாவம்) ஏற்பட்டது. இதனைப்  போக்க அவன் அஸ்வமேத யாகம் செய்தான். ... மேலும்

temple

லவகுசா பகுதி-10மார்ச் 15,2011

ரோமபாதன் சாந்தாவை தன்னுடைய அங்கதேசத்துக்கு அழைத்து வந்து வளர்த்து வந்தார். அவள் பருவமடைந்த சமயத்தில், மழை குன்றி, நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய ...மேலும்

temple

லவகுசா பகுதி-11மார்ச் 15,2011

அக்கா சாந்தாவின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார் ராமபிரான். தம்பி! இந்த உலகம் உள்ளளவும் உன் பெயர் நிலைத்திருக்கும். உன் பெயர் ஒலிக்காத நாவும், நாளும் இருக்காது, என்று ஆசி ... மேலும்

temple

லவகுசா பகுதி-12மார்ச் 15,2011

அயோத்தியில் இவ்வாறு மிகச்சிறப்பாக வேள்வி நடந்து கொண்டிருக்க, காட்டில் இருந்த வால்மீகி முனிவர், ராமனின் மைந்தர்களான லவகுசர்களை அழைத்தார். இப்போது வலகுசர்கள் ... மேலும்

temple

லவகுசா பகுதி-13மார்ச் 15,2011

காவலர்கள் போய் ராமனிடம் தகவல் சொல்லவே, லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர். தன்னைப் போலவே, அஞ்சன வண்ணத்தில் மிளிர்ந்த அந்த சிறுவர்களைக் கண்டு ராமபிரான் ஆனந்தம் கொண்டார். ... மேலும்

temple

லவகுசா பகுதி-14மார்ச் 15,2011

ராமனின் கட்டளைக்கிணங்க மறுநாள் குசலவர் அரண்மனைக்கு வந்தனர். ராமனுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே! நாங்கள் இங்கே வந்ததில் இருந்து, தங்கள் ...மேலும்

temple

லவகுசா பகுதி-15மார்ச் 15,2011

ஏவலர்கள் சொன்னதைக் கேட்ட சத்ருக்கனன் ஆச்சரியமடைந்தவனாய், குதிரை நின்ற இடத்திற்கு வந்தான். அங்கு நின்ற குழந்தைகளைப் பார்த்தவுடனேயே மனதில் மரியாதை ஏற்பட்டது. ஓ இவர்கள் ... மேலும்

2 Next >லவகுசா
temple

லவகுசா பகுதி-16மார்ச் 16,2011

அம்மாவின் முகத்தில் ஏதோ ஒரு கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கண்ட லவகுசர், அம்மா! தாங்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் உங்கள் முகக்குறிப்பு தெரிவிக்கிறது. உங்களுக்கு என்ன ... மேலும்

temple

லவகுசா பகுதி-17மார்ச் 16,2011

சகோதரனின் நிலை கண்ட அவன் கொதித்துப் போனான். நண்பர்கள் மூலம் நடந்ததை அறிந்த அவன், ஒரு சிறுவனை இவ்வாறு கட்டிப்போட வெட்கமாக இல்லையா? என லட்சுமணனிடம் கேட்டான். லட்சுமணன் அப்போதும் ... மேலும்

temple

லவகுசா பகுதி-18மார்ச் 16,2011

ராமபிரானால் அனுப்பப்பட்ட தூதன், வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து, சீதாதேவியும், தாங்களும் அயோத்திக்கு எழுந்தருள வேண்டும் என ஸ்ரீராமன் என்னிடம் தகவல் சொல்லி ...மேலும்

temple

லவகுசா பகுதி-19மார்ச் 16,2011

ஸ்ரீராமா! அமைதி வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று தான். ஆனால், சில சமயங்களில் அந்த அமைதியே பலரது வாழ்வை முடித்து விடுகிறது. பேச வேண்டிய நேரத்தில், தேவையானதை, அளவோடு பேச வேண்டும். அந்த ... மேலும்

temple

லவகுசா பகுதி-20மார்ச் 16,2011

ராமபிரானோ தன் முடிவில் உறுதியாக இருந்து விட்டார். அப்போது சீதாதேவி, என் கணவர் என்னை தீயில் இறங்கு என சொல்வது மட்டுமல்ல, இதுவரை அவர் எனக்குச் செய்த எல்லாமே எனக்கு செய்யப்பட்ட ... மேலும்

temple

லவகுசா பகுதி-21மார்ச் 16,2011

ஏ பூமாதேவியே! உன் மேலுள்ள கடல் எனது ஒரு அதட்டலுக்கு கட்டுப்படும் தன்மையுடையது. சீதையை மீட்க நான் இலங்கை சென்ற போது, அந்தக் கடல் வழிமறித்தது. நான் வில்லையும், அம்பையும் ...மேலும்

temple

லவகுசா பகுதி-22மார்ச் 16,2011

தன்னிலும் வேட்டையில் உயர்ந்தவர் யாருமில்லை என்ற கர்வம் என் தந்தையின் கண்ணை மறைத்தது. ஏனெனில், அவர் சப்தவேதனம் எனப்படும் வித்தையில் திறமை பெற்றிருந்தார். சப்தவேதனம் என்றால் ... மேலும்

temple

லவகுசா பகுதி-23மார்ச் 16,2011

மகனே! எங்களுடன் பேசமாட்டாயா? உன் தாய் படும் வேதனை உனக்கு புரியவில்லையா? பின்னிரவு வேளையில் நீ வேதம் ஓதுவது என் காதுகளில் இப்போதும் இனிமையாக ஒலிக்கிறது. மகனே! இனி எங்களை ... மேலும்

temple

லவகுசா பகுதி-24மார்ச் 16,2011

அத்திரி முனிவர் என்ற புகழ் பெற்ற முனிவர் இருந்தார். இவரது மனைவி அனுசூயா. ரிஷிபத்தினியான இவளது கற்புத்திறனை சொல்லி மாளாது. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை ...மேலும்

temple

லவகுசா பகுதி-25மார்ச் 16,2011

பாதகமில்லை ராமா! நான் லட்சுமணனுடன் சொல்லி அனுப்பியவுடனேயே வந்து விட்டாய். உனக்கு நினைவில்லையா? நீ மூடிசூட்டிய நாளில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து ஒருநாள் ... மேலும்

temple

லவகுசா பகுதி-26மார்ச் 16,2011

அண்ணா! கைகேயி தாயை எல்லோரும் தவறாகப் பேசுகிறார்கள். நம் தந்தையார், அவளது தந்தை கேகயனுக்கு ஒரு சத்தியவாக்கு கொடுத்திருந்தார். கைகேயிக்கும், அவளது குழந்தைகளுக்கும் ... மேலும்
ஏழுமலையான்
temple

ஏழுமலையான் பகுதி-1டிசம்பர் 27,2010

பாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில் கோல்கட்டாவுக்கும், டேராடூனுக்கும் இடையில் உள்ளது இந்தக் காடு. தற்காலத்தில் பெருமாளின் 108 ... மேலும்

temple

ஏழுமலையான் பகுதி-2டிசம்பர் 27,2010

ஒருவன் பசியால் மயக்கமடைந்து விட்டால், உடனே என்ன செய்வோம்? ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ஊட்டினால், அது தொண்டைக்குள் இறங்குமா? அதனால், முதலில் சிறிது தண்ணீரை அவன் ... மேலும்

temple

ஏழுமலையான் பகுதி-3டிசம்பர் 27,2010

பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது, அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. அனர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான ... மேலும்

temple

ஏழுமலையான் பகுதி-4டிசம்பர் 27,2010

ஆம்... பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மகாலட்சுமி எங்கிருக்கிறாள்? பெருமாளின் மார்பிலே இருக்கிறாள். தந்தையை மிதித்தது கூட மன்னிக்கத் தகுந்த குற்றம், இங்கே தாயார் மிதி ... மேலும்

temple

ஏழுமலையான் பகுதி-5டிசம்பர் 27,2010

லட்சுமி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வீட்டிலேயே எடுத்துக் கொள்வோமே! வேலைக்கு போகும் வரை மனைவி கணவனை  கொண்டாடுவாள், பிள்ளைகள் ஒன்றாம் தேதியானால் ... மேலும்

temple
தன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லட்சுமி மகேஸ் வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அவரிடம் சொல்லி தனது அவசரம் காரணமாக திருமால் பூலோகம் ...மேலும்

temple
பசு மேய்ப்பவன், அதை அடிக்கப் பாயவும், மரப் பொந்துக்குள் இருந்த ஸ்ரீமன் நாராயணன் அதைக் கவனித்து விட்டார். துள்ளி எழுந்தார்.ஏ கோபாலா! பசுவை அடிக்காதே, என்று துள்ளிக் குதிக்கவும், ... மேலும்

temple
தலையில் ரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது. காயம் அதிகமாக வலித்தது. அதை சகித்துக் கொண்டு, சீனிவாசன் நீண்ட தூரம் அந்தக் காட்டுக்குள் நடந்தார். அப்போது, தேவகுருவான ... மேலும்

temple
அந்தப் பெண் இப்படி பதறிப் போவதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில். கடந்த யுகத்தில் அவளே ஆயர்குலத்தில் யசோதையாக அவதரித்து, கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றவள். அவனைப் பெற்ற ...மேலும்

temple
சுவாமி! நான் கலியுகத்தில் மக்கள் படும் கஷ்டங்களை  துடைப்பதற்காக பூமிக்கு வந்தவன். நானும் நீங்களும் ஒன்றே. நாராயணனான நாம், மக்களின் நன்மை கருதி, பல்வேறு அவதாரங்கள் எடுத்தோம். ... மேலும்

temple
மாசுலுங்கி அவனது பிடியில் இருந்து தப்பி ஓடினாள். நமக்கு ஆபத்து வரும் காலத்தில் ஹரி ஹரி ஹரி ஹரி என்று விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். ... மேலும்

temple
ஒரு கட்டத்தில், நாககன்னிகை குழந்தையை சுதர்மனிடம் ஒப்படைத்து விட்டு தனது லோகத்துக்கு போய்விட்டாள். குழந்தை தொண்டைமானை அழைத்துக் கொண்டு சுதர்மன் அரண்மனை வந்து சேர்ந்தான். ... மேலும்

temple
நாரத முனிவரைப் பணிவுடன் வரவேற்றாள் பத்மாவதி.அப்போது அவளுக்கு பதினைந்து வயது. பருவத்துக்கு வந்துவிட்ட மங்கை. நம் வீட்டுக்கு வரும் அழகான மருமகளை எங்கவீட்டு மகாலட்சுமி என்று ...மேலும்

temple
சீனிவாசன் காட்டுக்குள் சென்று சிங்கம், புலி முதலானவற்றைக் கொன்று குவித்தார். யானைகளை விரட்டியடித்தார். முள்ளம்பன்றிகள் அவரது முழக்கம் கேட்டு மூலைக்கொன்றாக சிதறி ஓடின. ... மேலும்

temple
சீனிவாசன் அவளது பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. சற்றும் தயங்காமல் அவளை நெருங்கி காதல் மொழி பேசினார். சுந்தரியே! இனி என் சொப்பனத்தில் உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இடம்பெற ... மேலும்

2 Next >ஏழுமலையான்
temple
தாய் பெண் கேட்டுச் சென்றாலும் மனம் பொறுக்காத சீனிவாசன், பத்மாவதியை அப்போதே பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும், அவளிடம் திருமண உந்துதலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் ... மேலும்

temple
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது காவலன் வந்து நின்றான். அரசே! தங்களைக் காண ஒரு அம்மையார் வந்திருக்கிறார். அவரது முகத்தில் நிறைந்த தேஜஸ் காணப்படுகிறது. கானகத்தில் ...மேலும்

temple
சுகமகரிஷி சேஷாசலத்தை அடைந்து சீனிவாசனைச் சந்தித்தார். சீனிவாசன் அவரைத் தக்கமரியாதையுடன் வரவேற்று அமரச் சொன்னார். சீனிவாசனிடம் அவர் முகூர்த்த பட்டோலையை வழங்கினார். அதைப் ... மேலும்

temple
குபேரா! இப்போது நடப்பது கலியுகம். இந்த யுகம் பணத்தின் மீதுதான் சுழலும். எல்லாரும் பணம் பணம் என்றே அலைவார்கள். செல்வத்தைத் தேடியலையும் அவர்கள் பல பாவங்களைச் செய்வார்கள். ... மேலும்

temple
திருமணப் பத்திரிகையை முதலில் பிரம்மா-சரஸ்வதிக்கு வழங்கிய கருடாழ்வார், பின்னர் சிவ பார்வதி, இந்திரன்- சசிகலா, நாரத முனிவர், தேவகுரு பிரகஸ்பதி, அஷ்டதிக் பாலகர்கள் ... மேலும்

temple
மறுநாள் முகூர்த்தம்... பத்மாவதியை தங்க மாலைகளால் அலங்கரித்து, நவரத்தினக் கற்கள் இழைந்த ஒட்டியாணம் பூட்டி, தோள்வளை, கை வளைகள் பூட்டி மணமேடைக்கு அழைத்து வந்தனர். ஆகாசராஜன் ...மேலும்

temple
திருமணம் நல்லவிதமாக நடந்தேறியதும், ஆகாசராஜன் சீனிவாசனிடம், அன்பிற்குரிய மருமகனே! நீர் காட்டுக்குள் வந்த போது, உமது காதலை அறியாத பத்மாவதி உம் மீது கல்லால் அடித்தாள். அதை மனதில் ... மேலும்

temple
தொண்டைமான் சீனிவாசனிடம், மருமகனே! நாராயணபுரம் எனக்கே சொந்தம் என நான் வாதிடுகிறேன். என் அண்ணன் மகனோ அவனுக்கே வேண்டும் என்கிறான். தந்தைக்குப் பிறகு மகனா? அண்ணனுக்குப் பிறகு ... மேலும்

temple
இதற்குள் சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விடவே அவர்கள் அகஸ்தியரின் ஆஸ்ரமத்தில் இருந்து (சீனிவாசமங்காபுரம்) கிளம்பினர். தொண்டைமானால் எழுப்பப் ... மேலும்

temple
அப்போது சிலையினுள் இருந்து சத்தம் எழுந்தது. அம்மா ! தாங்கள் என் நிலைக்காக கவலை கொள்ளக் கூடாது. லட்சுமியைத் தேடி பூலோகம் வந்த என் செயல்பாடுகள் முடிந்து விட்டன. இனி என் அண்ணா ...மேலும்

temple
மன்னர் கிருஷ்ணதேவராயர் மகாநீதிமான். எதையும் எளிதில் விசாரிக்காமல் செய்யமாட்டார். அது மட்டுமல்ல, அவரும் பெருமாள் பக்தர். பெருமாளின் திவ்யலீலைகளை அவர் அறிவார். தன் முன்னால் ...மேலும்

 கந்தபுராணம்
temple

கந்தபுராணம் பகுதி-1டிசம்பர் 27,2010

இந்து சமயத்தில் மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. அதில் ஒன்று கந்தபுராணம். வாசகர்களின் வசதிக்காக கந்தபுராணம் கதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆழ்ந்த ... மேலும்

temple

கந்தபுராணம் பகுதி-2டிசம்பர் 27,2010

தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா.முனிவரே ! தாங்கள் என் காலிலேயே சரணடைந்து விட்டதால், உமது ஆசைக்கு இணங்குகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, நான் பேரழகி. ... மேலும்

temple

கந்தபுராணம் பகுதி-3டிசம்பர் 27,2010

அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர்.அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று கொண்டிருந்தார். காஷ்யபா ! இதென்ன கோலம் ? மன்மதனின் இலக்குக்கு தப்பியவர்கள் ... மேலும்

temple

கந்தபுராணம் பகுதி-4டிசம்பர் 27,2010

முதியவராய் வந்தவர், வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. ஆம்... முதியவராக வந்து கங்கையைச் சிந்தி, யாக குண்டத்தை அணைத்தது சிவபெருமான் தான். அங்கே ... மேலும்

temple

கந்தபுராணம் பகுதி-5டிசம்பர் 27,2010

அழகாபுரி அரசன் குபேரன் அசுரப்படையின் அத்துமீறல் கண்டு அதிர்ந்து போனான். அவனுக்கு அசுரர்கள் சிவபெருமானிடம் வரம் பெற்ற வரலாறு முழுமையாகத் தெரியும். சூரபத்மனை வெல்ல இயலாது ...மேலும்

temple
இப்போது அசுரப்படை வைகுண்டத்தை முற்றுகையிட்டு விட்டது. மகாவிஷ்ணு அனைத்தும் அறிந்தவரல்லவா ? அவர் சயனத்தில் ஆழ்ந்திருப்பதென்ன தூக்கத்திற்கு ஒப்பானதா ? சர்வ வியாபியான அவருக்கு ... மேலும்

temple
அஜாமுகி துர்வாசரை மறித்து தன் இச்சைக்கு அடி பணியச் சொன்னாள். தவ சிரேஷ்டரான அவர் இக்கொடுமையை செய்ய முடியாது என மறுத்த பிறகும், அவரைப் பல வந்தப்படுத்தினாள். இதன் விளைவாக ...மேலும்

temple
குழந்தைகளை வளர்க்க முன்வந்த கார்த்திகை பெண்களை சிவபெருமான் பாராட்டினார். அப்போது திருமால் அப்பெண்களிடம், தேவியரே ! நீங்கள் ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், ... மேலும்

temple
குளத்தில் நீந்திய மீன்களில் பல முனிவர்களாக வடிவெடுத்தன. அவர்கள் பற்பல சாபங்களால் மீன்களாக மாறியிருந்தவர்கள். கந்தனுக்கு ஊட்டப்பட்ட பாலின் மகிமையால் அவர்கள் தங்கள் ...மேலும்

temple
மேருமலையையே கிள்ளி எறியும் பாலமுருகனின்  செயல்கண்டு இந்திராதி தேவர்கள் ஆச்சரியமும் ஆத்திரமும் கொண்டனர். உலகில் தாங்கள் தான் பெரியவர்கள் என்ற மாயை கண்களை மறைத்தது. எனவே, ... மேலும்

temple
விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம். எனது அவதாரமே சூரவதத்தின் ...மேலும்

temple
பிரம்மன் முருகனைப் பற்றி ஏற்கனவே அறிவார். அவன் தன்னால் உருவாக்கப்பட்டவன் அல்ல; சாட்சாத் பரமசிவனின் நேரடி வடிவம் என்பதை உணர்ந்தவராதலால், மிகவும் பவ்வியமாக முருகன் முன் கை ... மேலும்

temple
அன்பு மகனே ! நீ கூறுவது வாஸ்தவம் தான். தனக்கு மந்திரம் கற்றுக்கொடுத்த குருவை ஒருவன் பலர் முன்னிலையில் புகழ்ந்து பேசலாம். ஆனால், அவர் கற்றுத்தந்த மந்திரத்தை ரகசியமாக ... மேலும்

temple
அனைத்தும் அறிந்த முருகன், அப்பெண்களைப் பற்றி ஏதுமறியாதவர் போல, பெண்களே ! நீங்கள் யார் ? எதற்காக என்னை குறித்து தவமிருந்தீர்கள் ? என்றார். ஐயனே ! இந்த அண்டம் முழுவதும் ... மேலும்

temple
முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார். வீரபாகு ! நான் யாரையும் அழிக்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல. என்னை தனிப்பட்ட முறையில் திட்டுபவர்களைக் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், ...மேலும்

2 Next >


கந்தபுராணம்
temple
வீரபத்திர அஸ்திரத்தைக் கண்டு நடுங்கிய தாரகன், அங்கிருந்து தப்பித்தால் போது மென ஓட்டம் பிடித்தான். கிரவுஞ்சமலைக்குள் அவன் புகுந்து தன் வடிவத்தை சுருக்கிக் கொண்டு, ஒரு ... மேலும்

temple
வடிவேலனைப் பார்த்து அதிசயித்து மெய்மறந்த தாரகன், அவரிடம் பேசினான். முருகா ! உன்னைப் பெற்றதால் அந்த பரமசிவனார் பாக்கியசாலி ஆகிறார் அன்பனே ! எங்கள் அசுர வம்சத்திற்கும், தேவ ...மேலும்

temple
அசுரேந்திரன் அரண்மனைக்குள் ஓடிச் சென்று பெரியப்பாவின் காலில் விழுந்தான். சூரபத்மனுக்கு அவனது கலவரத்திற்கான காரணம் புரியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி தம்பி மகன் இப்போது ...மேலும்

temple
சூரபத்மனின் தூதர்கள் பல்வேறு உருவங்களில் முருகனைப் பற்றிய ரகசியங்களை அறியப் புறப்பட்ட வேளையில், முருகப்பெருமானும் தன் தம்பியருடன் சூரனை அழிப்பதற்கான மந்திராலோசனையில் ... மேலும்

temple
அன்றிரவில் ஜெயந்தனின் கனவில் தோன்றிய வடிவேலன், ஜெயந்தா ! நீயும் தேவர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை. நான் விரைவில் வந்து உன்னை மீட்டு உனக்கு பெருமையும் தேடி தரப்போகிறேன். என் ...மேலும்

temple
வீரபாகு சூரனின் மிரட்டலை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சூரபத்மா ! மீண்டும் எச்சரிக்கிறேன் ஜெயந்தனை விடுதலை செய்கிறாயா ? அல்லது உன்னை நானே கொன்று போட்டு விடட்டுமா ? என்றான் ... மேலும்

temple
சிங்கமுகா ! அந்தச் சிறுவன் முருகனைக் கண்டா நடுங்குகிறாய் ? கேவலம். அசுர குலத்துக்கே கேவலம்... உன்னைத் தம்பியாக அடைந்ததற்காக வேதனைப்படுகிறேன், என்றான் சூரபத்மன். நல்லதை ... மேலும்

temple
தன் குமாரன் பானுகோபனின் தோல்வி சூரபத்மனை எரிச்சலடைய செய்தது. கடும் கோபமாக இருந்த அவன், இனி யாரையும் நம்பி பயனில்லை. நானே நேரில் யுத்தகளத்திற்கு செல்கிறேன். அந்தச்சிறுவன் ... மேலும்

temple
வீரபாகுவைக் கண்டதும் பத்மாசுரன் அகோரமாக சிரித்தான். அடேய் ! நீயா ! அன்று நீ தானே எனது அவைக்கு தூதனாக வந்தவன் ! அன்றே உன்னைக் கொன்றிருப்பேன். நீயோ மாய வடிவில் தப்பி விட்டாய். ...மேலும்

temple
சூரபத்மன் போர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேளையில், அவனது மனைவி பத்மகோமளாவும், மகன் பானுகோபனும் வந்தனர். தந்தையின் மனநிலையை அறிந்த பானுகோபன், அப்பா ! நீங்கள் செய்தது ... மேலும்

temple
அந்த அஸ்திரம் வீரபாகு உள்ளிட்ட அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யவே, ஆரவாரம் செய்த பானுகோபன் அவர்களின் கை, கால்களைக் கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிட்டான். இந்த விபரம் ... மேலும்


நாரதர்
temple

நாரதர் பகுதி-1டிசம்பர் 24,2010

கந்தர்வ லோகம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது. இவர்களில் உபன் மிக மிக சந்தோஷத்தில் இருந்தான். ஆம்... அன்று அவனுக்கு மகன் பிறந்திருந்தான். அவன் மனைவி குழந்தையை அருகில் படுக்க ...மேலும்

temple

நாரதர் பகுதி-2டிசம்பர் 24,2010

உபவருக்கன் அவளைப் பார்த்தபடியே வீணை மீட்டி பாடியதில் எங்கோ இடறி விட்டது. இதை பிரமசிரேஷ்டர் கவனித்து விட்டார்.அடப்பாவி! என் யாகத்தைக் கெடுப்பதற்கென்றே வந்தவனே! நீ ... மேலும்

temple

நாரதர் பகுதி-3டிசம்பர் 25,2010

கணவனை வசப்படுத்த மனைவிக்கு நன்றாகவே தெரியும். கெஞ்சினால் மிஞ்சுவார்கள்; மிஞ்சினால் கெஞ்சுவார்கள். மிஞ்சிப்பார்த்த லட்சுமியை நாராயணன் கேலியான தொனியில் பேசியதால், லட்சுமி ... மேலும்

temple

நாரதர் பகுதி-4டிசம்பர் 25,2010

தலைவாணி மனமிரங்கினாள். குழந்தை கேட்டால் தாய் தரமாட்டாளா என்ன! தன்னிடமுள்ளது போலவே ஒரு சிறிய வீணையை உருவாக்கி பிரம்மபுத்திரனிடம் கொடுத்தாள். அதை மீட்டும் வல்லமையுடன், பாடும் ... மேலும்

temple

நாரதர் பகுதி-5டிசம்பர் 25,2010

பகவான் கிருஷ்ணன் ஒருமுறை நாரதரை அழைத்தார். பிரம்மபுத்திரனான உனக்கு லோக நன்மை கருதி, ஒரு பணி தரப்போகிறேன். அதை செய்து முடிக்க சரியான ஆள் நீ தான். இதை தயவுதாட்சண்யமின்றி செய்ய ... மேலும்

temple

நாரதர் பகுதி-6டிசம்பர் 25,2010

லட்சுமிதேவி நேராக நாராயணனிடம் சென்றாள். அன்பரே! தங்கள் மீது நான் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறேன் என்பதைத் தாங்களே அறிவீர்கள்! உங்கள் மார்பிலேயே குடியிருப்பவள். நீங்கள் ... மேலும்

temple

நாரதர் பகுதி-7டிசம்பர் 25,2010

சத்தியலோகம் களை கட்டியிருந்தது. அன்னை கலைவாணி இசைத்த வீணாகானம் அந்த லோகத்தை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. தேவருலகம் அந்த கானத்தில் மயங்கிக் கிடந்தது. இந்திரலோகத்தில் ...மேலும்

temple

நாரதர் பகுதி-8டிசம்பர் 25,2010

பிரம்மனுக்கு இன்னும் தர்மசங்கடமாகி விட்டது. இருப்பினும், நாரதன் மீது எந்த பழுதும் இல்லை என்பதால் மகிழ்ச்சி கொண்ட அவர், நாராயணா! தாங்களும், சிவனும் ஏதோ லீலை நடத்த எண்ணி ... மேலும்

temple

நாரதர் பகுதி-9டிசம்பர் 25,2010

நாராயணனின் சாபத்தால் பூமியில் பிறந்த ஜெய, விஜயர்கள் காஷ்யபருக்கும், அதிதிக்கும் மக்களாகப் பிறந்தனர். மூத்தவன் இரண்யாட்சன் என்றும், இளையவன் இரண்யன் என்றும் அழைக்கப்பட்டனர். ... மேலும்

temple

நாரதர் பகுதி-10டிசம்பர் 25,2010

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் கண்டிப்பாக இறந்தாக வேண்டும். ஆனால், தவம் செய்வோர் அழியாவரம் பெறுவர். ஆனால், எந்தெந்த சக்திகளால் அழிவு வரக்கூடாது என்று கேட்டுப் பெற வேண்டும். ...மேலும்

temple

நாரதர் பகுதி-11மார்ச் 10,2011

முருகப்பெருமானே! மன்னிக்க வேண்டும். என் கிரகம் அப்படி! நான் எங்கு போனாலும், கலகத்தை மூட்டுபவன் என்றே என்னை எண்ணுகிறார்கள். நான் தற்செயலாகத்தான் சீதனம் பற்றி கேட்டேன். தாங்கள் ... மேலும்

temple

நாரதர் பகுதி-12மார்ச் 10,2011

திருப்பரங்குன்றத்தில் நிலையாக இருக்கும் தகுதி பெற்றாலும், நாரதர் தன் சர்வலோக பயணத்தை தொடர்ந்து நடத்தினார். ஒருமுறை அவர் வைகுண்டம் சென்றார். அப்போது திருமாலும், லட்சுமியும் ... மேலும்

temple

நாரதர் பகுதி-13மார்ச் 10,2011

அதை ஏன் கேட்கிறீர்கள் தந்தையே! திருமாலைச் சேவிக்க வைகுண்டம் சென்றேன். என்னைக் கண்டதும், லட்சுமி தாயார் எழுந்து ஓடினார்கள். மகன் போன்ற என்னைக் கண்டுமா தாயார் ஓட வேண்டும். நான் ...மேலும்

temple

நாரதர் பகுதி-14மார்ச் 10,2011

நாரதர் பதைபதைத்தார். அந்த தாயிடம், அம்மா கவலைப்படாதே! நான் இந்த ரிஷிகுமாரர்களுடன் சனகாதி முனிவர்களைத் தேடிச் செல்கிறேன். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற பெயர் கொண்ட ...மேலும்

temple

நாரதர் பகுதி-15மார்ச் 10,2011

நாரத முனிவரே! தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. உலகில் பாவம் செய்து இறந்த ஒருவனை நரகத்திற்கு எடுத்து செல்கிறீர். புண்ணியம் செய்தவர்கள் இங்கே வருவதே இல்லை. அவர்களை ...மேலும்

2 Next >


நாரதர்
temple

நாரதர் பகுதி-16மார்ச் 10,2011

அவள் அந்தக் குழந்தையை காட்டில் வீசியெறியும் முன், ஒருவேளை குழந்தை பிழைத்து விட்டால் என்னாவது என்ற எண்ணத்தில், கையோடு கொண்டு சென்றிருந்த விஷப்பாலைக் கொடுத்து மிருகங்கள் ... மேலும்

temple

நாரதர் பகுதி-17மார்ச் 10,2011

குழந்தையின் சொல்கேட்டு சித்ர கேது மனம் திருந்தினான். வாழ்க்கை என்றால் இன்னதென்று இப்போது அவனுக்கு வெகுவாகவே விளங்கி விட்டது. அவன் நாட்டை விட்டு தவமிருக்க போய்விட்டான். ... மேலும்

temple

நாரதர் பகுதி-18மார்ச் 10,2011

திலோத்துமை மிக அழகாக இருந்தாள். இப்படியொரு ஈடிணையற்ற அழகியைப் பார்த்ததும் எனக்கே அவள் மீது ஆசை வந்து விட்டது, என்ற பிரம்மா, மகனிடம் மேலும் பேசாமல் கூசி நின்றார். சொல்லுங்கள் ...மேலும்

temple

நாரதர் பகுதி-19மார்ச் 10,2011

தர்மா! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இப்படி சொல்லவில்லை. கஷ்டங்கள் இயல்பானவை. அவற்றை விரட்டும் வழியைத் தான் பார்க்க வேண்டும். தெய்வங்களே கூட கஷ்டப்பட்ட ஒரு ... மேலும்

temple

நாரதர் பகுதி-20 மார்ச் 10,2011

இது என்ன புதுப்பூதம்? என்ற திருமால், மனைவியிடம், லட்சுமி! உன் சகோதரன் தேவர்களைப் படுத்தும் பாட்டை நீ அறிவாயா? இப்படிப்பட்ட சகோதரனுக்காக எப்படி பரிந்து பேச முடிகிறது? என்றார் ... மேலும்

temple

நாரதர் பகுதி-21மார்ச் 10,2011

நாரதர் வானில் இருந்து கீழே இறங்கவும், அவர்கள் ஓடிவந்து காலில் விழுந்தனர். மகாமுனிவரே! உங்கள் கையில் தான் எங்கள் வாழ்வே இருக்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள், என்றனர். அவர்களின் ...மேலும்

temple

நாரதர் பகுதி-22மார்ச் 10,2011

அணிலா! அவ்விமோசனம் பற்றி முதலில் சொல். என்னால் முடியுமானால் தீர்த்து வைக்கிறேன், என்றார் நாரதர். முற்றும் அறிந்த முனிவரே! தாங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அறியாதவர் போல் ...மேலும்

temple

நாரதர் பகுதி-23மார்ச் 10,2011

ஒருவழியாக எட்டு நாட்களும் கடந்தன. நாகராஜனான பத்மன் ஊர்வந்து சேர்ந்தான். அவனிடம், நடந்ததைச் சொன்னாள் அவனது மனைவி. சற்று கூட ஓய்வெடுக்காமல், உடனே புறப்பட்டான் பிருகுவைச் ... மேலும்

temple

நாரதர் பகுதி-24மார்ச் 10,2011

வாழ்க! வாழ்க சூரியதேவா! என சூரிய பகவானை வாழ்த்திய நாரத மாமுனிவர், சூரியனே! உன் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதால் சற்று ... மேலும்

temple

நாரதர் பகுதி-25மார்ச் 10,2011

மகாபலி மன்னன் இப்போது செல்வந்தன் அல்ல. அவன் இருப்பதையெல்லாம் இழந்து விட்டவன். திருமாலிடம் அனைத்தையும் தானம் செய்து பெரும்பேறு பெற்று, அவரது திருவடியால் அழுத்தப்பட்டு, பாதாள ... மேலும்

temple

நாரதர் பகுதி-26மார்ச் 10,2011

நாரதமுனிவரே! அசுரமன்னனான மகாபலி, எனக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கினான். நாராயணனின் திருக்காட்சியைப் பெற்றான். அவரால் ஆட்கொள்ளப்பட்டான். ஒரு அசுரனுக்கு கிடைத்த இந்த ...மேலும்


நளதமயந்தி
temple

நளதமயந்தி பகுதி-1டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், மனைவியையும் பணயம் வைத்து அவமானப்பட்டோம். என் ஒருவனது தவறான முடிவால், ... மேலும்

temple

நளதமயந்தி பகுதி-2டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் தெரியாதவர் என்றாலும், அந்த முனிவரின் முகத்தில் இருந்த தேஜஸ் அவனைக் ... மேலும்

temple

நளதமயந்தி பகுதி-3டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அப்பனே! நானோ முற்றும் துறந்தவன், நீயும், உன் ... மேலும்

temple

நளதமயந்தி பகுதி-4டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். குருவியைப் பார்த்தால் காலையிலேயே உழைக்க ... மேலும்

temple

நளதமயந்தி பகுதி-5டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு கொண்டிருந்தோம். ஒருநாள், தமயந்தி நாங்கள் அலைந்து கொண்டிருந்த தடாகத்தின் ...மேலும்

temple
மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் உயர்ந்தவள் இந்த உலகில் யாருண்டு! கவலை கொள்ளாதே! உடனே நிடதநாடு நோக்கி ... மேலும்

temple
நாராயணா! என்ற மந்திரத்தை முழக்கியபடியே சென்ற நாரதரை இந்திரன் வரவேற்றான்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணையும் குளிரச் செய்யும் வகையில் மகதி என்னும் யாழ் மீட்டி இனிமையாய் பாடும் ...மேலும்

temple
அப்போது தான் இன்னொரு சிக்கலும் எழுந்தது.தன் விஷயம் ஒருபக்கம் இருக்கட்டும்! தேவர்கள் அவர்கள் பாட்டுக்கு, தமயந்தியிடம் தங்களுக்காக தூது செல் என சொல்லிவிட்டார்கள். தமயந்தி ... மேலும்

temple
தேவர்கள் சென்ற பிறகு, நளன் மன்னர்கள் தங்கியிருந்த அரண்மனைக்குப் போய்விட்டான்.தமயந்தி ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள்.யாரைக் காதலித்தோமோ, அவனே, மற்றவர்களுக்கு என்னைக் ... மேலும்

temple
நிஜமான நளனும் இங்கிருக்கிறான். மற்றவர்களும் எனது கண்களுக்கு மட்டுமே தெரியும்படி நளனைப் போலவே இருக்கின்றனர். தேவர்களை அடையாளம் காண்பது எளிது. தேவர்களின் கண்கள் இமைக்காது. ...மேலும்

temple

நளதமயந்தி பகுதி-11பிப்ரவரி 16,2011

வழியில், அவர்கள் ஒரு சோலையில் இளைப்பாறினர்.அந்தச் சோலையில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் இறங்கி நள தமயந்தி தம்பதியர் நீராடி மகிழ்ந்தனர். கரையேறிய தமயந்தியிடம் நளன்,  ...மேலும்

temple

நளதமயந்தி பகுதி-12பிப்ரவரி 16,2011

ஏற்கனவே, சனீஸ்வரர்  தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்தபோது, தாமதமாக வந்ததால், அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. மேலும், தமயந்தி தேவர்களைப் புறக்கணித்து, நளனுக்கு மாலையிட்டு ...மேலும்

temple

நளதமயந்தி பகுதி-13பிப்ரவரி 16,2011

புட்கரா! சூதாட்டம் மன்னர்களுக்கே உரித்தான இனிய பொழுதுபோக்கு. ஆம்...யாராவது ஒருவருக்கு...ஏனெனில், இதில் ஒருவர் தன் பொருளை இழந்து விடுவாரே! நளனைப் பற்றுவதற்கு நான் மிகுந்த ... மேலும்

temple

நளதமயந்தி பகுதி-14பிப்ரவரி 16,2011

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரதுமுதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். புதுமணத்தம்பதிகளைசிவபார்வதி ...மேலும்

temple

நளதமயந்தி பகுதி-15பிப்ரவரி 16,2011

விதி தான் நளனைப் போட்டுப் பார்க்க வேண்டுமென முடிவு செய்து விட்டதே! அதிலும் சனீஸ்வரர் ரூபத்தில் அல்லவா வந்துள்ளது! இந்த சனீஸ்வரர் போல் உத்தமமான கிரகம் உலகில் இல்லை. அதனால் தான் ... மேலும்

2 Next >


நளதமயந்தி
temple
சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து ... மேலும்

temple
இன்றிரவு தங்கிப் போகலாமே, என்று தமயந்தி சொல்லவில்லை, ஆனால், அவளது பார்வையின் பொருள் நளனுக்கு அவ்வாறு இருந்ததால், அவனும் மக்களுடன் தங்கலாமே என எண்ணி, அவர்களிடம் ஒப்புதல் ... மேலும்

temple
அவள் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.அன்பரே! நீங்களா இப்படி சொன்னீர்கள்! காதல் வயப்பட்டு நாம் கிடந்த காலத்தில், கடைசி வரை ... மேலும்

temple
தமயந்தி நளனிடம்,  தாங்கள் செங்கோல் ஏந்தி முறை தவறாத ஆட்சி நடத்தினீர்கள். அப்படிப்பட்ட தர்மவானான உங்களிடம் ஒரு யோசனை சொல்கிறேன். இதையாவது, தயவு செய்து கேளுங்கள். நாம் காட்டு ...மேலும்

temple
பெண்களைஎந்தச் சூழலிலும் தங்கத்தின் மீதான ஆசை விடாது போலும்! கணவனுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையிலும், அந்த தங்கநிற பறவை மீது தமயந்தியின் கண்பட்டது.ராமபிரான் ... மேலும்

temple
பின்பு தன் கணவனிடம், மகாராஜா! நமக்கு துன்பம் வந்தால் தெய்வத்திடம் முறையிடலாம். ஆனால், தெய்வமே நமக்கு துன்பம் தர முன்வந்துள்ள போது, அதை யாரிடத்தில் முறையிட முடியும்! ஆம்..இது நம் ... மேலும்

temple
ந ளன் கிளம்பி விட்டான். இரண்டடி நடந்திருப்பான், மனம் கேட்கவில்லை. மீண்டும் வந்து தமயந்தியை எட்டிப்பார்த்தான். ஏதுமறியா, அந்த பிஞ்சு இதயத்திற்கு சொந்தக்காரியான அவள், பச்சைமழலை ... மேலும்

temple
வேடன் இப்படிச் சொன்னானோ இல்லையோ!அட தெய்வமே! இப்படி ஒரு சொல் என் காதில் விழுந்ததை விட, அந்தப் பாம்பின் பசிக்கே என்னை இரையாக்கி இருக்கலாமே! இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது? என ... மேலும்

temple
சேதிநாட்டரசி முன் நின்ற அந்தணர்,தேவியே! தங்கள் முன் நிற்கும் இந்தப்பெண்ணை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? என்றார். அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள். தமயந்தியிடம்,இவர்கள் ... மேலும்

temple
அரசே! இந்த ஆடையைப் போர்த்திக் கொண்டால் நீ உன் உண்மை உருவை அடைவாய். ஆனால், இப்போதைக்கு இதை அணியாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். இனி நீ வாகுகன் (அழகு குறைந்தவன்) என அழைக்கப்படுவாய். ... மேலும்

temple
ருப்பில்லாமல் சமைக்கிறான் என்றால், அவன் நிச்சயம் தன் கணவன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் அவள். நெருப்பினால் அவனுக்கு எந்த இடைஞ்சலும் வராது என்ற வரத்தைத் தந்த அதே ...மேலும்
சுந்தரகாண்டம்
temple
தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ராமனுக்கு தேவர்கள் மட்டுமல்ல, ரிஷிகள், மனிதர்களுடன் விலங்குகளும், பறவைகளும் ... மேலும்

temple
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி சொல்லியனுப்பினார். அனைவரும் வாயுவிடம் ஓடிவந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கவே, ...மேலும்

temple
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் தேர்ந்தெடுத்து காயத்ரி மந்திரம் உருவாக்கப்பட்டது. கிஷ்கிந்தா காண்டத்துடன் 11 ஆயிரம் ... மேலும்

temple
ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் அல்லவா இப்போது வேகம் கொண்டிருக்கிறது. சீதாவைக் காண்போமா! அவளை ராமபிரானிடம் ... மேலும்

temple
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் வரும். நல்லது செய்யப் போனாலும் சிலருக்கு கெடுதலாகத் தெரியும். ஆஞ்சநேயர், ... மேலும்

temple
சுரசா! வாயுபுத்திரன் ஆஞ்சநேயன் ஆகாயவழியில் வருகிறான். அவனுக்கு சற்றுநேரம் இடைஞ்சல் கொடு. நீ வைக்கும் தேர்வில், அவன் தப்பிப் பிழைக்கிறானா பார்ப்போம், என்றனர்.மனிதனுக்கு ... மேலும்

temple
ஆஞ்சநேயருக்கு பறக்கும் சக்தி இருக்கிறது என்பதில் ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது தெரியுமா? ஒரு பறவை பறக்கிறது என்றால், மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதற்கு ஏதாவது பிடிப்பு ... மேலும்

temple
தன்னை மறித்த லங்காதேவியை ஒரே அடியில் அவர் வீழ்த்தினார். எப்படி அடித்தாராம் தெரியுமா?பெண்களிடம் ஆண்கள் வீரத்தைக் காட்டக்கூடாது. லட்சுமணன் கூட அவசரப்பட்டிருக்கிறான், ... மேலும்

temple
சுந்தரகாண்டத்தை பாராயணம் செய் என்று சொல்பவர்கள், அயோத்தியா காண்டத்தையோ, யுத்த காண்டத்தையோ இன்னும் பிற காண்டங்களையோ படி என்று சொல்லவில்லை. காரணம் என்ன? அத்தனை காண்டங்களின் ... மேலும்

temple
ஆஞ்சநேயர் சீதாபிராட்டியைத் தேடும் போது, அவளை ஜனகபுத்திரி என்று குறிப்பிடுகிறார் வால்மீகி. ராமனின் பத்தினியான பிறகும், தந்தையாகிய ஜனகருக்கு இப்படி ஒரு மரியாதை ... மேலும்

temple
அவளைப் பார்த்தவுடன் ஆஞ்சநேயரின் முகத்தில் மிகுந்த சோகம் தென்பட்டது. ஜனகரின் அரண்மனையில் செல்வமகளாக பிறந்து, தசரதரின் வீட்டில் மகாராணி போல் குடிபுகுந்து, ஆடம்பரமான வாழ்வை ... மேலும்

temple
இப்படியும் ஒரு கொடியவனா? கேவலம், பெண்ணின்பத்திற்காக உலகையே ஜெயித்து தருவதாகக் கூறுகிறானே? இப்படிப்பட்ட மனநிலையில், சீதாதேவி ஒரு துரும்பை எடுத்து தனக்கும், ராவணனுக்கும் ... மேலும்

temple
அவர்கள் சீதையிடம், சீதா! நீ இவனைக் கண்டு கலங்க வேண்டாம். இவன் ஒரு அற்பன், என்றனர். இதனால், தைரியமடைந்த சீதா, ராவணனிடம் வீரத்துடன் பேசினாள். பெண்கள் கஷ்ட காலத்தில் மிகுந்த ... மேலும்

temple
அப்போது, சில அரக்கிகள் கோடலிகளை தூக்கினர். சீதையை வெட்டுவதற்காகப் பாய்ந்தனர்.நாங்கள் உனக்கு ராவணனைப் பர்த்தாவாக அடையும் நன்மையைப் போதித்தால், நீ என்னென்னவோ ...மேலும்

temple
திரிஜடை! என்ன சொல்கிறாய்? இவள் மானிடப்பிறவி. இவளுக்கு துன்பமிழைப்பதால் நமக்கு என்ன கேடு நேர்ந்து விடும்? என ராட்சஷிகள் கேட்டனர். நீங்கள் நினைப்பது போல் இவள் சாதாரணமானவள் இல்லை. ... மேலும்

2 Next >

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


சுந்தரகாண்டம்
 
temple
தசரதர் என்ற மாமன்னரின் புத்திரனாய் அவதரித்தவர் ஸ்ரீராமன். அவர் பவுர்ணமி நிலா முகம் போன்ற முகமுடையவர். வில்வித்தையில் உலகிலேயே உயர்ந்தவர். பல ராட்சஷர்களை அழித்து வெற்றி வாகை ...மேலும்
 
temple
வானரனே! மக்களுக்கு ஏதாவது கஷ்டமும், பிரச்னையும் ஏற்படும் சமயத்தில் ராமனுக்கு உற்சாகமும், சந்தோஷமும் அதிகரிக்கும், என்பதே அந்த வார்த்தை.இதைப் படித்தவுடன் சற்று ... மேலும்
 
temple
நட்பு என்பது வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. மகளை ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பவர், வேலை, குடும்பப் பின்னணி இவையெல்லாம் நன்றாக இருந் தாலும் கூட, மிக முக்கியமாக ...மேலும்
 
temple
பின்னர் அவனுக்கு ஆறுதல் வரும் வகையில் பேசினாள்.ஆஞ்சநேயா! உன் தேஜஸ், பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். உன்னோடு நான் வந்தேன் என்றால், நீ வேகமாக பறந்து செல்லும் போது, காற்றின் ...மேலும்
 
temple
சுந்தரகாண்டம் என்றால் என்ன? ஆஞ்சநேயர் கிஷ்கிந்தையில் இருந்து கிளம்பி, இலங்கை சென்று, சீதையைச் சந்தித்து, அசோகவனத்தை அழித்து, ராவணன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ...மேலும்
 
temple
யாரடா அங்கே! உடனே செல்லுங்கள், அந்த வானரனைக் கொல்லுங்கள், என்று கட்டளை பிறந்தது ராவணனுடைய வாயில் இருந்து!பலத்தில் ராவணனுக்கு இணையான எண்பதாயிரம் அசுர வீரர்கள் பெரிய ...மேலும்
 
temple
விரூபாக்ஷன், யூபாக்ஷன், துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன் என்ற தனது ஐந்து சேனாதிபதிகளை அவன் அழைத்தான். அவர்கள் போர் செய்வதில் மிகுந்த திறமைசாலிகள்.அவர்களிடம்,சேனாதிபதிகளே! ...மேலும்
 
temple
பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைப்பவர். இன்னாருக்கு இன்னாரென எழுதி வைப்பவர். அதற்கு எல்லாரும் கட்டுப்பட்டே தீர வேண்டும். படைத்தவருக்குரிய மரியாதையை நாம் தரவேண்டாமா அதனால், ...மேலும்
 
temple
ராவணா! எங்கள் ராமனைப் பற்றி நீ தெரிந்து கொள். நான் அவருடைய தொண்டன். அவரே எனக்கு உயிர் என்பதால், இப்போது நான் சொல்லும் அனைத்தும் நிஜம். அவர் சத்தியத்தின் வடிவம். தர்மத்தின் ... மேலும்
 
temple
அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.அக்னி சுடவில்லை என்றால் அது ராமனின் கிருபையினாலேயே நடக்கிறது. சீதாதேவியின் பிரார்த்தனையால் இது நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் அக்னியும், ... மேலும்
 
temple
ஆஞ்சநேயர் மிக மிக வருத்தப்பட்டார். ஐயோ! கோபத்தின் காரணமாக தகாத காரியம் செய்துவிட்டேனே! இலங்கைக்கு தீ வைக்க வேண்டும் என்று எண்ணிய என் வானர புத்திக்கு, சீதாதேவியும் இங்கே தான் ...மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


வராக புராணம் பகுதி-1
மே 30,2012

அ-
+
Temple images

1. தோற்றுவாய்: மகாவிஷ்ணு வராக (பன்றி) வடிவில் அவதாரம் எடுத்து பாதாளத்திலிருந்து தன்னை வெளிக்குக் கொண்டு வந்து காப்பாற்றிய பகவான் விஷ்ணுவை பூதேவி துதி செய்து அவள் கேட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விடைகள் என்பதால் இது வராக புராணம் எனப்படுகிறது. 24,000 ஸ்லோகங்கள் கொண்ட இது ஒரு சாத்துவிக புராணம். விஷ்ணு புராணம், நாரத புராணம், பாகவத புராணம், கருட புராணம், பதும புராணம் மற்ற சாத்துவிக புராணங்கள். வராஹ புராணம் விஷ்ணுவையும், அவரது வராக அவதாரத்தையும் பற்றிப் பேசுவதால் இது ஒரு வைஷ்ணவ புராணம். இதனை வராகமாயிருந்த விஷ்ணு பூதேவிக்குச் சொன்னதால் இது வராக புராணம் என்று பெயர் பெற்றது. இதில் உற்பத்தி, அரச பரம்பரை வரலாறு, மன்வந்தரங்கள் பற்றிய விரிவான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள வராக புராணத்தில் பிரார்த்தனை, விதிமுறைகள், சமயச் சடங்குகள், புனிதத் தல விவரணங்கள் முதலியவை உள்ளன. வைணவ தீர்த்தங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
வர+அஹ=வராஹ. வர என்றால் மூடுபவர் என்றும் அஹ என்றால் எல்லை இல்லாததற்கு எல்லை நிர்ணயித்தல் என்றும் பொருள். எனவே வராஹ என்றால் உருவற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர் என்றும் அதற்கு உறை இடுபவர் என்றும் பொருள். பிரளய முடிவில், இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக்கொண்டு வந்தது. உதயகிரி குகையில் கோயிலில் பூமியை ஏந்திய வராகச் சிற்பம் உள்ளது. அதன் இடது பாதம் சேஷ நாகத்தின் மீதும், வலப்புறம் கோரைப் புல்லைப் பிடித்துக் கொண்டு பூதேவியும், பின்னால் கடல், முனிவர்கள் மற்றும் துதி செய்வோர் கூட்டம் காணப்படுகிறது. பாதாமியில் சாளுக்கிய சிற்ப மகாவராஹம் உள்ளது. தலை வராகமும் உடல் முழுவதும் அலங்கரிப்பட்ட மனித வடிவமும் காணப்படுகின்றன. வராகத்துக்கு நான்கு கைகள். அவற்றில் முறையே சங்கு, சக்கரம் உள்ளன. மூன்றாவது கை தொடை மேலும், நான்காவது பிருதிவியை (பூ தேவியை) ஏந்தியவாறும் உள்ளது. மன்னர்களும், முனிவர்களும் சுற்றி உள்ளனர். வராகத்தின் காலடியில் சேஷ நாகம். இதே போன்ற மற்றொரு சிற்பம் எல்லோராவில் தசாவதார குகையில் காணப்படுகிறது.
வடகுஜராத்தில் விஹாரா என்றொரு நகரம் உள்ளது. இவ்விடம் முற்காலத்தில் வராகநகரி எனப்பட்டது. இந்த வடிவில் மனித கால், கைகள் இல்லை. நான்கு கால்கள் கொண்ட வராக வடிவமே உள்ளது. வராக மூர்த்தியைக் கொண்ட நாணயங்களும் காணப்படுகின்றன. மஹாபலிபுரத்திலும் வராஹ மண்டபத்தில் இந்தப் பூவராகனைக் காணலாம். வராக அவதாரத்திற்கு யஜ்ஞ வராகம் என்றும் ஒரு பெயர் சொல்லப்படுகிறது. பூமிதேவி வராகத்தைத் துதி செய்தாள். அதனால் மகிழ்ச்சி கொண்ட நாராயணன் பூமியைக் கடலிலிருந்து மீட்க என்ன வடிவம் கொள்ள வேண்டும் என்று எண்ணிப் பார்த்தார். கடைசியாக யஜ்ஞ வராக வடிவம் எடுக்கத் தீர்மானித்தார். அந்தச் சுலோகங்கள் வாயு, பிரம்மாண்ட, பத்ம, பிரம்ம, மச்ச புராணங்களில் உள்ளன. மேலும் விவரங்கள் விஷ்ணு புராணம், பாகவத புராணங்களிலும் காணலாம். ஆனால் வராக புராணத்தில் அவை காணப்படவில்லை.
2. யஜ்ஞ வராகம்
யஜ்ஞம்=உலகைச் சிருஷ்டிக்கும் சிறந்த சக்தி உடைய எண்ணம். வராகம்=கலவரம். குழப்பங்களிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி. யஜ்ஞம் என்பது யாகம். அதாவது யஜ்ஞத்தின் மூல சிருஷ்டி சக்தியை வெளிப்படுத்த உதவும் ஒரு சமயச்சடங்கு. யஜ்ஞ வராகத்தை விவரிக்க முப்பத்தைந்து வெவ்வேறு வகை பெயர்கள் விளங்குகின்றன. அவையாவன:
1. வேத பாதம் : வராகத்தின் நான்கு பாதங்களும் நான்கு வேதங்கள்.
2. யுபதம்ஷ்ட்ரம் : வராகத்தின் இரண்டு தந்தங்கள். விலங்குகளைப் பலியிட உபயோகப்படுத்தும் மேடை போன்றது.
3. கிரது தந்தம் : ஒரு யஜ்ஞத்தில் செய்யப்பட வேண்டிய அறுபத்து நான்கு பலிகளைக் குறிப்பது கிரது. இவை போன்று வராகத்தின் பற்கள் உள்ளவை.
4. சிதி மூலம் : சிதி என்றால் அக்கினிமேடை (அ) பலிபீடம். வராகம் வாய் பிளத்தல் இதை போன்றதாகும்.
5. அக்கினி ஜிஹ்வ : வராகத்தின் நாக்கு அக்கினி போலுள்ளது.
6. தர்ப்பலோமம் : வராகத்தின் உடல் மீதுள்ள உரோமம் மேடை மீது பரப்பப்படும் தர்ப்பைப் புல் போன்றது.
7. பிரம்ம சீர்ஷம் : வராகத்தின் தலை பிரம்மாவைப் போல் உள்ளது.
8. அஹோர திரிக்ஷானாதாரம் : இரவும், பகலும் வராகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.
9. வேதாங்க ச்ருதி பூஷனம் : அறிவின் பிரிவுகளாகிய ஆறு வேதாங்கங்கள் வராகத்தின் காதணிகள் ஆகும்.
10. ஆஜ்யனசா : நாசித்துவாரங்கள் யாகத்தில் தெளிக்கப்படும் நெய் போன்றுள்ளன.
11. சிருவண் துண்டம் : நீண்டுள்ள மூக்கு யாகத்தில் நெய் ஊற்றப் பயன்படும் கரண்டி போன்றது.
12. சாம கோஷ வன : சாமவேதத்துதிகள் போல் வராகத்தின் குரல்.
13. சத்திய தர்மமாயா : வராகம் முழுவதும் தருமநெறியும், உண்மையும் கொண்டது.
14. கர்மவிகரம் சத்கிருத : புரோகிதர்கள் செய்யும் சடங்குகள் வராகத்தின் சக்தி வாய்ந்த அசைவுகளைப் பெற்றுள்ளன.
15. பிராயச்சித்த நகோகோர : தவத்தின் போது செய்ய வேண்டிய கடினமான சடங்குகளே வராகத்தின் பயங்கர நகங்கள் ஆகும்.
16. பாஷுஜனுரு : பலிகொடுத்த மிருகங்களின் உடைந்த உடல்கள், எலும்புகள் வராகத்தின் முழங்கால் மூட்டுகளுக்கு ஒப்பாகும்.
17. மகாகிரித் : வராகத்தின் தோற்றம் யாகம் அனையது.
18. உத்கத்ரந்தா : நீண்ட சாமச்ருதிகள் வராகத்தின் குடல் போன்றவை.
19. ஹோமாலிங்கா : வராகத்தின் இரகசிய உருப்புக்கு நெய் ஆஹுதி உவமானம்.
20. பிஜோஷதி மாஹாபலா : மூலிகைகள், வேர்கள் வராகத்தின் உற்பத்தி உறுப்பு போன்றவை.
21. வாய்வந்தரத்மா : வராகத்தின் ஆன்மாவுக்கு ஒப்புமை வாயு பகவான்.
22. யஜ்ஞ ஸ்விக்ருதி : யாகத்தில் கூறப்படும் மந்திரங்கள் வராகத்தின் எலும்புகளுக்கு உவமையாகும்.
23. சோம÷ஷானிதா : வராகத்தின் ரத்தம் சோமபானம் போன்றது.
24. வேதிஸ்கந்தம் : வராகத்தின் அகன்ற புஜங்கள் பலிபீடம் ஒத்துள்ளன.
25. ஹவிர் கந்தம் : வராகத்தின் உடல் மணம், யாக நைவேத்தியத்தின் நறுமணம் ஆகும்.
26. ஹவ்யகவ்யதிவேகவனம் : வராகத்தின் அசைவுகளின் ஆர்வம், வேகம் அனையது யாகச் சடங்குகள்.
27. பிரக்வம்சகயம் : வராகத்தின் உடல், யாகசாலை அமைப்பில் குறுக்கு தூலம் போல் உள்ளது.
28. நாநாதிக்ஷ பிரன் விதம் : யாகத்தின் பூர்வாங்கப் பணிகள் வராகத்தின் ஆபரணங்கள் ஆகும்.
29. தக்ஷிணாஹ்ருதயம் : வராகத்தின் இதயம் யாக தக்ஷிணையாம்.
30. மகாசத்திரமாயம் : பெரிய யாகம் போன்றது வராகத்தின் உருவம்.
31. உபாகர்மாமாச்தருசகம் : யாகத்தின் போது படிக்கப்படும் வேதம் வராகத்தின் உதடுகள் ஆம்.
32. பிரவர்க்ய வர்த்த பூஷனம் : பிரவர்க என்பது பெரிய பால் பானை. அதனுள் சூடான வெண்ணெய் ஊற்ற அதிலிருந்து மேலே தீப்பிழம்புகள் எழும். வராகத்தின் மார்பில் உள்ள வளைவுகள் தீப்பிழம்புகள் போல் உள்ளன.
33. நானாசந்தோகதிபதம் : வராகத்தின் பலவித அசைவுகள் மந்திரத்தின் வெவ்வேறு சீர்ப்பிரமாணங்களை ஒக்கும்.
34. குஹ்யோபணிஷடசனம் : உபநிஷத்துகளைக் கற்றறிந்தார் மட்டுமே பங்கு கொள்ளும் விவாதம் போன்றது வராகத்தின் சரீரநிலை.
35. சாயாபத்னிஸஹாயோ : சூரியனை ஒத்துள்ளது வராகம். ஓரியன் (அ) கால புருஷ நட்சத்திரக் கூட்டத்தில் அமைப்பு தேவலோக வராகம் போல் காட்சி அளிக்கின்றது.
3. சிருஷ்டி
சிருஷ்டி 1. ஆதி (அ) மூலசிருஷ்டி சர்க்கம் எனப்படும். 2. அடுத்து பிரளயத்தால் ஏற்படும் அழிவும், அதன் பின் படைக்கப்படும் படைப்பு. இது பிரதி சர்க்கம் எனப்படும். பிருதிவி பெரிய மனக்குழப்பத்துடன் விஷ்ணுவை அடைந்து ஒவ்வொரு கல்ப முடிவிலும் எனக்கு நீர் ரக்ஷகன் ஆகிறீர். நீர் என்னைக் காத்து, அளித்து, புனர்நிர்மாணம் செய்கிறீர். எனினும் உங்களுடைய முழு சக்தியை நான் அறியேன். உமது அடையாளமும் நான் அறியேன். உமது அடையாளமும் நான் அறியேன். உங்களது அதிசயங்களைத் தெரியச் செய்வீர். உம்மை அடைவது எப்படி? சிருஷ்டியின் தோற்றமும், முடிவும் எவ்வாறு நிகழ்கிறது? நான்கு யுகங்களின் குணநலன்கள் எத்தன்மையதாகும்? என்று பிருதிவியாகிய பூமாதேவி கேட்க, வராக அவதார விஷ்ணு ஐயப்பாடுகளை நீக்கும் விதத்தில் விடைகள் தந்தார். வராகம் ஒரு மாயச் சிரிப்பு சிரித்தது. பிருதிவி பிரம்மாண்டம் (முட்டை) தேவர்கள், உலக மன்னர்கள் ஆகியவற்றை அந்த வராகத்தின் வயிற்றில் கண்டாள். அவள் விஷ்ணுவை மனமாரத் துதிக்க அந்த வராகப்பெருமான் பூதேவி வினாக்களுக்கு விடை அளிக்கலானார்.
பரமாத்மனிலிருந்து எல்லாம் தோன்றியது பற்றியும், மூன்று குணங்கள், ஐந்து இயற்கை சக்திகளாகிய நிலம், நீர், தீ, காற்று, விண் பற்றியும், பூச்சியத்திலிருந்து தோன்றிய உலகைப் பற்றியும் விவரித்தார். பிரம்மாவின் நாள் ஒரு கல்பம். அப்படி பல கல்பங்கள் முடிய தற்போது வராக கல்பம் நடைபெறுகிறது. இந்தக் கல்பத்தில்தான் விஷ்ணு வராக அவதாரம் எடுத்தார். இதுவரையில் சிருஷ்டியின் மூலப்பகுதி சர்க்கம். அடுத்து, பிரம்ம சிருஷ்டி தொடங்கி நடைபெறுகிறது. அது பிரதி சர்க்கம் எனப்படும். விஷ்ணு தன் யோகுதுயில் நீங்கி கண்விழித்து ஒன்பது நிலைகளில் உலகைப் படைத்தார். தமஸ், மோகம், மகாமோகம், தமிஸ்ரம், அந்தத்தமிஸ்ரம் என ஐந்து பகுதிகள் தோன்றின. இது பிராகிருத சர்க்கம் ஆகும். அடுத்த படைப்பு நாகம் (கம்=போதர்; நா=எதிர்மறை) எனவே அசையாத மரங்கள், மலைகள் படைக்கப்பட்டன. இவை அசையாதன ஆனால் வளர்வன. இது முக்கிய சர்க்கம் ஆகும். அடுத்து வளைவாக எழுதலும், வீழ்தலுமான படைப்பு ஏற்பட்டது. பறவைகள் போன்றவை தோன்றின. இவை திரபதயோனி படைப்பு எனப்பட்டது.
மற்றும், பல சர்க்கங்களில் தேவர்களும், மனிதர்களும், அசுரர்களும் தோன்றினர். தேவர்கள் அன்பும், மகிழ்ச்சியும் கொண்டார்கள். மனிதர்கள் புறப்பொருள்கள் மீது பற்று கொண்டவர்கள், அடிக்கடி மகிழ்ச்சி இழப்பவர், சில சமயம் தீயவர்கள், ஆசைமிக்கவர், நல்லவை உடையவர், அசுரர்கள், அமைதியற்றவர், சண்டை போடுபவர்கள், கொள்ளை, கொலை புரிபவர்கள். இவ்வாறு ஆதியில் விஷ்ணு சிருஷ்டித்தது சர்க்கம் என்றும் பிரம்மாவின் மூலம் படைக்கப்பட்டது பிரதி சர்க்கம் என்றும் அறிய வேண்டும்.
4. வராக அவதாரம்
பூமி பாதாளத்தில் அழுந்திவிட, பூதேவி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவள் செய்த துதியே கேசவ துதி எனப்படுகிறது. இதைச் செய்பவர்கள் வறுமை, பாவங்களிலிருந்து விடுபடுவர். புத்திரப்பேறு கிடைக்கும். இறுதியில் விஷ்ணுலோகம் அடைவர். பூமித்தேவியின் முறையீட்டைக் கேட்ட பகவான் விஷ்ணு மிகப்பெரிய வராக (பன்றி) உருவெடுத்தார். இப்படி எடுத்த வராக அவதார பகவான் பூமியைக் காத்திட சமுத்திரத்திற்குள் பிரவேசித்தார். பிரஜாபதிகளில் காசியப முனிவரும் ஒருவர். அவருடைய மனைவியரில் ஒருத்தி திதி. அவள் ராக்ஷசர்களின் தாய். ஜயவிஜயர்கள் அவள் வயிற்றில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற இருவர்களாய் உதித்தனர். அவர்களில் இளையவன் ஹிரண்யாக்ஷன். அவன் பிரம்மாவைக் குறித்துக் கோர தவம் செய்தான். அதன் வெப்பம் மூன்று லோகங்களையும் தகித்தது. இதனால் அச்சம் கொண்ட தேவர்கள் சத்தியலோகம் சென்று பிரம்மாவைக் கண்டு இரண்யாக்ஷன் தவம் பற்றிக் கூறித் தங்களுக்கு அருள்புரிய வேண்டினர். அப்போது பிரம்மா தான் சென்று இரணியாக்ஷன் தவத்தை முடிக்கச் செய்வதாகவும், தேவர்களை ரக்ஷிப்பவனாகவும் இருப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் இரணியாக்ஷன் தவம் செய்யுமிடம் அடைந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அவன் சிருஷ்டியில் தோன்றிய யாராலும், எதாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது. தனக்கு மூவுலகத்திற்கும் அதிபதியாகும் வரங்கள் இரண்டும் வேண்டினான். அப்போது பிரம்மா விஷ்ணுவைத் தியானித்து எல்லாம் அவன் செயலே என்று நினைத்து அரக்கன் கேட்ட வரங்களைக் கொடுத்தார். வரம் பெற்ற இரணியாக்ஷன் மூவுலகங்களையும் வென்று தனக்கு எதிரி யாருமின்றி ஆளத் தொடங்கினான். அடுத்து அவன் சத்தியலோகம் அடைந்து பிரம்மனை வெல்ல முயன்றபோது யுக்தியுடன் அவனைச் சமாதானப்படுத்தி உலக நாயகனாகிய விஷ்ணுவை வென்றால் உனக்குச் சமமாக யாரும் இருக்கமாட்டார் என்று கூற விஷ்ணுவின் இருப்பிடம் அடைந்தான் இரணியாக்ஷன். அங்குத் துவாரபாலகர்கள் அவனைத் தடுக்கவில்லை. அவன் வருகை அறிந்து விஷ்ணு பாதாளலோகம் சென்று விட்டார். இரணியாக்ஷன் வைகுந்தத்தில் அனைவரும் விஷ்ணு ஸ்வரூபியாகக் காணப்பட்டனர். செய்வதறியாமல் விஷ்ணுவைத் தேடி பாதாளலோகம் செல்ல முனைந்தவன் வழித்தெரியாமல் தவித்து இறுதியில் தனக்குத் தடையாயிருக்கும் பூமியைப் பாயாகச் சுருட்ட மறைந்தது. அதுகண்டு எல்லோரும் ஸ்ரீஹரியிடம் முறையிட்டனர். பூமாதேவி கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்தாள்.
உடனே பகவான் விஷ்ணு யஜ்ஞ வராகமாக உருவெடுத்தார். குர்குர் என்று சப்தம் செய்தது வராகம். பூமியைப் பாயாகச் சுருட்டிய இரணியாக்ஷன் மீது பாய்ந்து தன் தந்தத்தால் (கோரைப் பல்லால்) குத்தினார். அவன் அதைத் தாளமுடியாமல் சமுத்திரத்திலே குதித்து மறைந்தான். அவனை வராகம் தனது கால்களால் பற்றிக் கொண்டு மறுபடியும் தந்தத்தால் குத்தியது. அதனால் அவன் உடனே மரணமடைந்தான். அவனால் சுருட்டப்பட்ட பூமியை வராகமூர்த்தி வெளிக்கொணர்ந்து அதனை நிலைப்படுத்தி வைகுண்டம் அடைந்தார். இதுவே வராக அவதாரம்.
5. அஷ்வஷிரன்
பூமித்தாய் வராகத்திடம் நாராயணனும், பிரம்மனும் ஒன்றே என்பது பற்றி விளக்கம் கேட்க எல்லா வகையிலும் ஒத்தவையே. ஆனால், நாராயணனை நேராகப் பார்ப்பது கடினமாகும். அவருடைய அவதாரத்தின் மூலமே காணமுடியும். பிரம்மன் நாராயணனின் ஒரு வடிவமே. அதேபோல் தான் சிவனும். நிலம், நீர் போன்ற ஐம்பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். விசுவரூபம், விசுவாத்மா நாராயணன் அன்றி வேறில்லை. அஷ்வஷிரன் என்ற தருமநெறி தவறாத மன்னன் கபிலரிடம், நாராயணனைப் பூசிப்பது எவ்வாறு? என்று கேட்டான். இங்கு இரண்டு நாராயணர்கள் உள்ளனர். யாராவது ஒருவரை நீ பூசிக்கலாம் என்றார் (கபிலரும் நாராயணரின் அம்சமே) அப்போது அஷ்வஷிரன் நீ எப்படி நாராயணனாக முடியும். நான்கு கைகளோ கருடனோ இல்லை. இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. திரும்பவும் என்னைப் பார் என்று கபிலர் கூறிட அஷ்வஷிரன் கபிலரில் நான்கு கைகளும், கூடிய நாராயணனைக் கண்டான்.
ஆனால், நாராயணன் கமல மலர் மேல் உட்கார்ந்திருப்பார்; சிவனும், பிரம்மாவும் அவரது பாகங்கள். அவர்கள் எங்கே? இப்போது பார் என்று கபிலர் கூற, அங்கு நாராயணர் தாமரைமீது அமர்ந்திருந்தார். பிரம்மா, சிவன் இருவரும் கமலாசனராய் காணப்பட்டனர். ஏன் எல்லா நேரத்திலும் நாராயணனைக் காணமுடியவில்லை என்று கேட்டான். அதற்குக் கபிலர், நாராயணரை எப்போதுமே காண நினைக்காதே. அவர் தன்னைத் தான் தெளிவாக்குவார். அவதாரம் எடுப்பவர்; அவரைப் பறவை, விலங்குகளிலும் காணலாம். உன்னில் அவரைக் காணலாம். எதிலும், எங்கும் காணலாம். உணரலாம், உண்மையான ஞானம் பெற்றால் எதிலும் நாராயணனைக் காணலாம். அறிவா? செயலா? எது சிறந்தது? உயர்ந்தது? என்று மன்னன் அஷ்வஷிரன் கேட்டான். அதனை உணர்த்த கபிலர் ரைவ்யன், வாசு கதையைக் கூறினார்.
6. ரைவ்யன், வாசு
பிரம்மாவின் வழிவந்தவன் மன்னன் வாசு. வாசு ஒருமுறை தேவகுரு பிரகஸ்பதியைக் காணச் சென்றான். வழியில் சித்திரரதன் என்னும் வித்யாதரன் எதிர்ப்பட்டான். சித்திரரதன் வாசுவிடம் பிரம்மா தேவர்களுக்கான ஒரு சபையை (கூட்டம்) ஏற்பாடு செய்திருப்பதாகவும், முனிவர்களும், பிருகஸ்பதியும் கூட அதில் பங்கு பெறச் சென்றிருப்பதாகவும் கூறினான். வாசுவும் அங்குச் சென்றான். கூட்டம் முடிந்து பிருகஸ்பதி வருவதற்காகக் காத்திருந்தான். ரைவ்ய முனிவரும் பிருகஸ்பதியைக் காண வந்திருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த பிரகஸ்பதி இருவரையும் கண்டார். என்ன வேண்டும்! நான் என்ன செய்ய வேண்டும் என்று பிருகஸ்பதி கேட்டார். அப்போது வாசுவும், ரைவ்ய முனிவரும் ஞானமா? செயலா? எது உயர்ந்தது? சிறந்தது? என்று கேட்க, அப்போது பிருகஸ்பதி அதை உணர்த்த ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.
7. சம்யமானனும் வேடன் நிஷ்தூரகனும்
ஒழுங்கான, கட்டுப்பாடுமிக்க, தருமநெறி தவறாத சம்யமானன் என்றொரு அந்தணர் இருந்தான். நிஷ்துரகன் என்றொரு வேடனும் அதே சமயத்தில் வாழ்ந்து வந்தான். சம்யமானன் கங்கையில் நீராடச் சென்றான். கங்கைக் கரையில் நிஷ்துரகன் பறவைகளைப் பிடிப்பதை சம்யமானன் கண்டான். சம்யமானன், நிஷ்துரகனிடம் பறவைகளைக் கொல்லாதே என அறிவுரை கூறினான். பறவைகளைக் கொல்ல நான் யார்? எல்லா உயிர்களிலும் தெய்வீக ஆன்மா உள்ளது. அதை எப்படி என்னால் கொல்ல முடியும்? நான் செய்தேன் என்பது தற்பெருமை, தற்புகழ்ச்சி ஆகும். அப்படிப்பட்டவருக்கு முக்தி ஏற்படாது. பிரம்மன் தான் கர்மா செய்பவன் என்று வேடன் கூறினான். பின்னர் அவன் தீ மூட்டினான். தீயின் நாக்கில் ஏதாவதொன்றை அணைக்குமாறு கூறினான் வேடன். அந்தணன் அதற்கு முயற்சி செய்ய தீ முழுவதும் அணைந்துவிட்டது. தீயும், அதன் பல நாக்குகளும் ஒன்றே என்றான் அந்த வேடன் நிஷ்தூரகன்.
இரண்டில் ஒன்றை எப்படி வேறுபடுத்தி அறிய முடியும்? எனவே தீயில் ஒரு பகுதியை எப்படி அணைக்க முடியும்? சிருஷ்டியில் அனைத்தும் பிரம்மன் சொரூபமே. தனி ஆன்மாவுக்கு என்ன நேர்ந்தாலும் பிரம்மன் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான் நான் செய்கிறேன் என்ற நினைப்பின்றி ஒருவன் தன்கர்மாவைச் செய்ய வேண்டும் என்று கூறினான் வேடன். அப்போது விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்து அவனை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது. ரைவ்யனுக்கும் வாசுவுக்கும் அவர்களுடைய கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. இவ்வாறு ரைவ்யன், வாசு கதை கேட்ட அஷ்வஷிரன் ஐயமும் தீர்ந்தது. அவன் தன் அரசைத் தன் மகன் ஸ்தாவஷிரனிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்ய நைமிசார வனம் சென்றான். நாராயணனை நோக்கித் தவம் செய்து நாராயணனுடன் கலந்து விட்டான். ரைவ்யனும் யாகங்கள் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
8. ரைவ்ய முனிவர் கேட்ட கதை
ரைவ்ய முனிவர் கயா தீர்த்தத்தை அடைந்து தன் இறந்த மூதாதையர்க்குச் சமயச் சடங்குகளைச் (சிரார்த்தம்) செய்து முடித்துவிட்டுத் தவம் செய்ய முற்பட்டார். ரைவ்ய முனிவர் ஆசிரமத்துக்கு ஒருநாள் முனிவர் சனத்குமாரர் வந்தார். அவர் திடீரென்று தன் உருவை மிகவும் பெரிதாக்கிக் கொண்டு தோற்றம் அளித்தார். நீ ஏன் என்னைப் பாராட்டினீர் என்று ரைவ்ய முனிவர் பிரம்மபுத்திரன் சனத்குமாரரைக் கேட்டார். அதற்கு அவர் நீ கயா சிரார்த்தம் செய்தாயல்லவா அதற்காக என்றார். அடுத்து சனத்குமாரர் கயாசிரார்த்த மகிமை பற்றி ரைவ்ய முனிவருக்கு விளக்க ஒரு கதை கூறினார். இது விசால மன்னனின் கதை.
9. விசால மன்னன்
விசால மன்னன் செல்வ வளங்களுடன் மகிழ்ச்சியாக வாழந்து வந்தான். எனினும், அவனுக்குப் புத்திரப்பேறு ஏற்படாத குறை இருந்தது. அவனுக்குப் பெரியோர்கள், கயாவுக்குச் சென்று மறைந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யுமாறு அறிவுரை பகர்ந்தனர். அவ்வாறே கயாவுக்குச் சென்று மதச்சடங்குகள் முடிந்தவுடன் அவன் முன் மூன்று உருவங்கள் தோன்றின. ஒன்று வெள்ளையாகவும், மற்ற இரண்டும் சிவப்பு, கருப்பு நிறங்களிலும் தோன்றின. வெள்ளை வண்ண உருவம் ரைவ்யனின் தந்தை; அவர் பாவம் எதுவும் செய்யாததால் தூய வெண்மை நிறத்தில் இருந்தார். சிவப்பு நிற உருவம் அவரது பாட்டன், கருப்பு உருவம் முப்பாட்டன் ஆகும்-அவர்கள் தீய வாழ்க்கை வாழ்ந்ததால் அதன் பலனை அனுபவிக்கின்றனர். ரைவ்யன் கயாசிரார்த்தம் அனுஷ்டித்த உடன் அவனுடைய மூதாதையர்கள் பாவங்கள் விடுபட்டு விடுதலை அடைந்தனர். இதன்மூலம் ஒருவர் கயாசிரார்த்தம் செய்வதன் மூலம் அவரது முன்னோர்கள் பாவபலன்களிலிருந்து விடுபடுகின்றனர். அது மட்டுமின்றி அத்தகைய கர்மாவைச் செய்பவனுக்குப் புண்ணியம் சேர்கிறது. எனவே ரைவ்ய முனிவர் பாராட்டப்பட்டார். சனத்குமாரர் சென்ற பிறகு ரைவ்ய முனிவர் நாராயணனைக் கதாதரன் (கதை ஏந்தியவர்) உருவில் பிரார்த்திக்க பகவான் அவன் முன்தோன்றி அவன் விரும்பிய மோட்சம் அளித்தார்.
10. வாசு மன்னன்
வாசு மன்னன் தன்னரசைத் தன் மகன் விவாசனனுக்கு அளித்து, புஷ்கரத்தீர்த்தம் அடைந்து, அங்கு புண்டரீகாக்ஷனை முன்னிட்டு ஒரு யாகம் செய்ய யாகத்தீயிலிருந்து ஓர் உருவம் தோன்றி வாசுவின் முன் நின்று, உங்கள் ஆணை என்ன எனக்கேட்டது. வாசு அந்த உருவத்தைப் பார்த்து நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என வினவினான். அதற்கு அவ்வுருவம் கூறிய வரலாறு கீழே தரப்பட்டுள்ளது:
முற்பிறவியில் வாசு காசுமீர மன்னனாக இருந்தான். அவன் ஒரு சமயம் வேட்டையாடச் சென்றபோது ஒரு மானைக் கண்டு அதை அம்பெய்தி கொன்று விட்டான். அது உண்மை மானல்ல. ஒரு முனிவர் மான் வடிவில் திரிந்து கொண்டிருந்தார். அதை அறிந்த வாசு தான, தர்மங்களும், மற்ற சமய சடங்குகளும் செய்வதுடன் தவமும் இயற்றினான். முடிவில் வயிற்று வலியால் அவன் மரணமடைந்தான். மரணத்தருவாயில் நாராயணா என்ற பகவான் நாமத்தை உச்சரித்தான். பின்னர் யாகத்தீயிலிருந்து தோன்றிய உருவம் தான் ஒரு பிரம்மாராக்ஷசன் என்றது. வாசு மான் வடிவில் இருந்த மானை அதாவது பிராமணனைக் கொன்றதால் அது வாசு மன்னன் உடலில் புகுந்து இருந்ததாகவும், அதுவே அவனது மரணத்தறுவாயில் தண்டனையாக வயிற்றுவலி கொடுத்ததாகவும் கூறிற்று.
வாசுவின் நாராயண நாம உச்சரிப்பால் அவன் விஷ்ணு தூதர்களால் சொர்க்கம் அழைத்துச் செல்லப்பட்டான். விஷ்ணு தூதர்கள் பிரம்ம ராக்ஷசை வாசுவின் உடலிலிருந்து விரட்டி அடித்தனர். வாசு சொர்க்கலோகத்தில் பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்தான். மறுபடியும் அவன் காசுமீர் மன்னனாகத் திரும்பவும் அந்த பிரம்மராக்ஷசன் அவன் உடலில் பிரவேசித்தது. எனினும் வாசு, புண்டரீகாக்ஷனை தியானித்து அவன் நாமங்களை உச்சரித்து யாகம் செய்ய அது விலகியது. இப்போது அதன் பாவங்கள் புண்டரீக நாமங்களைக் கேட்டதன் பயனாக விலகிவிட்டன. அது மறுபடியும் ஒரு தர்மவான் ஆயிற்று. வாசு, பிரம்மராக்ஷசனால் தன் முற்பிறவிகளைப் பற்றி அறிய நேர்ந்ததால் அதற்கொரு வரம் அளித்தான். அதாவது அது தர்மவியாதன் என்ற வேடனாகப் (தருமவானான வேடன்) பிறக்கும்படியான வரம். பின்னர் வாசு வைகுந்தப் பிராப்தி அடைந்தான்.
11. நாரதரின் முற்பிறவி
ஒரு சமயம் நாரதர் பிரியவிரதனைக் காணச் சென்றார். அவனும் முனிவரை வரவேற்று உபசரித்துப் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். அவற்றிற்கெல்லாம் அவர் விடை அளித்த பிறகு சில அபூர்வ, அதசிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள் என்று வேண்டினான். நாரதர் கூறலானார். சுவேதத்வீபத்தில் ஓர் ஏரி உள்ளது. நாரதர் அங்குச் சென்றபோது அந்த ஏரி மலர்ந்த கமலங்களுடன் விளங்கியது. மலர்களுக்கு அருகில் ஓர் அழகிய பெண்மணி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவளை யாரென்று அவர் கேட்டார். அதற்கு அவள் பதிலளிக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பெண்ணின் உடலிலிருந்து மூன்று ஒளி உருவங்கள் தோன்றி மறைந்தன. நாரதர் திகைத்து நின்றார். அவள் யாரென்று நாரதர் மறுபடியும் கேட்டார். அதற்கு அவள் தான் சாவித்திரி என்றும், வேதங்களின் தாய் என்றும் கூறினாள். நாரதரால் அவளை அறிய முடியாதென்றும், அவருடைய அறிவை எல்லாம் தான் கொள்ளை அடித்து விட்டதாகவும் கூறினாள். தன்னிலிருந்து வெளியேறிய மூன்று உருவங்களும் மூன்று வேதங்கள் ஆகும். (மூன்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.)
அப்போது நாரதர் தன் அறிவை எப்படி திரும்பப் பெறுவது, சாவித்திரி நாரதரை அந்த ஏரியில் குளிக்குமாறும், அதனால் அறிவைத் திரும்பப் பெறுவது மட்டுமின்றி, முற்பிறவி செய்திகளும் அறிய முடியும் என்றாள். நாரதர் அவ்வாறே அதில் நீராடி இழந்த அறிவையும், முற்பிறவி பற்றியும் அறிந்திட்டார். பிரியவ்ரதன் அவரை முற்பிறவி வரலாறு கூறுமாறு கேட்டான்.
நாரதர் முற்பிறவியில்...
சத்திய யுகத்தில் நாரதரின் முற்பிறவியில் அவர் பெயர் சாரஸ்வதன் ஆகும். சாரஸ்வதன் அவந்தியில் அமைதியாக வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் அமைதியாக உட்கார்ந்திருந்த போது வாழ்க்கை நிலையில்லாதது, பயனற்றது என்று உணர்ந்தான். அனைத்தையும் புத்திரர்களிடம் ஒப்படைத்துவிட்டு தியானம் செய்ய எண்ணினான். அவ்வாறே செய்து நாராயணனைக் குறித்து தவம் செய்ய பகவான் அவன் முன் தோன்றிட தன்னை அவருள் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டிட, பகவான் நீ இன்னும் வாழ வேண்டும் உன்னுடைய பக்தியும், முன்னோர்களுக்கு அளித்த நீரும் என்னை மகிழ்வித்தன. உனக்கு இன்று நாரதன் என்ற பெயர் அளித்து ஆசிர்வதிக்கிறேன் என்றார். (நாரதர்-நீர் அளித்தவர்)
பகவான் அருளி மறைந்துவிட்டார். சாரஸ்வதன் தவத்தைத் தொடர்ந்தான். அவன் மரணமடைந்து பிறகு பிரம்மலோகத்தில் இருந்து பின்னர் பிரம்ம புத்திரன் நாரதனானான். அடுத்த நாரதர், பிரியவிரதனுக்கு விஷ்ணுவின் புகழ் கொண்ட ஒரு துதியைக் கற்பித்தார். அது பின்வருமாறு.
எண்ணற்ற கண்கள் கொண்டவர்க்கு வணக்கம்!
கணக்கற்ற கைகால்கள் உடையவர்க்கு வணக்கம்!
சத்திய யுகத்தில் வெள்ளை உடையிலும், அடுத்த
திரேதா யுகத்தில் குருதிரத்த வண்ணத்திலும், பிறகு
துவாபரயுகத்தில் மஞ்சள்நிற உருவிலும், பின்னர்
கலியுகத்தில் கரிய நிறம் உடையவனாகும் மாறிய
(வண்ணம் நிறைந்த கண்ணனுக்கு வணக்கம்)
வாயிலிருந்து பிராமணர்களையும்
புஜங்களிலிருந்து க்ஷத்திரியர்களையும்
தொடைகளிலிருந்து வைசியர்களையும்
பாதங்களிலிருந்து மற்ற இனத்தவர்களையும்
(படைத்த பிரம்மனுக்கு வணக்கம்)
வாளும், கேடயமும், கதையும், கமலமும்
நாளும் ஏந்திடும் நாரணர்க்கு வணக்கம்.
12. வைஷ்ணவி தேவி
யுகமுடிவில் அண்டம் அழியும் போது பூலோகத்தில் மக்களும், புவர் லோகத்தில் பறவைகளும், சுவர்லோகத்தில் நெறிமிக்கவர்களும், மெச்சத் தக்கவர்களும், மஹர் லோகத்தில் பெரிய ரிஷிகளும் இருந்தனர். பூமியில் வைஷ்ணவிதேவி மணம் செய்து கொள்ளாமல், மந்தர மலையில் தியானத்தை (தவத்தை) ஆரம்பித்தாள். ஒருநாள் அவளது ஒன்றிய மனவமைதி குலைந்தது. இதனால் லக்ஷக்கணக்கான பெண்கள் தோன்றினர். அவர்களுக்காக தேவி ஓர் அரண்மனையை அமைத்திட அதிலிருந்து, நட்சத்திரங்களிடையே சந்திரன் ஆண்டு வந்தாள். பிரம்மலோகம் சென்று கொண்டிருந்த நாரதன் அழகிய அரண்மனையையும், வைஷ்ணவிதேவி, மற்ற பரிவாரங்களையும் கண்டு நின்றார். அவர் மனதில் மகிஷாசுரன் நினைவு வந்தது. அவனை அழிக்கும் வழியும் தோன்றியது.
நாரதன் மகிஷாசுரன் வசிக்கும் பெருநகர்க்குச் சென்று, அவனைக் கண்டு வைஷ்ணவி தேவியின் அழகைப் பற்றி விவரித்தார். அதுகேட்ட அசுரன் அவளே தனக்கேற்ற மனைவி என்று அவன் அவளை மணக்க விரும்புவதாகக் கூறி சம்மதம் பெற்றுவர, ஒரு தூதுவனை அனுப்பினான். அவனுடன் ஒரு சேனையையும் அனுப்பிவைத்தான். சேனைத்தலைவன் விரூபாஷன். தேவர்களும் வைஷ்ணவி தேவிக்கு உதவியாக வந்தனர். எனினும், அரக்கனே வென்றான். அடுத்து, வித்யுத் பிரமா என்னும் தூதுவன் வைஷ்ணவியிடம் சென்று அரக்கனின் எண்ணத்தைக் கூறினார். அத்துடன் மகிஷாசுரன் வரலாற்றையும் எடுத்துரைத்தான். பயங்கர அசுரன் விப்ரசித்தியின் மகள் மஹிஷ்மதி என்ற அழகி. அவள் ஒரு நாள் ஓர் அழகிய பள்ளத்தாக்கில் உலாவச் சென்றாள். அங்கு ஓர் ஆசிரமத்தைக் கண்டாள். அதைத் தான் பெற எண்ணி அதிலுள்ளவரை வெருளச் செய்து அகற்ற எண்ணி பெண் எருமை வடிவில் அதனுள் நுழைய, உண்மையை அறிந்த முனிவர் அவளை நூறாண்டுகாலம் எருமையாக இருக்கச் சபித்தார்.
மஹிஷ்மதி தன் தவறுக்கு மனம் வருந்தி முனிவரிடம் மன்னிப்புக் கேட்டுச் சாபத்தை நீக்க அருள வேண்டினாள். ஆனால், முனிவர் சாபத்தின் கடுமையைக் குறைத்து அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெண் எருமையாக இருக்குமாறு செய்தார். இந்தப் பெண் எருமை நர்மதைக் கரையில் வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிய அந்நதி நீர் சிந்துத்தீப முனிவரால் சக்தி வாய்ந்ததாயிற்று. இந்தப் பெண் எருமை அந்நதியின் புண்ணிய நீரில் குளித்தது. அதற்கு ஓர் மகன் பிறந்தான். அவனே மகிஷாசுரன். இந்த மகிஷாசுரனே இப்போது வைஷ்ணவி தேவியை அடைய தூது அனுப்பினான். ஆனால், வைஷ்ணவி தேவியோ தானோ, மற்றும் தன் தோழியர்களில் எவருமோ, மஹிஷாசுரனை மணக்கும் பேச்சுக்கு இடமே இல்லை என்றாள். இதனால் வைஷ்ணவி தேவியும் அவள் தோழியரும் அரக்கரின் சேனையை எதிர்க்க மாபெரும் போர் நடந்தது. தேவி பத்து காளிகளும், அவற்றில் ஆயுதங்களும் கொண்டு போரிட்டாள்.
மகிஷாசுரன் தானே போரில் போர் புரியவர, நெடுநாட்கள் வரை போர் நிகழ இறுதியில் மகிஷாசுரன் தோற்று ஓடலாயினான். அத்தேவியும் அவனைத் தொடர்ந்து சென்று ஷதஸ்சிருங்க மலையில் மகிஷாசுரனைப் பணியச் செய்து அவன் தலையை ஈட்டியால் வெட்டினாள். அரக்கன் அருள்மிகு வைஷ்ணவி தேவியால் கொல்லப்பட்டதால் சொர்க்கவாசம் பெற்றான். தேவர்கள் துயர் நீங்கிட தேவியின் புகழைப் பலபடப் பாடித் துதித்தனர். இது தேவி மகிமை கூறும் ஸ்தோத்திரம் அதாவது துதியாகும். இதை தினமும் படித்தால் பாவங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். இந்த மகிஷாசுரமர்த்தன வரலாறு மார்க்கண்டேய புராணம் போன்றவற்றிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி மகிஷாசுரனைக் கொன்ற தேவி துர்க்கை எனப்படுகிறாள்.
13. ருத்ராணி தேவியும் ருரு அரக்கனும்
தேவி ருத்ராணி (துர்க்கை) நீலகிரி மலையில் தவம் செய்து கொண்டிருந்தாள். அவ்வமயம் கடல் நீருக்கு நடுவில் அரண்மனை கட்டிக் கொண்டு அட்டகாசம் புரிந்து வந்தான் அரக்கன் ருரு. அவன் கடின தவம் செய்து பிரம்மனிடம் ஒரு வரம் பெற்றான். அதன்படி அவன் இறந்தாலும் அவன் தலை தரையில் விழக்கூடாது என்ற வரம்பெற்ற அதன் மூவுலகையும் வென்றான். இந்திரனைத் துரத்தி அமராவதி நகரைக் கைப்பற்றினான். இந்திரனும், மற்ற தேவர்களும் நீலகிரி மலையை அடைந்து தேவி ருத்ராணியைத் துதி செய்தனர். அப்போது அன்னை ருத்ராதேவி, அவர்களைக் காத்திடுவதாக வாக்களித்தாள். அவள் உடனே கர்ச்சித்து பயங்கரமாகச் சிரிக்க பயங்கர தேவதைகள் தோன்றினர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அரக்கர்களுக்கும், தேவியின் தோழியர்களுக்கும் இடையே பயங்கரப் போர் நடந்தது. அரக்கர்கள் எதிர் நிற்க முடியாமல் தோற்று ஓடினர். அன்னை ருத்ராணி அரக்கன் ருருவைத் தானே கொன்றாள். அவனுடைய தலையைத் திரிசூலத்தில் தாங்கி தூக்கி நின்றாள். இவ்வடிவில் தேவிருத்ராணி சாமுண்டி எனப்பட்டாள்.
தேவர்கள் கிரிபிரகாரஸ்துதி கொண்டு தேவியைப் புகழ்ந்து பாடினர். இந்த மந்திரத்தைக் கொண்டு கலைமகள், வைஷ்ணவிதேவி, ருத்ராணி தேவியரைத் துதி செய்து மகிழ்விக்கலாம். அவ்வாறு செய்தால் தடைகள் நீங்கும். பாவங்கள் தொலையும். ருத்ராணி, வைஷ்ணவிதேவி உருவங்களில் சிவபெருமானும் பிரசன்னமாகி இருக்கிறார்.
14. நக்ன கபாலிக விரதம்
ருத்திரனைத் திருப்தி செய்ய மூன்று முக்கிய விரதங்கள் உள்ளன. அவை கபாலிக விரதம், பாப்ரவ்யவிரதம், சுத்த சைவ விரதம் என்பன. கபாலிக விரதம் பற்றி இனிக் காண்போம். பிரம்மா, சிவன் இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஆனால், பிரம்மா சிவனைத் தோற்றுவித்த பிறகு ருத்திரனைத் தோள்களில் தூக்கிக் கொண்டு ஐந்தாவது தலையில் உள்ள வாயால் ருத்ரனைத் துதி செய்ய அதில் கபாலி என்ற பெயர் இருந்தது. தன்னை அவமதிப்பதற்காகவே பிரம்மா, கபாலி என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்ற கோபம் கொண்ட ருத்திரன் பிரம்மாவின் ஒரு தலையை இடது கைபெருவிரலால் அகற்றினான். பிரம்மா நான்முகன் (சதுர்முகன்) ஆனான். அகற்றப்பட்ட அத்தலை சிவனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. பலவகை முயற்சிகளுக்குப் பிறகு ருத்திரன் பிரம்மாவிடமே வந்து தன்கையை விட்டு அத்தலை அகல உபாயம் கேட்டார். பிரம்மா ருத்திரனை கபாலிக விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினார். (இதனால் சிவன் பிரம்ம ஹத்ய தோஷம் பெற்றார்.)
மந்தர மலைக்கு ருத்திரன் சென்று அத்தலையை மூன்று பகுதியாக்கினார். தலைமுடியை முப்புரியாக்கித் தன் உடலில் பூணூலாகத் தரித்துக் கொண்டார். பல புனிதத் தலங்களுக்குச் சென்று புனித நீராடித் தியானம் செய்யலானார். இறுதியில் அவர் அப்பூணூலையும், மற்ற உடைகளையும் அகற்றி நிர்வாணமானார் (அ) நக்னமானார். இந்நிலையில் ருத்திரன் காசியை (வாரணாசியை) அடைந்தார். அங்கு கங்கை நீரில் மூழ்கி எழ அவர் கையிலிருந்த கபாலம் விடுபட்டது. அத்தகைய பெருமை பெற்றது வாரணாசி நகரம். அப்போது பிரம்மா தோõன்றி ருத்திரன் ஆற்றிய விரதம் இனி நக்ன கபாலி விரதம் எனப்படும் என்றார். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கோரியவை கிடைக்கும். பிரம்மஹத்ய தோஷமும் நீங்கும்.
15. சத்தியதபன்
வராகம் பிருதிவிக்கு சத்தியரூபன் வரலாற்றைக் கூறியது. இமயமலைக்கு வடபால் சத்தியரூபன் தவம் செய்து கொண்டிருக்கும் போது ஒருநாள் மரத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கும்போது ஒரு விரல் வெட்டப்பட்டு விட்டது. அதிலிருந்து புகை வந்தது. குருதியில்லை. மேலும் அறுந்த விரலை அதன் இடத்தில் வைத்திட மறுபடியும் ஒட்டிக்கொண்டது. சத்தியதபனின் ஆசிரமம் அருகில் ஒரு கின்னர தம்பதியர் இருந்தனர். சத்தியதபனின் சக்தியை கின்னர தம்பதிகள் இந்திரனிடம் தெரிவித்தனர். அவருடைய பெருமையை, சக்தியை சோதிக்க இந்திரனும், விஷ்ணுவும் அவரிடம் வந்தனர். விஷ்ணு அம்பால் அடிக்கப்பட்டு உடலில் அம்பு செருகி இருக்க சத்தியதபரின் ஆசிரமத்தினருகில் ஒரு பன்றி திரிய ஆரம்பித்தது. இந்திரன் வேடன் வடிவில் அங்கு வந்தடைந்தான். அவன் சத்திய தபரிடம் தான் ஒரு பன்றி மீது அம்பெய்தியதாகவும், அது தப்பி ஓடி வந்ததாகவும், அதனைக் கொன்றால் தான் தன் குடும்பம் வாழும் என்று கூறினான்.
சத்தியதபன் ஒரு குழப்பத்தில் சிக்கினான். பன்றியைக் காப்பாற்றுவதா? வேடனின் குடும்பத்தைக் காப்பாற்றுவதா? என்று குழம்பி, சிந்திக்க ஆரம்பித்தான். கண்கள் பார்க்க பேச அல்ல, வாய் பேச பார்க்க அல்ல தன் கண்கள் பன்றியைக் கண்டன. ஆனால் அது பற்றி அதனால் சொல்ல முடியாது; வாயினால் வராகம் பற்றிக் கூறுவதென்றால் வாய் வராகத்தைக் காணவில்லை. எனவே அவன் வேடனாக வந்த இந்திரன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மவுனம் சாதித்தான். அவனுடைய முடிவை அறிந்த விஷ்ணுவும், இந்திரனும் தமது உண்மை வடிவைக் காட்டி சத்தியதபனை வாழ்த்தினர். சத்திய தபனும் அவனது குரு அருணியும் முத்தியடைந்து பிரம்மனுடன் ஒன்றினர்.

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக