வியாழன், 14 மே, 2015

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் காஞ்சிபுரம்:

ராதே கிருஷ்ணா 15-05-2015






மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் காஞ்சிபுரம்:
இக்கோயில் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள.
இந்தக் கோயில் சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்த தலம்.


மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் காஞ்சிபுரம்:
இக்கோயில் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள.
இந்தக் கோயில் சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்த தலம்.
வரலாறு:
ராமர் கோயிலுக்குப் பின்புறம் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரி அடிக்கடி நிறைந்து கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்.
அப்போது, லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்தார். ஏரிக்கரையை பலப்படுத்த அவர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
ஒரு நாள் அவர் கோயிலுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னதி கட்டி தரும்படி கேட்டார். அவர்""உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், அவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் கட்டி தருகிறேன்,'' என்றார்.
மழைக்காலம் வந்தது ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்க்க சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர்.
அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த பிளேஸ், ராம லட்சுமணரே இளைஞர்களாக வந்ததை அறிந்தார். பின்பு, தாயார் சன்னதி கட்டிக் கொடுத்தார்.
இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, "ஏரி காத்த ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது.
ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்:
ஸ்ரீரங்கத்தில் சேவை செய்து ஆளவந்தாரின் சீடர் பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுப்பதற்காக காஞ்சிபுரம் சென்றார்.ராமானுஜர் அவரிடம் தீட்சை பெறுவதற்காக ஸ்ரீரங்கம் கிளம்பினார்.
இருவரும் இங்கு சந்தித்துக் கொண்டனர். பெரியநம்பி ராமானுஜருக்கு ஆச்சார்யாராக இருந்து இத்தலத்திலேயே "பஞ்ச சம்ஸ்காரம்' என்னும் தீட்சை செய்து வைத்தார்.
சங்கு, சக்கர தீட்சை முத்திரைகள் இக்கோயிலில் உள்ளது. 1935ல் கோயில் திருப்பணி நடந்தபோது, இம்முத்திரைகள் இங்கு கிடைத்தது. இந்த சங்கு, சக்கர தரிசனம் கிடைப்பது மிக அபூர்வம்.

சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கி, அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார்.
மகரிஷியின் வேண்டுதலுக்காக அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் கல்யாண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். இதன் அடிப்படையில் இங்கு புஷ்பக விமானத்துடன் கோதண்டராமர் கோயில் எழுப்பப்பட்டது.




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக