ஞாயிறு, 12 ஜூலை, 2015

அறிவோம்

ராதே கிருஷ்ணா 12-07-2015


அறிவோம்திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

* 68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.
* 800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.
* 400 - ஆண்டுகளாய் தான் நீ கிறிஸ்தவன்.
* 200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.
* உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.
* சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....
* சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...
* 100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்கலாம்...

குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம்.

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!

தமிழன்டா..........

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

கண்டிப்பாக படித்து பகிரவும்...

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!

வாழ்க தமிழ் வளர்க தமிழ்.


சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவிடுவதற்கு பயனடுத்தும் மொழி மிக முக்கியமானது என்பதை உணரவேண்டும்...

கருத்தை பதிவிடுபவர்கள் ஒன்று தங்கள் தாய் மொழியில் பதிவிடலாம் அல்லது அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் பதிவிடலாம்... ஆனால் இங்கு பலர் தமிழிலும் இல்லாமல் ஆங்கிலத்திலும் இல்லாமல் தமிழ் உச்சரிப்பில் ஆங்கில எழுத்துகளில் பதிவிடுகின்றனர்...

உதாரணமாக :- " நான் தமிழ் மாணவன் " என்பதை " Nan Tamil Manavan " என்று கொச்சையாக எழுதுகிறார்கள்.

ஏட்டில் இருந்த தமிழை இணையத்தில் ஏற்றி தமிழை வளர்ச்சிப் பாதையில் கொண் டு செல்ல பலர் முயற்சி செய்துக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு சிலர் மீண்டும் பின்நோக்கி செல்கிறார்கள்....

இணையத்தில் தமிழில் பதிவிடுவது ஒன்றும் கடினமான செயல் அல்ல... அதற்கான மென்பொருள் மற்றும் வழி முறைகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்... அதை அனைவரிடம் பகிர்ந்து பயன்பெறுங்கள்...

#கணினி பயன்படுத்துபவர்களுக்கு :-

1. For google chrome users :-
https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab

2. http://ezhuthani-tamil-keyboard.soft112.com/

3. http://www.google.com/inputtools/windows/

#Android Phone users

1. https://play.google.com/store/apps/details?id=and.mms.ezhuthani&hl=en

2. https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&hl=en

மேலும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள் பற்றியும் கூறுங்கள்...

இத்தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அனைவரையும் தனி தமிழில் பதிவிட சொல்லுங்கள்.....

- ஆம் நாங்கள் தமிழர்கள்
 — with Thirukumaran KumarakrishnanDhiliban VenkatesanPrince Princeand Prince Prince.
Follow · 1 hr · Edited · 
 

”....ச்ராத்தத்தை தனித் தனியாக அவரவர்கள் ஊரிலேயே செய்தால் ஒற்றுமை குலையுமல்லவா?. அண்ணந்தம்பிகள் சேர்ந்து இருப்பதே ஒரு அழகுதானே...”

சென்னை பெசண்ட் நகரில் கூட்டத்தில் எழுப்பட்ட ஒரு கேள்வி:

”ச்ராத்தத்தை பற்றி உங்களது பதிவை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆனால் எங்கள் இல்லத்தில் இது சரிவராது. என் மச்சினர்கள் அனைவரும் ச்ராத்தத்திற்காகவே வெளி ஊரிலிருந்து வருகிறார்கள். எங்காத்துகாரர் ச்ராத்தம் செய்வார். மற்றவர்கள் அனைவரும் கூட இருப்பார்கள். ஒருவேலை நீங்கள் சொல்லுவதுபோல் இவர்கள் தனித் தனியாக அவரவர்கள் ஊரிலேயே செய்தால் ஒற்றுமை குலையுமல்லவா?. அண்ணந்தம்பிகள் சேர்ந்து இருப்பதே ஒரு அழகுதானே...”

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெசண்ட் நகரில் ஒரு கூட்டத்தில் பங்குபெற சென்றிருந்தபோது ஒரு அம்மையார் என்னிடம் சொன்ன கருத்து இது. இந்த அபிப்ராயம் பலரிடமும் உள்ளது என்பது வாஸ்தவம்தான்.

இதில் அடிப்படை நியாயம் இருக்கா இல்லையா என்பது வேறு விஷயம்.

அண்ணந்தம்பிகள் சேர்ந்து இருக்கவேண்டும் என்றால் வருஷத்தில் வாய்ப்புகள் நிறைய இருக்கே. ச்ராத்தம் மட்டும்தான் ‘அக்கேஷனா’ என்ன? ஏன் நாம் அதை மட்டும் எடுத்துக் கொள்ளுகிறோம் புரியவில்லை. யோசிப்போம். ஆவணிஅவிட்டம் போன்றவைகள், தீபாவளி போன்ற எண்ணற்ற பண்டிகைகள் வைகுண்ட ஏகாதசி, சிவராத்ரி போன்ற விரதங்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ச்ராத்த விதியும் புத்திரனின் கடமையும் தெளிவாக நமது பெரியோர்களால் வழிகாட்டப்பட்டுள்ளது.

முதலிலேயே ஜாக்கிரதையாக இருந்து விட்டால் பிறகு ‘பித்ரு தோஷம்’ போன்ற பல விஷயங்களுக்காக அலையவேண்டிய நிர்பந்தம் யாருக்கும் வராது. ச்ராத்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.

புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?
(’வேதமும் பண்பாடும்’ புஸ்தகத்திலிருந்து ஒரி சில வரிகள்)

பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்
தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ச்ராத்தம் செய்யவேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ச்ராத்தம் தேவையில்லை.

தனித்தனியே வாழ்ந்து கொண்டு ச்ராத்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ச்ராத்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல.

மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால்போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே. (தாயார் உயிருடனிருந்தால் அவள் இருக்குமிடத்தில் பித்ரு ச்ராத்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது வாக்கு).

தனித்தனியே ஹோமத்துடன் ச்ராத்தம் செய்வதால் பித்ருக்களுக்கு அதிக திருப்தி. பித்ருக்கள் பல இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக